JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-15

Suhana

Well-known member

Turn off for: Tamil



அத்தியாயம் 15:

வெற்றியின் பேச்சு கணேஷிடம் இருந்தாலும் கவனம் முழுதும் சாருவிடமே எதுக்கு இப்படி பார்த்து வைக்கறா எண்ணும் போதே,

"கணேஷ் டேய் பங்கு தங்கச்சி மேடம் உன்னைத்தேன் பாக்குது" என்றான்.

"எல்லாம் தெரியும் நீ கொஞ்சம் மூடு" என கூற,

"எப்படி டா?"

"என்ன நொப்பிடி டா யென்டா வென்ரு பின்னாடி உக்காந்து இருக்குற உனக்கு தெரியுது முன்னாடி இருக்க எனக்கு தெரியாதா!"என்றான்.


"ஓ ....ஆமால"என கணேஷ் இறங்க,

"நீயெல்லாம் ஒரு வக்கீலு"என்றவன் வண்டியை நிறுத்தி இறங்கி கூலர்ஸை எடுத்து சட்டையின் நடுவில் விட்டவன் தன் வண்டி மீதே சாய்ந்த படி நிற்க,

இருவரும் பேசி கொள்வது காதில் விழுந்தாலும் அவள் கவனம் முழுவதும் வெற்றியிடமே,

கணேஷ் இறங்கி வந்தவன் "என்னமா ஊர் எல்லாம் பிடிச்சிருக்கா?" என்றான்.


அப்போதும் சாருவிடம் மௌனமே,

"கிழிஞ்சது போ"என்றவன் வெற்றியை பார்க்க, கணேஷ் பார்த்த பார்வையில் வெற்றி சத்தமாய் சிரித்து வைத்தான்.

அவன் சிரிப்பில் கலைந்தவள் "எ...என்னாச்சு?" என கேட்க,

வெற்றி தன் தோள்களை குலுக்கி "ஒன்னுமில்லயே" என்றான்.

சாரு வெற்றியை முறைத்த படி வீட்டினுள் சென்றாள். சிறிது தூரம் சென்றவளை சரோஜா தடுத்து நிறுத்தி "யெத்தா காலையிலயிருந்து அவனை காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தியே வந்துட்டான் போல, பார்த்தியா!" என கேட்க,

சாரு தனக்குள் 'யூ ஆர் ஸ்டுபிட் சாரு அவனை எதுக்கு பார்க்குறதுன்னு மறந்துட்டு இப்படி அவனை போய் ஏதோ வோர்ல்டு கிளாஸ் மாடலே பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருந்து இருக்க,அந்த காட்டான் என்ன நினைச்சுருப்பான்' என மீண்டும் வாசல் வர,

வெற்றியும் கணேஷும் பேசி கொண்டிருந்தனர்.

"யேன்டா இது சிவில்லதானே வரும் எதுக்கு கிரிமினல் கேசு ஆக்குற நீயி!" என கேட்க,

"நீ சொன்னா அது சிவிலா? நான் சொல்லனும் சிவிலா கிரிமினல்லான்னு "என்றான் வெற்றி மீசையை முறுக்கி,

'சரித்தேன் ஏதோ உனக்கும் அவனுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கு போல, அப்போ இது கிரிமினல் தான். ஆனா நீத்தேன் பார்த்துகிடனும்" என அவர்கள் வழக்காடும் அலுவல்கள் பற்றி சொன்னவன் "எதுக்கும் என்னை இழுக்காத பங்கு.. மதுரைக்கும் போடிக்கும் ரோடு போட முடியலே என்னால" என்றான் சலிப்பாய்,

"அப்போ சரி வக்கீல் சார் நாளைக்கு அஞ்சலி வரேன் சொன்னா, உன்னைத்தேன் கூட்டிட்டு வர சொல்லனும் நெனச்சேன் நீங்க கிளம்புங்க நாங்க வேற ஆள் வச்சு பார்த்துகிடுதோம்" என்றான் சிரிப்புடன்,

"நண்பா" என கட்டி கொண்டவன் "எலிக்குட்டிக்காக நாளைக்கே என் குடும்பத்தையே கூட இங்குட்டு ஷிப்ட் பண்ணிட்றேன்" என வெற்றியை கட்டி கொள்ள,

