JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -15,16,17

saaral

Well-known member
அத்தியாயம் -15

அந்த கேமரா இனைத்திருந்த ஐ பி அடட்ரெஸ்ஸை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது அவர்களுக்கு . பயேர் வால் எணப்படும் இணையதள பாதுகாப்பு வலயங்கள் மிகவும் பலமாக இருந்தது . அவர்கள் இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சற்று காலதாமதமாகும் என்று மதிக்கு கூறி இருந்தனர் .

மதி இதை பற்றி ஒரு வார்த்தை கூட ஸ்வேதாவிடம் கூறவில்லை . ஸ்வேதா மனதளவில் மென்மையானவள் அவள் நிச்சயம் இதை தாங்க மாட்டாள் என்று எண்ணினாள் .

சரியாக இருபத்தி ஐந்து நாட்கள் ஸ்வேதா , மதியின் பரீட்சைகள் முடிவு பெற்ற சமயம் சைபர் காவல் பிரிவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது . "மிஸ் வான்மதி நீங்க சொன்னதை வைத்து அந்த கேமரா இணைக்க பட்டிருந்த இனைய முகவரி கண்டறிந்தோம் . அதில் திவாகர் என்னும் நபர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது "

"அவன் தான் கே கே நிறுவனத்தின் உரிமையாளரா சார் ?"

"இல்லமா இதில் எங்கும் கே கே நிறுவனமோ இல்லை அதை சார்ந்த பெயர்கள் ஏதும் சம்பந்த படவில்லை ." என்று கூறி அந்த அதிகாரி இணைப்பை துண்டித்தார் .

மூன்று நாட்கள் களித்து மதியின் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது "ஹலோ "

"என்னடி உனக்கு அவ்ளோ திமிரா ...என் அண்ணனையே அர்ரெஸ்ட் பண்ண வச்சுட்ட " கர்ஜனையாக வந்தது எதிரில் இருக்கும் நபரின் குரல் .

"ஹே முதல நீ யாரு "

"நான் பிரபாகரன் ....சொல்லிட்டேன் இப்ப என்ன பண்ணுவ " எகத்தாளமாகவே கேட்டான் அவன் .

"என்ன பண்ணுவேன்னா எனக்கு மிரட்டல் கால் வந்துச்சுனு உன்மேலேயும் புகார் கொடுப்பேன் . "

"அதுக்கு முன்னாடி இதுக்கும் சேர்த்து புகார் கொடு ....நான் உனக்கும் அனுப்பும் இணையதள முகவரியை திறந்து பார் "

அவ்ளோதான் என்பதை போல் அழைப்பை துண்டித்துவிட்டான் . அழைப்பை துண்டித்து ஒரு புது எண்ணில் இருந்து வந்த லின்கை திறந்தவள் அதிர்ச்சியாகினாள் . அதில் இவள் மற்றும் ஸ்வேதாவின் பல புகைப்படங்கள் போட்டிருந்தது .

நல்லதை கூட இந்த அளவில் காட்டுத்தீயை போன்று பரப்பிராத மக்கள் இவர்களின் இந்த தேவை இல்லாத விஷயங்களை மும்மரமாக பரப்பினர் . இதன் விளைவு ஸ்வேதா , லிங்கம் , சிவாவின் குடும்பத்தினர் என்று அனைவர்க்கும் பரவியது .

மதி மீண்டும் கமிஷனர் அலுவலகம் சென்று முதல் வேலையாக இந்த புகைப்படங்கள் மேலும் பரவாமல் தடுக்குமாறு கூறினாள் . காவல் துறை சார்ந்தவர்களும் அதில் மும்மரமாக இறங்கினர் . ஸ்வேதா சொல்லாமல் கொள்ளாமல் பெட்டி படுக்கையுடன் அவளின் பூர்வீகமான ஈரோட்டிற்கு சென்று விட்டாள் .

