JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!!அதிரூபனே!! 4

Suhana

Well-known member
அத்தியாயம் 4:

ரிஷியின் பார்வை சாருவை விட்டு நீங்காது இருக்க,அவனை கலைப்பது போல் அவனை திசை திருப்பியது அவனின் கைபேசி,ப்ச் என பார்த்தவன், அவன் தந்தையின் அழைப்பு என தெரிந்ததும் 'இவர் வேற'என அட்டெண்ட் செய்து" எஸ் டேட்" என கூற,

"ரிஷி வேர் இஸ் சாரு ,ஏன் அவ போன் அட்டெண்ட் பண்ணலை"என்றார்.

"டேட் ஷீ வாஸ் டான்ஸிங் ,இன்னைக்கு தான் லாஸ்ட் டே அப் காலேஜ் சோ வீ என்ஜோய் லீவ் அஸ் பிரீ "என இவன் பொரிய தொடங்க,

"இடியட் என்ன சொல்ல வரேன்னு கூட தெரியாம, என்னடா பேசுற, ஜெய்க்கு ஹார்ட் அட்டாக் ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணி இருக்கோம், சீக்கிரம் ரெண்டு பேரும் வாங்க" என வைக்க போனவர் "நீ ட்ரிங்க் பண்ணி இருக்கியா?",

"எஸ் டேட்"

"சாரு?" என்றார் கேள்வியாய்

"ம்ம்ம்ம்... ஹாட் ட்ரிங்க்ஸ் இல்லை" என்றான்.

"எனிவே டிரைவர் ஆரேஞ் பண்ணி வந்து சேருங்க" என வைத்தார்.

ரிஷி வேகமாய் சாரு அருகில் வந்தவன்" சாரி கைஸ் வீ நீட் டூ லீவ் நவ் "என சாருவை அழைக்க,

அவனின் பதட்டத்தை பார்த்தவள் "வாட் ஹாப்பன் ரிஷி?" என்றாள்

"நத்திங்" என்றவன் கார் பார்க்கிங்க் அருகில் செல்ல,

"ப்ச்... ரிஷி நான் உன்கிட்ட தான் கேக்குறேன், என்ன ஆச்சு லா ?"என்றாள் கோபமாய்,

"சாரு நத்திங்" என்றான்

அவளின் பார்வை கூர்மையாக,

"ஜெய் அங்கிளுக்கு ஹார்ட் அட்டாக் .டேட் உனக்கு கால் பண்ணி இருக்காங்க நீ எடுக்கலை என்றதும் எனக்கு அடிச்சு இருக்காங்க" என்றான் .

"எனி திங்க் சீரியஸ் அப்பா உயிருக்கு" என்றாள் கண்களில் அரும்பிய கண்ணீரை கட்டுபடுத்தி,"டிட் யூ ஹைட் எனி திங் ப்ரம் மீ" என அவள் கேட்க

"ப்ச்... நோ லா ,அப்பா அவ்ளோ தான் சொன்னாங்க" என்றான்.

சாரு அவள் கைபேசியை ஆராய, அதில் ரிஷியின் தந்தையிடமிருந்து வந்த கால்களும் அவள் தாயிடமிருந்தும் வந்திருப்பது தெரிய, உடனே தாய்க்கு அழைத்தாள்.அவர் அட்டெண்ட் பண்ணாமல் போக", யா ரிஷி கெட் இன்" என்றாள் காரில் அமர்ந்த படி,

"வேணாம் வீ அரேன்ஞ் அ டிரைவர் "என்றான் சற்று தடுமாறிய நிலையில்,

சாரு பார்த்த பார்வையில் அமைதியாய் ஏறி அமர்ந்தான்.

......

கணேஷ் ரூமில் நுழைய ராகவன் அமைதியாய்

அவனை பார்த்தார்.

"பா..." என்றான்.

