JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!அதிரூபனே!-9

Suhana

Well-known member

அத்தியாயம் 9:

வெற்றி அனுப்பிய செய்தியை பார்த்தவன் "என்னடா மச்சான் இப்படி உடனே வாரேன் சொல்லிட்ட அப்போ நீ போக போறியா?"என்றான் கணேஷ்.

"போக போறியா இல்லை ,போக போறோம்,இங்குன இருக்குற போடிக்கு கூட்டிட்டு போறேன், மலேஷியாக்கு கூட்டிட்டு போக மாட்டேனா" என்றான் சிரிப்புடன்,

"நண்பேன்டா" என்றவன் "சரி எதுக்கு இம்புட்டு அவசரம் இன்னும் கொஞ்சம் என்ன ஏதுன்னு எல்லா டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிட்டு போகலாம் டா"என்றான்.

"இல்லை டா அது சரி வராது இதுவே லேட் ,இன்னைக்கு பார்த்ததிலே இருக்குற மதிப்புல சொத்து எல்லாம் பல கோடியை தொடும், நைனா உள்ள வரலைனா இது எல்லாம் அவருக்கு போயிருக்க வேண்டியது,எல்லாரும் சொல்றதை பார்க்கும் போது அவரும் நல்ல மாதிரிதேய்ன் தெரியுது இந்த சொத்துக்கள் எல்லாம் இப்படி தூங்காம ஏதோ ஒரு நல்ல வழியில போயிருக்கும்"என்றான்.

"நீ சொல்றதும் சரித்தேய்ன் அப்போ மலேசியா போறோம்" என்றான் கணேஷ்.

"கண்டிப்பா போறோம் அவரை தூக்கறோம் இது எல்லாத்தையும் அவர்கிட்ட கொடுத்துட்டு நாம ரீலீவ் ஆகுறோம்"என்றான் வெற்றி.

"நீ சொன்னா சரிதேய்ன் பங்கு" என்றான் கணேஷ்.
.....
சாரு மீண்டும் ஒரு முறை வந்திருந்த தகவலை பார்த்தாள் 'எந்த அறிவாளி அனுப்பி இருப்பான். யார் என்னன்னு கூட போடாம,ஏதோ உலத்துல இருக்குற எல்லாருக்கும் இவனை தெரியும் அப்படிங்கிற மாதிரி வெற்றிவேல் பாண்டியன் மொட்டையா போட்டு அனுப்பிருக்கான். இருக்கிற பிரச்சனையில இதுவேற புதுசா'என்றவள் தன் வேலையில் கவனம் வைத்தாள்.


அன்றைய வேலைகளை முடித்தவள் வீடு திரும்ப, எப்போதும் போல் தந்தையின் அறை நோக்கி கால்கள் நகர்ந்தது.

அங்கே வென்டிலேடர் உதவியுடன் ஜெயவேல் பாண்டியனின் மூச்சு சீராக சென்று கொண்டிருந்தது அவர் அருகில் அமர்ந்தாள்.

சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் வந்து போனது.

சாரு கைகள் தந்தையின் கைகளில் பிணைந்திருக்க அவரின் முகத்தை பார்த்த படி அமர்ந்திருந்தாள்.விழிகள் திறந்த ஜெயவேலின் கண்கள் பாசமாய் அவளை வருடியது. கஷ்டப்பட்டு தன் இதழ் திறந்து பேச ஆர்மபித்தவர் " மதி" என அழைக்க,

"டேட் ஸ்ட்ரைன் பண்ணாதீங்க எவ்ரித்திங் கோயிங் குட் "என்றாள்.

"இ... இல்லை ஐ நோ இ... இப்போ நான் சொல்ல போறதை கேட்டுக்கோ" என ராஜவேல் பற்றியும் ராகவன் பற்றியும் கூற,

"டேட் அப்போ அவர் உங்களுக்கு பண்ணுனது துரோகம் தானே பின்ன எப்படி அவரை நல்லவர் சொல்றிங்க "என்றாள் சற்று கோபமாய்,

