JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -11

saaral

Well-known member
அத்தியாயம் -11

அந்த வார நாட்களின் இடையில் ஒருநாள் ஸ்ரீதர் பிரவீனின் அலுவலகம் நோக்கிச் சென்றான் .

இந்த இடைப்பட்ட நாட்களில் பிரவீனும் , சஹானாவும் அலைபேசி அழைப்பில் மட்டுமே பேசிக்கொண்டனர் . பிரவீன் என்னதான் வெளியூர் செல்லவேண்டிய வேலை வந்தாலும் வேலையை முடித்த கையுடன் திரும்பி சென்னை வந்துவிடுவான் .

அவன் மனதிற்கினியவளை பார்ப்பதற்காக , ஆனால் அவளோ மிகவும் நாசூக்காக பிரவீனை தவிர்த்தாள் . அவன் குழம்பினாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணினான் . பிரவீனின் மனதின் முழுமைக்கும் இப்பொழுது மிருதுவின் திருமண ஏற்பாடுகள் பற்றிய எண்ணமே ஆட்கொண்டிருந்தது .

ஸ்ரீதர் பிரவீனின் அலுவலகம் வந்தவன் நேராக பிரவீனின் அறைக்கு சென்று கதவை தட்டினான் .

"எஸ் கம் இன் " என்றான் பிரவீன் .

கதவை திறந்து உள்ளே வந்த ஸ்ரீதரை கண்டு எழுந்து சென்று கை குலுக்கி "ஹேய் ஸ்ரீதர் வாங்க , வாங்க " புன்னகையுடன் வரவேற்றான் .

மென்முறுவலை பதிலாக தந்த ஸ்ரீதர் , பிரவீனின் இருக்கைக்கு எதிரில் சென்று அமர்ந்தான் .

"என்ன ஸ்ரீதர் சொல்லாமல் வந்திருக்கீங்க எனிதிங் சீரியஸ் ....?" கேள்வியாக முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளுடன் கேட்டான் .

"இல்லை ...ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன் ..." ஸ்ரீதர் புன்னகையுடனே கூறினான் .

"ஒஹ் சொல்லுங்க ..." பிரவீன் ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருக்கையில் மீண்டும் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது .

"எஸ்க்கியுஸ் " என்று நாகரீகமாக ஸ்ரீதரிடம் அனுமதி வேண்டிய பிரவீன், "யா கம் இன் ".... வெளியே நிற்பவருக்கு பதில் தந்தான் .

உள்ளே நுழைந்த சஹானாவை யோசனையுடன் பார்த்தான் பிரவீன் . சஹானா இறுக்கமான முகத்துடன் அவன் எதிரில் வந்து நின்றாள் .

இதன் இடையில் சஹானாவோ , ஸ்ரீதரோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை ....இவர்களின் அந்நியபார்வை பிரவீனின் மனதில் சந்தேகங்களை விதைத்தது .

"எஸ் சஹானா "

அவனின் கேள்விக்கு மௌனமாக தனது கையில் இருந்த கடித உறையை அவன் முன் நீட்டினாள் .

அவனும் குழப்பத்துடன் அந்த உறையை வாங்கி பிரித்து பார்த்தவன் அதிர்ந்தான் . ஆனால் முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை .

கடுமையான முகபாவத்துடன் நிமிர்ந்து "சஹானா வாட் இஸ் திஸ் ..?" சற்றே கடுமையுடன் ஆனால் முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளாமல் கேட்டான் .

"ரெசிக்நேஷன் " அழுத்தமான பதில் .

"இதற்கு இப்ப என்ன தேவை வந்தது ?"

"எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்லை ..."

"வாட் ? ...." கோவத்தின் உச்சியில் இருந்தான் நாயகன் .

"சாரி சார் ...எனக்கு இங்கு வேலை செய்ய இஷ்டம் இல்லை ..." சொன்னதையே திரும்பிச்சொன்னாள் நாயகி .

சற்றே நிதானத்தை வரவழைத்து அவள் கண்களை பார்த்த பிரவீன் "வெள் இங்க இருந்து போகணும்னா சில ரூல்ஸ் போலோவ் பண்ணனும் ....உங்களுக்கு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன் ?" கேள்வியாக நிறுத்தினான் .

இந்த உரையாடல் நடக்கும்பொழுது எதிரில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் தனது அலைபேசியினுள் மூழ்கிப்போனான் . நிமிர்ந்து எவரையும் கண்டானில்லை .

