JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -11,12,13,14

saaral

Well-known member
அலர் நீ .......அகிலமும் நீ ...... அத்தியாயம் -11,12,13,14
 

saaral

Well-known member
அத்தியாயம் -11

சர்கேஷ் மற்றும் கௌசல்யாவின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது . அனைவரும் மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பார்க்க தொடங்கிவிட்டனர் . சர்கேஷின் அன்னை இறைவனடி சேர்ந்துவிட்டார் தந்தை மனோகரன் மட்டுமே .

இனியாவின் அப்பா , அம்மா , சகுந்தலா சித்தி அவரின் கணவர் சுரேஷ் என்று பெரிய பட்டாளமே சர்கேஷின் கல்யாணத்திற்காக மகிழ்ச்சியுடன் வேலை செய்தனர் .

இதில் சிலசமயம் சகுந்தலாவிடம் கூறி வான்மதியை அழைத்து வர செய்வான் சர்கேஷ் . பெருமையுடன் அனைவர்க்கும் வான்மதியை தங்கை என்று அறிமுகம் செய்து வைத்தான் . மனோகரனும் வான்மதியின் பொறுமையுடன் கூடிய பொறுப்பான குணத்தினால் ஈர்க்கப்பட்டார் . எதற்கெடுத்தாலும் 'அம்மாடி வான்மதி இது சரியா பார்த்து சொல்லுமா ' என்று கூப்பிட்டு கேக்கும் அளவிற்கு அவளிடம் பாசம் கொண்டார் . மகள் இல்லாத அந்த வீட்டிற்கு வான்மதி மகளானாள் .

இனியாவும் , சர்கேஷும் மறந்தும் கௌஷிக்கை பற்றி மூச்சுவிடவில்லை . ஒருநாள் சேலை எடுக்க செல்லவேண்டும் என்று முடிவு செய்தனர் . பெண் வீட்டு ஆட்கள் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் அனைவரும் சேர்ந்து செல்வது என்று திட்டம் தீட்டினர் . மனோகரன் சர்கேஷை அழைத்து "சர்கேஷ் வான்மதி அவங்க அம்மா அவங்களும் வரணும் பார்த்துக்கோ" என்று கூறினார் .

இனியாவின் அன்னையோ "என்ன அண்ணா மகள் இல்லாமல் ஏதும் நடக்காது போலயே " சிரிப்பினுடன் கேட்டார் .

"ஆண்டாள் ஒரு பெண் பிள்ளைக்காக ஆசைப்பட்டாள் ...அதற்குள் அவளை ஆண்டவன் கூப்பிட்டுக்கிட்டார் ....இந்த பெண் வான்மதியின் குணம் ஆண்டாளை அதிகம் நினைவு படுத்திகிறது .....அருமையான பெண் " உணர்ந்து கூறினார் மனோகரன் .

சர்கேஷிடம் ஒரு சிறந்த குணம் உள்ளது அவனின் பேச்சில் , கண்ணியமான நடைமுறையில் அனைவரையும் வெகு சீக்கிரத்தில் ஈர்த்துவிடுவான் . அவ்வாறு வான்மதியிடம் பேசிப்பேசியே நெருங்கி அண்ணனாகவும் மாறினான் . பலமுறை வீட்டிற்கு அழைத்து வந்து தந்தைக்கும் அறிமுகம் செய்து வைத்தான் . அனைவரிடமும் ஒதுங்கி செல்லும் மதி சர்கேஷின் எதிர்பார்ப்பில்லா அன்பில் கட்டுண்டாள் .

அன்னை செய்யும் உணவுகளை கொண்டு வந்து கொடுத்துவிட்டு கல்லூரிக்கு செல்வாள் . இனியாவிடம் சில முறையே பேச சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது . ஆகையால் பார்த்தால் தோழமையுடன் பேசிக்கொள்வர் .

சர்கேஷ் காலையில் சீக்கிரம் கிளம்பி வான்மதியின் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்தான் . அவளின் வீட்டின் கதவின் முன் நின்று அழைப்பு மணியை அழுத்தினான் சற்று நேரம் எந்த பதிலும் இல்லை மீண்டும் அழுத்தினான் கதவு திறக்கப்பட்டது . கதவை திறந்தவர் அகிலம் . காலை பொழுதில் சர்கேஷை இங்கு பார்த்தவுடன் முதலில் தடுமாறியவர் "என்னப்பா இவ்ளோ காலைல " என்றார் .

சர்கேஷின் காதில் இருந்த ப்ளூடூத்தில் "மாப்பிள்ளை என் மாமியாரா " என்று கேட்டது சாஃஷாத் கௌஷிக் தான் . "அம்மா இன்னைக்கு புடவை எடுக்க போகணுமாம் உங்களையும் வான்மதியையும் அப்பா கூட்டிட்டு வர சொன்னார் "

அப்பொழுதுதான் இவ்ளோ நேரம் வாயிலில் நின்று பேசுவதை கவனித்த அகிலம் "அச்சோ தம்பி உள்ள வாப்பா ....இப்படி வெளிய நிக்கவச்சே புள்ளய கேள்விகேக்கறேன் " என்று கூறிக்கொண்டே அவனை உள்ளே அழைத்து அமரச்செய்து "இருங்க தம்பி ஒரு கப் காபி போடறேன் , மதி குளிச்சிகிட்டு இருக்கா நான் போய் சொல்றேன் , இப்ப வந்திருவா "

மதியின் அறையினுள் சென்றவர் "மதிமா சர்கேஷ் வந்திருக்கார் மா ....சீக்ரம் வா " என்று கூறிவிட்டு மூவர்க்கும் காபி கலக்க சென்றார் .

சர்கேஷ் கூடத்தில் மேஜையில் இருந்த பேப்பரை எடுத்து படித்துக்கொண்டு இருந்தான் அவன் காதினுள் இருந்த ப்ளூடூத் வழியாக "சர்கேஷ் வீடியோ கால் பண்றேன் அட்டென்ட் பண்ணி பிளாஷ் ஆப் பன்னிட்டு பாக் கேமரா மாத்திட்டு உன் பாக்கெட்ல வச்சுக்கோ ப்ளீஸ் " என்று கூறி சர்கேஷை பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் வீடியோ காலில் வந்தான் .

அவன் சொன்ன மாதிரி செய்த சர்கேஷ் மதியின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தான் . மதியும் குளித்து எளிமையான குர்தி மற்றும் பலாஸோ பேண்ட் அணிந்து வெளியே வந்தாள் .

