JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-13

Suhana

Well-known member

அத்தியாயம் 13:

சாருவிடம் பேசி விட்டு கணேஷை தேடி வந்தான் வெற்றி.

"என்னடா லீகல் அட்வைசர் யாரு என்னன்னு பார்த்தியா?" என்றான் வெற்றி.


"ம்ம்ம்ம்... தங்கச்சி மேடம் பி. ஏ இருக்கு பாரு அந்த நேபாளி நிக்கி அதுகிட்ட வாங்கிட்டேன்.யாரோ அசோக் வரதன் பேர் போட்டுருக்கு யாரு என்னன்னு தேடி பார்த்தேன் நெட்ல ஏனோ அவன் மூஞ்சி கண்ணுல சிக்கலை பாரு" என அவன் புறம் திருப்ப,

சில நொடிகள் தேடியவன் "இவன் தான் அது" என கணேஷ் புறம் காட்ட,

"ம்ம்ம்ம்... பார்க்க நல்லாத்தேன் இருக்கான்"என கணேஷ் கூற,

வெற்றி சிறிது நேரம் 'எங்கேயோ பார்த்து இருக்கமே'என யோசித்து மீண்டும் ஒரு முறை புகைப்படம் பார்த்து "அடச்சே இவனா!" என்றவன் "டேய் நல்லா பாரு டா இவனை" என்றான்.

கணேஷ் அவனை பார்தவன் "வெற்றி அவனா டா இவேன்" என்றான்.

"அப்படி தான் தெரியுது பேர் கூட அசோக் தானே"

"அட ஆமா டா இவன் எல்லாம் எப்படி டா பெரிய ஆள் ஆனான்?"

"யாருக்கு தெரியும் ஆனாலும் அவன் தானான்னு கான்ஃபார்ம் பண்ணுவோம்.போய் அவ கிட்ட லீகல் அட்வைசரை பார்க்கணும் சொல்லு" என்றான் வெற்றி.

"ஏண்டா நீ போய் சொல்லு"

"ஏற்கனவே நான் கடுப்பில இருக்கேன் நீயே போ"என்றான் வெற்றி.

"யேண்டா என்ன பிரச்சனை ,அந்த கண்டமிருகம் போகும் போது ஏதோ சொன்னுச்சே அதுவா!"என கணேஷ் கேட்க,

"ம்ம்ம்... அந்த ஆளு இவ கிட்ட லேபர் பிரச்சனை வரும், உன் கம்பெனி லாஸ்ல போகுது,சோ நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ நான் பணம் தரேன் சொல்லிட்டு போய் இருக்கான்" என்றான் தன் கோபத்தை அடக்கி கொண்டே,

"யாரு அந்த ரிஷிக்கா?"

"ஆமா டா"

"தங்கச்சி மேடம் என்ன சொன்னாங்க?"என்றான்

"ம்ம்ம்ம்.... அவளுக்கு இதை தவிர பெட்டர் அப்ஷன் இல்லையாம். சோ ஓகேயாம்" என்றான்.

"என்ன டா இப்படி?"


"அதேய்ன் வா.. உன் தாத்தா கிட்ட பணம் வாங்கி தரேன் சொல்லிட்டு வந்தேன்" என்றான்.

"அப்படியா? அதுக்கு தான் நம்ம கூட வருதா?" என்றான் கணேஷ்.

"அட ஆமா டா அதுக்கு தேன் உன் தொங்கச்சி வருது"


"வெற்றி நான் கூட வேற என்னமோ நெனச்சேன் டா"என்றான் ஆதங்கமாய்,

"அதை விடு இப்போ அந்த நீலகண்டனை சமாளிக்க ஒரு ஆள் தேவை. அதுக்குதேன் இவன் வேணும்"என்றான்.

கணேஷ் சென்று சாருவிடம் கூற,

"வாட் அவரா ஹீ வாஸ் பிசி. நம்ம தான் போய் பார்க்கனும்"என்றாள்.

