JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!!அதிரூபனே!!-3

Suhana

Well-known member

அத்தியாயம் 3:


எப்போதும் போல் அந்த வெற்றி வேலனின் பாடல் செவியுனுள் தீண்ட கண்களை மூடி கிடந்தவன் எண்ணமெல்லாம் தாயின் கண்ணீரிலே நிற்க, "ப்ச் இப்போ என்னத்தை பண்றது" என வெற்றி யோசிக்கும் போதே நண்பனின் ப்ரத்யேக பாடல் வர, "ஆரம்பிச்சுட்டான் காலையிலேயே இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ!" என அட்டெண்ட் செய்தான் வெற்றி.

"வெற்றி" என்றான் கணேஷ்

"சொல்லுங்க வக்கீல் சார்" என்றான் வெற்றி

"டேய் யேன் இல்லை யேன்ங்குறேன்,உனக்கும் என் அப்பனுக்கும் என்ன பார்த்தா எப்படி தெரியுது, வக்கிலு வக்கீலுன்னுட்டு, போதா குறைக்கு அதான் உன் ஆளு அது போன் பண்ணி நீ இதுக என் கேஸை எடுத்து நடத்திபுடாதே அந்த கருப்பு தம்பி தங்க கம்பிக்கிட்ட குடுன்னு சொல்லுது அதுக்கு இருக்குற லந்தை பாரேன்".
"யாரு டா என் ஆளு?"என வெற்றி புரியாமல் கேட்க,
"அதான் உன் கனவுல வருதே அதேய்ன்"என்றான் சிரிக்காமல்,
"அடிங்க ,உன்னை" என்றவன் "இன்னைக்கு எனக்கு ஹீயாரிங் இருக்கு அவுகளையும் அவுக வீட்டுக்காரயும் சாய்ந்தரமா வந்து ஆபீஸ் லா பார்க்க சொல்லு"என்றான்.
"ஏன்டா வெற்றி?",
"ம்ம்ம்ம்.. நீயே சொல்லிட்ட ,அவுகளை கல்யாணம் கட்டணும்னா அவுக புருஷன் கிட்ட ப்ரொபெரா சைன் வாங்கணும்மே அதுக்குதேய்ன் வென்ரு",
"டேய் நெசமலுமா,என்னடா நான் ஆண்டி ஹீரோ கேள்வி பட்ருக்கேன் ஆனா இப்போதேய்ன் பாட்டி ஹீரோவை பார்க்குறேன்."

அவனின் பதிலில் சிரித்தவன் " டேய் உன்னை எல்லாம் ,அவுக ரெண்டு பேரையும் கூப்பிட்டது சமாதான படுத்த ,சொன்னதை கேளு பக்கி சாயங்காலமா வர சொல்லு" என வைத்தவன் .
வேகமாய் குளித்து கீழே இறங்க,அவன் தாய் செய்த உணவை உண்டு கொண்டே வீட்டினை பார்க்க, ராகவன் பேப்பர் படிக்க சரோஜா அவருக்கு உணவினை வைத்ததும் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தார்.

வெற்றி எப்போதும் காரமாய் உண்டு பழகியவன் ஆனால் ராகவனுக்கு காரம் ஆகாது என்பதால் அவனுக்கு வேறு இவனுக்கு வேறு என சமைப்பார் சரோஜா, இப்போதும் அப்படியே இருக்க ராகவன் தான் "ஏன்மா நான் சக்கரையை கூட தொட்டு சாப்பிடுருப்பேன்" என கூற,
"யேன் இதுக்கு எவ்வளவு நேரம் ஆக போது"என அவர்கள் பேசி கொண்டிருக்க வெற்றியின் பார்வை அவர்கள் இருவரையும் அளவெடுத்தது.

சாப்பிட்டு முடித்தவன் எதுவும் சொல்லாமல் கிளம்பி செல்ல, செல்லும் மகனை பார்த்து கொண்டிருந்தார் ராகவன்.

