JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-6

Suhana

Well-known member

அத்தியாயம் 6:

சாரு சற்று பதட்டத்துடன் ஐ. ஸீ. யூ கதவின் கண்ணாடி தடுப்பின் வழியில் பார்க்க,அவள் தந்தையின் முகத்தில் இருந்த வேதனை அவளையும் கலங்க செய்தது.

எப்போதும் அவரின் தீர்க்கமான கண்கள் அவள் விரும்பும் ஒன்று அதை அவரிடம் சொல்லவும் செய்வாள்.அவள் சொல்லிய பின் அவர் தலை கலைத்து சொல்லும் 'சில்லி கேர்ள்' அத்தனை விருப்பம் அவளுக்கு.

"சாரு பாரு டா ஜெய்யை" என உரக்க பேசிய படி வந்தார் நீலகண்டன் ரிஷியின் தந்தை கூடவே ரிஷியும்,விழிகளில் வழிந்த கண்ணீரை துடைதவள் ஒரு பெருமூச்சினை விட்டு "யா அங்கிள் வெண் இட்ஸ் ஹாப்பன் "என்றாள்.

"அதே ஏன் கேக்குற நானும் அவனும் பிசினஸ் விஷயமா பேசிட்டு இருந்தோம்.தீடீர்னு நெஞ்சை புடிச்சிக்கிட்டு மயங்கி விழுந்துட்டான் மா" என கூற,

சாருவின் பாவனையில் எதையும் உணர முடியவில்லை அவரால், 'அப்படியே அப்பன் மாதிரி என்ன யோசிக்குதுன்னு தெரியுதா பாரு"என்றவர் மகனை திரும்பி பார்க்க அவனோ அங்கிருந்த செவிலி பெண்களை நோட்டம் விட்ட படி இருந்தான்' கிரகம் நான் பெத்ததை பாரு இது எல்லாம் எப்படி உருப்பட போகுதோ 'என நீலகண்டன் யோசிக்கும் போதே டாக்டர் உள்ளே வர, சாரு அவரிடம் விரைந்தாள்

"டாக்டர் ஹாவ் இஸ் மை டேட் ?"என கேட்க,

"யா பைன் மா நீங்க உள்ளே போய் பாருங்க" என அங்கே பதட்டமாய் நின்ற அலீஸிடம் கூறி,சாருவிடம் "நீங்க என்னை வந்து பாருங்க"என கூறி சென்றார.

சாரு டாக்டரை காண அவர் அறைக்கு செல்ல, அவளை பார்த்ததும் "சாரு உங்க அப்பாக்கு இப்போ வந்திருக்கிறது ரெண்டாவது அட்டாக் அண்ட் அவருக்கு ஹார்ட்ல ப்ளாக் வேற இருக்கு ,இப்போ இருக்குற கண்டிஷன்ல அவருக்கு அப்பேரஷன் பண்றது ரிஸ்க் ,இனி நீங்க அவரை ரொம்ப கேர்புல்லா பார்த்தாகனும் ஹோப் யூ கெட் தட் " என்றார்.


அவர் கூறியதை கேட்டவள் ஆழ்ந்த பெருமூச்சினை விட்டு "யெஸ் டாக்டர் ஐ டேக் கேர் "என கூறி சென்றாள்.

தந்தையை காண உள்ளே சென்றவள் அவர் அருகில் அமர்ந்து அவரின் கைகளை பிடிக்க அவரிடம் அசைவுகள் இல்லை. தலையை கவிழ்ந்த படி அவர் அருகில் படுக்க அவர் கைகள் மெல்ல அவள் தலை கோதியது.

"மதிம்மா "என்ற அவள் குரல் பிசிறோடு ஒலிக்க,
"டேட் "என நிமிர்ந்தாள்.

கம்பீரமாய் பார்த்த அவரின் கண்கள் கலங்கிய போது சாரு அவர் கண்ணீரை துடைத்து" டேட் யூ வில் பி அல்ரைட் சூன்" என்றாள்

"ஐ நோ"என்றார்,பின் அவர் சிரிக்க முயல அவர் மீசையை முறுக்கி விட்டு" மை பப்பா இஸ் ஆல்வேஸ் ஸ்ட்ரோங்" என கூறி, இருங்க "உங்க லவ்வை அனுப்பி வைக்கிறேன்" என கூறி வெளியில் சென்றாள் அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட,


*****

வெற்றி கையிலிருந்த புகைப்படத்தை வெறித்து பார்த்தான்.

"எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கறது ஜெயவேல் பாண்டியன் , ஒரு சில குணத்தில நீயும் ஜெய் போல தான் வெற்றி உன்னோட கிண்டல் கோபம் அழுத்தம் இப்படின்னு எல்லாமே" என்றவர் "சொல்ல போனா ராகவனுக்கு இதுல ரொம்ப பெருமை தான்" என்றார் சிரித்து கொண்டே,
"அப்போ வெற்றியோட அப்பா யாரு சார்?" என்றான் கணேஷ் திடீரென சற்று பதற்றமாய்,

ராமகிருஷ்ணன் புரியாமல் கணேஷை பார்க்க,

"சொல்லுங்க சார் வெற்றி அப்பா யாரு?" என்றான் மீண்டும்,

வெற்றியும் சற்று கலக்கமாய் பார்க்க, ராமகிருஷ்ணன் புரியாமல் இருவரையும் பார்த்தவர் "ஏன் இப்படி அபத்தமா கேள்வி கேக்குற"என்றார்.


"யாருன்னு சொல்லுங்க" என மீண்டும் கேட்க,

'நீ என்ன லூசா!'என்பதை போல் பார்த்து "ஏன் ராகவன் தான் ஏன் உனக்கு இந்த மாதிரி ஒரு கேள்வி?" என்றார்.

"அப்போ இவரு யாரு, அந்த போட்டோல இருக்குற அவரு யாரு "என மீண்டும் கேட்க,

"நீ எல்லாம் எப்படி வக்கீலுக்கு படிச்ச,நான் தான் சொன்னனே அது அவன் தாத்தா இது அவன் மாமா" என்றார்

"என்னது மாமாவா! ,பின்ன எப்படி வெற்றி அவுகளை மாதிரி இருக்கான்".

"ஏன் நீ தாய்மாமன் மாதிரி ,தாத்தா மாதிரி இருக்குற புள்ளைகளே பார்த்ததே இல்லையா!"என்றார்.

"அப்படியில்லை "என கணேஷ் இழுக்க,

"என்ன அப்படியில்லை "என்றார் சற்று கோபமாய் மீண்டும்,

'ஆமா என்கிட்ட மட்டும் நல்லா வாதாடுங்க கோர்ட்ல கோட்டை விட்ருங்க' என மனதில் நினைத்தவன்.'என்னை காப்பதேன்டா!'என்பது போல் வெற்றியை பார்க்க,

வெற்றி சற்று செரும,

"பாருங்க அவன் பிளாஷ்பேக் கேட்க ரெடி ஆயிட்டான் அதை கண்டினியூ பண்ணுங்க நமக்குள்ள என்ன ,அப்புறம் கூட திடிக்கலாம் "என்றான் கணேஷ்.

ராமகிருஷ்ணன் வெற்றியின் புறம் திரும்பி."இவனை எல்லாம் எப்படி சமாளிக்கற" என்றவர்,கணேஷிடம் " இனி நடுவுல ஏதாவது பேசுன அப்புறம் இருக்கு உனக்கு "என்றார்.

"ம்ம்க்கும் இந்த டௌப்ட் வந்ததே அவனுக்குதேய்ன்,இதுல என்னை வக்கீலா கேக்குறாரு" என்று முனக,

கணேஷை பார்த்து முறைத்த படி அவர் சென்று வெற்றியின் அருகில் அமர்ந்து" ஜெய் உன்னோட மாமா,அவனை மாதிரி ஒருத்தவனை பார்க்க முடியாது அவ்ளோ நல்லவன் அந்த அளவுக்கு கோபகாரனும்" கூட என சிரித்தார்.

