JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அதிகாரனே!!அதிரூபனே!!

Suhana

Well-known member

அத்தியாயம்-1:
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்! .....


என பாடல்கள் காதில் விழவும் எப்போதும் போல் நிமிர்ந்து நேரத்தை பார்த்தவன் மீண்டும் உறங்க செல்ல,சற்று நேரத்திலேயே அவனை எழுப்பி விட்டது அவன் கைபேசி. அதில் ஒலிக்கும் பாட்டினை வைத்தே யார் என உணர்ந்தவன்,"இவனோட " என கைபேசியை அணைத்தவன் கண்கள் மூட, விழி மூடியவனை மீண்டும் தட்டி எழுப்பியது "சூர்யானா யாருன்னு தெரியுமா" என்ற வசனத்துடன் ஓடிய தளபதி பட பாடல்,

"ப்ச்...இவன" என கண்கள் மூடிய படி காதில் வைத்தான் வெற்றிவேல் பாண்டியன்.

"ஹலோ" என எதிர் பக்கம் குரல் வர,

"ஏய் வென்ரு!! ஹலோ சொல்ல தான் இப்போ கூப்பிட்டியா,கொன்றுவேன் வை டா" என வெற்றியின் வசவுகளை வாங்கியவன் கணேஷ் என்ற கணேசலிங்கம்.

"டேய் மச்சான் நான் சொல்றதை கேளு டா" என மூச்சை வாங்கிய படி பேச,
"என்னடா நீயி ஜாக்கிங் போறியாக்கும் ? அதுக்கு தான் இந்த விளம்பரமா? போடாங்க" என வெற்றி வைக்க போக,

"வெற்றி டேய் வச்சுடாத டா, என்ன நாலு பேரு தொரத்துரானுங்க டா"என்றவன் மூச்சினை வாங்க,

அதுவரை படுத்த படியே பேசியவன்,
"எங்க இருக்க நீ?" என்றான் எழுந்து கொண்டே,


"சிம்மக்கல் " என்றவன் இருக்கும் இடத்தையும் சொல்ல,


"நீ ஓடிக்கிட்டே இரு" என வைத்தவன் ,வேகமாய் கையில் கிடைத்த சட்டையை போட்டு கையோடு கூலர்ஸை எடுத்து போட்ட படி, கணேஷிற்கு அடுத்து அவனின் உற்ற நண்பன் அவன் பள்ளி பருவம் முதல் ஆசைப்பட்,டு கல்லூரி படிக்கும் போது அவன் கேட்டும் அவன் தாயால் நிராகரிக்க பட்டு, பின் அவன் சுயமாய் சம்பாதித்து வாங்கிய ராயல் என்பீல்ட் அதுவும் கருப்பு நிறம் மட்டுமே வேண்டும் என கூறி,அதையே வாங்கியிருந்தான்.இது அவனின் கருப்பு நிற இரும்பு குதிரை,அத்தனை வேகம் அவன் வேகம், அத்தனை மோகம் அந்த வண்டி மேலும் அவனுக்கு,

கணேஷை துரத்தியவர்கள் அவனை பிடிக்க,"ஏண்டா வந்தோம்மா போனம்மான்னு இல்லாம என்ன டா சவுடாலு? அம்புட்டு பெரிய சண்டியரா நீயி" என அவனை அடிக்க,

இன்னொருத்தவன் "அண்ணே அவன் ஓடிக்கிட்டே யார்கிட்டயோ போன் பேசுனான்.யாருன்னு பாரு போலீஸா இருக்க போவுது"என கூற,


"அப்படியா"! என கணேஷை அடித்தவன் அவன் போனை பிடுங்கி கடைசியாய் அவன் டயல் செய்த எண்ணுக்கு டயல் செய்ய,


அதே நேரம் அந்த இரட்டை கால் இரும்பு குதிரை தூசியை பரப்பிய படி அதனின் பிரத்யோக சத்தத்துடன் வந்து நிற்க,சுற்றி நின்றவர்கள் அனைவரும் நிமிர்ந்து பார்த்தனர்.


