JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -1

saaral

Well-known member
அத்தியாயம்-1

"மிஸ்டர் கௌஷிக் ...மிஸ்டர் கௌஷிக் ....சார் ப்ளீஸ் ஒன்லி ஒன் கொஸ்டின் " ஒரு பத்திரிகையாளர் அவனை தொடர்வதையும் கவனிக்காமல் வேகமாக மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டு இருந்த தனது கருப்பு நிற பி எம் டபிள்யு வாகனத்தில் ஏறி சென்றான் கௌஷிக் .

கௌஷிக் சாதாரண தமிழ் மகனின் உயரம் தாய் தந்தை கல்லூரியில் விரிவுரையாளர்களாக பனி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் . அவன் தந்தையை போன்ற மிடுக்கும் தாயை போன்ற அழகும் நிறைந்தவன் . நிச்சயம் இளம் வயதில் இருக்கும் பெண்களுக்கு இவன் ஈர்ப்புவிசையாக இருந்து தன் பக்கம் காணச்செய்யும் வல்லமை உண்டு .

கௌஷிகின் தங்கை கௌசல்யா ....இப்பொழுது அவளுக்காக தான் மருத்துவமனையில் விடியவிடிய காத்து இருந்து பார்த்துவிட்டு வெளியே வந்தான் . தனது தங்கை எவனையோ நம்பி ஏமாந்திருப்பது அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது. தந்தை வந்தவுடன் இவன் வீட்டிற்கு கிளம்பி சென்றான் .


அவனின் மனதில் ஆயிரம் கேள்விகள் மனதில் மின்னலாக தோன்றிய முகம் அவனை வதைத்தது . 'கர்மா இஸ் அ பூமராங் , யூ வில் பேய் போர் வாட் யூ ஹாவ் டன் டு மீ ' அந்த குரல் அந்த சொற்கள் அவனின் மனதை கிடந்து பிசைந்தது . அவன் செய்தது தவறு என்று தெரிந்தாலும் அதை ஒற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவனிற்கு இல்லை . ஆனால் இப்பொழுது கதையே வேறு அவனிற்கு அவனை சார்ந்தவர்களுக்கு அதே போன்ற நிகழ்வு என்று வரும்பொழுது அவன் செய்த தவறு பூதாகரமாக தெரிந்தது .

கௌஷிக் சுயமாக உழைத்து பேப்பர் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவி முன்னேறியவன் . அவர்களின் மேல் தட்டு நடுத்தர வர்கத்தின் வாழ்வை உயரச்செய்து பணக்கார வாழ்விற்குள் நுழைய வித்திட்டவன் .அவனின் மறுபக்கம் அவன் வாழ்வில் தொடக்கத்தில் செய்த ஒரு அநீதி இன்றளவும் மனதில் அவனை வதைத்தது . தொழிலில் கறாராக இருப்பவன் முதல் கோணலின் பிறகு பெண்களின் பக்கம் திரும்ப கூட இல்லை .

வீட்டிற்கு வந்த மகனை கட்டிக்கொண்டு கதறினார் ஸ்ருதி அவனின் அன்னை . "கௌஷிக் என்ன தான் நடந்துச்சு ஏன் கௌசல்யா இப்படி ஒரு முடிவை எடுத்தா " தாயின் கண்ணீர் அவனை கொள்ளாமல் கொன்றது .

நடந்தவைகலின் சுருக்கம் கௌசல்யா தனது நண்பர்களுடன் நடன வகுப்பு பயிற்சிக்கு சென்றிருக்கிறாள் அதில் ரக்ஷன் என்னும் நண்பன் அவளுக்கு பள்ளி காலத்தில் இருந்தே நன்கு பழக்கப்பட்டவன் அனைவரும் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பும் சமயம் ரக்ஷன் கௌசல்யாவிடம் வந்தான் "கௌசி நாளைக்கு ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஓர்பனேஜ்க்கு பண்றோம்ல அதுல சின்ன சேன்ஜ் நீ கொஞ்சம் இரு பேசிட்டு போய்டலாம் , நானே வீட்ல விட்டுடறேன் " என்று நயமாக பேசி தனித்து இருக்க செய்தான் பாவை அவளும் நண்பனென்று நம்பினாள் .

சற்று நேரத்தில் சில மாற்றங்களை பற்றி பேசிவிட்டு வெளியே சென்று யாருடனோ போன் பேசிவிட்டு வந்தவன் கௌசல்யாவை உடை மாற்றிகொள்ள சொன்னான் . அவள் டயிட் பாண்ட் மற்றும் நடனமாட ஏதுவான சட்டை அணிந்திருந்தாள் எப்பொழுதும் அதனுடன் திரும்பி செல்ல மாட்டாள் குர்தி ஜீன்ஸ் மாற்ற அறைக்கு சென்றவள் உடை மாற்றிவிட்டு வந்தாள் . ரக்ஷன் தனது காரில் கௌசல்யாவுடன் சென்று கொண்டு இருந்தான் .

திடீர் என்று ஒரு இடத்தில் நிறுத்தினான் கேள்வியாக நோக்கிய கௌசல்யாவை பார்த்து "வெல் கௌசி எனக்கு சுற்றி வளச்சு எல்லாம் பேச தெரியாது ....ஐ நீட் யூ டு ஸ்பென்ட் டைம் வித் மீ ....ஜஸ்ட் ஒரு ஒன் ஹௌர் ...யூ ஆர் சோ ஹாட் " என்றான் .