"அவன் எந்த அளவுக்கு நல்லவேன்னா,அவுக வீட்ல வேலைக்கிருந்த பையன் நல்லா படிக்கறான்னு தெரிஞ்சு அவன் கூடவே கூட்டிட்டு போய் படிக்க வைக்கிற அளவுக்கு நல்லவன்" என்றவர் வெற்றியிடம் திரும்பி, "அது நான் தான்" என்றார்

"அப்போ எல்லாம் படிக்கணும் அப்ப்டிங்கறதே பெரிய விஷயம் வெற்றி,எனக்கு படிக்கணும் ரொம்ப ஆசை அதுவும் அய்யாவை பார்க்க இங்குன வர வக்கீலா பார்த்தா இன்னும் ஆசை நான் நல்ல மார்க் எடுத்தும் என் குடும்ப சூழ்நிலை என்னை படிக்க வைக்கிற அளவுக்கு இல்லை" ,

இதை தெரிஞ்ச ஜெய் அய்யாகிட்ட வந்து அதாவது உன் தாத்தா கிட்ட "கிருஷ்ணா படிக்கணும் நெனைக்கிறான் அதுவும் வக்கீல் ஆகணும்னும் படிக்க வைங்க" என கூற

ராஜவேல் பாண்டியன் இங்குன வா என அவனை முன்னால் வர சொல்ல, கிருஷ்ணன் சற்று பயந்த படி முன்னால் வந்தான்

"நீ அவன்*****பையன் இல்லை "என்றவர்,நம்ம பையத்தேன் என்று அழகு என அழைக்க,

"அய்யா "என பயந்த படி வந்தார் அழகம்மை ராமகிருஷ்ணனின் அக்கா,

"இவரு உன் தம்பி தானே!"என கேட்க,

அவரின் மரியாதையான அழைப்பில் குழம்பி போய் "ஆ.... ஆமா "என்றார்.

"ம்ம்ம்ம் சரிதேய்ன் "என்றவர் ஜெய்யிடம் திரும்பி முடிவா இப்போ என்ன சொல்லுற?"என கேட்க,

அதே நேரம் சரோஜா உள்ளே வர கிருஷ்ணனை பார்த்ததும் "கிருஷ்ணா அண்ணா என்ன இங்குன நிக்கிறீக!" என தந்தையை பார்த்து கொண்டே கேட்டு அவரிடம்" இவுகதேய்ன் எனக்கு கணக்கு சொல்லி கொடுத்தது அப்பா " என கூற,
"என்ன மங்கை அப்படியா!" என்றார் ராஜவேல் பாண்டியன்.

"ஆமா அப்பா அண்ணன்தேய்ன் சொல்லி கொடுத்தாக" என கூறினார் சரோஜா என்ற தெய்வ மங்கை நாச்சியார்.(தந்தைக்கும் தமயனுக்கு மட்டும் மங்கை அது அவர்கள் குடும்பதில் முதலில் பிறக்கும் பெண்களுக்கான பெயர் என்பதால் அதனை மற்றவர்கள் கூப்பிட அனுமதியில்லை,)

"சரித்தேய்ன் எல்லாரும் சப்போர்ட்டா ,இவருக்கு"என்றவர் தன் அருகில் நின்றவரிடம் "இவுகளுக்கும் சேர்த்து சீட்டு சொல்லு அந்த வாத்தி கிட்ட "என தன் மீசையை முறுக்கிய படி கூற,

"அ... அய்யா நான் வக்கிலுக்கு படிக்கணும் ஆசைப்படுதேய்ன்" என தட்டு தடுமாறி கூறி முடித்தார் கிருஷ்ணன்.

"ஓ... என்றவர் கிருஷ்ணனை பார்த்து சரிதேன் இனி இங்குன உள்ள கணக்கு வழக்குகளை நீங்களே பார்த்துக்குவீக ,வெளியில இருந்து வக்கீல் வர வேணாம் அப்படி தானே!" என்றவர், அருகில் நின்ற கணக்கரிடம்~ அப்படியே செஞ்சுடுங்க"என கூறி சென்றார்.

ராஜவேலு பாண்டியன் சொன்ன படியே இருவரையும் மதுரை அனுப்பி படிக்க வைத்து இருவரும் தங்க வீட்டையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

இரண்டு வருடம் கடந்த நிலையில் இருவரும் ஒரு நாள் மீனாட்சி அம்மன் கோவிலை சுத்தி வர,

ஜெயவேல் அருகில் வந்த கிருஷ்ணனிடம் "என்னத்தேய்ன் சொல்லு கிருஷ்ணா நம்மாளுக மாதிரி யாரலையும் கட்டடம் கட்ட முடியாது டா"என அங்கிருந்த தூண்களையும் அதன் நான்கு கோபுரங்களையும் பார்த்து சொல்ல,

"நீ ஒரு என்ஜினீயர்ன்னு நான் நம்புறேன் விடும், எப்போ கோவிலுக்கு வந்தாலும் இதையே சொல்லிக்கிட்டு" என வாங்கிய கடலையை தின்ற படி சொல்ல,

"ஏன் வக்கிலு சாட்சியம் இல்லாம எதையும் நம்ப மாட்டீங்களா!" என கிருஷ்ணனை வாரிய படி நிமர்ந்தவர் கண்களில் தெரிந்தது கையில் பையுடன் அமர்ந்திருந்த ராகவன் தான்.

