அத்தியாயம் :2
வெற்றி வீட்டிலிருந்து வெளியில் வந்த கணேஷ் சில தெருக்கள் மட்டுமே தள்ளி இருக்கும் தன் வீட்டினுள் நுழைய,அரங்காவலாராய் வேலை பார்க்கும் அவன் தந்தை இவனை பார்த்ததும் "புள்ளை யா பெத்து வச்சிருக்க காலங்காத்தல எங்கேயோ போயி அடி வாங்கிட்டு வந்திருக்கு,இந்த லட்சனுத்துல இதுக்கு கல்யாணம் பண்ணணும் சொல்லிட்டு இருக்க "என தன் அங்கவஸ்திரத்தை சரி செய்து கொண்டே சொல்லி சென்றார்.
அவரின் சத்தத்தில் வெளியில் வந்த மீனாட்சி "ஏன்டா கணேஷா என்ன இது காயம், எங்க போயிட்டு வர ?"என கேட்க,
"ம்ம்ம்ம்...போலீஸ் ஸ்டேஷன்க்கு" என்றான்.
"என்னடி இவன் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போயிட்டு வந்திருக்கான்,இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் இந்த வக்கீல் படிப்பு எல்லாம் வேணாம்னு இப்போ பாரு" என்றவர் மீண்டும் உள்ளே செல்ல,
"மா இவர் என்ன கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்க்கு ட்ரைனிங் எடுக்கற மாதிரி சும்மா வந்து வந்து டயலாக் பேசிக்கிட்டு உள்ள போறாரு வக்கீலுக்கு படிச்சிட்டு போலீஸ் ஸ்டேஷன் போகாம போதிமரத்துக்கா போவாக" என்றான்.
"டேய் சும்மா இரு டா,கிளம்பர நேரத்துல எதையும் சொல்லாம,"
"அதானே புள்ளை இன்னைக்குதேய்ன் வீட்ல இருக்கும் அதே கவனிக்கனும் இல்லாம, எங்க ரெண்டு பேரு ஜோடியா கிளம்பிட்டீக?"என்றான் கேள்வியாய்,
"அது ஒன்னுமில்லை டா நம்ம சொந்ததுலா ஒரு விஷேஷம் அதான் நானும் அப்பவனும் தலையை காட்டிட்டு வந்துடறோம்".
"மா அப்போ எனக்கு சோறு யாரு போடுவா!".
"சரோஜாக்கா வீட்ல போய் சாப்ட்டுக்கோ",என்றவர் அவன் காதில் வந்து "இன்னைக்கு தரகர் ஒரு பெண்ணை காட்றேன் சொன்னாரு டா போய் பார்த்துட்டு வந்துடறேன்" என மீனாட்சி கூறி செல்ல,
"அங்க என்னடி ரகசியம், பொழுத்துக்கும் அங்க தானே கிடைக்கான்,அது எல்லாம் போய் சாப்பிட்டுப்பான்" என்றவர். " ராகவனுக்கு அப்படி ஒரு புள்ளை எனக்கு இப்படி ஒன்னு வந்து வாச்சிருக்கு எல்லாம் நாங்க வாங்கி வந்த வரம்" என புலம்பிய படி கூறி சென்றார்.
அவர்கள் இருவரும் சென்ற பின் 'இப்போ என்ன பண்றது ,எப்படியும் போனா வெற்றி அடிப்பான் பேசாம போய் காலுல விழுந்துடுவோம்' என கணேஷ் கிளம்ப எத்தனிக்க,சரியாய் தளபதி பாடல் ஒலித்தது, 'நண்பன் டா நீயி' என்று அட்டெண்ட் செய்தவன்,"வெற்றி டேய் எங்க ஆயா சத்தியமா அதுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியாது டா ,சும்மாதேய்ன் பார்த்தேன்".
தான் அழைத்ததும் அவனின் வாக்குமூலத்தை கேட்டு சத்தமாக சிரிக்க,
"இப்போ எதுக்கு சிரிக்கற நீயி" என்றான் பாவமாய் கணேஷ.