"யேன் நம்ம கம்பெனிக்கு வேலை பார்க்கற ஆளு..அப்போ கழுதை கூப்பிட்டா வர வேண்டியது தானே!"என்றான் வெற்றி.

"ஆமா அவரு உன்னை மாதிரி ஊர் சுத்துறாரு பாரு? வான்னு சொன்னா வந்து நிக்க? "என்றாள்.


வெற்றி முறைக்க,

"வேணும்னா நம்ம அவரை பார்க்க அப்பாய்மெண்ட் வாங்கலாம்"என்றாள்.

"சரி அதுக்கு ஏற்பாடு பண்ணு" என்றான்.

"மம்ம்ம்"என்றவள்,அவனை பார்க்கும் நேரத்தை வாங்கி ,"இன்னைக்கு எவினிங் 15 மினிட்ஸ் கொடுத்துருக்காரு" என்றவள் "கணேஷ் சார்" என அழைக்க,

"சொல்லுங்க தங்கச்சி மேடம்"என்றான்.


அவன் அழைப்பில் பார்த்தவள்" நீங்க ரெண்டு பேரும் ஷார்ப்பா பைவ்க்கு ஆபீஸ் வந்துடுங்க அங்கேயிருந்து போகலாம்" என சென்றவளை "நில்லு "என்றான் வெற்றி.


என்ன என்பதை போல் பார்க்க,



"சாப்பிட்டு போ" என்றான்

"வேணாம் இட்ஸ் கெட்டிங் லேட்" என நகரபோனவளை அழைத்து வந்து உண்ண வைத்தே அனுப்பினான்.

காரில் அமர்ந்தவள் எண்ணமெல்லாம் வெற்றியிடம். 'பிடிவாதம் எப்போவும் அவன் நெனைச்சது தான் நடக்கணும் இடியட்' என அவனை திட்டிய படியே சென்றாள்.

.....

ரூமின் கதவு தட்டும் ஓசையில்" கம் இன்" என்றாள்.

"போகலாமா"என்ற படி கணேஷ் உள்ளே வர,

அவனை தாண்டி எட்டி பார்த்தவள் "யா போகலாம், எங்க உங்க ஃப்ரெண்ட் வரலையா?".

'யேன்மா என் பின்னாடி மறையுற உடம்பா அது?' என எண்ணி கொண்டு," இல்லை வந்துருக்கான். வெளியில உங்க பி.ஏகிட்ட பேசிட்டு இருக்கான் உங்களை கூட்டிட்டு வர சொன்னான்"

"வாட்?" என்றவள் நான்சியிடம் வர ,அதே நேரம் வெற்றி ஏதோ சொல்ல அதில் அவள் சிரிக்க,


"குட்" என்றாள் கைகளை கட்டி கொண்டே,


"மே...மேம்" என்றாள்.

"யா நீ என்னோட பி. ஏ அது தெரியுமா!"என்றாள்.


"மே...மேம் சா.... சாரி" என கூற,

வெற்றியை பார்த்து கொண்டே" நீ லாயர் கிட்ட பேசி நாங்க வர போறதை கான்ஃபார்ம் பண்ணிட்டியா?" என்றாள்.

"எ... எஸ் மேம் "என கூற,


"ம்ம்ம்ம்.... சூப்பர்வைசர் வந்தா வெய்ட் பண்ண சொல்லுங்க"என்றாள்.

"எஸ் மேம்"


"நான்சி"என சாரு அழைக்க,

நிமிர்ந்து பார்த்தவளிடம் "பெட்டர் ஸ்டே ஆன் யூவர் லிமிட்ஸ்"என சொல்லி சென்றாள்.

அவள் ஆளுமையை ரசித்து கொண்டே வந்த புன்னகையை அடக்கிய படி அவள் பின்னோடு சென்றான்.



காரினுள்ளும் சாருவின் முகம் கோபத்தை காட்ட,

"ஏண்டா மாப்பிளை நம்ம ஊர்ல புள்ளைங்க எல்லாம் கருப்பா கலையா இருப்பாங்க இங்குன எல்லாம் வெள்ளையா சுமாராத்தேன் இருக்காங்க"என்றான் வெற்றி.