புரியாத பாஷை பேசியதை கேட்பது போல் குழந்தையை போன்று மலங்க மலங்க விழித்தாள் கௌசல்யா "ஹே கௌசி சில் எதுக்கு இவ்ளோ டென்ஷன் இங்க பார் நீ டிரஸ் சேஞ் பண்ற விடியோல எவ்ளோ ஹாட் தெரியுமா " கிரக்கமாக கூறினான் .

இப்பொழுது அதிர்ச்சியாகிய அவள் "வாட் " என்று அலறினாள் .

"ஹே கூல் பேபி ....நல்லா யோசிச்சு சொல்லு ஒன்னும் கட்டாயம் இல்லை இந்த காணொளிக்காட்சி நீ ஓகே சொன்னா சேப் ஹா என்கிட்ட இருக்கும் இல்லை பலபேர் பார்க்க செல்லும் ...நவ் தி பால் இஸ் இன் யூர் கோர்ட் " என்றுகூறி அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் இடியை இறக்கி , வீட்டிலும் இறக்கி விட்டான்.

இரவெல்லாம் தனிமையில் யோசித்த அந்த பத்தொன்பது வயது பெண் கையை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் துடித்தாள் . தாயறியாத சூழ் உண்டா ...ஸ்ருதி என்ன தோன்றியதோ மகளின் அறைக்கு இரவென்றும் பாராமல் சென்று பார்க்க விழைந்தார் கதவு திறந்த பாடில்லை ....தட்டி கத்தி பலவகையிலும் முயற்சித்தார் . சரவணன் (கௌஷிகின் தந்தை ) மனைவியின் குரல் கேட்டு எழுந்து வந்தார் , கௌஷிக்கும் வந்தான் கதவை உடைத்தனர் . மகளை அந்நிலையில் கண்ட தாய் மயங்கினார் .

தாயை தந்தையின் பொறுப்பில் விட்டு தங்கையை கைகளில் ஏந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடியும் வரை அவள் கண் திறக்க காத்துகொண்டு இருந்தான் . விடியும் தருவாயில் தனது அண்ணனை கண்ட பேதை அனைத்தையும் கொட்டி தீர்த்தாள் . அவனின் மனதில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைன்சீண்டி பார்க்கும் ஆணை "நீ எல்லாம் அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா " என்று ஏன் கேக்கிறாள் என்று உணர்ந்தான் . தன் வீட்டு பெண் என்று வரும் பொழுது வலிக்கிறதே அதையே இன்னொரு பெண்ணுக்கு எளிதாக செய்து விட முடிகிறதே .

எங்கே இதை எல்லாம் கூறினால் தாய் மீண்டும் துவண்டு விடுவாரோ என்று பயந்து "அம்மா நான் இருக்கேன்ல கௌசியை நான் பார்த்துகிறேன் அம்மா ...கவலை படாமல் ரெஸ்ட் எடுங்க " என்று அவரை தேற்றி ஓய்வெடுக்க அனுப்பி வைத்தான் .

அவன் மனதில் ரக்ஷனை கொள்ளும் வெறி வந்தது அவனிடம் இருந்து காணொளிக்காட்சிகள் பதிவுகள் பறிக்க பட அணைத்து ஏற்பாட்டையும் செய்துவிட்டான் . இப்பொழுது தனியாக சென்று கத்த வேண்டும் போல் தோன்றியது அவனிற்கு .

மெதுவாக மேலே ஏறி சென்றவன் தனது அறைக்குள் சென்றான் . வேலைகள் பல இருந்தாலும் எதையும் நினைக்காமல் கட்டிலில் விட்டத்தை பார்த்து விழுந்தான் . " வான்மதி " என்று சொல்லி பார்த்தான் .

அவன் கண்களின் முன் கண்ணீர் தேங்கினாலும் அதை வெளிக்காட்டாமல் விழிகள் பளபளக்க தன்னை முறைத்துக்கொண்டு இருபத்தியொரு வயது பெண் நிற்பதை போன்ற தோற்றம் . "மிஸ்டர் கௌஷிக் பெண் என்றால் என்ன இருக்குமோ அது தான் எனக்கும் இருக்கிறது . இதில் புதிதாக நீங்க எதையும் இணையத்தில் என்னை பற்றி காட்டவில்லை ....எனக்கு அதை பற்றிய கவலையும் இல்லை ....நீங்கள் நினைத்தது ஒருபொழுதும் நடக்காது ...என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று கூறி வேகமாக திரும்பிய அவள் சட்டென்று அவன் பக்கம் திரும்பி "வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பெண்களிற்கு ஏதேனும் என்னிடம் இருந்து வித்தியாசம் இருக்கிறதா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் " கோபமும் நக்கலும் ஒரு சேர கூறினாள் .

"ஏய் " என்று அமர்ந்து இருந்தவன் கர்ஜித்துக்கொண்டே மேஜையை தட்டி எழுந்தான் .

"ஷ்ஷ் ....இப்படிலாம் கத்தினால் பயந்துவிடுவேனா ...கர்மா இஸ் அ பூமராங் ....யூ வில் பேய் போர் வாட் ஹவ் யூ டன் டூ மீ ...குட்பை " எண்று கண்களில் நீர் நின்று மின்ன நிமிர்வுடன் தயிரியமாக கூறி சென்ற அவள் அவனை இன்றளவும் மிகவும் தாக்கினாள் .
 

Jasmine

New member
Really Karma has to be a Boomerang in real life also. Then only these kind of creatures will realise what they’re doing😡😡😡😡😡
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top