JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-7

Suhana

Well-known member

வெகு சில நேரங்கள் மட்டுமே ஜெய் கூட ராகவன் வருகை அறிதாய் இருக்கும்,ஏனோ அவர் வருகையை விரும்ப ஆரம்பித்தார் சரோஜா .அவர் பார்த்த ஆண்களில் ராகவன் தோற்றமும் அவரின் மென்மையான அனுகுமுறையும் கூட காரணமாய் இருக்கலாம்.இது எந்த மாதிரி ஓரு உணர்வு என அவரால் கணிக்க கூட இயலவில்லை .

சில முறை ராகவன் வரும் போது படிப்பில் சில சந்தகேங்களை கேட்டு கொள்வார்,இதனை பார்த்து ஜெய் கண்டும் காணாமல் போக ராஜவேலு பாண்டியன் அதனை கண்டித்து ஜெய்யை திட்டவும் செய்யவார்.

அவர் வராத போது ராகவன் சில சமயங்களில் சரோஜாவிற்கும் சில புத்தகங்களை கிருஷ்ணனிடம் கொடுத்து செல்வதும் நடக்கும்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு நாள் ஜெய், கிருஷ்ணனிடம் "மங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம்.பரிசம் போட வாராகலாம் அப்பா வர சொல்றாக,கிளம்பு போகலாம்" என்றார்.

"என்ன ஜெய் சொல்ற? இவ்வளவு சீக்கிரமேவா?" என்றார் கிருஷ்ணன்.

"அவளுக்கும் இருவது ஆகுது டா. கிளம்பு மாப்ள சென்னையாம்" என விவரங்களை கூறி கொண்டே இருவரும் கிளம்பி வெளியில் வர,ராகவன் புத்தகங்களோடு உள்ளே வரவும் சரியாய் இருக்க,

"நல்ல சமயமாத்தேய்ன் வந்திருக்க. கிளம்பு மங்கைக்கு தட்டு மாத்துறாக போகணும்" என ஜெய் கூற,

ராகவன் தயங்கியவர் பின் சரி நம்மளே புக்கை நேரில பார்த்து கொடுத்துடுவோம் என பின்னோடு சரி என்று கிளம்பி சென்றார்.

வீட்டினை நெருங்க, நெருங்க அதன் மின் விளக்குகளும் தோரணங்களும் அவர்களை வரவேற்றது.

ராகவன் இறங்கியதும் அரண்மனையின் அழகில் லயித்து போய் பார்க்க, ராகவன் தோளினை தட்டிய ஜெய் "என்னாச்சு ராகவா? இதுக்கே மலைச்சு போய்ட்டே மங்கை கல்யாணம் இந்த வீட்டுக்கே திருவிழா தான் சரி வா உள்ளே" என அழைத்து செல்ல,

உள்ளே இருந்த கூட்டத்தில் விழி பிதுங்கியது ராகவனிற்கு ஜெய் அனைவரையும் அவர் அவர் முறை சொல்லி அழைத்து பேசிய படி வர,கிருஷ்ணன் அனைவருக்கும் சிரிப்பினை தந்த படி வந்தார்.

ராஜவேல் பாண்டியன் அருகில் வந்து "ஏண்டா இங்கன இருக்கற மதுரைலயிருந்து வர இம்புட்டு நேரமா உனக்கு?" என்றவர்,"இன்னைக்கும் இவனை கூட்டிட்டு வந்துடியா? இருக்கறது முழுக்க நம்ம ஆளுக அவன் யாருன்னு கேட்டா என்ன சொல்றது?" என கடிய,

"அப்பா என் நண்பேன் சொல்லுங்க" என்றவர் திரும்பி,"எந்த ஆளுகளா இருந்தாலும் அவிய்ங்களும் மனுசங்கதேய்ன் அவிய்ங்க உடம்புலயும் ரத்தந்தேய்ன் ஓடுது" என கிளம்பி செல்ல,

அவர்கள் வீட்டு கணக்கர் வந்து "அதேய்ன் தம்பி சொன்னா கேக்காது தெரியுங்கள்ளே அய்யா. அதானே பாப்பாக்கு சீக்கிரம் முடிக்கறோம். விடுங்க அய்யா இன்னும் கொஞ்ச நாளுதேய்ன் பாப்பா கல்யாணம் முடிஞ்சு போயிட போகுது" என்றார்.


"ஆமா நல்லவேளை நீ இதை பார்த்து சொல்லலைனா என் குடும்ப மானம் போயிருக்கும் கணக்கு " என்றார் ராஜவேல் பாண்டியன்.

