JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-14

Suhana

Well-known member

அத்தியாயம் 14:
சாரு மெல்ல கண்களை விரித்து பார்த்தாள் இந்தியாவின் நேர மாறுதல்கள் அவளுக்கு இன்னும் பிடிபடவில்லை இங்குள்ள உணவு வகைகளும் கூட ,அதையும் தாண்டி இந்த இடம் மனத்திற்கு மிகவும் நெருக்கமாய் தோன்றியது. இந்த வீட்டின் பிரம்மாண்டம் மாளிகை போன்ற அமைப்பு, தன் தந்தை பிறந்து வளர்ந்த வீடு என அனைத்தும் பிடிக்க, சில மாதங்களாய் இருந்த பரபரப்பு இல்லாமல் இருப்பது கூட நன்றாக இருந்தது சாருவிற்கு.
அவள் எழுந்ததுமே அங்கே வேலை செய்யும் பெண் ஒருத்தி இளநீரை தர,அதனை வாங்கியவள்,இதுவும் அவனின் ஏற்பாடாய் தான் இருக்கும் என எண்ணி கொண்டே ஆள் உயர ஜன்னல்களை திறந்து அதன் இடைவெளியில் அமர்ந்து கொண்டே பருக,கீழே வெற்றிவேலின் சத்தம் கீழே கேட்க எட்டி பார்த்தாள்.
பார்டர் வைத்த வேஸ்டி அதற்கு தகுந்த சட்டை அதனை மடித்து விட்ட படி நின்று வேலை செய்பவர்களிடம் பேசிய கொண்டிருந்தான். என்ன பேசினான் என்பது அவள் காதில் விழ வில்லை என்றாலும் அவன் மீசையை திருகி கொண்டே பேசிய விதத்தை பார்த்தவள் ரவுடி 'யாருக்கும் அடங்க மாட்டான்' என என்னும் போதே வேகமாய் சட்டையை கழட்டி அவர்கள் கையிருந்ததை வாங்கி அவன் வேலை செய்ய,சாரு அவனை பார்த்த படி நின்றாள்.
சுத்த திராவிட நிறம் அவனின் இடை விடாத உடற்பயிற்சியின் பலன் அவன் உடம்பில் அப்பட்டமாய் தெரிய,அவன் முறுக்கி விட்ட மீசை அதை அவன் திருகி நின்ற தோற்றம் என அவள் கண்கள் மேலிருந்து கீழ் வரை அவனை அளவெடுக்க அதற்குள் வேலையாட்கள் செய்ததை நொடியில் செய்து எப்படி என்பதை போல் தன் புருவம் உயர்த்தி காட்டி இது மாதிரி செய் என்பதாய் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
சாரு மெலியதாய் சிரித்து கொண்டாள் இந்த சில நாட்களாய் அவன் குணம் ஓர் அளவுக்கு அவள் புரிந்து தான் கொண்டாள். நினைத்ததை சாதிக்கும் குணம்,யாருக்கும் அடங்காத அவன் திமிர், எதிராளியை ஆட விட்டு பின் வெல்லும் அவனின் சாதுர்யம் என்றவள் மனமும் அவனை மெச்சி கொண்டது.
கீழே அவன் " ரோஸ் ,ரோஸ்" என அலறும் சத்தம் கேட்க, வெளில அவ்ளோ ரவுடி தனம் பண்றான். இதுவே அவுங்க அம்மான்னா இன்னும் சின்ன புள்ளை மாதிரி கெஞ்சிட்டு இருக்கான் என்றவளின் நினைவில் நேற்றைய தினம் நிழலாடியது.
சரோஜா அடித்த அடியில் சாருவே அதிர்ந்து நிற்க,
கணேஷ் சற்று பயந்து போய் "ஆத்தி என்ன அடி!"என வாய்விட்ட சொல்ல,
கிருஷ்ணனும் ராகவனும் "என்ன சரோஜா!" என முன்னால் வந்தனர்.