"நீ எல்லாம் ஒரு வக்கிலு வெளங்கிடும் , உடனே வாக்கு மூலத்தை கொடுக்குற ,ஏன்டா உனக்கு அதுக்கு மேல தைரியம் இல்லன்னுதேய்ன் எனக்கு தெரியுமே!" என்றான் சிரிப்புடன்,
"டேய் பங்கு",
"ஆனா நீ இங்க வாடி உன்னை நான் மிதிக்கற மிதியிலே திருப்பரங்குன்றத்தை தாண்டி போய் விழுவே",
"ஏன்?"
"ஏன்டா விளங்காத வென்ரு கண்ட கண்ட தமிழ் படத்தை பார்த்துட்டு கண்ண மூடுனா அவ வருவா இவ வருவா சொன்னே",
"ஆ... அப்போ நீயி செக் பண்ணி பார்த்துட்ட, சொல்லு யாரு வந்தா"என்றான் சிரிப்புடன்,
"இங்குன வா உன் பல்லை தட்டுறேன், கெரகம் புடிச்சவனே அந்த அறுபது வயசுல டிவோர்ஸ் கேட்டுச்சே அந்த அம்மா வந்து டேய் ஒழுங்கா டிவோர்ஸ் வாங்கி தாரிகளா இல்லையான்னு வைய்யுது டா பக்கி".
"என்னடா நீயி இப்படி சொல்ற அஞ்சலி கணக்கா ஏதாச்சும் வந்திருப்பா பார்த்தா ,இப்படி அறுபது வயசு கெழவி வந்து கிடக்கு, ஒரு வேலை அந்த பாட்டியக்கா உன்னை ரெண்டாம் கல்யாணம் பண்ற ஐடியல இருக்கோ " என சிரிக்க,
"இங்குட்டு வாடி அப்புறம் இருக்கு" என வெற்றி கூறும் போதே, அவனுக்கு இன்னொரு எண் வெயிட்டிங்கில் வர,எடுத்து பார்த்தவன் பிபி என்று வர, "என்னடா பிபி கூப்புடறாரு?".
"யாரு தல யா,யென்னவாம் அவருக்கு அவர் லவ் பண்றாரா இல்லை அவரு பொண்ணா தெரியலை",என்றவன் "இரு நான் அங்கதேய்ன் வரேன்" என வைக்க,
மீண்டும் அவர் அழைத்ததும்" சொல்லுங்க" என கூற,
"வெற்றி எங்குட்டு இருக்கே?",
"ஏன் வீட்லதேய்ன்"
"சரி அங்கனயே இரு நான் வந்துடறேன்" என வைத்தார்.
கணேஷ் உள்ளே வந்தவன் வெற்றியிடம் "எதுக்கு டா தலை கூப்டுச்சு "என கேட்க,
"யாருக்கு தெரியும் எங்க இருக்கேன் கேட்டாரு?? வீட்ல சொன்னேன் வரேன் வச்சுட்டாரு",
"ஏன்டா அவரும் கறிகஞ்சிக்குதேய்ன் வாறாரோ"என கூற வெற்றி முறைத்த முறைப்பில் அடங்கி போனவன் "பின்ன எதுக்கா இருக்கும்?" என கேட்க,
"எதுக்குன்னு எனக்கு தெரியும் வரட்டும் விடு" என்றான் வெற்றி.
"பிபி" என வெற்றியால் அழைக்கும் ராமகிருஷ்ணன் உள்ளே வர, "சரோஜா அவரை பார்த்ததும் வாண்ணே"என அழைக்க, உள்ளே வந்தவர் வெற்றியிடம் "நேத்து நான் சொன்னதை யோசிச்சியா, என்ன முடிவு எடுத்திருக்க வெற்றி?" என கேட்க,
"இப்போ நீங்க யாரா கேக்குறீக ? என்னோட சீனியராவா இல்லை எங்க உறவா வா?"என கேட்க,
அவனின் கேள்வியில் அவனை மெச்சிய படி " உன் சீனியராதேய்ன் சொல்லு"என்றார்.
"முடியாது" என்றான் ஒற்றை வார்த்தையில்,
"இப்போ சொந்தகாரனா கேக்குறேன் சொல்லு,"
அவன் குறுந்தாடியிலும் அவனின் தாடை குழி தெரிய சிரித்தவன்,தன் மீசையை முறுக்கி விட்ட படி " கண்டிப்பா முடியாது" என்றான்.