"ஹாய் அண்ணா குட் மோர்னிங் ....என்ன இவ்ளோ காலையில் நீங்க இங்க " என்றாள் . சர்கேஷை இந்த காலை பொழுதில் அவள் எதிர்பார்க்கவில்லை அவனுமே எதிர்பார்க்கவில்லை மனோகரன் வான்மதியை அழைக்க சொல்லிய நிமிடத்தில் இருந்து இரவெல்லாம் தூங்கவிடாமல் விடியும் முன் தன்னை இங்கு துரத்தி விட்ட கௌஷிக்கை மனதில் அர்ச்சித்தான் .

கௌஷிக்கோ அவனின் தொலைபேசியின் வாயிலாக தன்னவளை காலை பொழுதில் புதிதாக மலர்ந்த மலரை போல் இருப்பவளை கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தான் . இது எதையும் அறியாமல் சர்கேஷுடன் பேசிக்கொண்டே எதிரில் அமர்ந்தாள் அவள் .

"சொல்லுங்க அண்ணா என்ன இவ்ளோ காலைல "

"அது வந்து மா அப்பா உன்னயும் அம்மாவையும் கூட்டிட்டு வர சொன்னார் இன்னைக்கு முகூர்த்த புடவை எடுக்க போகணுமாம் நீங்க கண்டிப்பா வரணும் சொல்லி சகுந்தலா சித்திக்கிட்ட உனக்கு லீவ் சொல்லிட்டார் ." இது என்ன விதமான பாசம் அவளால் அதை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

"அண்ணா அதெல்லாம் எதுக்கு ....அங்க நாங்க வந்து என்ன பண்ணப்போகிறோம் ....நீங்க எல்லாம் போயிட்டு வாங்க அப்பா கிட்ட நான் சொல்லிக்கிறேன் "

"அதெல்லாம் முடியாது நீ வரணும்னு என் டாலி சொல்லிட்டா " ஆடம் பிடித்தான் சர்கேஷ் .

அவனின் காதில் ஓதிக்கொண்டிருந்த கௌஷிக் "மாப்பிள்ளை இன்னைக்கு அவ மட்டும் வரலை என் தங்கச்சியை நீ ஸ்ட்ராயிட் ஹா மேடையில் பார்த்துக்கோ "

'ஐயோ இவங்க விளையாட்டில் நம்மள வச்சு செய்யறானுங்களே ' மனதில் நொந்து கொண்டு "மதி உண்மையாவே நீ என்னை அண்ணனை போல் நினைத்தாள் வந்து சேறு ....அம்மா சொல்லி கூட்டிட்டு வாங்க " என்று கூறி எங்கே அதற்கு மேல் நின்றாள் மீண்டும் முதல் இருந்து ஆரம்பிப்பார்களோ என்ற பயத்தில் கிளம்பினான் .

கீழே வந்து காரினுள் அமர்ந்தவுடன் ப்ளூடூத் அதை தூக்கி எரிந்து அலைபேசியை கையில் எடுத்து "மச்சான் ஏன் ஏன் இந்த கொலவெறி உனக்கு ,இப்படி நடுராத்திரி எழுப்பிவிட்டு அவங்க வீட்டுக்கு போக சொல்லி ....எல்லாரும் என்ன இந்த காலைல வந்திருக்க சொல்லி வச்ச மாரி கேக்கறாங்க ....அப்பறம் டேய் நீங்க லவ் பண்ண என் டாலி வச்சு விளையாடறிய பிச்சுப்போடுவேன் பிச்சு ....இரு இப்பவே அவளுக்கு போன் போட்டு இவ தான் உன் அண்ணி அப்படினு போட்டுக்கொடுக்கிறேன் "

எதிர் பக்கம் இவன் பேசுவதை சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த கௌஷிக் சர்கேஷின் இறுதி வாக்கியத்தில் "ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாத .....உன் டாலி சும்மா இருக்க மாட்டா நேராக கிளம்பி போய் பானையை உடைச்ச மாதிரி உடைச்சிடுவா " என்று பதறினான் .

"ஒஹ இதுல இது வேற இருக்கா .....இரு அப்ப என் டாலிக்கு உடனே போன போடறேன் "

"ஐயோ வேண்டாம் "

"ஏன் எல்லாரையும் மிரட்டும் நீ என் தங்கச்சி முன்னாடி வர கூட பம்முறை ...அடலீஸ்ட் கௌசியாச்சும் விஷயத்தை சீக்ரம் சொல்லி முடிச்சிடட்டுமே "

"அப்பறம் உன் தங்கச்சி நம்ம எல்லாரையும் மொத்தமா முடிச்சுடுவா ....கௌசிக்கும் மதிக்கும் பல வித்தியாசம் ..,, தவறு என்மீது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை இப்ப நேர்ல வந்தேன் பார்த்தே எரிச்சிடுவா " தொழில் உலகில் சிறந்த தொழில் அதிபன் , சிம்மசொப்பனமாக திகழும் கௌஷிக் ஒரு பெண்ணின் பார்வைக்காக பயப்படுவதை கேக்கையில் சர்கேஷ் விழுந்து விழுந்து சிரித்தான் .

பல பெண்கள் அதும் ராஜா வீட்டு இளவரசிகள் எல்லாம் கௌஷிகின் பார்வைக்காக ஏங்கி காத்திருக்க இவனோ ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் பெண்ணின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குவது ஆச்சர்யமாக இருந்தது . இத்துணை நாட்களின் பழக்கத்தில் நல்ல நண்பன் என்னும் முறையில் கௌஷிக் சர்கேஷிடம் நடந்தவைகளை கூறி இருந்தான் . அதை கேட்டவுடன் சர்கேஷ் யார் எவர் என்றும் யோசிக்காமல் பளார் என அறைந்துவிட்டான் .

கௌஷிக் அப்பொழுதும் அமைதியாக நின்றான் "என்ன நினச்சு நீ இந்த வேலை பண்ணின என்று தெரியல ....ஏன்டா ராஸ்கல் உன் தொழில் வளர்ச்சிக்காக ஒரு பெண்ணின் மானத்தை பகடையாக உபயோகிக்க எப்படி மனசு வந்துச்சு ...செய்றதெல்லாம் செஞ்சுட்டு இத்தனை காலம் அமைதியா இருந்திருக்க உன் தங்கைக்கு என்று வரும் பொழுது மீண்டும் அவளின் நினைவு வந்து அவளை நேசிக்கிறதா சொல்ற ....இப்படி சொல்ல உனக்கு கேவலமா இல்லை " சர்கேஷ் தங்கையாக எண்ணியவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொறுக்க இயலாமல் பொரிந்து தள்ளினான் .