அவன் வண்டியின் சத்தத்தில் வெளியில் வந்தவர் " என்ன எதுவும் சொல்லாம கூட போயிட்டான் கருப்பட்டி காபி கூட குடிக்கலயே"என சரோஜா கூற,
"ம்ம்ம்ம்...அதான் யோசிக்கிறேன் என்னவா இருக்கும் உன்கிட்ட சொல்லாம கூட போயிட்டான்" என சற்று வருத்தம் மேலோங்க ராகவன் கூற

"அட யேன் இதுக்கு விசன படுறீங்க. கேஸ் சம்மந்தமா வெளிய சோலி இருந்திருக்கும் அதேய்ன் இப்படி போறான் நீங்களும் இப்படியே உக்காரம போய் கிளம்புங்க" என உள்ளே சென்றார்.

ராகவன் மனதில் இன்று அவன் கீழே இறங்கி வந்தது முதல் நடந்தது நினைவு வர,அவனின் சட்டென்ற கோபம் கூட சமாளிக்கலாம் ஆனால் அவனின் நிதானமாக செய்யும் எந்த செயலும் சற்று வீரியமிக்கதே என உணர்ந்தவர் ."இப்போ என்ன மனசுல நினைக்கிறான் தெரியலேயே" என எண்ணி கொண்டிருந்தார்.

மதிய நேரம் கோர்ட்டில் அங்கன்றும் இங்கொன்றுமாய் மக்களிருக்க,
அஞ்சலி நேரத்தை பார்க்கவும் பின் வாசலை பார்க்கவுமாயிருந்தாள் அருகில் அவள் தோழி மற்றும் வெற்றியின் ஜூனியர் பெண்ணில் ஒருத்தி,

"சீனியர் யேன் இப்படி நேரத்தை பார்த்துக்கிட்டே இருக்கீக இன்னும் தேய்ன் கணேஷ் சாரே வரலையே அப்புறம் தேனே வெற்றி சார் வருவாக "என வெற்றியின் ஜூனியரில் ஒருத்தியான இந்து கூற,

அதே நேரம் கணேஷ் அவன் காரில் வந்திறங்கினான்.

"இதோ கணேஷ் சார் வந்துட்டாக" என கூற, ஆனாலும் வெற்றியின் வருகைக்காக வாசலை பார்த்தாள் அஞ்சலி .காரினை பார்க் செய்து வந்தவன் "ஏய் சுண்டலி என்ன இங்குன நிக்கற?"

"ம்ம்ம்ம் வேண்டுதல் போடா அந்த பக்கம்"என அஞ்சலி கூற,
இந்து பக்கன சிரிக்க, கணேஷ் திரும்பி "உங்களை செஷன் கோர்ட்ல டீடைல் கேக்க சொன்னனே வாங்கிட்டு வந்திங்களா!" என இந்துவிடம் கேட்க,

"இல்லை சார் அதுக்குதேய்ன் கிளம்புனேன்,ஆனா",


"ஆனா என்ன? யேன் அய்யரு நல்லா நேரம் பார்த்து கொடுக்கலாயா ,அப்போ சரி இருங்க வெற்றி வருவான் அவன் சொன்னா நேரம் கரெக்ட்டா இருக்கும் இருந்து பார்த்துட்டே போகலாம்"என்றான்.

"அய்யோ இல்லை சார் நான் கிளம்பிட்டேன் சார்" என வெற்றியின் பெயரை கேட்டதும் இந்து சிட்டாய் பறந்து செல்ல,

அவள் சென்ற வேகத்தை பார்த்ததும்" டேய் லிங்கா ஏன்டா அந்த புள்ளைய இப்படி போட்டு மிரட்டூரிக பாவம் "என அஞ்சலி கூற,.

