JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -10

saaral

Well-known member
அத்தியாயம் -10

அன்றைய மாலை பொழுதிற்கு பின் பிரவீனால் சஹானாவை தனியாக சந்திக்க இயலவில்லை .மிருதுவிடம் , சஹானாவின் பதில் என்னவென்று இன்னும் சொல்லவில்லை பிரவீன் .

தங்கையின் காதலையும் , அவள் காதலிக்கும் நபர் மற்றும் அவரின் குடும்பத்தை பற்றி விசாரிப்பதே பிரவீனின் முதல் வேலையாக மாறிப்போனது . சதீஷும் ஸ்ரீதரை பற்றி தான் அறிந்தவரை அனைத்தையும் கூறிவிட்டான் .


பிரவீன் அலுவலகத்தில் அன்று காலை அமர்ந்து கணினியில் ஒரு முக்கியமான வேலையை செய்துகொண்டிருந்தான் . அங்கு இருந்த இண்டர்காம் தனது இருப்பை ஒலி எழுப்பி காட்டியது .

"எஸ் " தோரணையாக பேசத்தொடங்கினான் பிரவீன் .

"சார் மிஸ்டர் ஸ்ரீதர் உங்களை பார்க்க வந்திருக்கார் " வரவேற்பில் நிற்கும் பெண் பவ்வியமாக கூறினாள் .

"எந்த ஸ்ரீதர் ?"

"சார் சௌம்யா லெதர் ப்ரொடக்ட்ஸ் கம்பெனி சேர்மன் " எதிரில் நிற்கும் ஸ்ரீதருக்கு கேட்டுவிடாமல் இருக்க மெதுவாக கூறினாள் .

யாரென்று புரிந்து கொண்ட பிரவீன் "அவரை உள்ளே அனுப்புங்க , இம்மீடியட்லி ..." எதற்காக ஸ்ரீதர் இங்கு வந்திருக்கிறார் என்று யோசிக்க தொடங்கினான் .

சற்று நேரத்தில் அறையின் கதவு தட்டப்படும் ஒலி கேட்டு "எஸ் கம் இன் " என்றான் பிரவீன் .

"ஹாய் ஆம் ஸ்ரீதர் , உங்களுக்கு என்னை நிச்சயம் தெரிஞ்சிருக்கும் " உள்ளே வந்து புன்னகையுடன் பிரவீன் முன் நின்று கை நீட்டினான் ஸ்ரீதர் .

"யா சில பாங்க்சன்ல பார்த்திருக்கோம் , ஆம் பிரவீன் " கைகுலுக்கி கொண்டே பரஸ்பர அறிமுகத்தை முடித்துவைத்தான் பிரவீன் .

"ப்ளீஸ் சிட் ஸ்ரீதர் "

பிரவீனின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்த ஸ்ரீதர் , ஆழ்ந்த பார்வையை பிரவீன் மீது செலுத்தினான் .

"வெள் மிஸ்டர் ஸ்ரீதர் , என்ன விஷயமா என்னை நீங்க பார்க்க வந்திருக்கீங்க ?" அங்கு நிலவிய மௌனத்தை கலைதான் பிரவீன் .

"உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியனும் பிரவீன் " அழுத்தமாக கேட்டான் ஸ்ரீதர் .

"வாட் ?" சற்றே அதிர்ச்சி தென்பட்டதோ பிரவீனின் வார்த்தையில் ..

"நேராக விஷயத்துக்கு வரேன் பிரவீன் , உங்க சிஸ்டர் என்னை பார்த்தாங்க ...ஐ திங்க் ஷி இஸ் இன் லவ் வித் மீ ....என்னைய கேட்டால் நான் காதலிக்கிறேனா தெரியலை ...பட் ஐ லைக் ஹெர் , நிச்சயம் மேரேஜ் ப்ரோபோசல் வரப்ப மிருதுளா இஸ் குட் சாய்ஸ் " ஸ்ரீதர் தனது எண்ணத்தை சொல்லிக்கொண்டே சென்றான் .

"இல்லை ஸ்ரீதர் மிருது " பிரவீன் இடைபுகுந்ததை தடுத்தான் ஸ்ரீதர் .