அறை திரும்பிய மதி ஸ்வேதாவை காணாமல் பயந்தாள் . அவளின் எண்ணோ அணைத்து வைக்கப்பட்டிருந்தது , ஹாஸ்டல் வார்டேனிடம் கேட்டதற்கு அவள் ஊருக்கு செல்வதாக கூறி சென்றுவிட்டாள் என்ற செய்தி கிட்டியது . ஸ்வேதாவின் அம்மாவிற்கு அழைக்கலாம் என்று எண்ணி அலைபேசியை கையில் எடுத்தாள் சரியாக அவளின் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது .

"மதி மதிமா அப்பா அப்பா " வெடித்து அழுதார் .

"அம்மா அப்பாக்கு என்ன ஆச்சு " இவளிற்கு மனதில் பயம்

"......" எதிர் பக்கம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது .

மதியின் மனமோ துடித்தது "ஹலோ ஹலோ " விடாமல் கத்தினாள் .

"ஹலோ "எதிரில் வேறொரு பெண்ணின் குரல் .

"ஹலோ நீங்க யாரு பேசுறது "

"ஹலோ நான் **** மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் ...இந்த அம்மாவிற்கு நீங்க என்ன வேணும் "

"நான் அவங்க பொண்ணு "

"உன் அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க . உன் அப்பாவை இங்கு ஐ சி யூ பிரிவில் சேர்த்திருக்காங்க ...அவருக்கு அடுத்ததடுத்து இரண்டு ஹார்ட் அட்டாக் வந்து சீரியஸ் ஹா இருக்கார் " இதை கேட்ட நொடி மதி மொத்தமாக இடிந்து அமர்ந்தாள் . அவளின் மனமோ "அம்மா அப்பா " என்று மீண்டும் மீண்டும் அரட்டிக்கொண்டே இருந்தது .

சற்று நேரத்தில் தன்னை சுதாரித்து எழுந்த அவள் நேராக சென்று நின்ற இடம் கே கே பிரைவேட் லிமிடெட்டின் தலைமை அலுவலகம் . புயல் போல் உள்ளே சென்றவள் எதிரில் தென்பட்டவர்கள் அனைவரையும் புறக்கணித்து விட்டு எம் டீ அறையின் உள் சென்று நின்றாள் .

அங்கு எம் டி இருக்கையில் அமர்ந்து இருந்த கௌஷிக் புயல் போல் தன் முன் நிற்கும் தன்னவளை கண் சிமிட்டாமல் பார்த்தான் . எத்தனை முறை அவளை பார்க்க சென்றும் அவனால் பார்க்கத்தான் முடியவில்லை . இவன் மதுரை சென்றிருந்த சமயம் இவளை பார்க்க எண்ணினாலும் வேலை வரிசைகட்டி கழுத்தை நெரித்தன . ஒரு வேளை மதுரையில் அவள் வீட்டை கண்டறிந்து சென்று இருந்தாள் நடந்த விபரிதங்களை தடுத்திருக்கலாமோ !! விதி வலியது .


அவன் அவளை ரசித்துக்கொண்டு இருக்கையிலே கௌஷிக்கை நெருங்கிய மதியின் கைகள் இடியென அவனின் கன்னத்தில் இறங்கியது . நடந்து முடிந்த ஒரு நொடி நிகழ்வை கௌஷிக் கிரகிக்கவே அரை நிமிடம் பிடித்தது .

தன்னை சுதாரித்து கொண்டு நிமிர்ந்த கௌஷிகின் கண்கள் ரத்தமென கோபத்தில் சிவந்து இருந்தது "ஹொவ் டார் யூ " என்று கர்ஜித்தான் .

"ஹொவ் சீப் யூ " என்று இவளின் குரல் அந்த அறையில் ஓங்கி ஒலித்தது . நடப்பவை அனைத்தும் கௌஷிக்கின் அலுவலகத்தில் . கண்ணாடி தடுப்பின் வழியே அவனின் ஊழியர்களுக்கு இந்த நிகழ்வு காட்சிப்பொருளாகி இருப்பதை பார்க்க மேலும் கோபம் கொண்டான் .

சதாசிவம் நிலைமை உணர்ந்து கண்ணாடி தடுப்புகளை திரையிட்டு மறைத்தார் . இப்பொழுது முழுதாக மதி முன் நிமிர்ந்து நின்று கோப பார்வை பார்த்தவனை சளைக்காமல் அவளும் எதிர் பார்வை பார்த்தாள் .

