JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் - 13

saaral

Well-known member
அத்தியாயம் - 13

மிருதுளா , சஹானாவை மிரட்சியுடன் பார்த்தாள் . கீர்த்தனாவை கண்ட பின் மிருதுவிற்கு ஏதோ ஒரு மின்னல் மனதினுள் . அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினான் ஸ்ரீதர் .

"நான் மிருது கிட்ட தனியா பேசலாமா ?" என்றான் .

மிருதுளா தனது பார்வையை ஒரு நொடி கூட தனது தோழியின் பக்கம் இருந்து திருப்பவில்லை . சாரதா மற்றும் சௌம்யா மட்டுமே அங்கு இயல்பாக இருந்தனர் . சாரதாவிற்கு என்ன நடவிருக்கிறது , நடந்தது என்று முழுதாக தெரியாது . சௌம்யா அவர்களோ இனி என்ன நடக்கவேண்டும் என்ற முடிவுடன் இருந்தமையால் தெளிவாகவே இருந்தார் .

மிருதுளாவினால் அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியவில்லை . சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகை விட்டு சென்று விட்டாள் என்று எண்ணிய தோழிதான் சஹானாவா ? நம்பமுடியவில்லை .
ஏன் இந்த பெயர் மாற்றம் , ஆள் மாறாட்டம் ...பல கேள்விகள் அணிவகுத்தன அவளின் மனதில் .

சதிஷ் அதிர்ச்சியில் இருந்தாலும் தங்கையின் வாழ்க்கையை பெரிதாக எண்ணி அந்த சூழ்நிலையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டான் .

"மிருது , போ உன் ரூம்க்கு போய் ஸ்ரீதரோட பேசு " என்றான் .

பிரவீன் தனது அனல் கக்கும் பார்வையை தன்னவளிடம் இருந்து திருப்பவில்லை . ஆனால் அவனவளோ அவன் பக்கம் கூட திரும்பவில்லை .

சாரதா அனைவரையும் அமரவைத்து உபசரித்தார் . சஹானாவை பார்ப்பதை கூட தரம் தாழ்வது போல் நினைத்தவர் , இன்று அவளை அமரவைத்து உபசரித்தார் தனது செல்ல மகளின் வாழ்க்கைக்காக . ஆம் சாரதா இது வரை நேரில் சஹானாவை பார்த்தது இல்லை , முதல் முறை பார்க்கிறார் .

அங்கு மூன்று உள்ளங்கள் ஒருத்தியிடம் தனிமையில் பேச நேரம் அமையுமா ? என்று காத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த ஒருத்தியோ அவசரமாக தனது அலைபேசியுடன் வெளியே சென்றாள் .

..............................................

அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சஹானா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் "நிஜமாவா , இது உண்மை தானே " தான் கேட்ட செய்தியை உறுதி படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டாள் .

"......" அந்த பக்கம் சொன்ன செய்தி இவளின் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியாக வெளிப்பட்டது .

"நான் சீக்கிரம் பெங்களூரு வரேன் " சந்தோசத்துடன் திரும்பியவள் ஒரு நொடி திகைத்தாள் .

'ஐயோ எப்ப வந்தார் , நான் பேசினது எதை எல்லாம் கேட்டார் ? ' ஒரு வினாடி தனக்குள் தவித்தாள் பாவை .

அந்த ஒரு வினாடி மட்டுமே அதன் பின் அவளிடம் ஒரு நிமிர்வு , எதையும் காட்டிக்கொள்ளாமல் நிமிர்ந்து நின்றாள் .

"வெள் யாரை பலி வாங்க இந்த வேஷம் " நீல நிற ஜீன்ஸ் பேண்டும் , வெள்ளை சட்டையுடன், கைகளை கட்டிக்கொண்டு நெருப்பை கக்கும் விழிகளுடன் அவளை உற்று பார்த்து நின்றிருந்தான் பிரவீன் .

"....." சஹானா மௌனமாக நின்றாள் .