அட பாவி என்பதை போல் வெற்றி பார்த்து வைக்க, சாரு அவர்கள் உரையாடலை கேட்ட படி வந்தவள் வெற்றி சொன்ன கேஸ் சம்பந்த உரையாடல்கள் மட்டும் அவள் மனதில் பதிய 'ஒரு சிவில கிரிமினல்லா மாத்துற அளவுக்கு பெரிய ரௌடியா இவன்,இவனை நம்பி இவ்ளோ தூரம் வந்திருக்க கூடாதோ!' என சற்று கலவரமாய் வெற்றியை பார்க்க,

அவனோ மீசையை முறுக்கி விட்டு ஏதோ கணேஷிடம் கூறி கொண்டிருக்க,அவன் அருகில் சென்றாள்.

அவள் அரவத்தில் திரும்பியவன் 'என்ன இப்போதேன் உள்ள போனா இப்போ திரும்பியும் வந்து நிக்கறா!' என அவளை பார்த்தான்.

சாரு அவனிடம் " எ.. என்ன கேசு விஷயமா பேசிட்டு இருந்திங்க?"என்றாள்.

'என்ன சண்டி ராணி குரல் இப்படி பவ்யம்மா வருது' என நிமிர்ந்து அவள் விழி பார்த்தவன் 'ஏதோ நம்மளை பத்தி யோசிச்சிருக்கா போலவே' என எண்ண,

கணேஷ் உடனே "அது ஒன்னுமில்ல தங்கச்சி மேடம் வந்து"என ஆரம்பிக்க,

வெற்றி அவனை தடுத்து நிறுத்தியவன் "அது எதுக்கு உனக்கு? என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி,

"ப்ச் ...இப்போ சொல்ல போறியா இல்லையா"என்றாள்.

அவள் முகத்தை பார்த்த படி "ம்ம்ம்ம் ...ரேப் கேஸ் அதுக்கு என்ன இப்போ ?"என்றான்.

"வாட்?"

"ஆமா வரிசையா பத்து ரேப் கேஸ் இருக்கு என்மேல, அதான் என்ன பண்ணலாமுன்னு வக்கீல் கூட பேசிட்டு இருந்தேன்.நல்ல வேலை நீயே வந்துட்ட நீயெல்லாம் பெரிய பெரிய பிஸ்னஸ் பண்றவ தப்பிக்க எதுனாச்சும் ஐடியா கொடு" என்றான்.

கண்டிப்பாய் இப்படி ஒரு பதிலை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவள் கண்கள் பிரதிபலிக்க,அவள் அருகில் சென்றவன்

"சாரு" என அழைக்க,

நிமிர்ந்து பார்த்தவள் அவனை பார்த்து கொண்டே உள்ளே செல்ல,

அவள் சென்ற வேகத்தில் வெற்றி சிரித்து கொண்டே கணேஷிடம் "சரி சரி சீக்கிரம் கிளம்பு நாளைக்கு கோர்ட்ல இந்த கேஸை கிரிமினலா பதிவு பண்ணிட்டு ஹியரிங் எப்போன்னு சொல்லு நான் வரேன்" என கூற,

கணேஷ் திரும்பி "யேன் பங்கு வரிசையா பத்துன்னு சொன்னியே ஒரு மாதிரி டயர்டா இருக்காது" என்றான்.

"ம்ம்ம்.... பண்ணிட்டு வந்து சொல்றேன் டயர்டா இருக்குமா இருக்காதான்னு" என வெற்றி கூற,

"அப்படிங்கிற அப்போ ஓகே" என கணேஷ் கேட்டு கொண்டே ஓட,

"செருப்பு பிஞ்சிடும் எருமை விட்டா ரேப் கேசுல உள்ளேயே தள்ளிடுவ போல" என கணேஷை அடிக்க துரத்தினான்.