"இதோட பதினோரு தடவை ஆச்சு"என்றார் அவனை பார்த்த படி,

"எது பா?" என்றான் கணேஷ்

"நீ இப்படி ரூம்க்கு வரதும் நான் என்னன்னு கேட்டா பா சும்மா வந்தேன்னு சொல்றதும்,என்னடா வேணும் உனக்கு அதை சொன்னா நானே எடுத்து தந்துட்டு போறேன் "என கூற,

"ஓ... ஒன்னுமில்லை பா சும்..."என ஆரம்பித்தவன்,அவர் பார்த்த பார்வையில்" ஈ "என சிரிக்க ,

"ஏண்டா எதுவும் காசு வேணுமா?" என்றார் ராகவன்.

"ச்சே...ச்சே அப்படி வேணும்னா நான் அப்பா பாக்கெட்லயிருந்து எடுத்துக்குவேன்"என்றான்.

"இன்னுமா டா எடுக்குற "என்றார் ராகவன்.

"ஆமா நம்ம எவ்ளோ சம்பரிச்சாலும் அப்பா கிட்ட எடுக்குறது தனி பீல் இல்லையா" என்றான் சிரித்த படி,

ராகவன் மனது மகனை எண்ணியது, வெற்றி எப்போதும் இது வேண்டும் என கேட்டதுமில்லை எடுத்ததுமில்லை, பலமுறை அவரும் நினைத்தது உண்டு ஒரு சராசரி தந்தை மகன் உறவு இருவருக்கும் இடையில் இருந்தது இல்லையோ என, அப்போது அவர் மனத்தில் வந்து போன உருவங்களும் அவர்கள்

கூறிய வார்த்தைகளும் அவரை இப்போதும் கலங்க தான் செய்தது.

கணேஷ் வெளியில் வந்ததும் வெற்றி "என்னடா எடுத்தியா!" என கேட்க,

"என்னத்தை எடுக்கிறது அவர் க்ராஸ் கொஸ்டின்ஸ் கேட்டு என்ன குழப்பி விட்டுட்டார்" என்றான்.

"நீ எல்லாம் ஒரு வக்கிலு ஒரு முடியை எடுக்க துப்பிலை" என்றான் வெற்றி.

"ஏண்டா லா காலேஜ்ல இது எல்லாம சொல்லி தாறங்க ,என்ன டா இது டி. என். ஏ டெஸ்ட் எடுக்க தானே" என கூற வந்தவனை வெற்றி முறைக்க,

"எதுக்கு இவேன் இம்புட்டு பாசமா பாக்குறான் "என கணேஷ் திரும்ப, ராகவன் இவர்கள் இருவரையும் பார்த்த படி வெளியில் வந்தார்.

ராகவன் பார்வை இவர்கள் இருவரையும் எடைபோட வெற்றி மீது பார்வையை நிலைக்க வெற்றி தன் தலையை கோதிய படி வேறு புறம் திரும்பி கொண்டான்.

"அப்புறம் மச்சான் வாயேன் ரெண்டு பேரும் அப்படியே ஒரு எட்டு தெப்பக்குளம் வரைக்கும் போவோம்" என கூறிய படி வெற்றியை பார்க்க,

வெற்றி முறைத்த படி வெளியில் செல்ல, 'நம்ம அவனை காப்பாத்தி தானே விட்டோம் பின்ன ஏன் நம்மளை முறைச்சிட்டு போறான் 'என புலம்பிய படி ராகவனை பார்த்து சிரித்த படி வெளியில் சென்றான்.

வெற்றி தன் வண்டியில் ஏறி ஆக்சிலேட்டாரை உறுமிய படி நிற்க",பய புள்ள கோவமாதேய்ன் இருக்கானோ" என அருகில் சென்றவன்.

