JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-12

Suhana

Well-known member

அத்தியாயம் 12:

ஜெயவேலை ஐ.சீ.யூவில் அனுமதித்து விட்டு வெற்றி திரும்பி சாருவை பார்க்க, அவள் அவ்விடம் இல்லை.

நொடிகள் நரகமாய் கழிய டாக்டர் சாருவை உள்ளே அழைத்தார்.

சாரு வெற்றியை திரும்பி பார்த்து கொண்டே செல்ல என்ன நினைத்தானோ அவள் பின்னோடு சென்றான்.

செயற்கை சுவாசத்தின் துணையோடு படுத்திருந்தார் ஜெயவேல் பாண்டியன்.

"டேட்"என்றாள்.விழித்து பார்த்தவர் கண்களில் அத்தனை தவிப்பு, அலீஸை திரும்பி பார்த்தார் கண்கள் ஒரு முறை மூடி திறந்தன,சாரு அதற்குமேல் அங்கே நிற்க முடியாமல் செல்ல, அவரது விழிகள் மெதுவாய் வெற்றியை அழைத்தது.


"மாமா"என அருகில் சென்றவன்அவர் கைபிடிக்க,அலீஸை பார்த்து "பார்த்துக்கோ" என்பதை மெல்லிய குரலில் கூற,வெற்றின் தலை தானாய் அசைத்தது.

"ஓகே ஜெய் நீங்க பார்க்கணும் சொன்னவங்க எல்லாரும் உங்களை பார்த்தாச்சு இல்லையா டேக் ரெஸ்ட் மேன்"என அனைவரும் வெளியில் வர, கண்கள் சாருவை தேட இவ எங்குன போனா!'என கணேஷை நிறுத்தி வைத்து விட்டு சற்று தள்ளி தேட அவள் ஓரமாய் அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் சற்று இடம் விட்டு அமர்ந்தவன்
"மாமாக்கு ஒன்னும் ஆகாது,கவலை படாத" என்றான்.



"இல்லை நான்தான் காரணம்,என்னால தான் நான் அவர்கிட்ட சொல்லி இருக்க கூடாது, எதையும் எல்லாத்தையும் கம்பெனி நிலைமை ,ஏதோ என்னோட பிரஷர் சொல்லிட்டேன், டேட் " என அவள் புலம்பி தீர்க்க,

"ப்ச் ....சும்மா இரு. என்னமோ மாமா சொன்னாரு நீ லயனஸ்ன்னு அப்படி இப்படின்னு நீ எதுக்கு இப்படி அழுவுற பொறப்பு எப்படியோ அப்படி தேய்ன் இறப்பும் புரியுதா நீயோ நானோ முழுசுக்கும் இங்குனகுள்ளவே ஆயிரவருஷத்துக்கு இருக்க முடியாது"என கூறும் போதே கணேஷ் வந்து நிற்க,


அவன் நின்ற தோரணையே ஏதோ சரியில்லை என்பதை சொல்ல,"என்னாச்சுடா?" என்றான்.


"மாப்பிள முடிஞ்சிடுச்சு டா" என்றான் மெல்லிய குரலில்.

அவனுமே நினைக்காத ஒன்று இது. அவன் அவரிடம் பேசிய போது கண்ணில் தெரிந்த தீட்சண்யம் இதற்கு தானா? ரெண்டு நாட்கள் மட்டுமே பழகிய ஒருவரின் இழப்பு இத்தனை பாதிப்பை தருமா? என அப்படியே அமர,கண்கள் சாருவை காண அவள் பார்வை எங்கோ வெறித்த படி இருந்தது.

அவள் கையை பிடிக்க, திரும்பி பார்த்தவள் கண்கள் சிவந்திருந்தது" எஸ் நீ சொன்னது கரெக்ட் தான் நோ ஒன் கேன் ஸ்டே ஃபார் எவர்" என நகர்ந்து சென்றாள்.

"என்னடா இந்த புள்ள இப்படி சொல்லுது ?" என்றான் கணேஷ்.

"ம்ம்ம்... கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நான் அவளை மீட்க சொன்ன வார்த்தை!! என்னை மீட்க சொல்லிட்டு போறா"என்றான் கண்களில் விழுந்த நீரை சுண்டி விட்ட படி,

"டேய் ஊருக்கு தகவல் சொல்லறதா?வேணாமா?" என்றான்.

"கண்களை மூடி நின்றவன் காரியம் முடியட்டும் அப்புறம் சொல்லுவோம்" என முன்னால் நடந்தான்.

ஜெயவேல் காரியங்கள் எல்லாம் விரைவில் நடந்தேற, அனைத்தையும் ஒற்றை ஆளாய் நின்று சாருவே பார்க்க,


கணேஷ் வந்து "என்ன பொண்ணு டா இது? எல்லாரையும் சமாளிக்குது ,அதுவும் அது கூட ஒருத்தன் சுத்தறான் பாரு, என்னவோ இவேந்தேய்ன் புருஷன் மாதிரி ,அவன் அப்பன் அதுக்கும் மேல போல எல்லாரையும் ஒரு வார்த்தையில தள்ளி நிறுத்துறாய்ங்கயா" என்றான்.