கணேஷை அனுப்பி விட்டு உள்ளே வர சரோஜா "யேன்டா அந்த புள்ளை உன்னை பார்க்கனும்ன்னு வாசல்லேயே கிடந்துச்சே பார்த்தியா நீயி! என கேட்க,

"எந்த புள்ளை?" என்றான் வேண்டுமென்றே,


"ம்ம்ம்ம்.... ரொம்பத்தேன் போ டா அதுக்கு இங்குனகுள்ள பேச ஆளுக இல்லாம தவிக்குது போல " என்றவர் "கணேஷு எங்க டா?" என கேட்க,

சாருவை பார்க்க மேலே படிகளில் சென்றவன் "அவேய்ன் நாளைக்கு வருவான்" என கூறிக்கொண்டே சென்றான்.

அங்கே சாரு தனக்குள்ளே "ஓ காட் சாரு வாட் ஹப்பன் டூ யூ இவனுக்காக பயந்துட்டு உள்ள வர,அவன் கிட்ட பேச வேண்டியதை பேசிட்டு விட வேண்டியது தானே!" என புலம்ப,

"நீ புலம்புறத விட்டு என்னை எதுக்கு தேடுனேன்னு சொல்லிட்டு அப்புறம் போய் அதை கண்டினியூ பண்ணலாமே"என்றான் அவள் அறை உள்ளே வந்து மேசையில் மேல் சாய்ந்து நின்று கொண்டே,

அவன் குரலில் சட்டென திரும்பி பார்த்தவள் "இல்லயே நான் உன்னை தேடலேயே" என தடுமாற,


"ஓ... அப்படியா ஓகே விடு ரோஸ்தேன் ஏதோ தப்பா சொல்லிட்டு போல"என நகர,


அப்போது தான் காலையில் இருந்து அவனை தேடியது நினைவு வர,"ச்சே இதை எப்படி மறந்தேன்!"என்று "வெற்றி "என அழைத்தவள் நிமிர,

வெற்றி அவன் அதே இடத்தில் நின்ற தோரணையோடு அவளை பார்த்து சிரித்த படி நின்றான்.

அவன் சென்று இருப்பான் என நினைத்தவள் அவன் அதே இடத்தில் நிற்க,இங்க தான் நிக்கிறானா என எண்ணி நிமிர்ந்து அவனை பார்க்க,

அவள் பார்வையின் மாற்றத்தில் சிரித்தவன் "ஏன் மேல இது வரைக்கும் எந்த கேசும் இல்லை இனிமேலும் ஐடியா இல்லை,இப்போ சொல்லு எதுக்கு தேடின" என்றான்.



சாரு அருகில் இருந்த மெத்தையில் அமர்ந்தவள் எப்போ அந்த ஓல்ட் மேன் கிட்ட இருந்து பணம் வாங்கி தர போற,இங்க நடக்குற இடியாடிக் சென்டிமென்டல் ட்ராமா எல்லாம் அவுட் அப் தி லிமிட்டா இருக்கு,ஐ காண்ட் டோலெரேட் தட் நீ போய் சொல்ல போறியா இல்லை நான் போய் கேட்கவா" என படபடக்க,

'அப்போ காலையிலிருந்து இதுக்குதேன் தேடினியா! அதானே பார்த்தேன்!மாமா எப்படி வளர்த்து வச்சுருக்கிக' என மேலே பார்த்து கொண்டே எண்ணியவன் 'நாம வந்து ரெண்டு நாள்தேன் ஆகுது, அவரே மகன் இறந்த தூக்கத்தில இருக்காரு இப்போ போய் எப்படி கேக்க முடியும்.நாளைக்கு அதுக்கான சடங்கு ஒன்னு இருக்கு முடியட்டும் அப்புறம் பேசுறேன்".

"அது தான் நானும் சொல்றேன் இவர் தான் டேட் டை வர கூடாது சொல்லி விரட்டி விட்டுடது இப்போ இவ்ளோ சீன்ஸ் என்ன எமோஷன்ஸ் இது எல்லாம்" என்றாள்

வெற்றி அவளின் பதிலில் கண்களை இறுக்க முடி "அது அவங்க உணர்வு"என கூற,

சாரு ஏதோ சொல்ல வர அதை கைநீட்டி தடுத்து நிறுத்தியவன் "எதையும் முழுசா கேக்குற பழக்கம் இல்லயா உனக்கு,அது அவரோட பாசம் ஒரு மகனுக்கு அப்பாவா செய்ய வேண்டிய கடமை .
அவர் இருந்து அதை அவுக மகனுக்கு செய்யறது எவ்ளோ கொடுமையான விஷயம் தெரியுமா உனக்கு !அப்புறம் நீ சொல்ற இந்த இடியடிக் எமோஷன் தான் நீ நான் பொறக்க காரணம் உன் மேல உங்க அப்பா வச்ச பாசம் நீ அவர் மேல காட்டுற பாசம் இப்படி எல்லாம் நீ சொல்ற ட்ராமா தான்.

