JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-15

saaral

Well-known member
அத்தியாயம்-15

"அப்பா நீங்க கிளம்பணுமா ?" சஹானா தயாளனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் .

"ஆமாம் சஹா குட்டி , அங்க பிசினஸ் எல்லாம் யார் பார்த்துப்பா ?" தயாளன் ஜெர்மன் கிளம்பிக்கொண்டிருந்தார் .

"நான் இங்க இருக்கிறது எல்லாம் உன் கண்ணுக்கு தெரியாதே " செல்லமாக கோபித்துக்கொண்டே இவர்களின் அருகில் வந்தார் சுபத்ரா .

"ம்மா நான் அப்படி சொல்வேனா ?" தந்தையின் அருகினில் இருந்து எழுந்து சென்று சுபத்ராவை கட்டிக்கொண்டாள் .

"ஓடிடு , நடிக்காத ...நான் இருந்தா ஏதாச்சும் சொல்லுவேன் ...உங்க அப்பா எல்லாத்துக்கும் நேந்துவிட்ட ஆடு மாதிரி தலை ஆட்டுவாங்க ...உன் வேலை என்கிட்ட வேண்டாம் " சுபத்ரா மிஞ்சினார் .

சஹானா கொஞ்சினாள் .

அப்பொழுது தனது அறையில் இருந்து வெளியே வந்த சௌம்யா "சஹானா ! " என்று அழைத்தார் .

"பெரியம்மா !" சௌம்யாவின் ஒற்றை அழைப்பிற்கு அங்கு செல்லம் கொஞ்சி கொண்டிருந்த சஹானா , வேகமாக சென்று ராணுவ வீரரை போன்று விரைப்புடன் அவர் முன் நின்றாள் .

அவளின் செயலை கண்டு சுபத்ரா மற்றும் தயாளன் வாய்க்குள் சிரிப்பை அடக்கினர் என்றால் , படிகளில் இறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீதர் சத்தமாக சிரித்தான் .

அவனின் சிரிப்பை சௌம்யாவின் ஒற்றை பார்வை நிறுத்தியது . இப்பொழுது சஹானா அவனை நக்கலாக பார்த்தாள் .

"சஹானா இன்னைக்கு என்ன நடந்துச்சு ?" சௌம்யா அவர்கள் விரைப்புடன் கேட்டார் .

தயாளனுக்கு புரிந்தது , இருந்தும் சௌம்யா காரணம் இல்லாமல் கேட்கமாட்டார் என்பதால் அமைதியாக இருந்தார் . சுபத்ரா எதுவும் தெரியாமல் குழப்பத்துடன் இருந்தார் .

"பெரியம்மா அது ஒன்னும் இல்லை " சஹானா ஓரக்கண்ணால் ஸ்ரீதரை முறைத்துக்கொண்டே திக்கினாள் .

"அங்க என்ன முறைப்பு ?" சௌம்யா மீண்டும் உறுமினார் .

"பெரியம்மா என்னை ஒரு கார் இடிக்க வந்துச்சு , பட் ஒன்னும் ஆகலை " நேராக அவரை பார்த்து சொன்னாள் .

"அந்த தம்பி இல்லைனா நிச்சயம் எதாவது ஆகிற்கும் இல்லையா ?" சௌம்யா கேட்ட கேள்வியில் சுபத்ரா அரண்டுபோனார் .

"என்னக்கா சொல்லறீங்க ?" பதட்டத்துடன் கேக்கும் சுபத்ராவை நோக்கினார் சௌம்யா .

அவரின் கண்களில் என்ன கண்டாரோ சுபத்ரா சற்றே அமைதியாகினார் .

"சஹானா இந்த அலட்சியத்தை உங்கிட்ட இருந்து நான் எதிர்பார்களை ...." சௌம்யா காட்டமாக சொன்னார் .

"இல்லை பெரியம்மா நம்ம ஹோட்டல் தானேனு , கொஞ்சம் அஜாக்ரதையா இருந்தேன் ...இனி கவனமா இருப்பேன் "

"யார் காரணம் ?" அந்த கேள்விக்கான பதில் தயாளன் அறிவார் ,இருந்தும் மகள் எந்த அளவு சுதாரிப்புடன் இருக்கிறாள் என்று அறிய அமைதியாக அமர்ந்திருந்தார் .