கிருஷ்ணன் பேசி கொண்டே முன்னால் செல்ல, கூடவே வந்த ஜெய் தேங்கி நிற்கவும்" என்ன பாண்டியரே இங்குனயே நின்னுட்டிங்களே என்ன விஷயம்?" என கேட்க,

"அங்க பாரு டா "என கிருஷ்ணனிடம் காண்பிக்க அவர் பார்த்து "யாரோ பையன் உக்காந்திருக்கான்" என கூற,

"ப்ச் அது என் கூட படிக்கிற பையன்தேய்ன்,ஆனா ஏன் இங்கன உக்காந்துருக்கான் "என கேட்க,

"நம்மளை மாதிரி காத்து வாங்க வந்திருப்பான் விடும் வாரும் நம்ம போவோம் "என கூற,

"சரியென "சென்ற ஜெயவேல் பாண்டியன் மீண்டும் ராகவனை நோக்கி சென்றவர் இரு எனக்கு ஏதோ தப்பா தெரியுது என்னனு கேட்டு போவோம் "என செல்ல,

ராகவன் அருகில் சென்று "உன் பேரு ராகவன் தானே இந்நேரத்துல இங்க என்ன பண்றவே?" என கேட்க

ஏற்கனவே அமைதியான சுபாவம் உள்ள ராகவன் தீடிரென வந்த ஜெயவேல் பாண்டியனின் அழுத்தமான குரலில் பயந்து எழுந்தவர்.

..."ஒ..ஒன்டி லே...லேதண்டி"... பதற்றத்தில் கூறியவர்," ஒ.. ஒண்ணுமில்லைங்க" பின் மெதுவாய் தமிழில் கூற,

"ம்ம்ம்... ஒன்னுமில்லமாலா இப்படி இந்த நேரத்துல பையோட நிக்கற" ,அவரின் தடுமாறிய தமிழில் புரிந்தவர் "ஹாஸ்டல் தானே போகணும் வா கொண்டு போய் விடுறேன் "என தன் மீசையை நீவிய படி ஒரு கையால் வேட்டியை மடித்து கட்டி கொண்டே ஜெயவேல் சொல்ல,

"இ..இல்லை.. நா ஊருக்கு வெ... வெல்த்தானு.. நா.. நான் ஊருக்கு போறேன்" என ராகவன் கூற,

"இன்னும் நாலு நாலுல பரிட்சையை வச்சிக்கிட்டு என்ன ஊருக்கு போறேன் ஊறுகாய்க்கு போறேன்னு சொல்லிட்டு இருக்க கிளம்பு" என கூறினார்.

அப்போதும் கிளம்பமால் நின்ற ராகவனை பார்த்து ,"ஏன் பயலுக எதுவும் லந்து பண்றாங்களா சொல்லு" என கேட்க,

"இ.. இல்லை" என கூற,

"அடிங்க என்ன பிரச்சனை சொல்லுங்கிறேன் இல்லை நொல்லைன்னு சொல்லிக்கிட்டு" என கோபமாய் கேட்க,

"நான் ஹாஸ்டல் போனாலும் யாரும் என்ன உள்ள சேர்க்க மாட்டாங்க" என ராகவன் சொல்ல,

"அது ஏன் ?"என ஜெயவேல் கேட்டார்.

"ந... நான் இன்னும் இந்த முறை பணம் கட்டலை "என்றார் கீழே குனிந்து அப்போது தான் அவரின் உண்மை நிலை புரிய அதுவரை ஏதோ ஒருவன் என பார்த்து கொண்டிருந்தவர்,ராகவனின் நிலை தன்னை போல் இருக்க அவனின் சூழ்நிலையில் கிருஷ்ணனின் கண்கள் அறுதலாய் அவரை தழுவியது.