மகளின் கோபத்தில் தன்னை உணர்ந்தார்,அவள் அழகும் நிறமும் அவள் தாயை போல என்றாலும்,பிடிவாதத்திலும் கோபத்திலும் தன்னை கொண்டு பிறந்திருக்கிறாள் என்ற எண்ணம் எப்போதும் உண்டு அவருக்கு, அதனை இப்போதும் உணர்ந்தவர் "மதி அவனுக்கு சரோஜா மேல அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் என் தங்கை தான் என்ற உண்மை அப்போது தான் ராகவனுக்கு தெரிஞ்சது என்பதை நான் அப்போதே உணர்ந்து கொண்டேன். அதே நேரம் என் தங்கையின் கண்களில் ராகவனுக்கான காதலையும் அவன் தான் வேண்டும் என்ற பிடிவாததையும் ஏன்? நான் பார்த்த பின்னும் அழுத்தமாய் அவள் கைகள் ராகவனோடு பிணைந்து கொண்ட போதே உணர்ந்து கொண்டேன். இன்னும் சொல்ல போனா நான் அவர்களை அந்த நிமிஷம் வெளியில அனுப்பலைனா கண்டிப்பா உன் தாத்தாவோ இல்லை நானே கூட அவங்களை ஏதாச்சும் செய்திருக்ககூடும்" என்றார் கண்களை மூடியபடி,

அவர் சொல்ல வருவதை புரிந்த சாரு "டேட்" என அழைத்து அருகில் நின்ற தாயையும் பார்க்க,

அவளின் கேள்வியை புரிந்தவர் போல் சிரித்தவர்" இப்படி சொல்ற நீ எப்படி எங்க அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணுன கேக்குறியா,அது எல்லாம் உங்க அம்மாவை பார்க்கும் முன்னால் நடந்தது டா" என்றார்.

"நீங்க ஏன் அதுக்கு அப்புறம் ஊருக்கு போகலை டேட்!" என கேட்க,

"ம்ம்ம்ம்... உன் அம்மா நீ என என் வாழ்க்கை உங்க இருவருக்குள்ளும் முடிஞ்சிடுச்சு கொஞ்ச நாள் கழிச்சு நான் அவங்க எல்லாரையும் பத்தி விசாரிச்சேன் உன் அத்தை ராகவன் கிருஷ்ணன் எல்லாரும் மதுரையில இருக்கிறதா கேள்விபட்டேன்.கிருஷ்ணன் மட்டும் உன் தாத்தாவை அடிக்கடி போய் பார்த்துட்டு வருவான் போல "என்றவர் "மதி" என அழைக்க,

'என்ன' என்பதை போல் சாரு பார்த்தாள் அவள் பார்க்கும் போதே அவர் மூச்சு விட சிரம பட" டேட் பிளிஸ் ரிலாக்ஸ் உங்களுக்கு ஒன்னும் ஆகாது" என்றவள் அவருக்கு வைத்த செவிலியை அழைத்து நிலைமையை சரி செய்தாள்.பின் மருத்தவரிடம் கேட்க அதிகப்படியான உணர்ச்சிவசப்படுதலே காரணம் என்றவர். அவரை பார்த்து கையாளுங்கள் என்ற அறிவுரையோடு வைத்தார் அனைத்தையும் நினைத்து பார்த்தவள்.

'இன்னைக்கு வந்த மெயிலை பற்றி எதுவும் சொல்ல வேணாம். இது சும்மா அனுப்பினாங்களா இல்லை உண்மையில வர்போறாங்களா தெரியலை,லெட்ஸ் சீ யாருன்னு பார்ப்போம்' என்றவள் எழ, ஜெயவேல் அவளை பார்த்தார். அவரின் பார்வையே என்ன என்பதை போல் கேட்க,

"நத்திங் டேட்" என்றவள் அவர் நெற்றியில் முத்தமிட்டு அவர் மீசையை முறுக்கி "மை டேட் ஆல்வேஸ் ஸ்ட்ராங்க் "என வெளியில் சென்றாள்.

தன் அறைக்கு வந்தவள் மீண்டும் தன் தந்தை சொன்னவற்றை நினைத்து பார்த்து " ம்ம்ம்ம் வெற்றிவேல் பாண்டியன் இந்த பேரை டேட் சொல்லவே இல்லயே யாரா இருக்கும்" என்றவள் எண்ணம் அதனை சுற்றி வர,பின் அவளே "ச்சே யாரா இருந்தா என்ன வரட்டும் பார்த்துகலாம் "என தூங்கி போனாள்.

....