"எஸ் சார் நல்லா நியாபகம் இருக்கு ...காண்ட்ராக்ட் பீரியட் இரண்டு வருஷம் அதுக்கு முன்னாடி போனால் அபராதம் கட்டணும் , மேலும் மூன்று மாசம் நோட்டீஸ் பீரியட் கொடுக்காமல் நீங்கினால் அந்த மூன்று மாத சம்பளத்தொகை ,அதையும் கட்டணும் " என்று கூறி இன்னொரு உறையை எடுத்து நீட்டினாள் சஹானா .

புருவத்தின் நடுவில் முடிச்சுடன் அதை வாங்கி பிரித்து பார்த்தவன் மனதினுள் அதிர்ந்தான் . அத்தனை அபராத தொகையையும் ஒன்றாக வைத்து அவனிடம் கொடுத்திருந்தாள் பெண்ணவள் .

கண்களில் அனல் கக்க அவளை பார்த்தான் . ஸ்ரீதர் முன் ஒன்னும் செய்யமுடியாத கையறு நிலை . சரி பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணி அவளிடம்

"ஓகே உங்க மேனேஜர் கிட்ட கொடுங்க அப்பறம் பேசிக்கலாம் ..." வரவழைத்த நிதானத்துடன் பேசினான் .

"இல்லை சார் பேசிட்டேன் ...நீங்க அனுமதிக்காம எந்த முடிவையும் எடுக்க முடியாது சொல்லிட்டார் , கொஞ்சம் கையெழுத்து போட்டு தந்தால் நல்லா இருக்கும் " நிமிர்வாக பேசினாள் .

அவளின் சார் என்ற அழைப்பு அவனின் கோவத்திற்கு தூபம் போட்டது .

வேகமாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டவன் கோபத்துடன் அவளிடம் வீசாத குறையாக தந்தான் . ஸ்ரீதரின் முன் எந்த ரசாபாசமும் நிகழ்வதை பிரவீன் விரும்பவில்லை .

அந்த கடிதத்தை பெற்றுக்கொண்டு சஹானா வெளியேறினாள் .

பிரவீன் கையாலாகாத நிலையில் கடுப்பில் செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் .

"பிரவீன் நான் சொல்லவந்த விஷயத்தை சொல்லிடறேன் " ஸ்ரீதர் பொறுமையாக பேச்சை தொடங்கினான் .

பிரவீனின் மௌனம், அவனின் கவனம் எங்கோ இருப்பதை சொல்லாமல் சொல்லியது .

யோசனையுடன் பிரவீனை பார்த்த ஸ்ரீதர் "பிரவீன் , பிரவீன் " என்று சற்றே குரல் உயர்த்தி அழைத்துப்பார்த்தான் .

எதற்கும் பலனில்லாமல் போக மேஜையை தட்டி "பிரவீன் " என்று இன்னும் பலமாக அழைத்தான் .

அதில் நினைவிற்கு வந்த பிரவீன் "சாரி ஸ்ரீதர் ஏதோ யோசனை.. " என்று வாசலை பார்த்துக்கொண்டே சொன்னான் .

"இட்ஸ் ஓகே , நான் சொல்லவந்ததை சொல்லிடறேன் ...இன்னும் இரண்டு நாள் கழிச்சு நாங்க உங்க வீட்டுக்கு வரோம் ...எ கேஸுயல் விசிட் , மிருதுகிட்ட சொல்லிடாதீங்க ..அப்பறம் .." என்று இழுத்தான் ஸ்ரீதர் .

"சொல்லுங்க ஸ்ரீதர் "

"ஒன்னும் பெரிசா இல்லை பிரவீன் அம்மா குடும்பமா எல்லாரையும் பார்க்கணும் சொல்றாங்க உங்க பிரதர் சதீஷ், அவரும் இருந்தா நல்லா இருக்கும் அதான் சொல்லவந்தேன் " என்றான் .

"நோ ப்ரோப்லேம் ஸ்ரீதர் கண்டிப்பா சதீஷ் இங்க இருப்பான் , நீங்க யாரெல்லாம் வறீங்க? " பொதுவாக கேள்வி எழுப்பினான் பிரவீன் . அவன் மனதெல்லாம் தன்னவளிடமே இருந்தது .

"நான் , அம்மா அப்பறம் எங்க சித்தப்பா பேமிலி ..அவங்க நாலு பேர் மொத்தம் ஆறு பேர் வருவோம் "

அதன் பிறகு ஸ்ரீதர் பொதுவாக சில விஷயங்களை பேசிக்கொண்டிருந்தான் . மனமே இல்லாமல் பிரவீன் அதற்கெல்லாம் வேண்டாவெறுப்பாக பதில் தந்தான் .