"
மிஸ்டர் கௌஷிக் பெண் என்றால் இறைவனின் படைப்பு எவ்வாறோ , அது தான் எனக்கும் இருக்கிறது . இதில் புதிதாக நீங்க எதையும் இணையத்தில் என்னை பற்றி காட்டவில்லை ....எனக்கு அதை பற்றிய கவலையும் இல்லை ....நீங்கள் நினைத்தது ஒருபொழுதும் நடக்காது ...என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் " என்று கூறி வேகமாக திரும்பிய அவள் சட்டென்று அவன் பக்கம் திரும்பி "வேண்டுமென்றால் உங்கள் வீட்டு பெண்களிற்கு ஏதேனும் என்னிடம் இருந்து வித்தியாசம் இருக்கிறதா என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் " கோபமும் நக்கலும் ஒரு சேர கூறினாள் .

எங்கே தன் மனம் கவர்ந்தவளை தன்னையும் மீறி காயம் செய்துவிடுவோமோ என்று அமர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவன் அவளின் கூற்றில் "ஏய் " என்று மேஜையை தட்டி எழுந்தான் . .

"ஷ்ஷ் ....இப்படிலாம் கத்தினால் பயந்துவிடுவேனா ...கர்மா இஸ் அ பூமராங் ....யூ வில் பேய் போர் வாட் ஹவ் யூ டன் டூ மீ ...குட்பை " என்று கண்களில் நீர் நின்று மின்ன நிமிர்வுடன் தயிரியமாக கூறி சென்றாள் .

......................................

மதி சென்ற பின்னும் எதற்காக புயலென வந்தாள் ஒரு சுழற்று சுழற்றி சென்றாள் என்று தெரியாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனை "தம்பி " என்னும் சதாசிவத்தின் அழைப்பு மீட்டது .

"என்ன சதாசிவம் "

"தம்பி திவாகர் போலீஸ் கஸ்டடில "

"வாட் எதனால "

"தம்பி திவாகர் மதுரை இடத்துக்காக அதில் சம்பந்தப்பட்டவரின் மகளை கேமரா வைத்து தப்பாக படம் பிடித்து மிரட்டி இருக்கிறான் "

"வாட் " அவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

"அந்த பொண்ணு வேறு யாரும் இல்லை இப்ப வந்துட்டு போனாங்களே வான்மதி ...அதோட அந்த பொண்ணு கூட தங்கி இருந்த இன்னொரு பொண்ணோட போட்டோவையும் போட்டுட்டாங்க " ஒரு பெண்ணை பெற்ற தகப்பனாக அவரின் மனது அந்த இரு பெண்களுக்காக தவித்தது .

கௌஷிக் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் . அவன் இந்த திருப்பத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை . பார்த்திருக்க வேண்டுமோ பெண் என்பவள் அவளும் இறைவனால் படைக்கப்பட்ட சகாமனுஷி தானே அப்படி ஒரு பெண்ணை வைத்து தனக்கு காரியம் சாதித்து முடிப்பதாக திவாகர் கூறிய பொழுதே தவிர்த்திருக்க வேண்டுமோ .

************************************************************************************

அத்தியாயம் -16

அனைத்தையும் சொல்லி முடித்த கௌஷிக் அகிலத்திடம் திரும்பி தலை கவிழ்ந்து "ஆண்ட்டி நான் எதையும் வேண்டும் என்று பண்ணவில்லை , எனக்கு அந்த பெண் வான்மதியாக இருப்பாள் என்ற எண்ணம் தோணவில்லை , முக்கியமாக நான் மதியை மனதார நேசித்தேன் இத்துணை காலம் திருமணத்தை அவளின் நினைவினால் மட்டுமே தவிர்த்தேன் "

அகிலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது . அவரால் ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லை . கொஞ்ச நாட்கள் முன்பு தான் தனது மகளின் வார்த்தைகளின் வழியாக அறிந்துகொண்ட விஷயம் மீண்டும் கேட்பதற்கு அத்துணை வலியை கொடுத்தது . அவர்களின் வாழ்வையே புரட்டிப்போட்ட நிகழ்வு அது .