நீ யாருக்காக ஏங்கி இந்த பாசம் நமக்கு கிடைக்கனும் தவிச்சிருக்கியா!ஆனா அவர் இத்தனை வருஷமா தன் மகன் திரும்பி வருவான்னு ஏங்கி நின்னு தவிச்சி இருக்காரு இப்போ வரவே முடியாதுன்னு தெரியரப்ப அவர் உணர்வை இப்படி காட்டுறாரு இது உனக்கு இடியடிக்கா தெரியுதா,நீ ஒரு நாள் உண்மையான அன்பு பாசத்துக்கு ஏங்கும் போது உனக்கு அவரோட உணர்வுகள் புரியும் நீ சொல்ற இந்த செண்டிமென்டல் ட்ராமாவும் புரியும்" என வெளியில் சென்றான்.


"என்ன இப்போ சொல்லிட்டேன்னு இப்படி பேசிட்டு போறான்" என செல்பவனை பார்த்த படி நின்றாள்.


வெற்றி அவளை விட்டு வந்தவன் 'என்ன மாதிரி பேசுறா இவ இம்புட்டு சலம்பிகிட்டு பேசுறவ எதுக்கு ரேப் கேசு இருகுன்னா பயந்து ஓடியாரனும் அப்படி பார்த்து வைக்கணும் பேசுறது எல்லாம் பேசிப்புட்டு மூஞ்சியை பாரு மூஞ்சுறு மாதிரி வச்சுகிட்டு' என கூற, சற்று நிதானித்தவன் "ஏண்டா நீ அவளை திட்டுறியா இல்லை கொஞ்சுறியா!" என தன்னை தானே கேட்டவன் அவளை எண்ணி சிரித்து கொண்டே தூங்கி போனான்.


விடியல் தொடங்க வெற்றி ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவனின் கைபேசி ஒலிக்க அதனை வைத்தே அழைத்தவனை நெனைத்து "ஒரு நாள் நிம்மதியா தூங்க விட மாட்டான் எருமை" என அட்டென்ட் செய்து காதில் வைக்க,

"டேய் வெற்றி",

"ம்ம்ம்"என்றான் தூக்க கலக்கத்தில்,

"நானு என்ன ட்ரஸ் போட?" என்றான்.

" அதை யேன்டா என்ன கேக்குற நீயி?"

"இல்லைடா பொழுத்துக்கும் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட்டா போட்டு அதுவே தான் எடுக்கிறேன், இப்போ என்ன போடறது தெரியலை டா" என்றான் கணேஷ்.

"ஊதா சட்டை சிமெண்ட் கலர் பேண்டை போடு,வேற உள்ளாரா போடறது எதுவும் சொல்லானுமா!"என வெற்றி கேட்க

"சீ போடா"

"வெக்க படுறியா வெளியில சொல்லாத பக்கி" என்றவன் "ஆமா என்ன திடீர்ன்னு கலர் சட்டை மேல் காதல் வக்கிலு?"


"இன்னைக்கி நானும் எலிக்குட்டியும் ஒண்ணா வாரோமா அத்தேன்"என்றான்.

"ஓ... அப்போ சரி" என வந்த புன்னைகையை அடங்கி கொண்டே வைத்தவன் பின் சிரித்த படி வெளியில் வர அங்கே இருந்த சிறு குழுக்களாக கூட்டம் நிற்க,

"என்ன இவ்ளோ பேர் நிக்கிறாக அதுவும் இத்தனை விடியல்ல"என வெளியில் வர,

"வாயா" என அங்கிருந்த பெரியவர் ஒருவர் அழைத்து, அவன் முகத்தை பார்த்து "நீத்தேன் மங்கை மகனா" என அவனோடு பேச,