சற்றுநேரத்திற்கு பின் ஸ்ரீதர் பிரவீனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான் .

............................

ஸ்ரீதர் கிளம்பியவுடன் வேகமாக தனது அறையில் இருக்கும் அலைபேசியை எடுத்து சில இலக்கங்களை அழுத்தியவன் பொறுமையின்றி காத்திருந்தான் .

அழைப்பு ஏற்கப்பட்டவுடன் "சஹானாவை என் ரூமிற்கு உடனே வரச் சொல்லுங்க " வேகமாக கூறி, கோபத்துடன் அழைப்பை துண்டித்தான் .

சற்று நேரத்தில் சஹானா வராமல் மேனேஜர் வந்தார் . அவரைப் பார்த்து அவனின் எரிச்சல் கூடியது .

"உங்க பெயர் என்ன சஹானாவா ? கிருஷ்ணன் அப்படினு எனக்கு நியாபகம் " பொறுமையில்லாமல் பேசும் பிரவீனை வியப்பாக பார்த்தார் . பொதுவாக பிரவீன் கண்டிப்பானவன் அதே நேரம் பொறுமையானவன் .

"சார் அது வந்து ..."

"அதான் வந்துடீங்களே கிருஷ்ணன் , என்னனு சொல்லுங்க " சலிப்பாக இருந்தது அவனிற்கு .

"சார் சஹானா உங்க சிக்நேசரோட லெட்டரை என்கிட்ட கொடுத்துட்டு , பேனாலிட்டியும் பே பன்னிட்டு கிளம்பிட்டாங்க ..." அவர் அவனின் கடுப்பை கண்டு தயங்கித்தான் சொல்லிமுடித்தார் .

"வாட் ? எப்படி என்கிட்ட கேக்காம அவளை நீங்க ரிலீவ் பண்ணலாம் " இதோ இதோ என்று இருந்தவன் வெடித்துவிட்டான் .

"சார் கம்பெனி நோர்ம்ஸ் ..நீங்க கையெழுத்து போட்டு , அபராதம் பே பண்ணினா நாம யாரையும் தடுக்க முடியாதே " உள்ளதை எடுத்துக் கூறினார் .

"ஷ்**" என்று கத்திக்கொண்டே ஓங்கி தன் முன் இருந்த மேஜையை குத்தினான் .

அந்த மேஜையின் ஆயுள் இன்னமும் மீதம் இருக்கிறது போல் , உடையாமல் தப்பித்தது .

மேனேஜர் அவனின் கோவத்தில் அரண்டேபோனார் . சற்று நேரம் பிரவீன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் வேகமாக மேஜையின் அருகில் வந்தவன் மீண்டும் அலைபேசியை எடுத்து காவலாளிக்கு அழைத்தான் .

"சஹானா கிளம்பிட்டாங்களா ..." வேகமாக வினவினான் .

"ஆமாம் சார் இப்பதான் கையெழுத்து போட்டுட்டு போறாங்க , ஒரு கார்ல யார்கூடயோ போனாங்க " காவலாளி தான் பார்த்ததை கூறினான் .

குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தவன் மானேஜரை கண்டுகொள்ளாமல் வேகமாக கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் கணினி அறைக்குள் சென்றான் .

எதையோ தானே தேடினான் பிரவீன் . அவன் தேடியது கிடைத்தவுடன் புரிவத்தின் நடுவில் விழுந்த முடிச்சுடன் யோசனையில் ஆழ்ந்தான் .

...............................

சதீஷ் ஜெர்மனில் தனது அலைபேசியை நடுக்கத்துடன் பிடித்திருந்தான் . அதில் வரும் அழைப்புகள் அவனை மிரளவைத்தது .

ஒரு கட்டத்திற்கு மேல் ஆழ்ந்த மூச்சுடன் அழைப்பை ஏற்றவன் "அம்மு !!" நடுக்கத்துடன் கூப்பிட்டான் .

"ஹாஹாஹாஹா ,என்ன சதீஷ் பயமா இருக்கா , உன் குரல் இப்படி நடுங்குது ?" ஆக்ரோஷமாக வந்தது வார்த்தைகள் .

"அம்மு ப்ளீஸ் நான் செஞ்சது தப்பு தான் , உன்னை லவ் பண்ற மாதிரி பேசி ஏமாத்தி ,அங்க கூட்டிட்டு போனது எல்லாமே தப்பு தான் ...ப்ளீஸ் இப்படி தள்ளி நின்னு கொள்ளாத ...என்கிட்ட வந்திடு அம்மு " அவனின் குரலில் இருந்தது என்ன ?