வெற்றி நின்ற வாக்கிலே வண்டியை நிறுத்தியவன் இறங்கி ஒரு காலின் மேல் ஒரு காலினை வைத்து தன் வண்டி மேல் சாய்ந்து கொண்டு தன் கூலர்ஸை எடுத்து சட்டையின் நடுவில் போட்டு,முழுக்கை சட்டையை கைமுட்டி கீழ் வரை மடித்து விட்டு ,கைகள் இரண்டையும் கட்டி கொண்டு வேடிக்கை பார்க்க,

அவன் நின்ற வாக்கில் வண்டியை நிறுத்தியதிலேயே அவன் உயரத்தை கணிக்க' அவன் வந்து சண்டையிடுவான் என கணித்தனர் கணேஷினை பிடித்து வைத்தவர்கள்.


அவன் சண்டையிடாமல் வேடிக்கை பார்க்க,ஒவ்வொருத்தரும் தனக்குள் சிரித்து கொண்டே, "அண்ணே இவனும் வேடிக்கை பார்க்கத்தேன் வந்திருக்கான்.நீங்க போன் பண்ணுங்க எந்த சண்டியர் வாரான்னு பார்ப்போம்" என கூற டயல் செய்தான்.அவனின் அழைப்பின் ஒலி அவன் காதின் அருகிலே கேட்க, அதிர்ந்து திரும்பினான் .


வெற்றி புருவம் உயர்த்தி "நாந்தேன் அந்த சண்டியரு" என கணேஷை பிடித்து வைத்திருந்தவனை அடிக்க,அதே நேரம் வெற்றியின் போன் அழைக்க,எடுத்தவன் "ரோஸ் "என்று வர,


"இவுக வேற நேரம் காலம் தெரியாம என்ன மா", என்றான் பிடித்திருந்தவன் கையை முறுக்கிய படி,


"ஏன்டா வெற்றி ஞாயித்து கிழமை அதுவுமா எங்க போன?,அவ்வா கிட்ட கூட சொல்லிட்டு போகலயாம்."


"மா அவசரமா முடிக்க வேண்டிய சோலி ஒன்னு இருந்துச்சு அதேன் வந்தேன் சொல்லுங்க ,என்ன இப்ப?"


"இட்லிக்கு போட்டி குழம்பு வைக்கவா இல்லனா மட்டனா?",


"இப்போ போட்டியை குழம்பு வைங்க மதியம் நாட்டு கோழி சூப் வச்சுட்டு மீனை வாங்கி குழம்பை வைங்க, நண்டை பெப்பர் போட்டு பிரட்டுங்க" என்றவன் அவர் பதிலை கேட்காமல் வைத்தான்.



தன் சரிபாதி பேசியதை பார்த்தவர் அவன் வைத்ததும் "என்ன என்ன வேணும் சொல்லிட்டாங்களா?" என கேட்க,


"என்ன நீங்க பெத்த புள்ளை கிட்ட மரியாதை கொடுத்து பேசிக்கிட்டு" என அங்கலாய்த்தார் ரோஸ் என வெற்றியால் அழைக்கப்படும் சாரோஜா.


"காரணம் தெரிஞ்சு ஏன் கேக்குற? "என தன் வண்டியை எடுத்து கிளம்பினார் ராகவன்.