"நான் அவள் தான் இவள் என்று தெரிவதற்கு முன்பே நேசிக்கிறேன் ....ஆனால் அப்பொழுது ஒரு வெறி தொழிலில் சாதிக்க வேண்டும் என்று ...அப்ப தான் புயல் போல் வந்து என்னை குற்றம் சாட்டிவிட்டு சென்றாள் ....அதன் பிறகு என்னால் எதை பற்றியும் யோசிக்க முடியலை நிச்சயம் அந்த நாள் என் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயத்திற்கு மூடுவிழா என்று எண்ணினேன் ...கல்யாணம் என்பது இல்லை என்று முடிவு எடுத்தேன் ....என்று கௌசல்யா அதே போன்றதொரு பிரச்னையில் சிக்கி காயம் கொள்பதை நேரில் பார்த்தேனோ என்னால் முடியவில்லை அவள் அடித்தாலும் கொன்றாலும் அவளுக்கு தோல் கொடுக்க அருகினில் இருக்க வேண்டும் என்று எண்ணினேன் " நீண்ட விளக்கம் கொடுத்த கௌஷிக்கை அதிர்ச்சியாக நோக்கினான் .

"என்ன சொல்ற கௌஷிக் " இது சர்கேஷ் . இதற்கு பிறகு கௌஷிக் கூறிய அனைத்தும் சர்கேஷிற்கு அதிர்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது . அதன் விளைவாக இருவரையும் இணைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினான் .

***********************************************************************************************

அத்தியாயம்-12

சர்கேஷ் அனைவரையும் கிளப்பிக்கொண்டு புடவை கடைக்கு சென்றான் . அங்கு கௌசல்யாவின் வீட்டில் இருந்து ஸ்ருதி , சரவணன் , கௌசல்யா மேலும் சில சொந்தபந்தங்கள் வந்திருந்தார்கள் . வான்மதியால் அங்கு பொருந்தி இருக்க இயலவில்லை . அவள் அனுபவித்த அன்பு என்பது தாய் தந்தை என்னும் அளவில் மட்டுமே .

நட்பு தோழிகள் என்று கலகலப்பாக இருந்த பெண்ணிற்கு வாழ்கை வலிக்க வலிக்க பாடம் கற்பிதத்தின் விளைவாக தனது உலகை முற்றிலுமாக சுருக்கி கொண்டாள் .சர்கேஷின் எதிர்பார்ப்பில்லா அன்பு அவளை ஏதோ ஒருவகையில் ஈர்த்தது . அதன் பிறகு உண்மையான தந்தை பாசத்துடன் மனோகரன் கொடுக்கும் அன்பு மதியை இவ்ளோ தூரம் வர செய்திருக்கிறது .

இருந்தும் அவளால் அங்கு பொருந்தி இருக்க முடியவில்லை . வான்மதியை பார்த்த கௌசல்யா கண்களை சுருக்கி நோக்கினாள் . வான்மதிக்கும் கௌசல்யாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற எண்ணத்துடன் பார்த்தாள் .

"ஹே நீங்க வான்மதி தான " குதூகலத்துடன் வந்து கேட்டாள் கௌசல்யா .

வான்மதியும் புன்னகையுடன் 'ஆம் ' என்னும் ரீதியில் தலையை ஆட்டினாள் .

"அம்மா இவங்க வான்மதி என் காலேஜ் சீனியர் ...நான் யூ ஜி படிச்சப்ப இவங்க பி ஜி ...." என்று ஸ்ருதிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் .

"நீங்க இங்க எப்படி ?" கௌசல்யா யோசனையுடன் கேக்கையில் "ஹே டாலி அவ என் தங்கை மதி .....நம்ம கல்லூரியில் விரிவுரையாளராக இருக்காங்க " என்று கூறி சில அறிமுகத்திற்கு பிறகு அனைவரையும் புடவை எடுக்கும் வேலையில் திசை திருப்பினான் சர்கேஷ் . விரிவான பேச்சுகள் தற்சமயம் மனக்கசப்பை கொடுக்கும் என்று அறிந்தே இருந்தான் அவன் .

அகிலமும் ,மதியும் ஓரத்தில் நின்று அமைதியாக வேடிக்கை பார்த்தனர் . அனைவரும் மணப்பெண்ணிற்கு சேலை எடுக்கும் மகிழ்ச்சியில் இவர்களை கவனிக்க தவறினர் . அப்பொழுது அங்கு இருந்த இனியாவிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது . அதை பார்த்து திரும்பி இவர்களை பார்த்தவள் அகிலத்திடம் நெருங்கி "அம்மா என்ன இங்க நிக்கிறிங்க வாங்க " என்று அழைத்தாள் .

"இல்லமா இருக்கட்டும் நீங்க எடுங்க " என்று ஒதுங்கிக்கொள்ளவே முயற்சித்தார் . வான்மதி இதில் எதிலும் ஓட்டுதல் இல்லாமல் வேடிக்கை பார்த்தாள் .

"அட என்னமா நீங்க வாங்க " என்று அகிலத்தின் கையை பிடித்து இழுத்து சென்று தனது அன்னையின் அருகினில் அமரச்செய்து மீண்டும் சேலை எடுக்க வான்மதியையும் அழைத்தாள் . மதியோ திடமாக மறுத்து இருக்கும் இடம் விட்டு நகராமல் இருந்தாள் .

சற்று நேரத்தில் சர்கேஷுக்கு அழைப்பு வந்தது 'ஐயோ இவன் விடாத கருப்பு என் டாலியோட நேரம் செலவு செய்ய விடறானா ?' என்ற கடுப்புடன் அழைப்பை ஏற்று பேசினான் . எதிரில் இருக்கும் நபர் என்ன சொன்னாரோ அடித்துபிடித்து வான்மதியிடம் சென்று "நீ ஏன் மதி இங்க நிக்கிற வா , உனக்கு ஒரு சேலை எடு " என்றான் .

"அதெல்லாம் வேண்டாம் அண்ணா நீங்க எடுங்க "என்றாள் .

அவன் விடாமல் வற்புறுத்த ஒருகட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் "அண்ணா ப்ளீஸ் என்னை போர்ஸ் பண்ணாதீங்க ....என்னால் இங்கு இருக்க முடியவில்லை நான் அம்மாவை கூட்டிட்டு கிளம்பறேன் ..." என்று கூறி அகிலத்திடம் சென்று அவரை அழைத்தாள் . அனைவரும் எவ்ளோ தடுத்தும் அவள் திடமாக கிளம்பினாள் .

