JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் - 12

saaral

Well-known member
அத்தியாயம் - 12

ஸ்ரீதர் சொன்னது உண்மை என்பது போல் பிரவீன் விரைவாக சஹானாவின் வீட்டிற்கு சென்றான் . அங்கு பிரவீனை வரவேற்றது பூட்டி இருந்த வீடு தான் . வீட்டை காலி செய்து கிளம்பியிருந்தாள் சஹானா .

வீடு விற்பனைக்கு என்று சுபத்ரா கட்டுமானம் மற்றும் விற்பனை நிறுவனத்தால் அங்கு ஒரு பலகை வைக்கப்பட்டிருந்தது .

தனது ஆட்களை விட்டு அக்கம் பக்கம் விசாரிக்கச் சொன்னான் . அருகில் இருந்தவர்களோ தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே தந்தனர் . அதில் சிலரோ உயர் ரக கார்களில் சிலர் வந்து அந்த வீட்டில் உள்ளவர்களை அழைத்துச் சென்றனர் என்று கூறினர் .

பிரவீன் அதற்குமேல் சஹானாவை பற்றி தீவீரமாக யோசிக்கமுடியாமல் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டான் .

பங்குச்சந்தையில் பிரவீனின் நிறுவனத்தின் பங்குகள் கணிசமாக குறையத்துவங்கியது .

''கிருஷ்ணன் என்ன இது எப்படி ஷேர் மார்க்கெட் ட்ரோப் ஆச்சு " கோவத்தின் உச்சியில் இருந்தான் .

"எனக்கு தெரியலை சார் " நிஜமாகவே அவருக்கு தெரியவில்லை . பங்கு சந்தையின் ஏற்றம் இரக்கம் என்பது சகஜமே ஆனால் இப்பொழுது நிகழ்ந்திருப்பதோ தொடர் சரிவு .

"இந்த பதிலை சொல்ல நான் உங்களை வேலையில் வச்சுக்களை கிருஷ்ணன் " கர்ஜனையாக கூறிவிட்டு தனது அலைபேசியை எடுத்தான் .

அவனிற்கு தேவையான சில தகவல்களை பெற்றுக்கொண்டு இணைப்பை துண்டித்தவன் "சுபத்ரா இன்போடெக் பெங்களூரு , இது மேனேஜிங் டைரக்டர் யாரு " கிருஷ்ணனிடம் கேட்டான் .

பொதுவாக போட்டி நிறுவனங்களை பற்றி அறிந்து வைத்திருப்பவர் கிருஷ்ணன் ஆகையால் இதற்கு பதிலை அவரால் கொடுக்க முடிந்தது ."சார் சுபத்ரா இன்போடெக் அண்ட் சுபத்ரா குரூப்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஜெர்மனில் கட்டுமான தொழில் நிறுவனம் வச்சிருக்கார் , ஆனால் சுபத்ரா குரூப்ஸ் இந்தியாவின் நிறுவனத்தின் சீப் எக்ஸ்க்குடிவ் ஆபிசர் அவரோட பொண்ணு"

"அவங்களை நான் பார்க்கணும் " புருவத்தை நீவிக்கொண்டே யோசனையாக சொன்னான் .

"சார் அது அவ்ளோ ஈசி இல்லை , சமீபமா மிஸ்டர் சத்யாவோட கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனியை ஒன்னும் இல்லாமல் ஆக்கினது இதே நிறுவனம் தான் , உங்க அப்பாவும் அந்த சத்யா சாரும் எவ்ளோ முயன்றும் அவங்களை பார்க்க முடியலை ..." கிருஷ்ணனின் கூற்றில் பிரவீன் யோசனையில் ஆழ்ந்தான் .

............................................

ஜெர்மனில் சதீஷ் எடுத்து செய்யும் ப்ரொஜெக்ட்டில் பெரிய குளறுபடி நிகழ்ந்தது. மொத்தமாக அவன் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் அனைத்து கணினிகளும் ஹேக் செய்யப்பட்டன .

இதற்கு முக்கியகாரணமாக பிஎஸ்எம் இன்போடெக் உருவாக்கிய மென்பொருளில் போதிய பாதுகாப்பின்மையே என்று கூறினர் .