வெற்றி மெனுவினை சொல்லி வைக்கவும், மற்ற மூவரும் கணேஷின் புறமிருந்து வெற்றியின் முன்னால் வர, தன் கருநீல வண்ண வேஸ்டியை மடக்கி கட்டியவன் அவர்களையும் பந்தாட சற்று நேரத்திலேயே போலீஸும் அவ்விடம் வர,அனைவரையும் போலீஸ்ஸ்டேஷனுக்கு வர சொல்லி ஜீப்பில் ஏற சொல்ல,

வெற்றி உடனே"நீங்க போங்க அந்த ஸ்டேஷன் தானே ,இன்ஸ்பெக்டரின் பெயரை சொல்லி அவர் தானே இஞ்சார்ஜ் போங்க,நாங்களே வாறோம் நம்பிக்கை இல்லைனா வெற்றிவேல் பாண்டியன் சொல்லுங்க "என கூற,

வந்த சப் இன்ஸ்பெக்டர் அவனை ஏற இறங்க பார்த்தான். அவனின் கருநீல வேஷ்டி அதற்கு தகுந்தாற்போல் சந்தன நிற சட்டை அவனின் முறுக்கி விட்ட மீசை அதுவும் அவன் பேசும் போது அவன் திருவி விட்ட விதம் வேறு பீதியை கிளப்ப ,அவன் மனதிற்குள் 'நான் அப்பவே சொன்னேன் என்னை சவுத் சைடு போடாதீங்க அதுவும் மதுரையினா வேணவே வேணாம்னு கேட்டனுங்களா!" என அவனை பார்த்து சரி "பின்னாடியே வா" என கூற, மீண்டும் வெற்றி தன் மீசையை முறுக்கி அவனை ஆழ்ந்து பார்க்க, "வா...வாங்க சார்"என கூறி சென்றான் போலீஸ்.

"ஏறு டா "என்றான் நண்பனிடம். அவனின் வேகம் புரியும் ஆதலால் கணேஷ் வெற்றியை இறுக்கி பிடிக்க, "ஏன்டா நீ என்ன புது பொண்டாட்டியா? இப்படி இறுக்கி பிடிக்கறவேய்ன்? கையை எடுடா பக்கி "என்றவன் வேகம் போலீஸ் ஸ்டேஷன் வந்து தான் நின்றது.

உள்ளே நுழைந்தவனை அங்கிருந்த கான்ஸ்டபிள் வணக்கம் வைக்க, அதனை தலை அசைப்போடு ஏற்ற படி உள்ளே சென்றான்.

அவன் நுழைந்த சிறுது நேரத்திலே உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர். வெற்றியை பார்த்தும் "என்ன வெற்றி இந்த பக்கம்? எதுவும் கேஸ் விஷயமா? அதுவும் ஞாயித்து கிழமை வந்திருக்கிங்க?" என கேட்க,

"கேஸ்தேன் உங்க எஸ்.ஐ தேன் கூட்டியந்துருக்காக என்னன்னு நீங்க தான் சொல்லணும்" என்றவன் குரலில் சிறிதும் பயமில்லை.

திரும்பி எஸ். ஐ யை பார்த்தவர் பின் வெற்றியிடம் " விடுங்க வெற்றி,தம்பி புதுசு, அதேன் நீங்க யாருன்னு தெரியலை, வாங்க வெளியில் போய் பேசுவோம்" என கூட்டி சென்றார்.

வெற்றி அவரோடு நடந்தவன் திரும்பி புது எஸ். ஐ அருகில் வந்து 'உங்க பேரு என்ன?", என்றவன் அவனின் பெயர் பேஜ்ஜை பார்த்து சேகர் "ம்ம்ம்ம் நல்லா இருக்கு "என மீண்டும் அவரோடு சேர்ந்து கொண்டான்.


அவர்கள் சென்றதும் கான்ஸ்டபிளிடம் "ஏண்னே யாரு அது ? பார்த்தா பெரிய ரவுடி மாதிரி இருக்கான். அவனை போய் இன்ஸ்பெக்டரே வெளிலே கூட்டிகிட்டு போறாரு" என கூற,


"அட தம்பி சும்மா இருங்க வெற்றி தம்பி காதுல விழுவ போகுது "எனும் போதே,எஸ். ஐ கண்கள் வெற்றியை பார்க்க,


வெற்றியும் அவனை பார்த்து சிரித்த படி கைகள் இரண்டையும் மேலே தூக்கி "எங்க மண்னு வந்தாரை வாழ வைக்குற மண்ணு புரிஞ்சு சூதானமா நடந்துகங்க தம்பி" என்றவன் குரலில் அத்தனை நக்கல் வழிந்தது.