"யேன் சொல்லாமாட்டா நீ எல்லாம் கொடுத்து வச்சவா தலை நல்லா சம்பாரிக்கறாரு அதேய்ன் உனக்கு தெரியலை ,நாங்க ஒரு கேசு கையில கிடைக்க நாயா பேயா அலைய வேண்டிகிடக்கு.இதுல இந்த நியாஸ்தேய்ன் இருக்கானே பாதி கேஸை காசு வாங்காம முடிக்கான் இல்லைனா சமாதான படுத்தி அனுப்பிவிடுறான்"என புலம்ப,..
"ரொம்ப ஓவரா சொல்லாதே இன்னைக்கு வெற்றி அர்கீயிமெண்ட் செம்மையா இருந்துய்ச்சாம் எல்லாம் தெரிஞ்சு தாண்டி வந்தோம்" என்றாள்.
"ஓ!அதான் நீ எட்டி பார்க்காத ஏரியாக்குள்ள வந்துட்டியா எலிக்குட்டி "என அவளை சீண்ட, அதே நேரம் வெற்றியின் வண்டி சத்தத்தில் அஞ்சலி திரும்ப,அவள் மட்டுமின்றி இருந்த அனைவருமே திரும்பி பார்த்தனர்.

அவனின் செய்கைளை பார்த்த படியே கணேஷ் " பயபுள்ளை நம்மளை கார் வாங்க சொல்லிட்டு அது பைக் வங்கறப்பேவே நாம அலர்ட் ஆயிருக்கனும் அதுவும் இவன் இந்த கருப்பு கலரு தேய்ன் வேணும்ன்னு சொன்னான் பாரு, அப்போவே உஷாரு ஆயிருக்கணும் டா கணேஷா "என்றவன் வெற்றி ஸ்டாண்ட் போட்டதை பார்த்ததும் "இந்த வண்டியை இப்படி நின்ன வாக்குலே ஸ்டண்ட் போடறது இவன் மட்டும் தேய்ன்",என்றான் பொறாமையாய்,

வெற்றி வண்டியை நிறுத்தி எதிரில் நின்றவர்களிடம் பேசிக்கொண்டே நிமிர, அவர்கள் சென்றதும் தன் தலையை கண்ணாடியில் சரி செய்தவன் மீண்டும் கலைத்து விட்டு வர,
|இதயேன் சீவனும் அப்புறம் கலைக்கனும்"என கூறும் போதே வெற்றி அருகில் வர, அவனை கண்டதும் கணேஷ் வாயை மூட,
"எல்லாம் ஒரு ஸ்டைல் தேய்ன் மச்சான்" என கூலர்ஸை தன் சட்டையில் மாட்டி கொண்டே அருகில் வந்தான் வெற்றி, அஞ்சலியை பார்த்ததும் "என்ன எலிகுட்டி இம்மா தூரம்" என கேட்க,

"வெற்றி முதல்ல கையை கொடு" என்றவள் அவன் கையை பிடித்து" சூப்பர் வெற்றி இன்னைக்கி டாடி உன்னை பத்தி சொல்லி சொல்லி காதுல ரத்தம் வர வச்சுட்டாரு போ" என்றாள்.

"ம்ம்ம்ம்" என நிமிர்ந்தவன் அவனின் ஜூனியர்கள் இருப்பதை பார்த்து" நீ எதுல வந்த அஞ்சலி?" என்றான்.

"ஏன் என் வண்டியில தான் வந்தேன். நீ தான் என் பொண்டாட்டியை தவிர யாரையும் உன் வண்டில ஏத்த மாட்டா சொல்லிடியே அப்புறம் என்ன?" என்றாள் கோபமாய்,

"ரொம்ப நல்லது சரி நீ இப்போ கிளம்பு அப்புறம் பேசலாம்" என அனுப்பி வைத்தவன். அருகிலிருந்த ஜூனியர்களிடம் நாளை அவர்களுக்கான வேலையை பணித்தவன் "சரி டீடைல் எடுத்துட்டு ஆஃபீஸ் வந்திருங்க" என்றான்.

......