"சத்யா அண்ட் விஸ்வம் " நிமிர்ந்து நின்று பெரியவருக்கான பதிலை தந்தாள் அந்த சிறிய பெண் .

"எதவச்சு சொல்ற ?" பெரியவர் விடாமல் துருவி துருவி கேள்விகேட்டார் .

"நேத்து என்ன பார்த்த ஷாக்ல விஸ்வம் , சத்யாவை தேடி போயிருக்கார் "

"அவனை ..." ஸ்ரீதர் கோபத்துடன் வெளியே செல்ல எத்தனிப்பதை கண்டு அவனை தடுத்த சௌம்யா , சஹானாவிடம் விளக்கம் கேட்டார் .

"நான் அம்முனு அவங்களுக்கு ஒரு சந்தேகம் , அவங்க எல்லாருக்கும் கீர்த்தனா அம்மாவை தெரியும் .." சஹானாவை இடையிட்டார் சௌம்யா .

"அப்ப அந்த தம்பிக்கு கீர்த்தனாவை தெரியாதா ?" அவரின் கேள்வி அங்கு சுபத்ராவை தவிர்த்து அனைவர்க்கும் புரிந்தது .

"அவருக்கு தெரியாதுன்னு என்னோட கெஸ் , ஏதோ துப்பறியும் நிறுவனம் குடுத்த தகவல்கள் வச்சு என்னை கண்டுபிடிக்க ட்ரை பன்னிருக்கார் ....சத்யாவிற்கு ,சுபத்ரா குரூப்ஸ் ஏதோ ஒருவகையில் அவரோட வீழ்ச்சிக்கு மற்றும் ஆனந்தின் மறைவிற்கு காரணம்னு தெரியும் , விஸ்வம் என்னை பார்த்ததை வச்சு ...ஏதோ முகமாற்று அறுவைசிகிச்சை செஞ்சு வந்து நான் தான் எல்லாத்துக்கும் காரணமா இருக்கேனு சொல்லிருக்கார் ..."

"இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் ?" சௌம்யா தீர்க்கமாக கேட்டார் .

"நான் எப்ப இதுல இறங்கினேனோ , எல்லாத்துக்கும் ஏற்பாடு செஞ்சு ...யோசிச்சு தான் இறங்கினேன் ..விஸ்வத்திற்கு பயம் வந்திருச்சு ...என் வழியாக அவரோட உண்மை முகம் தெரிஞ்சா பெற்றெடுத்த மகனே உள்ள தள்ளிடுவானு யோசிக்க ஆரம்பிச்சுட்டார் ...சோ என்னை போட்டுத்தள்ளனும்னு சத்யா கிட்ட பேசிருக்கார் ..." சஹானா , சௌம்யாவிடம் அனைத்தையும் சொன்னாள் .

சுபத்ராவின் கண்கள் பெரிதாக விரிந்தன , தயாளன் கண்களினால் மகளின் புத்திக் கூர்மையை மெச்சினார் .

ஸ்ரீதர் அடக்கப்பட்ட கோபத்துடன் "ஏன் இதை அந்த சதீஷ் செஞ்சிருக்க மாட்டானா ?" என்றான் .

"வாய்ப்பில்லை " ஒற்றைவார்த்தையில் முடித்தாள் .

"ஏன் ?" சௌம்யாவிடம் இருக்கம் .

"ஹ்ம்ம் சதீஷ் லவ்ஸ் அம்மு " தெளிவாக சொன்னாள் சஹானா .

"இடியோடிக் " சீறினான் ஸ்ரீதர் .

"உண்மை " சஹானா ஆணித்தரமாக சொன்னாள் .

"புரியலை சஹானா தெளிவா சொல்லு " சுபத்ரா வாய் திறந்தார் .