"வெயிட் நான் முடிச்சிடறேன் ... ஒரு பொண்ணுக்கு அண்ணன் இருந்தா நிச்சயம் பையனை பற்றி விசாரிப்பாங்க ...அதுக்குன்னு இப்படியா ? ரெண்டு அண்ணனும் எல்லா பக்கமும் என்னைய ரவுண்டு கட்டி விசாரிக்கிறீங்க ...பிரைவேட் டிடக்ட்டிவ் ஹையர் பண்ற அளவுக்கு நான் எல்லாம் ஒர்தே இல்லைங்க .., என்ன தெரியணும்னாலும் என்கிட்ட நேரா கேக்கலாம் " புன்னகையுடன் கூறினான் ஸ்ரீதர் .

"சாரி அதுக்கில்லை , மிருதுளா அப்படினா எங்க வீட்ல எல்லார்க்கும் செல்லம் ..." சங்கோஜமாக உணர்ந்தான் பிரவீன் .

"ஹே சில் பிரவீன் ...நான் தப்பு சொல்லலை , எங்க போனாலும் உங்களை பத்தி அவர் விசாரிச்சார் , இவர் விசாரிச்சார் சொல்லறப்ப கொஞ்சம் அன்கம்போர்ட்டபிளா இருந்துச்சு ...மோர் ஓவர் மிருதுளாவை ரீசன்ட் டேய்ஸா எங்கயும் பார்க்க முடியலை " இறுதி வாக்கியத்தை சொல்லும் பொழுது சற்றே வெட்கம் எட்டி பார்த்தது ஸ்ரீதரிடம் .

பிரவீன் உற்சாகத்துடன் "அப்ப உங்களுக்கு மிருதுளாவை பிடிச்சிருக்கா ?" என்றான் .

"மிருதுளா என்னை தொடர்ந்து வந்தப்ப , இல்லை என்னை ஆர்வமா பார்த்தப்ப சும்மா ஒரு ஈர்ப்புனு நினைச்சு போய்டுவேன் , பட் என்னால அவளை பார்க்க முடியாதப்ப கொஞ்சமே கொஞ்சம் தேடினேன் ...நீங்க விசாரிக்கலைனாலும் உங்களை தேடி வந்து உங்க தங்கச்சியை கல்யாணம் செஞ்சுத்தர சொல்லி கேட்டிருப்பேன் ...." குறும்பு புன்னகையுடன் கூறினான் ஸ்ரீதர் .

ஸ்ரீதரின் தயிரியம் கண்டு புருவங்களை உயர்த்திய பிரவீன் மகிழ்ச்சியுடன் "எப்ப மிருதுகிட்ட உங்க விருப்பத்தை சொல்லப்போறிங்க ....இல்லை நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணட்டுமா ?" ஒற்றைக்கண்ணை சிமிட்டி கேட்டான் பிரவீன் .

"இல்லை அதெல்லாம் வேண்டாம் ....இந்த வீக் எண்ட் அம்மாவோட வீட்டுக்கு காசுயல் விசிட் மாதிரி வரேன் அப்பறமா நான் மிருது கிட்ட பேசுறேன் " மிருதுளா மிருதுவானதை ஸ்ரீதர் அறியவாய்ப்பில்லை .

"யா ..கண்டிப்பா ...உங்க அம்மாவும் மிருதுவை பார்க்கணும்ல ?"

"நீங்க வேற பிரவீன் அம்மா பஸ்ட் டைம் மிருதுவை பார்த்துட்டு இந்த மாதிரி பொண்ணு தான் உனக்கு பார்ப்பேன் அப்படினு சொன்னாங்க ..." மேற்கொண்டு சில மணி துளிகள் பேசிய ஸ்ரீதர் பிரவீனிடம் விடைபெற்று கிளம்ப எத்தனித்தான் .

"ஓகே பிரவீன் ஒர்கிங் ஹௌர்ஸ் டிஸ்டர்ப் பண்டேன் இன்னொரு நாள் பிரீ ஹா பேசலாம் ...இப்ப கிளம்புறேன் "

"சுயர் ஸ்ரீதர் , நைஸ் மீட்டிங் யு ...வாங்க நானும் பார்க்கிங் வரைக்கும் வரேன் " என்று ஸ்ரீதருடன் எழுந்தான் பிரவீன் .

