JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

வில்லேந்தும் மொழியாளே - எபிலாக்

Rudhivenkat

Well-known member
Epilogue:

இரண்டு வருடங்களுக்கு பிறகு,

ஒட்டாவா வீதிகளெங்கும் உற்சாக கூச்சல்கள், அணிவகுப்புகள் என மக்கள் கனடாவின் சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருந்தனர்.

பகல் வேளையிலும் உடலை குளிர் துளைப்பதை போல் உணர்ந்தார் அங்கயற்கண்ணி பாட்டி. விமானங்களின் வர்ண வேடிக்கைக்காக அனைவரும் அந்த பிரத்யேக மைதானத்தில் நின்று கொண்டிருக்க," இந்த பாரு அங்கை.. உன் கெண்டை காலு தெரியுதுடி.. இப்ப நீ கவுனு போடலனு கனடாகாரவுக கேட்டாகளா? இதெல்லாம் நல்லால்ல சொல்லிபுட்டே ஆமா" சொக்கலிங்கம் தாத்தா புலம்ப,

"இந்தாருங்கறேன் எம்பேரன் ஆசை ஆசையா வாங்கி கொடுத்து போட்டுக்க சொன்ன கவுனு.. இதபாத்து பொறாமை படுறவிய்க" கழுத்தை நொடித்து திரும்ப, மீண்டும் ஆரம்பித்த தாத்தாவின் புலம்பலை புறந்தள்ளியவராக கையில் இருந்த பைனாகுலருடன் வானத்தை மட்டுமே பாட்டி பார்த்துக்கொண்டிருக்க, அவர் கையில் வைத்திருந்த தொப்பி கீழே விழுந்தது.

"ஹாய் லேடி.. யுவர் கேப்" அருகிலிருந்த வெள்ளைக்கார முதியவர் எடுத்துக்கொடுக்க,

"தாங்க்யூ.." வில்லியம் கற்றுக்கொடுத்த ஆங்கில வார்த்தைகளை பிளந்து கட்டியவர், புன்னகையுடன் பெற்றுக்கொள்ள, பதிலுக்கு அவரும் புன்னகைத்து தனது கையில் வைத்திருந்த ஜூஸையும் நீட்டினார் அந்த முதியவர்.

"நோ ப்ளீஸ்.. " பாட்டியின் மறுப்பில் புன்னகையுடன் அவர் நகர்ந்து விட,

"இந்தாருங்கறே காலம் போன காலத்துல எங்கிட்ட அடிவாங்கனுமா உனக்கு?" என்றவரை தனது கூலர்ஸை மூக்கில் இறக்கி, பாட்டி ஒரு பார்வை பார்க்க,

'எங்க அடிச்சு தான் பாருங்கறேய்ன்' அப்பார்வை சொல்லாமல் சொல்ல, காற்றில் பறக்கும் பாட்டியின் மேக்ஸியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம் தாத்தா.

"ஏன் தாத்து பாட்டி மேக்ஸியை பிடிக்கறதுக்கு உன் கொள்ளுபேரனை கொஞ்சநேரம் பிடிக்கலாமில்லை" அழுது கொண்டிருந்த தனது ஒன்றரை வயது மகனுடன் தருண் வந்து நிற்க,

"சும்மா இருடே ராஜாளி..தாத்தாவை எதுக்கு தொந்தரவு பண்ற? கிருஷ்ணாவை என்கிட்ட குடு" தனிஷா தனது மகனை வாங்கி சமாதானப்படுத்த,

"குடு நிஷா.. நான் வேணும்னா வச்சுருக்கேன் அவனை. எப்படியும் என்னால நின்னு பார்க்க முடியாது" ஷண்மதி அவளது உதவிக்கு வர,

"இரு ஷண்மு.. பால் குடுத்துட்டு உன் கைல குடுக்கறேன்.. நீ முதல்ல ஜூஸ் குடிச்சியா?" என, "இல்லை" என தலையசைத்தாள் அவள்.

" மசக்கையா இருந்தாலும் முடிஞ்சத சாப்பிட்டுக்கிட்டே இருன்னா கேக்கிறியா? சாப்பிடாமா இருக்காத" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பழச்சாறுடன் வந்து கொண்டிருந்தான் அருண்.

"நல்லா சொல்லு சின்ன அம்மணி. எங்க கேட்கறா?" அவளருகே பழச்சாறை கொண்டு செல்லும்போதே அவள் உமட்ட இழுத்து தோள் சாய்த்துக் கொண்டான் அருண்.