வெற்றி சாருவை பார்த்து கொண்டே, "மாமா உங்க பொண்ணு லயனஸ்தேய்"ன் என உள்ளுக்குள் அவள் சுயமரியாதையை மெச்சி கொண்டான்.

எல்லாம் முடிந்து அவர் அவர் அறையில் முடங்க,வெற்றியின் நினைவில் எல்லாம் ஜெயவேலே சுற்றியே, ரெண்டு நாட்கள் அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது.

வந்த நாளன்றே வெற்றி கேட்டான் "நீங்க நெனச்சுருந்தா அப்போவே என் அப்பாவ எதுனாச்சும் பண்ணிருக்க முடியும் இல்லையா? ஏன் பண்ணலை?!" என கேட்க,

அவரும் சிரித்து கொண்டே "இத்தனை வருஷம் கழிச்சு நீ வந்து என்னை கேள்வி கேக்கனும் பாரு அத்துக்குத்தேன்" என்றார்.

வெற்றி திடுக்கிட்டு பார்க்க,

"என்ன மாப்பிள்ள இப்படி பாக்குற!" என்றவர்,"உனக்கு உண்மை தெரியணுமோ" என சிரித்தவர் "ம்ம்ம்ம்... அன்னைக்கு மங்கை என் தங்கச்சி சொன்னதும் உங்க அப்பன் புடிச்ச கையை எடுத்துட்டான். ஆனா என்னை பார்த்ததும் உன் அம்மா அவன் கையை இறுக்கி பிடிச்சுக்கிட்டா அதிலேயே புரிஞ்சுகிட்டேன் உன் அப்பன் அவ உசிரோட கலந்துட்டான்னு அப்புறம் என்ன செய்ய சொல்லு?" என்றார்.

"பின்ன ஏன் ஊரு, சொத்து இப்படிஎல்லாத்தையும் விட்டுட்டு வந்திக!" என்றான்.


"ஊருன்னு சொல்லு ஒத்துகிடுதேன். ஆனா சொத்துன்னு சொல்லாத, காசு பணம் எல்லாம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும், மரியாதை முக்கியம் மாப்பிள. உன் தாத்தன் கேட்டாரு பாரு ஒத்தை வார்த்தை அங்குனகுள்ளேயே செத்துட்டேன் நானு,பின்ன எப்பிடி அங்குன இருக்கறது அதேன் கிளம்பி இங்க வந்துட்டேன்" என்றவர்," எனக்கும் கூட தோணும் எங்கேயோ பொறந்து பின்ன இங்க வந்து கிடக்குறோமேன்னு அப்புறம் இதேய்ன் வாழ்க்கைன்னு நெனைச்சதும் சரித்தேன்னு அப்படியே போயிடுவோம்ன்னு இருந்துட்டேன்" என்றார்.

அனைத்தையும் எண்ணியவன் விழிகளில் கண்ணீரின் மிச்சம்,ரெண்டு நாள் என்றாலும் அவர் ஏற்படுத்திய தடம் வாழ்க்கை முழுவதும் வரும் என நினைத்தவன் இன்னும் ராகவனிடம் சொல்லாததை உணர்ந்து அவருக்கு அழைக்க,

"நைனா" என்றான்.


"வெற்றி என்ன நீ அன்னைக்கு ஜெய் பேசுனத்துக்கு அப்புறம் நீ போன் பண்ணவே இல்லை?" என அவர் ஆரம்பிக்க,


அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக,


"வெற்றி,லைன்ல இருக்கியா!?"என்றார்.


"ம்ம்ம்ம்.... ரோஸ் எங்க?" என்றான்.

"ஏதோ மனசு சரியில்லைன்னு கோவிலுக்கு போயிருக்கா!" என்றார்.


"ம்ம்ம்ம்..."என்றவன் அமைதியாக,

எப்போதும் அதிரடியாய் பேசுபவன் இன்று அமைதியாய் இருக்க,

"என்னாச்சு வெற்றி?" என்றார்

"அது "என ஆரம்பித்தவன் மெதுவாய் ஜெயவேல் இறந்த தகவலை கூற, ராகவனிடம் பேச்சு இல்லாமல் போனது.


"ஹலோ ....ஹலோ" என்றான் வெற்றி.


"ம்ம்ம்ம்... "என்ற குரல் மட்டுமே ராகவனிடம். பார்த்து பல வருடங்கள் ஆனாலும் ஜெய்யின் நட்பு,அவர் தனக்கு செய்த உதவி என அனைத்தும் வரிசை கட்டி நிற்க,உறவென்பதே பின்னால் சென்றது.

"நைனா" என்றான்.