டாக்ஸி பிடித்து சென்றுகொள்வேன் என்று கூறியவளை தடுத்து ....காரில் டிரவைருடன் அனுப்பி வைத்தான் சர்கேஷ் . ஸ்ருதியின் மனதிலோ 'சரியான திமிர் பிடித்த பெண் போல எல்லாரும் அவ்ளோ சொல்ராங்க அடம் பிடிச்சு அப்படி கிளம்பறா ' என்று தோன்றியது .

அனைவரும் புடவை எடுத்து ஒருவழியாக வீடு செல்ல ஆயுதமாகிய சமயம் ...."நீங்க கிளம்புங்க நானும் இனியாவும் ஒரு வேலை முடிச்சுட்டு வரோம் " என்று சர்கேஷ் கூறினான் . அனைவரும் கிளம்பி சென்றவுடன் மீண்டும் இருவரும் கடையினுள் நுழைந்தனர் .

அதே சேலை எடுக்கும் பிரிவிற்கு சென்று அங்கு இவர்களுக்காக புன்னகையுடன் நின்று இருந்த கௌஷிக்கை நோக்கி கொலைவெறியுடன் சென்றனர் .

"என்னடா உன் பிரச்சனை உன் ஆளுக்கு எடுக்கணும்னா நீ வந்து நின்னு எடுத்து கொடுக்க வேண்டியதுதானே ,எதுக்கு எனக்கும் டாலிக்கும் நடுல கரடி மாதிரி வர " சர்கேஷ் பொரிந்து தள்ளினான் .

"நான் உன்னை தொந்தரவு செய்யவேண்டாம்னு நினச்சு தான் இனியாவிற்கு சொன்னேன் , அப்பொழுதும் அவள் வந்து கலந்துகொள்ளவில்லை அதான் உன்னை கூப்பிட்டேன் " என்றான் கௌஷிக் .

"கிழிச்ச சும்மா நின்ற பெண்ணை இப்படி கூப்பிட சொல்லி தொரத்திவிட்டுட்டாயே ....."

"இல்லை இனியா அவள் ஒருவாறு தனது கூட்டிற்குள் இருந்து வந்து மீண்டும் அனைவரிடமும் கலகலப்பாக பேச வேண்டும் என்று எண்ணிதான் செஞ்சேன் ...ஒரு அடி முன்னாள் சென்றாள் அவள் பல அடிகள் பின் சென்று ஓடுகிறாள் ". வருத்தத்துடன் கூறினான் கௌஷிக் .

"கௌஷிக் அவள் பட்ட துன்பம் இழப்பு எதுவும் சிறியது இல்லை ,நீ நினைப்பது போல் சுலபமும் அல்ல ....இதில் நீயும் வான்மதியும் உங்களை சுற்றி உள்ளவர்களும் பல அடிகளையும் வலிகளையும் தாங்க வேண்டும் .... " ஒரு மனநல மருத்துவராக கூறினாள் இனியா .

"தெரியும் இனியா ....நான் எதை வேண்டுமானாலும் தாங்க தயாராக இருக்கிறேன் " மூவரும் பேசிக்கொண்டே கார் நிறுத்தும் இடத்திற்கு வந்தனர் .

"உன் கார்ல தான மதி கிளம்பி போனா ....வா நான் உன்னை வீட்ல விடறேன் " என்றான் சர்கேஷ் .

"முதலில் உங்க சகுந்தலா சித்திக்கு அழைத்து மதி காலேஜ் வந்திருக்காளானு கேளு "

கௌஷிக் கூறியதை கேட்டு குழப்பம் அடைந்த சர்கேஷ் "ஹே எதுக்கு கௌஷிக் இப்ப தான கிளம்பி போனா இன்னைக்கு லீவு சொல்லிருக்காளே " என்றான் .

இனியா அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள் .

"எனக்கு தெரிஞ்சு அவளால் வீட்டில் இருக்க முடியாது நிச்சயம் இன்னைக்கு வேலைக்கு சென்றிருப்பாள் ...நீ கேட்டு பார் " என்றான் கௌஷிக் .

சர்கேஷ் போன் செய்து பேசிவிட்டு அழைப்பை துண்டித்து "ஹே எப்படி அவ்ளோ சரியா சொன்ன ...அவ காலேஜ் போய்ட்டாளாம் "

"ஹ்ம்ம் அவளின் வலிகளை வேதனைகளை மறக்க அவள் எடுத்த ஆயுதம் படிப்பு , வேலை " என்றான் கௌஷிக் .

"சரி இப்ப எதுக்கு கேக்க சொன்ன கௌஷிக் " இனியாவிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது .

"சர்கேஷ் மதி வீட்டுக்கு போ " அமைதியாக கூறினான்

"வாட் " இனியாவும் ,சர்கேஷும் ஒருமித்த குரலில் கத்தினர் .

........................................................

இருவரையும் ஒருவாறாக பேசி சரிசெய்து வான்மதியின் வீட்டில் கூடத்தில் அமர்ந்து இருந்தான் கௌஷிக் . அனைவர்க்கும் காபி கலந்து கொடுத்தார் அகிலம் . சர்கேஷ் மற்றும் இனியா மனதில் எழுந்த திக் திக் உணர்வுடன் காபியை பருகினர் . கௌஷிக் காபி கோப்பையை எடுக்காமல் அமர்ந்து இருந்தான் .

"தம்பி காபி குடிங்க " என்றார் அகிலம் .

"நான் உங்களிடம் பேச வேண்டும் " எந்த வித பூசல்களும் இல்லை நேராக சொன்னான் கௌஷிக் .

புரியாமல் விழித்த அகிலம் சர்கேஷின் பக்கம் திரும்பி "சர்கேஷ் என்னப்பா ...இப்ப தான கடைல பார்த்தோம் அதுக்குள்ள வீட்டில ...தம்பி ஏதோ பேசணும் சொல்கிறார் ...."

"அம்மா அது அது " என்று இழுத்த சர்கேஷை தடுத்து "ஆண்ட்டி என் பெயர் கௌஷிக் ...கௌசல்யா அதாவது சர்கேஷின் வருங்கால மனைவியின் அண்ணன் " என்று தன்னை அறிமுக படுத்திக்கொண்டான் .