"ம்க்கும்.. பெரிய அத்தான் நாங்களும் இங்க இருக்கோம்" தனிஷா கிருஷை சமாதானப்படுத்தியிருக்க,

"அதான ஏன்டா உனக்கென்ன புது மாப்பிள்ளைன்னு நினைப்பா? அண்ணி இதெல்லாம் கொஞ்சம் ஓவரு சொல்லிட்டேன் ஆமா?"தருணின் பொறாமையில் ஷண்மதி சிரிக்க,

"உன்னை யாருடா அதுக்குள்ள பிள்ளையை பெத்துக்க சொன்னது? சின்ன அம்மணி குழந்தை வச்சுருக்கற அங்கிள்-ஆன்டிகெல்லாம் அங்க சீட் ரெடி பண்ணிருக்காங்க. அங்க போங்க. என் அம்முவை கண்ணு வைக்காதிங்க. வேணுன்னா என் மகனை என்கிட்ட கொடுத்துட்டு போங்க" மொழியின் திருமணம் முடிந்து ஆறுமாதத்தில் கரு உண்டாகிய தனிஷா ,அழகான ஆண்குழந்தையை பெற்றிருக்க, ஷண்மதி இப்பொழுதுதான் நான்குமாத கருவை சுமந்து கொண்டிருந்தாள்.

"சரிதான்.. இதுக்கு மேல நாங்க இங்க இருந்தா எங்களுக்கு மரியாதை இல்லை. அண்ணி உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாந்தி எடு. அப்பதான் இவன் அடங்குவான்.அங்கிளாம்ல‌‌.. நீ வா சிட்டு நம்ம மம்மி-டாடி கிட்ட போய் உட்காருவோம்" தருண் இடத்தைக் காலி செய்ய, அருளின் கையை விடாமல் பதற்றத்துடன் வானத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

"அம்மணி அதெல்லாம் ரோஜாக்குட்டி சூப்பரா ஓட்டுவா? பதட்டபடாம பார்த்து என்ஜாய் பண்ணு" அருள் தாட்சாயிணியை சமாதானப்படுத்த,

"பைக்கயே உம்ம மவ ஃப்ளைட் மாதிரி ஓட்டுவா?! உம்ம மவளுக்கு எப்பத்தே சப்போர்ட் பண்ணாம இருந்திருக்கிக செல்லத்தான்?" அவன் எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் பயம் குறையவில்லை அவளுக்கு.

" இதெல்லாம் தேவையில்லாத பயம் பெரியம்மா.. இந்தா பாருங்க.. இவளை எல்லாம் ஃப்ளைட்ட ஓட்டி பழகுடின்னா.. என்னை ஓட்டறதே பொழப்பா வச்சுருக்கா.. " ரவி உஷாவை வம்பிழுத்தவன்,

"சித்துக்குட்டி சித்தும்மா.. " தனது ஒருவயது மகள் சித்ராவை கொஞ்ச,

"ஏனுங்க அத்தை இங்க கனடால வீணை விப்பாங்க" உஷாவின் நினைவூட்டலில் திகைத்து விழித்தான் ரவி.

"அய்யோ இவ பாரபட்சமில்லாம அசிங்கப்படுத்துவாளே! அதுவும் புருஷன்னா கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டாளே" அவசரப்பட்டு வாய்விட்டு விட்டதை நினைத்து ரவி மைன்ட் வாய்ஸ் என நினைத்து வாய்விட்டே பேசிவிட, அடக்கமாட்டாது சிரித்தாள் தாட்சாயிணி.

அருள் வாயைப் பொத்தி கொண்டு சிரிக்க," எதேய்.. நீங்கன்னா நானு இரக்கமே காட்டமாட்டேனாக்கும்..‌ ரொம்ப சந்தோமுங்க, எங்க அத்தை வராம பெரிய அத்தை இருக்காங்கன்னு ஓவராத்தான் பேசறிங்க மாமா" ரவியை முறைத்து விட்டு பிள்ளையை கையில் வாங்கி கொண்டவள், தாட்சாயிணியை ஒட்டி அமர்ந்து கொள்ள,

"உஷா செல்லம்.. நான் நினைச்சு முடிக்க முன்னாடியே இந்த வார்த்தை கழுதைங்க காத்துல லேண்ட் ஆகி உன் காதுல விழுந்திடுச்சுடி.. மாமனை மன்னிச்சுடும்மா செல்லம்.."என்றவன்,

"சித்து குட்டிமா டாடி பாவம்டா..மம்மி கிட்ட சொல்லு தங்கம்" என, தந்தை ஏதோ வேடிக்கை செய்கிறானென பொக்கை வாய் திறந்து சிரித்தாள் அவனது மகள்.