அகிலத்தின் உரை நிலைக்கண்டு பதறிய கௌஷிக் "இனியா " என்றான் .

"கௌஷிக் நீ தள்ளி போ நான் பார்த்துகிறேன் " இனியா அவனை அவ்விடம் விட்டு நகர்த்தி அகிலத்தின் அருகில் சென்று அமர்ந்தாள் ..."ஆண்ட்டி நடந்தது நடந்து போச்சு ...நான் இவனை தான் மதி மனம் முடிக்கவேண்டும் என்று கூறவில்லை ஆனால் இவனும் நல்லவன் அதனால் மட்டுமே நாங்கள் இவனுடன் வந்திருக்கிறோம் ....அதற்காக இவன் செய்தது சரி என்று நிச்சயம் சொல்ல மாட்டேன் "

சர்கேஷ் எழுந்து வந்து அகிலத்தின் முன் மண்டியிட்டு அவரின் கண் பார்த்து "அம்மா ...மதி என் தங்கை ...அவளுக்கு அண்ணா என்கிற முறையில் நான் இனி எப்பொழுதும் இருப்பேன் ....அவளின் பாதுகாப்பு என் பொறுப்பு ,இந்த தடிப்பயல் வேண்டாம் வேறு யாரையும் மணந்துகொள்ள மதி ஒத்துக்குவாளா ?" கேள்வியாக நிறுத்தினான் .

அகிலம் சற்று நேரம் சிந்திக்கலானார் . சிறிது நேரம் கழித்து பெருமூச்சை ஒன்றை வெளியிட்டவர் "சர்கேஷ் நீ என் மகனை போல .....இனி மதியின் பொறுப்பு உன்னுடையது " என்று சர்கேஷிடம் அவன் தலை கோதி கூறினார் .

பின் நேராக கௌஷிக் முன் சென்று நின்றவர் முதலில் சற்று தயங்கினார் "தம்பி ...நீங்க என்ன விளக்கம் சொன்னாலும் நீங்கள் செய்தது தவறு . அதெப்படி ஒருவனிடம் ஒரு வேலையை கொடுத்தால் அவன் என்ன செய்றான் அப்படினு பார்க்க மாட்டிங்களா ?" அவரின் கேள்விக்கு அவனால் பதில் கூற இயலவில்லை .

"ஆண்ட்டி எனக்கு நிச்சயமா அது மதி என்று தெரியாது " கெஞ்சும் குரலில் கூறினான் .

"தப்பு தம்பி அது நீங்க விரும்பிய பெண் மதி அதுனால திரும்ப வந்ததா பேசுறீங்க ....அதே இடத்தில் இன்னொரு பெண் இருந்தாலும் அவளின் நிலையும் வான்மதியை போலத்தானே ...." நெற்றியடியான அவரின் கேள்விக்கு சர்கேஷ் கைதட்டினான் .

"சொல்லுடா நல்லவனே இதை உனக்கு புரியவைக்க முயற்சி செஞ்சேன் நீ கேக்கல ....மதி இடத்தில் இனியா இருந்தா அவளின் நிலை யோசித்தாயா இல்லை வேறு எந்த பெண் இருந்தாலும் அவளும் அவளின் குடும்பமும் படும் பாட்டிற்கு இதே போல் திருமணம் என்று பேசிக்கொண்டு சென்று நிற்பாயா " சர்கேஷ் இத்துணை நாள் மனதில் வைத்திருந்த கேள்விகளை கேட்டான் .

"....." மௌனம் மட்டுமே பதிலாக கிடைத்தது கௌஷிக்கிடம் . அவனால் திருமணம் என்று சொல்கயிலே மதியை தவிர்த்து வேறு ஒரு பெண்ணை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை .

"தம்பி மதி மேல் காதல் ...இப்ப அவளை தேடி கண்டு பிடித்து வந்த உங்களால் ஏன் இந்த நான்கு ஆண்டுகளில் வர தோன்றவில்லை " அகிலம் தான் , எவர் குழைந்தை மனம் கொண்டவர் என்று லிங்கமும் மதியும் எண்ணினார்களோ அவரே தனது மகளின் வாழ்விற்காக முன் நின்று பேச தொடங்கினர். அதுவும் எதிரில் இருப்பவனின் வாய் அடைக்கும் கேள்விகளால் துளைத்தெடுத்தார் .

"அது ஆண்ட்டி வந்து "

"என்னடா அது வந்து வாயை திறந்து சொல்லேன் " சர்கேஷிற்கு கோபம் வந்தது .

இனியா உட்புகுந்தாள் "நான் சொல்றேன் சர்கேஷ் அய்யாவிற்கு ஈகோ கண்ணை மறைத்தது ....மதி எல்லார் முன்னாடியும் அறைஞ்சுட்டாங்களா சார் கோப பட்டுட்டார் ....அவர் வீடு பெண்ணிற்கு இதே போன்ற அநீதி இழைக்கப்படவும் அய்யாவிற்கு பழைய காதல் தலை தூக்கி இருக்கிறது , முதலில் மதி பெயர் எடுத்தாலே கோபம் கொள்ளும் மகராசன் , இறக்கப்பட்டு மதி ஜெபம் பண்ணுகிறார் " சக மனுஷியாக நண்பனின் செயலை கண்டும்காணாமல் இருந்தவளால் இதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை .

"இனியா " தீனமாக ஒலித்தது அந்த குரல் .

"என்னடா இனியா உண்மையா காதலிச்சா இன்னேரம் நீ அவள் பக்கத்தில் இருந்திருக்கணும் அதை விட்டுட்டு இப்ப வந்து கல்யாணம் காதல்னு பொலம்பரான் .....நேசித்தால் நேசம் வைத்தவர்களின் வலிகளை தாங்க அருகில் இருந்திருக்க வேண்டும் கௌஷிக் ...." இனியா கோபம் கொண்டு கத்திக்கொண்டு இருந்தாள் .



........................................................

மேலும் ஒருவாரம் சென்றிருந்தது சர்கேஷ் வழக்கம் போல் மதியின் வீட்டிற்கு வந்து சென்றான் . இனியாவிற்கு புது நபர் ஒருவரின் மன நிலையை சீர் செய்யும் வேலை வந்தது அது அவளுக்கு மிகவும் சவாலாகவே இருந்தது . அந்த நபர் ரிஷி தனது நிறைமாத மனைவியுடன் காரில் சென்றுள்ளார் அங்கு இவர் செய்த தவறினால் எதிரில் வந்த லாரியில் மோதிய கார் பெரும் விபத்தில் சிக்கியது . தனது மனைவியை குழந்தையுடன் பறிகொடுத்தவர் அதற்கு முழுமுதற்கரணமாக அவரை குற்றம் சாட்டி அவரே அவரின் மனநிலையை மிகவும் மோசமான நிலைக்கு எடுத்து சென்றுவிட்டார் . அவரை மீட்டெடுக்க இனியா பெரிதும் போராடவேண்டியதாக இருந்தது .

வான்மதி எந்த உணர்வையும் தனது அன்னைக்கு காட்டாமல் தினசரி நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் சீராக செயல்பட்டுக்கொண்டு இருந்தாள் .

அன்று கௌஷிக் ,சர்கேஷ் மற்றும் இனியாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் . காரில் ஏறி அமர்ந்தவுடன் "ஏன் நீங்க அப்படி பேசுனீங்கன்னு கேக்க மாட்டேன் சர்கேஷ் உங்கள் இருவருக்கும் என் மதியின் மேல் இருக்கும் அன்பு புரியுது ....என்னதான் நண்பன் என்று எனக்கு நீங்கள் உதவினாலும் மனிதநேயமுடையவர் எவராக இருந்தாலும் நீங்கள் பேசியதை தான் பேசியிருப்பார்கள் எனக்கு அதில் வருத்தம் ஒன்றும் இல்லை ...என்னுடைய வருத்தம் எல்லாம் நீங்கள் சொல்வதை போல் உண்மையாக அவளை நான் நேசிக்க தவறிவிட்டேனோ என்பதே " மனம் வருந்தி கூறிய கௌஷிக் அவர்களுக்கு புதிது . வலிகள் நிரம்பிய விழிகளுடன் சாலையை வெறித்த கௌஷிக்கை அவர்கள் அதிசயத்தை பார்ப்பதை போல் பார்த்தனர் .

