JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-5

Suhana

Well-known member

அத்தியாயம் 5:

வெற்றி கிளம்பிட்டியா என தன் உடையை சரி செய்து கொண்டே உள்ளே வந்தான் கணேஷ்.

"எங்கடா இவ்ளோ வெள்ளனையே வந்து நிக்கிற ?"என சரோஜா கேட்க,

"ஏன் வெற்றி சொல்லாலயா!?" என கேட்ட படி அமர்ந்தான்.

"ஒன்னும் சொல்லால டா எங்குன கிளம்பிட்டிக?" என கேட்க,

"ம்ம்ம்ம்...எல்லாம் உங்க அண்ணன் பி.பிதேய்ன் ஏதோ சொத்தை கொடுக்கற மாதிரி அவரோட கிளைன்ட்ஸ் எல்லாம் இவன் கிட்ட கை காமிச்சு விடுறாரு.அதேய்ன் இன்னைக்கு யாரையோ பார்க்க கூட்டிட்டு போறாரு" என்றவன் சரோஜாவிடம் சரி சரி பேசி "பேசி வாய் நோவுது காபி தண்ணி இதுக தாரது"என்றான்.


சரோஜாவும் சிரித்து கொண்டே எழுந்தவர் "இருடா போட்டியாறேன்" என நகர்ந்து செல்ல, வெற்றி வேஷ்டியும் சட்டையுமாய் இறங்கவும் சரியாய் இருந்தது.

வெற்றியை பார்த்தவன் "ஏண்டா இன்னைக்கும் இதே தானா!" என அவன் உடையை பார்த்து கேட்க,

"நாங்க எல்லாம் அமெரிக்க போனாலும் இதே தான் போடுவோம் வென்ரு"என அவன் அருகில் அமர,


"ஓ அப்போ யென் கோர்ட்க்கு இதை போட மாட்டேன்ங்கிறீங்க வக்கில் சார்,அங்கேயும் இதே போட வேண்டியது தானே" என கேட்க,


"அது என்ன பங்கு உனக்கு காலங்கத்தல இம்புட்டு அறிவு வழியுது"என்றான் வெற்றி அவன் தலையை தட்டி,
"அதே நேரம் காரின் ஒலியில் வெற்றி சரி கிளம்பு வந்துட்டார் போல "என்றவன் வெளியில் வர,ராமகிருஷ்ணன் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்தார்.


அவரை பார்த்ததும் வெற்றி" நான் என் வண்டில வாரேன்" என கூற,

"வேணாம் கொஞ்சம் தூரம் போக வேண்டியது இருக்கு காருதேய்ன் பெட்டர்' என்றார்

"அப்போ சாவியை கொடுங்க நான் டிரைவ் பண்றேனன்" என சாவியை வாங்கி டிரைவர் சீட்டில் அமர, கணேஷ் முன்புறம் வந்து எறிக்கொண்டான்.

அவர்கள் ஏறியதும் தவிப்புடன் பின்னால் வந்த ராகவனை பார்த்தவர் 'நான் பார்த்து கொள்ளுகிறேன்' என்பதை போல் தலை அசைத்து விட்டு சென்றார்.

அவர்கள் செல்ல, காரினை பார்த்து கொண்டே காபியுடன் சரோஜா வெளியில் வர,'என்ன அதுக்குள்ள போயிடங்களா!" என கேட்க,

"ம்ம்ம்ம்" என்றார் காரினை பார்த்த படி,

"ஓ... ஆனா அண்ணன் உள்ளே வரவேயில்லை" என மீண்டும் கேட்க,

"எதுவும் அவசர சோலியா இருக்கும்"என்றார்.

"வெற்றி சொல்லிட்டு கூட போகலை" என கூற,

ராகவன் எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல,"இவருக்கு என்ன ஆச்சு?" என அவர் பின்னோடு சென்றார் சரோஜா

காரினை ஒட்டி கொண்டே "ஆமா எங்க போகணும்?" என வெற்றி கேட்க,

ராமகிருஷ்ணன் கண்களை முடியபடி அமைதியாய் வந்தார்.