பிரவீனிற்கு அழைத்த சதீஷ் "பிரவீன் இங்க பெரிய பிரச்சனை , நமக்கான காண்ட்ராக்ட் கான்செல் பன்னிட்டாங்க , அதுவும் இல்லாமல் பெனால்டி பே பண்ண சொல்றாங்க " குழப்பத்துடன் சொன்னான் .

பிரவீன் சற்றே அதிர்ந்தான் , தொழிலில் இறங்கியதில் இருந்து அவன் மேற்பார்வையில் அவனுக்கு கிடைக்கும் முதல் தோல்வி , அதுவும் தொடர் தோல்விகள் .."வாட் ? என்ன சொல்ற சதீஷ் இது எப்படி சாத்தியமாச்சு ? ".

நடந்தவைகளை கூறினான் சதீஷ் ..

"சதீஷ் இப்ப இதை பேச நேரம் இல்லை , உடனே கிளம்பி வா.. வர சண்டே ஸ்ரீதர் குடும்பத்துடன் வீட்டிற்கு வரார் , இங்கயும் நிலைமை சரி இல்லை ...நேரில் வா பேசிக்கலாம் " பிரவீனின் மனம் ஏதோ ஒன்றை எச்சரித்துக்கொண்டே இருந்தது .

ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் சஹானாவை பற்றிய அனைத்து தகவல்களையும் தரச்சொல்லி கேட்டிருந்தான் . ஸ்ரீதருக்கும் , சஹானாவிற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அவன் மூளையை வண்டாக குடைந்து கொண்டிருந்தது .

............................................................................................................

அனைவரையும் புரட்டி போடும் அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது .

சாரதா மற்றும் விஸ்வம் தம்பதியருக்கு மிக்க மகிழ்ச்சி . தங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஸ்ரீதரின் குடும்பமும் நல்ல பணக்கார குடும்பம் தான் . ஆனால் ஸ்ரீதரின் சித்தப்பாவின் குடும்பம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் ,விறல் விட்டு என்னும் நபர்களில் உள்ள பெரும் பணக்காரர் என்றும் தெரிந்துகொண்டனர் .

பிரவீன் மற்றும் சதீஷ் அவர்களின் அலுவலக அறைக்குள் அமர்ந்து, நடக்கும் பிரச்சனைகளின் காரணங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர் . மிருதுளா வீட்டில் இருக்கும் பரபரப்பை கண்டு குழம்பினாள் .

"அம்மா யார் வராங்க? " அடுப்படியில் வேலைக்காரர்களை ஏவிக்கொண்டிருந்தவர் மகளின் கேள்வியில் எழுந்த புன்னகையை மறைக்க பெரும் முயற்சி எடுத்தார் .

"அப்பாவோட நண்பர் மிருது போ , போய் அழகா சேலை கட்டி தயார் ஆகு .." முகம் மாறாமல் கூறினார் சாரதா .

"அம்மா , அப்பாவோட பிரிண்ட் வந்தா நான் எதுக்கு சேலை கட்டணும் " குழப்பத்துடன் கேட்டாள் மிருதுளா .

"மிருது ரொம்ப கேள்வி கேக்காத ...கல்யாண வயசுல இருக்கிற பொண்ணு சேலை காட்டினா தான அழகா இருக்கும் , நாளை பின்ன வீட்டுக்கு வரவங்க மூலமா நல்ல வரன் அமையும் " தர்க்கம் செய்யும் மகளிடம் பெரும் போராட்டமே செய்து முடித்து ,சேலை கட்ட அனுப்பிவைத்தார் .

............................................

அலுவலக அறைக்குள் பிரவீனின் அலைபேசி ஒலி எழுப்பியது அதை எடுத்து காதில் வைத்தவன் "ஹலோ கிருஷ்ணன் என்ன இன்னைக்கு கூப்பிட்டிருக்கீங்க ?" சற்றே எரிச்சலுடன் கேட்டான் .

"....." அந்த பக்கம் கிடைத்த நீண்ட விளக்கத்தில் உறைந்தான் .

அசைவுற்று உறைநிலையில் அமர்ந்திருக்கும் தனது உடன் பிறப்பை நெருங்கினான் சதீஷ் .

"நீங்க சொல்றது சரியான தகவலா ?" பிரவீன் சற்றே தெளிந்து மீண்டும் கேள்வி எழுப்பினான் .