ஜெய் கிருஷ்ணனை பார்த்து, "கிருஷ்ணா நீ ஒரு எட்டு போய் பூக்கு சொல்லி இருக்காங்க. அதை பார்த்து என்னன்னு கேட்டுட்டு வா" என்றவர், ராகவனிடம் "நீ இங்க இரு ராகவா உனக்கு இங்குன எதுவும் புரியாது"என வெளியில் செல்ல,

ராகவன் குழப்பமாய் 'என்ன இது? இங்க ஏதோ திருவிழா மாதிரி இருக்கு? ஆனா அவளை காணோம்?' என வேலை செய்வோரை பார்த்து கொண்டே வர எதிரில் அழகம்மை வந்து கொண்டிருத்தார். "அக்கா" என அழைக்க,

"அட ராகவா எப்பய்யா வந்த? கிருஷ்ணா எங்க?" என கேட்க,

"நான் வந்து அரைமணிநேரம் ஆச்சு கா?"என்றார்.

"குடிக்க எதுனாச்சும் கொடுத்தாகளா?"என கேட்க,

"ம்ம்ம்ம்... "என்றவர்," அக்கா எங்க சரோஜா?"என கேட்க,

ராகவனை ஒரு மாதிரி பார்த்து கொண்டே," இன்னைக்கு எப்படி வெளில வர முடியும்?" என கூறும் போதே அவரை வேறு ஒருவர் அழைக்க,

"இதோ வாரேன்" என அழகம்மை சென்று விட்டார்.


ஓ... ஒரு வேளை இங்க நெறைய வேலை இருக்கோ!என நினைத்தவர்,சரி நாளைக்கு போகும் போது கொடுத்துடுவோம் என அவருக்கு வாங்கி வந்த புத்தகங்களை எடுத்து கொண்டு எங்கே செல்வது என யோசிக்க,

மேலே மாடியை பார்த்தவர் அங்க போவோம் இங்க ஒரே கூட்டமா இருக்கு என செல்ல, கிருஷ்ணன் எதிரில் வந்தார்.

"என்னடா இங்கேயும் புத்தகத்தை தூக்கிட்டு கிளம்பிட்ட எங்குன போற?"என கேட்க,

"சரோஜாக்கு புக் எடுத்துட்டு வந்தேன்,இப்போ இங்க வர முடியாதாம் அது தான் நான் படிக்கலாம்ன்னு எடுத்துட்டு போறேன்"

அவனை விநோதமாய் பார்த்தவர் " இனி இங்குன எப்படி வருவா?" என்றவர், "சரி பார்த்து போ "என கூறி சென்றார்.

ராகவன் மேலே மாடியில் அமர்ந்து புத்தகங்களை புரட்ட, இருள் கவ்வும் நேரம் என்றாலும் அங்கிருந்த தோரணை வெளிச்சங்கள் அதனை பகலாக்கி கொண்டிருக்க, அவர் சிந்தனையை ஆட்கொண்டது புத்தகம்.

அவர் புத்தகங்களில் மூழ்க,அவரை கலைப்பது போல் பெண்ணின் அழுகை சத்தம் கேட்க,

ராகவன் நிமிர்ந்து சற்று பயத்துடனே சுற்றி முற்றி பார்க்க, இவர் ஒரு புறம் இருக்க சற்று உள்புறமாய் ஒரு பெண் நிற்பது தெரிய யார் இந்த பொண்ணு எவ்ளோ நேரம் இங்க நிக்குது என்னன்னு கேட்போமா வேணாமா என நினைத்தவர்,வேணாம் என கீழே இறங்க எதனிக்க, மீண்டும் அப்பெண்ணின் அழுகை மற்றும் அவள் நின்றிருந்த இடம் தோற்றம் வேறு அவள் கீழே விழ போவது போல் தெரிய,
வேகமாய் அப்பெண்ணின் அருகில் சென்று "என்னங்க ஏன் அழறீங்க?"என கேட்க,

திடீரென கேட்ட ஆண் குரலில் மிரண்டு சற்று உள் செல்ல,அப்பெண் உள் செல்வது ராகவன் கண்களுக்கு அந்த அரை இருட்டில் கீழே விழ செல்வது போல் தோன்ற,

"ஏய் விழ போற!!" என கைபிடித்து இழுத்து வெளிச்சத்துக்கு கொண்டு வர, அப்போது தான் அப்பெண்ணின் முகம் தெளிவாய் தெரிய " சரோஜா" என்றவர் அழைக்க,

அதே நேரம் ராகவன் முகத்தை பார்த்து ஓ என அவர் அழ,"ஏய் என்னாச்சு? எதுக்கு இப்படி அழற சொல்லுமா!" என்றவர் கைகள் தானாய் அவர் கண்களை துடைத்தது.