அவன் சென்றதும் உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் "ஏன்யா கை ஏதும் இவியிங்க மேல வச்சுருவேன்னு எதுவும் சொன்னியா?",

"இல்லை" என்பதை போல் தலையாட்டினான்.


"அந்த மீனாட்சி தான் நம்மளை காப்பாதிருக்கா" என்று கோபுரம் பார்த்து ஒரு கும்பிடு போட்டார்.

"ஏன் சார்,? அவரு என்ன அவ்ளோ பெரிய ஆளா!".

"யோவ் அவரை யாருன்னு நினைச்ச? மதுரை கோர்ட்குள்ள போய் வெற்றிவேல் பாண்டியன்னு சொல்லி பாரு சும்மா பார் கவுன்சிலே அதிரும்,"

"ஏன்?" என்பது போல் பரிதாபமாக சேகர் பார்க்க,

"அவரு லீடிங் லாயர் யா, போதா குறைக்கு பிபி (பப்ளிக் ப்ரோஸ்க்கூயுடர்)ஜுனியர் வேற,"

"என்னது வக்கீலா?",

"அட ஆமா யா, ஒரு கேஸை எப்படி சிவிலா மாத்தனும்,இல்லை எப்படி கிரிமினலா மாத்தனும்ன்னு நல்லா தெரிஞ்சவிய்ங்க ரெண்டு பேரும், அதான் கேட்டேன், நீ கையை வைப்பேன் கிப்பேன்னு ஏதாச்சும் சொல்லியிருந்த,இங்க ஒரு லாயர்க்கே பாதுகாப்பு இல்லை ,வன்கொடுமைன்னு ஏதாச்சும் பண்ணி நம்ம ரெண்டு பேரையும் ஒரு வழி பண்ணிருப்பாய்ங்க" என்றவர் முகத்தில் வியர்வை அரும்ப,முகத்தை துடைத்து கொண்டார்.

'சாதாரணமாய் சொன்னதற்கே இப்படி வியர்வை வழியுதுன்னா? பெரிய ஆளுங்க தான் போல,நல்லவேளை நம்ம வாயை திறக்கலை',என்று நினைத்தவன், 'முத வேலையா நம்ம குல சாமிக்கு பொங்கல் வைக்கணும்' என எண்ணி கொண்டான்.

......


எல்லாரையும் அலற வைத்தவன் இங்கே நிறுத்தி நிதானமாய் காலை உணவை ரசித்த படி இருந்தான்.

"ஏன்யா வெற்றி இன்னும் ரெண்டு இட்லி வச்சுக்க" என வைத்தவர், கணேஷிடம் திரும்பி "ஏன்டா அப்படி என்ன பிரச்சனை? காலங்காத்தலா போய் அடி வாங்கிட்டு வந்திருக்க,",

வெற்றியும் அவனிடம்" ஆமா அப்படி என்ன டா பிரச்சினை?",

"ஏன்டா என்னன்னு தெரியாமதேன் அங்க போனியா".

"ரோஸ் என்ன இப்படி கேட்டுட்ட ?? கூப்புடறது என் நண்பன் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருக்க முடியுமா!".

கணேஷ் கண்கள் கலங்க" நண்பேன்டா "என தன் கையினை தூக்கி வர,

"சாரி மச்சான் எச்ச கையை இருக்கு அப்புறம் அடிச்சுக்கலாம்" என இட்லியை பிட்டு வாயில் வைக்க, கணேஷ் அவனை "ஙே" என பார்த்தான்.