இருவரும் பிரவீனின் அறை விட்டு வெளியே வந்தனர் , சுற்றிலும் பார்வையை செலுத்திக்கொண்டே வந்த ஸ்ரீதரின் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது ...

பிரவீன் காதலுடன் தன்னவளை பார்த்துக்கொண்டே நடந்தான் . இருவரின் பார்வையும் சென்ற இடத்தில் அமர்ந்திருந்த சஹானா தனது வேலையில் ஆழ்ந்திருந்தாள் .

பிரவீன் தன்னவளை அருகில் வைத்துக்கொண்டு பார்க்க இயலவில்லை என்று ,ஒரே தலத்தில் இருக்குமாறு பார்த்துக்கொண்டான் .

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த நிமிர்ந்து பார்த்த சஹானா காதலாக பார்த்த பிரவீனை பார்த்து மென்முறுவலை பூத்தவள் , பிரவீனின் அருகில் நின்றவனை பார்த்து உறைந்தாள் ....

அவசரமாக கண்களில் எச்சரிக்கை பார்வையுடன் ஸ்ரீதரை பார்த்தாள் சஹானா .

பிரவீன் சஹானாவின் கவனம் தன் பக்கம் இல்லை என்று உணர்ந்த, அவள் பார்வை சென்ற திக்கை பார்த்தான் .அங்கு ஸ்ரீதரின் நிலையையும் கண்டு குழப்பத்துடன் அருகினில் சென்றான் பிரவீன் .

"ஸ்ரீதர் என்ன ஆச்சு?"

"இல்லை இவங்க ?" ஸ்ரீதர் கேள்வியாக சஹானாவை சுட்டிக்காட்டினான் .

"இவ சஹானா , மிருதுவோட பிரின்ட் ..இங்க ஒர்க் பன்றாங்க ...உங்களுக்கு தெரியுமா ?" குழப்பத்துடன் இருவரின் பார்வையையும் பார்த்து கேட்டான் பிரவீன் .

"இல்லை பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் கேட்டேன் , மே பீ மிருதுளாவோட பார்த்திருப்பேன் " ஸ்ரீதரின் குரலில் ஒரு வித தடுமாற்றம் .

"இருக்கலாம் ரெண்டு பேரும் பெஸ்ட் பிரின்ட்ஸ் , அதிக நேரம் ஒன்றாக தான் சுத்துவாங்க " ஸ்ரீதரின் கேள்வியை உண்மை என்று நம்பி இலகுவாக பதில் கூறினான் .

அப்பொழுது ஸ்ரீதரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்ததிற்கான ஒலி கேட்டது . எடுத்து பார்த்தவன் யோசனையுடன் சஹானாவை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து கடந்தான் .

...................................

வேகமாக காரினுள் நுழைந்த ஸ்ரீதர் தனது அலைபேசியை எடுத்து சில இலக்கங்களை அழுத்தினான் .

அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன் "ஹலோ , என்ன நடக்குது இங்க ...சஹானா பிஎஸ்எம் இன்போடெக்ல என்ன பண்ணிட்டு இருக்கா ?"

"......... "அந்த பக்கம் சில நொடிகள் மௌனம் .

"சரி அம்மாகிட்ட சொல்றேன் அவங்க கேட்கும் பொழுது பதில் சொல்லித்தானே ஆகணும் " சீற்றத்துடன் சொன்னான் ஸ்ரீதர் .

"............ .."

"வாட் ? ஏன் என்கிட்ட எதையுமே சொல்லலை , என்னை விடுங்க ஏன் அம்மா கிட்ட கூட நீங்க சொல்லலை ?" ஆக்ரோஷத்துடன் கேட்டான் .

".... ..."

"ஒஹ் அவ்ளோ பெரிய ஆள் ஆகிட்டாளா ? ..."

"......"

"நான் பார்த்துகிறேன் " வேகமாக அழைப்பை துண்டித்தவனின் மனதிலும் வேகம் , கோவம் .

....................................

சஹானாவின் அலைபேசி ஒலி எழுப்பியது . அதை எடுத்தவள் அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் .

மீண்டும் அவளின் கவனத்தை அலைபேசி தன் பக்கம் திருப்பியது .

இப்பொழுது தெரிந்த எண்ணைக் கண்டு மிரண்டாள் ....