"ஏன் டா முன்னாடியே சொல்லலை?நாங்க வந்திருப்போம்ல,அங்க எப்படி இருக்காங்க, போதும் டா அங்குன இருந்தது கூட்டிகிட்டு வந்துடு வெற்றி "என்றார்.


'ம்ம்ம்ம்... நான் சொன்னதும் இந்தா வாரேன் மச்சான்னு பின்னாலேயே ஏறிடுவா,இவர் வேற நேரம் காலம் தெரியாம பேசிக்கிட்டு' என உள்ளுக்குள் நினைத்தவன் "சரி நான் வைக்கிறேன்" என வைத்து நிமிர,கணேஷ் நின்றிருந்தான்.

"என்னடா ?"என்றான்

"அன்னைக்கு வந்தாய்ங்களே அந்த காண்டா மிருகம் அண்ட் கோ வந்திருக்காய்ங்க" என்றான்.


'இவன் யாரை சொல்றான்! 'என வெற்றி வெளியில் வர, ரிஷி மற்றும் நீலகண்டன் வந்திருந்தனர்.

வெற்றி வந்ததை பார்த்தவர் "நானே கேக்கணும் நெனச்சேன் சாருபாப்பா இவர் யாரு? இந்த தம்பி ஜெய் மாதிரி வேற இருக்காங்க!" என நீலகண்டன் கேட்க,

சாரு நிமிர்ந்து வெற்றியை பார்த்தாள். அவன் சில நாட்கள் முளைத்த தாடியை தடவிய படி அமர்ந்திருந்தான். "எப்போ பாரு என் மாமன் வீடு அது இதுன்னு பேச வேண்டியது ,இப்போ சொல்ல வேண்டியது தானே" என பார்க்க,

'வெற்றி நீயே சொல்லு' என்பதை போல் சாருவை பார்த்து கொண்டிருந்தான்.

நீலகண்டன் இருவரையும் பார்த்து கொண்டே" என்னமா யாரு இவரு?" என்றார் மீண்டும்.

வெற்றியை பார்த்து கொண்டே "இது டேட்டோட சிஸ்டர் சன்" என்றாள்.

"யேன் அயித்தை மவன்னு சொல்ல மாட்டாளாமா!"என்ற வெற்றியின் கண்கள் சுருங்க,

அதை கண்டும் காணாமல் கணேஷை காண்பித்து "இது கணேஷ் சார் மதுரை கோர்டல லாயரா பிராக்டிஸ் பண்றார்" என்றாள்.

"அப்போ தம்பி என்ன பண்ணுது?என்ன சோலியா இங்க வந்திருக்கிங்க?" என
நீலகண்டன் கேட்க,

"சும்மா இங்குனகுள்ள சுத்தி பார்க்கலாம்ன்னுதேன்" என்றான் வெற்றி.


"ஓ.... சரி சரி" என கூறும் போதே ரிஷி இடை புகுந்து வெற்றியின் கை பிடித்து "சூப்பர் ப்ரோ நீங்களும் என்ன மாதிரி தானா!" என்றான்.

வெற்றி அவன் கையை பிடித்து கொண்டே சிரித்த படி நெறிக்க,வலியில் ரிஷியின் முகம் போன போக்கை பார்த்து கணேஷ் வெற்றியின் காதில் வந்து "ஏய் விடுயா பங்கு! இந்த பிழி பிழியாதய்யா" என்றான்.

வெற்றி அவன் கையை விடுவிக்க ,ரிஷி உடனே "ரெகுலர் எக்சர்சைஸ் செய்விங்க போல" கையை உதறி கொண்டே கேட்டான்.

"ஆமா ஆமா" என்றான் வெற்றி. பின், "அச்சோ எதுனாச்சும் அடி பட்டுருச்சா? கொடுங்க பார்ப்போம்" என்றான்.


"நோ நோ" என்றவன் "கம் ஆன் டேட் நம்ம போவோம்" என அவரையும் அழைக்க,

"இனி உன்கிட்ட அவன் கையை கொடுப்பான்"என்றான் கணேஷ்.

"ம்ம்ம்ம் போவோம்"என சாருவை பார்த்து "நான் சொன்னதை என்னனு பாரு மா, யோசிச்சு சொல்லு"என நீல கண்டன் சென்றார்.



அலிஸ் எதையும் உணரும் நிலையில் இல்லை. அவர் இயக்கம் ஜெயவேலுடனே நின்று விட,அவர் அறை நோக்கி சென்றான்.கடந்த சில நாட்களாய் நிதமும் நடப்பது என்பதால்,சாரு ஒரு நிமிடம் நின்று வெற்றியை திரும்பி பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.


ஜெயவேல் புகைப்படத்தை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தார். வெற்றி அருகில் சென்று அமர,வேகமாய் எழ போனவரை தடுத்து நிறுத்தியவன்," எதுக்கு எந்திரிக்கிறீங்க? உக்காருங்க "என அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே கணேஷை பற்றியும் அவன் ஊரில் செய்த செயல்களை எல்லாம் கூற, அவரையும் மறந்து சற்று புன்னகை வர,அவரை பேசி சமாதான படுத்தி உண்ண வைத்துதான் நகர்ந்தான்.