"ஏண்டா நான் உன்னை எப்படி வெளியிலே கூடியந்தேய்ன் பின்ன எதுக்கு முறைக்கிற ?"என கணேஷ் கேட்க,

"யாரு நீயி உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு" என்றவன் "எதாச்சும் சொல்லிட போறேன் ஏறி தொலை பக்கி ,வேற ஏதாச்சும் யோசிப்போம்" என்றவனின் இரும்பு குதிரை தன் ப்ரத்யோக சத்தத்துடன் கிளம்பி சென்றது

வெற்றி கிளம்பியதை உணர்ந்தவர் யோசனையாய் அமர்ந்து கொண்டார், ஒரு வாரமாய் மகனின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாய் இருப்பதாய் தோன்றியது.

எப்போதும் தன்னை நேர் கொண்டு பார்ப்பவன் இன்று தான் பார்த்தாலும் வேறு புறம் பார்ப்பதும்,சரோஜாவும் தானும் பேசும் போது பார்வை ஆராய்ச்சியாய் மோதுவதும் " என அவன் செயல்கள் அனைத்தையும் நினைத்து பார்த்தவர்.
ராமகிருஷ்ணன்னுக்கு அழைக்க,

"சொல்லு ராகவா" என்றார்

"ராம் நீ சொன்னதுக்கு ஒத்துக்கிறேன் டா, நீ அவுக கிட்ட எல்லாம் சொல்லிடு" என்றவர் "வேணாம் நீ கூட்டிட்டு போய் காமி அப்புறம் எல்லாம் அவுக தானா புரிஞ்சிகுவாக" என கூற,

"என்னாச்சு டா ராகவா எதுவும் பிரச்சனையா,வெற்றிக்கு தெரிஞ்சுடுச்சா? யாரும் வந்தாகாளா இல்லையே எனக்கு தெரிஞ்சு யாரும் வர வாய்ப்பில்லை "என அவர் அடக்கி கொண்டே போக,

"அப்படி எதுவும் இல்லை டா, இந்த ஒரு வாரமா வெற்றி கலங்கி போன மாதிரி இருக்கு, எதையோ போட்டு மறுகுற மாதிரி ப்ச் ஏன் என்னை நேருக்குநேரா பாக்குறது கூட இல்லை டா, எதுவும் அவுகளுக்கு தெரிஞ்சுருக்குமோ,என்னை பத்தி எதுவும் தப்பா நினைச்சு அதை சொல்ல முடியாம இருக்கறகளோ !"என கூறிய அவர் குரலில் அத்தனை வேதனை,

"டேய் ராகவா நீ என்னை கொலை குத்தம்மா செஞ்ச உன்னை அவன் தப்பா நெனைக்க,அப்படியே இருந்தாலும் அதில உன் தப்பு ஒன்னுமில்லைன்னு எனக்கு தெரியும் நான் சொல்லுவேன் அவன் கிட்ட" என்றார் வேகமாய்,

"விடு டா பழசை பேசி என்ன பண்ண விடு நீ அவுகளை கூட்டிட்டு போய் நடந்த எல்லாத்தையும் சொல்லிடு,ஒரு அப்பாவா அவுக ஒரு வார ஒதுக்கமே தாங்க முடியலை, ஆனா என் ஒருதனால பொண்ணு பையன்னு ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பிரிஞ்சு போன வலி கொடுமை டா ராம்,அதான் என்னால முடிஞ்ச ஒரு பரிகாரம் அவுக ரத்தத்தை அவர் கிட்ட காமிக்கலாமே" என்றார்.