ஆஃபீசில் வந்து அமர்ந்தவன் மனது மீண்டும் தாயிடமே வந்து நிற்க,அதே நேரம் கணேஷ் வந்து "டேய் உன் ஆளு வந்திருக்கு மச்சான்".

அவன் யாரை சொல்கிறான் என புரிந்தவன் "போய் வர சொல்லு பக்கி"என்றான் வெற்றி.

உள்ளே வந்த கணவன் மனைவி இருவரையும் அமர வைத்தான். "சொல்லுங்க என் அம்மா அப்பா வயசு உங்களுக்கு இந்த வயசுல டிவோர்ஸ் கேக்குறதுக்கு என்ன காரணம்?"என்றான்.

அந்த பெரியவர் மனைவியை பார்க்க,
"சொல்லுங்க "என்றான்
"ம்ம்ம்ம் என்னத்தேய்ன் சொல்றது தம்பி இவருக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வருது,இந்த வயசுல கோவபடாதீகன்னு சொன்னாலும் கேக்குறது இல்லை.இதுனால வீட்ல புள்ளைங்க கூட விசன படுத்துங்க, அதேய்ன் இவரை விட்டுட்டு போனத்தேய்ன் நம்ம அருமை தெரியும்"என கூற,

கணேஷ் அங்கிருந்து " சார் நல்லா சான்ஸ் உடனே சைன் பண்ணிட்டு கிளம்பிடுங்க "என கூற, வெற்றி முறைத்த முறைப்பில் அடங்கி போனான்.

வெற்றி அவர்கள் இருவரையும் பார்த்து "உங்களை என் அம்மா மாதிரி நினைச்சு சொல்லுதேய்ன் சின்ன வயசில பிரிச்சா கூட ஒன்னுந்தெரியாது .ஆனா இந்த வயசு ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்து எங்களை மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் எடுத்துகாட்ட இருக்கறது இல்லையா" என வெற்றி சொல்லி கொண்டே போக, கணேஷ் "ஆ "வென பார்த்து கொண்டிருந்தான்.

ஒரு வழியாய் அவர்களை சமாதான படுத்தி அவரகளே டிவோர்ஸ் வேணாம் என கூறி வெற்றியை வாழ்த்தி விட்டு செல்ல, கணேஷ் அவனிடம் வந்து "சரிதேய்ன் இப்படி நீ எல்லாருக்கும் நீங்க பஞ்சாயத்து பண்ணி அனுப்பி விட்டிங்கனா நம்ம அடுத்து நடுதெருதேய்ன் வக்கிலு பார்த்துக்க" என கூற,

அதனை காதில் வாங்காமல் செல்லும் அவர்களை பார்த்த படி இருக்க, "என்னாச்சு டா வெற்றி?" என்றான்.

"ஒன்னுமில்ல டா "என கூற,

"A friend who என ஆரம்பித்தவன் கிரகம் மறந்துடுச்சு சரி விடு தமிழ்லேயே சொல்லுதேய்ன் எவன் ஒருத்தன் கொட்டுற மழைலையும் நண்பனோட கண்ணீரை கண்டுபுடிகரனோ அவன்தேய்ன் உண்மையான நண்பேன்"என முடிக்க,

"எவன் சொன்னது?" என்றான் வெற்றி

"ம்ம்ம்... இன்னைக்கு ஏதோ ஒரு நாய் ஸ்டேட்ஸ் வச்சுருந்துச்சு,அதை விடு இப்போ என்னாச்சு சொல்றியா இல்லை இன்னொரு கருத்து சொல்லனுமா",
"போதுசாமி என்றவன் ஏன்டா உங்க வீட்ல உங்க அப்பா உங்க அம்மா கூட சண்டை போடுவாரா?",
"என்ன சண்டை போடுவராவா அந்த மனுஷன் என்னைக்கு சண்டை போடாம இருந்துருக்காரு,ஏதோ என் தாயி மீனாட்சி இந்த காதுல வாங்கி அந்த காதுல வாங்கி விட்டுட்டு போறதால அவங்க பொழப்பு ஓடுது" என்றான் சிரித்த படி,