"அஹானா அது தான் உன் பெயர் ரைட் , உன் அப்பா திரு ...அதாவது என் தம்பி சம்பத்தப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி " பிரவீன் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் அறிந்துகொண்ட செய்தியை ஒவ்வொன்றாக சொல்லத்தொடங்கினான் .

"....." மௌனமே மொழியாக பச்சை நிற பருத்தி புடவையில் கம்பீரமாக அவள் .

"உன் அம்மா கீர்த்தனா , ஆறு வருஷம் முன்னாடி இறந்து போனதா அனைவராலும் நம்பப்பட்ட அஹானா ,இப்போ சஹானா !! " வார்த்தைகள் அவனின் பற்களுக்கிடையில் அரைபட்டன .

அவனின் கோபத்தில் எதிரில் நிற்கும் ஆண்மகனே அரண்டு போவான் ஆனால் அவளோ சிறு சலனம் கூட இல்லாமல் நின்றாள் .

"போலி சான்றிதழ் , என் தங்கையின் நட்பு எத்தனை ஏமாத்து வேலை பார்த்திருக்க ...." விட்டால் அவளை கொள்ளும் வெறி அவனிடம் .

"முதுகுல குத்திட்ட , காதலை பகடைக்காயாக வைத்து என்னை ஏமாத்திட்ட ....உனக்கு கிடைச்ச சுதந்திரத்தை பயன்படுத்தி என் நிறுவனத்தை சரிய வச்சுட்டு நீ நிம்மதியா இருந்திடுவியா இல்லை உன்னை நிம்மதியா இருக்க விட்டுடுவேனா ?"

ஆம் சற்று நேரத்திற்கு முன் கிருஷ்ணன் அலைபேசியில் சொன்னது இது தான் 'சஹானா டேட்டா தெப்ட் , அதாவது தகவல் திருட்டு மூலமாக பிஎஸ் எம் இன்போடெக் நிறுவனத்தின் பங்குகள் சரிய மூல காரணமா இருந்திருக்கிறாள்' என்பதே .

"அது உங்க தம்பியின் கனவு நிறுவனம் , உங்க நிறுவனம் இல்லை " தீர்க்கமாக அவனின் கண்களை பார்த்து சொன்னாள் அவள் .

"சோ தி கேட் இஸ் அவுட் ஆப் தி பேக் ....என் தம்பியை குறிவச்சு இந்த விளையாட்டு " துரோகம் செய்துவிட்டு நிமிர்ந்து நின்று பேசும் அவளை காண்கயில் அவனின் கோபம் ஏறிக்கொண்டே சென்றது .

"..."

"எதுக்குடி என்னை காதலிச்ச மாதிரி நடிச்ச ?"

"நான் காதலை உங்ககிட்ட சொல்லலை " முகத்தை இப்பொழுது வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள் .

"ஓஹ் யா நான் தான் காதலை சொன்னேன் , மிருதுவை கோத்தகிரியில் பார்க்க வரப்ப உன்னை பார்த்த உடனே பிடிச்சது , சின்ன பொண்ணுன்னு அமைதியா இருந்தேன் ....மீண்டும் உன் வலது பக்க தோற்ற முகம் மிருதுவோட குரூப் போட்டோல பார்த்தேன் ....உன் பெயர் கேட்டப்ப மிருதுளா சொன்ன பெயர் சஹானா அப்படினு காதில் விழுந்துச்சு " தான் காதலில் விழுந்த தருணத்தை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் .

"அதற்கு நான் பொறுப்பில்லை " எளிதாக சொன்னாள் சஹானா .

"ஆமாம்டி நீ பொறுப்பில்லை , என் தப்பு தான் .. பல வருஷம் பழகின தோழிகிட்டயே உண்மையா இல்லாத நீயா காதலுக்கு உண்மையா இருந்திடப் போற " பிரவீனின் இந்த கூற்றில் சஹானா தனது விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள் .