"அன்னைக்கு மிருது வீட்ல என்னை பார்த்தப்ப எல்லாரையும் நோட் பண்ணேன் , சாரதா அவர்களுக்கு என்மேல் ஒரு ஏற்ற தாழ்வு உணர்வை ,பார்த்தேன் ...அவர்கள் அந்தஸ்துக்கு நான் இல்லைனு நினைக்கிறார் , மிருதுக்கு இது ஷாக் ...கூடவே இருந்து நமக்கு தெர்லயேனு ...விஸ்வம் அதிர்ச்சியோடு பயம் கலந்து என்னையும் அவர் மூத்த மகனையும் பார்த்தார் பட் சதீஷ் , அதிர்ச்சி ,ஆனந்தம் , நேசம் , பாசம்னு எல்லாம் சேர்ந்த பார்வை பார்த்தான் ....நிச்சயமா அவன் கிட்ட வெறுப்பில்லை , கோபம் இல்லை ...." சஹானா தன் கணிப்பை கூறினாள் .

"இப்ப நீ முட்டாள் மாதிரி பேசுற சஹானா " ஸ்ரீதர் சீறினான் .

"அவ சரியாத்தான் சொல்றா ஸ்ரீதர் ..." சௌம்யா அவர்கள் தீர்க்கமாக சொன்னார் .

"அம்மா "

"ஸ்ரீதர் நானும் பார்த்தேன் அவள் சொன்ன அனைவரின் உணர்வுகளும் உண்மை , ஆனால் அவள் சொல்லாமல் விட்ட நபரையும் நான் பார்த்தேன் ...அதில் தெரிந்த உரிமையுள்ள கோபம் ..." சௌம்யா பேசிக்கொண்டே செல்கயில் அங்கு நிற்காமல் சஹானா உள்ளே சென்று மறைந்தாள் .

"அம்மா என்ன நீங்களும் அவள் சொல்றது எல்லாம் சரி அப்படினு பேசுறீங்க ?" ஸ்ரீதர் ஆற்றாமையுடன் கேட்டான் .

"ஸ்ரீதர் நான் காரணம் இல்லாமல் பேசலை , பழி உணர்வுல உன் தங்கச்சி அவளையே பலி கொடுக்க தயாராகிட்டா ....சஹானாவிற்கு பிரவீனை பிடிச்சிருக்கு " சௌம்யாவின் கணிப்பு என்றும் தவறாது என்பதை மீண்டும் நிரூபித்தார் .

தயாளன் தம்பதியர் மூத்தவரின் விசாரணையில் தலையிடவில்லை அவர்களுக்கு தெரியும் சௌம்யா என்றுமே யோசித்து , செயல்படக்கூடியவர் என்று .

தயாளன் காதலித்து மணந்து பெற்றோர்களுடன் சண்டையிட்டு, சுபத்ராவுடன் இந்தியாவை விட்டு பறந்து சென்றார் .

தயாளனனின் அண்ணன் சுகுமார் பெற்றோர்களுடன் இந்தியாவில் தங்கி குடும்ப தொழிலை பார்த்து வந்தார் . சுகுமார் அவர்களின் மனைவி சௌம்யா அவர்கள் தயாளனிற்கு பிள்ளைகள் பிறந்ததை காரணமாக கூறி மீண்டும் குடும்பத்தை இணைத்தார் .

தயாளன் வெளிநாட்டில் இருக்கும் தொழிலை விட்டு வர இயலாமல் வருடம் ஒரு முறை என்று குடும்பத்துடன் வந்து செல்வார் . சஹானாவும் ஆண்டு விடுமுறைக்கு வருடம் ஒரு முறை வந்து தாத்தா, பாட்டியை பார்த்து விட்டு செல்வாள் .

மகள் இல்லாத சுகுமார் தம்பதியருக்கு சஹானாவின் வருகை வரப்பிரசாதம் . தாத்தா , பாட்டி காலத்திற்கு பிறகும் சஹானாவின் வருகை தொடர்ந்தது . சுகுமார் இறந்த பின் சௌம்யாவிற்கு சஹானா மற்றும் ஸ்ரீதர் தான் உலகம் .

சஹானா கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தாலும் ஸ்ரீதர் மற்றும் சௌம்யாவின் கண்ணில் படாமல் தப்பித்து வந்தாள் . வீடியோ காலில் தினமும் ஜெர்மனில் இருந்து பேசுவது போல் பேசுபவள் வருட விடுமுறை வருகை போல் நேரில் வந்தும் செல்வாள் .