கணேஷ் வெற்றியிடம் "ஏண்டா இவரு தூங்கவா டா, இப்படி காலங்கத்தாலே எந்திரிச்சு இவருக்கு காரை ஓட்கிட்டிகிட்டு சுத்துறோம்" என கூற,

ராமகிருஷ்ணன் தன் தொண்டையை செருமி "என்ன கணேஷ் எதுவும் சொல்லனுமா"என கேட்க,

"இ... இல்லை சார் நாம இப்போ எங்க போகனும்? ஏன்னா நாம மதுரை அவுட்டர் வந்துட்டோம் "என கூற,

வெளியில் பார்த்தவர் மீண்டும் கண்களை மூடி "நாம போடி நயக்கனுர் வரைக்கும் போகணும் வெற்றி பார்த்து மெதுவாவே போ" என சொல்ல,

வெற்றி காரினை நிறுத்தி" என்ன போடி யா, ஏன் அங்க ?என புரியாமல் கேட்க,
"அத்தேய்ன் சொன்னேனே கிளைய்ன்டஸ் இருக்காரு பார்க்கணும்ன்னு"என்றார்.

"ஏன் இவ்ளோ தூரம் இங்குட்டு இருக்க கேசுகளலேயே பார்க்க முடியலை. இதுல ரெண்டு மணி நேரம் போய் ஒரு கிளையைன்ட பார்க்கணுமா என்ன?"
சொல்ல போனா அவுகளுக்கு அங்குட்டு தேனி தானே பக்கம் நம்ம ஏன் போகணும்,இல்லை உங்களுக்கு வேண்டியவங்கனா என் கூட படிச்சவேன் அங்குன ரெண்டு பேரு இருக்காய்ங்க அவுனுங்ககிட்ட சொல்லுதேய்ன் அவுனுங்க பார்த்துப்பாய்ங்க " என வெற்றி முடிக்க,


ராமகிருஷ்ணன் உடனே" இது வேலை இல்லை வெற்றி என் கடமை,எனக்கு பின்னாடி இருக்குற பட்டம் நான் வாழுற வாழ்க்கை எல்லாம் அவுக கொடுத்தது.செஞ்சோற்று கடன் இது இப்போ என்னால முடிஞ்சதை நான் செய்யுறேன் அதையும் உன்கிட்ட எல்லா பொறுப்பையும் கொடுத்துட்டா நான் நிம்மதியாயிடுவேன் என்றார் குரல் தழுதழுக்க,

வெற்றி கூர்மையாய் அவரை பார்த்தான்.அவர் கண்கள் கலங்கியது போல் தோன்ற வேறு எதுவும் பேசாமல் சாலையில் கவனம் வைத்தான்.


கணேஷ் உடனே' என்னடா' என்பதை போல் வெற்றியை பார்க்க, வெற்றி தன் தோளினை குலுக்கியவன் 'பார்த்துக்குவோம்' என்பதை போல் தன் கண்களை மூடி திறந்தான்.

கார் மெல்ல தேனியை தாண்ட, கணேஷ் "நம்ம பக்கம் மட்டும் தேய்ன் இப்படி இருக்கும்,ஒரு பக்கம் நம்ம மதுரை வெயிலுல கருவடா காயிறது.இன்னொரு பக்கம் இப்படி ஜில்லுனு இருக்கறது. எப்படி இருக்கு பாரு டா, பேசாம எலிக்குட்டியை கூட்டிகிட்டு ஹனிமூனுக்கு இங்குட்டுதேய்ன் வரணும், வெளிநாடு எல்லாம் வேணாம் சொல்லிடனும்" என தீவிரமாய் கூற,

வெற்றி முறைத்த முறைப்பில் கணேஷ் 'ஆஹா மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டோம் போலயே ,எலிக்குட்டி அப்பா வேற பின்னாடி இருந்தரே' என பின்னாடி திரும்பி பார்க்க,
ராமகிருஷ்ணன் கண்கள் மூடி இருப்பதை பார்த்து' ஷப்பா தூங்கிட்டு வாரரு' என நினைக்க,அவரின் செருமல் சத்தத்தில் 'ஆத்தி இவரு முழிச்சுட்டுதேய்ன் இருக்காறா' என்றவன் அமைதியாய் திரும்பி கொண்டான்.