"இவேன் யேன் இப்போ இந்த வெங்காயத்தை சொல்லுதான்" என திரும்பி பார்க்க,அங்கே சாரு வெற்றியை முறைக்க,"ஓ இதுக்கு தானா!" என வெற்றியை பார்த்தான்

வெற்றி சிரித்த படி "அதுல இந்த நான்சி புள்ளை மட்டும் கொஞ்ச மாநிறமா நம்ம ஊர் கார புள்ளை மாதிரி இருக்குது என்ன பங்கு?"


'இப்போ அதுக்கு என்னவாம்,இவேன் போதைக்கு நாம ஊறுகாய்' என உள்ளுக்குள் நினைத்தவன் வெளியில் சிரித்து "ஆ... ஆமா மாப்பிள" என்றான்.

சாரு இருவரையும் முறைத்து திரும்பி கொண்டாள்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் இவர்களை அழைக்க,

சாரு உள்ளே செல்ல பின்னோடு இவர்கள் இருவரும் சென்றனர்.

"வாங்க சாரு சாரி உங்க அப்பா டெத்க்கு என்னால வர முடியலை. அப்போ நான் இந்தியாவில் இருந்தேன்" என கூறி கொண்டே நிமிர,

கணேஷை பார்த்ததும் கண்கள் சுருக்கியவன் வெற்றியை பார்த்ததும் அவன் கை அவனின் கன்னத்தில் வைக்க,

கணேஷ் வெற்றியிடம் "நம்மளை கண்டுகிட்டான் பங்கு" என்றான்.

"பின்ன கொடுத்த நமக்கே மறக்கலை வாங்கின அவனுக்கு மறந்துடுமா" என்றான் தன் மீசையை முறுக்கி,

"அதை சொல்லு" என திரும்ப, சாரு இருவரையும் அறிமுகம் செய்ய,

வெற்றி சாருவிடம்," கொஞ்சம் வெ|ளிய போய் நில்லு நாங்க பேசிட்டு வர்றோம்" என்றான்.

"ஏன் ? நான் போக மாட்டேன்"என்றாள்.

"அப்போ இங்குனயே நில்லு அப்புறம் ஏன் இப்படி கேட்டான்னு குதிக்க கூடாது".

"அப்படி என்ன கேட்ப?" என்றாள்.


"ம்ம்ம்ம்... என்ன வேணாலும் கேட்பேன்"என அவளை பார்த்து ஒற்றை கண்ணை அடிக்க,

அவன் செயலில் முறைத்து விட்டு "என்னவோ பண்ணு போ" என வெளியில் சென்றாள்.

அவன் சென்றதும் சிரித்து கொண்டே திரும்ப,அசோக் எழுந்து நின்று கொண்டே "அச்சோ சீனியர் நான் இப்போ எல்லாம் எந்த பெண்ணையும் பார்க்கிறது கூட இல்லை" என்றான்.

வெற்றி சிரித்து கொண்டே "அடச்சே உக்காருவே நான் அதுக்கு வரலே" என்றவன் ஜெயவேல் பாண்டியன் சொத்து விவரம் மற்றும் நீலகண்டன் ரிஷியை பற்றிய விவரம் என அனைத்தையும் கேட்டு கொண்டவன்.

"அப்போ சுத்தி சுத்தி அந்த ஆளு கிட்டவே வர்ற மாதிரி இருக்கே"என கணேஷ் கூற,

"ம்ம்ம்... அப்படி தான் நெனைக்கிறேன்" என்றான் அசோக்.

"ஓகே அப்போ நான் சொல்லுறத கேளு. மாமா ஆரம்பிச்ச ப்ரோஜெக்ட் பல கோடி ரூவா இப்போ அதுகுள்ள போனா மீழ முடியாது.போதா குறைக்கு அது லோக்கல் ஆளுக வேற இருக்காய்ங்க"என நிறுத்த,

"அப்போ எதுவுமே பண்ண வேணாம் சொல்றியா?" என்றான் கணேஷ்.