கௌஷிக் மிடுக்குடன் தவறே செய்தாலும் ஆம் நான் தவறு இளைத்தவன் உன்னால் என்ன செய்யமுடியும் என்று நிமிர்ந்து நிற்பவன் . தன் சொந்த உழைப்பில் உயரங்களை எட்டிய கர்வம் கொண்டவன் . அவன் இன்று கண்களில் நீர் தேங்க கலங்குகிறானா ?, அவனின் காதலின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளை சிதறவிட்டுவிட்டோமோ என்று என்ன துவங்கினர் இருவரும் .

*******************************************************************************************

அத்தியாயம் -17

அந்த வார இறுதி நாட்களில் வீட்டில் ஓய்வாக அமர்ந்து இருந்த மகளிடம் சென்று கையில் ஒரு காக்கி நிற கடித உரையுடன் அமர்ந்தார் அகிலம் . புருவத்தை உயர்த்தி அதை வாங்கிய மதி "என்னமா இது ?".

கேள்வி கேட்ட மகளுக்கு நேராக பதில் கூறாமல் "பிரித்து பார் மதிமா " என்றார் .

பிரித்து பார்த்த மதி குழம்பிய பார்வையுடன் அன்னையை நோக்கினாள் . அகிலம் எந்த பதிலும் கூறாமல் எந்த உணர்ச்சியும் காட்டாமல் மகளின் பார்வைக்கு எதிர் பார்வை பார்த்தார் .

அதில் இருந்த நான்கு புகைப்படங்களை பார்த்த மதி சற்று நேரம் ஒன்றும் புரியாமல் இருந்தாள் . எதார்த்தமாக புகைப்படத்தின் பின் பக்கம் திருப்பியவளின் பார்வையில் கோபம் கூடியது ."அம்மா என்ன இது " சீற்றத்துடன் கேட்டாள் . காரணம் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை பற்றிய அணைத்து தகவல்களும் பின் பக்கம் இருந்தது . அப்பொழுதே மதிக்கு விஷயம் விளங்கிவிட்டது .

"உனக்கே தெரியுதுல , அப்பறம் என்ன கேள்வி ? ஹ்ம்ம் ...மாப்பிள்ளை போட்டோஸ் ...பார்த்துட்டு சொல்லு இல்லைனா வேற போட்டோஸ் கொண்டு வர சொல்றேன் ...உன் விருப்பம் தான் முக்கியம் " இத்துணை ஆண்டுகளில் வராத தயிரியம் அகிலத்திடம் தென்பட்டது . ஏன் , என்ன என்று காரணம் கேக்காமல் மகள் மற்றும் கணவன் சொல்லுக்கு சந்தோசத்துடன் தலை ஆட்டுபவர் இன்று குரலில் முதல் முறை தென்பட்ட கடுமை கலந்த பிடிவாதத்துடன் பேசினார் .

"அம்மா என்னமா இதெல்லாம் ...? நடந்தது தெரிஞ்சும் நீங்களே இதை கொண்டு வரலாமா ? " சற்றே ஆதங்கத்துடன் வந்தது அவளின் வார்த்தைகள் .

"இப்ப என்ன நடந்துச்சு மதி ...எப்பயும் எதையும் தயிரியமா எதிர் நோக்கும் பெண் எதுக்காக கல்யாணத்துக்கு பயப்படற ?"

