JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -1

saaral

Well-known member
அத்தியாயம் -1

அந்த கல்லூரியின் வாசலில் தனது ஸ்கூட்டியில் ஒரு பக்கமாக தாங்கியில் சாய்ந்து நின்று இருந்தாள் சஹானா ..... எளிமையான தோற்றம் மேல் தட்டு நடுத்தர வர்கத்தின் குணாதசியங்கள் ....திருத்தப் படாத புருவங்களும் ,பருவ வயதிற்கேற்ற முகப்பொலிவும் கொண்டிருந்தவள் . கொடி இடையாள் என்று சொல்லவும் இயலாது ,இல்லை அதிக பருமன் என்று கூறவுமுடியாத இடை . அவளின் உயரத்திற்கு ஏற்றார் போன்று இடை இருந்தது . பதினெட்டு வயது மங்கை .

அந்த கல்லூரியில் பொறியியல் முதல் வருடம் இரண்டாம் பருவத்தில் வந்து சேர்ந்திருக்கிறாள் . அங்கு இருக்கும் தனக்கான ஒரே நட்பான மிருதுளாவிற்காக காத்துகொண்டு நின்று இருக்கிறாள் .

மிருதுளா நல்ல பெண் , என்னவோ சஹானா கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து மிகவும் ஒட்டுதலோடு இருந்தாள் . மிருதுளாவிற்கு சஹானாவை பார்க்கும் சமயம் எல்லாம் அவளின் பள்ளிக்கால தோழியே நினைவில் வருவாள் ....இருவருக்கும் இருக்கும் பல ஒற்றுமைகள் மிருதுளாவை சஹானாவின் மீது அளவுகடந்த பாசத்தை உருவாக்க காரணியாக இருந்தது .

மிருதுளா பெரிய குடும்பத்தில் பிறந்தவள் அவளுக்கு இரு அண்ணன்கள் . பிரவீன் மற்றும் சதீஷ் ....பிரவீன் இளங்கலை முடிக்கும் தருவாயிலே குடும்ப தொழிலான டீ எஸ்டேட் மற்றும் டீ தயாரிப்புகளில் இறங்கிவிட்டான் . தொழிலை பார்த்துக்கொண்டே முதுகலை படித்தவன் இன்னும் விவசாயம் சார்ந்த பல தொழில்களில் அனுபவப்பாடம் கற்று தேர்ந்தான் , அதில் கால் ஊன்றி வெற்றியும் கண்டான் . தற்சமயம் பிரவீனின் வயது இருபத்தி ஐந்து . பிரவீனை விட ஒரு வயதே இளையவனான சதீஷ் மென்பொறியியல் நிறுவனம் நடத்த வேண்டும் என்று தந்தையிடம் கேட்டு, புதிதாக தொடங்கி நடத்தினான் . அவன் அதில் கண்ட வெற்றிகள் ஏராளம் . பல தொழிகளில் தங்களின் மகன்கள் காலூன்றி கோலோச்சுவதை கண்டு விஸ்வம் , சாரதா தம்பதியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி .

மிருதுளா நினைத்தால் தினமும் ஒரு காரில் வந்து செல்லும் வசதி ...ஆனால் அவளோ தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வருவதையே விரும்பினாள் .சாரதாவிற்கு இதில் கோபம் "மிருது நம்ம ஸ்டேட்ஸ்க்கு ஈகுவலா இருக்கவங்களோட பழக்கம் வச்சுக்கோ இதென்ன ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த பெண் கூட பழகுறது ?" என்பார் .

மிருதுளாவும் கோபம் கொண்டு "நட்புல ஸ்டேட்டஸ் பார்க்காதீங்க ....எனக்கு பிடிச்சதை நான் செய்றேன் ....விட்ருங்க , இல்லை பிரவீன் அண்ணா கிட்ட சொல்லிக்கொடுத்துடுவேன் " கிட்டத்தட்ட மிரட்டல் தான் . பிரவீன் என்றால் அனைவர்க்கும் அந்த வீட்டில் பயம் நேர்மையானவன் , நல்லவனும் கூட...