சஹானாவை பிஎஸ்எம் இன்போடெக்கில் பார்த்து ஸ்ரீதர் அதிர்ந்தான் , பின் சஹானா சௌம்யாவின் ஆணையின் பெயரில் இங்கு வந்து வசிக்க தொடங்கினாள் .

....................................................................

பிரவீன் வீட்டில் அலுவலக அறையில் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் . கடந்த சில நாட்களாக மென்பொருள் நிறுவனத்திலும் அதன் பங்குகளிலும் வரும் சரிவு அவனை மிகவும் யோசிக்க வைத்தது .

'சஹானா உன் எதிரியை நேரா நின்னு நீ ஜெயிச்சிருக்கணும் , அதை விட்டுட்டு பணத்தின் பின் ஓடி யாரோட நிறுவனத்துக்கோ நேர்மையா இருந்து என் முதுகுல குத்திட்ட ' மனதினுள் தன்னவளின் சதி வேலையை எண்ணி வருந்தினான் .

ஆம் பிரவீன் , சஹானா தங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான சுபத்ரா குரூப்ஸ்ஸில் வேலை செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.

பிரவீனின் யோசனையை கலைத்தது அந்த ஒளி .

யாரோ கதவை தட்டும் ஒளி கேட்டு "எஸ் " என்றான் .

சதீஷ் உள்ளே வந்து நேராக பிரவீனை பார்த்து "உன்கிட்ட தனியா பேசணும் " ஆழ்ந்த குரலில் சொன்னான் .

பிரவீன் இதை ஓரளவு எதிர்பார்த்தே இருந்தான் . அன்றைய உரையாடலுக்கு பின் சதீஷ் தனித்து அறையில் எதையோ சிந்தித்து கொண்டே இருப்பதை கண்டிருக்கிறான் .

"உக்கார் " எதிரில் இருக்கும் இருக்கையை காட்டினான் பிரவீன் .

இருக்கையில் அமர்ந்த சதீஷ் " பிரவீன் நான் உன்கிட்ட எல்லாம் சொல்லிடறேன் , எனக்கு என் அம்மு வேணும் " நேராக விஷயத்துக்கு வந்தான் .

"அம்மு ?" கேள்வியாக நிறுத்தினான் மூத்தவன் .

"அஹானா !" மென்மையாக பெயருக்கு வலித்துவிடுமோ என்று மிருதுவாக கூறினான் சிறியவன் .

பிரவீன் அதிர்ந்தான் . தன்னவள் என்று தான் மனதில் நினைப்பவள், தன்னவள் இல்லையா ? ....என்னதான் கோபம் இருந்தாலும் அவள் மேல் இருக்கும் காதலில் அவன் உறுதியாக இருந்தான் . ஆனால் அது இப்பொழுது ஆட்டம் கண்டது .

பிரவீனின் அதிர்ந்த நிலையை காணாமல் பேசத் தொடங்கினான் சதீஷ் .

"நீ அப்ப வெளிநாடு , இந்தியான்னு சுத்திட்டு இருந்த . மிருதுவை கோத்தகிரில பாக்க போறப்ப அஹானாவை பார்த்திருக்கேன் ... பிடிக்கும் ஆனா சிறு பெண் அப்படினு தான் முதலில் தோணுச்சு "

மேலும் தொடர்தான் சதீஷ் " ஒரு தடவை அஹானா வீட்ல நடந்த பிரிண்ட்ஸ் மீட்ல எடுத்த போட்டோவை மிருது பேஸ்புக்ல போட்டிருந்தா "

எந்த புகைப்படம் என்று பிரவீன் கேட்க்கவில்லை , இரண்டாம் முறை அவளை பார்த்து அவன் காதலில் விழுந்தது அதில்தானே .

"அந்த போட்டோல பாக்ட்ராப்பில அஹானா , அவள் அப்பா திருவோட இருக்க மாதிரி ஒரு போட்டோ இருந்துச்சு , அதை ஆனந்த் பாத்துட்டான் " சதீஷ் வருத்தத்துடன் சொன்னான் .