"ஆஹான் நம்பமுடிலயே சதீஷ் , என்ன ஒழுங்கா சாகாம பொழைச்ச என்னை மீண்டும் சாகடிக்க என்னம்மா ...?" எள்ளலாக வந்தது கேள்வி .

"அம்மு இல்லமா , நான் அப்படி நடக்கும்னு எதிர்பார்களை ... சத்தியமா என்னை நம்பு " கெஞ்சினான் அவன் .

"ச்ச நடிக்காத உன்னை நம்பி ஏமாற நான் பழைய அம்மு இல்லை , தெரிஞ்சே என்னை ஸ்டாக் பண்ணி ட்ராப் பன்னிருக்க அதை நம்பி நானும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன் " வலியுடன் வந்தது அந்த குரல் .

"அம்மு " என்ன ஆச்சர்யம் சதீஷின் கண்களில் கண்ணீர் .

"என் வாழ்க்கையை அழிச்சுட்டு உன் தங்கைக்கு கல்யாணம் செஞ்சு வைக்க போறியா ?...." ஆழ்ந்து ஒலித்தது அந்தக்குரல் .

"அம்மு , உனக்கெப்படி தெரியும் ?" அதிர்ச்சியுடன் கேட்டான் சதீஷ் .

"எனக்கு எல்லாம் தெரியும் , நடக்காது உன் தங்கச்சி கல்யாணம் நடக்கவே நடக்காது ....பாவி பாவி என் குடும்பத்தை சிதச்ச உன் குடும்ப ஆட்களின் வாழ்க்கையை நிம்மதியா இருக்க விட மாட்டேன் " ஆவேசமாக கூறினாள் அம்முவாக அறியப்பட்டவள் .

"அம்மு , மிருது உன் பிரின்ட் அவளை பலி வாங்கிடாத ...பாவம் செஞ்சது நான் என்னை என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ ப்ளீஸ் " அண்ணனாக துடித்தான் .

"ஒஹ் உன் தங்கச்சி அப்படினா துடிக்குதோ , பாரு என்ன நடக்குதுன்னு , உன் வீட்டு பொண்ணுக்கு ஒரு விஷயம் நடக்கறப்ப தான் அடுத்த வீட்டு பொண்ணுக்கு நீ செஞ்ச அநீதி உனக்கு புரியும் "கோபமாக கர்ஜித்து அழைப்பை துண்டித்தாள் அவள் .

சதீஷ் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் .

..................................................

இங்கு காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்ரீதர் இறுக்கமாக இருந்தான் . அவன் அருகில் அமர்ந்திருந்தவள் கைகளை பிசைந்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் .

வெகுநேரம் கழித்தும் அந்த காரினுள் அமைதி மட்டுமே நிலவியது ....

"ப்ச் இப்ப என்ன உனக்கு , அதான் நீ சொன்னப்பறம் வேலையை விட்டுட்டேன்ல ...." மெதுவாக மௌனத்தை கலைத்தாள் பெண்ணவள் .

"..." மௌனம் மட்டுமே ஸ்ரீதரிடம் .

"டேய் அண்ணா இப்ப நீ பேசலை கொன்றுவேன் " மிரட்டினாள் அவள் .

கார் கிரீச்சிட்டு நின்றது . வேகமாக அந்த பெண்ணின் பக்கம் திரும்பிய ஸ்ரீதர் "அடிச்சேனா பல்லு பேந்துடும் , பலி வாங்குறாளாம் பலி ....அண்ணனு நான் இருக்கேன் என்கிட்ட ஒருவார்த்தை சொன்னியாடி நீ , ஜெர்மன்ல இருந்து வந்து அஞ்சு வருஷம் ஆகிடுச்சு ஒருதடவை கூட என்கிட்ட பேசாம இருந்திருக்க ...." கர்ஜித்தான் ஸ்ரீதர் .

ஸ்ரீதரின் கோவத்தை கண்டு கலகலவென சிரித்தாள் பெண்ணவள் "நீ கோபப்படறப்ப எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ....போ அண்ணா காமெடி பண்ணிட்டு "

"சஹானா பி சீரியஸ் என்ன லவ் ஹா ?" கேள்வியாக அவளின் கண் பார்த்து கேட்டான் .

"நீ எதை சொல்ற ?" புரியாததை போல் நடித்தாள் அவள் .

"சஹா , இங்க பாருடா பிரவீன் கண்ணுல ஒரு உரிமை உணர்வை பார்த்தேன் ...அவன் உன்னை ஆழமா நேசிக்கிறான் " ஸ்ரீதர மென்மையாக எடுத்து கூறினான் .