வெற்றியும் சிரித்து கொண்டே",ஆனா இ. பி சண்டை போட்டோ இல்லை சத்தம் போட்டோ பார்த்தது இல்லை மச்சான். ஆனா ரோஸ் எப்பவும் ஏதாச்சும் நினைச்சி அழுத்துகிட்டே கிடக்கும்,நேத்தும் பாரு உன்னை விட்டிட்டு அங்க போறேன் வீடே அம்புட்டு அமைதி போய் பாக்கிறேன் அது அழுதுட்டு இருக்கு"என்றான்.

"நீ யேன்னு கேக்க வேண்டியது தானே டா,"

"ப்ச்..அது எல்லாம் ஸ்கூல் படிகறபவே கேட்டாச்சு ,நீ என்கிட்ட இதை பத்தி எதுவும் கேக்க கூடாதுன்னு சத்தியம் வாங்கிடுச்சி"என்றான் அலுத்து கொண்டே,

"சரி இப்போ என்ன பண்ண போற?" என்றான் கணேஷ்

|அதேய்ன் என்ன பன்றது தெரியலை" என்றான் வருத்தமாய்,"ஏன்டா லிங்கா இப்படி இருக்குமா?",

"எப்படி?"என்றான் கணேஷ் புரியாமல்,

"இல்லை எனக்கும் இ. பி க்கும் எதிலேயையும் பொருந்தலேயே ஒரு வேலை நான் அவரு புள்ள இல்லையோ" என கேட்க,

"ஏய் என்னடா இப்படி சொல்லுதே திடீர்னு"என்றான்.

"பின்ன எப்படி சொல்றது ,எனக்கு என்ன பன்றது தெரியலா டா "என்றான் வெற்றி.

சற்று நேரம் யோசித்த கணேஷ் "வேணும்னா ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்து பார்ப்போமா என்ன சொல்லுதே",
சற்று அதிர்வுடன் நிமிர்ந்த வெற்றி "என்ன டா இப்படி சொல்லுற ",என்றவன் "ம்ம்ம் வேற வழியும் இல்லைலா" என கேட்க,

"என் சிற்றறிவுக்கு தெரிந்தது அம்புட்டுதேய்ன்" என்றான் கணேஷ்

வெற்றி யோசிக்க,

கணேஷ் திடீரென" ஏண்டா நீ கொடுத்துடுவ உங்க அப்பாகிட்ட என்ன சொல்லி டா சாம்பில் வாங்கறது,விஷயம் தெரிஞ்சா இ பி கொன்ற மாட்டாரு" என கேள்வியாய் கேட்க,

வெற்றி அவனை முறைக்க,அதே நேரம் "வெற்றி" என்று அலறிய படி வந்து நின்றாள் அஞ்சலி.

அவளை பார்த்ததும்" என்ன எலிக்குட்டி இம்புட்டு பாசமா பாக்குற" என்றான் வெற்றி சிரித்த படி,

அவனை முறைத்த கொண்டே அவன் எதிர் இருக்கையில்" தொம்" என அமர்ந்தாள் அஞ்சலி

அவளின் சிறு பிள்ளை செய்கையில் சிரித்தவன் அவள் புறம் தண்ணீரை நகர்த்த, அதனை குடித்தவள் " என்ன சொன்ன அப்பாகிட்ட?",

"எதை பத்தி டா எலி",

"ம்ம்ம்ம்.. என்னை பத்திதேய்ன்"

"ம்ம்ம் "அவன் நாற்காலியில் சாய்ந்த படி அவன் குறுந்தாடியை தடவியவன்" உன்னை பத்தி என்ன சொன்னேன்" என கேட்க,

"ம்ம்ம்... என்னையா மேல் படிப்பு படிக்க சொன்னியா?",

"ஓ...அதுவா ஆமா டா நீ எப்படியும் கோர்ட் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்ட அதேய்ன் சொன்னேன்,போய் படி டா எலி ஏதாச்சும் ஒரு கம்பெனில லீகல் அட்வைசைர் ஆயிடலாம் பாரு"என்றான்.

