JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-11

Suhana

Well-known member

அத்தியாயம் 11:

வெற்றியை பார்த்ததும் சாரு விழிகள் பெரிதாய் விரிய ,அவள் தன்னை எதிர்பார்க்கவில்லை என்பதை அதுவே காட்டி கொடுத்தது. வெற்றி தன் தோள் குலுக்கி ஒற்றை கண்ணை அடிக்க சாரு அதனை உணர்ந்து முறைக்கும் முன்னே ஜெய்யின் அருகில் வந்தவன் "யேன் மாமா யாரு இது? இப்படி வந்து உங்க மேல விழுவுது" என கேட்க,

அவன் கேட்ட கேள்வியில் சாரு கோபத்தின் உச்சத்தில் தன் தந்தையிடம் "டேட் வாட்ஸ் தி ஹெல் இஸ் கோயிங் ஆன் ஹீயர் "என்றாள் வெற்றியை முறைத்த படி,

"காம் டௌன் பேபி,இது யாருன்னு அவனை பார்த்த பின்னுமா தெரியலை,இவன் என் ராகவன் பையன், உன் அத்தை பையன்" என்றவர்,வெற்றியிடம் "இது என் பிரின்ஸ்ஸ் வெற்றி" என கூற,

"அப்படியா!" என்றவன் சாருவிடம் "வணக்கம் த்தா"என கைகூப்ப,சாரு 'இவன் தான் நம்மளை காலையில பார்க்க வந்தனா' என்பதை போல் பார்த்தாள்.

வெற்றியின் செயல்களை பார்த்து கொண்டிருந்த கணேஷ் தன் கையால் வாயை மூடி 'ஆத்தி இவேன் என்ன சிவாஜி ரேஞ்சிக்கு நடிக்குதேன்,' என்றவன் நினைவுகள் எல்லாம் சில மணி நேரங்கள் பின்னால் சென்றன,

சாருவின் ரூமினுள் இருந்து வந்தது முதல் கோபமாய் ரூமினுள் வந்தவன் சற்று நேரம் இங்கும் அங்குமாய் நடக்க,அதனை பார்த்த கணேஷ் "யேன் பங்கு ஊருக்கு நடந்து போக ட்ரைனிங் எடுக்குறியோ! "என்றான்.

வெற்றி அவனை முறைக்க,

"பின்ன என்னடா ஏதோ பொண்டாட்டியை பிரசவத்துக்கு விட்ட கணக்கா இங்குட்டும் அங்குட்டும் நடகறவே, நீ பாட்டுக்கு சும்மா இருந்தானச்சும் அந்த புள்ளை கையில காலுல விழுந்து ,அது கூட போய் உன் மாமனை பார்த்திருக்கலாம் ,இப்போ நீ பண்ண சலும்பலுக்கு உன்னை இனி திரும்பி பார்க்குமான்னு கூட தெரியலை" என்றான்.

"ம்ம்ம்ம்" என்றவன் உறுத்து பார்க்க,

"பாக்குறதுதெல்லம் நல்லத்தேன் பாக்குறவே இப்போ வடை போச்சே யூவர் ஹனோர் ,என்ன பண்ண போறீங்க,இப்போ உன் மாமனும் போச்சு ஜில்லும் போச்சு" என்றான் கணேஷ்.

வெற்றி கணேஷை பார்த்து கொண்டே வந்து படுக்கையின் மேல் அமர்ந்தவன் "அப்படியா!" என சிரிக்க,

"ஆத்தி பய புள்ளை ஏதோ பிளான் பண்ணிட்டான் போலவே சரித்தேன்" என வெற்றியை பார்த்தான்.

"பார்த்த வரைக்கும் போதும் போய் கிளம்புற வழியை பாருவே" என துண்டை எடுத்து தோளில் போட்டு கொண்டே குளிக்கும் அறைக்கு நகர,

"யேன் மச்சான் ஊருக்கு போக போறோமா?"என்றான்.

"யேன்வே ஊருக்கு? மாமனைதேன் பார்க்க போறோம்".

"அதுக்கு அட்ரஸு?"

"யேன் டா மதுரையிலயிருந்தே மலேஷியா வந்துட்டோம் ,இங்கயிருந்தது இங்குனக்குள்ள இருக்குதே வீட்டுக்கு போக மாட்டோமா!" என கேட்க,

"எப்படிவே?"என்றான் கணேஷ்.