"என்னாச்சு?" என ஜெயவேல் பண்டியன் கேட்க,

"இல்லை எப்போவும் அப்பா கரெக்ட்டா பணம் அனுப்பிருவாங்க. இந்த மூணு மாசமா நைனாக்கு உடம்பு சரியில்லை அதான் அம்மா என்னை போதும் படிப்புன்னு வர சொல்லிடாங்க.எனக்கு படிக்கணும்னா ரொம்ப புடிக்கும் இப்போ என்ன பண்றது "என வருத்தம் மேலோங்க ராகவன் கூற,

"சரி சரி நட வீட்டுக்கு போய் பேசுவோம்" என அவரின் பையை தூக்கி கொண்டே ஜெயவேல் சொல்ல,

எங்கே என ராகவன் புரியாமல் முழிக்க, கிருஷ்ணன் ராகவன் மேல் கைபோட்டு" அதாவது நீங்களும் எங்க கூட வரணும் சொல்றார்" என கூற,

ஏனோ உரிமையாய் தோளில் கைபோடும் கிருஷ்ணனை பிடித்து போக,சற்று தயக்கமாய்"இல்லை பரவாயில்லை நா... நான் போறேன்" என ராகவன் கூற,

"அச்சோ உனக்கு தெரியாது ஜெய்க்கு கோபம் வந்தா சட்டுனு அடிச்சுடுவான் அவன் அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி இருக்கும் அப்புறம் உன் இஷ்டம் "என கிருஷ்ணன் சொல்ல,

ராகவன் நிமிர்ந்து ஜெய்யை பார்க்க, அவர் நின்ற கோலம் கண்டிப்பாய் அவர் இதை செய்வார் என அடித்து கூறியது.

ராகவன் உடனே சரியென கிளம்பி சென்றார்.அழைத்து வந்தவர் ராகவனின் கல்லூரி கட்டணத்தை கட்டி தன்னோடு தங்கவும் வைத்து கொண்டார்.

ஒவ்வொரு வார இறுதியிலும் எப்போதும் போல் ஊர் செல்ல இருவரும் கிளம்ப ஜெய் ராகவனையும் கிளம்ப சொல்ல,

"வேணாம் நான் வரலை" என்றார் ராகவன்

"இவனை பாரு டா "என கிருஷ்ணனிடம் சொன்னவர் "ஒழுங்கா கிளம்பி வர புரியுதா!" என முன்னால் செல்ல,

கிருஷ்ணன் வந்து" என்னடா உனக்கு அவன் வீட்டுக்கு போகலைன்னா பரவாயில்லை என் வீட்டுக்கு வா" என கூறி கையோடு அழைத்து சென்றார்.

ராகவன் ஜெய்யின் வீட்டின் பிரம்மாண்டத்தை மிரண்டு பார்க்க,கிருஷ்ணன் அவர் காதில் வந்து ஏன் இப்படி பார்க்கிற என கேட்க,

"பெரிய பணக்காரர்கள் நினைச்சேன் ஆனா இப்படி அரண்மனை எல்லாம் நினைக்கலை ஆனா அப்படி இருந்துமே ஜெய் எப்படி இப்படி இருக்காங்க?" என கேட்க,


"அது தான் ஜெய் ஏன் ஜெய் மட்டுமில்லை அவுக தங்கச்சியும் அப்படிதேய்ன் "என்றார் கிருஷ்ணன்."சரி வா ஒரே கூட்டமா இருக்கு உள்ள ஏதோ பஞ்சாயது போல நாம இப்படி போக வேணாம் "என பின் வழியே கூட்டி செல்ல,

கிருஷ்ணன் முன்னால் செல்ல, பின்னால் வந்த ராகவன் எதன் மேலோ மோத வந்து பின் தடுமாறி நின்று நிமிர்ந்து பார்த்தார்.