ரூமினுள் வந்த வெற்றியை "என்ன டா நம்ம இன்னும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க முடியும் சொல்லு,போய் நம்ம சோலியை பார்க்கணும். என்ன செய்யலாம் சொல்லுயா பங்கு? அப்பா சொன்ன மாதிரி இவுக எல்லாரையும் கூட்டிக்கிட்டு போவோம்,போய் அந்த புள்ளை கிட்ட பேசிப்பாரேன்"என்றான்.

"ஏன் டா எப்படி போய் பேசுறது சொல்லு? மாமா ஞாபகத்தை உள்ளுக்குள்ள போட்டு மறுகுறா என்ன செய்ய சொல்றவேய்ன்? "என்றான்.

"இனி என்ன சொல்வது" என புரியாமல் கணேஷ் பார்க்க,

"நீ வேணா! முன்னுக்கு போய் உன் கேஸை பாரு "என்றான் வெற்றி.

கணேஷ் முறைத்து கொண்டு "ம்ம்க்கும் நாங்க அங்க போயி கிழிக்கறதுதேன் இப்போ முக்கியம்,நீ வா ,இல்லை மாமன் மக கிட்ட கல் உடைக்க பிளான் பண்ணிட்டியோ? அப்படி இருந்தா நானும் என் எலிகுட்டியும் சேர்ந்து ஒரு பக்கம் உடைக்குறோம்" என பொரிந்தவன்" நான் போய் தூங்குதேன் " என படுக்க போக,

வெற்றி சிரித்து கொண்டே "ம்ம்ம்ம்...நீ போடுற கடலையை நானும் பார்த்துட்டு தாண்டி இருக்கேய்ன்" என ரூம்மை விட்டு வெளியில் வந்து ,'போய் பேசுவோமா வேணாமா ?'என ரூம்மை நோக்கி செல்ல, திரும்பி சிட் அவுட் கதவை திறக்க அங்கே கையில் கோப்பையுடன் சாரு நின்று கொண்டே "சியர்ஸ் டேட் "என்றாள் தன் கையினை மேலே தூக்கி,

அவன் கதவை திறந்த அரவத்தில் திரும்பி பார்த்தவள் "என்ன?"என்றாள்.


"ஒன்னுமில்லையே"என அவன் கை கட்டி ஊஞ்சலின் ஓரம் நின்று கொண்டான்.

"தாங்க்ஸ்" என்றாள்.


"எதுக்கு?"

"ம்ம்ம்... டேட் டெத் அப்போ கூட ஒரு சப்போர்ட்டா நின்னதுக்கு, தென் அம்மாவை இப்போ பார்த்துகிட்டதுக்கு"

"ஓ "என்றவன் குரலில் உள்ள கோபத்தை உணர்ந்தவள் தன் உதடு சுழித்து அடுத்த டின்னை திறக்க,

வெற்றி மனத்திற்குள் 'ஆத்தி மொடா குடிகாரி போலவே,மாமா என்னய்யா!பொண்ணை இப்படி வளர்த்து வச்சிருக்க' என நினைத்து கொண்டான்.

டின்னை திறந்தவள் வெற்றியிடம் "யூ வான்ட்" என கேட்க,

"வேணாம்" என்பதாய் தலையாட்ட,

"நத்திங் இது ஜஸ்ட் அ சாப்ட் ட்ரிங்க் போல தான் ஒரு டூ ஆர் த்ரீ அடிச்சா தான் கொஞ்சம் சுத்தற மாதிரி இருக்கும்" என்றாள் ஒரு முறை சுற்றி காண்பித்து,

'நேரந்தேன் நீ கிளாஸ் எடுத்து, நானு நின்னு கேட்டுகிட்டு கிடக்கேன்!'என்றவன் பார்வை மட்டும் அவளை துளைக்க,

"என்ன அப்படி பார்க்குற? இங்க இது சோசியல் ட்ரிங்க்" என அதனையும் தொண்டையில் சரித்தாள்.மீண்டும் இன்னொன்றை திறக்க,

"ப்ச் போதும் வை" என்றான்.