சற்று தூரம் செல்ல,சாலையை கடக்க முடியாமல் வெற்றி பிரேக் போட்டு நிறுத்த,அவன் நிறுத்திய வேகத்தில் "என்னாச்சு டா வெற்றி?" என கேட்க,
"தெரியலை டா ஏதோ கூட்டமா இருக்கு இரு என்னன்னு பாக்குறேன்" என இறங்க எத்தனிக்க,வெற்றியை தடுத்து நிறுத்திய கணேஷ்" இரு டா நான் போய் என்னன்னு கேக்குறேன், நாங்களும் வக்கிலுதேய்ன் இதுல யூனிபார்ம்ல வேற வந்துருக்கேன்" என தான் அணிந்திருந்த கருப்பு வெள்ளை உடையை காட்டியவன்.
"இப்போ போய் எப்படி பேசுறேன் பாரு"என கூறியவன். 'எப்போவும் இவனே ஸ்கோர் பண்ணனும் நெனைக்கறது அப்புறம் நாங்க எல்லாம் எப்போதேய்ன் ஸ்கோர் பண்றது,இதுல எலிக்குட்டி அப்பா வேற பின்னால இருக்காரு அவரை எப்படியும் இன்னைக்கு கவுதுறனும் ,அப்புறம் நீ தாண்ட என் மாப்பிள்ளைன்னு சொல்ல வைக்கணும் விட்டராதை டா கணேஷா'என எண்ணி கொண்டே கூட்டத்தை விலக்கி முன்னால் செல்ல முயல,அவனை பின்னால் தள்ளியது கூட்டம்.

"என்ன டா இது கணேஷா உனக்கு வந்த சோதனை' என்றவன் முயற்சி செய்து முன்னால் செல்ல,அங்க ஒருவனை சில பேர் அடித்து கொண்டிருந்தனர்.அதனை பார்த்தவன் "டேய் ஏன்டா ஒருத்தனை போட்டு இப்படி அடிக்கிறீங்க இது எல்லாம் சட்ட படி தப்பு" என அடித்தவனை இழுக்க,

அடித்தவனில் ஒருவன் " வந்துட்டாரு டா சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் நீதி சொல்ல, வந்தோமா சண்டையை பார்த்தோமனு போய்கிட்டே இருக்கணும் இங்குன கருத்து எல்லாம் சொல்ல கூடாது சரியா கிளம்பு கிளம்பு" என அவனை அப்புறபடுத்த முயல,

"டேய் நீங்க சொன்னாலும் சொல்லட்டியும் நானு சுப்ரீம் கோர்ட்லதேய்ன் வேலை பாக்குறேன் வக்கீலா" என்றான் கெத்தாய்,

"அதுக்கு என்ன இப்போ" என்றவன் மீண்டும் அடிக்க துவங்க,

"என்ன டா நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்னமோ அவனை போட்டு அடிச்சிகிட்டே இருக்க "என அடித்தவன் ஒருவனின் கையினை பிடிக்க,

"டேய் போனா போக மாட்டியா சும்மா லந்து பண்ணிக்கிட்டு" என கணேஷை கையை மடக்கி பிடித்த படி தள்ளி விடவும் வெற்றி வந்து அவனை பிடிக்கவும் சரியாய் இருக்க,

வெற்றி கணேஷை தள்ளி வைத்து விட்டு "அடிங்க ஏன் டா நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளுகளா! ஒரு வக்கீலேயே அடிப்பிங்களோ!" என தன் வேட்டியை மடித்து கட்டி மீசையை முறுக்கி விட்டபடி கணேஷை அடித்தவனை அடிக்க,