"அது எல்லாம் அவ பி. ஏ கிட்ட வாங்கிட்டோம் வென்ரு" என குளிக்க சென்றவினிடம் கணேஷ்
"அது சரி அதுக்கு யேன்வே குளிக்க போற, இப்பொத்தேனே குளிச்சுட்டு போனோம்"என்றான் கணேஷ்.

"முத முதலா மாமனை பார்க்க போறோம் வாசனையா போவவேணாம் அதுக்குத்தேன்" என உள்ளே செல்ல,

"யேன் பங்கு மாமனுக்கு முத்தம் கித்தம் கொடுக்க போறியோ!"என கணேஷ் கேட்க,

வெற்றி உள்ளிருந்து கொண்டே "மாமனுக்கு இல்லவே மாமன் மவளுக்கு"என கூறி சாருவை எண்ணி பார்த்தவன்,"மனதோ நீ மட்டும் அப்படி இப்படி எதுனாச்சும் பண்ணுன உன்னை சும்மா விடுவாளா உன் சண்டி ராணி ,செவுள பேத்துற மாட்டா" என சிரித்து கொண்டான்.

"என்னடா அப்படி பாக்கிற" என குளித்து முடித்து வெளியில் வந்த படி வெற்றி கேக்க,

"ம்ம்ம்ம்... நீ என்னவோ பண்ண பிளான் பண்ணிட்டா புரியுது ,ஆனா அதேன் என்னன்னு தெரியலை" என்றான்.


"உனக்கு ஒன்னும் புரிய வேணாம் கிளம்பு" என இருவரும் கிளப்பி ஜெய் வீடு வர,அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தனர்.

"அலிஸ்"வந்து கதவினை திறந்து கணேஷை பார்த்து புருவம் சுழித்தவர் வெற்றியை பார்த்ததும் கண்கள் வியப்பில் விரிய வரவேற்றார்.

கணேஷ் வெற்றியிடம்" யேன் பங்கு அவருக்கு ஒரு பொண்ணு தானேன்னு ரிப்போர்ட் வந்துச்சு இங்குன என்னவே இன்னொரு பொண்ணு வேற இருக்குது" என கூற,

"எனக்கு மட்டும் என்னவே தெரியும்" என அவன் நிமிரும் முன் அவர்கள் குடிப்பதற்கு ஜூஸுடன் வந்தார் அலிஸ்.

அதனை வாங்கி கொண்டவன் "நான் வெற்றி" என கூறி ஜெயவேலை பார்க்க வேண்டும் என்ற தகவலையும் கூற,

அலிஸின் முகம் கசங்கிய படி அவர் இருந்த ரூமினை காட்ட, வெற்றி பதட்டமாய் உள் சென்றான்.

ஏனோ தந்தை வாய்வழியே ஜெயவேல் பற்றிய கூற்றை கேட்டது முதல் அவரை காண வேண்டும் என எண்ணம் உதித்தது உண்மை தான்,இப்போது அலீஸின் முகவருத்தத்தில் ஏதோ ஒரு இடர் இருப்பதை உணர்ந்து உள் சென்றவன் நிமிர்ந்து பார்க்க அங்கே சுற்றிலும் இருந்த மருத்துவ உபகரணங்களுடன் ஜெயவேல் உறங்க ,வெற்றியையும் அறியாமல் ஓரு பாரம் நெஞ்சில் அழுத்துவது போன்ற உணர்வு .

இப்போது தான் பார்க்கும் ஒருவர் மீது இத்தனை பாசம் தோன்றுமா என எண்ணி கொண்டான்.
அலிஸ் மெல்ல ஜெயவேல் கையினை தொட மெல்ல விழி உயர்த்தி மனைவி முகம் பார்த்தார். 'என்ன?' என்பதை போல் அவர் விழி நோக்க,

அலீஸின் கண்கள் வெற்றியை காண்பித்தது. சற்று மங்களாய் தெரிந்த உருவம் தெளிவாய் தெரிய ஜெயவேல் கண்கள் வெற்றியை ஊடுருவி மெல்ல தன் மீசையை நீவி கொண்டார்.