வெற்றி உடனே "ம்ம்ம்...செத்த எல்லாரும் சும்மாயிருங்க இது எனக்கும் என் அம்மாக்கும் உள்ள பிரச்சினை" என்றவன்,
"ரோஸ்" என அழைக்க,
அவனை பார்த்தவர் கண்களில் அத்தனை கண்ணீர்,
வெற்றி தவிப்பாய் "ரோஸ்" என அழைக்க,
"ஏண்டா எதுக்கு என்கிட்ட சொல்லாம போன சரி போன அங்குன போனதுக்கு அப்புறமாவது எனக்கு சொல்லனும் தோணலையா உனக்கு,என்கூட பிறந்தவாக டா அவுக என் கண்ணை பார்த்து நான் யார் கூட இருந்தா நிம்மதியா இருப்பேன் தெரிஞ்சு நீ போய்டுன்னு சொல்லி தடுக்க வந்த அத்தனை பேரையும் தாண்டி நிமிர்ந்து நின்னவுக,என் அண்ணன் மூஞ்சியை பார்க்க கூட முடியாத பாவி நானு,என்னாலதேன் இப்படி தெரியாத ஊர்ல போய் ,இப்படி யாரும் பார்க்கவே கூடாதுன்னு போயிட்டாக" என அவர் அழுத அழுகையில் தளர்வாய் சரிந்து போய் அமர,
வெற்றி மீண்டும் "ரோஸ்" என அருகில் சென்று அணைத்து, "நான் யேன் அங்க அவரை தேடி போனேன் தெரியுமா!" என்றான்.
ஒருமுறை ராகவன் கிருஷ்ணன் என இருவரையும் பார்த்து "உங்க அப்பாவுக்கோ இல்லை இவிய்ங்க ரெண்டு பேர் சொன்னதுனால இல்லை,உனக்கு ,உனக்காகதேய்ன் சின்ன வயசுல உன் அழுகைக்கான காரணம் தெரியாம நான் யோசிச்சு இருக்கேன், இப்போ நீ உன் அண்ணனை காணாமதேன் அழுகுறன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்புடி நான் சும்மா இருக்கறது அத்தேன் போனேன்,உனக்காக மட்டும்தேன் போனேன் என்றவன் மூச்சினை இழுத்து விட்டு "உன் அண்ணன் உன்னை மாதிரி பாசக்காரர்தேன் இத்தனை வருஷம் தாய்மாமனா காட்டாத பாசத்தை ரெண்டு நாள்ள ஒரு ஆசானா காட்டிட்டு போய்ட்டாக எனக்கும் வருத்தம்தேன், ஆனா வந்தவுக எல்லாரும் ஒரு நாள் போறதுதேன்"என அவன் கூறும் போதே அவனையும் அறியாமல் அவன் விழிகளில் இருந்து விழுந்த கண்ணீர் ஜெய் மீதான பாசத்தை சொன்னது.
சரோஜா அவனின் கண்ணீரில் சற்று அமைதியானர் என்றே சொல்லலாம்.அவர் அறிந்த வெற்றி எதுக்கும் கலங்காதவன் அவனையும் கலங்க வைத்த தன் உடன் பிறந்தவனின் பிரிவே சொன்னது, அவர் மீதான பாசத்தை வேறு எதுவும் பேசாமல் எழுந்து கொள்ள, அலிஸ் அவர் அருகில் வந்தார்.
அவரை பார்த்ததும் அணைத்து கொண்ட சரோஜா "நான் இருக்கேன் உங்களுக்கு எதுக்கும் கலங்காதிக" என்றவர் சாருவை பார்த்ததும் "வா த்தா" என உள்ளே செல்ல,
"ரோஸ் அப்போ நானு "என்றான் வெற்றி பாவமாய்,
"அப்படியே ஓடி போய்டு என் மூஞ்சில முழிக்காதவே" என கூற,
"அம்மா நீ சுமந்த பிள்ளை
சிறகு ஒடிந்த கிள்ளை"என பாட,
"அந்த சிறகு ஒடிச்சு ஒடப்புல போடு" என அவனை பார்த்து கூறி சாருவிடம் "அவேன் இப்படிதேன் கத்திக்கிட்டு கிடப்பாய்ன் வா "என அழைத்து செல்ல,
வெற்றியின் இந்த பரிணாமத்தில் சாரு அவனை பார்த்து சிரித்து கொண்டே சென்றாள்.