அந்த கூட்டமே நிசப்தமாய் போக அனைவரும் வெற்றியை பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களின் அமைதியில் கணேஷ் அருகிக்கிருந்த பெரியவர் ஒருவரிடம் "ஏன் எல்லாரும் அமைதியாய் நிக்கிறீங்க?" என கேட்க ,

"இல்லை அதே வே... வேஷ்டி, சட்டை அ... அய்யா ஆனா இவ்ளோ சி.... சின்ன வயசா என் கண்ணால ந... நம்ப முடியலை" என திக்கி திணறி கூறியவன் மயக்கமாக,

"என்ன டா சொல்றங்கே" என வெற்றியை பார்க்க, அவனுமே குழப்பமாய் கூட்டத்தை பார்த்த படி தான் நின்றான்,
யாராவது அடிக்க வருவார்கள் திருப்பி அடிக்கலாம் என பார்த்தா யாரும் அவனை அடிக்காமல் இவனை ஆராய்ச்சியுடன் பார்ப்பது புரிய,

கணேஷ் மெல்ல அவனிடம் வந்து "ஏண்டா எல்லாரும் உன்னை இப்படி பார்க்கிறாங்கே" என வெற்றியை பார்த்தவன் "டேய் பங்கு வேஷ்டியை இறக்கு இதைதேய்ன் இப்படி பாக்குறாங்கே போல, நீ வேற ராஜ்கிரண் கணக்கா தொடை தெரியுர மாதிரி கட்டிகிட்டு" என கூற,

அதே நேரம் ராமகிருஷ்ணன் கீழே இறங்கி" வெற்றி" என அழைத்து உள்ளே வா என்பதை போல் செய்கை செய்ய,கூட்டமே திரும்பி பார்த்து அவரக்ளுக்குள்ளேயே சலசலத்து கொண்டது
வெற்றியும் வேஷ்டியை அவிழ்த்து விட்டு ஒரு முறை அனைவர் மீதும் பார்வையை செலுத்தியவன் பின் கூலர்ஸை எடுத்து மாட்டி தன் தோள்களை குலுக்கியவன். "ஏண்டா என்ன பிரச்சனை டா எதுக்கு சண்டை போட்டாங்கே?" என கனேஷிடம் கேட்க
"யாருக்கு தெரியும், அதேதேய்ன் டா கேட்டேன். அதுக்கு போய் அடிக்கிறாங்கே"என்றவன் "ஆமா அது என்ன டா உன்னை பார்த்ததும் அமைதி ஆயிடாய்ங்கே!?" என கேட்க,

வெற்றி அவனை பார்த்து சிரித்த படி காரினுள் ஏற அந்த கூட்டமே ஒதுங்கி நின்று வழி விட்டது.

கணேஷ் உடனே " என்னடா நடக்குது இங்க" என்றான் வழி விட்டவர்களை பார்த்து கொண்டே," ஏன் டா இப்படி இருக்குமோ! ஒரு வேலை வேஷ்டி சட்டை போட்டதும் பெரிய நாட்டாமை நெனைச்சுடாய்ங்களோ!"என கேட்க,

அவன் கூறிய தினுசில் ராமகிருஷ்ணன் கூட சிரித்த படி செல்லும் வழியை சொல்ல, கார் நின்றது ஒரு பெரிய பங்களாவின் முன்னால், அது பங்களா என்று சொலவதை விட ஓரு மளிகை என்றே சொல்ல வேண்டும்.