வெற்றி தன்னை அறிமுகம் செய்ய "நா... நான்" என அவன் தயங்கி "வெற்றிவேல் பாண்டியன்" என்றவன்.

"உ... உங்க" என வெற்றி கூறும் முன்னே "மங்கையோட பையன் என் ராகவனோட பையன் சரிதானே" என்றார் சற்று மெல்லிய குரலில்,

கண்டிப்பாய் இந்த பதிலை அவரிடம் வெற்றி எதிர்பாகவில்லை என்பதை அவன் முகம் காட்ட,
'உன் மாமன் புத்திசாலி டா வெற்றி'என்பது போல் இருந்தது அவர் பார்வை, ஜெயவேல் மெல்ல வெற்றியை கண்களால் அழைக்க வேகமாய் அவர் அருகில் சென்றான்.

அவன் முகம் முழுவதும் தடவி பார்த்தவர் கண்கள் கலங்க,அவரை அணைத்து கொண்டு "மாமா"என்றான்.தாயின் அன்பை போல் தூய்மையானது தான் தாய்மாமன் உறவும் அதனை உணர்ந்தது போன்று கலங்கின வெற்றியின் விழிகளும்,

கணேஷ் இதனை பார்த்து கலங்கிய படி "ஏங்க மாமா சார்?இது யாரு உங்க பொண்ணா" என அலீஸை பார்த்து கேட்க,

ஜெயவேல் கணேஷை பார்க்க, வெற்றி "இது என் ப்ரண்ட் கணேஷ்" என்றான்.


"ஓ"என்றவர் "அது யேன் பொண்ணு இல்லை" என நிறுத்த,

"பின்ன"என்றான் கணேஷ்.

"என் பொண்டாட்டி" என்றார்.

கணேஷ் திரு திரு வென விழிக்க, அவன் விழித்ததில் ஜெயவேல் சிரிக்கும் போது தான் "சாரு" உள்ளே வந்தாள்.


சாருவை பார்த்தவன் "மாமா பாப்பா என்ன இப்போ வருது?இந்த ஊரில இப்போதேன் ஸ்கூல் விடுவாங்களோ!"என கேட்க,

"நோ நோ வெற்றி அவ ஸ்கூல் படிக்கல்லை" என்றார்.

"பின்ன காலேஜ் படிக்குதோ!" என்றவன் கண்கள் சாருவை காண,

அவள் முகம் கோபத்தில் சிவந்து போனது.

"ஆஹா! வெற்றி உன் ஜில்லு சூடா இருக்கு போலவே" என என்னும் போதே,
ஜெயவேல் சிரித்து கொண்டே, "வெற்றி ஷி வாஸ் மை லயன்னஸ்,ரெண்டு மாசத்துல அவளோட கிரௌத் இஸ் மெராகில் ஆன் பிஸ்னஸ் தெரியுமா! "என மகளை கார்வமாய் பார்த்தார்.

தந்தையை பார்த்து சிரித்தவள்" டேட் கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் பிரேஷ் அப் பண்ணிட்டு வாரேன்" என சாரு நகர,

"பேபி வெற்றிக்கு கெஸ்ட் ரூம் காட்டுடா" என ஜெய் கூற,

'என்ன செய்வது' என தெரியாமல் முழித்தவள் " எஸ் டேட் "என முன்னால் சென்று அறையினை காட்ட கணேஷ் உள்ளே சென்றான்.

பின்னால் வந்த வெற்றி அவள் தன்னை கடக்கும் போது "நான் ஊருக்கு போயிருப்பேன் நெனச்சியாக்கும்" என்றான் குரலில் எள்ளளோடு,

"உன்னை பத்தி நெனைக்கிற அளவுக்கு எனக்கு நேரமும் இல்லை உன்னை மாதிரி நான் வெட்டடியுமில்லை" என நகர போக,

"சரித்தேன் நாங்க வெட்டி பயதேன் இப்போ அதுக்கு என்ன?"என வம்படியாய் அவளை கேட்க,

"ப்ச்... ஐ ஆம் சோ டயர்ட் நான் போகனும்"என்றவள் நகர்ந்து சென்றாள்.