"வொய் நான் குடிப்பேன் போடா"என்றவள் " "யூ நோ நான் பார்ட்டி போனா தான் குடிப்பேன் பட் இன்னைக்கு எல்லாம் போச்சு, போச்சு" என கைகளை மேல தூக்கி காட்ட,பின் ,"கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராச்சும் நான் இப்படி கஷ்டபடுவேன் சொல்லிருந்தா சிரிச்சுருப்பேன்,பட் நொவ் ஐ ஆம் ஹோப்ளஸ்,என்னால
டேட்டையும் காப்பாத்த முடியலை! அவர் ஸ்டார்ட் பண்ணுன கம்பெனியும் காப்பாத்த முடியலை, உங்க லயனஸ் தோத்துட்டேன் டேட்" என்றவள் மீண்டும் ஒரு டின்னை எடுத்து குடித்தவள் "இனி என்ன பண்றது?" என குழந்தை செய்வது போல் தன் உதடு பிதுக்கி வெற்றியை பார்த்து கேட்க,

அந்த சூழ்நிலையிலும் அவளை கட்டி அணைக்க தான் தோன்றியது வெற்றிக்கு.'டேய் அடங்குறா சண்டி ராணிக்கு உன் நெனைப்பு தெரிஞ்சது வகுந்துடுவா டி ,சூதானமா இருந்துக்க' என எண்ணி கொண்டே
"என்ன பிரச்சனை?" என்றான்.

சாருவின் கண்கள் கலங்கி" டேட்க்கு அப்புறம் என்னை பார்த்து இப்படி கேக்குறது நீ மட்டும் தான்" என்றாள்.

அவள் சொன்னதில் அவளை அப்படியே தன் நெஞ்சாங்கூட்டில் அடக்க பிறந்த ஆவலை முயன்று அடக்கி தன்னை சரி செய்தவன் "சொல்லு என்னாச்சு?" என்றான்.

"ஏற்கனவே உள்ள பிரச்சனை பத்தாதுன்னு நீலு அங்கிள் வேற லேபர்ஸ் பிரச்சனை வரும் சொல்றாரு,இதுல இப்போ இருக்குற அமௌண்ட் வச்சு ரெண்டு மாசம் தான் பணம் கொடுக்க முடியும், போதாகுறைக்கு டேட் இருக்கும் போதே இருந்த பில்டிங் பிரச்சனை வேற!!இங்க இருக்க லோக்கல் ஆளுங்க பிரச்சனையில பாதியிலே நிக்குது. சொல்லபோனா டேட்க்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு காரணமே அது தான், நான் எடுத்திருக்க ப்ரொஜெக்ட்ஸ்க்கு பணம் இல்லை" என அவள் அடுக்கி கொண்டே போக,

"யாரு அது நீலு அங்கிள்?" என்றான்.

"ரிஷியோட அப்பா" என்றாள்.


"ஓ... அவரு இங்க உன் கூட பிஸினஸ் பார்ட்னர்ஸா" என வெற்றி கேட்க,

"பார்ட்னர் எல்லாம் இல்லை அவர் தான் பில்டிங்க்கு லேபர்ஸ் அனுப்புவாரு. டேட் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுன அப்போதிலிருந்தே" என்றாள்.

"ம்ம்ம்ம்...."என்றவன் "இப்போ என்ன சொல்லிட்டு போனாரு?" என கேட்க,

"ம்ம்ம்ம் என்கிட்ட பணம் இல்லையாம், சோ கம்பெனியை இனி என்னால ரன் பண்ண முடியாதாம். அதுனால யாருக்காச்சும் கம்பெனியை விக்க தான் போற? அதை என்கிட்ட கொடுத்திட்டு என் பையனை கல்யாணம் பண்ணிட்டு உன் அப்பா பிசினஸை பாரு சொல்றாரு" என்றாள் வெறுமையாய்,

"நீ என்ன சொன்ன?" என்றான் அடக்கபட்ட கோபத்துடன்,

"என்ன சொல்றது எனக்கு கல்யாணத்துல இன்டெர்ஸ்ட் இல்லை. பட் என் டேட் பிஸினஸ் எனக்கு வேணும். இப்போ இதைத்தவிர பெட்டர் ஆப்ஷன் இல்லை" என்றாள்.

"நான் கொடுத்தா?" என வெற்றி புருவம் உயர்த்த,

"வாட்" என்றவள் "உன்கிட்ட அவ்ளோ பணம் இருக்கா? எனக்கு ஆயிரத்துல இல்லை கோடியில் வேணும் புரியுதா!" என்றாள்.

"நான் உன்கிட்ட பணம் தரேன்னு சொல்லலையே" என்றான் நிமிர்வுடன்

"தென்"

"உனக்கு பணம் கிடைக்க வேற வழிதேன் சொல்றேன்" சொன்னேன்.

"அப்படி என்ன ஐடியா?" என்றாள் ஆர்வமாய்,

"நான் இன்னும் ரெண்டு நாளுள ஊருக்கு போறேன் நீயும் என்கூட வா",

"வாட் நானா நெவர்" என்றாள்.

"ப்ச் எதையும் முழுசா கேக்குற பழக்கம் உனக்கு இல்லையா!"என்றான்.


"ஓகே டெல் மீ"

"உன் தாத்தா பேரு தெரியுமா!" என்றான்.


"ம்ம்ம்ம்... அலெக்ஸ்"என்றாள்.

"என்ன டா இவ வேற பேரை சொல்றா,யோவ் ராஜவேலு என்னையா உனக்கு வந்த சோதனை!" என நினைத்தவன் " யாரு சொன்னது உனக்கு?"என்றான்.