பிரவீன் என்ன நடந்திருக்கும் என்று யூகித்தான் . மூத்தவனின் யோசனை சரி என்று சிறியவன் உறுதி செய்தான் .

"சத்யா அங்கிள் அந்த ரிசார்ட் அண்ட் பப் பினாமி பேர்ல ஆரம்பிக்க யோசிச்சார் , நானும் ஆனந்தும் நண்பர்கள்னு நம்ம அப்பா எடுத்து சொல்லி என்னை அதில் சேர்த்துவிட்டாங்க ...சத்யா அங்கிள் அரசியல்ல அப்ப ஆக்ட்டிவ் ஹா இருந்தாங்க "

"ஆனந்துக்கு நான் கூட இருக்கிறது ரொம்ப சந்தோசம் , அப்பாக்கு செல்வாக்கு அப்பறம் பணம் முக்கியம் அதனால இப்படி யோசிச்சாங்க ..., எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்தது "

"ஆனால் அங்க நடந்த சில விஷயங்கள் முக்கியமா..., சின்ன சின்ன பொண்ணுங்க ...ப்ச் ..." சதீஷ் நொந்தான் .

ஓரளவிற்கு பிரவீன் அறிவான் ஆனால் அதை , தன் தம்பியின் வாய்மொழியாக கேக்கும் சமயம் தந்தையின் மேல் கடும் கோபம் வந்தது .

"எனக்கு மிருது தான் கண் முன்னாடி வந்தா , மனசு ஒப்பாம நான் இந்த தொழிலில் இருந்து விலகிடறேனு சொன்னேன் ....சரியா அப்பதான் மிஸ்டர் திரு ...அஹானாவின் அப்பா உள்ளே வந்து பிரச்சனை கொடுக்க முயற்சி செஞ்சார் "

"அங்கு நடக்கிற விஷயங்களை பத்திரிகையில் போட முயற்சி செஞ்சார் , அதை தடுக்க வழி தேடிட்டு இருந்தப்ப அஹானா அவரோட மகள்னு தெரிஞ்சுது "

"சத்யா அங்கிள் , அப்பா அப்பறம் ஆனந்த் எல்லாரும் சேர்ந்து அஹானாவை ஸ்டாக் பண்ண யோசிச்சாங்க , நான் வேண்டாம்னு எவ்ளோ தடுத்தேன் ...அப்பா உன் பெயர்ல தான் இந்த ரிசார்ட் நடக்குது பிரச்சனைன்னு வந்தா நீ தான் முதல்ல மாட்டுவனு சொன்னாங்க "

"எனக்கு உன்னை நினச்சும் பயம் வந்துச்சு , அப்பா என்னை பேசி பேசி சம்மதிக்க வச்சாங்க ....அம்முவை என்னை காதலிக்க வைக்க சொன்னாங்க செஞ்சேன் " சதீஷ் தலை கவிழ்ந்து சொன்னான் .

"சதீஷ் " பிரவீன் பற்களை கடித்தான் .கண்களில் அத்துணை ரௌத்திரம் .

"தெரியும் பிரவீன் நான் செஞ்சது பாவம் , எனக்கு தெரியும் .....மிருது மாதிரி அஹானாவும் சிறு பெண் ...ஆனால் அப்பா என் மனசை பேசியே மாத்திட்டார் ...பிரச்சனை முடிச்சு விலகிடலாம்னு நினச்சேன் , ஆனால் நான் உண்மையாவே அஹானாவை நேசிச்சேன் , மனசார காதலிச்சேன் பிரவீன் " கண்களில் நீர் துளிர்க்க நிமிர்ந்து கூறினான் சதீஷ் .

பிரவீன் இன்னும் அதே கோபத்துடன் இருந்தான் .

"சாரி பிரவீன் எதையும் நான் யோசிச்சு செய்யலை , செஞ்சதுக்கு அப்பறம் தான் யோசிச்சேன் ...."

"அஹானாவிற்கு என்ன நடந்துச்சு ?" வார்த்தைகளில் அத்துணை சீற்றம் .