பின் அடுத்த நாள் போடிக்கு வர முடியாது என கூறிய சரோஜாவிடம் "உன் அண்ணன் வருவார்ன்னு உயிரை பிடிச்சுவச்சுக்கிட்டு இருக்கிற உன் அப்பனுக்க்காக வா த்தா ,இனி அவர் வர போறதே இல்லைன்னு அவர்கிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு திராணி இல்லை" என கூற,
"அப்போதும் நீ போ பாரு எது வேணுமானலும் பண்ணு ஆனா நான் வரமாட்டேன்" என கூற,
வெற்றி ராகவனை பார்த்தான்.
"சரோஜா அவர் மகளையும் மகனையும் அவர் கிட்ட இருந்து பிரிச்சு நான் பண்ணுன பாவத்துக்கு பரிகாரம் பண்ண விடு நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நான் உன்கிட்ட இதை செய் அதை செய் சொன்னது இல்லை ஆனா இப்போ நீ இதை செஞ்சுதேன் ஆகணும்" என்றார் ராகவன் கண்டிப்பான குரலாய்,
சரோஜா எதுவும் சொல்லாமல் உள்ளே போக, ராகவன் பின்னோடு சென்றார்.
சிறிது நேரத்தில் சரோஜாவும் கிளம்பி வர,கணேஷ் வெற்றி காதில் "பங்கு நைனா டக்குன்னு காலுல விழுந்துட்டார் போல அம்மா பெட்டியும் கையும்மா வாரக" என கூற,
வெற்றி புன்னகையுடன் "எதுவோ ஒன்னு கிளம்பினா சரி"என்றான்.
எல்லாரும் கிளம்ப சாரு வெற்றியிடம் "உன்னோட வேலை எல்லாம் முடிஞ்சதா!இப்போ என்கூட வருவ தானே!"என்றாள்.
"ம்ம்ம்... நீ அவுகளோட போ நான் மயிலோட வரேன்"என்றான்.
"வாட் அது யாரு? எவ்ளோ கேர்ள் பிரெண்ட்ஸ் உனக்கு மை காட்" என்றாள்.
"என்னது எனக்கா அது யாரு?"
"ஏர்போர்ட்ல பார்த்தோமே கிருஷ்ணா அங்கிள் பொண்ணு,தென் இப்போ வேற பெயர் சொல்ற" என கூற,
"ஓ...அப்புறம்" எனும் போதே கணேஷ் அவனின் இரும்பு குதிரையை எடுத்து வர,
"இதை தான் சொன்னியா" என்றாள்.
"ஆமா அந்த வெற்றிவேலனுக்கு மயில்னா எனக்கு என் வண்டிதேன் எல்லாம்" என முத்தம் இட,
"இவேன் கூட என்ன பேச்சு இப்படிதேன் எப்போவும் இதுக்கு முத்தம் கொடுத்துகிட்டு திரிவான் நீ வா த்தா" என சரோஜா அழைத்து செல்ல,
வெற்றி நின்ற வாக்கிலே வண்டியில் காலினை போட்டு கூலர்ஸ் எடுத்து மாட்டி அவளை பார்த்து புருவம் உயர்த்த,
சாரு அவனிடம் உதடு சுழித்து தன் கட்டை விரலை கீழே காண்பித்து சிரித்து கொண்டே சென்றாள்.
வெற்றி சாருவையும் அலீஸையும் அழைத்து முன்னால் செல்ல, ராஜவேலு நிமிர்ந்து பார்த்தார்.
அவர் முகம் யார் என்பது போல் கிருஷ்ணனையும் வெற்றியையும் பார்க்க,
"உங்க பேத்தி மருமக" என்றான்.
அவரின் கண்கள் தானாய் வெளியில் எட்டி பார்க்க,சரோஜாவை பார்த்தவர் கண்கள் கலங்க,
"எங்க என் மவன்" என கேட்க,
வெற்றி அமைதியாய் நின்றான்.