"நான் கேட்டனா உன்கிட்ட ,நான் எதுக்கு லா காலேஜ் வந்தேன்னு தெரியும் தானே உனக்கு",

"எதுக்கு?" என்றான் கனேஷ் இடையில் புகுந்து,

"ம்ம்ம்... இவன் கூட இருக்கத்தேய்ன் டா வென்ரு" என அவனை முறைத்தாள்.

"எலி "என வெற்றி முறைக்க,

"க்குக்கும்" என உதடு வளைத்தவள் "நான் போக மாட்டேன்" என்றாள் .
"எலி போ ஒழுங்கா போய் படி சொல்லிட்டேன்" என்றான்.
"நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு போறேன்"என்றாள்.

வெற்றி அவளை முறைத்தவன் "இதுக்கான பதிலை முன்னாடியே சொல்லிட்டேன்"என்றான்.
"ஏன்? இல்லை, ஏன்? எனக்கு என்ன குறையை கண்ட நீ நான் அழகா இல்லையா ?இல்லை கலராதேய்ன் இல்லையா சொல்லு "என்றாள்.

அவள் மூக்கு விடைக்க கேட்டதை கண்டு சிரித்த படி அவள் அருகில் வந்தவன் "ஏய் எலி உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லுதேய்ன். உன்னை போய் என்னை பொண்டாட்டி யா பார்க்க சொல்லுதே எப்படி முடியும் சொல்லு".

"ஏன் உன் கண்ணாலதேய்ன்" என்றாள் அஞ்சலி.

"ப்ச் உன் கண்ணை மட்டும் பார்த்து பேசிறவன்கிட்ட போய்" என அவள் கண்களை பார்த்தவன் "அதுக்கு மேல முடியாது போடி"என சற்று கோபமாய் கூற,

அவ்விடமே நிசப்தமாயிருக்க அஞ்சலி முகத்தில் புன்னகையாய் வெற்றி அருகில் வந்தாள்."அதுதேய்ன் டா உன்னை புடிக்கும்" என்றவள் சத்தமில்லாமல் அவன் கன்னத்தில் முத்தமிட்டு "நான் போய் படிக்கிறேன் ஆனா இது அப்பாக்காக இல்லை வெற்றி உனக்காகதேய்ன்" என வெற்றி அடிக்கும் முன் அவ்விடம் விட்டு பறந்தாள்.

அஞ்சலி சென்றதும் வெற்றி சிரிக்க, அவன் தோளினை தொட்ட கணேஷ் "இப்போ என்ன டா நடக்குது இங்குன ,அந்த புள்ளை மேல விருப்பமிருந்தா தாலியை கட்ட வேண்டியது தானே,ஒரு சின்ன புள்ளையை வச்சுகிட்டு என்ன வேலையை டா பாக்குறீக",

அவன் முதுகில் ஒன்றை போட்டவன் " ஏண்டா இப்போதானே அவ கிட்ட சொன்னேன் அவளை போய் கல்யாணத்தை பண்ண சொல்லுற,"

"ஏன் அவளும் நல்லாதானே இருக்க ஏன் கட்டுனா என்ன?" என்றான் கணேஷ் ஆர்வமாய்,

"டேய் ஓரு புள்ளையை பார்த்தா நமக்கு எப்படி இருக்கணும் தெரியுமா, சித்திரை வெயில்லா நம்ம ஊரு ஜிகர்தண்டா சாப்பிட்ட மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கணும்" என்றான் வெற்றி கண்களை மூடி,

"அப்போ அந்த புள்ளையை கட்டமாட்ட அப்படி தானே "என்றான் எதிர்பார்ப்புடன்,

"ஏன் உனக்கு இந்த ஆர்வம் உன் வேலையை அவ கிட்ட காமிக்கலாம் நினைச்ச கொன்னுபுடுவேன் பார்த்துக்கோ "என்றான் வெற்றி.