"இரண்டு வருஷம் கழிச்சு மீண்டும் மிருதுவோட காலேஜ்ல பார்த்தப்ப அதே பழைய தோழி சஹானா அப்படினு தான் நினச்சேன் , ஆனால் இப்பதான் தெரியுது மிருதுளாவையும் நீ ஏமாற்றியது ....உன் டார்கெட் சதீஷ் அப்படினா முன்னாடியே பலி வாங்கிருக்கலாமே எதுக்கு இப்படி எங்க எல்லாரையும் ஏமாத்தணும் ?" காதலால் தான் ஒரு சிறு பெண் முன் ஏமாந்து நிற்பதை அவனால் தாங்க முடியவில்லை .

"உங்க பண பலம் அரசியல் பலம் முன்னாடி நாங்க எல்லாம் எம்மாத்திரம் , அதான் காத்திருந்து அடிச்சேன் " மீண்டும் அவன் கண்களை பார்த்து ஆக்ரோஷமாக கூறினாள் .

"அதுக்காக இப்படி முகத்தோற்றத்தை மாற்றி , ச்ச இப்படி ஒரு துரோகியை காதலிச்சதை நினச்சா எனக்கே என்னை எதாவது எடுத்து அடிச்சுக்கணும் போல இருக்கு " வெறுப்புடன் வந்தது வார்த்தைகள் .

சஹானா அதிர்ந்தாள் , அவள் இப்படி ஒரு கணிப்பை அவனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை இருந்தும் எதையும் முகத்தினில் காட்டாமல் இறுகிப்போய் நின்றாள் .

"உன்னை அப்படியே " துரோகம் செய்து நிமிர்ந்து நிற்கும் அவளை கண்டு அவனின் மனம் உலகலமாக கொதித்தது . கையை ஓங்கிக்கொண்டு அடிக்க சென்றுவிட்டான் .

அவன் கை தன்னை பதம் பார்க்கும் என்று அறிந்தே கண்களை கூட சிமிட்டாமல் அப்படியே நின்றிருந்தாள் .

ஒரு நொடி , ஒரு நொடிதான் சௌம்யாவின் "சஹானா " என்ற அழைப்பு அவனின் கைகளுக்கு அணை போட்டது .

சௌம்யா அவர்கள் நெருங்கி வருவதை கண்டு கையை கீழ் இறக்கினான் . முஷ்டிகள் இறுக அவளையே பார்த்து நின்றிருந்தான் .

அவளோ அவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சௌம்யாவை நோக்கி நகர்ந்தாள் .

......................................................................

ஸ்ரீதர் அங்கு தன் முன் யோசனையுடன் நிற்கும் மிருதுளாவை கண்டு துணுக்குற்றான் , பல முறை அழைத்து பார்த்தும் மிருதுவிடம் பதில் இல்லை என்றவுடன் அவளின் அருகினில் சென்று கைகளை பற்றினான் .

அந்நிய ஸ்பரிசம் தன் மேல் படவும் துணுக்குற்ற மிருது வேகமாக நிமிர்ந்து பார்த்தாள் . அங்கு ஸ்ரீதரை கண்டவுடன் தான் சுயத்திற்கு வந்தாள் .

மெதுவாக கையை அவனிடம் இருந்து உருவி நின்றவள் "நீங்க ..நீங்க இங்க எதுக்கு " வார்த்தைகள் திக்கி திணறின .

"ஹ்ம்ம்ம் எனக்கு கல்யாண வயசு வந்திருச்சாம் அதான் உன்னை கட்டிவைக்கலாம்னு அம்மா யோசிச்சாங்க சோ உன் சம்மதம் கேட்டு வந்திருக்கேன் " குறும்புடன் கேட்டான் .

அவள் வார்த்தைகளற்று நின்றாள் , தான் கண்ட கனவு இன்று நிஜத்தில் ஆனால் அதை முழுதாக அனுபவிக்க முடியாமல் மனதினுள் ஒரு குழப்பம் .