"சரி டா பார்த்தது போதும். என்ன நடந்துச்சு சொல்லு?" என்ற படி வெற்றி உண்ண,

"அது ஒன்னுமில்லை மச்சான் நான் உன்னை பார்க்க வந்தேனா ,சரி உனக்கு பிடிக்கும்னு வடை வாங்கலாம்ன்னு அந்த ******கடைக்குள்ள போனேன்."

"ஓ நீ எனக்காகத்தேன் அந்த கடைக்கு போனே.. சரி சரி அப்புறம்",

"சரி போனதுதேன் போனோம் நம்ம ரெண்டு வடையை சாப்பிடுவோம்ன்னு உக்காந்தேன்".

"சரி,"

"பய புள்ளைங்க அங்க இருக்குற போர்டுல வடை கெட்டி சட்னின்னு போட்டுருகாய்ங்க ,சரின்னு ரெண்டே ரெண்டு தான் மச்சான் கேட்டேன் வடையை வச்சாய்ங்க, கூடவே கெட்டி சட்னி வைப்பாய்ங்கன்னு பார்த்தா அப்படியே நம்ம வைகையாத்து தண்ணியை கொண்டாந்து கொட்டராய்ங்க ,எனக்கு வந்துச்சு பாரு கோவம் அப்படியே இழுத்து ஒன்னு விட்டேன் டா",


"யாரு நீயி? சரி சரி அப்புறம் சொல்லு".

"பார்த்தா நாலு பேர் அருவாவோட வாராய்ங்க ,அப்போ எடுத்தே ஓட்டந்தே நீ வரும் போதுதேன் நின்னுச்சு".


சரோஜா தன் முகவாயில் கை வைத்து "ஏன்டா ஓரு சட்னிகா இந்த அக்கபோரு, என்ன புள்ளைங்க டா நீங்க" என எழுந்து உள்ளே சென்றார்.


"பின்ன என்னமா மருதைகாரய்ங்கன்னா சும்மாவா" என்றவன் "என்ன மாப்பிளை சொல்றது கரெக்ட் தானேயா".



அதுவரை தன் வேலையில் கவனமாய் இருந்தவன் தாய் சென்றதும் "ஏண்டா நீயி சட்னிக்குதேன் சண்டை போட்ட அதை நான் நம்பனும், நான் சொல்லவா அங்க என்ன நடந்துச்சுன்னு ஏதோ ஒரு புள்ளையை பார்த்து பல்லை காட்டிருப்ப அவன் அப்பனோ மாமோனோ வெளுத்து விட்டுருப்பாய்ன்."

"எப்படி டா வெற்றி?" என்றான் ஆச்சர்யமாய்,

"கெரகம் உன்கூட இத்தனை வருஷமா குப்பை கொட்டுறேன்? எனக்கு தெரியாதா உன் பவுசு ,இந்த தடவை யாரு" என்றான் சிரிப்புடன்,


"ம்ம்ம்ம்" என்றவன் சற்று நகர்ந்து போய் "அவ புருஷன்" என உள்ளே ஓடி மறைந்தான்.அவனுக்கு தெரியும் அதுக்கு அடுத்து வெற்றி என்ன செய்வான் என நண்பன் ஓடுவதை பார்த்தவன் "எப்படியிருந்தாலும் எங்ககிட்ட தாண்டி வருவே இருக்கு உனக்கு" எனும் போதே சரோஜா கையில் முட்டையுடன் வந்தவர் "எங்க டா அவன் அவனுக்கும் சேத்துதேன் கொண்டாந்தேன் ".