"ராகவா நான் நாளைக்கே கூட்டிட்டு போறேன் டா" என்றார் வேகமாய்,

"ம்ம்ம்.... ஆனா எங்க கூட்டிட்டு போறேன் சொல்லாத அவுக மொத வேலையா இங்க அவுக அம்மாகிட்ட தான் வந்து சொல்லுவாக,அப்புறம் என்ன நடக்கும்ன்னு உனக்கு தெரியும்" என அவர் கூற,

"புரியுது டா "என்றவர் ,"ரொம்ப நன்றி டா "என்றார் குரலில் இருந்த மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டவர் போல் ராகவன் "சரி டா வைக்கிறேன் "என வைத்தவர் எண்ணங்கள் எல்லாம் அவரின் கல்லூரி பருவம் வந்து போக,

முதன் முதலில் சரோஜாவை பார்த்த நிகழ்வும் வந்து போனது.எப்போதும் சரோஜா சரவெடி தான் அதே நேரம் அவரின் அசத்திய துணிச்சலில் மிரண்டது.ஏன் அந்த துணிச்சல் தான் அவரை தன்னிடம் வர வைத்தது என நிகழ்வுகளை அசை போட்டவர் சிரித்து கொண்டார்.சரோஜா அவரை கடந்து உள்ளே செல்ல,

"சரோ "என அழைத்தார்.

வேகமாய் வெளியில் வந்த சரோஜா அவரை மேலிருந்தது கீழ் வரை பார்த்து வெளியில் சென்று வானத்தை பார்த்தவர்" அப்படி ஒன்னும் மழை வார மாதிரி தெரியலையே" என்றார் அவரிடம் பார்வையை பதித்த படி,

"ஏன் என்ன அப்படி பாக்குற "என்றார் ராகவன்.

"இல்லை ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி நடு மாடத்தில நின்னு என் பேரை உரக்க கூப்பிடுறிக அதேய்ன் கொஞ்சம் கிறுகிறுத்து போச்சு" என கூற,

ராகவன் கண்கள் சிரிக்க", ஆமா வயசு புள்ளையை வீட்ல வச்சுக்கிட்டு உன்னை செல்லமா வேற கூப்பிறேன்,போதா குறைக்கு நான் உன்னை சரோனு கூப்பிட்டா உன் மகன் ரோஸ்ன்னு கூப்பிடுறது அப்புறம் எங்க போய் சரோ எல்லாம் வரும்" என கூற,

"சரித்தேய்ன் "சரோஜா சட்டென்று சிரித்து விட, ராகவனும் சிரிக்க, வெற்றி உள்ளே வந்து கொண்டிருந்தான்.

"என்னடா இது நம்ம ரெண்டு பேரும் இவுகளை நினைச்சி என்ன பண்ண போறோம்னு மண்டையை பிச்சுக்கிட்டு வாறோம் ஆனா இங்குன இவுக ரெண்டு பேரும் ரொமான்ஸ் படம் ஒட்டுறாக" என்றான் அவன் பின்னால் வந்த கணேஷ்.

வெற்றி அவனை முறைத்து "கொஞ்சம் "என்றவன் அவன் கையை வாயில் வைத்து "மூடு "என்றான்.

ஏனோ வெற்றிக்கு அந்த சூழல் பிடிக்க, "என்ன ரோஸு இங்குன என்ன நடக்குது? என்னை வெளியில பத்தி விட்டுட்டு இங்குன ரொமான்ஸ் படம் ஓடுது போல, "என்றான் தாயின் காதின் அருகில்,

அவன் காதை திருகியவர்" என்னடா இது என் புருஷன் கூட சிரிக்க கூடாதா, எங்களை கிண்டல் பண்ணுவியா நீ, "என்றவர் "இவனை என்னன்னு கேளுங்க "என ராகவனை பார்த்து கூற,

ராகவன் சிரித்து கொண்டே பார்க்க, வெற்றியும் தன் மீசையை நீவிய படி அவரை தான் பார்த்தான்,அவனும் அவன் மீசையை நீவியதும் அவர் கண்ணில் வேறு ஒரு உருவம் வந்து போக, வேகமாய் எழுந்து உள்ளே சென்றார்.

"அவர் சென்றதும் பாரு டா உன்னாலதேய்ன் நல்லா பேசிட்டு இருந்த மனுஷன் எழுந்து போயிட்டாரு" என்றார் சரோஜா.