மகிழ்ச்சியும் ,குழப்பமும் சேர்ந்த கலவையாக நிற்கும் தன்னவளை பார்த்து "என்ன பிரச்சனை மிருதுளா , ஏன் ஒரு மாதிரி இருக்கிற ?" மென்மையாக கேட்டான் .

"இல்லை , ஒன்னும் இல்லை " பதட்டத்துடன் சொன்னாள் .

"மிருதுளா இங்க பார் உனக்கு என்னை பிடிக்கும் அது உங்க வீட்ல , என் வீட்ல எல்லாருக்கும் தெரியும் ....இப்ப உன் நேசம் நிறைவேறும் தருணத்தில் இருக்கிறப்ப என்ன குழப்பம் ?" அதீத நேசத்தின் வெளிப்பாடாக இருந்தது அவனின் சொற்கள் .

"இல்லை " மீண்டும் தயக்கம் பெண்ணவளிடம் . அனைவர்க்கும் தெரியும் என்று அவன் சொன்னதே அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான் இருந்தும் ஒரு தயக்கம் .

"மிருது இங்க பார் " ஒற்றை விறல் கொண்டு குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் கண்களை நேராக பார்த்தான் .

அவளின் இமைகளோ மனதின் ரயிலோடத்தை , பட்டாம்பூச்சியின் இறகுகளை போல் அடித்துக் காட்டியது. அந்த அழகில் லயித்தான் அவன் .

"மிருது நான் ஸ்ரீதர் , உன்னோட ஸ்ரீதர் ...நீ துரத்தி காதலிச்ச அதே ஸ்ரீதர் , உன்னை மட்டுமே நேசிக்கும் ஸ்ரீதர் ...என்கிட்ட என்ன தயக்கம் , உன் மனதில் வண்டாக குடையும் கேள்வி எனக்கு புரியும் , சஹானா ...அவள் உன் தோழி , நான் உன் காதலன் அதை மட்டும் நம்பு வேறெதுவும் போட்டு குழப்பிக்காதே " அவளின் மனதை அழகாக படித்தான் அவன் .

"சஹானா தான் அஹானாவா ?" ஒருவழியாக கேட்டுவிட்டாள் .

"எனக்கு பதில் சொல்ல தெரியலை மிருது , நிச்சயம் உனக்கு நேரம் வரும்பொழுது உண்மையை சொல்றேன் ...ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன் நாங்க ரெண்டு பெரும் உன் நன்மையை தவிர்த்து வேற யோசிக்க கூட மாட்டோம் ...கீர்த்தனா சித்தியை பார்த்து நீ குழம்பி நிற்பது எனக்கு புரியுது " தெளிவாக சொன்னான் .

மிருதுளாவும் புரிந்தும் புரியாமலும் ஒரு தோற்றத்தில் நின்றாள் .

"ஹ்ம்ம் கீர்த்தனா சித்தியோட கணவர் என்ன வேலை செய்தார்னு தெரியுமா ?" அவளின் குழப்பத்தை சற்றே கலைய முற்பட்டான் ஸ்ரீதர் .

"ஏதோ ரிப்போர்ட்டர்னு அஹானா சொல்லுவா " யோசனையுடன் கூறினாள் மிருதுளா .

"எஸ் சித்தப்பாவோட வேலை அவர்களின் உயிருக்கு எமனா நிக்குது ...அதான் இந்த ஒளிவு மறைவு " கோடிட்டு காட்டினான் ஸ்ரீதர் . பாவையும் புரிந்துகொண்டாள் .

"ஆனால் ஏன் என்கிட்டயே நடிக்கணும் " மனது கேக்காமல் கேட்டுவிட்டாள் மிருதுளா .

"மிருது உன் கேள்விக்கெல்லாம் பதில் சீக்கிரம் கிடைக்கும் அதுவரை பொறுமையா இரு ப்ளீஸ் ....இன்னைக்கு நம்ம வாழ்க்கையின் புது அத்தியாயம் , கொஞ்ச நேரம் அதை பற்றி பேசலாமா ?" மென்மையான பார்வை காதல் பார்வையாக மாறியது அவனிடம் .