"அம்மா இது பயம் இல்லை .....தப்பே செய்யாம பேச்சு வாங்கி ஒரு வாழ்கை வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை "

"மதி எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மா ...சொன்னா கேளு எனக்கு பிறகு உனக்கு ஒரு துணை நிச்சயம் தேவை "

"பெண்கள் தனித்து வாழ முடியும் அம்மா "

"அது இந்த சமுதாயத்தில் கஷ்டம் மதி ரொம்ப போராடனும் "

"போராடாம எதுமே சாத்தியம் இல்லை அம்மா "

"வாதத்திற்கு வேணும் என்றால் ஒத்துவரும் நிஜ வாழ்கை , எதிர்பார்ப்பு வேறு "

"அம்மா ப்ளீஸ் போதும் இந்த பேச்சு ...., உண்மை சொல்லி தான் கல்யாணம் செய்யணும்னு நான் சொல்வேன் அதற்கு அதாவது நடந்ததிற்கு ஈடாக எவ்ளோ சீதனம் செய்வீர்கள் என்று தான் எல்லாரும் கேப்பாங்க "

"சீதனமே வேண்டாம் என்று எவராவது சொன்னால் ஒத்துக்கொள்வாயா "

"ஒத்துக்கிறேன் ஆனால் மேலும் சில நிபந்தனைகள் இருக்கு " நிமிர்ந்து நின்று கூறினாள் மதி .

"வேறு என்ன நிபந்தனை மதி " எனக்கு நீ திருமணம் செய்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் பேசிய அன்னையை கண்டு கடுப்பாகினாள் மதி .

"அம்மா ரெண்டே நிபந்தனை தான் முதலில் நடந்தவற்றை சொல்லி தான் திருமணம் செய்வேன் ....பிற்காலத்தில் அதை பற்றி ஒரு வார்த்தை ஒரு சொல் சொன்னாலும் அந்த நொடி அந்த உறவை தூக்கி எறிந்துவிடுவேன் , அடுத்தது ஒரு குண்டுமணி தங்கம் கூட நம் வீட்டில் இருந்து எடுத்து செல்ல மாட்டேன் இதற்கெல்லாம் யார் ஒப்புக்கொள்வார்கள் " திருமணத்திற்கு எவரும் இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பேசிய மதியின் முகம் அகிலத்தின் புன்னகையை கண்டு குழம்பியது .

"சரி நான் சொல்லும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாரா இரு ....என் பக்கத்தில் இருந்து ஒரு நிபந்தனை உண்டு " அகிலமும் ஒரு முடிவோடு தான் பேசினார் .

'என்ன ?' என்னும் ரீதியில் அலட்சியமாக புருவத்தை உயர்த்திய மகளை கண்டு மேலும் புன்னகைத்து கொண்டே "மாப்பிள்ளை எவராக இருந்தாலும் இந்த நிபந்தனைக்கு ஓப்புக்கொண்டால் மட்டுமே நானும் சம்மதிக்கிறேன் ஆனால் உன்னிடம் இருந்து எந்த ஒரு மறுப்பும் வர கூடாது , நான் சொல்வதை நன்றாக கேட்டுக்கொள் எவராக இருந்தாலும் " அகிலம் ஒரு முடிவு எடுத்தவராக மகளிடம் வாக்கு கேட்டார் ...

சற்றும் யோசிக்காமல் மதி அந்த வார்த்தைகளை கூறினாள் "அம்மா அப்படி ஒரு மாப்பிள்ளை கிடைச்சா பார்ப்போம் ....இதுக்கு மேலயும் என் மீது நம்பிக்கை இல்லை அப்படினா இப்ப சொல்றேன் கேளுங்க மாப்பிள்ளை இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு உன் மனதிற்கு பிடித்தால் எனக்கு போதும் நான் அவரை மணமேடையில் நேராக பார்த்துக்கொள்கிறேன் " என்று கூறி தலைவலி தாங்காமல் அவ்விடம் விட்டு நகர்ந்தாள் வான்மதி .