"ம்ம்ம்ம்... மம்மி தான்" என்றவள் "என்னை அவருக்கு ரொம்ப புடிக்கும்" என்றாள்.

"ச்சே இவ அயித்தையோட அப்பா பேரை சொல்றாளா!"என எண்ணி கொண்டு நான் "நம்ம தாத்தாவை கேட்டேன்" என்றான்.

"ம்ம்ம்" சற்று நேரம் யோசித்தவள்,"ஏதோ ஆர்லதான் ஸ்டார்ட் ஆகும் டேட் சொன்னாங்க" என்றாள்.

"இந்த மட்டுக்காச்சும் தெரிஞ்சு வச்சிருக்காளே" என எண்ணி "ராஜவேல் பாண்டியன் அவரு பேரு" என்றான்.

"ஓ "என்றாள்.

"என்ன ஓ !அவரு பெரிய ஜமீன்தார் நீ கேட்ட பணம் என்ன? அதை விட நூறு மடங்கு அதிகமா அவரு ட்ரங்கு பெட்டில சும்மாவே தூங்குது" என்றான்.

"ஓ...பட் அவர் பணம் எனக்கு வேணாம்"என்றாள்



"ஏன் அது உன் பணம் உனக்கும் உரிமை இருக்கு"


"ம்ம்ம்ம்..."என அவள் யோசிக்க ,


"இவ தண்ணி அடிச்சாதேன் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறா" என எண்ணி அவள் முகம் பார்த்தான் வெற்றி.

"நீ சொன்னது உண்மையா!" என்றாள்.

"எது?"

"ஓல்ட் மேன் கிட்டே பணம் இருக்கு சொன்னியே!"

"ம்ம்ம்ம்..." என்றான்.

"ஆர் யூ ஷ்யூர்" என்றாள்


'எல்லா சுவரும்தேன்,எம்புட்டு விவரமா கேக்குது பாரு' என அவன் மனசாட்சி குரல் கொடுக்க,


"ஓ...தென் நாளைக்கே போயி பணத்தை எடுத்திட்டு வந்திடுவோம் ப்ராப்ளம் ஓவர் லா' என்றாள்.

'வாடி மலேசியா மல்கோவா நானே கிரிமினல் லாயர் என்கிட்டவே வா'என நினைத்து "போன உடனே எடுத்திட்டு வர அது ரோட்லயா கிடக்கு அதுக்கு காவல் காத்திக்கிட்டு தாத்தன் இருக்காரு,முதல்ல நீ வா போய் அவர் கூட பழகு அப்புறம் அவரே அதை தூக்கி தந்துடுவாரு" என்றான்.

"வாட் நான் அங்க இருக்கணுமா! ஐ காண்ட் லா,அதுவும் தட் ஓல்ட் மேன் ஓ காட் என்னால முடியாது"என்றாள்.

"இப்போ உடனே சொல்லாத கொஞ்சம் யோசிச்சு சொல்லு" என்றான்.


"ம்ம்ம்... எப்படி யோசிக்கனும் அப்படியா இப்படியா!' என அவள் ஊஞ்சலில் படுத்து பார்த்து கேட்க,


'ம்க்கும் அஞ்சு டின் உள்ள போன போதே நான் சுதரிச்சுருக்கணும்,நீயும் எத்தனை நாலுதேன் நல்லவனா நடிக்கிறது கிளம்பு டா வெற்றி!' என என்னும் போதே சாரு இன்னொரு டின்னை வாயில் சரிக்க,

"ஏய் போதும் விடு டி,நீ துக்கத்துக்கு குடிக்கிற மாதிரி தெரியலை ஏதோ பரம்பரை குடிகாரி மாதிரி குடிக்கறவ" என பிடுங்கி வைக்க,

"ப்ச் வொய் மேன்" என வெற்றியிடம் சண்டை போட,

"வேணாம் மதி விடு" என்றான்.

"நீ அப்படி கூப்டாத லா,என் டேட் மட்டும் தான் அப்படி கூப்பிடனும்" என்றவள் நீயும் கொஞ்சூண்டு என தன் கையை வைத்து காண்பித்து டேட் மாதிரிதான் இருக்க,பட் உன் சீக் விழுகுற இந்த குழி அண்ட் நீ சில சமயம் முறைச்சி பாக்குற அந்த பார்வை இது எல்லாம் டேட் பண்ண மாட்டாங்க,உனக்கு தெரியுமா? நான் கார் இருந்தாலும் என் டேட் கூட வண்டில தான் போவேன் இதோ இப்படி" என அவனை ஒரு முறை வட்டம் அடித்து காண்பிக்க,

ஏனோ வெற்றிக்கு அவனின் இரும்பு குதிரை நினைவு வர' மயிலு உன்னை விட்டு இம்புட்டு நாளு பிரிஞ்சு இருந்துட்டேன்,நைனா உன்னை நல்லா பார்த்துப்பாரா தெரியலை" என தன் வண்டியை பற்றி எண்ணம் வர 'சீக்கிரம் வந்துடறேன் டா' என்றான் மானசீகமாய் தன் வண்டியிடம்,

அவனை பிடித்து இழுத்து "வா போய் தூங்கலாம் ஐ ஃபீல் ஸ்லீப்"என்றாள் அவன்தோளில் சாய எப்போது தான் வந்து ஊஞ்சலில் அமர்ந்தோம் என புரியவில்லை வெற்றிக்கு ஆனாலும் சிறு பிள்ளையாய் தூங்கும் அவளை எழுப்பவும் மனமில்லை.