"அப்படியில்லை டா அதுக்கு முன்னாடி இந்த நீலகண்டனை எதாவது பண்ணணும்" என நடந்தவன்,"டேய் நீ போய் அவ கிட்ட இந்த லேபர்ஸ் ஹெட் ஆரு? அவனை பார்க்கணும் சொல்லு" என்றான்.

"நான் யேன்யா பார்க்கணும்"என கணேஷ் கேட்க,

"ம்ம்ம்ம்.... நீருதாம் லாயர் அப்போ நீதான் கேக்கணும்" என சிரித்து "நீயும் வந்துடு"என அசோக்கிடம் சொல்ல,

"ஓகே சீனியர்" என்றான்.

வெற்றி சிரித்து கொண்டே "இன்னும் அப்போ தலையை ஆட்டுன மாதிரியே ஆட்ற"என சிரிக்க,

அசோக்கிற்கும் அந்த நினைவு தான் அஞ்சலியை ஒரு முறை இவன் நண்பர்களுடன் கிண்டல் செய்ய,அவள் நேராக சென்றது வெற்றியிடம் தான் பள்ளி இறுதியில் அவளிருக்க கல்லூரியில் வெற்றி இருந்தான்.

அவளை கிண்டல் செய்தது தெரிந்ததும் அவளை முன்னே விட்டு வெற்றி பின்னால் செல்ல, மீண்டும் அவளை கிண்டல் செய்ய வெற்றி அடித்த அடியில் பின் யாருமே அவ்விடத்தில் இல்லை.

அதில் ஒருவன் தான் இந்த அசோக் இப்போது நினைத்து பார்த்து மூவரும் சிரித்து கொண்டனர்.


"சரி நான் கேட்ட தகவல்களை எல்லாம் கொஞ்சம் சீக்கிரம் கொடு" என வெளியில் செல்லும் நேரம்,

அசோக் "சீனியர்"என்றான்.

என்ன என்பதை போல் இருவரும் நிக்க,

"அ... அஞ்சலி எப்படி இருக்கா?" என்றான்.

வெற்றி கணேஷை. பார்த்து சிரித்து கொண்டே
"நல்லயிருக்கா" என கூற,

கணேஷ் மனதுக்குள் "என் எலிகுட்டியை இந்த பூனைகள் கிட்ட இருந்து எப்படி காப்பாத்துறது?"என அசோக்கை முறைத்து கொண்டே சென்றான்.

லேபர்ஸ் தலைவனிடம் பேசி கொஞ்சம் அனைத்தையும் சீர் படுத்தியவன் ரெண்டு நாட்களில் ஊருக்கு செல்ல ஏற்பாடுகளையும் செய்தான்.

இரவு உணவு முடித்து ரூமினுள் வந்தவன் மீண்டும் எழ,

"என்ன மாப்பிள எங்குன போற?" என்றான் கணேஷ்.

"சும்மா காத்து வாங்கலாமுன்னுதேன்"

"யேன்வே இங்குன ஏசி சும்மா அள்ளுது.இதுல நீயி வெளில போய் காத்து வாங்குறியாக்கும்,போய் தங்கச்சி மேடத்தை பார்க்க போறேன் சொல்லுவே" என்றான் சிரிப்புடன்,

"அதான் தெரியுதுல அப்புறம் என்னவே" என வெளியில் செல்ல,

"அதை சொல்லு உன் அப்பன் உனக்கு ரெண்டு பொண்டாட்டிகாரன் பேரை வச்சுருக்கார்.அத்தேன் உனக்கு எல்லாம் அமையுது எனக்கும் எங்க அப்பன் வச்சிருக்காரு பாரு கணேஷ்ன்னு கல்யாணமே வேணாம்னு அரசமரத்து அடியில உக்காந்தவர் பேரை எல்லாம் அந்த ஆளை சொல்லனும்.நானுதேன் எப்படி எப்படியோ மேசேஜ் அனுப்பி பாக்குறேன் ப்ளூ டிக் வருதே தவிர வேற ஒரு மண்ணும் காணோம், என் வாழ்க்கை இப்படி கனவுலேயே போய்டுமா டா எலிகுட்டி" என அவள் புகைப்படத்தை பார்த்து கொண்டே தூங்கி போனான்.