அவரோடு பேசிய பின் நகர்ந்தவன் அவன் தந்தையிடம் சென்று "என்ன நைனா இது!எதுக்கு இத்தனை பேரு இங்க ?"என கேட்க

"தெரியலை பெரியவர் வர சொல்லி இருக்கார் வெற்றி, நீயும் போய் கிளம்பி வா" என உள்ளே செல்ல,

"என்ன நடக்குது?" என எண்ணி கொண்டே நான்கே எட்டில் படி ஏறவும் சாரு கீழே வரவும் சரியாய் இருக்க, இருவரும் இடிக்கும் நேரத்தில் அவளை இடிக்காமல் வெற்றி நகர்ந்து செல்ல,

"வெற்றி"என்றாள்.

நின்றவன் அவள் முகம் பார்க்காமல் திரும்பி நிற்க,

"எதுக்கு இவ்ளோ சத்தம் வருது?" என கேட்க,

வெற்றி பதில் பேசாமல் நகர,

"வாட் லா" என அவன் முன்னால் செல்ல,

அவளின் இரவு நேரத்து உடை அரை தூக்கத்தில் அவள் நின்ற கோலம் என அனைத்தும் அவனை இம்சிக்க,

வெற்றி ஒரு முறை எச்சில் விழுங்கி கொண்டவன் "யோவ் மாமா என்னய்யா பொண்ணை வளர்த்து வச்சிருக்க!' என மானசீகமாய் ஜெய்யை கேட்டவன்."நீ சொன்ன எமோஷனல் ட்ராமா நடக்க போவுது,இப்படியே போவாம போய் கிளம்பி வா" என நகர,

"ப்ச் ...என்ன பரோப்ளேம் இப்போ உனக்கு?நான் உண்மையை தானே சொன்னேன் கொஞ்சம் பிரேக்டிகலா யோசிச்சு பாரு" என கூற,

வெற்றி அவளை முறைத்த படி சென்றான்.

மீண்டும் வெற்றி கிளம்பி கீழே வர,அங்கிருந்த சிறு கூட்டமும் அவனை "ஆ "வென பார்க்க,

"என்னத்தே இப்படி பார்க்குதுக! "என சற்று தள்ளி அமர,கணேஷின் அழைப்பும் வந்தது.

"நான் உனக்கு என்ன டா பாவம் பண்ணுனேன் குலதுரோகிடா நீயி! நான் சொல்றேன் நல்லா கேளு உனக்கு எல்லாம் இந்த ஜென்மத்தில கல்யாணம் நடக்காது டா" என கணேஷ் பொரிய,


"என்ன டா இப்படி வாழ்த்து மழை பொழியுற நீயி!",

"பின்ன யேன்ன வென்ரு, நான் என் ஆத்தா கிட்ட திட்டு வாங்கி என் அப்பன் கொலவெறியா பார்த்து எல்லாத்தையும் கடந்து விடிய காலையில போய் அவ வீட்ல நின்னு நம்ம மாதிரியே மேட்ச்சா ட்ரஸ் போடுட்டு வரணுமேன்னு இருக்குற சாமி எல்லாம் வேண்டி நின்னா!"


"ம்ம்ம்.... நின்னா சொல்லு பங்கு" என்றான் வெற்றி சிரித்து கொண்டே,

"அவ அப்பன் ஏறி உக்காந்து வண்டியை எடுங்காறாரு வென்ரு" என்றான்.

வெற்றி சத்தமாய் சிரிக்க,


"சிரி டி உன்னை வந்து வசிக்கிறேன்" என வைத்தான்.


ராகவன் வெற்றியை நெருங்கி, "உன்னை பெரியவர் கூப்பிடராரு" என கூற,

அங்கே சில புரோகிதர்கள் அமர்ந்து ஏதோ மந்திரங்கள் கூற, ராஜவேலு கண்கள் கலங்க, மகன் முகம் பார்த்த படி அமர்ந்திருக்க,அலிஸ் அவர்கள் செய்வதை சிரத்தையாய் பார்த்து கொண்டிருந்த்தார். ஆம்..!! அவர்கள் குலவழக்கப்படி, இறந்து போன ஜெயவேல் பாண்டியனுக்கு செய்ய வேண்டிய காரியச்சடங்கை ஏற்பாடு செய்திருந்தார் ராஜவேல் பாண்டியன்.