அகிலத்தின் முகத்தில் வெற்றி களிப்பு .....கௌஷிக் சொன்னதை போல் நிச்சயம் வான்மதி திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள மாட்டாள் மேலும் அவள் ஒத்துக்கொண்டாலும் வருபவன் நடந்தவற்றை கூறி அவளை என்றேனும் காயப்படுத்த நேரிட்டால் மதி உடைந்து விடுவாள் என்று ஒரு அன்னையாக கணித்த அவர் , செய்த தப்பிற்கு காலதாமதம் செய்தாலும் மன்னிப்பு வேண்டி நிற்கும் கௌஷிக் சிறந்த கணவனாக இருப்பான் என்று அனுபவத்தில் முடிவெடுத்தார் .

.........................................................................

அன்று கௌஷிக் அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பில் விவாதித்துக்கொண்டு இருந்தான் . அப்பொழுது வரவேற்பறையில் இருந்து அவனின் மேஜையில் இருந்த அலைபேசிக்கு அழைப்பு வந்தது .

"எஸ்க்யூஸ் ப்ளீஸ் " என்று கூறி அழைப்பை ஏற்றவன் சற்றே எரிச்சலுடன் "இஸ் எனிதிங் தட் இம்போர்ட்டண்ட் "

வரவேற்பறையில் இருந்த பெண்ணோ எதிரில் நிற்கும் சர்கேஷை சங்கடத்துடன் பார்த்து , முதலாளியின் கோபத்தை கண்டு நடுங்கி " எஸ் சார் ....சர்கேஷ் சார் கேம் டு மீட் யூ "

"சர்கேஷ் அப்பறம் பாக்கறேன் சொல்லுங்க " என்று கூறி இணைப்பை துண்டித்தான் .

அந்த பெண் காதில் இருந்து அலைபேசியை எடுத்து சங்கடமாக சர்கேஷை பார்த்தாள் . அவனுக்கு புரிந்துவிட்டது புன்னகையுடன் "நீங்க திரும்ப கூப்பிடுங்க நான் பேசுறேன் " என்றான் .

அந்த பெண்ணிற்கு மனதில் கிளி பரவியது என்னதான் இருந்தாலும் கௌஷிக் தானே சம்பளம் கொடுக்கும் முதலாளி .

"இப்ப கூப்பிட்டா நிச்சயம் அவன் உங்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை , நாளை பின்ன நீங்க திரும்ப கூப்பிடாமல் ஒரு நல்ல விஷயம் நடக்காமல் போனால் உங்கள் வேலை போகவும் வாய்ப்பு இருக்கு " சர்கேஷ் சற்றே குதூகலத்துடன் கூறினான் .

சர்கேஷ் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் கௌஷிக்கின் அறைக்கு அழைத்தாள் அந்த பெண் . இப்பொழுது எரிச்சல் மேலோங்க அலைபேசியை காதிற்கு கொடுத்த கௌஷிக் "வாட் " என்றான் சீறலாக .

"உன்ன என்னோட மாப்பிள்ளை ஆக்கினா என் தங்கச்சிய வேலை பிஸில மறந்திருவ போலயே , சரி நான் வேற மாப்பிள்ளை பாக்கறேன் " நக்கலுடன் கூறினான் சர்கேஷ் .

சர்கேஷின் குரலை கேட்டு சற்றே கோபம் குறைந்த கௌஷிக் "ப்ச் பிஸி சர்கேஷ் அப்பறம் பேசுறேன் , ப்ளீஸ் "

"ஒஹ் சரி உன் வேலையை பார் என் தங்கை கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டாளாம் அம்மா சொன்னாங்க , இப்ப உனக்கே இன்டெரெஸ்ட் இல்லை நான் வேறு இடம் பார்க்கிறேன் ,அத பத்தி அம்மாகிட்ட முதலில் போய் பேசணும் " கடைசி வாக்கியத்தை சத்தமாக முணுமுணுத்து அழைப்பை துண்டித்தது சர்கேஷ் .

வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் திரும்பிய சர்கேஷ் "ஷட்டர் கிளோஸ் ப்ளீஸ் .... இன்னும் ரெண்டு நிமிசத்துல உன் பாஸ் உசுர கைல பிடிச்சு ஓடி வருவான் பாரேன் என்ன கேட்டா தங்கச்சி வீட்டிற்கு போயிருக்கேன்னு சொல்லிரு ஓகே " என்று கூறி கிளம்பினான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top