வெற்றி வந்து ஜெயவேல் பற்றிய தகவல்களையும் மலேசியா செல்ல போவதையும் சொல்ல, கிருஷ்ணன் உடனே"வேணாம் வெற்றி நான் வேணா போய் கூட்டிட்டு வாரேன்,உன்னை பார்த்ததும் அவன் என்ன சொல்லுவான் தெரியாது"என்றார்.

"இல்லை நீங்க போனா சரியா வராது நாங்க போய் என்னன்னு பார்த்துட்டு வாரோம்"என்றான் வெற்றி.

"இல்லை நான் என்ன சொல்ல வரேன்னா" என ஆரம்பிக்க, ராகவன் உடனே" வேணாம் கிருஷ்ணா அவனே போகட்டும் விடு" என்றார்.

"என்ன டா ராகவா இப்படி சொல்ற!,சரோஜாக்கு என்ன சொல்லுவ?" என்றார்.

"அது அவன் பாடு" என்றவர் "அவன் போனா தான் சரியா வரும்னு எனக்கு தோணுது நீங்க எப்போ கிளம்ப போறீங்க?" என வெற்றியை கேட்க,

"இந்த வாரத்துல"என்றான் வெற்றி.

வெற்றி வேண்டிய அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டிருக்க "என்னடா இது புதுசா இப்படி வேற வேற நாட்டுக்கு எல்லாம் போற,கேட்டா சுத்தி பார்த்துட்டு வாரேன் சொல்றே என்னவோ போ இப்போ எல்லாம் நீ என் பேச்சை கேக்குறது இல்லை உனக்கு நைனா தான் பெருசு "என்றவர் அமைதியாய் அமர,

வேகமாய் வந்து தாய் மடியில் படுத்தவன்" ரோஸ் எதுக்கு இம்புட்டு பீலிங் இங்குனகுள்ளயிருந்து சென்னை போற தூரந்தேய்ன் ஒரு பதினைஞ்சு நாளுதேய்ன் போதாததுக்கு இது மார்ச் மாசம் தானே இப்போதேய்ன் கொஞ்சம் லீவ் கிடைக்குது அதேய்ன் ,எப்பவும் மாட்டுத்தாவணியத்தானே சுத்துறோம் அதேய்ன் ஓரு சேன்ஞ்சுக்கு மலேசியா போறோம்" என்றவன் மனது' நீ எப்போவும் அழுதிட்டு இருக்குற காரணத்தை தெரிஞ்சும் நான் எப்படி சும்மா இருக்கறது அதேய்ன் நான் போறேன்'என மனதோடு எண்ணி கொண்டான்.

மகனின் ஆசையை புரிந்தவர் அவன் தலை கோதிய படி "பார்த்து பத்திரமா இருக்கனும்,தனியா எங்குனயும் போகாத" என அடுக்கி கொண்டே போக,

கணேஷ் அவர்கள் இருவரையும் பார்த்த படி வந்தவன் வெற்றியை பார்த்து "ஏன்டா இது உனக்கே ஓவரா தெரியலை! நீ என்னமோ ஸ்கூல்ல பிக்னிக் போற மாதிரியும் அங்குனக்குள்ள எங்கேயும் தொலைஞ்சு போற மாதிரி கொஞ்சிட்டு இருக்கிங்க "என்றான்.

"ஏன்டா அவன் எவ்ளோ வளந்தாலும் எங்கண்ணுக்கு அவன் சின்ன புள்ளைதேய்ன்"என்றார்.

"ஆமா தாடி மீசை வச்ச குழந்தை இந்நேரம் கல்யாணம் பண்ணியிருந்தா நாலு புள்ளைக்கு அப்பன் ஆயிருப்பாய்ன்,இப்போ போய் கொஞ்சிகிட்டு,இது எல்லாம் அடுக்கும்மா ரோஸ் "என்றவன்" கிளம்பு டா பிளைட்க்கு நேரமாச்சு" என கிளம்பி ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர்.
" ஏண்டா இன்னைக்கும் வேஷ்டி சட்டை தானா"என கணேஷ் கேட்க,
வெற்றி வாய் திறக்கும் முன்" போதும் டா ராசா கேட்டா நான் எல்லாம் அமெரிக்கா போனாலே அப்படித்தேய்ன் சொல்லுவ அதானே விட்டுரு தெரியாம கேட்டுட்டேன்"என்றான் கணேஷ்.