விஸ்வம் போன்று காரியமாக பிறருக்கு கூஜா தூக்கமாட்டான் . சாரதாவை போல் பணத்தையே வாழ்க்கையாக நினைக்க மாட்டான் . சதீஷ் விஸ்வம் மற்றும் சாரதாவின் மறுபதிப்பு ...பணம் பணத்தோடு தான் சேரும் என்று நம்புபவன் . பிரவீன் ஏறக்குறைய மிரட்டி வைத்திருந்தான் அனைவரையும் "இதோ பாருங்க என் வழில யாராச்சும் குறுக்க வந்தீங்க எதையும் பார்க்க மாட்டேன் ...தொழிலை நீங்களே பார்த்துக்கோங்க " என்றுவிட்டான் .

"என்னப்பா இப்படி சொல்ற அப்பா வயசானவர் " என்பார் சாரதா .

"உங்க சின்ன மகனுக்கு வயசு கம்மி தானே அவன் பார்க்கட்டும்" ஒரே வார்த்தையாக முடித்துவிடுவான் . சதீஷிற்கு ஏதோ விஞ்ஞானத்தில் இருந்த ஆர்வம் மண்ணின் மீதும் , விவசாயத்தின் மீதும் இல்லை . அதை அறிந்தே கூறுவான் . சதீஷிற்கும் , பிரவீனிற்கும் பல கருத்துவேறுபாடுகள் ..,ஒத்துப்போகாது இருந்தும் ஒருவருக்கு ஒன்று என்றால் மற்றவர் உடனே ஓடிச்சென்று முன் நிற்பர் . இருவரும் ஒன்று போல் யோசிப்பது மிருதுளாவை பற்றி . அவள் மேல் இருவருக்கும் கொள்ளைப்பிரியம் .

சஹானா மிக தீவிரமாக ஒரு கையை ஸ்கூட்டியின் முன் பகுதியில் வைத்து , மறுகையை தாடையில் வைத்து எங்கோ பார்வையை பதித்து யோசித்துக்கொண்டிருந்தாள் . 'இன்னும் இந்த மிருது லைப்ரரி விட்டு வரல சரி நம்ம சைட் அடிக்கிற வேலையை பார்ப்போம் ' என்று தனக்குள்ளாக பேசிக்கொண்டே பார்த்திருந்தாள் .

அதற்குள் மிருதுளாவும் வந்தாள் , சஹானாவின் வாகனத்தின் அருகில் ஒரு வெளிநாட்டு காரும் வந்து நின்றது . சைட் தடைபட்ட கடுப்பில் நிமிர்ந்த சஹானாவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள் மிருது "அடியே இங்க என்ன பன்னிட்டு இருக்க " ஒற்றை புருவத்தை தூக்கி கேட்டாள் மிருதுளா .

"அது சும்மா லுலலைக்கு நீ லைப்ரரி போய்ட்ட எனக்கு போர் அடிக்கும்ல , அதான் சைட் அடிச்சேன் " என்று மிகத்தீவிரமாக கூறினாள் சஹானா .

"உன்னை திருத்தவே முடியாது "அலுத்துக்கொண்டாள் .

"ஒய் வயசு பசங்கள வயசு பொண்ணுங்களே சைட் அடிக்கலைனா எவ்ளோ பெரிய குத்தம் , என்ன நீ ?...சரி அதை விடு அங்க அந்த ஆள பார்த்தியா " தோழியையும் கூட்டு சேர்க்க முயன்றாள் சஹானா .

"சஹா " என்று பல்லைக்கடித்தாள் மிருது .

"ஹே சில் சொல்றத கேளு கடந்த ரெண்டு மாசமா உனக்காக வெயிட் பண்றப்ப நானும் பார்க்கிறேன் அந்த ஆளு டெய்லி ஒரு கலர் ஷர்ட் போட்டு வந்து நிக்கிறார் அதே கலர் டிரஸ் போட்ட ஏதாச்சும் பொண்ணு வந்தா உத்து உத்து பாக்கிறார் ...பாவம் யாரும் செட் ஆகலை போல "உச்சுக்கொட்டிக்கொண்டே சற்றே தள்ளி இருக்கும் பேருந்து நிறுத்தத்தை காட்டி பேசிக்கொண்டிருந்தாள் சஹானா .

"உன்ன கொல்லப்போறேன் டெய்லி இதே வேலையா இருக்கியா ...போய் உறுபடர வழியைப்பாரு " என்று மிருது கூறிக்கொண்டிருக்கையிலே பக்கத்தில் நின்று இருந்த காரில் இருந்து இறங்கிய பிரவீன் "மிருது " என்றான் .