சரோஜா கண்கள் கலங்கி நிற்க,ராகவன் அருகில் நின்றார்.வெற்றியின் கண்கள் சாருவை தேட அவள் ஒரு ஓரத்தில் அமரந்த படி ஹோம புகையின் தாக்கத்தால் வழிந்த வியர்வையை துடைத்து கொண்டிருந்தாள். அவன் பார்வை அவளிடம் நிலைக்க,


சற்று நேரத்தில் ப்ரோகிதர்களில் ஒருவர் "அவிக மகன் இருந்தா வர சொல்லுங்க" என கூற,

சரோஜா "மயன் இல்லை மக வரலாமா?" என கேட்க,

அவர்களுக்குள் சில நிமிடம் பேசியவர்கள் "சரி வர சொல்லுங்க" என கூற,

சரோஜா "சாரு வா த்தா" என கூப்பிட,

சாரு எழ, "நீ இரு த்தா" என்றவர் ப்ரோகிதரிடம் " அவுக மருமகன் இருக்காக உக்காரலாமா அவுக இது எல்லாம் செய்யலாம் தானே!" என கேட்க,

"நல்லா செய்யலாம்" என அவர்கள் கூற,

"அய்யா வெற்றி நீ வந்து உட்காரு" என ராஜவேல் கூற,

வெற்றி அதிர்ந்து விழிக்க, அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என சரோஜா "அப்பா என்ன இது?" என அவசரமாக கேட்க,

"மங்கை"என்றவர் அவரை பார்க்க,

அவர் பார்வையின் பொருள் உணர்ந்தவர் திரும்பி ராகவனை பார்த்தார், ராகவன் தலை அசைத்ததும் "வெற்றி போய் உக்காரு" என்றார் சரோஜா.


"ம்ம்மா" என அழைத்தவன் சரோஜாவை பார்க்க, "போய் உக்காந்து உன் மாமாவுக்கு மாப்பிள்ளையா செய்ய வேண்டியதை செய்" என கூற,

கணேஷும் கிருஷ்ணனும் இடையில் வந்து சேர,உள்ளே வந்த கிருஷ்ணன் வெற்றி அமர்ந்து காரியங்கள் செய்வதை பார்த்தவர் அதிர்வாய் ராகவனை பார்க்க, ராகவன் தலை 'ஆமாம்' என்பது போல் தலை அசைத்தது.


காரியங்கள் முடிந்ததும் ஊரில் அனைவருக்கும் உணவு பரிமாறி முடிய,அதனை கவனித்து படி இருந்தனர் வெற்றியும் கணேஷும்.

ராஜவேலு மிகவும் நெருங்கிய உறவுகளை மட்டும் அழைத்து அமர்ந்திருக்க வெற்றியும் கணேஷும் உள்ளே வந்தனர்.

"என்னப்பா எல்லாம் முடிஞ்சதா!" என்றார்.

"ம்ம்ம்" என்றவன் சற்று தள்ளி நிற்க,கணேஷ் அவன் அருகில் அமர்ந்து "என்ன டா எல்லாம் பெருசுகளா இருக்கு!! என்னவா இருக்கும்?" என்றவன் "அங்குன பாரு டா இந்த புள்ளை என்ன பண்ணுதுன்னு" என சாருவை காண்பிக்க,

அவளோ காதில் மெல்லிய பட்டன் சைஸ் அளவு ப்ளூ டூத் வழியே ஏதோ கேட்ட படி அமர்ந்திருந்தாள்.

அவள் பார்வை அவர்கள் இடம் இருந்தாலும் அவள் அதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன் "இவ இருக்குற அம்புட்டு கேடி வேலையும் செய்வா!"என சிரித்து கொண்டான்.