"மங்கை" என கர்ஜித்து அவர்களை நெருங்கினார் ராஜவேலு பாண்டியன். கூடவே ஜெயவேல் மற்றும் கிருஷ்ணன்.

"நாந்தேய்ன் அன்னைக்கே சொன்னேனேடா !! நாயை குளிப்பாட்டி நடு வீட்ல வைக்காதேன்னு. இப்போ பாரு" என்றவர் கைகள் ராகவனை அடிக்க,

"யெப்பா எதுக்கு அவுகளை அடிக்கீறிக?" என்ற சரோஜா முன்னால் வந்தார்.

"எதுக்குனா கேக்குற?" என்றவர் கைகள் சரோஜாவை அடிக்க போக அன்னிச்சை செயலாய் ராகவன் தன் பின்னால் இழுத்து கொண்டார்.

இதனை பார்த்த ஜெயவேல் பாண்டியன் கண்கள் அவர்கள் இருவரை மட்டுமே பார்க்க,

ராகவன் எதுவும் புரியாமல் முழிக்க, அதே நேரம் ராகவன் மீது அடிகள் சரமாரியாக விழ ஆரம்பித்தது.கிருஷ்ணன் அவர்களை தடுத்து பார்த்தும் முடியாது என எண்ணியவர், ஜெயவேலிடம் சென்று," ஜெய் எதாச்சும் பண்ணு டா அடிச்சே கொன்றுவாங்க போல, அவன் குடும்ப நிலைமை உனக்கு தெரியும் தானே, அவங்க அப்பாவும் இறந்துட்டாரு. இப்போ அவுக குடும்பத்துக்கு இவன் மட்டுந்தேய்ன் என்றவர் "ப்ளீஸ் அவன் அப்படிபட்டவன் இல்லை எங்கேயோ தப்பு நடந்துருக்கு" என்றார்.

"எங்கேயோ இல்லை டா இங்கேதேயன்,அதுவும் இவன்தேய்ன் எல்லாத்துக்கும் காரணம்" என்றார் ராஜவேலு பாண்டியன் ராகவனை கை காட்டி,
"நான் இவனை கூட்டியாந்த அன்னைக்கே சொன்னேன். வேத்து ஆளா இருக்கான் இங்குன கூட்டியாராத எது செஞ்சாலும் வெளிலேயே செஞ்சு தொலைன்னு கேட்டானா!இங்குன அவன் வாரதும் இவ கூட பேசுறதும் சிரிக்கறதும்" என்றவர் கண்கள் ராகவனை கொன்றுவிடும் பாவனையில் முறைக்க, "அதுக்காகதானே இம்புட்டு அவசரமா இவளுக்கு கல்யாணத்தை முடிவு பண்ணுனேன் ஆனா இவன் வந்த நேரம் தொட்டு இவளை கேட்டு தேடி வந்து இப்போ எப்படி நிக்கிறான் பாரு" என்றார் ராஜவேல் பாண்டியன்.

ஜெயவேல் பாண்டியன் கண்கள் ராகவனை பார்க்க,
ராஜவேல் பாண்டியன் உடனே ஜெயவேல் பாண்டியனை பார்த்து அவனை அடிக்கறத்துக்கு முன்னாடி," உன்னத்தேய்ன் எதுனாச்சும் பண்ணனும்" என்றவர் "ஏண்டா நீ அவளுக்கு அண்ணன் தானே இல்லை வேற எதுவுமா?" என கேட்க,

"அப்பாஆஆ...."ஜெயவலின் கர்ஜனை குரலில் " போதும் நிறுத்துங்க இந்த கேள்வி நீங்க என்ன பார்த்து கேட்டதுக்கு அப்புறம் ஒரு நிமிஷம் இங்குன நிக்க மாட்டேன் உங்களை இனி அப்பான்னு கூப்பிட மாட்டேன்" என்றவர்,
ராகவனிடம் சென்று "உன்னை நான் கர்ணன் மாதிரி நெனைச்சேன் டா . ஆனா நீ!" என்றவர் கண்கள் ராகவனை பார்க்க,

"இல்லை ஜெய்!! நான் ....எனக்கு இங்க என்ன நடக்குதுன்னு புரியலை என்னை நம்பு" என கூற,

"மங்கை மேல இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சு உனக்கு? நீயும் கிருஷ்ணா மாதிரி தானே நான் நினைச்சேன்" என கூற,

"மங்கை!! அப்போ இது ஜெய் தங்கச்சியா!" என்றவர் கண்கள் இப்போது தான் வெளிச்சத்தில் சரோஜாவை பார்க்க அவர் அணிந்திருந்த உடையும் அவர் போட்டிருந்த நகைகளும் கண்ணில் பட, அதுவரை பிடித்திருந்த கையினை சட்டென்று விட போனார் ராகவன் அதனை இப்போது இறுக்கமாய் பற்றி இருந்தார் சரோஜா.