விஷயத்தை யூகித்தவர் அப்படி இருக்க கூடாது என வெற்றியை பார்க்க வெற்றியின் தலை தானாய் ஆடியது.
ராஜவேலு "தொம்"என சரிய,அருகில் நின்ற சாருவின் கைகள் அவரை தாங்கியது. சரோஜா அவர் அருகில் வேகமாய் வந்து "ஒன்னுமில்லை பா" என சமதான படுத்த,
மகளை பார்த்ததும் "மங்கை பார்த்தியா உன் அண்ணன் ஒத்த சொல்லு பொறுக்காதவன் நான் சொன்ன ஒத்த வார்த்தைக்கு என் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்னு போயிட்டான்" என புலம்ப,சரோஜாவின் கண்கள் கலங்கிய படி நிற்க,
கிருஷ்ணன் அவரை கைப்பற்றி அழைத்து உள்ளே சென்றார்.
அங்கிருந்த அனைவருக்கும் சரரோஜாவின் வரவு சந்தோஷத்தை கொடுத்தாலும் ஜெய்யின் இறப்பு துக்கத்தில் மூழ்க செய்ய ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த படி நிற்க,
வெற்றி அனைவரையும் சமாதானம் படுத்தி ராஜவேலுவை படுக்க செய்து "அத்தேன் உங்க பேத்தியை கூட்டியாந்தாச்சே பின்ன என்ன?" என அவரை உறங்க செய்தான்.
சாரு அனைவரையும் பார்த்த படி நின்றாள்.அவள் வளர்ந்த சூழலில் உறவுகளிடம் இத்தனை பிடிப்பு என்பது இல்லை. ஏன் ஜெய்யின் இறப்பு அவளை தடுமாற செய்தது சில நொடிகள் தான் பின் இது தான் இயல்பு என அவள் தன் வேலையில் கவனம் வைத்தாள் நேற்று சரோஜாவின் கண்ணீர் இன்று இந்த வயதில் கூட ஜெய்யின் பிரிவு ராஜவேலுவை இந்தளவுக்கு தாக்குவது எல்லாம் கொஞ்சம் அதிகமோ என்று கூட தோன்றியது.
வெற்றி வெளியில் வந்தவன் சாருவை பார்த்து என்ன இவ எதையோ யோசிக்கற மாதிரி இருக்கே என்னத்த யோசிக்கறா தெரியலையே என அவள் அருகில் செல்ல,"போய் தூங்கு காலையில பேசிக்குவோம்" என அவளையும் அனுப்பி வைத்தவன் திரும்ப,
ராகவன் ஓர் மூலையில் நின்று கொண்டிருந்தார்.
"என்ன நைனா?" என்றான்.
அவர் கண்கள் கலங்கியதை பார்த்ததும்.
"இப்போ உங்களுக்கு என்ன?"என்றான்.
"என்னால தான் இவ்ளோ கஷ்டம் எல்லாருக்கும் ஜெய் என்னை பார்க்காமலே இருந்திருக்கலாம்" என்றவர் வயதையும் மீறி மகனின் தோள் சேர,
அவரின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் "ம்ம்ம் இருந்திருகலாம்தேன் ,இது எல்லாம் ரோஸை டாவ் அடிக்கும் முன்னாடி யோசிச்சு இருக்கணும் ஜாக் சார்,ஆறடில என்னையும் பெத்து வச்சுக்கிட்டு நீங்க இப்படி சொன்னா எப்புடி?" என கேட்க,
அவன் கேட்ட தோரணையில் சிரித்தவர் "உன்கிட்ட பேச முடியுமா!" என்றவர் நகர,
"அப்பா" என்றான் அமைதியாய்,
அவனின் அழைப்பே சொன்னது ஏதோ சொல்ல போகிறேன் என,வெற்றி அவர் அருகில் சென்று "உங்க மேல மாமாவுக்கு எந்த கோபமும் இல்ல நீங்க இதை நம்புங்க,இப்போ. நிம்மதியா தூங்குங்க"என அவரையும் உறங்க அனுப்பினான்.
