JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-8

Suhana

Well-known member

ஒரு புறம் செல்லும் மனைவியும் மறுபுறம் அனைத்தும் அறிந்து செல்லும் மகனையும் பார்த்தவர் சிரித்து கொண்டார்."அம்மா மீனாட்சி எப்படியாச்சும் ஜெய்யை கண்ணுல காட்டிரும்மா!" என வேண்டி கொண்டார்.


ராகவன் மற்றும் கிருஷ்ணனின் தொல்லை தாங்காமல் கணேஷும் வெற்றியும் கிளம்பி வர,

இவனை பார்த்ததும் அழகம்மை" அய்யா வந்துட்டிகளா!" என கேட்டு ராஜவேல் பண்டியனிடம் சொல்ல சென்றார்.

காலை முதல் அவனை காண அவருக்கிருந்த ஆர்வம் வேகமாய் வந்தவர்" அப்புறம் என்ன இந்த பக்கம்?" என்றார் எதனையும் வெளிக்காட்டாமல்,

"ம்ம்ம்ம்.... இங்குட்டு காத்து நல்லா வரும் சொன்னாய்ங்கே அதேய்ன் வாங்கிட்டு போகலாம்னு" என்றான்.

அவர் பேசியதை கேட்ட அழகம்மை "என்ன இவரு இப்படி சொல்லுதாரு!! காலையிலேயே அவனுக்கு என்ன பிடிக்குமுன்னு கிருஷ்ணன் கிட்ட கேட்டு சமைக்க சொல்லிட்டு,இப்போ வந்த பிள்ளைகிட்ட ஏன் வந்தேன்னு கேக்குறாரு?" என்பதை போல் பார்க்க,

"ம்ம்ம்ம் போ போய் சாப்பிட எடுத்து வை" என்று அழகம்மையிடம் கூறியவர், பெரிய பெட்டி ஒன்றை எடுக்க சொல்லி அதனை திறக்க சொல்ல, அத்தனையும் பத்திரங்களாய் இருந்தது.

"இது எல்லாம் பரம்பரை பரம்பரையா இங்குன உள்ள சொத்துக்கள் எனக்கு தெரிஞ்சு இது, தெரியாம எவ்ளோ இருக்கு தெரியலை அதை பத்தின விளக்கம் எல்லாம் அந்த பெட்டில இருக்கு,இதை எல்லாம் சரி பார்த்து வைக்கணும்."என்றார்.

"ம்ம்ம்ம் "என்றவன் கைகள் அதனை சரி பார்க்க அதே நேரம் கைபேசி அழைத்தது "டேய் கணேஷ் யாருன்னு பாரு?" என்றான்.

ரோஸ் என வர," வெற்றி அம்மா டா" என்றான் கணேஷ்.

"ம்ம்ம் ஸ்பீக்கர்ல போடு" என்றவன்" ரோஸ்" என அழைக்க,

"வெற்றி எங்குன போயிட்ட,சாப்பிட வருவியா என்ன,வர வர சனி ஞாயிறு கூட எங்கச்சும் போயிடற "என சரோஜா பேசிக்கொண்டே போக,

"ஷப்பா ரோஸ் ஏன் இப்படி மூச்சு விடாம பேசுற, நான் வர ராவாகும் உங்க ஜாக் சொல்லலை யா கொடுங்க கேப்போம்" என்றவன் திரும்பி பார்க்க அங்கே ராஜவேல் பாண்டியன் உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார், அவர் கைகள் நாற்காலியை அழுத்தி பிடித்தது.

அதற்குள் ராகவன் ஹலோ என கூற", ஜாக்" என ஆரம்பித்தவன் ராஜவேலின் முக மாற்றத்தில்" நைனா" என கூறி தெலுங்கில் தொடர அதுவரை அங்கே நின்றிருந்தவர் வெற்றியை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு வெளியில் சென்று விட்டார்.

வெற்றி வைத்ததும் கணேஷை பார்க்க, அவன் பார்த்த பார்வையில் "அது ஒன்னும் இல்லை டா ரோஸ் பேசின வரைக்கும் அம்புட்டு பீலிங்க நின்னுட்டு ,இ. பி குரல் கேட்டதும் அவ்ளோ கோவம் வருது அதேய்ன் இன்னும் கொஞ்சம் பி.பி ஏத்தி விட்டேன் "என்றான் சிரித்த படி,

"நீ நல்லா வருவ டா ராசா "என்றவனும் பத்திரங்களை சரி பார்க்க, ராஜவேல் பாண்டியன் உள்ளே வந்தார்.

"கணேஷை பார்த்து யாரு இந்த பய உனக்கு டிரைவர் நினைச்சேன் "என்றார்.


"நான் கணேஷ் நானும் வக்கிலுதேய்ன் "என்றான் வேகமாய்,

"என்னத்தை வக்கீலோ சரி வா அந்த பயலுக வந்திருக்கானுங்க என்னன்னு கேளு நான் இவுகளுக்கு பத்திரத்தை எல்லாம் எடுத்து கொடுத்துட்டு வாரேன் "என கூற,

"சரி தேய்ன் குடும்பமே நம்மளை நல்லா கோர்த்து விடுது" என கீழே செல்ல, அங்கே பெரிய உருவமாய் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்.