"...." கிருஷ்ணன் சொன்ன பதிலை கேட்டு கடுமையாக மாறியது அவன் முகம் .

பட்டென்று அழைப்பை துண்டித்தவனின் முகம் இறுகிப்போய் இருந்தது . சதீஷிர்கே , பிரவீனை பார்க்க பயமாக இருந்தது .

"பிரவீன் என்னாச்சு ?" மெதுவாக அண்ணனை நெருங்கினான் சதீஷ் .

"..." பதில் இல்லை பிரவீனிடம் .

"பிரவீன் " சதீஷின் அழுத்தமான அழைப்பில் தெளிந்தான் .

"சொல்லு சதீஷ் "

"என்னாச்சு , கிருஷ்ணன் என்ன சொல்றார் "

"ஒன்னும் இல்லை " பிரவீன் இறுக்கத்துடன் பதில் கூறினான் .

"பிரவீன் , என்ன " என்ற சதீஷின் பேச்சை தடை செய்தது சாரதாவின் அழைப்பு .

பிரவீன் மற்றும் சதீஷ் இருவரும் கூடத்திற்கு வந்தனர் .

அங்கு விஸ்வம் , சாரதா இருவரும் ஸ்ரீதருடனும் , அவனின் அம்மா சௌம்யாவுடனும் பேசிக்கொண்டிருந்தனர் .இவர்கள் வரும் அரவம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர் .

"ஹாய் சதீஷ் , எப்படி இருக்கீங்க ? எப்ப இந்தியா வந்தீங்க " ஸ்ரீதர் சதீஷை நெருங்கி இயல்பாக பேசினான் .

"ஹாய் , நான் நல்லா இருக்கேன் ஸ்ரீதர் . இன்னைக்கு மோர்னிங் தான் ஜெர்மனில் இருந்து வந்தேன் " சதீஷ் , ஸ்ரீதருடன் கைகுலுக்கினான் .

"ஒஹ் குட் , அம்மா இவர் பிரவீன் மிருதுவின் பெரிய அண்ணன் , அண்ட் இவர் சதீஷ் மிருதுவின் இரண்டாவது அண்ணன் " சௌம்யாவிற்கு அறிமுகம் செய்துவைத்தான் ஸ்ரீதர் .

அனைவரின் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு "உங்க சித்தப்பா அவங்க குடும்பமும் வராங்க சொன்னீங்களே ஸ்ரீதர் " பிரவீன் தனது இறுக்கத்தை சற்றே தளர்த்தி பேசத்தொடங்கினான் .

"இல்லை பிரவீன் , திடீர்னு அவங்களால் கிளம்ப முடியலை , பட் இன்னும் ஒரு இருபது நிமிஷத்தில் இன்னொரு சித்தியும் அவங்க பொண்ணும் வந்திடுவாங்க " என்றான் ஸ்ரீதர் .

சேலையுடன் பெரும் போராட்டம் நடத்தி அப்பொழுதுதான் படி இறங்கினாள் மிருதுளா . சேலையின் மடிப்புகளை சரி செய்துகொண்டே இறங்கியதால் எதிரில் எவர் இருக்கிறார் என்றும் பார்க்காமல் "அம்மா எதுக்கு இப்ப சேலை எல்லாம் , இதை கற்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு " அலுத்துக்கொண்டே வந்தாள் .

தன்னுடைய பேச்சிற்கு எந்த பதிலும் இல்லாமல் போகவும் குழப்பத்துடன் நிமிர்ந்தவள் அங்கு நின்ற அனைவரையும் பார்த்து அதிர்ந்தாள் .அதிலும் ஸ்ரீதரை விரிந்த கண்களுடன் ,அதிர்ச்சியுடன் நோக்கினாள் .

"வா மா மிருதுளா , கடைசியா எங்க வீட்டு மருமகளை என் பையன் கண்டுபிடிச்சுட்டான் " சௌம்யா அவர்கள் மகிழ்ச்சியுடன் பேச்சை தொடங்கினார் .

சௌம்யாவின் கூற்றில் மேலும் அதிர்ந்தவள் ஆச்சர்யத்துடன் ஸ்ரீதரை கண்டாள் . அவனோ அதைக்கப்பட்ட புன்னகையுடன் ,குறும்பு கூத்தாடும் கண்களால் தன்னவளையே பார்த்துக்கொண்டிருந்தான் .