"ஒஹ் அப்படியா ....உங்கள பார்தொடனே தோணுச்சு சொந்தமா இருப்பிங்களோனு ...என்கிட்ட என்ன தம்பி பேசணும் "

"நான் உங்க கிட்ட பேச வந்தது வான்மதியை பத்தி " அவன் கூறியவுடன் அவர் மேலும் குழம்பினார் . சர்கேஷின் மாமனார் வீட்டின் வாரிசு தன்னிடம் தனது மகளை பற்றி என்ன பேசவேண்டும் என்கிறார் என்று எண்ணினார் .

"நேராக விசயத்திற்கு வரேன் ஆண்ட்டி எனக்கு மதியை திருமணம் செய்து தருவீர்களா " அவன் நேராக கேட்கவும் அவர் வாய் அடைத்து போனார் .

"தம்பி " அவரின் தயக்கம் உணர்ந்து "ஆண்ட்டி நான் உங்களை வற்புறுத்தவில்லை எனக்கு தெரிந்து அவள் திருமணம் வேண்டாம் என்றே சொல்லுவாள் ....அவளை சரி செய்து இல்லை ஏதாச்சும் சொல்லி ஒற்றுக்கொள்ள வைக்க வேண்டும் " என்றான் கௌஷிக் .

அகிலத்தின் முகம் சற்றே சந்தோசத்தை காட்டியது . அதை பார்த்த கௌஷிக் ஒரு பெருமூச்சை வெளி இட்டு "ஆண்ட்டி அதற்கு முன் நான் ஒன்று சொல்ல வேண்டும் அதை கேட்ட பிறகு உங்கள் முடிவை கூறலாம் " அவனின் கடந்தகால நிகழ்வுகளையும் வலிகளையும் பற்றி சொல்ல ஆரம்பித்தான் .

அன்று ......

சுமார் நான்கு ஆண்டுகள் முன் அந்த கல்லூரி அதகளப்பட்டு போய் கிடந்தது . கல்லூரிக்குள் இருக்கும் பிரிவுகளின் இடையே நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற பிரிவு மாணவிகள் கல்லூரி வளாகத்தை ரணகளப்படுத்திக்கொண்டு இருந்தனர். அதிலும் கல்லூரியின் நடுவில் இருக்கும் மைதானத்தில் சில பெண்கள் ஆட்டம் போட்டுகொண்டு இருந்தனர் . அது பெண்கள் படிக்கும் பிரபல கல்லூரி .

அங்கு ஆடிக்கொண்டு இருந்த பெண்களில் இரு பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் . அவர்கள் போட்ட ஆட்டம் நளினமாகவும் அழகாகவும் இருந்தது . இறுதியில் அந்த இரு பெண்களை தூக்கி தோல் மேல் பிடித்த சில மாணவிகள் சுற்றி இருக்கும் மாணவிகளுடன் சந்தோசத்தை கோஷங்களின் மூலம் வெளிப்படுத்தினர் .

அங்கு கார் நிறுத்தும் இடத்தில் போன் பேசிக்கொண்டு இருந்த கௌஷிக் இரைச்சல் ஒளி கேட்டு கடுப்புடன் இணைப்பை துண்டித்து திரும்பி பார்த்தான் . முதலில் பெண்களின் அதகள குணத்தில் கடுப்பாகிய அவனின் பார்வை அவளின் மேல் நிலைத்தது . அவள் செய்யும் சிறு சிறு அசைவுகளும் அவன் மனதில் பதிந்தது . எரிச்சலாக பார்க்க ஆரம்பித்தவன் சுவாரஸ்யமாக பார்க்க தொடங்கினான் .

அப்பொழுது சரியாக அருகே வந்த கௌசல்யா "அண்ணா போகலாமா " என்றாள் .

அவள் வந்ததை கூட கவனிக்காத உடன்பிறப்பின் தோல் மீது கை வைத்து "அண்ணா என்ன பாக்கிற "

"அங்க என்ன நடக்குது " என்று அவன் பார்வை சென்ற பக்கம் சுட்டி காட்டி கேட்டான் .

"ஓஹ் அதுவா காலேஜ் கல்ட்சுரசில் எங்க டிபார்ட்மென்ட் ட்ரோபி வின் பண்டோம் அதான் இந்த செலிப்ரேஷன் " என்று பெருமையாக கூறினாள் .

"அந்த ரெண்டு பொன்னுங்களையும் எதுக்கு தூக்குறாங்க " அவனிற்கு அவளின் பெயர் விபரங்கள் தேவை அதை இப்படி சுற்றி வளைத்து கேட்டான் .

"அதுவா அவங்க தான் எங்க டிபார்ட்மென்ட் செகிரேட்டரி அண்ட் ஜோய்ண்ட் செகிரேட்டரி ...ரெண்டு பெரும் பிரிண்ட்ஸ் ...அவங்க ஓர்கனைஸ் பண்ணி தான் ப்ரோக்ராம் வின் பண்ணோம் ,,, ஒருத்தங்க ஸ்வேதா இன்னொருத்தங்க வான்மதி " என்று தமயன் எதற்கு கேக்கிறான் என்று தெரியாமல் தன் போக்கில் கூறினாள் .

"ஓஹ் அதில் வான்மதி யாரு " அவன் மனதில் அவள் பெயர் வான்மதியாக தான் இருக்க வேண்டும் என்று கூறியது .

அதை பொய்யாக்காமல் "அந்த ரெட் கலர் அம்பர்லா கட் சுடி போட்ருக்காங்கள அவங்க தான் வான்மதி ...ஆமா ஏன் கேக்குற "(அதெப்படி மா எல்லாம் சொல்லிட்டு இந்த கேள்வியை நீ கேக்குற ).

"இல்லை பெயர் நல்லா இருந்துச்சு அதான் கேட்டேன் " என்றான் கௌஷிக் . தங்கையின் சந்தேக பார்வையை கண்டு துணுக்குற்று "டைம் ஆச்சு வா கிளம்பலாம் " என்று அவ்விடம் விற்று கிளம்பினான் . அவனின் பார்வையோ நகர்வேனா என்று அடம் பிடித்தது .

அதன் பிறகு வந்த நாட்களில் வான்மதியை பார்ப்பதற்காகவே கல்லூரி சென்று தங்கையை அழைத்து வருவான் . முதலில் பேப்பர் தயாரிக்கும் தொழில் ஆரம்பித்து பல வெற்றி படிகளை அடைந்து புதிதாக ரியல் எஸ்டேட் தொழிலும் கால் பதித்தான் .