வந்திருந்தவர்களில் ஒருவன் "யோவ் வக்கிலு" என அழைக்க,

"என்ன யோவ்வா நல்ல மரியாதை தெரிஞ்சுவங்களா இருக்காய்ங்க" என அவர்கள் எதிரில் அமர்ந்தவன் .அவர் கொடுத்த பத்திரத்தை பார்த்து கொண்டே "இங்க பாருங்க சார் இது எல்லாம் அவுக பரம்பரை சொத்து அதை அவர் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் பண்ணலாம் சொல்ல போனா அவருக்கு நீங்க லீகல் வாரிசாக கூட வர மாட்டீங்க அப்புறம் எப்புடி சொத்துக்கள் வேணும்னு கேக்க முடியும்"என்றான் கணேஷ்.

"எல்லாம் சரிதேய்ன் நாங்க அவருக்கு மூணாம் பங்காளிகதேய்ன்,அதுக்கு இப்போ என்ன?நாங்க என்ன எல்லா சொத்தையுமா கேட்டோம்,எங்க பக்கம் இருக்கிறதை நாங்க எடுத்துகுறோம்,மிச்சத்தை என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்க சொல்லு" என்றான் நான்கில் ஒருவன்.

அதுக்காக இன்னைக்கு ரேட்டுக்கு பல கோடி மதிப்புள்ள சொத்தை எப்படி கொடுக்க முடியும் சொல்லுங்க" என்றான் கணேஷ்.

"என்னண்ணே இவேய்ன் எல்லாம் ஒரு ஆளு இவன்கிட்ட போய் பேசிக்கிட்டு,யோவ் வக்கிலு அந்த சொத்து எங்களுக்குதேய்ன் நீ என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ"என்றான் ஒருவன்.

"அப்படி எல்லாம் சொல்ல முடியாது சார் .லீகலா நெறைய பிரச்சனை இருக்கு அவங்க வாரிசுங்க வந்து கேப்பாங்க"என்றான்.

"என்ன டா இவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு,இங்குன பாரு கிழவனுக்கு இருந்தது ரெண்டு புள்ள ஒருத்தன் ஊரை விட்டே ஓடி போய்ட்டான் ஒருத்தி வேத்து ஆளை இழுத்துட்டு ஓடி போய்ட்டா "என முடிக்கும் முன் வெற்றி அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்திருந்தான்,

மற்றவர்கள் யார் என பார்க்க, ராஜவேலின் மறு உருவாய் வெற்றி நின்று கொண்டிருந்தான்.

யார் தன்னை அடித்தது என அடிவாங்கியவன் உணரும் முன் தன் கையிலிருந்த காப்பை சற்று உயர்த்தி விட்டு வேஷ்டியை மடித்து கட்டி தன் மீசையை நீவி கொண்டே "அடிங்க நாயே யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன"என்றவன் கைகள் அவன் முகத்தில் முத்திரை பாதித்தது.இருந்த மூவரையும் அடித்து துரத்தியவன் கோபத்தில் ருத்ரமூர்த்தியாய் நின்றான்.

கணேஷ்,"வெற்றி போதும் விடு" என்றவன் அவர்களை பார்த்து கண்களால் போக சொல்ல அவர்களும் அவனை பார்த்து கும்பிட்டு ஓடி சென்றனர்.

"இது இதுத்தேய்ன் இத்தனை வருஷமா என் நிலைமை,விருப்பட்டா பெத்தவுக தகுதி தராதரம் கூட பாக்காம போயிட்டாக,இன்னொருத்தேன் பெத்த அப்பா நான் ஒரு வார்த்தை கூட சொல்லிட்டேன்னு இத்தனை வருஷமா என்ன பார்க்க கூட வரலை "என புலம்பிய படி உள்ளே சென்றார்.

வெற்றி அமைதியாய் நிற்க",என்ன டா" என்றான்.

"ப்ச்.... ஒன்னுமில்லை சரி யாரோ ஒரு டிடக்ட்டிவ் கிட்ட சொல்லி தேட சொன்னியே என்ன ஆச்சு?என்றான் வெற்றி.

"ம்ம்ம்ம்... இரு கேக்குறேன்" என அழைத்து கேட்டு கைபேசியை வைத்தவன்.

"வெற்றி பி. பி சொன்னதை வச்சு தேடினதுலே ரெண்டு ப்ரோபைல் செட் ஆகுதாம்.ஒருத்தர் அமெரிக்கால இருக்கார்,இன்னொருத்தர் மலேஷியால இருக்கார்."

"அமெரிக்கால இருக்குறவர் ஏதோ கம்பெனில வேலை பாக்கிறாராம் ரெண்டு பையன் இருக்காம்,மலேஷியால இருக்கறவர் ஏதோ கன்ஸ்ட்ராக்ஷன் கம்பெனி வச்சிருக்கார் போல ஒரு பொண்ணு "என சொல்லி கொண்டே போக,

கண் மூடி கேட்டு கொண்டிருந்தவன் "போதும் மலேஷியா அட்ரஸை அனுப்ப சொல்லு" என கூற,

"ஏண்டா அவருத்தேய்ன் எப்படி சொல்லற?"என்றான் கணேஷ்.