"ஹலோ " தயக்கத்துடன் பேசினாள் .

"இன்னைக்கு ஈவினிங் ...பெசன்ட் நகர் பீச் வர " அழுத்தமாக ஒலித்தது அந்த குரல் .

"அது ப்ளீஸ் ,நான் சொல்றதை கேளேன் " சஹானா கெஞ்சினாள் ...என்ன ஆச்சர்யம் !

"நோ ஆர்கியுமென்ட்ஸ் , வர அவ்ளோதான் " அழைப்பு துண்டிக்கப்பட்டது .

கட்டளையாக ஒலித்த குரலில் கட்டுண்டாள் சஹானா .

.............................

மாலை பிரவீன் சஹானாவிற்கு அழைத்து எங்கேனும் வெளியே செல்லலாமா என்றான் . ஏதோ வேலை இருப்பதாக பதில் தந்துவிட்டு சீக்கிரம் கிளம்பினாள் சஹானா .

பெசன்ட் நகர் சாலையில் தனது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த பிரவீன் தூரத்தில் சஹானாவின் ஸ்கூடியை கண்டான் . அது ஒரு கஃபே ஷாப் ....வேலை அப்படினு சொல்லித்தானே கிளம்பினா இங்க என்ன பண்ணிட்டு இருக்காள் ?.. என்று யோசனையில் ஆழ்ந்தான் .

சாலையின் இந்தப் பக்கம் சென்றவன் , மறுபக்கத்தில் நிற்கும் வண்டியை பார்த்து யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த கஃபே ஷாபின் கதவை திறந்து வேகமாக வெளியே வந்தான் ஸ்ரீதர் , அவனைத் தொடர்ந்து எதையோ கேட்டுக்கொண்டே அல்லது சொல்லிக்கொண்டே வந்தாள் சஹானா .

பிரவீனின் புருவத்தின் நடுவில் முடிச்சு விழுந்தது . சஹானா , ஸ்ரீதரோட என்ன பேசிட்டு இருக்கா ?,என்றே எண்ணினான் .

வேகமாக காரை அடுத்த திருப்பத்தில் திருப்பிக்கொண்டு அவர்களை நோக்கி சென்றான் .

காலம் இன்னும் கனியவில்லை , பிரவீன் வருவதற்குள் சஹானாவும் , ஸ்ரீதரும் கிளம்பி சென்றிருந்தனர் .
யோசனையுடன் காரினுள் அமர்ந்துகொண்டே சஹானாவிற்கு அழைத்தான் .

அவள் அழைப்பை ஏற்ற அடுத்த நொடி "எங்க இருக்க சஹானா ?" என்றான் பிரவீன் .

ஒரு நொடி மௌனத்திற்கு பின் "வீட்ல தான் பிரவீன் " என்றாள் .

பிரவீன் குழம்பினான் 'ஒருவேளை நாம் பார்த்தது வேற யாரோவா ?, சஹானா இல்லையா ?' மனதினுள் யோசிக்கலானான் . ஆனால் அவன் மனமோ அவன் பார்த்தது சஹானாவை தான் என்று அடித்துக்கூறியது .

"ஹெலோ பிரவீன் " என்று சற்றே குரல் உயர்த்தினாள் அவள் .

"ஹான் சஹானா , என்ன வண்டி சத்தம் கேக்குது ?"

"நான் , நான் பார்க்கில் இருக்கேன் " தயக்கத்துடன் அவள் சொன்னதே பொய் என்று அவனிற்கு சொல்லாமல் சொல்லியது . ஆனால் ஏன் ?...

அந்த ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தால் , என்ன நடக்கும் ....
 

saaral

Well-known member
மன்னிக்கவும் தோழிகளே ...கண்களில் சிறு பிரச்சனை ஓய்வு தேவைப்பட்டது அதான் இந்த தாமதம் , தினமும் பதிவு தரேன் என்று சொல்லி நடுவில் சில நாட்களாக பதிவு கொடுக்க இயலவில்லை .

காத்திருப்புக்கு நன்றிகள் ....படித்துவிட்டு ஒருவார்த்தை எவ்வாறு இருக்கிறது என்று சொல்லிச்சென்றால் மகிழ்ச்சியாக உணர்வேன் .

Happy reading ...!!

அ(ச)ஹானா ...!!
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top