'இன்னும் எத்தனை முகம் வச்சிருக்க டி நீயி,மொத மொத பார்த்தப்ப வயசு பொண்ணா,அடுத்து ஒரு ஆபீஸை கட்டி காக்கும் ரொம்ப பொறுப்பான பொண்ணா, என்கிட்ட சவால் விட்ட சண்டி ராணியா, உன் அப்பா கிட்ட மட்டும் நீ காட்ற அந்த சேட்டை, அவரு இறந்தப்ப பக்கத்துல இருக்கும் என்கிட்ட கூட எதுவும் எதிர்பார்க்காம ஒரு சுயமரியாதை பொண்ணா,இதோ இப்போ ஒரு மொடா குடிகாரியா' என்றவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

'உன்னை விட்டு போக எனக்கு மனசில்ல டி,அங்க போனாலும் உன் நினைப்பே என்னை கொல்லும் வாயேன் எதுவும் வேணாம் அப்படியே எங்கயாச்சும் போயிடலாம்'என்றவன் தன்னை மறந்து "ஜில்லு" என அழைக்க,

இன்னும் அவன் மீது வாகாய் சாய்ந்து "ம்ம்ம்ம்" என்றாள்.

வெற்றி அவள் நெற்றியில் முட்டி "இதுக்கு மேல உன் பக்கத்தில இருந்தேன் அம்புட்டுதேன்" என்றவன் "சரி வா பனியா இருக்கு உள்ள கொண்டு போய் விடுதேன்" என நிமிர வைக்க,


"ம்ம்ம்...முடியாது" என்றவள் எழ மறுக்க,


இனி வேலைக்கு ஆவாது என அவளை தூக்க '
"தட்ஸ் மை டேட்" என அவனை இன்னும் அணைத்து கொண்டாள்.

"சரித்தேன்" என்றவன் ரூமினை திறக்க,

அங்கே அவன் கண்ட காட்சியில் அவனையும் அறியாமல் சத்தமாய் சிரித்து விட்டான்.அவள் அறையை அடைக்கும் அளவுக்கு பொம்மைகள் இருந்தது ,அதனை விலக்கி அவளை மெத்தையில் கிடத்தி விலக போக,அவள் கை மெத்தையை துலாவ இருக்கும் மொம்மையில் பெரிதாய் ஒன்று இருக்க, அதனை எடுத்து அவள் கையில் கொடுத்தான். அதனை அணைத்து கொண்டு தூங்கி போனாள்.


எப்படி தூங்கினான் என அறியாமலே சாருவின் பரிணாமத்தை எண்ணி கொண்டே தூங்கி போனான்.

காலையில் இமை பிரிக்க முடியாமல் விரிக்க,

"அய்யா நீங்க எழுந்துட்டிகளா!" என கணேஷ் கேட்க,

"என்ன டா நக்கலா?" என்றான் வெற்றி.

"பின்ன மணியை பாருவே மத்தியானம் வந்துடுச்சு என்னமோ முத ராத்திரி முடிஞ்ச வர புது மாப்பிள்ளை கணக்கா தூங்கறவேய்ன்?எழுந்து போய் குளி அதுக்குள்ள தங்கச்சி மேடம் உன்னை ரெண்டு தடவை கேட்டுருச்சு' என்றான் கணேஷ்.

"என்னது மதியா கேட்டா,இதே முன்னாடியே சொல்றதுக்கு என்னவே பக்கி" என குளியல் அறை நோக்கி ஓட, சற்று திரும்பியவன் "என்ன டா புதுசா தங்கச்சி சொல்றவேய்ன் "என்றான்.


"ம்ம்ம்ம்... நீங்க ஓட்டுன படத்தை பாதி பார்த்துட்டோம். பனிவிழும் மலர் வனம்ன்னு உங்க மேல தங்கச்சி மேடம் சாஞ்சது,அப்புறம் நீங்க தூக்கிட்டு போனது எல்லாத்தையும் உன் ரீலு அறுந்து போச்சு மச்சி" என சிரித்து கொண்டே ரூமை விட்டு ஓட,

"எங்குன போனாலும் என்கிட்டதேன் வருவ டி" என குளித்து வெளியில் வர, சாரு எதிரில் வந்தாள்.