ராகவன் சுற்றிலும் என்ன நடந்தது என்று புரிய தொடங்க தான் செய்த செயலின் வீரியத்தில் கண்கள் சுழற்றியது.

ஜெய் இன்னும் இருவரும் பிடித்திருந்த கைகளை பார்தது தங்கையை பார்த்தார் அவர் முகத்தில் நின்ற தீவிரம் அவருக்கு எதையோ புரிய வைக்க,"ம்ம்ம்ம் என்றவர் மங்கை போயிடு இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்குன இருந்தாலும் நானே உன்னை கொன்டேபுடுவேன்" என கூற

"ஜெய்!!" என்று கிருஷ்ணன் அருகில் வர," போதும் எனக்குன்னு இங்குன நட்புன்னு யாரும் இல்லை போய்டுங்க" என கர்ஜிக்க,

அவரின் குரலின் தீவிரத்தில் கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் இழுத்து செல்ல, அவர்களை தடுக்க வந்த ஆட்களை பார்த்து அவர்கள் நின்றனர்.

"இப்போ அவுகளை போகவுடலைன்னா இங்குன என்ன நடக்குமுன்னு எனக்கே தெரியாது" என தன் வேஷ்டியை மடித்து கட்டி கூறிய ஜெயவேல் பாண்டியனின் குரலில் அனைவரும் தேங்க, ராகவன் கண்கள் மட்டும் ஜெயவேல் பாண்டியனை விட்டு அகலவில்லை.

அவர்கள் சென்றதும் ராஜவேலிடம் வந்தவர்," இனி உங்களுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை உங்க சொத்தும் கௌரவமும் உங்க கூடவே வரும்" என்றவர் நகர்ந்து விட்டார்.

அனைத்தையும் சொல்லி முடித்தவர் "அப்போ போன உங்க மாமா இன்ன வரைக்கும் இங்குன வரவும் இல்லை யார் கூடவும் பேசவும் இல்லை வெற்றி" என வெற்றிவேல் பாண்டியனை நிமிர்ந்து பார்க்க,வெற்றியிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

"வெற்றி" என்றவர் அழைக்க, கண்களை இறுக்க மூடியிருந்தான். அவன் சிந்தையில் தோன்றியது எல்லாம் ஒன்று தான் இதில் ஏதோ ஒரு வகையில் அவர் அவர் நியாயம் இருக்க, ராகவனுக்கு யாரும் நியாயம் செய்யவில்லை என எண்ணினான்.கோபத்தில் தோன்றிய உணர்வுகளை எல்லாம் நொடி பொழுதில் மறைத்தவன் விழிகளை திறந்தான்.

ராமகிருஷ்ணன் "வெற்றி என்னாச்சு?" என கேட்க,

"ஊப்ஸ்" என எழுந்தவன் ஒரு முறை வீட்டினை பார்த்து "உங்க கிளைன்ட் வந்துட்டாரா ,பார்த்தா வீட்டுக்கு கிளம்பலாம் நெறைய வேலைகிடக்கு" என கூற,

கண்டிப்பாய் இப்படி ஒரு பதிலை எதிர் பார்க்கவில்லை என அவர் முகம் காட்டி கொடுக்க, தன் புருவத்தை சுருக்கி" ஏன் இன்னும் வரலையாக்கும்?" என கேட்டு "அப்போ வாங்க அங்க இதுக்கு மேல கேசுக கிடக்கு அதுகளை பார்ப்போம்" வேகமாய் முன்னால் செல்ல எதிரில் வந்த ராஜவேல் பாண்டியன் மீது மோதி நின்றான்.

அவன் மோதிய வேகத்தில் விழ போனவர் பின் சுதாரித்து நின்று" யேன்டா உன் கண்ணை பொடனியிலயா வச்சுக்கிட்டு வர? நேர பார்த்து வாறத்துக்கு என்ன?"என ராஜவேல் பாண்டியன் மீசையை நீவிய படி நிமிர்ந்து பார்க்க,அங்கே அவரை போலவே தன் மீசையை நீவி கொண்டே திமிராய் நின்றான் வெற்றிவேல் பாண்டியன்.

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top