அவள் முகத்தின் சோர்வை பார்த்தபின் அவன் மனம் ஏனோ நிலை கொள்ளாமல் தவித்தது, 'வயசுக்கு மீறி ஏதோ தூக்கி சுமக்கறா! 'என நினைத்தவன் சற்று நேரம் யோசித்து கொண்டே உணவு உண்ண கீழே இறங்க,

அங்கே தூங்கும் தந்தையின் அருகில் தலையை கவிழ்த்து அமர்ந்திருந்தாள் சாரு.அதனை பார்த்தவன் கண்டும் காணாமல் நகர்ந்து டைன்னிங் ஹால் நோக்கி செல்ல,

அலிஸ் அவனுக்கான உணவை வைக்க எழ,

"ப்ச் அத்தை உக்கருங்க மாமா சாப்பிடாகளா" என கேட்க,

தலையை அசைத்தார் அலிஸ்.

"நீங்க" எனும் போதே அவள் அதற்கும் தலை அசைப்பை தர,



கணேஷ் அவர்களை பார்த்த படி 'உங்க மாமா கிரேட் மச்சான்" என்றான்.

"ஏண்டா" என வெற்றி கேட்க, அலிஸ் பார்வையும் கணேஷை தான் பார்த்தது.

"பின்ன ஒரு வாய் பேச முடியாத புள்ளைக்கு வாழ்க்கை கொடுத்தருக்காரு பாரு, ஊர்ல பொண்டாட்டி எல்லாம் இப்படி அமைஞ்சிட்ட எப்படி இருக்கும்,எனக்கும்தேன் ஒன்னு இருக்கே தொறந்த வாயை மூடாது ம்ம்ம்ம் ஆனலும் அதுவும் நல்லாதேன் இருக்கும் என்னடா எலிக்குட்டி" என பேசி கொண்டே போக,

வெற்றி அவனை பார்த்து முறைக்க,அலிஸ் அவனை பார்த்து சத்தமாய் சிரித்தார். வெகுநாட்களுக்கு பின் தாயின் சிரிப்பை கேட்டவள் "மாம் என்னாச்சு" என கேட்டு கொண்டே வர, கணேஷ் கூறியதை மலாய் மொழியில் மகளிடம் கூறி சிரிக்க,

சாரு இதழ்களும் சற்று விரிய, வெற்றி கண்கள் ரசனையாய் அதனை மொய்தது.

"இங்கினகுள்ள நாங்கத்தேனே இருக்கோம் நாங்க பார்த்துக்குறோம் நீங்க போய் உறங்குங்க அத்தே" என்றான்.

சாருவும் தாயிடம் "யா மாம் ஐ கேன்,நீங்க போங்க "என்றாள்


அலிஸ் சென்றதும் அவர்கள் எதிர் இருக்கையில் அமர்ந்தவள் தனக்கு வேண்டியதை எடுத்து போட்டு உண்ண,

"இத்தேன் நீங்க விருந்தாளியை பாக்குற லட்சணமா ,இதுவே எங்க ஊர்லனா வந்தவங்க சாப்பிடாம பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டோம்" என்றான் வெற்றி.

சாரு அவனை கூர்ந்து பார்த்து "நீ தானே போக சொன்ன, இப்போ என்கிட்ட கேட்டா?" என்றவள் "நான் கணேஷ் சார்க்கு எல்லாம் பக்கத்துல வச்சுட்டு தான் வந்திருக்கேன்"என்றவள் கவனம் உணவில் இருக்க,வெற்றி முறைத்த படி பார்த்தான்.

"என்னமோ சொன்ன இது என் மாமன் வீடுன்னு,இப்போ என்ன ?" என்றவள் தன் வேலையை தொடர வெற்றி மனதில் சந்தோஷ சாரல் அடித்தது.

சாரு உண்டு கொண்டே "கணேஷ் சார் நீங்க எங்க பிரகட்டிஸ் பண்றிங்க?" என கேட்டாள்.

"மதுரை கோர்ட் மா,அங்குனக்குள்ள போய் வெ" என அவன் ஆரம்பிக்க வெற்றி அவன் கால்களை மிதித்தான்.