"நம்மளை பார்க்க கூச்ச படுவாளோ!"என எண்ணி நிமிர,அவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

'அதானே இவளாச்சும் கூச்ச படுறதாச்சும் உனக்கு அந்த கொடுப்பினை இல்லை டா வெற்றி' என எண்ணி கொண்டு "கணேஷ் கிட்ட பார்க்கனும் சொன்னியாம் "என்றான்.

"ம்ம்ம்...நேத்து நைட் நாம டிஸ்கஸ் பண்ணினோம் இல்லையா அதை. பத்தி பேச தான்,நான் உன்கூட வரேன் ஒரு 15 நாள் பிளான் பண்ணிக்கலாம் 'என்றாள்.

"ம்ம்ம்... கணேஷ்" என அங்கே அமர்ந்திருந்தவனை அழைக்க,

"என்னடா" என்றான் கணேஷ்.

"அங்க லீகல் சம்பந்த வேலைகள் முடிய எத்தனை நாள் ஆகும்?" என்றான் வெற்றி.

"ஏன்டா உனக்கு தெரியாதா? எதுக்கு என்னை கோர்த்து விடுற?" என வெற்றி காதினை கடிக்க,

"என்னத்தேன் இருந்தாலும் நீங்க சொல்ற மாதிரி இருக்காது பாருங்க வக்கீலு! அதேய்ன்" என்றான் வெற்றி.

"ம்ம்ம்.... அது ஒரு மாசம் கணக்கா ஆகலாம்" என்றான்.

சாரு உடனே "ஒரு மாசமா? மை காட் ஆஃபீசை விட்டு எப்படி போறது?தென் மாம்! "என்றாள்.

வெற்றி அவளை முறைத்து" நீ வரலன்னாலும். நான் அவுகளை ஊருக்கு கூட்டிட்டு போற முடிவிலதேன் இருக்கேன்".

சாரு ஏதோ சொல்ல ஆரம்பிக்க,

"ப்ச் இப்போ ஏன் அம்மா அது இதுன்னு எதுவும் சொல்லாத! அவுகளுக்கு ஒரு மாற்றம் வேணும் அதுக்குத்தேன் "என்றான்.

அவன் சொல்வது சரி தான் என்பது போல் அமைதியாக,

"டேய் மாப்பிள! நீ இவுக கம்பெனி லீகல் வேலையை யாரு செய்யுறது பார்த்து நம்ம பார்க்க ஏற்பாடு பண்ணு" என்றான்.

எதுக்கு என்பதை போல் சாரு பார்க்க, "மாமா என்ன பண்ணி இருக்கார் தெரியலை? ஊருக்கு வேற போறோம் அதேய்ன் ஒரு தடவை அவன் பார்த்தா நல்லது தானே!" என்றான்.

அவனை மெச்சிய படி தலையாட்ட,

"டேய் பங்கு என்னடா பண்ணுன தங்கச்சி மேடத்தை இப்படி எல்லாத்துக்கும் தலையை ஆட்டுது" என மெதுவாய் கேட்க,

"உன்கிட்ட சொன்ன வேலையை பாருங்க வக்கீல் சார் அப்புறம் என்னை கேள்வி கேக்கலாம்" என்றவன் அவன் தலையில் தட்டி அனுப்ப,

"சரி இன்னும் ஒரு வாரத்துல டிக்கெட் போடுவோம்,உனக்கு சரிதானே" என்றான்.


"ம்ம்ம்... 'என்றாள்.

வெற்றி நகர போக "வெற்றி" என்றாள்.

முதல் முறையாய் தன் பெயரை சொல்லி அழைக்கிறாள் என்ற நினைப்பே அவனை குளிர செய்ய "என்ன" என்றான்.

நம்ம நேத்து நைட் இந்த ப்ராபெர்ட்டி டீடைல் பத்தி பேசினோம்,


"ஆமா பேசினோம்" என்றான்

"அப்.... அப்புறம் என்ன ஆச்சு?"என்றாள் தவிப்பாய்,

"அப்புறம் ஒன்னும் ஆகலயே! நீ உன் ரூம்க்கு போய்ட்ட நானு என் ரூம்க்கு போய்ட்டேன்" என்றான் வந்த புன்னகையை அடக்கி கொண்டே,

"ஓ"என்றவள் சற்று நிம்மதியாய் மூச்சை விட,

அவள் பாவனையில் 'ஒ இதேய்ன் நீ தலையை ஆட்டுன ரகசியமா'என எண்ணி கொண்டே கதவின் அருகில் சென்றவன் பின் "நான் எதுவும் பார்க்கல அதுவும் நீ பொம்மையை கட்டிக்கிட்டு தூங்கினதை நான் பார்க்கவேயில்லை" என சிரித்த படி செல்ல,அவன் பதிலில் திகைத்து பின் தன் தலையில் மெல்ல அடித்து "இப்படியா இருப்ப"என கூறிய அவள் இதழ்களும் விரிந்தது.








 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top