"வெற்றி" என அழைக்க,
"இதுக்கான பதிலை நான் நேத்தே சொல்லிட்டேன். நான் அந்த கேஸுக்கு ஆஜர் ஆகதேய்ன் போறேன்" என்றான்.
ராகவன் சரோஜாவை பார்க்க,சரோஜா உடனே "என்ன கேசுண்ணே?" என்றார்.
ராமகிருஷ்ணன் வெற்றியை பார்க்க, அவன் தனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் திரும்பி கொண்டவன், கணேஷை பார்க்க அவனும் எழுந்து கொண்டான் பின் தன் இரும்பு குதிரையை உசுப்பியவன் அவன் தாயை ஒரு பார்வையை பார்த்த படி கிளம்பி சென்றான்.
ராமகிருஷ்ணன் உடனே, "ஒன்னுமில்ல மா,******* அந்த ஏரியா கவுன்சிலர் பொண்ணு சின்ன பொண்ணுதேய்ன்,அவுக வீட்ல வேலை செய்யற பையன் கூட பழக்கம் போல, இது தெரிஞ்சு அவுக அப்பன் சம்பவத்தை செஞ்சுபுட்டான்,இதுல செத்த பையனோட தம்பி வந்து இவன் கிட்ட கேசை கொடுக்க, இவன் கேஸை எடுத்துட்டேன்,ஒரு ஹீயரிங்லேயே உண்மையை வாங்கிட்டான் அடுத்த ஹியரிங் இவன் வந்தா தூக்குத்தேய்ன்னு தெரிஞ்சுகிட்டு அவன் மச்சான் மேலூர்ல பக்கம் பெரிய கை போல என்கிட்டவே வந்து மிரட்டனுங்க சரி தேய்ன் போங்கடான்னு சொல்லிட்டுதேய்ன் இங்குட்டு வந்தேய்ன்" என்றார்.
சரோஜா கவலையாய் பார்க்க, ராகவன் சிரித்து கொண்டார்.
"ஆனாலும் ராகவா உன் மயனுக்கு இம்புட்டு நய்யாண்டி ஆகாது டா, கொஞ்சம்மாச்சும் அடங்குறானா பாரு,எப்படி கேட்டாலும் பிடி கொடுக்கிறனா,அப்படியே உன் வீட்டு ரத்தந்தேய்ன் ஓடுது சரோஜா, ராகவன் மாதிரி எதிலேயும் இல்லை சண்டைன்னு பேரை கேட்டாலே அந்த பக்கம் கூட போக மாட்டான் இவன், ஆனா இவன் அப்படியே நேர் எதிர் ,அதுவும் அவன் மீசையை முறுக்கி விடுறதை பார்த்ததும் அப்படியே" என சொல்ல வந்தவர் சரோஜாவின் முகமாறுதலில் அமைதியானர்.
வெளியில் வந்த இருவரும்" ஏன்டா பங்கு தல சொல்ற மாதிரி இந்த கேஸை எடுத்துதேய்ன் ஆகனுமா!".
"ஏன் பயமயிருக்கா உனக்கு" என்றான் வெற்றி.
"அட ஏன்டா நீ இருக்கும் போது எனக்கு என்ன பயம்? விடு பார்த்துக்குவோம்" எனும் போதே இரண்டு ஜீப்பில் ஆட்கள் ரவுண்டு கட்ட,
"என்னடா வெற்றி சமஞ்ச புள்ளைக்கு சடங்கு சுத்துர மாதிரி நம்மளை சுத்தராணுங்க,டேய் ஜீப்பையாவது மாத்துங்கடா சும்மா ரவுச கிளப்பிகிட்டு"
அவனின் கேள்வியில் சிரித்தவன் "அப்படிதேய்ன் போல டா மாமனுங்க முறை செய்ய வந்தருக்கானுங்க விடு நாமலும் பதிலுக்கு முறை செஞ்சு அனுப்புவோம்".