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை அனைவரும் கண்டும் காணாமல் இருந்தனர் .

சதீஷ் எழுந்து சென்று தங்கையின் தோளில் கை போட்டு அழைத்துவந்தான் . இறுதி படியில் நின்றிருந்தவள் சதீஷுடன் மெதுவாக நடந்து நீல் விரிக்கையின் அருகில் வந்தாள் .

மிருதுளாவின் கைகள் நடுங்க தொடங்கியது , அவளின் இதய துடிப்பின் ஓசை அவளிற்கே கேட்டது . சதீஷ் கூடத்தில் இருந்த இருவர் அமரக்கூடிய இருக்கையில் அவளை அமர்த்திவிட்டு நகரப்பார்த்தான் .

எங்கே தங்கை விட்டால் தானே , சதீஷின் கைகளை இறுக்கமாக பற்றி தனக்கு அருகிலே அமரவைத்துவிட்டாள் மிருதுளா .

"மிருது என்னடா , நான் அங்க உக்காந்திருக்கேன் " மென்மையாக கூறினான் சதீஷ் .

"அண்ணா ப்ளீஸ் " சதீஷிடம் கெஞ்சி அருகில் அமரச்சொன்னாள் . அவனும் அமர்ந்தான் .

அவளின் படபடப்பு ஸ்ரீதற்கு மிகவும் ரசனையான விஷயமாக இருந்தது .

பிரவீன் இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் தனது அலைபேசியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான் .

மீண்டும் அங்கொரு மௌனம் . பிரவீன் எழுந்து சென்று அலுவலக அறையினுள் யாருடனோ அலைபேசியில் விவாதித்துக்கொண்டிருந்தான் .

அங்கு நிலவிய மௌனத்தை கலைக்க வந்து சேர்த்தாள் அவள் .

"ஹாய் பெரியம்மா என்ன அண்ணா பிளாட் ஆகிட்டானா ? " பெரும் சத்தத்துடன் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தாள் அவள் .

""சஹானா " என்று மிருதுவும் , "அம்மு" என்று சதீஷும் தங்களின் வாய்க்குள்ளே கூறிக்கொண்டனர் .

பிரவீன் அந்த குரலின் தாக்கத்தில் வேகமாக வெளியே வந்தான் . வந்தவன் சஹானாவின் உடையிலும் அவளின் ஆர்பாட்டத்திலும் அதிர்ந்தான் . எத்தனை அதிர்ச்சிகள் இன்று !!

சாரதாவும் , விஸ்வமும் குழம்பி நின்றனர் . அவர்களின் குழப்பத்தை போக்க சௌம்யா சஹானாவை அறிமுகம் செய்து வைத்தார் "இவள் சஹானா என் தங்கை கீர்த்தனாவின் மகள் " என்றார் .

"சஹானா !!...மிருதுவோட பிரின்ட் பெயரும் சஹானா தான் " என்று இழுத்தார் சாரதா .

"ஆண்ட்டி மிருதுவோட பிரின்ட் சஹானா அதுவும் நான் தான் " புன்னகையுடன் பதில் தந்தாள் .

"ஒஹ் வா மா " என்று வரவேற்றார் அவர் .

பிரவீன் அவளை முறைத்து பார்த்தான் . சஹானாவோ அவன் ஒருத்தன் அங்கு இருக்கிறான் என்பதை கூட மறந்தவள் போல் நடந்துகொண்டாள் .

"அம்மா எங்கடா? " என்றார் சௌம்யா .

"லீலா அம்மாவை கூட்டிட்டு வாங்க " சத்தமாக வாசலை பார்த்து அழைத்தாள் .

லீலா , கைத்தாங்கலாக கீர்த்தனாவை அழைத்துவந்தார் . கீர்த்தனாவை பார்த்து அங்கிருந்த மூவர் தங்களின் முகத்திலும் அகத்திலும் பல்வேறு உணர்வுகளையும் அதிர்ச்சியையும் காட்டினர் .

சஹானாவும் ,ஸ்ரீதரும் அங்கிருந்தவர்களை உன்னிப்பாக கவனித்தனர் . சதீஷ் மற்றும் விஸ்வத்தின் முகம் காட்டிய உணர்வுகளை கண்டு எள்ளலாக புன்னகைத்துக்கொண்டாள் சஹானா .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top