"விடு டா ராசா நான் கல்யாணமே பண்ண மாட்டேன் போதுமா "என்றவன், "இவனுங்களும் கட்டமாட்டேன் சொல்றங்கே, நம்மாளும் கட்ட கூடாதாம் என்னங்கடா உங்க சட்டம். இதுல இவுகளுக்கு மட்டும் ஜில்லுன்னு ஒரு பொண்ணு வேணுமாம் "என புலம்பிய படி சென்றான் கணேஷ்.
அவன் புலம்பலை கேட்டு சிரித்த படி தன் வேலையை தொடர்ந்தான் வெற்றி.

......

சிங்கப்பூர் அந்த இரவு நேர இருட்டடையும் சற்று மந்தமான வெளிச்சதால் விரட்டி கொண்டிருந்தது பப் என்ற இரவு நேர விடுதி எங்கேயும் பாப் இசை ஒலிக்க சற்று மேல் தட்டு மக்கள் மட்டுமே வரும் என்பதால் அங்கேயிருந்த நாற்காலிகள் கூட அதன் மேன்மையை கூற, அதில் அமர்ந்த படி கையில் கிளாஸுடன் ஆடும் நண்பர்கள் ஆடுவதை பார்த்த படி அமர்ந்தாள் சாரு என்ற சாருமதி.


"கம் ஆன் சாரு" என்றான் அங்கிருந்த நண்பன்.

"நோ லா" என்றவள் கையிலிருந்த திரவத்தை ஒரு மிடறு குடித்த படி நிமிர அங்கே ரிஷி நின்று கொண்டிருந்தான்.

"வா சாரு லெட்ஸ் என்ஜாய் தி டான்ஸ்" என அவள் கையினை பற்ற,
"ரிஷி நோ மீன்ஸ் நோ" என்றாள் குரலில் கடுமையை காட்டி, அவள் குரலில் கையினை விட்டான். ரிஷிக்கு தெரியும் அதன் பின் அவளிடத்தில் பேசி பயனில்லை என,

ரிஷி கோபமாய் வெளியில் செல்ல சாரு தோளை குலுக்கிய படி நண்பர்கள் ஆடுவதை பார்த்தவள் சற்று நேரத்தில் அவளுக்கு பிடித்தமான பாப் இசை ஒலிக்க எழுந்து சென்று நடனமாட ஆரம்பித்தாள்.

அவளின் இடை காட்டிய நளினம் அனைவரையும் வியக்க வைக்க, சாருவின் அருகில் ஆடிய அவள் தோழி" இதை தானே ரிஷி சொன்னான் இப்போ பாரு அவன் கோபமாய் போய்ட்டான்" என்றாள் சற்று ஏக்கமாய்,

அவள் பாவனையில் சிரித்தவள் "நோ ஒன் கேன் டாமினேட் மீ ,இட்ஸ் மை லைப் நோ ஒன் ருயின் மை ஹாப்பினஸ்" என்றவள் மீண்டும் தன் ஆட்டத்தை தொடர,அவளை பார்த்த படி நின்றான் ரிஷி.ரோஜா நிறத்தில் துறு துருவென அவள் விழிகள் காட்டும் பாஷைகள்,திருத்திய புருவம் சற்று மெலிதான முக பூச்சுகளில் மயக்கும் அவள் முகம்,அவளின் நவ நாகரிக தோற்றதிற்கு சம்பந்தமில்லாத அவளின் கரு கரு கார் கூந்தல் இடையினை தாண்டி அவள் நடனத்திற்கு ஏற்ப அதன் பணியை செவ்வனை செய்ய,மொத்தமாய் அழகு குவியலாய் தன் முன்னால் நின்றவளை எதுவும் செய்ய முடியாத தன் கையாலாகத தனத்தை நொந்த படி அவளை பார்த்து படி நின்று கொண்டிருந்தான் ரிஷி.



*****************************************

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top