வெளியில் வந்த வெற்றி சிட் அவுட் கதவை திறக்க, அங்கே ஒரு கையில் மடிக்கணினியை வைத்து கொண்டு வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சாரு.

"ஆத்தி வெற்றி தண்ணி போட்ருக்காளா இல்லையா ஒன்னும் புரியலையே,இதில இந்த ட்ரெஸை பாரு மோகினி மாதிரி °"என அவளை தாண்டி செல்ல

"வெற்றி"என்றாள்.

என்ன என்பதை போல் திரும்ப,

"என்னைக்கு நாம போறோம்" என்றாள்.

"வெள்ளிக்கிழமை"

"ம்ம்ம்ம்...."என்றவள் அமைதியாக,


"யேன் என்னாச்சு?" என்றான்.

"நத்திங் "என்றவள் "நாளைக்கு நீலு அங்கிளை வர சொல்லி இருக்கேன்.நாம போறதை சொல்லி அந்த லேபர்ஸ் பிரச்சினை முடிஞ்சதை சொல்லனும்" என்றாள்


'நீயே சொல்லலைனாலும் அவருக்கு இன்னேரம் தெரிஞ்சு இருக்கும்' என நினைத்தவன் "ம்ம்ம்" என்பதோடு நிறுத்தி கொள்ள,பின் அவள் வேலையில் கவனம் வைக்க அவனோ அவள் மீதே கண்கள் வைத்தான்.

அடுத்த நாள் காலையே ரிஷியுடன் அவர் வர,

"வாங்க அங்கிள்"

ரிஷி வேகமாய் வந்து "சாரு ஐ மிஸ் யூ "என அணைக்க வரும் நேரம் "அட வாங்க தம்பி" என வெற்றியின் குரலில் அப்படியே நின்றான்.

வெற்றி அவன் அருகில் வந்து கையை நீட்ட, ரிஷி வேகமாய் வணக்கம் வைக்க,

"பாரு டா தம்பிக்கு தமிழர் பண்பாடு எல்லாம் தெரிஞ்சுருக்கு" என வணக்கம் வைக்க,

கணேஷ் அவன் காதில் அருகில் வந்து "அன்னைக்கு நீ பிழிஞ்ச பிழில இனி யாருக்கும் கையை கொடுக்க மாட்டான் மாப்பிள" என்றான்.

வெற்றி சிரித்து கொண்டே" இப்படியே எல்லார்கிட்டயும் மரியாதையா கும்பிட்டு பழகு தம்பி" என ரிஷி முதுகில் தட்டியவன் "எங்க சாருவை கும்பிடு பார்க்காலம்"என கூற,

வேற வழியின்றி அவனும் வணக்கம் வைத்து தந்தையின் அருகில் அமர,

"என்னம்மா சாரு நீயே எல்லா பிரச்சனையும் சமளிச்சுட்ட போல,அதுவும் அந்த வக்கீல் வேற வந்து பேசிட்டு போய் இருக்கார்" என கூற

"நான் இல்லை அங்கிள் எல்லாம் கணேஷ் சார் தான் பண்ணினார். அதுவும் அசோக் வரதன் எல்லாம் நேர்ல வருவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல "என்றாள் அவனை பார்த்த படி,

கணேஷ் திரு திரு வென முழிக்க,

நீலகண்டன் "அப்படியா தம்பி ரொம்ப நல்ல விஷயம் தான் பாப்பா தனியா இருக்குற நேரத்துல இந்த மாதிரி உதவி எல்லாம் எவ்ளோ பெரிய விஷயம்"என்றார்.


அதுமட்டுமில்ல அங்கிள் இனி கம்பெனியை ரன் பண்ண பணம் விஷயமா நான் இந்தியா போறேன்.