ராஜவேலு எழுந்தவர் குரல் சற்று செருமி "என் வம்சம் ஆளு இல்லாம அழிஞ்சு போயிடுச்சுன்னு நெனச்சேன், ஏன் இங்கிருக்கவுகளும் அப்படி தான் நினைச்சுருப்பிக! ஆனா என் பேரன் வெற்றிவேல் பாண்டியன்னு மீசையை முறுக்கி என் முன்னாடி வந்து சிங்கம் மாதிரி நிக்கும் போது என் மவனை திரும்பி பார்த்த மாதிரி இருந்துச்சு" என்றவர் கண்கள் துடைத்து "இப்போ அவேன் இல்லைனாலும் என் பேத்தி என்கிட்ட வந்தது எனக்கு நிம்மதிதேய்ன்" என சாருவை பார்க்க அவள் எதுவும் புரியாமல் சிரித்து வைத்தாள்.

"என்ன சொல்றாருன்னு தெரியாமலே சிரிச்சு வைக்குது பாரு கேடி"என அவளை பார்க்க அவன் பார்த்ததும் "என்ன நடக்குது?" என்பதை போல் கேட்க ,வெற்றி முகத்தை திருப்பி கொண்டான்.

சாரு தன் தோளை குலுக்கி கொண்டே மீண்டும் பாடலில் கவனம் வைத்தாள்.

"இப்போ எதுக்கு முக்கியபட்டவுக மட்டும் வர சொல்லி இருக்கேனா! என் பேரனுக்கும் பேத்திக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க போறேன். அதுவும் அடுத்த முகூர்த்தில எல்லாரும் வந்து நின்னு பண்ணி கொடுத்திட்டு போகனும்"என்றார்.

அதிலிருந்த பெரியவர் ஒருவர் எழுந்து "அதுக்கென்னப்பு.. அது எல்லாம் நல்லா சிறப்பா செஞ்சுடுவோம்" என கூற,

பெண்கள் எல்லாம் சாருவின் அருகில் வந்து "இந்த புள்ளை என்ன இம்மா வெள்ளையா இருக்கு,ஏதோ சினிமால வர ஹீரோயினி கணக்கா" என அவள் கன்னத்தை தடவ,அவர்கள் செய்வது புரியாமல் அலிஸை பார்த்தாள்.

ஏற்கனவே சரோஜா சொல்லியிருந்ததால் அவருக்கு ராஜவேலு சொன்னதை விட சாருவின் அமைதி அவளுக்கு வியப்பை கொடுத்து மகளை ஆழ்ந்து பார்க்க,அவளின் ப்ளூ டூத் கண்களில் பட இவள் எதையும் கேட்க வில்லை போலவே இனி என்ன சொல்வது என மகளின் அருகில் வந்தார்.

கூட்டம் குறைந்து வீட்டு ஆட்கள் மட்டும் இருக்க அலிஸ் சென்று ராஜவேலு சொன்னதை முழுதாய் கூற,

"வாட் "என்றாள் அதிர்வுடன்,பின் "ஓல்ட் மேன் ஸ்டாப் தேர்" என ராஜவேல் அருகில் செல்ல அலீஸ் கை பிடித்து தடுக்க,

"ப்ச் ...மாம்..." என்றவள் அவர் கையினை இறக்கி ராஜவேலிடம்" ஹவ் டேர் யூ டு பிக்ஸ் மை மேரேஜ் , நான் உங்க கிட்ட கேட்டனா! நான் இங்க வந்ததே என் பிஸினஸ் பண்ண பணம் கேட்டு தான்.அப்படி சொல்லி தான் இவன் கூட்டிட்டு வந்தான்" என வெற்றியை கை காட்ட அவன் பார்வையும் அவளிடம் தான் நிலைத்தது.


"அதுக்கென்ன நம்ம வெற்றி தானே மா உன் தாத்தா ஆசை படுறது நியாயம் தானே!" என கிருஷ்ணன் கூற,


அனைவரையும் பார்த்து "நோ யூ காண்ட் கண்ட்ரோல் மீ பை யூவர் சில்லி பீலிங்ஸ் புரியுதா! உங்க ட்ராமாவே உங்களோடவே வச்சுக்கோங்க" என பட படவென பொரிந்தவள் உள்ளே செல்ல,

ராஜவேல் என்ன சொல்வது என தெரியாமல் வெற்றியை பார்க்க, அவன் அனைவரையும் ஒரு பார்வை பார்த்த படி வெளியில் செல்ல "டேய் மாப்ள நில்லு" என கணேஷும் கூட சென்றான்.