"லபக்" என்று ஒன்றை எடுத்து வாயில் போட்டவன், "அவன் அப்போவே போயிட்டான் இதை இ. பி க்கு கொடுத்து உடம்பை தேத்தி விடு"என்றான் சிரிப்புடன்,


"ஏன்டா என் புருஷனுக்கு என்ன? இப்பவும் அழகாத்தேன் இருக்காக ,அதுவும் எம்மாம் பெரிய என்ஜினியரு!! நீ என்னமோ இ.பி ன்னு கிண்டல் பண்ணிட்டு கிடக்க, உனக்காக காலையிலேயே போய் கறியும் மீனும் வாங்கியந்தாருல? அதேய்ன் இப்படி பேச சொல்லுது" என்றார் சற்று கோபமாக,


"பார்றா... புருஷனை சொன்னதும் ரோஸ்க்கு கோவத்தை பாரேன். அவர் இ.பில தானே வேலை பார்க்குறாரு அதைத்தான நானுஞ்சொன்னேன்.உன் புருஷன் அழகந்தே. நான் வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்கவா?? என் ஜூனியர் பொண்ணு கூட கேட்டுச்சு",


"என்னான்னு?",

"சார் உங்க அப்பா மட்டும் இம்புட்டு கலரா இருக்காக? நீங்க ஏன் கருப்பா இருக்கீகன்னு ? அதுக்கும் இ.பி மேல ஒரு கண்ணுதேன் போல? என்ன பண்ணுவோம் சொல்லு."



"ஏன்டா நீ பெரிய லாயர்னா உன் வேலையை வெளில வச்சுக்க ,அந்த திறமையை என்கிட்டவே காட்டுவியாக்கும்" என வெற்றியின் காதை திருக,


"ஆ.... கையை எடு ரோஸ், வலிக்குது" என கத்தியவன். "ரோஸுக்கு ஏத்த ஜாக் தான் உன் புருஷன் என்னையை விடு "என கூற,



அதே நேரம் ராகவன் உள்ளே வர, இவர்கள் பேச்சு ஒரு முடிவுக்கு வந்தது. தாயின் காதின் அருகில் சென்று "ம்ம்ம்ம்...உங்க ஜாக் வந்துட்டாரு என்ஜாய் பண்ணுங்க" என கூறி சென்றான்.


"டேய் எங்களை சொல்றது இருக்கட்டும். வயசு இருபத்தொன்பது ஆக போகுது சீக்கிரம் கல்யாணத்தை பண்ணுற வழியை பாரு",


ரூமினுள் வந்தவன் கண்ணாடியில் முகம் பார்க்க, அவன் தந்தையை நினைத்து பார்த்தான். அவன் விளையாட்டாய் சொன்னாலும் ராகவன் நல்ல சிவந்த நிறம் தான், சரோஜா மாநிறத்தில் சேர்த்தி, ஆனால் வெற்றி சுத்த திராவிட நிறம் ,அலை அலையான கேசம் ,அதனை கலைத்து விட சற்று கலைந்து வந்து நெற்றியில் படர அதனை கோதி விட்டவன் ,சற்று சிரிக்க அவன் தாடை குழி அழகு அப்பட்டமாய் அதன் இருப்பை காட்டியது. ''விடுடா வெற்றி நீ அழகந்தேன்" என கூறும் போதே சரோஜா இறுதியாய் சொன்னது நினைவு வர, கல்யாணம் இது வரை எந்த ஓரு பெண்ணையும் அந்த கோணத்தில் பார்த்ததில்லை, ஏன் அவன் பின்னால் நாய் குட்டியாய் படிக்கும் காலம் முதல் இதோ இன்றும் ஜூனியர் என்ற போர்வையில் அவன் பின்னாலே சுற்றும் அஞ்சலி கூட அவனை ஈர்த்ததில்லை.


"கல்யாணம்" என்று சொல்லி பார்த்தவன் இந்த பய சொல்லுவானே கண்ணை மூடி பாரு மச்சான் யாரு முதல்ல கண்ணுக்குள்ள வாராகளோ அவுக தேன் உனக்கேத்த பொண்ணுன்னு செஞ்சுதேன் பார்ப்போமே, என விழி மூட,அவன் மூடியதும் முதலில் வந்த பெண்ணை பார்த்ததும் "அடேய் சண்டாளா உன்னை" என அவனை வசவு பாட தன் கைபேசியை எடுத்தான்.




******************
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top