ஸ்ருதியும் சரவணனும் காதலித்து மணந்தவர்கள் . அவர்களின் பெற்றோர் அவர்களை கைவிட்டதால் மனதளவில் வலியை தாங்கி இருந்தது அவர்களின் மனம் . சொந்தங்கள் ஏதேனும் விசேஷத்திற்கு அழைப்பு விடுத்து அவமதித்து அனுப்புவார்கள் . இவர்களின் வாழ்கை மேல்தட்டு நடுத்தர வர்கம் ஆனால் அவர்களின் சொந்தங்களில் பலரோ பெரும் பணம் கொண்டவர்கள் . செழிப்பான வாழ்க்கையில் சரவணனின் பெற்றோரை முந்த முடியாமல் சரவணனை வைத்து எல்லி நகையாடி தங்களின் வக்கிர மனதை நிரப்பிக்கொள்வர் .

இதை சிறு வயதில் இருந்தே பார்த்து வந்த கௌஷிக் பணம் சம்பாதிப்பதை பெரும் குறிக்கோளாக கொண்டு முன்னேறினான் . இவனின் சித்தப்பா அண்ணன் குடும்பத்திற்கு எந்த சொத்தும் போய்விட கூடாது என்று பெற்றோர்களை மூளை சலவை செய்து அனைத்தையும் கையக படுத்தினார் . சரவணன் மற்றும் ஸ்ருதி அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை .

*******************************************************************************

அத்தியாயம் -13

ஒரு முறை மதுரையில் ஒரு நல்ல இடம் விலை பேசி தர வெளிநாட்டு நிறுவனம் ஒன்று கௌஷிக்கை நாடியது . அவன் இடத்தை பற்றி விசாரிக்க சென்ற சமயம் அவனின் சித்தப்பா அதே இடத்தை பேசி முடிக்க வந்திருக்கிறார் . அதை அறிந்த கௌஷிக் கோபத்தின் உச்சியில் இருந்தான் .

சித்தப்பாவின் துரோகத்தை பெற்றவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டாலும் இவனால் அவ்வாறு இருக்க முடியவில்லை . முன்பை விட அந்த இடத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறிகொண்டான் . அதன் படி அந்த நிலத்தின் உரிமையாளர் லிங்கத்தை பார்த்து அந்த இடத்தை தனக்கே விற்குமாறு கேட்டான் . அவர் மறுத்துவிட்டார் . வாக்குவாதம் முற்றிப்போய் கௌஷிக் மிரட்டி விட்டு வந்தான் .

அவனின் ஒரே குறிக்கோள் அந்த இடம் சித்தப்பாவின் கையிற்கு சென்று விட கூடாது . இவன் வைத்த ஆள் ஒருவன் கௌஷிகின் சித்தப்பா வந்து லிங்கத்தை சந்தித்து விட்டுச்சென்றதை சொன்னவுடன் அனைத்தும் அவரின் சதி என்று கோபம் கொண்டு அந்த முடிவை எடுத்தான் .

அந்த ஒரு முடிவு அவனின் வாழ்வை மட்டுமல்லாமல் அவளின் வாழ்வையும் சேர்ந்து புரட்டி போடும் என்று நிச்சயமாக கௌஷிக் எதிர்பார்க்கவில்லை .

கௌஷிக் அதன் பிறகு ஒரு மூன்றாம் தர ரௌடியிடம் சென்று அந்த மதுரை இடம் எனக்கே முடியவேண்டும் என்னவேண்டுமானாலும் செய்துகொள் என்று கூறிவிட்டு சென்றான் . அந்த நபர் எடுத்த ஆயுதம் வான்மதி .

அந்த மூன்றாம் நபர் லிங்கத்தை பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொண்டு நேராக சென்னை சென்றான் .

மதியின் கல்லூரியில் விடுதி கிடைக்காத பெண்கள் அருகில் இருக்கும் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் அறை எடுத்து காலேஜ் வந்து சென்றனர் . அதில் மதியும் , ஸ்வேதாவும் அடங்குவர் .

ஒரு நாள் மாலை இருவரும் ப்ராஜெக்ட் சம்பந்தமாக பேசிக்கொண்டு வந்து இருந்தனர் . மதியும் ஸ்வேதாவும் நல்ல தோழிகள் ஒரே அறையில் வசித்து இருந்தனர் . நடப்பவைகளை பற்றி எதையும் அறியாமல் இருவரும் அளவலாவிக் கொண்டு இருந்தனர் .

அப்பொழுது மதிக்கு அவளின் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது "மதிமா எப்படி டா இருக்க "

"நல்லா இருக்கேன் அப்பா நீங்க எப்படி அகிலத்தின் வசைகளில் இருந்து சிக்காமல் தப்பித்து சேதாரம் இல்லாமல் நல்லா இருக்கிறீங்க போல " என்றாள் குதூகலத்துடன் .

"அடி கழுதை என்னையவே கலாய்க்கிறியா " என்றார் அகிலம் .

"மிஸ்டர் லிங்கம் வாட் இஸ் திஸ் போன் ஸ்பீக்கரில் போட்டு ...சின்ன பிள்ளை தனமா போட்டுக்கொடுக்கிறது ....பிச்சுப்போடுவேன் பிச்சு " என்று மதி செல்லமாக மிரட்டினாள் .

"வர வர உங்க மகளுக்கு கொழுப்பு கூடி போச்சு வரட்டும் வச்சுக்கிறேன் " என்று மிரட்டிக்கொண்டே லிங்கத்திற்கு காபி கலக்க சென்றார் .

"அப்பா " என்று சிணுங்கிய மகளை

"விடுடா குட்டி நாளைக்கே உன் மார்க்ஷீட்டை காட்டேன் ...என்னங்க பார்த்தீங்களா என் மகளை என்று முதலில் பெருமை பேசுவதும் அவளாத்தான் இருப்பாள் " என்றார் லிங்கம் . அன்னை மகளின் உட்பூசல்களை சரிசெய்யும் தலைமை பொறுப்பை என்றும் போல் இன்றும் சிறப்பாக செயலாற்றினார் . மேலும் சில எதார்த்த பேச்சுகளின் பின் அவர்களின் அழைப்பை துண்டித்தனர் .

.......................................................

"சார் அந்த இடத்தை உங்க பெயர்லயே முடிச்சர்லாம் சார் ....அந்த இடத்தின் சொந்தக்காரர் ஓட பொண்ணு சென்னைல தான் படிக்குது ...அவளை வச்சு கோர்னெர் பண்ணி வாங்கிடலாம் சார் ...." என்று கூறியது அந்த ரவுடி .