"அண்ணா ....நான் உன்னை கவனிக்கவே இல்லை இது புது கார் போல இருக்கு ?" என்றாள் மிருது கேள்வியுடன் .

"இது சதீஷ் உனக்காக அனுப்பிச்சான் ...நெக்ஸ்ட் வீக் உன் பர்த்டே வருதே " பிரவீன் புன்னகையுடன் கூறினாலும் பார்வை சஹானாவின் மீது நின்றது .

சஹானாவும் இவர்களை தான் மென்புன்னகையுடன் பார்த்திருந்தாள் . பிரவீனின் பார்வை சென்ற திக்கை கண்டு "அண்ணா இது என் பிரின்ட் இந்த செமெஸ்டர்க்கு தான் ஜோயின் பன்னிருக்கா , இதுக்கு முன்னாடி பெங்களூர்ல படிச்சா பேமிலி ரீசன் டிஸ்கேன்டின்யூ பண்ணிட்டு வந்துட்டா " என்று மிருதுளா அறிமுகம் செய்துவைத்தாள் .

"ஒஹ் உன் பிரின்ட் செம ஆப்செர்வேர் மிருது ,நான் இந்த ஆளை பல நாளா பார்க்கிறேன் ...உனக்கு தெரியாது இல்லையா பட் வந்த கொஞ்ச நாளிலே கரெக்டா கெஸ் பண்ணிட்டாங்க " வஞ்சிப்புகழ்ச்சி அணியில் ஏற்றுவதை போல் இது உனக்கு தேவையா என்ற எள்ளலுடன் இறக்கினான் .

அதை புரிந்து கொண்ட சஹானா "ப்ரோ நாங்க சைட் அடிக்கலைனா பசங்க பீல் பண்ணமாட்டாங்களா ....இதோ பாருங்க நீங்களும் ஸ்மார்ட்டா ஹாண்ட்ஸம்மா ,டாலா , வைட் ஹா சும்மா நம்ம மேடிக்கே டப் கொடுக்கிற ஸ்மைல்லோட இருக்கீங்க இப்ப ஒரு பொண்ணு கூட பார்கலைனா உங்க மனசு வருத்தப்படாது ....." படபடபட்டாசாக பொரிந்தாள் .

அவனிற்கு அவளின் பேச்சு பிடித்தாலும் அந்த ப்ரோ என்ற அழைப்பு வேப்பங்காயா கசந்தது 'அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டா எனக்கு ஏன் பிடிக்கலை ' என்று அவனுள் இருக்கும் மனசாட்சி கேள்வி கேட்கையில் சரியாக மிருதுவும் சற்றே உரிமையுடன் "ஹே சஹானா என் அண்ணா ஓகே ,நீ எல்லாம் ப்ரோ கூப்பிடாத "என்றாள் பொறாமை கலந்த குரலில் .

"சஹானா ?" என்று கேள்வியாக வந்து விழுந்தது பிரவீனின் வார்த்தைகள் , அவனின் கண்களில் ஒளி .

"அண்ணா இந்த பட்டாசோட பெயர் சஹானா ....சஹா திஸ் இஸ் மை ஸ்வீட் பிரவீன் அண்ணா " என்று இடையிட்டாள் மிருது .

"ஒஹ் உங்களை எப்படி கூப்பிட ...? உங்க தங்கச்சி உரிமை கொடி தூக்கிட்டாளே ....." யோசனையில் ஆழ்ந்தாள் சஹானா .

அவள் எதுவேனும் ஏடாகூடமாக சொல்லிவிடுவாளோ என்று பயந்த பிரவீன் "ஜஸ்ட் கால் பிரவீன் " கூறிய நொடி தங்கையிடம் திரும்பி "போலாமா மிருது " என்றான் .

"சஹா இன்னைக்கு அண்ணாவோட போறேன் ...நாளைக்கு மோர்னிங் பார்க்கலாம் சரியா " பிரவீனுடன் கிளம்பினாள் மிருதுளா .

அவர்கள் சென்றவுடன் தீவிர முகபாவனைக்கு மாறிய சஹானா தனது அலைபேசி எடுத்தாள் . சரியாக அப்பொழுது அலைபேசியும் ஒளி எழுப்பியது .