அவனவளின் முகமோ செம்மையுற்றது .

......................................


அந்த வீட்டில் வார்த்தைகளற்று நடுக்கத்துடன் இருந்தது இருவர் .

சதீஷ் மற்றும் விஸ்வம் . சதீஷிற்கு மிருதுளாவை போன்ற குழப்பம் , முதலில் சஹானாவை பார்த்து யோசித்தவன் கீர்த்தனாவை கண்டவுடன் உறைந்தான் . சில ஆண்டுகள் முன் தன் கண் முன்னால் இறந்து போனதாக நினைத்த அஹானா , இப்பொழுது சஹானாவாக புதிய அவதாரத்தில் ..

'எவ்வாறு இது சாத்தியம் ' நம்பமுடியவில்லை அவனால் .

அப்போ இத்தனை நாள் கற்பனையில் வந்த அம்மு நிஜமா உயிருடன் இருக்கிறாளா ? , என்ற கேள்வியும் அவன் மனதினுள் சந்தோஷ சாரலாக அடித்தது .

விஸ்வம் அவர்களோ தனது மூத்த மகனிற்கு தெரியாமல் அரும்பாடு பட்டு மறைத்த விஷயம் அனைத்தும் வெளியே வந்துவிடுமோ என்று நடுங்கினார் .

உண்மை தெரிந்தால் பிரவீன் தன்னை கூண்டில் நிறுத்த கூட தயங்க மாட்டான் என்பதை அவர் அறிவார் .

........................................................................

ஸ்ரீதரின் வீட்டினுள் அனைவரும் நுழைந்தனர் . கீர்த்தனா அவர்களோ சஹானாவின் கைகளை இறுக்கமாக பற்றிக்கொண்டு வந்தார் .

மௌனமாக உள்ளே நுழைந்தவர்கள் அங்கு வீட்டினுள் நின்றிருந்த இருவரை கண்டு மகிழ்ந்தனர் .

சஹானாவை நோக்கி கண்களில் நிறைந்த நீருடன் வேகமாக வந்தவர்கள் "சஹா எப்படிம்மா இருக்க ?" ஆனந்தத்துடன் கேட்டனர் .

தயாளன் மற்றும் சுபத்ராவை அந்த நேரத்தில் அங்கு எதிர் பார்க்காத சஹானா ,கீர்த்தனாவின் கைகளை விலக்கிவிட்டு அவர்களை அணைத்துக்கொண்டாள் .

"அம்மா , அப்பா ஐ மிஸ் யூ போத் " தளுதலுக்கும் குரலில் கூறினாள் .

சுபத்ராவோ மகளின் முகத்தில் முத்தத்தை பதித்து "நானும் தான் சஹா " என்றார் .

தயாளன் எதுவும் பேசாமல் அன்புடன் மகளின் தலை கோதினார் .

சௌம்யா அவர்கள் இவர்கள் மூவரையும் கண்டு முறைப்புடன் நின்றிருந்தார் . ஸ்ரீதர் தடுமாற்றத்துடன் நிற்கும் கீர்த்தனாவை பார்த்து வேகமாக சென்று தாங்கிக் கொண்டான்.

அரவம் உணர்ந்து அனைவரும் திரும்பி பார்க்கும் சமயம் "அம்மு " என்ற தீனமான அழைப்புடன் மயங்கி சரிந்தார் கீர்த்தனா .

தன்னையே நொந்துகொண்டாள் சஹானா . கீர்த்தனாவை மறந்து தான் சென்றது எவ்வாறு அவரை பாதிக்கும் என்பதை அவள் அறிவாள் , இருந்தும் பெற்றவர்களை கண்டவுடன் மற்றவர்களை மறந்து சென்ற தனது மடமையை எண்ணி மனதினுள்ளே தன்னையே திட்டிக்கொண்டாள் .

வீட்டோடு இருக்கும் செவிலியர் வேகமாக வந்து முதல் உதவி செய்த பின், சில நிமிடங்கள் களித்து கண் திறந்தார் கீர்த்தனா .