அவர்கள் கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து " நீ தேய்ன் அந்த வக்கீலா ,பார்த்தா அப்படி தெரியலேயே?"என்றான் அய்யனார் கனக்காய் உயர்ந்து நின்ற வெற்றியை பார்த்து,
"ஏன்டா உனக்கு தெரியணும்னு டிகிரியை கழுத்துல போட்டா திரிவாய்ங்க ? நம்புடா அவனாச்சும் அரியர் இல்லாம பாஸ் பண்ணாய்ன். நான் எல்லாம் பல அரியர் வச்சு பிட்டு அடிச்சி பாஸ் பண்ணி இருக்கேன் டா" என்றான் கணேஷ்.
அவன் பதிலில்" என்ன குசும்பா? " என கேட்க,
"ஏன்டா வெற்றி இன்னைக்கு காலையில யாரு முகத்துலே முழிச்சோம் இப்படி பஞ்சாய்த்தா போவுது"
வெற்றி அவனை பார்த்து முறைக்க,
"சரி விடு என்னை அப்புறம் கூட அடிச்சுக்கலாம் இப்போ இவனுங்க பஞ்சாயத்தை முடி."
வெற்றியை அடிக்க ஒருவன் வர, அவர்களை அடித்தவன்," டேய் ஏதோ சின்ன புள்ளை அதை கோர்ட்க்கு இழுக்க வேணாம்ன்னுதேய்ன் , கேஸை இப்படி நடத்துறேன். இனி இங்குட்டு வந்து இப்படி லந்து கொடுத்திக எல்லாரையும் சேர்த்து களி திங்க வச்சுபுடுவேன்" என்றான்.
...
சரோஜாவின் முக மாற்றத்தை பார்த்த ராகவன் அவர் அருகில் போய் கைகளை ஆதரவாய் பற்ற,
ராமகிருஷ்ணன் உடனே" இன்னுமா அதே நினைச்சுட்டுயிருக்க இப்போ எல்லாம் அப்படி இல்லம்மா" என கூற,
"வேணாண்ணே எதுவாயிருந்தாலும் நாங்க இப்படியே இருக்கோம் புதுசா எதுவும் எங்களுக்கு வேணாம்" என்றவர் ரூமினுள் சென்று அடைந்து கொண்டார்.
ராகவன் தான் "விடு டா அவள் நிஜங்களை மறந்து வாழலாம் நினைச்சுட்டுருக்கா. ஆனா அந்த நிஜங்களின் மொத்த உருவமா வெற்றி இருக்கான்னு புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறா" என்றார்.
ராமகிருஷ்ணன் சிரிக்க,
"என்னடா"என்றார் நண்பனிடம் ராகவன்.
"ஒன்னுமில்லை டா அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் உன்னோட தெளிவு மட்டும் யாருக்கும் வராது டா, யேன் எனக்குந்தேய்ன் இல்லைன்னா இப்போ வந்து இப்படி பேசுவேனா" என்றார் ஆற்றமையாய்,
ராகவன் மெல்லிய புன்னகை புரிந்தவர் "ஒன்னும் இல்லை டா நீ கவலைபடாம போ,வெற்றி வந்தா எல்லாம் சரியாயிடும்."
ராமகிருஷ்ணன் சரி என்பது போல் தலையை ஆட்டி சென்றார்.
ராகவன் வெளியில் அமர்ந்த படி கடந்த கால நினைவுகளை எண்ண, வேதனையின் வடுக்களே மிஞ்சி இருந்தது. அதனை களைப்பது போல் வெற்றியின் வண்டி சத்தம் அவரை எழுப்ப,' இனி மகன் பார்த்து கொள்ளவான்" என்ற நிம்மதி பெருமூச்சு வந்து போனது.
உள்ளே வந்த வெற்றி இந்த அசாதாரண அமைதி ஏதோ நடத்திருப்பதாய் சொல்ல, நிமிர்ந்து தந்தை முகம் பார்த்தான். பின் தாயை தேடி கேள்வியாய் அவரை பார்க்க, ராகவன் கண்கள் அறையை காண்பிக்க வேகமாய் சென்றவன் ",மா" என அழைக்க, எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போக,"யெத்தா" என்றான்,வெற்றியின் கோபம் சற்று உயர,"ரோஸ் இப்போ நீயி கதவை திறக்கல நான் கதவை உடைச்சிபுடுவேன் பார்த்துக்கோ," எனும் போதே சரோஜா கதவை திறக்க,
"என்ன உனக்கு இம்புட்டு சீனு ",என்றவன் அமைதியாய் அமர்ந்திருந்த,தாயிடம் சென்று அவர் மடியில் படுத்து கொண்டான். சரோஜாவின் கைகள் அவன் சிகையை கோத, தாயின் முகத்தை பார்த்தவன் அவர் கண்களின் ஈரத்தை உணர்ந்து கொண்டான்.