யார் மீதோ இடிக்க போகிறோம் என நினைத்து கண்களை மூடி நிமிர்ந்த சரோஜா அவரை பார்த்த படி நிற்க,

ராகவன் பின்னால் வராமல் போனதால் கிருஷ்ணன் தேடி வந்து இவர்கள் இருவரும் நிற்பதை பார்த்து,

"என்னம்மா இப்படி பார்கற ?"என சரோஜாவிடம் கேட்க,

"யாருண்ணே இது சுண்ணாம்புக்குள்ள முக்கி எடுத்த மாதிரி இப்படி இருக்காக "என ராகவனின் நிறத்தை பார்த்து சரோஜா கூற,

கிருஷ்ணன் சரோஜா கேட்ட பாவனையில் சிரித்த படி "இவன் ராகவன் ஜெய் கூட படிக்கிறான்" என கூற,

"ஓ... இவுக தானா அது" என்றவர் கண்கள் அவரை நாணமாய் எடை போட்டது.

முதன் முதலாய் ஒரு பெண்ணின் பார்வை ஆர்வமாய் தன்னை எடை போடுவதை கூச்சமாய் பார்தார் ராகவன்.

கிருஷ்ணன் அதனை உணராமல் "எங்கம்மா அக்கா ?"என கேட்க,

"உள்ள தான் அண்ணா" என்ற சரோஜா" உள்ளார வாங்க"என பார்வையை ராகவன் மீது வைத்து இருவருக்கும் பொதுவாய் கூற,

இருவரும் உள்ளே செல்ல கூட்டம் சற்று குறைந்திருந்தது, ஜெயவேல் ராகவனை காட்டி" அப்பா இதுதேய்ன் நான் சொன்ன பையன் நல்லா படிப்பான்" என தந்தையிடம் கூற,

ராஜவேலு பாண்டியன் கண்கள் ராகவனை அளவிட ஜெயவேலை பார்த்து" நம்ம பக்கம் புள்ளை இல்லையோ!"என தன் மீசையை நீவிய படி கேட்க,

"அ..அவுனு சார். நேனு ஆந்திரா.. ச்சா.. ச்சால தாங்க்ஸண்டி சார்.. இ.. இந்த உதவி நா..நானு எப்பவும் மறக்கமாட்டேன்" ஒருவாறு சமாளித்து தெலுங்கிலும், தமிழிலும் மாற்றி மாற்றி பேசி அவர் படிப்பதற்கு உதவி செய்தமைக்கு நன்றி கூற, ராஜவேலு பாண்டியன் கண்கள் அழுத்தமாய் பார்த்து கொண்டே பதில் இல்லாமல் எழுந்து போனார்.

ஜெய் கண்களால் நான் பார்த்து கொள்ளுகிறேன் என ராகவனிடம் கூறி சாப்பிட அழைத்து செல்ல,

அங்கே அழகம்மை உணவை எடுத்து வைத்த படி இருக்க, கிருஷ்ணன் அருகில் சென்று "அக்கா இது ராகவன்" என கூறியவர் "ராகவா இது என் அக்கா என கூறி சரோஜாவை காண்பித்து உனக்கு சரோஜாதேய்ன் தெரியுமே " என கூற,

"அய்யா சாப்பிட வாங்க" என ஜெயவேலை அழைக்க,

அவர்கள் நட்பு என்பது கூடம் வரை மட்டுமே இன்னும் அங்கிருக்கும் நடைமுறைகள் மாறாதிருக்க,கிருஷ்ணன் "வா டா ராகவா என கீழே அமர "கூற

ஜெய் உடனே "கிருஷ்ணா ஒழுங்கா இங்க உக்காந்து சாப்பிடு சொல்லுதேன்" என்றவர்" அப்பா சாப்பிட்டாச்சா!" என சரோஜாவிடம் கேட்க,

"ம்ம்ம்ம் அய்யா சாப்பிடாக தம்பி" என்றார் அழகம்மை,"அப்புறம் என்ன எல்லாருக்கும் கீழேயே உக்கருவோம் "என அனைவரும் சரி சமமாய் அமர,

சரோஜா மகிழ்ச்சியில் விகசித்து கொஞ்சம் கூடுதலாகவே ராகவனுக்கு பார்த்து பார்த்து பறிமாற சரோஜாவின் அன்பில் நெகிழ்ந்து போய் அவரை பார்த்தார்.

அதன் பின் ஒவ்வொரு முறையும் ராகவன் வீட்டிற்கு வரும் போதும் சரோஜா முகம் மகிழ்ச்சியை பூசி கொள்ளும்,இதில் ராகவன் அறியாத ஒன்று சரோஜா ஜெயவேல் பாண்டியன் உடன் பிறந்த தங்கை என்பதை தான்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top