வண்டியை நிறுத்த சொல்லி இறங்கியவர் "வெற்றி வா" உள்ளே என அழைக்க,

"ஏண்டா இதுதேய்ன் கிளைன்ட் வீடா! ச்சே இது வீடு இல்லை அரண்மனை, இவ்ளோ பெரிய ஆளுக எல்லாம் பி. பி தெரிஞ்சு வச்ருக்காரு பாரேன் விடு இனி பாரு என் பெர்பாமண்ஸை காலுல விழுந்தவது இவரை விட பிடிக்கணும் பங்கு,நீ உன்னோட நீதி நியாயம், பஞ்சாயத்து இது எல்லாம் பண்ணாம கமுக்கமா இரு" என சொல்லி கொண்டே இருவரும் இறங்கி வர,

வேகமாய் வந்த பெண்ணொருத்தி "அய்யா அங்குனயே நில்லுங்க அம்மா வாறாங்க" என கூற,
'உங்க அம்மாக்கு யேன் நாங்க இங்க நிக்கணும் .அத்தேய்ன் இவ்ளோ பெரிய கதவு இருக்கே, அவுக ஒரு பக்கம் போனா நாங்க ஒரு பக்கம் போயிக்குறோம் "என கணேஷ் உள்ளே செல்ல

"உங்களை யாரு நிக்க சொன்னா,நீங்க உள்ளார போங்க, நான் அய்யவே நிக்க சொன்னேன்" என கூற,

கணேஷ் திரும்பி பார்க்க அங்கே வெற்றி நின்று கொண்டிருந்தான்."என்ன டா வேஷ்டி கட்டினா இப்படிதேய்ன் மரியாதை கொடுப்பாங்களா என்ன ? இது நமக்கு தெரியாம போச்சே "என கூறும் போதே,

ஆரத்தி தட்டுடன் அழகம்மை வெளியில் வர வெற்றியை பார்த்ததும் " அய்யா நல்லா இருக்கிகளா, அப்படியே எங்க பெரியவரும் சின்னவரும் கலந்த மாதிரி இருக்கீங்க,அம்மா நல்லா இருக்காகளா!" என கேட்டு கொண்டே ஆரத்தி எடுத்தவர், அவன் முகத்தினை தடவ வெற்றி சற்று குழப்பம் மேலோங்க அவரை பார்த்த படி இருந்தான்.

ராமகிருஷ்ணன் உள்ளே சென்றவர் திரும்பி வர அழகம்மை அவரை பார்த்து " வா கிருஷ்ணா அய்யாவை தேடுறீயா, அய்யா இப்போதேய்ன் வெளியே போனாக"என கூற

ராமகிருஷ்ணன் புரியாமல் அவரை பார்த்தார்."இன்னிக்கு பெரியம்மா நினைவு நாள்லே மறந்துட்டியா!' என கூற,
"ஓ வேற நெனைப்புல மறந்துட்டேன்" என்றவர் "சரி நாங்க உள்ளாரா இருக்கோம் ,காபி எடுத்துட்டு வாங்க அக்கா வெற்றிக்கு மட்டும் கருங்காபி"என கூறி சென்றார்.
"வா வெற்றி" என அவனை அழைத்து செல்ல,வீட்டினுள்ளே இருந்த பிரமாண்டம் அவர்களை வியக்க செய்ய கணேஷ் உடனே "ஏண்டா உனக்கு எதுனாச்சும் புரியுது,உன்னை பார்த்து ஏன் எல்லாரும் இப்படி மரியாதை கொடுக்காங்க"என்றவன் உள்ளே மாட்டியிருந்தமிருகங்களின் தலைகளை பார்த்து "ரொம்ப நாளா எனக்கு ஒரு டௌட் டா வெற்றி இந்த மாதிரி மாளிகையில எல்லாம் இப்படி செத்த மிருகங்கள் தலையை கொண்டாந்து மாட்டுறாங்கே, யாராச்சும் கொன்னதை போய் தெரியாம தூக்கிட்டு வந்திருவங்களா இல்லை ரூவாய்க்கு ரெண்டுன்னு வாங்கிட்டு வந்திருப்பாய்ங்களா!"என கூற, வெற்றி பதில் இல்லாமல் போக திரும்பி பார்த்தான்.