"அப்புறம் யேன் கேக்குறிக வக்கீல் சார்"என வெற்றி சிரித்தான்

பிளைட் ஏறும் போதே ராகவன் அருகில் வந்து "அங்குன ஜெய் ஒரு வார்த்தை கூட பேசினாலும் நீ கோவபடாம எடுத்து சொல்லி கூட்டிட்டு வந்துடு வெற்றி" என சொல்லி சென்றார்.
"கூட்டிட்டு வாராது என்ன தூக்கிட்டு வாரேன் உங்க மச்சனை சரி தானே இ. பி. இப்போ கிளம்பும்,நாந்தேய்ன் இல்லைன்னு ரோஸ் கூட டூயட் பாட கூடாது சொல்லிட்டேன்" என சிரிப்புடன் தந்தையை அனுப்பி வைத்தான்.
"என்னடா வெற்றி நாமபாட்டுக்கு கிளம்பறோமே அங்குனக்குள்ள யாரையும் நமக்கு தெரியாதே டா "என கணேஷ் கேட்க,

"அடா ஆமா என்றவன் போனை எடு" என கூறி மெயிலை பார்க்க அதில் எந்த செய்தியும் வராமல் இருந்தது"ப்ச் மெயில் பார்த்தா பதில் சொல்ல கூட தெரியலை இதில கம்பெனி வேற நடத்துறாங்கலாம்" என அதில் தெரிந்த எண்ணுக்கு கால் செய்தான்.

நீண்ட நேர அழைப்பிற்கு பின் கால் அட்டெண்ட் செய்யப்பட அது ரிசெப்ஷன் என்பது அவர்கள் பேசும் போதே புரிந்தவன்,அவர்கள் எம். டி க்கு கனெக்ட் பண்ண சொல்ல,
"வெய்ட் சார் வீ கனெக்ட் டூ எம்.டி" என கனெக்ட் செய்ய பட,அதை அட்டெண்ட் செய்தவள் சாருவின் பி. ஏ,

"ஹலோ" என அவள் கூற,

ஏற்கனவே பிளைட் ஏறும் டென்ஷனில் இருந்தவன் ஜெயவேலின் குரலை எதிர்ப்பார்த்திருக்க பெண்ணின் குரலை கேட்டவன்

"நீங்க யாரு?"என்றான்

"நான் எம் டியின் பி.ஏ" என அவள் கூற,

"நான் உங்க எம்.டி கிட்டே பேசணும்" என்றான்.


"இல்லை அவங்க கொஞ்சம் பிஸி" என்றாள்.

அது வரை தன் வேலையில் பிஸியாய் இருந்தவள்,அவள் பி. ஏ வின் குரலில் நிமிர்ந்து பார்த்து யாரு என்பதை போல் கேட்க,

அவளோ "தெரியலை இந்தியாவிலிருந்து கால்" என்றாள்.தனக்கு கனெக்ட் செய்ய கூறினாள் சாரு.

கனெக்ட் செய்த பின்" ஹலோ" என கூற,

"ப்ச் என்ன ஹலோ ஹலோ சொல்லிக்கிட்டு உங்க எம். டிக்கு மெயில் பார்த்தா ரிப்ளை பண்ணனும் கூட தெரியாதா, நாங்க கிளம்பி வந்துட்டு இருக்கோம் பிலைட் லண்டிங் டைம்மை சொல்லி அந்த நேரத்துக்கு வந்துடுவோம்னு உங்க எம். டிகிட்ட சொல்லிடுங்க" என்றவன் வைக்க போக,

அது வரை அவன் குரலை கேட்ட படி இருந்தவள்
அவன் வைக்க போவதை உணர்ந்து" யூவர் நேம்" என்றாள்.

"வெற்றிவேல்... வெற்றிவேல் பாண்டியன்" என வைத்தான்.

சாரு அவன் கூறிய தினுசில் தன் புருவம் உயர்த்தியவள்" யாரு இவன் எதுக்கு வர்ரான் தெரியலை ஓவர் அதிகாரனா இருக்கானே!" என சிறிது யோசித்து அவள் டிரைவரை அழைத்தவள்

"கோபி"

"எஸ் மேம்"

அவன் லேண்ட் ஆகும் நேரத்தை கூறி "பிக் தெம் என்றவள் சிறிது யோசித்து *****ஹோட்டல் பெயரை சொல்லி அங்கே தங்க வச்சுடுங்க"என்றாள். பின் போனை வைக்க போனவள்" ம்ம்ம்... பேரு வெற்றிவேல் பாண்டியன் "என கூறி வைத்தாள்.