"ஹலோ " என்றாள் சஹானா .

"மேம் போலோவிங் ..... தட் இஸ் ஓவர் டார்கெட் ரைட் ..." அந்தப்பக்கத்தில் இருந்த குரல் தீவிர பாவனையில் வினவியது .

"எஸ் ...ரிப்போர்ட் டூ டேஸ்ல என் இன்போக்ஸ்ல இருக்கனும் ......அந்த டேட் எங்க இருந்தாங்க என்ன பண்ணாங்க இத்தனை நாள் என்ன பண்ணாங்க ....அண்ட் பாக்கிரௌண்ட் செக் அபௌட் புள் கேரக்டர் ...காட் இட் ??" அதிகார தோரணையில் கேட்டாள் சஹானா .

"எஸ் மேம் " என்றது அந்த குரல் .

கார் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்த சஹானாவின் கண்களில் இருந்து எதுவும் தப்பவில்லை . பிரவீனின் கண்களிலிருந்து ஆராய்ச்சி , அவன் கண்ணில் இவள் ப்ரோனு கூப்பிட்ட சமயம் தோன்றிய பிடித்தமின்மை , பெயர் தெரிந்தவுடன் தோன்றிய மின்னல் எதுவும் தவறவில்லை .

பார்ப்போம் இந்த பதினெட்டு வயது பாவை என்ன செய்ய காத்திருக்கிறாள் என்று ....!!

..............................

அடுத்தநாள் காலை பிரவீன் எட்டு மணிக்கு எழுந்தான் . எழுந்தவன் தனது வீட்டின் மேல் தலத்தில் இருந்த பால்கனியில் நின்று தனது மொபைலை பார்த்துக்கொண்டே வேலைக்கார பெண்மணி கொடுத்துச்சென்ற காபியை ரசித்து பருகினான் .

அப்பொழுது வீட்டின் வாயிலில் இருந்து ஹாரன் சத்தம் 'யார் அது விடாமல் இப்படி சத்தம் கொடுக்கிறது ?' எண்ணிக்கொண்டே எரிச்சலுடன் பார்த்தவனின் பார்வை மின்னியது .

தனது ஸ்கூட்டியில் வந்த சஹானா இறங்காமல் அப்படியே ஹாரனை அழுத்திக்கொண்டு வீட்டின் வாயிலை பார்த்துக்கொண்டிருந்தாள் ....

பிரவீன் என்றும் ரசிக்கும் அவளின் பக்கவாட்டு தோற்றம் , வலதுப்பக்க காதின் கீழ் பிறை போன்ற மச்சம் ....முன்பும் இதே போன்றதொரு தோற்றத்தில் தான் அவன் வீழ்ந்தான் ...இன்று வரை எழுந்துகொள்ள முடியவில்லை ..!!.

"அன்னைக்கு பார்த்த மாதிரியே இருக்க சஹானா ...மறுபடியும் உன்னை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை ...உன்னை நேத்து பார்தொடனே சந்தேகம் வந்துச்சு எப்படி மறந்தேன் ..." தனக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தவன் தெளிந்தான் "எஸ் இது வரை நான் உன் முகத்தை நேராக பார்த்ததில்லை அதான் சட்டென்று இரண்டு ஆண்டுகள் களித்து கண்டுபிடிக்க முடியலை ".

அவனின் யோசனையை கலைத்தது மிருதுளாவின் குரல் "பை அண்ணா " என்று மேல் நோக்கி சத்தமாக கூறி கையாட்டிவிட்டு சஹானாவின் பின் அமர்ந்து கல்லூரிக்கு சென்றுவிட்டாள் .

"பிரவீன் என்ன இருந்தாலும் அவ சின்ன பொண்ணு , உன் தங்கையோட பிரின்ட் " என்று மனசாட்சி கேட்டதற்கு "நான் என்ன இப்பவே கலயாணமா பண்ணப்போறேன் ...பஸ்ட் அவ படிச்சு முடிக்கட்டும் அப்பறம் பாத்துக்கலாம் " என்று சமாதானம் சொல்லி மனசாட்சியின் கேள்வியை அடக்கினான் அந்த ஆறடி ஆண்மகன் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top