அனைத்தையும் மாடி படிகளில் நின்று கேட்டு கொண்டிருந்தவள் அனைவர் மீதும் அவன் கொண்ட பாசம் தெரிய,'ம்ம்ம் ...எல்லாரும் இங்க கொஞ்சம் ஓவர் எமோஷன்' என எண்ணியவள் "இவனும் நம்ம நெனைச்ச அளவு மோசம் இல்லை" என உறங்க சென்று இருந்ததாள்.
நேற்று நடந்ததை எண்ணியவளை மீண்டும் அவனின் சத்தமே திசை திருப்ப கீழே இறங்கி பார்த்தாள். இதோ இப்போதும் வெற்றி தாயின் பின்னால் அலைந்து கொண்டிருக்க,
அவன் உயரமும் அவன் உடல்வாகிற்கும் சம்மந்தம் இல்லாமல் சரோஜாவை கெஞ்சி கொண்டிருந்தான்.
"ரோஸ்,ரோஸ் என்கூட பேசு இல்லைனா நான் சாப்புட மாட்டேன்,அப்புறம் உன் புள்ளை துரும்பா போய்டுவேன் பார்த்துக்கோ" என மிரட்ட,
'சரி தான் போடா' என்பது போல் அவர் வேலையை பார்க்க,திரும்பி சாருவை பார்த்தவன் அவளை ஒரு பொருட்டாய் எண்ணாமல் மீண்டும் தன் கெஞ்சலை தொடங்க,
மலேசியாவில் அவன் இருந்த தோரணைக்கும் இப்போது அவனின் கெஞ்சலையும் நினைத்து பார்த்தவளுக்கு இங்குள்ள உறவுகளின் பிணைப்பை எண்ணி "இட்ஸ் டோட்டல் ட்ராமாட்டிக்" என எண்ணிய படி உண்ண தொடங்கினாள்.
வெற்றி ராஜவேலுவை காண செல்ல, அவனை பார்த்ததும் கண்கள் கலங்க,
"ப்ச்... இப்போ என்ன எப்போ பாரு அழுதிக்கிட்டு விடும்,அத்தேன் உங்க மகளை உம்மை கிட்ட கூட்டியாந்தோமே போதாதக்கு உங்க பேத்தி வேற வந்திருக்கு அப்புறம் யென்ன" என சொல்ல,
அப்போது தான் சாருவின் நினைவே அவருக்கு தோன்ற "நான் இன்னும் சரியா கூட பார்கலையே' என்றார்.
"அதுக்கு யென்ன உங்க மருமகளையும் பேத்தியும் அனுப்புறேன்" என்றவன் "நான் தேனி வரைக்கும் போய்ட்டு வரேன்" என செல்ல,
வெளியில் வந்தவன் அலீஸை தேட, அங்கே ஜெயவேலின் சிறு வயது புகைப்படத்தை பார்ப்பதும் அது எடுத்த சூழ்நிலையை சரோஜா விளக்க அதனை சிறு புன்னகையுடன் ரசித்து கேட்ட படி இருந்தார்.
வெற்றுயின் மனதில் பாரம் சற்று குறைந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருவான தோழமை பார்த்து கொண்டே "என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு"என இருவருக்கும் இடையில் அமர,
"ஏண்டா நாங்க ரெண்டு பேர் பேசறது உனக்கு சத்தமா இருக்கா, என்ன லந்தா!" என சரோஜா கேட்க,
"ரோஸ் உன் அப்பாக்கு அவுக மருமக பேத்தியை பார்க்கனும்மா கூட்டிட்டு போ,நான் தேனி கோர்ட் வரைக்கும் போய்ட்டு வரேன்" எனும் போதே கணேஷ் வர,
சரோஜா அவனை பார்த்ததும் "வா டா உன்னைத்தேன் தேடிட்டு இருந்தேன்" என கூற,
"ஆத்தி! யம்மா நேத்து நீங்க விட்ட அடி எனக்கு இன்னும் நொய்ங் கேக்குது அவன் உடம்பு தாங்கும் என் உடம்பு தாங்குமா!" என அலற,
சரோஜா பார்த்த பார்வையில் இருவரும் சிரித்து கொண்டே வெளியேற,அலிஸ் ஜெய்யின் புகைப்படத்தின் ஒன்றோடு வெற்றியின் முகத்தை ஒப்பிட்டு பார்க்க,
சரோஜா சிரித்து கொண்டே "நானும் சில சமயம் நெனைப்பேன் அப்படியே எப்புடி இருக்கானு,ஆனா அண்ணி இவேன் அண்ணன் மாதிரி குணத்தில ஒரு பங்கு கூட அண்ணன் மாதிரி கிடையாது.