....

"என்னடா பங்கு உன் மாமா நம்மளை கூப்புட வருவாரு தானே!" என்றான் கணேஷ்.

கண்களை மூடியிருந்தவன் "ம்ம்ம் எனக்கென்ன தெரியும் வாறோம் சொல்லி இருக்கோம் வந்தா போவோம் இல்லைனா ஹோட்டல்ல தங்கிட்டு காலையில ஆஃபீஸ் போய் பேசிக்கிடுவோம்"என்றான்.

"சரிதேய்ன் வேற வழியும் இல்லை என்றவன் டேய் மச்சான் அந்த புள்ளை உன்னையே குறு குறுன்னு பார்க்குது டா" என்றான்.

கண்கள் மூடி கொண்டே" எந்த புள்ள?"என்றான் வெற்றி.

"அதேய்ன் நமக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துச்சே அந்த புள்ளைதேய்ன்,கண்ணை தொறந்து பாரு உனக்கு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி இருக்கான்னு" என கணேஷ் கூற,

விழி திறந்து பார்த்தவன் "ப்ச் என உதடு சுழித்து வாய்ப்பில்லை டா" என மீண்டும் வெற்றி கண்கள் மூட,

|என்ன டா புள்ளை பார்க்க நல்லா மூக்கு முழியுமா நல்லா லட்சணமாதானே இருக்கு பின்ன என்ன?"என்றான்.


"உனக்கு மிட்டாய் வேணும்னா கேட்டு வாங்கி தின்னு அதுக்கு யேன் என்ன கோர்த்து வுடற பக்கி" என அவன் வேலையை பார்க்க தொடங்கினான்.

பிளைட் விட்டு இறங்கியதும் தன் பெயர் பலகை தாங்கி வந்தவரை பார்த்தவன் அவனோடு ஹோட்டலில் இறங்கி நாளை தானே வருவதாக சொல்லி சென்றான்.

இரவு நேர வெளிச்சங்கள் எங்கும் பரவி கிடக்க வெற்றி எழுந்து ஜன்னல்களை திறந்து பார்த்தான். பின் வீட்டிற்க்கு அழைக்க ராகவன் எடுத்தவுடன் "என்ன வெற்றி ஜெய்யை பார்த்தியா என்ன சொன்னான்?" என்றார்.


"போன் எடுத்ததும் என்ன டா பத்திரமா போய்யாச்சா இப்படி கேக்குறவுகளைதேய்ன் பார்த்திருக்கேன்,எடுத்ததும் ஜெய்யை பார்த்தியா நொய்யை பார்தியான்னு சும்மா கடுப்பை கிளப்பாத நைனா "என்றான்.

"என்னாச்சு வெற்றி?" என்றார்.

"என்ன பழக்கமோ இது வந்து கூட கூப்பிட முடியலை டிரைவர் விட்டு ஹோட்டல இறக்கி விட சொல்றது இது எல்லாம் எனக்கு பிடிக்கலை ஆமா, பேசாம கிளம்பி வந்துருப்பேன் உனக்காகவும் உன் மாமனார்காகவும் தேய்ன் பொறுத்துகிட்டு இருக்கேன்" என்றான் வெற்றி.


"இல்லை வெற்றி ஜெய் அப்படியெல்லாம் பண்ற ஆள் இல்லை" என கூற வந்தவரை போதும் "இ. பி நானு கொலை வெறில இருக்கேன்,ரோஸ் கிட்ட பத்திரமா வந்துட்டேன் சொல்லுங்க" என போனை வைக்கவும் கணேஷ் உள்ளே வந்தான்.

"எங்க டா போன?" என்றான் வெற்றி.


"அது ஒன்னுமில்லை மச்சான் கீழே போய்ட்டு வந்தேன், நம்ம ஊர் மக்கள் தான் டா அதிகமா இருப்பாய்ங்க போல" என்றவன் "ஆர்டர் பண்ணுவோமா இல்லை கீழே போய் சாப்பிடுவோமா!" என்றான்.