""என்னமா என்னாச்சு அதான் வேற வழி சொன்னேனே ஆயிரம் ரெண்டாயிரம் இல்லம்மா கோடி, கோடி கணக்குல பணம் வேணும் "என்று கூற,

சாருவோ வெற்றியை பார்க்க, அவன் இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பது போல் திரும்பி கொண்டான்."என்கிட்ட மட்டும் அப்படி பேசினான் இப்போ வாயில என்ன?"என்பதை போல் கோபமாய் திரும்பி கொள்ள,

வெற்றி கணேஷை பார்த்து நீ பேசு என்பதாய் கண் அசைக்க, அவன் நீலகண்டனை பார்த்து "என்ன சார் இப்படி சொல்லிடிங்க இங்குன உள்ள சொத்து எல்லாம் அவுக தாத்தா சொத்துக்கு முன்னாடி ஒரு பங்கு கூட இல்லை அவுக எல்லாம் பரம்பரை ஜமீன்தார்கள் சார்" என்றான்.

நீலகண்டன் கண்கள் மின்ன "அப்படியா நான் நினைச்சேன் ஜெய்யை பார்க்கும் போதே பெரிய ஆளுகளா தான் இருப்பாங்கன்னு,சரிமா நீ போ போகும் போது துணைக்கு ரிஷியை கூட்டிட்டு போ மா" என கூற,

வெற்றி' இது என்ன டா இம்சை இப்போ என்ன செய்வது?' என கணேஷை பார்க்க,

சாரு உடனே "வேணாம் அங்கிள் நானே இப்போ தான் போறேன் அண்ட் நான் இன்னும் ஒரு 15 டேஸ்ல திரும்பிடுவேன்" என்றாள்.


"ஓ... சரிமா பார்த்து போய்ட்டு வா ஏதாச்சும்னா போன் பண்ணு" என்றவர்.காரில் வரும் வழியெல்லாம் யோசனையில் வர,

"டேட் என்னாச்சு?" என்றான் ரிஷி.

"ஒன்னுமில்லை ஏதோ நடக்குது அந்த வக்கிலும் சரி கூட இருக்க அந்த பயலும் சரி ஏதோ பண்றாங்கே ஆன அது என்னன்னு தான் புரியலை" என யோசித்து "எது நடந்தாலும் நீ சாருவை கல்யாணம் பண்ணிக்கிற அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணு ஒரு அப்பனா இதுக்கு மேல சொல்ல முடியாது எனக்கு என்னமோ , அந்த வெற்றி சாருவை பார்க்கரதே சரியில்லை" என்றார்.

"டேட் ஐ நோ சாரு, அவளுக்கு அந்த மாதிரி ஆளுகளே பிடிக்காது"என்றான்.

ஒரு வழியாய் அனைத்தையும் சரி செய்து பிளைட்டில் அமர,வெற்றியின் இதயத்தில் பாரமாய் ஜெய்யின் நினைவுகள்,வரும்போது கூட தோன்றாத படபடப்பு இனி அனைவரையும் எதிர் கொள்ள வேண்டுமே என எண்ணும் போது தோன்ற,

அருகில் அமர்ந்திருக்கும் சாருவை பார்த்தான் அவள் கையில் ஏதோ வியபார சம்மந்த புத்தகத்தை பார்த்து கொண்டிருந்தாள்.'மாமா இவளை எப்படி பெத்திக,ஒன்னு அந்த லேப்டாப், இல்லைன்னா புக் அப்படியும் இல்லைனா பாட்டிலும் கையுமா,இவளை எப்படி கரெக்ட் பண்ணுவேன் 'என எண்ணி கொண்டே பார்க்க அவளின் ஒரு பக்க தோற்றம் ஏதோ கலைந்த ஓவியமாய் அவன் கண்களுக்கு தோன்ற "ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே எனும் போதே அவள் முடியை ஒரு பக்கம் போட அவள் காதின் ஓரத்தின் மச்சம்,ம்ம்ம்ம்... இப்போ ஓகே"என்றவன் கையில் கன்னத்தை வைத்து பார்த்த படி வர,

கணேஷ் அவனை பார்த்து கொண்டே "பங்கு நான் வேணும்னா தங்கச்சி மேடத்தை இங்குனகுள்ள உக்கார சொல்லவா" என்றான்.