"ம்ம்ம்....பி. பி சொல்லும் போதே சொல்லல அவருக்கு கட்டடம் எல்லாம் ரொம்ப புடிக்கும்ன்னு,அதுக்கு மேல அப்போ எல்லாம் அமெரிக்க போற அளவுக்கு யோசிச்சு பாத்திருக்க மாட்டாரு அதேய்ன்" என்றான் வெற்றி.

பின் முகவரியை வாங்கி அதனை கூகிள் ஆண்டவர் துணையுடன் தேட,ஜெயவேல் பாண்டியனின் புகைப்படத்துடன் அவரின் விவரங்கள் வந்து விழுந்தது.

கணேஷ் அவரை ஒரு முறை பார்த்து விட்டு" என்னடா இது இவரும் உன்னை மாதிரிதேய்ன் இருக்காரு,இன்னும் எத்தனை பேரு டா இருக்கீங்க ஒரு வழியா சொல்லி தொலைங்க டா "என்றான்.

வெற்றி சிரித்து கொண்டே "யாருக்கு தெரியும் சரி அந்த மெயில் ஐ. டி யை கொடு ஒரு மெயிலை தட்டி விடுவோம் "என்றவன். உங்களை காண வருகிறோம் "உங்கள் தந்தையின் பொருட்டு" என மட்டும் அனுப்பி விட்டு கீழே வெற்றி வேல் பாண்டியன் என முடித்து கொண்டான்.

......

அதே நேரம் மலேஷியாவின் ட்ராஃபிக்கில் தன் கார் நிறுத்தியிருக்க நின்றது கூட அறியாமல் தன் லேப்டாப்பில் மூழ்கி கிடந்தாள் சாரு.

முக்கியமான ப்ரோஜெக்ட் ஒன்றை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் தள்ள பட்டிருந்தாள் பிஸ்னஸ் வட்டத்தில் அவள் புதிது என்றாலும் அவளின் நிர்வாக திறமை அனைவரையும் வியக்க வைத்தது.

அதுவும் ரிஷியின் தந்தை நீலகண்டனிற்கு சற்று வியப்போடு பொறாமையும் வரவே செய்தது.அதை அவர் மகனிடம் வெளிக்காட்டவும் செய்தார்.

"ஏண்டா நீ எல்லாம் ஒரு புள்ளையா உன்கூட படிச்சவ தான் சாரு இப்போ எப்படி பிஸ்னஸ் பண்ணுது தெரியுமா!ஜெய்க்கு உடம்பு முடியாம போனத்திலிருந்து ரெண்டு ப்ரோஜெக்ட் அவ கையில தெரியுமா!இதுவே நான் இல்லைன்னா நீ ரெண்டே நாள்ள இருக்குற எல்லாத்தையும் பப்க்கு கொடுத்திட்டு நடு ரோட்டுக்கு வந்துடுவ" என திட்ட,

"உங்களுக்கு எப்பவும் எம்புள்ளையை எதுனாச்சும் சொல்லனும்,அம்புட்டு திறமையான புள்ளைனா மருமகள் ஆகிக்க வேண்டியது தானே" என உள்ளே செல்ல",இன்னைக்கு தான் உருப்படியா ஒரு ஐடியா கொடுத்துருக்கா "என்றவர் இதை பற்றி ஜெயவேலிடம் பேச வேண்டும் என எண்ணி கொண்டார்.

லேப்டாப்பில் மூழ்கியிருந்தவள் கார் நகராமல் நிறப்பதை பார்த்து "கோபி வாட் ஹப்பன்?" என்றாள் டிரைவரிடம்.

"மேம் ஸ்கூல் ஸ்டுடெண்ட்ஸ் கிராஸ் பண்றாங்க" என்றார் அவர்.

"ஓ... "என நிமிர்ந்து பார்க்க அவளை கடந்து ரோஜா பூக்களாய் குழந்தைகள் செல்ல அதனை ரசனையோடு பார்த்து கொண்டிருந்தாள் சாரு.அவளை கலைப்பது போல் மெயில் வரும் ஒலி ஒலிக்க,சிரித்து கொண்டே ஓபன் செய்ய அது வெற்றியின் தகவல்களை தாங்கியிருந்தது.

'யார் இது இத்தனை வருஷம் கழிச்சி இப்படி ஒரு தகவலோட வர்றது" என்றவள், சில நாட்கள் முன் தந்தை அவரை பற்றிய செய்திளை சொன்னது எல்லாம் வந்து போக, யார் அனுப்பியது என மீண்டும் ஒரு முறை பார்த்தாள் அவளையும் அறியாமல் அவள் இதழ்கள் சொல்லி பார்த்தது அவனது பெயரை "வெற்றிவேல் பாண்டியன்" என்றாள்

 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top