அலிஸ் அவர்கள் அனைவரையும் ஒரு மன்னிப்பு வேண்டல் பார்வை பார்த்து சாருவிடம் சென்றார்.

அவர் வந்ததுமே "மாம் டோன்ட் ஆர்க்யூ வித் மீ" என்றாள்.

"நான் உன்கிட்ட ஆர்க்யூ பண்ண வரலை உனக்கு பிடிக்கலைனா அதை அமைதியா சொல்லிட்டு வந்திருக்கலாம்.நாங்க உன்னை இப்படிதான் வளர்த்தோமா! உங்க அப்பா இருந்திருந்தா உன் பிஹேவியற்கு கண்டிப்பா வருத்த பட்டிருப்பாங்க,அண்ட் நான் இனி உன் கூட மலேசியா வர மாட்டேன். இனி இங்க தான் நான் இருக்க போறேன்" என்றவர் அவளை முறைத்த படி செல்ல,

"மாம் "என அழைக்க,

"உனக்கு உன்னோட விருப்பங்கள் முக்கியம் அப்படின்னா எனக்கு என்னோட விருப்பங்கள் முக்கியம்" என சென்றார்.

அவர் சென்றதும் "இருந்துக்கோங்க எனக்கு என்ன நான் ஊருக்கு போறேன். நோ ஒன் கேன் ஸ்டாப் மீ எனக்கு என் பிஸினஸ் முக்கியம்" என அவள் தன்பாடு சொல்ல,அவளின் கைபேசி அவள் இருப்பை உணர்த்த எடுத்து பார்த்தாள். அது நீலகண்டனின் அழைப்பு சலிப்பாய்" ஹலோ" என கூற,


"சாரும்மா நல்லா இருக்கியா டா!"

"ம்ம்ம்" என்றாள்.

"போன இடத்தில எல்லாம் சவுகரியாம இருக்கா!" என கேட்க,

"எஸ் அங்கிள் என்றவள் சொல்லுங்க என்ன விஷயம்" என கேட்க,

"அது தான் சாரும்மா, பாரு உடனே என்ன வேணும் கேக்குறதை அது ஒன்னும் இல்லைமா
நம்ம வாங்கின இடத்துக்கு இன்னும் கொஞ்சம் பணம் கேக்குறாரு"

"ஏன் ஆல்ரெடி நம்ம எல்லா அமௌண்ட் கொடுத்து தானே வங்கினோம்"என கேட்க,

"ஆமா மா ஆனா இப்போ இடத்தோட மதிப்பு அதிகமா அதான் இன்னும் கேக்குறாங்க" என கூற,

"நோ கொடுக்க முடியாது சொல்லுங்க" என்றாள்.

"அப்படி சொன்னா நம்ம முன்னாடி கொடுத்த பணம் வராது மா,இன்னும் நம்ம அவங்கங்கிட்ட தாய் பத்திரம் வாங்கலை அதான்" என்றார்.

"ஓ... அங்கிள் ஏன் இப்படி பண்ணிங்க,உடனே எல்லாத்தையும் வாங்கணும் இல்லையா? சரி இப்போ எவ்ளோ கேக்குறான்" என்றாள்.

"இன்னும் ஒரு ரெண்டு சி வேணுமாம்".


"வாட் ?",

"ஆமா மா,வரும் போது அதையும் வாங்கிட்டு வாந்துடு மா ஐ எஸ் டி பில் அதிகமாகும் நான் கட் பண்றேன்" என நீலகண்டன் வைத்ததும் சாரு தலையை பிடித்த படி அமர்ந்து விட்டாள்.

"இப்போ என்ன பண்றது? எப்படி சமாளிக்கலாம் ஆல்ரெடி இருக்க அமௌண்டே பெரிய தொகை இப்போ இது வேற" என ஜன்னல் ஓரம் வந்தவள் கீழே பார்க்க கணேஷ் ஏதோ சொல்ல வெற்றி அவனை அடிக்க துரத்த அவர்களை பார்த்த படி இருந்தவள் சட்டென "வாவ்! சாரு இட்ஸ் அ பெட்டர் ஐடியா அண்ட் உனக்கு இதை தவிர வேற அப்ஷன்னும் இல்லை| என வெற்றியை நோக்கி சென்றாள்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top