"ஆ" என கணேஷ் அலற,

"வாட் ஹப்பன்" என்றாள் சாரு,

"ஓ... ஒன்னுமில்லை" என கணேஷ் வெற்றியை பார்த்து முழிக்க,

"நானே கேக்கணும் நினைச்சேன் இவ்ளோ வேலையை விட்டுட்டு இப்படி வெட்டியா ஊர் சுத்றவங்க கூட சுத்திட்டு இருக்கிங்க" என கேட்க,

கணேஷ் ஒரு முறை திரும்பி பார்க்க,

வெற்றி உடனே" உங்களைதேன் வக்கீல் சார் மேடம் கேக்கிறாங்க,எங்கூட யேன் வீணா சுத்திட்டு இருக்கீங்கன்னு" என்றான் சிரிப்புடன்,

"யேன் டா என்ன கோர்த்து விடுற "என்பதை போல் கணேஷ் பார்த்தான்.

வெற்றி சிரித்து கொண்டே "இவேன் எங்குட ஸ்கூல்ல படிச்சவேன்தேன் வெளிநாட்ல என்னை யாரும் ஏமாத்திட்டா என்ன பண்றது அத்தேன் ஒரு அறிவாளியை கூட்டிட்டு வரணும் பாரு அத்துக்குத்தேன் வக்கீல் சாரை கையோட இழுத்துட்டு வந்துட்டேன்"என்றான்.


'உனக்கு பயம் இதை நான் நம்பனும்'என்பது போல் பார்த்தவள்,கணேஷுடம் மட்டும் விடை பெற்று சென்றாள்.


சாரு சென்றதும்" என்ன டா இங்குனகுள்ள நடக்குது?எதுக்கு நீ உன்னை பத்தி அப்படி சொன்னவே"என்றான் கணேஷ்.

"ப்ச் ...தெரியலை டா அவ கண்ணுக்கு நான் அப்படிதேன் தெரியுறேன் போல,அதே யேன் நம்ம கெடுக்கணும் போற வரைக்கும் போகட்டும்"என்றவன்" நீ போய் உறங்கு நான் கொஞ்சம் வெளியில நின்னுட்டு வாரேன்" என நகர்ந்தான்.

இது வெற்றி இல்லையே எந்த நிலையிலும். தன் நிலையில் இருந்து இறங்காதவன்,அவமரியதாயாய் ஒரு வார்த்தை பொறுக்கத்தவன்.இன்று இப்படி நடந்து கொள்ளும் விந்தையே எண்ணி கொண்டே உள்ளே சென்றான் கணேஷ்.

வெளியில் வந்த வெற்றி இரண்டு ரூமிற்கும் இடையில் உள்ள கதவினை திறந்தான். அழகான சீட் அவுட் போன்ற அமைப்பை கொண்ட பகுதி,சற்று தூரம் சென்றாள் ஓபன் டெர்ரஸ் போல இருக்க ,அதன் கம்பிகளை பிடித்து கொண்டு நின்ற படி வானத்தை பார்த்த படி நின்றான்.

அன்றைய நிகழ்வுகள் எல்லாம் அவன் முன் தோன்ற, ஏனோ ஜெயவேலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை வெற்றியால்,

வெற்றியை வற்புறுத்தி ராகவன் மற்றும் கிருஷ்ணன் கூட பேசும் போது ஜெய்யின் கண்களில் இழையோடிய நட்பு. இவனை பார்த்தவுடன் அவர் கண்களில் தெரிந்த அன்பு,அவரின் தொடுகை உணர்த்திய உரிமை என்ன மாதிரி உணர்வு இது? என எண்ணி கொண்டே திரும்ப,

சாரு சீட் அவுட்டில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து தன் மடிகணினியில் மூழ்கி இருந்தாள்.இரவு உடை ஒரு பேண்ட் மற்றும் ஓரு சட்டை முடியை அடக்கி கொண்டை போட்டு கையில் பேணாவுடன் ஏதோ எழுதுவதும் பின் அடிப்பதுமாய் இருந்தாள்.

வெற்றியின் கண்கள் வேகமாய் அவள் காதோர மச்சத்தை பார்க்க' ஊர்ல அவன் அவனுக்கு ஏதோ ஏதோ பார்த்தா காதல் வரும்,உனக்கு அவ மச்சத்தை பார்த்தா வரனும் என்னமோ போடா வெற்றி!'என்றவன் அவளை தாண்டி நகர போக,


"என்னமோ சொன்னே என் மாமா நான் தட்டுவேன் தூக்குவேன்னு இப்போ ஒன்னும் சொல்லாம போற!"என்றாள் விழிகளை தன் மடி கணினி மீது வைத்து கொண்டே,

வெற்றி நின்று திரும்பி பார்த்தவன் அவள் அமைதியாய் அவள் வேலையை பார்க்க "என்னடா இப்படியா கிறுக்கு புடிச்சு அலையுற நீயி"என நகர போக,

"உன்னைத்தான்" என்றாள் மீண்டும்,

"ஓ... அப்போ நீ தான் பேசுனியா நான் கூட மலேசியா மோகினியோன்னு நெனைச்சுட்டேன்" என்றான்.