"ம்ம்ம்ம்...கீழேயே போவோம்" என கீழே கிளம்பி செல்ல, உணவை ஆர்டர் பண்ணி இருவரும் உண்டு முடிக்கும் நேரம் சாரு ரிஷியுடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

"ஊர்ல இருக்க முக்கவாசி பேரு இங்குனதேய்ன் இருப்பாய்ங்க போல டா" என்றான் கணேஷ்

அதுவரை வெற்றி சுற்றிலும் கண்களை சுழல விட்ட படி இருந்தவன் சாருவை காண பார்த்து விட்டு கண்கள் அகல முடியவில்லை அவனால், அவள் உடை நகரிகமாய் இருப்பினும் அதில் ஒரு நளினம் இருக்க ,அந்த இரவு நேரத்திற்கு தகுந்தாற்போல் கிரே மற்றும் வெள்ளை நிறம் கலந்த கவுன் போன்ற உடை அணிந்திருந்தாள்.அவளை சுற்றிலும் சிறு கூட்டம் அருகில் நின்ற பெண்ணிடம் இருக்க பேசிய படி நின்றாள்.அவள் கைகள் ரிஷியுடன் பிணைந்திருந்தது.

ஏனோ அந்த கூட்டத்தில் அவள் மட்டும் தனித்து தெரிந்தாள். அவளின் நிறம் மற்றவர்களை காட்டிலும் தனித்து இருக்க,அவள் அவிழ்த்து விட்ட இடை தாண்டிய கூந்தல் அதனை கோதிய படி பேசி கொண்டிருநத மாண்பு என அனைத்தும் வெற்றியை இம்சிக்க வெற்றி சட்டென எழுந்தான்.

கணேஷ் வெற்றியிடம் "என்னத்தேன் சொல்லு மச்சான் நம்ம ஊரு நம்ம ஊருத்தேய்ன் இன்னேரம் கறி தோசையும் சால்னாவும் நம்மளை உள்ள இழுத்துருக்கும் ஆனா இங்குன பாரு தோசையே ரப்பர் கணக்கா இழுத்துகிட்டு போகுது" என பேசி கொண்டே போக வெற்றியின் மௌனத்தில் நிமிர்ந்து பார்த்தான் வெற்றி எழுந்து நிற்க "டேய் என்னடா" என்றான்.


"ஓ...ஒன்னுமில்லை டா "என வேகமாய் கணேஷிடம் கூறி அவள் அருகில் செல்ல சாரு இன்னும் பேசிக்கொண்டிருந்தாள்.

சற்று தொலைவிலே தேங்கி நின்றான் அவள் பேசி கொண்டே கண்கள் சிமிட்டி சிரிக்க வெற்றியின் மனம் ஒரு முறை நின்று துடித்தது. நின்று நிதானமாய் அவளை பார்த்தான்.அவள் காதின்ஓரத்தில் இருந்த மச்சம் கூட அவனை ஈர்த்தது கண்கள் சிமிட்டவில்லை வெற்றி ,ஏதோ ஒரு உணர்வு தோன்ற பேசி கொண்டே சாரு திரும்பி பார்த்தாள்.

அவள் திரும்பியதும் ரிஷி " என்னாச்சு லா?" என்றான்.

"ஓ... ஒன்னுமில்லை ரிஷி யாரோ பார்த்த மாதிரி இருந்துச்சு "என்றாள் .

"என்ன லா போகலாமா இல்லை இன்னும் பேசுவியா, லெட்ஸ் கோ நீயே எனக்கு எப்போவாது தான் அப்போய்ன்மெண்ட் தருவ இன்னைக்கு என் டேட் சொன்னதால தானே வந்தே ஐ டோன்ட் வேஸ்ட் இட், நம்ம பார்ட்டி பண்ணி ரொம்ப நாளாச்சு லா இன்னும் என்ன வேடிக்கை பாக்குற!" என அவளை பாரினுள் இழுத்து சென்றான்.

வெற்றி கண்கள் அவள் செல்லும் இடத்தை பார்த்த படி நிற்க,


பின்னால் வந்த கணேஷ் "என்ன டா நீ சட்டுன்னு எழுந்து வந்துட்ட| என வெற்றியை பார்க்க, அவன் பாரின் கதவினை பார்த்த படி நின்றான்.
அதை பார்த்த கணேஷ்" டேய் பங்கு சூப்பர் டா ,நான் கூட முன்னாடியே கேட்டுட்டேன் இங்குன தங்குனா எல்லாம் ஃப்பிரியாம் வா உள்ள போகலாம்" என்றவன்" நண்பண்டா" என அவனை அணைத்த படி முன்னால் செல்ல,

வெற்றிக்கு இது என்ன மனநிலை என புரியமால் கணேஷ் பின்னால் சென்றான்.