"நானு உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் இனி நீ அழுதின்னா நானு இ.பி கிட்டபோய் அப்படி என்னதேய்ன் நடந்துச்சுன்னு கேப்பேன்" என்றான்.
சரோஜாவின் கண்கள் மகனை அளவெடுக்க,கைகள் முகத்தை பாசமாய் வருடி கொடுத்தது.
"நான் எதுகேட்டாலும் சொல்ல மாட்ட,அப்புறம் எதுக்கு உனக்கு இந்த லுக்கு "என தாயை கடிந்தான் வெற்றி.
"ரோஸ் ஒரு வேலை இப்படியோ?",
"எப்படி"என்பது போல் பிள்ளை முகம் பார்த்தாள் அன்னை.
"இல்லை நான் காலையிலே சொன்னேனே என் ஜூனியர்க்கு உன் ஜாக் மேல ஒரு கண்ணுன்னு அதுக்கா இப்படி இருக்கே?",என்றான் கேள்வியாய்,
"அட போக்கிரி" என்றவர் அவன் காதை திருவ,தாயின் இயல்பான இந்த செயலே அவனுக்கு போதுமானதாய் இருக்க, "ரோஸ் எனக்கு பசிக்குது நீ போயி நல்லா தோசையா ஊத்தி வை நானு குளிச்சிட்டு வாரேன்" என்றவன்.கதவின் அருகில் சென்று " ரோஸ் உன் வீடுகாரருக்கு தங்கபதக்கம் சிவாஜின்னு நினைப்பு தாடையில கை வைக்கிறது என்ன ?,கண்ணாலேயே பதில் சொல்றது என்ன?"என்றான் நக்கல் சிரிப்புடன்,
அவன் சொன்னது வெளியிலிருந்த ராகவனுக்கும் விழ, மகனின் குறும்பை நினைத்து சிரித்து கொண்டார்.
தாயை சகஜமாய் வெளியில் வர வைத்தவன் ரூமில் வந்து அமர்ந்து சரோஜாவின் கண்ணீருக்கு பின்னால் என்ன இருக்கும் என யோசித்தவன் அம்மா மதுர பக்கந்தேய்ன் இ. பி ஆந்திரா எப்படி இது சாத்தியம் தந்தை வழி உறவுகளை அவன் பார்த்து இருக்கிறான்.
ராகவன் பூர்விகம் ஆந்திர மாநிலம் அவரின் உடன் பிறந்த தங்கை இன்னும் அங்கேயே வசிக்க, சிறு வயதில் தந்தையுடன் இவன் மட்டும் அங்கே சென்று வந்திருக்கிறான். இவனுக்கு விவரம் தெரிந்த பின் அதுவுமில்லை,ராகவனின் தாய் மட்டும் இவர்களோடு இருந்தார். அவரின் குணமும் அப்படியே ராகவனின் குணமே அதிர்ந்து கூட பேசாதவர்.
வெற்றியின் மனது தந்தையின் குணத்திலும் சரி, உருவத்திலும் சரி தன்னை ஒப்பிட்டு பார்த்து தானும் அவரும் நேர் எதிர் என்பது புரிந்து கொண்டான்.
'எல்லாம் தெரிஞ்ச விஷயம் தான் வெற்றி' என்றவன் 'இப்போ அவுக மகனா யோசிக்காத,இதுவும் ஒரு கேசா யோசி'என்றவன் எண்ணங்கள் போன திக்கில் "ச்சே என்ன டா இது ,அப்படில்லாம் ஒன்னும் இல்லை அவரு என் நைனா தான்" என்றான். இன்னொரு மனம்" ஏன் அப்படி இருக்க கூடாது?" என யோசிக்க, வெற்றி தலையை பிடித்த படி அமர்ந்து கொண்டான்
***************