வெற்றி சிரித்து கொண்டே "அதை நீ முன்னமே செஞ்சுருக்கணும் வென்ரு"என்றான்.

ஒரு வழியாய் மதுரைக்கு வந்து சேர,ஏர்போர்டை விட்டு வெளியில் வந்தவன் மூச்சினை நன்றாய் இழுத்து விட்டு "ஷப்பா என்னதேன் சொல்லு நம்ம ஊரு நம்ம ஊரு தான்வே" என்றான்.

"ம்ம்ம்... அது இருக்கட்டும் இப்போ இவிகளை என்ன செய்யறது கொண்டு போய் தேனில விட்டுட்டு வந்திடுவோமா" என கணேஷ் கேட்க,


"இல்லை டா ஜெட் லாக் அத்தைக்கு இருக்கும் சோ ஹோட்டல்ல ரூம் போட்டு தங்க வச்சுட்டு நாளைக்கு போவோம்" என்றான்.

ம்ம்ம்ம்... நீ சொல்றதும் சரித்தேன்

வெற்றியின் கைபேசி அடிக்க,

"வெற்றி லேண்ட் ஆயிட்டியா!"என்றார் ராகவன்.

"இப்போதேன்" என்றான்.

"அவுக எல்லாரும்?"

"அவுக லகேஜ் எடுக்குறாக",

"சரி அவுகளை இங்குன கூட்டியா"என்றார்.

"என்ன விளையாடுறிகளா! ரோஸ் கிட்ட என்ன சொல்றது?" என்றவன் "அப்... அப்போ ரோஸ்க்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சா" என கேட்க,


"இப்போ கிருஷ்ணன் அங்க தான் இருக்கான் அவன் கூட கிளம்பி வா" என வைக்க,

"எதுனாச்சும் சொல்லிட்டு வைக்கிறாரா பாரு "என கட் செய்தவன்,இந்த நிலையை எப்படி கையாள்வது என என்னும் போதே வெற்றி என சத்ததுடன் அஞ்சலி அவனை அணைக்க,

கையில் இருந்த பை பொதிகளை கிழே போட்டுவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்த படி நின்றான் கணேஷ்.

சாரு அவர்கள் மூவரையும் பார்த்து கொண்டே அருகில் வர,

"அஞ்சலி நான் வரத்துக்கு முன்னாடி உன்னை யாரு முன்னாடி வர சொன்னது" என அவளை அதட்டிய படி வந்தார் கிருஷ்ணன்.


"ம்க்கும்...எல்லாம் முடிஞ்சு வர போலீஸ் மாதிரி கடைசில வந்து டயலாக் வேற யோவ் மாமனார் ஆக போற பாக்குறேன் இல்லகாட்டியும் உன்னை எல்லாம்" என மனதில் அவரை திட்டி கொண்டே அவரை பார்த்து சிரித்து வைக்க,

அவர் பார்வையோ சாருவை பார்த்தது வேகமாய் வந்தவர் கண்கள் கலங்க அவள் தலையை தடவி "என் ஜெய் பொண்ணா நீயி" என்றவர் "சரி லேட் ஆகுது கிளம்பலாம் வாங்க" என கூற

அவர் பேசியது கூட காதில் விழாமல் அவன் எண்ணம் எல்லாம் அவன் தாயிடமே,அனைவரையும் அழைத்து கொண்டு வீட்டுற்கு வர,


ராகவன் தான் அனைவரையும் வரவேற்று உள்ளே வர சொன்னார். வெற்றி கண்களால் சரோஜாவை தேடி உள்ளே வரும் நேரம்,

"அங்கேயே நில்லு" என்றார் சரோஜா.

"ரோஸ் நான் என்ன சொல்ல வரேன்னா" என அவன் தொடங்கும் முன் அவர் கை இடியென அவன் கன்னத்தில் இறங்கியது.


 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top