உள்ளே வந்தவன் அந்த அரை இருட்டிலும் சாருவை தேட அவள் கையில் கோப்பையுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்த படி கையில் இருந்த ட்ரிங்க்கை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். சில மணி நேரத்திற்கு முன்னால் நடந்தயாவும் நினைவில் தோன்றியது.

இன்னும் சில நாட்களில் முடித்து கொடுக்க வேண்டிய கட்டடம் எல்லாம் பாதியோடு நிற்க,அதனை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் சாரு. அந்த நினைவில் வெற்றியை பற்றிய நினைவு கூட அவள் மறந்திருந்தாள். எப்போதும் போல் தந்தையின் அருகில் அமர்ந்து கண்கள் மூடி கொண்டிருக்க நீலகண்டன் ரிஷியுடன் உள்ளே வரவும் சரியாய் இருந்தது.

"என்னமா சாரு எப்படி இருக்க? "என்ற படி உள்ளே வந்தார்.

அவர் குரலில் திரும்பியவள்" நல்லா இருக்கேன் வாங்க அங்கிள்" என்றாள்.ஜெயவேல் விழித்து வரவேற்பாய் புன்னகை செய்தார்.

"சாரு ரொம்ப டல்லா இருக்க போல நீயும் ரிஷியும் வெளில போய்ட்டு வாங்க நீங்க வரும் வரைக்கும் நான் இங்க இருக்கேன்" என கூற,

"இல்லை வேணாம் அங்கிள் ப்ரோஜெக்ட் வோர்க் இருக்கு நான் போய் அதை பார்க்கிறேன்" என நகர போனவளை தடுக்க சொல்லி தன் கண்கள் மூலமே ரிஷிக்கு சொல்ல,அவள் கை பிடித்து தடுத்தவன்" ஏய் சாரு கம் ஆன் லா ரொம்ப நாளாச்சு லெட்ஸ் கோ அவுட்" என வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.அவள் அங்கே அமர்ந்திருந்தாலும் நினைவுகள் எல்லாம் வேலையில் இருந்தது.


ரிஷி அவள் கை பிடித்து இழுத்து" கம் ஆன் சாரு வாட்ஸ் ஈட்டிங் யூ?" என கேட்க,

"நத்திங் ரிஷி பிஸினஸ் இஷுஸ்" என்றாள்.


|ஓ... காட் நீயும் டேட் மாதிரி ஆயிட்ட எப்போ பாரு பிஸினஸ் தாட்ஸ் ,லெட்ஸ் எண்ஜோய் தி பார்ட்டி லா " என்றான்.

அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே நின்றிருந்தான் வெற்றி,அவள் கையில் இருந்த கோப்பையும் பார்த்தான்.அந்நாட்டில் இது பெரிய விஷயமில்லை என்றாலும் அவன் மனம் அதை ஏற்க மறுத்தது.

கணேஷ் அவன் அருகில் வர முகத்தை வேறு பக்கம் திருப்பியிருந்தான் "மச்சான் இங்க பொம்பளை புள்ளைங்க எல்லாம் சரக்கு அடிக்குது டா, அதுகளுக்கு தனியா வேற இருக்காம் |என அவன் கூற,

"ஓ.." என்றவன் "சரி கிளம்பு நேரம் ஆகுது"என்றான்.

"டேய் இப்பதேய்ன் ஒரு ரவுண்ட் போயிருக்கு அதுக்குள்ளவா! இன்னொரு ரவுண்ட் டா"என்றான்.

"இப்ப நீ வரலை நான் உன்னை தூக்கிட்டு போவேன்| என்றான் வெற்றி.

|வரேன் டா" என கணேஷ் முன்னால் செல்ல, அவன் பின்னோடு போனவன் கண்கள் மட்டும் சாருவை பார்த்த படி நகர்ந்தது.

சாரு கண்கள் சுற்றிலும் ஒரு முறை சுழற்ற ,
"என்னாச்சு சாரு?" என்றான் ரிஷி
"சம் திங்க் ரிஷி யாரோ என்ன பாக்குற மாதிரி இருக்கு "என்றாள்.

ரிஷி சிரித்தவன்" யூ ஆர் க்யூட் சோ எல்லாரும் உன்னை பார்ப்பாங்க" என்றான்.

"நோ லா" என்றவள் மீண்டும் ஒரு முறை பார்த்து "நவ் ஓகே" என்றாள்.