"பாருடா கோவத்தை ரோஸுக்கு ,சரி சரி ஜாக் எங்கேயும் போக மாட்டாரு பின்னாலே போய் கேட்ச் பண்ணுங்க, இப்போ போய் உன் புள்ளைக்கு காபி தண்ணி கொடுக்கிறது "எனும் போதே வெற்றியின் மொபைல் தன் இருப்பை காட்ட எடுத்தவன்' என்னடா இந்த நேரத்துல கூப்புடறாரு" என அட்டெண்ட் செய்தவன்" சொல்லுங்க "என்றான்.

"வெற்றி நாளைக்கு என்ன சோலி?" என்றார்.

"ஒரு வாயிதா கேஸ் ஒன்னு இருக்கு" என்றான்

"அதை உன் ஜூனியர் கிட்ட கொடு விடியல்ல நம்ம என் கிலைன்ட் ஒருத்தரை பார்க்க போகணும் "என்றார்.

அவரின் சில கேசுகளை இவனும் பார்த்து வருவதால் சரி என வைத்தான்.

பேசிவிட்டு வைத்தவன் முகம் யோசனையில் இருக்க,

"என்னடா வெற்றி ?"என்றான் கணேஷ்

"நாளைக்கு அவர் கூட வர சொல்றாரு"என்றான் வெற்றி.

"யாரு பி. பி யா?" என்றான் கணேஷ்

"ம்ம்ம்... விடியல்ல போகனுமாம்,அதான் யோசிக்கிறேன்" என்றான் வெற்றி.

"இது நீ பாக்குற வேலை தானே டா அப்புறம் என்ன?,என கேட்க,

"இல்லை டா அவர் குரல் கொஞ்சம் பதட்டமா இருக்கறது போல தோன்னுச்சு ,எதுக்கும் நீயும். கிளம்பிடு" என்றான் யோசனையாய்,

"நான் எதுக்கு" என சொல்ல வந்தவன் அவனின் முகத்தை பார்த்ததும்" சரி டா வெற்றி "என்றான்.

........

சாருவின் வேகம் ரிஷி அறிந்த ஒன்று தான் என்றாலும் இன்று அது சற்று கூடுதலாக இருக்க,

"ப்ச் சாரு ரிலாக்ஸ் கொஞ்சம் மெதுவா போ" என கூற,அவனை சட்டை செய்யாமல் தன் வேகத்தினை அதிக படுத்தியவள் எப்போதும் கடக்கும் தூரத்தை முன்னதாகவே வந்து சேர்ந்தாள் மலேசியாவின் தலை நகரத்திற்கு,

நேரத்தை பார்த்தவன் "ஊப்ஸ் சாரு இட்ஸ் அன்பெலிவபள் இவ்ளோ சீக்கிரமா" என அவன் பாராட்டை அடுக்கி கொண்டே போக, அதனை கேட்கும் நிலையில் சாரு இல்லை அவள் வேகமாய் மருத்துவமனைக்குள் நுழைய அங்கே சுவர் ஓரமாய் சாய்ந்த படி நின்று கொண்டிருந்தார் அலிஸ் அவளின் அம்மா,

"மாம்" என்றவள் அருகே வர, நிமிர்ந்து பார்த்தவர்" பேபி சீ யூவர் டேட்" என்றவர் மகள் மீதே சாய்ந்து அழ,

"ப்ச் மாம் காம்டவுன் நான் என்னன்னு பார்த்துட்டு வாரேன்" என்றாள் மலாய் மொழியில்,

மெல்ல நகர்ந்தவள் ஐ சீ யூ கண்ணாடி தடுப்பு வழியாய் பார்க்க, சற்றும் அவரின் கம்பீரம் குலையாமல் செயற்கை சுவாச கருவிகளின் உதவியால் சுவாசித்த படி படுத்திருந்தார் ஜெய் என்ற ஜெயவேல் பாண்டியன்.

***************************

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top