"அன்னைக்கு அஹானாவை அவுட்டிங் போலாம்னு கூடிட்டு வா , நாம சும்மா திருவை மிரட்டி ஆதாரத்தை வாங்கிடுவோம்னு தான் சொன்னாங்க ....ஆனால் " வலியுடன் நிறுத்தினான் சதீஷ் .

"ஆனால்....?"

"நான் கூட்டிட்டு போனேன் , என் மேல் இருந்த அன்புல அம்மு என்கூட எந்த கேள்வியும் கேக்காம வந்தா ..."

கண்கள் நீர் சொறிய அந்த நாளின் நினைவில் வருத்தத்துடன் சிறு இடைவெளி விட்டு , பேசத்துடங்கினான் சதீஷ் "அம்முவிற்கே தெரியாம அவளோட போட்டோ எடுத்து அனுப்பிச்சான் ஆனந்த் , அதை வைத்து சத்யா அங்கிள் அப்பறம் அப்பாவும் இங்க திருவை மிரட்டினாங்க ..."

"அங்க , அங்க அப்பாகிட்ட இருந்து போன் வந்துச்சு அதை பேசிட்டு வரேன்னு சொல்லி தான் நகர்ந்தேன் ...அதுக்குள்ள இந்த ஆனந்த் அம்முவை "

"என்னடா பண்ணித் தொலைஞ்சீங்க " சதீஷின் சட்டையை ஆக்ரோஷத்துடன் பற்றினான் பிரவீன் .

"ஆனந்த் அந்த மலை மேல எங்க கண்ல படமா மறைஞ்சு நிக்கிறது அப்படினு தான் பேச்சு ....நான் போனப்பறம் அம்மு கிட்ட வந்து தப்பா நடக்க முயற்சி செஞ்சான் " தலை கவிழ்ந்தான் சதீஷ் .

"பளார் ..." சதீஷ் தனது கன்னத்தை பற்றி அதிர்ச்சியுடன் நின்று இருந்தான் .

"எவ்ளோ சொன்னேன் , அவங்க குணம் சரி இல்லை ...கூடா நட்பு கேடாக விலையும்னு எவ்ளோ சொன்னேன் கேட்டியா நீ ?" பிரவீன் ஆக்ரோஷமாக கர்ஜித்தான் .

சற்று நேரம் அங்கு கனமான மௌனம் . பிரவீன் ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு "சஹா ...ப்ச் அஹானாவிற்கு என்ன ஆச்சு ?" என்றான் .

"ஆனந்த் , அப்பறம் அம்முக்கு நடந்த போராட்டத்துல அம்மு கால் தவறி அந்த மலைல கீழ விழுந்துட்டா ....
"

"அப்ப அச்சிடேன்ட் அப்படினு சொன்னது ?" பிரவீன் வருத்தத்துடன் கேட்டான் .

"அம்முவோட உடலை கண்டுபிடிச்சு , இன்ஸ்பெக்டர் வச்சு விபத்து மாதிரி ஜோடிச்சாங்க சத்யா அங்கிள் ,ஆனால் எங்களை முழுசா இந்த கேசில் இருந்து வெளிய கொண்டு வரதுக்குள்ள மிஸ்டர் திருவோட வேலை செஞ்ச சக பத்திரிகையாளர்கள் போராட்டத்துல இறங்கிட்டாங்க , அப்பா என்னையும் ஆனந்தையும் வெளிய கொண்டு வர உன் உதவி கேட்டாங்க ...."

"ஆனந்த் அப்பறம் அவளுக்கு நடந்த பிரச்சனையப்ப நீ எங்க இருந்த ?" அமைதியான அழுத்தம் நாயகன் அவனின் குரலில் .

"நான் போன் பேசிட்டு வரதுக்குள்ள நிமிஷத்துல எல்லாம் நடந்திருச்சு ....என்னை நம்பி வந்த அம்மு இப்ப இல்லைனு நான் யோசிக்கிறதுக்குள்ள என்ன எல்லாமோ நடந்து முடிஞ்சுடுச்சு "

"அந்த திரு அவருக்கு என்ன ஆச்சு ?" பிரவீன் அனைத்தையும் அறிந்துக்கொள்ளும் கட்டாயத்தில் இருந்தான் .