....

நீலகண்டன் ஜெயவேலிடம் பேச ஆரம்பித்தார்,"ஜெய் சார் உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்லை" என தொடங்க,

ஜெயவேல் என்ன சொல்ல வருகிறான் என்பதை போல் அவரை நிமிர்ந்து பார்த்தார்

"நான் என்ன சொல்ல வாரேன்னா சாருக்கும் ரிஷிக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம்னு ஒரு யோசனை சின்ன வயசுலயிருந்து ரிஷியை உங்களுக்கு நல்லா தெரியும் நான் சொல்ல வேண்டியதில்லை சாரு மேல அவனுக்கு அவளோ இஷ்டம் "என அவர் தொடங்க,

அதனை தடுத்து நிறுத்தியவர் "இ... இது சாருவோட வாழ்க்கை ந....நான் சொல்ல. ஒன்னுமில்லை "என முடித்து கொண்டார்.

"பாரேன் இவ்ளோ முடியாம இருக்கும் போதே திமிர் மட்டும் குறையுதான்னு "என உள்ளுக்குள் எண்ணி கொண்டார் நீலகண்டன்.
...
கணேஷ் செய்த அலப்பறைகள் எல்லாம் பொறுத்து அவனை தூங்க விட்டான் வெற்றி.
விழிகள் மூட அவன் சிந்தனை முழுவதும் சாருவே நிறைந்திருந்தாள்.இதுவரை எந்த பெண்ணையும் இத்தனை ஆர்வமாய் கண்டதில்லை அவன்,அவள் நினைவே அவனை தூங்க விடாமல் செய்ய எழுந்து அமர்ந்து கொண்டான்.
'ச்சே என்ன டா வெற்றி இது இப்படியா ஒரு புள்ளையை பத்தி நெனைப்பே ஏதோ பார்த்தோமா! வந்தோம்மா! இல்லாம இப்படி ராவுல தூக்கத்தை கெடுக்கிற அளவா உன் மண்டையில ஏத்திட்டு திரியுற,அப்படி என்னத்தை அவ அழகா இருக்கா!" என அவன் மனம் கேட்க,

'யேன் அவ அழகுக்கு என்ன?சின்ன கண்ணு கூர் மூக்கு,என்ன கலர் உதடு ப்பா அது மட்டுமா என்ன கலரு டா அவ!அதுவும் அந்த காதின் ஓரத்தின் மச்சம் சொல்லும் போதே 'அவளின் பிம்பம் கண் முன்னால் தோன்றியது போலிருக்க காற்றில் தடவி பார்த்தான்.

பின் அதனை உணர்ந்து 'டேய் வெற்றி இம்புட்டு கிறுக்கு புடிச்சு திரியிரியா நீயி!'என அவன் இன்னொரு மனம் நகைக்க,

"ச்சே....ச்சே இல்லையே இல்லவே இல்லை" என்றான்.

இல்லாமலா இப்படி காத்துல படம் போடுற வென்ரு ,அவ போன இடத்தை பார்த்ததில பாரு குடிகாரி டா அவ என்றது அவன் மனசாட்சி.

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை அவ குடிச்சது கூல் ட்ரிங்க் மாதிரி தான் இருக்கும் உடம்புக்கு கூட நல்லதுதேய்ன்" என கூற,

'ஓ.... அப்படி முத்தி போச்சா,சரி அவ கூட வந்தானே தொடுப்பு அவனை என்ன செய்வீக?'என்றது அவன் மனசாட்சி.

"ம்ம்ம்ம் நமக்கு ஒன்னு வேணும்னா யாரா இருந்தாலும் போட்ற வேண்டியதுதேய்ன்" என்றான் வெற்றி.

"யாரை பங்கு போட போற?" என அரை தூக்கத்தில் கணேஷ் கேட்க,

"உன்னை தான்டா வென்ரு, ஒழுங்கா தூங்கற வழிய பாரு "என்றவன் நேரத்தை பார்க்க, அது விடியலின் தொடக்கத்தில் இருந்தது.

"டேய் வெற்றி ஒழுங்கா தூங்கு காலையில போய் உன் மாமனை பார்த்து ரவுசு கட்டணும் வந்த வேலையை பாரு அப்புறம் உன் ஜில்லை தேடி பார்க்கலாம்" என எண்ணி கொண்டே தூங்கி போனான்.


 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top