கண் முழித்தவுடன் தனக்கு அருகினில் அமர்ந்திருக்கும் மகளின் முகம் தடவி கையை கெட்டியாக பற்றிக்கொண்டார் ."அம்மு " என்ற சொல் மட்டுமே ஜபம் போல் அவர் வாயில் இருந்து வந்தது .

மகளை தவிர்த்து மற்றவர்களை மிரட்சியுடன் பார்க்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண்டு அனைவரின் மனமும் உருகியது .

"நான் கீர்த்தனா அம்மாவை சாப்பாடு கொடுத்து தூங்க வச்சுட்டு வரேன் " என்று கூறி கீர்த்தவுடன் அவரின் அறைக்குள் சென்று மறைந்தாள் சஹானா .

அங்கு ஒரு அழுத்தமான மௌனம் .

"உக்காருங்க " கடினமான குரலுடன் சொன்னார் சௌம்யா .

அவரின் சொல்லிற்கு அந்த தம்பதியர் இசைந்தனர் .

அவர்களின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த சௌம்யா அவர்களை ஆழமாக ஊடுருவும் பார்வை பார்த்தார் .

"அண்ணி அது வந்து என்ன விஷயம்னா ?" தயாளன் மெதுவாக பேச்சை துடங்கினார் .

"முதல்ல நான் பேசிடறேன் அது வரை யாரும் தலையிட கூடாது " தீர்க்கமாக சொன்னார் .

அனைவரின் வாய்க்கும் பூட்டை போட்டுவிட்டு பேச துடங்கினார் சௌம்யா .

"தம்பி உங்க அண்ணா தான் தவறிட்டாங்க , உறவு முறிஞ்சிடலை ... கிட்டத்தட்ட ஆறு வருஷம் ஆச்சு சஹானா இந்தியா வந்து ஆனால் எங்களுக்கு தெரியாது ...எப்பயும் போல விடுமுறைக்கு வந்துட்டு போறது போல இங்க வந்திருக்கா , இதுக்கு நீங்க ரெண்டு பேரும் உடந்தை ..." நியாயமான கேள்விகள் சௌம்யாவிடம் .

பதிலற்று அமர்ந்திருந்தனர் பெண்ணை பெற்றவர்கள் ." எங்களை உங்கள் குடும்பமா நினைச்சிருந்தா இந்நேரம் எங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பீங்க....அவர் போனப்பறம் எங்க உறவே வேண்டாம்னு நினச்சுட்டீங்க போல ,ஹ்ம்ம் உங்களுக்கு எப்படினு எனக்கு தெரியாது உங்க பிள்ளைங்க எனக்கும் பிள்ளைங்க தான் ...மகள் இல்லாத எனக்கு சஹானா மகள் தான் நான் தூக்கி வளர்த்த மகள் , அவளை அவளே பகடைக்காயாக வைத்து விளையாடுவதை பார்த்துட்டு சும்மா இருக்க நான் சுபத்ராவோ இல்லை தயாளனோ இல்லை " நெத்தியடியாக கூறினார் மூத்தவர் .

"அக்கா என்னை மன்னிச்சுடுங்க அன்னைக்கு எங்க ஒரு மகள் ரத்தத்தில் மிதக்கிறதை பார்த்து என்ன சொல்றதுன்னு தெரியலை , சஹானா சொன்ன எல்லாத்துக்கும் சரினு தலை ஆட்டினோம் ...உங்களுக்கே தெரியுமே அவளோட புத்தி கூர்மை பத்தி அவள் சொன்னாள் சரியா இருக்கும்னு நம்பினோம் " சுபத்ரா கண்ணீருடன் கதறினார் .

"சின்ன பொண்ணு சொன்னா அப்படியே கேட்டுப்பீங்களா ? என்னதான் இருந்தாலும் பெண் பிள்ளைக்கு எதாவது ஆபத்துனா என்ன பண்ண முடியும் ?" மனது கேக்காமல் வெடித்தார் சௌம்யா .