"தெரியலை , நீ பெரிய ஆளுங்க கிட்ட பேசி எங்களை வெளிய கொண்டுவந்த ...அதுவும் இல்லாம என்னை நாட்டை விட்டு உடனே அனுப்பிச்சிட்ட , சத்யா அங்கிள் நீ சொன்னதுக்காக என்னை அந்த ரிசார்ட் பிஸினெஸ்ல இருந்து விலக்கிட்டாங்க ...அம்மு இல்லாம இங்க இருக்கவும் எனக்கு பிடிக்கலை நானும் எல்லார் மேலயும் இருந்த கோபத்துல கிளம்பி போய்ட்டேன் "

"சத்யா அவன்லாம் ஒரு ஆளு ...ச்ச , அவனை ஆதாரத்தோட மிரட்டி இனி உன்னை தொடர்புகொள்ளவே கூடாதுனு சொல்லித்தான் ஆனந்தயும் உன்னோட வெளிய எடுத்தேன் "பிரவீன் அருவறுப்புடன் கூறினான் .

"நான் போனதுக்கு அப்பறம் இங்க என்ன ஆச்சு ?" சதீஷ் கவலையாக கேட்டான் .

"இப்ப எதுக்கு உனக்கு ?" எல்லாம் செய்துவிட்டு தன் முன் நிற்கும் சதீஷை கொள்ளும் வெறி வந்தது அந்த நியாய மனம் படைத்தவனிற்கு .

"இல்லை ஆனந்த் ஒரு தடவை கூப்பிட்டான் " என்று கூறத்தொடங்கி ஆனந்தின் இறப்பு , தனக்கு வந்த அழைப்புகள் ...தன் முன் தோன்றிய நிழல் உருவங்கள் என்று அனைத்தையும் சொல்லி முடித்தான் சதீஷ் .

'ஒஹ் இவ்ளோ வேலை பார்த்திருக்கியா நீ ?' மனதிற்குள்ளே அவளைப்பற்றி எண்ணினான் பிரவீன் .

"பிரவீன் " சதீஷ் அண்ணனின் யோசனையை கலைத்தான் .

"இங்க திரு காஸ் லீக்கேஜ் காரணமா இறந்துட்டதா சொன்னாங்க ...நான் அதுக்குமேல யோசிக்கலை , ஆனா சமீபமா நமக்கு வர நஷ்டத்துக்கு எல்லாம் காரணம் சஹானா அப்படினு தெரிஞ்சு விசாரிச்சு, நடந்ததை தெரிஞ்சுகிட்டேன் " தனது தந்தையை நம்பி எவ்ளோ முட்டாள் தனமாக ஏமாந்திருக்கிறோம் என்று பிரவீன் மனதிற்குள் வருந்தினான் .

"அப்ப இதே சஹானா தான் நம்ம கம்பெனில ?" கேள்வியாக நிறுத்தினான் சின்னவன் .

"ஹ்ம்ம் எஸ் , இப்ப சுபத்ரா குரூப்ஸ்ல வேலைப்பாக்கிறா ...மிருது பிரின்ட் அப்படினு நினச்சு பாக்கிரௌண்ட் செக் கூட பண்ணாம விட்டது எவ்ளோ பெரிய முட்டாள் தனம் ..."

"மிருதுவுக்கு எல்லாமே தெரியுமா ?" அதிர்ச்சியுடன் கேட்டான் சதீஷ் .

"இல்லை மிருது அஹானா இறந்துட்டதா நினைச்சிருக்கா ....முகத்தோற்றத்தில் இருக்கிற சிறு வித்யாசம் , குண இயல்புன்னு மிருதுவும் ஏமாந்திருக்கா " பிரவீன் அஹானா தான் சஹானாவாக வந்திருக்கிறாள் என்று மனதார நம்பினான் .

"ஆனால் இறந்துபோனதா நினச்ச அம்மு எப்படி திரும்பவும் இங்க ?" குழப்பத்துடன் தமையனை பார்த்தான் சதீஷ் .

பிரவீனும் அதே குழப்பத்தில் இருப்பது அவனின் முகத்தோற்றத்திலே தெரிந்தது .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top