"அவர் என்னை காதலிக்கலை " முகத்தை திருப்பிக்கொண்டு கூறினாள் .

"அப்ப நீ அவரை காதலிக்கிற ?" சஹானாவை இன்னும் உற்றுநோக்கிக்கொண்டே கேட்டான் ஸ்ரீதர் .

"....." இப்பொழுது மௌனமே பதிலாக அவளிடம் .

"ஹ்ம்ம் எல்லாம் உன்னை பெத்தவங்களை சொல்லணும் ,நீ என்ன சொன்னாலும் ஆமான்னு கேட்டுட்டு இருக்காங்கல்ல " ஸ்டேரிங் வீலை அழுத்தமாக பிடித்துக்கொண்டே பேசினான் ஸ்ரீதர் .

"அவங்களை எதுவும் சொல்லாதே " அழுத்தமாக சொன்னாள் பெண்ணவள் .

"ப்ச் சஹா உனக்கு புரியலை பிரவீன் நீ நினைக்கிற மாதிரி லேசுப்பட்டவன் இல்லை , சதீஷ் உன் டார்கெட் ஓகே , அதுக்காக ஏன் இப்படி பிரவீன் கிட்ட மாட்டின அவன் இனி உன்னை விடமாட்டான் ..." ஸ்ரீதர் ஆழ்ந்த குரலில் கூறினான் .

"அண்ணா நீ எல்லாம் இருக்கிறப்ப என்னைய என்ன பண்ணிட முடியும் ..." புன்னகையுடன் தலை சாய்த்து கேட்டாள் சஹானா .பிரவீனை அவள் சற்று குறைத்து இடைபோட்டுவிட்டாளோ ?

அவளின் குறும்பில் புன்னகைத்தவன் "நான் எல்லாம் பிரவீன் முன்னாடி ஒண்ணுமே இல்லை சஹானா ...பிசினஸ் சைட் அவனை பற்றி விசாரிச்சுப்பார் , சிம்மசொப்பனம் அவன் ...அவர் இன்னைக்கு பொறுமையா போனதே நான் இருக்கேன்றதால தான் ...இந்நேரம் உன்னை பற்றி அலசத்தொடங்கிருப்பார் " பிரவீனை நன்கு அறிந்தவனாக கூறினான் ஸ்ரீதர் .

"சுபத்ரா குரூப்ஸ் தெரியுமா ?"

"ஆமாம் ஏதோ இப்ப வளர்ந்து வர நிறுவனம் , கேள்விப்பட்டேன் ...பெங்களூர்ல கூட சுபத்ரா இன்போடெக் வச்சிருக்காங்கனு சொன்னாங்க " கூறிக்கொண்டே வந்தவன் சஹானாவின் மர்மமான புன்னகையில் விதுவிதிர்த்து போனான் .

"சஹானா ? " ஆச்சர்யமாகவும் ,கேள்வியாகவும் நிறுத்தினான் .அதற்கும் புன்னகையே பதிலாக கிடைத்தது அவனிற்கு .

"அண்ணா ஒரு கால் பேசிக்கிறேன் " என்று சொல்லி அலைபேசியை எடுத்தவள் யாருக்கோ அழைத்தாள் .

"ஹலோ குரு எல்லாம் முடிஞ்சுதா " நிதானமாக கேட்டாள் .

அந்த பக்கம் அவளுக்கு தேவையான பதில் வந்தவுடன் "அண்ணா கீர்த்தனா அம்மா வந்து சேர்ந்தாச்சு , உன்னை விட பிரவீனை பற்றி எனக்கு தெரியும் ...யோசிச்சு தான் இதில் இறங்கினேன் " தீவிரமாக பதில் தந்தாள் .

சற்று நேரத்தில் ஸ்ரீதரின் கார் ஒரு மாளிகையின் முன் சென்று நின்றது .

துள்ளலுடன் இறங்கிய சஹானாவை ஆரத்தி எடுத்து வரவேற்றார் சௌம்யா .

"உங்களை பார்த்து எத்தனை நாள் ஆச்சு ?" அதே துள்ளலுடன் சௌம்யாவை அணைக்க சென்றாள் சஹானா .

"பளார் ..." ஆரத்தி தட்டை வேலைக்கார பெண்மணியிடம் ஒப்படைத்தவர் தன்னை நெருங்கிய சஹானாவை ஓங்கி அறைந்திருந்தார் சௌம்யா .

"பெரியம்மா ...!!" அதிர்ச்சியுடன் கன்னத்தை பிடித்து நின்றுவிட்டாள் சின்னப்பெண் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top