"மொழி இட்ஸ் டைம்" டேனி அழைக்க, அவளுக்கான சூட்டை மாட்டி முடித்து, ஹெல்மெட்டை அவளது தலையில் வில்லியம் பொருத்த, காதல் கிரீடத்தை தலையில் சுமந்த உணர்வு அவளுக்கு.

"ஆல் தி பெஸ்ட் டி சில்க்கி" இதழோடு இதழுரசி அவளுக்கு விடை கொடுக்க, டேனியுடன் வர்ண அணிவகுப்பிற்காக அவர்களுக்கான விமானத்தில் ஏறினாள் மொழி.

ஆம்!! இந்த முறை டேனியும் மொழியும் இணைந்து நடத்தும், பைலட் அக்கடமியையும் அணிவகுப்பில் கலந்து கொள்ள அரசின் மூலமாக அழைப்பு வந்திருக்க, தன்னை இத்தகைய நிலைக்கு உயர்த்தியிருந்த, காதற்கணவனை கண்களில் நிறைத்தபடி ஏறி அமர்ந்தவளின் கைகளில் விமானம் பறக்க ஆரம்பித்தது.

"அதோ மொழிபேபி.. " வின்சென்டும் லினாவும் கைகொட்டி ஆர்ப்பரிக்க, அருளின் மனதில் மகளின் ஆசை நிறைவேறிய பெருமிதம்.

தங்களுடன் நின்றிருந்த வில்லியமின் தோளில் கைபோட்டு அணைத்து கொண்டவன்," காட் ப்ளெஸ் யூ வில். நீண்டநாள் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கனும்" என,தாட்சாயிணியும் அதை ஆமோதித்தாள்.

"இட்ஸ் மை ப்ளெஷர்(அது என் பாக்கியம்) அங்கிள்.. சில்க்கிகாக எதுவும் செய்வேன்" என, தாட்சாயிணியின் மனம் நிறைந்து போனது.

இதோ விமானத்தில் பறந்து கொண்டே அவர்களது குழு சிவப்பு வெள்ளை வர்ணங்களுடன் கனடாவின் கொடியையும், மேப்பிள் மர (கனடாவில் பிரசித்தி பெற்ற ஒருவகை பனைமர இனம்) இலையையும் வரைந்திருக்க, கரகோஷங்கள் விண்ணைப்பிளந்தது.

தன்னவளின் மகிழ்ச்சியில் மனம் பூரித்தாலும், சில நாட்களாக அவள் வைத்து கொண்டிருக்கும் ஆசையையும் யோசித்து கொண்டிருந்தது அவனது மனம்.

தருணின் மகன் பிறந்து, இந்தியாவிற்கு சென்று பார்த்து வந்ததிலிருந்து, தனக்கும் அதுபோல் குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட ஆரம்பித்தாள் மொழி.

படிப்பு முடிந்து பைலட் ட்ரெயினிங் முடியும் வரை வில்லியம் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டிருக்க, வெற்றிகரமாக படிப்பை முடித்து டேனியுடன் சொந்த தொழிலாக சி.வி பைலட் அகாடமியையும் நடத்த ஆரம்பித்து விட்டாள் மொழி.

அதன் ஆரம்ப நேரத்தில் தான் தருணின் மகனை பார்க்க இந்தியா சென்று வந்திருந்தார்கள். குழந்தையை பார்த்தவள்," அப்படியே தருண்ணன் மாதிரி இருக்கான். உன் சாயல்ல என் குழந்தையையும் இப்படி கொஞ்சனும் போல இருக்குடா அவதார்" கிளம்பும் நேரம் வரை குழந்தையை கீழே விடாது மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க, மருமகன் பிறந்த நேரம் வில்லியமின் தொழிலை ஜெர்மனியிலும் விஸ்தரிக்க அழைப்பு வந்திருக்க, அதை அவன் ஏற்றால் அங்கேயே ஒருவருடம் வரை இருக்க வேண்டிய சூழ்நிலை.

அதனால் குழந்தை பெற்று கொள்வதை இன்னும் ஒருவருடத்திற்கு தள்ளி போடலாமென அவன் மொழியிடம் பேச முடிவெடுத்து, மனைவியுடன் மகிழ்ச்சியாக செலவிட்டுக்கொண்டிருந்த ஒரு பொன்மாலைப் பொழுதில், வில்லியமின் தோள் சாய்ந்து சாக்லேட்டை சுவைத்து கொண்டிருக்க,

"சில்க்கி டார்லிங் முக்கியமான விஷயத்துல உன்னோட சம்மதம் வேணும்" கைகள் அவளது கன்னங்களில் விளையாண்டு கொண்டிருக்க,

"அந்த ஜெர்மன் ப்ரோஜெக்ட் தானேடா அவதார்?" நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் மொழி.