அவுக கோபம் வந்தா உடனே காமிச்சிடுவாக ஆனா இவேன் எதிரில இருக்கவுகளை பேச விட்டு அப்புறம்தேன் அடிப்பான். அவன் கோபம் கூட ஒரு மாதிரி சமாளிக்கலாம் ஆனா அவன் நிதானம் ரொம்ப கஷ்டம் அண்ணி" என்றவர் "வாங்க அப்பாவை பார்ப்போம்" சாருவையும் அழைத்து கொண்டு ரூமினுள் செல்ல,
ராஜவேலு பாண்டியன் கண்கள் திறந்து பார்க்க அலீஸின் நிறமும் அவரின் முகமும் அவர் வேற்று நாட்டவர் என சொல்லாமல் சொல்ல,அருகில் நின்ற சாருவை பார்த்தார்.
தாயின் முகச்சாயலுடன் இருந்தாலும் அவள் நின்ற தோற்றம் ஜெய்யை நினைவு படுத்த,
அவளை பார்த்து "வா த்தா இப்போதேன் தாத்தாவை பார்க்கனும் தோன்னுச்சா!"என வாஞ்சையாய் அவள் தலை தடவி வெகுநேரம் பேசி கொண்டிருக்க,
அலிஸ் அவளை ஆச்சர்யமாய் பார்த்த படி நின்றார்.சாருவின் குணம் அறிந்த அவரால் மகளின் இந்த பொறுமை வியக்க செய்ய,இருவரையும் பார்த்த படி நின்றார்.
சாருவின் மனமோ "ஓ மை காட் இந்த ஓவர் எமோஷன் என்னால கேட்க முடியலை" எப்போது அவர் விடுவார் என அவரை பார்க்க,
சிறிது நேரத்தில் சரோஜா "போதும் இனி இவிக இங்குனதேன் இருக்க போறாக அப்போ பேசிக்கலாம் நீங்க உறங்குங்க" என கூற,
"ஷப்பா ஒரு வழியா காப்பாத்திட்டாங்க" என வெளியில் வந்தவள் வெற்றியை கேட்க,
"இப்போதேன் கணேஷ் வந்தான் ரெண்டு பேரும் கோர்ட் போயிருக்கானுங்க" என அலீஸிடம் பேசிய படி செல்ல,
சாரு மனதில் 'ஓ கோர்ட் கேஸுன்னு அலையுற பார்ட்டியா இது' அதான் கூடவே ஒரு லாயரோட திரியுறானா,இப்படி இருக்க இவனை நம்பி வந்திருக்க கூடாதோ!"என நினைக்க,
"ச்சே,அவன் சொன்னது பொய் இல்லயே அது தான் இவ்ளோ ப்ரொபெர்ட்டி இருக்கே அவளுக்கு தேவை படும் பணம் இந்த கடல் போன்ற சொத்தின் சிறு துளியே' என எண்ணியவள்.
"அவன் எப்படி இருந்தா என்ன? அவன் வரட்டும் நம்ம விஷயம் எப்போ பேசுவான்,என்ன ஆச்சுன்னு கேப்போம்"என வெளியில் இருந்த சிட் அவுட்டில் அமர,வெற்றியின் வண்டி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.
வெற்றி கணேஷிடம் பேசிய படி ஒரு கையால் வண்டியையும் மறு கையால் தன் சட்டை காலரை தூக்கி விட்டு தன் மீசையை முறுக்கி சிரிக்க,சாரு தன்னை மறந்த நிலையில் அவனை பார்த்த படி நின்றாள்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top