இதை கேட்ட கௌஷிக் ஒரு நொடி தயங்கினாலும் மறு நொடி சித்தப்பாவின் கைகளுக்கு தான் பார்த்த இடம் செல்ல கூடாது என்ற முடிவுடன் "சரி பாத்து பண்ணுங்க " சுருக்கமாக கூறி தனது இணைப்பை துண்டித்தான் .

.................................................

"மிஸ்டர் லிங்கம் இறுதியா கேக்கறேன் அந்த இடத்தை கே கே பிரைவேட் லிமிடெட்க்கு தர முடியுமா முடியாதா " அலைபேசியின் வழியே கர்ஜனையாக ஒலித்தது அந்த குரல் .

லிங்கம் எதற்கும் அசைந்து கொடுக்காமல் "உன்னால முடிஞ்சத பண்ணு " என்று திமிராகவே கூறினார் .

"ஒஹ் அவ்ளோ திமிரா பார்த்தலாம் ....இந்த கால்லை கட் செஞ்சுட்டு உன் வாட்ஸ் ஆப் ஓபன் பண்ணி பாரு ...என்னால என்ன முடியுதுனு காட்றேன் " அத்துடன் இணைப்பை துண்டித்தான் அந்த கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரன் .

இவர் சற்றே பதட்டத்துடன் வாட்ஸ் ஆப்பை திறந்து அதில் வந்திருந்த காணொளிக்காட்சியை திறந்தார் . அவரால் ஒரு நொடிக்கு மேல் அதை பார்க்க முடியவில்லை . 'ஐயோ ஆண்டவா என் பொண்ணு வாழ்க்கையே அழிச்சுட்டாய்ங்களே ' தலையில் அடித்துக்கொண்டு தனியாக தனது அறையில் மடிந்து அமர்ந்து அழுதார் .

கோவிலுக்கு சென்று இருந்த அகிலம் திரும்பி வந்து கணவனை வீடு முழுக்க தேடினார் . இறுதியாக அவரின் அறை கதவை திறந்து பார்க்கையில் மூர்ச்சையாகி தரையில் விழுந்து இருந்தார் லிங்கம் . "ஐயோ என்னங்க " அந்த தெருவே அலறும் படி கத்தினார் . அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்த பின் தான் அகிலத்திற்கு மதியின் நியாபகமே வந்தது .

அழைப்பு விடுத்த மறு நொடி மதுரைக்கு பதட்டத்துடன் கிளம்பிய மதி வழி நெடுக்க "அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா என்னப்பா ஆச்சு என்னயும் அம்மாவையும் தவிக்க விட்ராதிங்க . " என்று மனதில் அரட்டிக்கொண்டே வந்தாள் .

மருத்துவமனை கண்ணாடி கதவின் சிறிய வட்டத்தின் வழியாக தனது தந்தையை கண்டவள் நெஞ்சு துடித்தது .

********************************************************************

அத்தியாயம் -14

இன்று லிங்கத்தின் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு செல்ல அனுமதித்தனர் மருத்துவர்கள் . எந்நேரம்மும் அழுகையில் கரைந்து கொண்டிருந்த அகிலத்தை அரட்டி மிரட்டி தேற்றினாள் . தனது தந்தைக்கு அணைத்து பணிவிடைகளையும் மதியே முன் நின்று செய்தாள் .

வீடு வந்து சேர்ந்த மறு நாள் அகிலம் கோவிலுக்கு சென்றார் . "மதி நான் கோவிலுக்கு போய்ட்டு அப்பா பெயர்ல ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரேன் " அகிலம் கிளம்பியவுடன் தனது தந்தைக்கு கஞ்சி எடுத்துக்கொண்டு அவர் அறை நோக்கி சென்றாள் மதி .

"அப்பா கொஞ்சம் சாஞ்ச மாதிரி உக்காருங்க கஞ்சி சாப்பிடலாம் "

"மதிமா நீ சென்னை போகலையா ....உனக்கு இன்னும் ரெண்டு வாரத்தில் செமஸ்டர் வருதே " அவருக்கு மூச்சு வாங்கியது

"அப்பா இப்ப ப்ராஜெக்ட் ஒர்க் போகுது ஸ்வேதா பார்த்துப்பா ...எங்களை பயமுறுத்திட்டீங்க ..அம்மா அழுதுகிட்டே இருக்கிறப்ப நான் எப்படி போவேன் "

"அப்படி என்னப்பா பிரச்சனை இப்படி ஹார்ட் அட்டாக் வரளவுக்கு " கண்களில் தேங்கிய கண்ணீருடன் கேக்கும் மகளை காண்கயில் அவரின் கண்களில் இருந்தும் நீர் வழிந்தது

பதட்டத்துடன் "அப்பா எதுக்கு இப்ப அழுகை என்ன ஆச்சு ஏன் இப்படி மனசுக்குள்ள எதையோ வச்சு புழுங்குறீங்க ...."

"மதி மதி " அதற்கு மேல் அவரால் பேச இயலவில்லை குலுங்கி அழுதவரை பார்த்தவுடன் பதறியது மகளுக்கு .

"ஐயோ அப்பா வேண்டாம் ஏதும் சொல்ல வேண்டாம் என்னை மன்னிச்சுருங்க இப்படி அழுக்காதீங்க ..., நான் எதும் கேக்க மாட்டேன் "

மகளின் சொற்களில் என் மகள் மனமுதிர்ச்சி உள்ளவள் நிச்சயம் அவளால் இதை ஆக சிறந்த முறையில் கையாள முடியும் என்ற நம்பிக்கையுடன் அவளின் கரம் பற்றி "நான் சொல்றதை கேட்டு நீ உன்னை எப்பவும் வருத்திக்க கூடாது சரியா ....அம்மா ஒரு குழந்தை அவளுக்கு நாம் தான் உலகம் அதனால் அவளிடமும் சொல்லாதே "என்றார் .

"அப்பா இப்படிலாம் பேசாதீங்க ...எனக்கு உள்ள என்னமோ பண்ணுது " அழுகை தயாராக இருந்த மகளை காண்கயில் அவரின் முகம் அப்பட்டமான வலியை காட்டியது .

அதை பார்த்து தன்னை சீர்படுத்திக்கொண்ட மதி "அப்பா நான் சத்தியமா எதுவும் பண்ணிக்க மாட்டேன் ....அம்மா எப்பயும் என் பொறுப்பு அவங்க எனக்கும் குழந்தை மாதிரி " என்று கூறிய மகளை வாஞ்சையுடன் பார்த்து நடந்ததை முழுதாக கூறியவர்

"அன்று அந்த காட்சியில் உனது ஹாஸ்டல் அறையில் வைத்த கண்காணிப்பு கமெரா மூலம் அனைத்தையும் படம் பிடித்தது இருந்தது . நீ மட்டும் இல்லை மதிமா அந்த ஸ்வேதா அவளையும் முழுதாக " பெற்ற மகளிடம் ஒரு தந்தை என்பவர் அதற்குமேல் கூற முடியாமல் தேம்பி தேம்பி அழுதார் .