"உனக்கு எப்படிடி தெரியும்?" ஆச்சரியமாய் அவளை பார்க்க,

"நான் ஒண்ணு கேட்டும் நீ பதிலே சொல்லாம இருந்தியா? அதுவும் நாம இந்தியா போயிட்டு வந்ததுல இருந்து நீ ஏதோ யோசிச்சுகிட்டே இருந்த மாதிரி இருந்தது.அதான் மாமாகிட்ட உன் பிஸினஸ் விஷயத்தை கேட்டேன். அவர் இந்த ஜெர்மன் வாய்ப்பை பத்தி சொல்லிட்டாரு" என்றவள்,

"எனக்கு சம்மதம் தான்டா அவதார். நீ இதை எடுத்து பண்ணு. இது உன் கேரியர்ல ஒரு மைல்கல்லா இருக்கும். எனக்காக யோசிக்காத" என, தனக்காக யோசிக்கும் தன்னவளின் செய்கையில் உருகித்தான் போனான் வில்லியம்.

இதற்குள் டூடுல் இவர்கள் இருந்த நீச்சல்குளத்தை தேடி ஓடிவர, அதை துரத்திக்கொண்டு பின்னால் லினா ஓடிவர," பேபி அவனைப்பிடி. குளிக்கறதுக்கு அவ்வளவு அடம் பண்றான். டர்ட்டி டூடுல்" கத்திக்கொண்டே வர, அழகாய் அவனை கைகளை அள்ளியிருந்தாள் மொழி.

"ஹேய்.. பாப்கார்ன் பையா.. பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே குளிக்கலாமா?" என, சந்தோஷத்துடன் " பவ்..பவ்.." என்றது டூடுல்.

"நான் பார்த்துக்கறேன் ஆன்ட்டி.. நீங்க போங்க" என, அப்போதைக்கு அந்த பேச்சு முடிய, அதற்கடுத்து வந்த வாரத்தில் கனடாவின் சுதந்திர தினமும் வந்து விட, இதுவரை தனக்கான ஒப்புதலை அந்த ஜெர்மன் நிறுவனத்திற்கு கொடுக்காமல் தான் வைத்திருந்தான் வில்லியம்.

விமானத்திலிருந்து வந்து இறங்கிய மொழியை அனைவரும் சூழ்ந்து கொண்டு வாழ்த்த," அண்ணி கிருஷை நான் வச்சுருக்கேன்" ஆசையுடன் வாங்கிக்கொண்டாள் மொழி. அந்தக் கணம் தன்னவளின் ஆசையை விட மற்றவை பின்னுக்கு செல்ல, முடிவெடுத்தவன் அதை அன்றிரவே செயல்படுத்தவும் ஆரம்பித்து விட்டான்.

அன்றைய மாலை விமானத்தில் அருள் தனது குடும்பத்தினர்களுடன் கிளம்பி சென்றிருக்க, சாதனைக்குரிய நாளாக இருந்தாலும் ஒருவித சுணக்கத்துடன் வந்தமர்ந்த மனைவியை கவனித்துக்கொண்டு தான் படுத்திருந்தான் வில்லியம்.

"எல்லாரும் கிளம்பி போனதும் ஒருமாதிரி இருக்குடா அவதார்" மனதிலிருப்பதை கணவனிடம் பகிர, அவள் புறம் திரும்பி அவளை தன்மீது இழுத்துக் கொண்டவன்

"விட்டா நீ இந்தியாக்கே தாவி போயிடுவ போலயே? மை க்யூட் அவதார் குட்டி" வில்லியமின் சீண்டலான கொஞ்சலில் அதுவரை இருந்த இணக்கம் மறைய,

"என்னை ஏன்டா அவதார் சொல்ற? நான் எங்கப்பாவோட செல்ல ரோஜாக்குட்டியாக்கும்" அவள் முகம் உரசிக் கொண்டிருந்த சிகையை சிலுப்பிக் கொண்டு பின்னால் தள்ளிவிட்டவள்,