வெற்றி எதையோ வெறித்து பார்த்த படி நிற்க,"அப்படி என்னத்தை பார்குற?"என திரும்பி பார்த்தவன் அதிர்ந்து "டேய் என்ன டா உனக்கு ஓல்ட் கெட் அப் போட்ட மாதிரி இருக்காரு, ஒரு சில வித்தியாசத்தை தவிர அப்படியே இருக்காரு, என்னடா நடக்குது இங்க ?என்றவன் சற்று திரும்ப அங்கே இருந்த மிருக தலைகள் அவனுக்கு இப்போது பயத்தை உருவாக்க,
"வெற்றி இது எதுவும் பேய் பங்களாவா இருக்குமோ! நம்ம கூட வந்த பி. பியையும் காணோம்.காபி கொண்டு வாரேன் சொன்ன அந்த அம்மாவையும் காணோம் வா டா போயிடுவோம்.கல்யாணம் ஆகாத பசங்களைதேய்ன் அதுகளுக்கு ரொம்ப பிடிக்குமாம் வாடா போயிடுவோம் "என வெற்றியை இழுக்க,

வெற்றி புகைப்படதின் மீது பதித்த பார்வையை எடுக்காமல் இருக்க,

"ஆத்தி இவன் யென் இப்படி அதையே பார்த்தபடி நிக்குறான், தாயே மீனாட்சி எப்படியாச்சும் எங்களை ஊர் கொண்டு போய் சேர்த்துடுமா" என அலறும் போதே உள்ளே வந்த ராமகிருஷ்ணன் "ஏண்டா இப்படி சத்தம் போடற இங்க இப்படி எல்லாம் கத்த கூடாது "என்றவர் வெற்றயை பார்க்க,

வெற்றியும் அவரை தான் பார்த்தவன் பின் மெதுவாய் போய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த படி கூர்மையாய் அவரை பார்த்து அவன் மீசையை திருக,

"வெற்றி" என்றார்

அவனிடம் பதிலில்லை இந்த சூழ்நிலையிலும அவனின் அமர்த்தலான பார்வை அவரை வியக்கதான் செய்தது."என்ன நடந்துச்சுன்னு கேக்குறனா பாரு இவன் அவருக்கு மேல" என நினைத்தவர் அவன் அருகில் சென்று "வெற்றி அவர்" என நிறுத்த, நிமிர்ந்து பார்த்தவனிடம் பதிலில்லை மேலே சொல்லு என்பதை போல் பார்க்க,

"அவர் இந்திய அரசாங்கம் ஜமீன்தார் அரசை ரத்து செஞ்சாலும் இன்னும் இந்த ஊர் மக்கள் அவரை கேட்க்காம எதுவும் செய்ய மாட்டாங்க இப்போன்னு இல்லை எப்போவும்மே அவர் இந்த ஊருக்கு படி அளக்கும் தெய்வம் தான், என்னை மட்டும் இல்லை நெறைய பேரை ஏன் உங்க அப்பா கூட கடைசி ரெண்டு வருஷம் படிக்க வச்சது இவர் தான் உங்க தாத்தா ராஜவேலு பாண்டியன்" என முடிக்க,

வெற்றியிடம் பெரிய அதிர்ச்சியில்லை அவன் இதை ஏற்கனவே யூகித்த ஒன்று தான் என்பதால் அமைதியாய் அழுத்தமாய் அவரை பார்க்க,
ராமகிருஷ்ணன் அவன் கையில் புகைப்படம் ஒன்றை திணிக்க, அதில் அவன் கண்கள் குழப்பமாய் வியப்படைய,
கணேஷ் தான்" அப்படி என்ன தான் அதுல இருக்கு இப்படி பாக்குறான்" என சற்று எட்டி வெற்றியின் கையிலிருந்த புகை படத்தை பார்த்தான்.

அதில் ராகவன் ஒருபுறமும் ராமகிருஷ்ணன் மறுபுறமிருக்க இருவர் மீதும் கைபோட்டு ஜெயவேல் பாண்டியன் சிரித்த படி நின்று கொண்டிருந்தார்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top