....................................................

இங்கு கடந்த சில நாட்களாக மதியை காண இயலாமல் தனக்குள் தவித்துக்கொண்டு இருந்த கௌஷிக் தங்கையிடம் வாய் விட்டே கேட்டுவிட்டான் .

"கௌசி அந்த ஒட்டி பிறந்த ரெட்டைகள் மாதிரி இருப்பவர்களில் எங்கே இன்னொருத்தரை காணும் " சாதாரணமாக கேப்பது போல் கேட்டான் கௌஷிக் . எங்கே தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற ஜாக்கிரதை உணர்வுடன் .

"அதுவா அண்ணா நாங்க எல்லாரும் கேட்டோம் அப்ப தான் தெரிஞ்சுது மதி அக்காவின் தந்தைக்கு உடம்பு சரி இல்லைனு மதுரைக்கு போயிருக்காங்களாம் "

'மதுரை ஹா எப்படியாச்சும் அவ அட்ரெஸ்ஸை எடுத்து பாக்கணும் ...இந்த திவாகரும் மதுரை இடத்தை பத்தி ஏன் எதுவும் சொல்லலை '
தங்கையை முதலில் வீட்டில் இறக்கி விட்டு திவகருக்கு அழைத்தான் கௌஷிக் .

"ஹலோ திவாகர் இடம் விஷயம் என்ன ஆச்சு "

"சார் அது அந்த கிளத்தை அவர் பொண்ணை வைத்து மிரட்டினோம் ஹார்ட் அட்டாக்ல படுத்திருச்சு ஒரு ஒரு வாரம் டைம் குடுங்க சார் "

கௌஷிகின் நெஞ்சம் பதறியது "ஐயோ என்ன திவா சும்மா தான மிரட்டி வாங்க சொன்னேன் ....பொண்ணு விஷயம் சொல்ற பெரிய பிரச்சனை ஆகிட போகுது " இயல்பிலேயே நல்லவன் என்பதால் தன்னால் ஒருவர் படுக்கையில் கிடக்கிறார் என்னும் செய்தியை தாங்க முடியவில்லை .

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது சாரே ...நான் எதுக்கு இருக்கேன் " என்று கூறி இணைப்பை துண்டித்தான் .

..................................................

தந்தை சொன்னதை கேட்டவுடன் கோபத்தில் கொதித்தாள் பெண் அவள் "அப்பா நீங்க எதுக்கு இதை நினச்சு வருத்தப்படறீங்க இதுனால என்ன ஆகிட போகுது நான் பார்த்துகிறேன் ....இறைவனின் படைப்பு இது தான் இவ்வாறு தான் என்று இருக்கையில் அதை எனக்கு தெரியாமல் ஏதோ பொறுக்கி படம் பிடித்தான் என்பததற்காகவா நீங்கள் உங்களையே வருத்திக்கொள்கிறீர்கள் ...இதை இனி என் பொறுப்பில் விட்டுட்டு நீங்க அமைதியா இருங்க எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் " மகளின் தயிரியம் கண்டு தெம்படைந்தவராக அவளின் பரிட்ச்சைக்கு முழு மனதுடன் அனுப்பி வைத்தார் .

'எனது வளர்ப்பு பொய்த்து போகவில்லை ' என்று மனதார மார்தட்டி கொண்டார் அந்த தந்தை . அவரின் பயம் எங்கே மிற்ற பெண்களைப்போல மகளும் இதன் பிறகு முடங்கி விடுவாளோ என்று தான், அதை இல்லை என்றாகிவிட்டாள் இருபத்தி ஒரு வயது பாவை .

சென்னை சென்று முதல் வேலையாக ஸ்வேதா வெளியில் சென்று இருந்த சமயம் அறையை முழுதும் இருட்டாக்கி தனது கைபேசியில் இருக்கும் கமெராவை திறந்தாள் . ஐ ஆர் என சொல்ல படும் இனப்பிரா ரெட் கதிர்களை தனது கைபேசி காட்டுகிறதா என்று ஆய்வு செய்ய டிவி ரிமோட் எடுத்து அதன் மேல் பகுதியை காமெராவிற்கு முன்பு காட்டினாள் . அதில் ஒவ்வொரு பொத்தானை அழுத்தும் பொழுதும் அதில் இருந்து வரும் கதிர் வீச்சு சிவப்பு நிறத்தில் மின்னியது .

தனது கைபேசி அந்த கதிர்வீச்சை காட்டுகிறது என்பதை உறுதி செய்து கொண்டு காமெராவை கொண்டு அறை முழுதும் பார்வையிட்டாள் . அவள் முன்பொரு முறை தந்தையிடம் கற்றது "மதிமா இப்படி கமெராவை காட்டி அதன் வழி பார்த்தால் ரகசிய கமெரா இருக்கிறதா இல்லையா என்பதை அதில் இருந்து வரும் சிவப்பு ஒளியை கண்டு அறியலாம் . அந்த கதிர் வீச்சு சிகப்பில் ஒளிர்ந்து மின்னும் , இதை நீ எந்த கடையில் உடை மாற்றும் அறைக்கு சென்றாலும் சோதிக்க வேண்டும் " .

அவள் நினைத்தப்படி இவர்களின் புத்தக அடுக்கிற்கு மேல் ஒரு அலங்கார பொருளின் மைய பகுதியில் மின்னி மறைந்தது . 'இது நம்மளுது இல்லையே ' என்ற சந்தேகத்துடன் அதை எடுத்துக்கொண்டு அவள் நேரே சென்று நின்ற இடம் கமிசினர் அலுவலகம் .

திவாகர் காரியம் முடிந்தவுடன் அந்த காணொளிக்காட்சி தேவை இல்லை என்பதை கருதி அதை காவணிக்காமல் விட்டு விட்டான் . இணையத்தின் வாயிலாக அந்த கமெராவை கண்காணிக்கலாம் . அசட்டையாக இருந்தமையால் அவன் அதை கண்டு கொள்ளவில்லை .

சைபர் பிரிவில் இருந்து வந்து மதியின் புகாரை ஏற்றவர்கள் அந்த கமெராவை முதல் வேலையாக செயல் இழக்க செய்தனர் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top