"நீ தான் அவதார்.. உனக்குத்தான் அதை பிராண்ட் நேரமா வச்சுருக்கேன். வேணுன்னா உன் பிள்ளைய அவதார்குட்டின்னு கூப்பிட்டுக்கோ?" அவன் மேல் சாய்ந்திருந்தவள் இடது கை முட்டியால் அவனது நெஞ்சிலும் குத்த,

"யா.. வெரி கரெக்ட் சில்க்கி டார்லிங்.. கரெக்ட் டைமுக்கு ஞாபகப்படுத்திட்ட.. வா .. வா..‌சீக்கிரம் அவதார்குட்டியை ரெடி பண்ணனும்" எப்பொழுதும் வார்த்தைகளில் வில்லேந்தி நின்று முரசு கொட்டுபவளின் பாணத்தை அவளுக்கே திருப்பியிருந்த காதற்கணவனின் செயலில் 'பே' வென விழித்து நின்றாள் மொழி.

பின்பு தெளிந்தவளாக "அப்போ அந்த ஜெர்மன் ப்ரோஜெக்ட்?" அவன் பிடியிலிருந்து விலகி அவன் முகம் பார்க்க,

"எனக்கு எப்பவும் என் சில்க்கி தான் முக்கியம்" என, அவனது காதலில் கலங்கிய கண்களுடன்

"போடா அவதார்.. " என்று கட்டிக்கொள்ள, அதன்பிறகு அவளை பேசவிடவில்லை அவனது அவதார். மறுநாளே அந்த ஜெர்மன் ப்ரொஜெக்டையும் கேன்சல் செய்து விட, உள்ளார்ந்த அன்பும், தினம் ஒரு காதல் பாடம் நடத்தி தன்னை பித்தாக்கிக் கொண்டிருக்கும் கணவனின் நேசமும், அவளது உள்ளத்தை மட்டுமல்ல, ஷண்மதியின் வளைகாப்பன்று, இரண்டு மாத சூலாக அவளது கருவறையையும் நிறைத்திருந்தது.

மருமகளின் வளைகாப்பன்று மயக்கத்தில் தள்ளாடிய மகள், சந்தோஷ செய்தியுடன் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்க, வாழ்த்து மழையில் நனைந்தான் வில்லியம்.

ஷண்மதியின் மகள் நந்தினி பிறந்த ஏழாவது மாதத்தில், வில்லியமின் ஆசைமகள் சமீராவை ஈன்றெடுத்திருந்தாள் மொழி.

வில்லியமை அப்படியே உரித்து வைத்திருந்த மகளை கண்டதில் பேரானந்தம் மொழிக்கு. அடுத்த இரண்டு வருடங்களில் அவனை போலவே ஆண்மகவாக ப்ரின்ஸ் டேவிட்டையும் பெற்றெடுக்க, அதன்பின்பு அவர்களது வாழ்க்கையில் ஆனந்தம் மட்டுமே தாண்டவமாட.. என்றென்றும் மெய்நிகர் காதலில் திளைத்து வாழ்ந்தனர் அக்காதற் பறவைகள்.

*******

J

Jeevith

Guest

Happy ending, தங்கள் அடுத்த நாவலுக்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்கிறேன்
 
Padmapriya

New member
Hi mam,
Semma story. Rombha enjoy Panni padichen. 3 kinds of love. Ego illadha love story, possessiveness super oh super . Nalla story kuduthathukku thanks mam.
 
Vigneshwari

Its a speachless....... i can't express anything in fully...... இந்தளவு காதல்...... வாய்ப்பே இல்லங்க.... அருள் &அம்மணி க்கு தான் முதல் இடம்...... வில்லியம்... தருண்.... ரவி இவங்கள்ள ஸ்கீரின் ஸ்கோர் பண்ணவங்க.... அருண் டிஃப்ர் இவங்கள்ட்டேந்து....... எல்லாமே அழகுங்க.... அங்கயற்கண்ணி அப்பு சொக்கலிங்கம் தாத்தா...... ஆஸ்ஸம்.!!!!!!! குணசேகரன்.... மீனாட்சி.... சிவா சித்தப்பு தமயந்தி ச தி ஸ்கீரின் ஃபில்லர்ஸ்.... மோர் ஓவர் ஆஸ்ஸம் நரேஷ்ஷன்.... மதுரை..திருநெல்வேலி.... கோயம்புத்தூர்ன்னு சும்மா ஸ்லாங்ல அடிச்சு பூந்து வெளாடி அங்க அங்க போய் வந்த ஃபீல் அந்த அந்த செக்கண்ட்.... கீப் இட் ராக் ....மோர் ஓவர் என்ஜாயிங் வில்லேந்தும் மொழியாள்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top