"என்ன கொழுப்பா?" என சாரு கேட்க,

"ஆமா நீதேன் வந்து கறியும். மீனுமா சமைச்சு போட்ட,அத்தேன் கொழுப்பு எறிபோச்சு சரித்தேன் போடி "என்றான்.

"யாரு நானு உனக்கு குட் ஜோக்" என்றாள் தன் உதடு சுழித்து,


அதனை பார்த்தவன் மனது 'உன்னை ஒரு வழி பண்ண போறாடா இந்த அல்லி ராணி பார்த்து சுதானமா இருந்துகோடா வெற்றி அப்படியே கெத்தாவே மெயின்டேய்ன் பண்ணிடு'என நகர போனவன் ,"இப்போ அவர் உடம்பு எப்படி இருக்கு?" என்றான் சற்று மெல்லிய குரலில்

அவன் குரலில் இருந்த தவிப்பு அல்லது தந்தை பற்றிய கேள்வியிலானளோ சற்று அமைதியானவள்" ப்ச் அவர் ஹெல்த் படி அப்பேரஷன் செஞ்சாலும் சான்ஸ் ரொம்ப கம்மி, அது ரிஸ்க்கும் கூடன்னு சொல்றங்க ஓவர் எமோஷன் ஆகாம பார்த்துக்கோ சொன்னாங்க" என்றவள் திரும்பி கொள்ள,

நிமிர்ந்து பார்த்தவன் அவள் திரும்பி நின்று கண்ணீரை சுண்டி விடுவது தெரிய, அந்த நேரத்திலும் அவளின் சுயகவுரவம் பிடித்தது வெற்றிக்கு.எதுவும் பேசாமல் நகர்ந்து சென்றான்.

அவன் சென்ற பின்னும் வேலையில் மூழ்கியவள்,நெடுநேரம் சென்ற பின் தான் உறங்க சென்றாள்.

விழித்தவள் நேரத்தை பார்க்க "ஓ...காட் " என வேகமாய் கிளம்பி வர, "மாம் ஐ வான்ட் டூ மூவ் ஆன்" என்றவள் தந்தையை பார்க்க செல்ல, அங்கே வெற்றி கையினை பிடித்த படி பேசி கொண்டிருந்தார்.

"டேட்| என்றாள்.

ஜெயவேல் திரும்பி பார்த்து "குட் மோர்னின் டா ஆபீஸ் கிளம்பிட்டியா! "என கேட்க,

"யா நான் உங்க கூட பேசணும் "என்றாள் வெற்றியை பார்த்த்து கொண்டே,

"பேசு டா" என்றார்.

"உங்க கூட தனியா பேசணும்" என்றாள்,

"ஏன் மாப்பிள தானே இருக்காரு சொல்லு" என கூற,

"டேட் ,இட்ஸ் கெட்டிங் லேட் "என்றாள் சற்று கோபமாய்,

"நான் போறேன் மாமா" என்றவன் அவளை பார்த்த படி அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான்.

"சாரு இட்ஸ் நாட் குட் இது நீ செஞ்சிருக்க கூடாது" என்றார் சென்ற வெற்றியை பார்த்து கொண்டே,

எனக்கென்ன என்பதை போல் பார்த்து இன்றைய அலுவலை சொல்லி, "நமக்கு இந்த ப்ரோஜெக்ட் கிடைக்கனும் ப்ளேஸ் பண்ணுங்க டேட்" என்றாள்.

"யா மை லயன்னஸ் யூ கேன்"என அனுப்பி வைக்க, அவள் சென்றதும் வெற்றி உள்ளே வந்தான்.

"வெற்றி" என்றார் தயக்கமாய்,

"ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா"என்றவன் மீண்டும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான்.


....


 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top