"அண்ணி அன்னைக்கு இருந்த நிலைமைக்கு எங்களுக்கு எதுவும் புரியலை ...உங்க கிட்ட சொல்லி அண்ணன் இல்லாத அந்த நேரத்துல மேலும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு சஹா சொன்னா ....அதே நேரம் அவ பாதுகாப்பு எனக்கு முக்கியம் அதுக்கு ஏற்பாடு செஞ்சுதான் அவளோட இந்த முடிவுக்கு ஒத்துக்கிட்டோம் " தயாளன் தன்னிலை விளக்கம் கொடுத்தார் .

அவர்களின் எண்ணம் சௌம்யா அவர்களுக்கு புரிந்தது . இருந்தும் தன்னுடைய மகள் விபரிதமான விளையாட்டில் தன்னையே மய்யமாக நிறுத்தி விளையாட முற்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

"போனது போகட்டும் , இனி ஸ்ரீதர் எல்லாத்தையும் பார்த்துப்பான் ...சஹானா எது பண்ணாலும் எனக்கு தெரியணும் " கட்டளையாக சொன்னார் . சஹானாவை பெற்றவர்களோ அந்த கட்டளையில் நிறைந்திருந்த அன்பை உணர்ந்து அமைதி காத்தனர் .

"அம்மா " தீனமான ஒலி கீழ்தளத்தில் இருந்த மற்றொரு அறையின் வாயிலில் இருந்து வந்தது .

அங்கு ஒல்லியான உடல் தேகத்துடன் வலது பக்கம் முகத்தினில் முழுவதும் தையல் போட்ட வடுவுடன் பாவமாக நின்றிருந்த அந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார் சௌம்யா .

ஸ்ரீதர் அந்த பெண்ணின் தோற்றத்தை கண்டு கண்ணீர் உதிர்த்தான் , அவனின் மனமோ உலைக்களமாக கொதித்தது .

..............................................

பிரவீனின் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர் .

மிருதுளாவின் முகத்தினில் தெரிந்த மகிழ்ச்சியை கண்டு என்ன நடந்தாலும் இந்த திருமணம் நடக்க தான் தடையாக இருக்க கூடாது என்று அந்த வீட்டின் மூன்று ஆண்களும் மனதில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .

தங்கள் வீட்டின் இளவரசி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று எண்ணிய அந்த மூவரும் ,ஒவ்வொரு வகையில் இன்னொரு வீட்டு பெண்ணின் சிதைவிற்கு காரணமாக இருந்ததை மறந்தனர் .
 

saaral

Well-known member
மன்னிக்கவும் தோழிகளே சமீப காலமாக என்னால் ஒருநிலையுடன் எழுதமுடியவில்லை .

இந்த கால சூழ்நிலை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது . என் மனதும் ஒரு நிலையில் இல்லை . அதான் இந்த தாமதம் .

மீண்டும் என் முன் அறிவிப்பு இல்லா தாமதத்திற்கு மன்னிக்கவும் . முடிந்தவரை வேகமாக பதிவுகளை கொடுக்க முயல்கிறேன் .

எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் .
 

saaral

Well-known member
I hope story have lot of suspense ....

if you have any guesses please drop it here in comments section .....
 

Mariammal ganesan

New member
மன்னிக்கவும் தோழிகளே சமீப காலமாக என்னால் ஒருநிலையுடன் எழுதமுடியவில்லை .

இந்த கால சூழ்நிலை அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது . என் மனதும் ஒரு நிலையில் இல்லை . அதான் இந்த தாமதம் .

மீண்டும் என் முன் அறிவிப்பு இல்லா தாமதத்திற்கு மன்னிக்கவும் . முடிந்தவரை வேகமாக பதிவுகளை கொடுக்க முயல்கிறேன் .

எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் .
மனம் அமைதி பெற பிரார்த்தனை செய்கிறேன்.தாமதமின்றி தொடரினை பதிவு செய்ய வாழ்த்துக்கள்
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top