JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-16

saaral

Well-known member
அத்தியாயம்-16

ஸ்ரீதர் , வீட்டில் சஹானாவுடன் பேசிக்கொண்டிருந்தான் .

"என்ன ப்ரோ உங்க ஆளு கூப்பிடலையா ?" புன்னகையுடன் கேட்டாள் .

"நீ வேற சஹா ,மேடம் செம ஷாக்ல இருகாங்க போல ..." ஸ்ரீதர் அலுப்புடன் கூறினான் .

"எதுக்காம் !"

"எல்லாம் உன்னால தான் போன் பண்ணாலே உன்னை பற்றிய கேள்வி தான் , நீ வேற அவகிட்ட பேசலை போல ?"

"ஆமாம் அண்ணா , மிருது கிட்ட பேசினா என்னை மீறி எல்லாம் சொல்லிடுவேனோனு ஒரு பயம் ...பிஎஸ்எம் இன்போடெக்ல இருந்து வந்தப்பறம் அந்த டெம்போரரி ஐடென்டிட்டி எல்லாத்தையும் அழிச்சுட்டேன் ..செல் போன் நம்பரும் தான் " என்றாள் தங்கை அவள் .

"ஒஹ் ...மிருதுக்கு நீ தான் அஹானாவானு ஒரு கேள்வி மண்டைய கொடையுது ...நீ அஹானா அப்படினா கோத்தகிரில காரியம் நடந்தது யாருக்குனு பல கேள்வி ....என்னை கொடஞ்சு கேட்டு படுத்துறா " அவன் படும் வேதனையை மென்மையான அலுப்புடன் கூறினான் .

"அண்ணா அவ கிட்ட " சஹானாவின் பேச்சை தடுத்தது ஸ்ரீதரின் அலைப்பேசி ஒலி .

"பாரு ,மிருது தான் கூப்பிடறா " தங்கையிடம் கூறிக்கொண்டே அழைப்பை ஏற்றான் அவன் .

"ஹாய் பேபி " சந்தோசத்துடன் பேசத்தொடங்கியவனை ,புருவங்களை நெறிக்க செய்தது மிருதுளாவின் விசும்பல் சத்தம் .

"மிருது என்னமா ஆச்சு " மிருதுவாக கேட்டான் ஸ்ரீதர் .

"நான் சஹானா கிட்ட பேசணும் " விசும்பலின் இடையே தீனமான குரலில் கூறினாள் .

"இங்க தான் இருக்கா போனை கொடுக்கவா " அலைபேசியை ஒலிபெருக்கியில் போட்டு பேசத்துடங்கினான் அவன் .

"இல்லை நான் சஹானாவை நேரில் பார்த்து பேசணும் " மிருதுளா தீர்க்கமாக கூறினாள் .

ஸ்ரீதர் தங்கையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான் , சஹானா ஏதோ யோசனையில் இருப்பதை கண்டு "என்ன ஆச்சு மிருது , எதாவது பிரச்னையா ?" காரணத்தை அறிய முற்பட்டான் .

"ஏன் அவ என்னை எல்லாம் நேர்ல பார்க்க மாட்டாளா ?" கோபம் துளிர்த்தது மிருதுளாவிற்கு .

"அப்படி இல்லமா .. என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன் " ஸ்ரீதர் சஹானாவின் முகம் பார்த்துக்கொண்டே தன்னவளை சமாதானம் செய்தான் .

"பழி வாங்க மட்டும் தான் என்னைய யூஸ் பண்ணிக்குவாளா ?...அவ காரியம் முடிஞ்சப்பறம் என்கிட்ட பேச மாட்டாளா ?" மிருதுளா சீறினாள் .

ஸ்ரீதர் மற்றும் சஹானா இருவரும் அதிர்ந்தனர் .

"என்ன சத்தத்தையே காணும் ...உங்க தங்கச்சிக்கு சப்போர்ட் பண்ணலயா ?" சீற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது மிருதுளாவிடம் .

"இன்னைக்கு ஈவினிங் **** ஹோட்டல்ல செவென்க்கு மீட் பண்ணலாம் " வேகமாக மிருதுவிற்கு பதில் தந்தாள் சஹானா .

மிருது அடுத்து பேச வாய்பளிக்காமல் அழைப்பை துண்டித்தாள் சஹானா .

"என்னமா இது ? " அதே அதிர்ந்த நிலையில் கேள்வி கேட்டான் ஸ்ரீதர் .

"மிருதுக்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்கு ..." சிந்தனையுடன் சொன்னாள் சஹானா .

"எல்லாமே தெரிஞ்சிருக்குமா ?" கேட்டான் அவன் .

"தெரியல ..பார்ப்போம் , இப்ப நான் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ் போறேன் ..நீங்க ?"

"நான் லெதர் பேக்டரி போகணும் ...ஈவினிங் பார்ப்போம் ..பத்திரம் சஹா " ஸ்ரீதர் கண்களில் வழிந்த அக்கறையுடன் கூறினான் .

புன்னகையை பதிலாக தந்து நகர்ந்தாள் அவள் .

..............................................................

காரில் சஹானா கட்டுமான நிறுவனம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் , முன் இருக்கையில் அமர்ந்து இருந்த குரு அவளின் முகம் பார்த்து பின் திரும்பினான் .

மடிக்கணினியில் அலுவல் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் "என்ன சொல்லணும் குரு ?"

"மேம் " நிமிர்ந்து பார்க்காமல் தன்னுடைய எண்ணத்தை கணித்தவளை கண்டு மீண்டும் ஆச்சர்யமுற்றான் .
அவளை கண்டாலே அவனிற்கு ஆச்சர்யமாகவும் , பிரமிப்பாகவும் தான் இருக்கும் ...எப்பொழுதும் .

"ஷாக்கை குறை " புன்னகையுடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் .

"சஹானா எதுக்கு இந்த விஷப்பரீட்சை " குரு பரிவுடன் தனது தோழிக்கு எடுத்துக் கூறினான் .

ஜெர்மனில் படிக்கும் காலத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் , குருவின் தந்தை ஒரு விபத்தில் மறைந்த பின் வாழ்வாதாரத்திற்கு தவித்த அவனின் அன்னையை அழைத்து சென்று தன் தந்தை முன் நிறுத்தினாள் சஹானா . தயாளன் குருவின் அன்னைக்கு மகிழ்ச்சியுடன் நல்ல வேலை தந்து மதிப்புடன் வாழ வழி செய்தார் .

படிக்கும் சமயம் புத்திசாலியாக இருந்த குரு ..... சஹானாவின் தொழிலும் , பாதுகாப்பிலும் துணையாக இருக்க எண்ணி இந்தியா வந்தான் . குருவின் கண் பார்வையில் மகள் இருப்பது தயாளனிற்கும் திருப்தியே .தனிமையில் இருவரும் நண்பர்கள் , பொதுவில் மேம் என்ற அழைப்பை தாண்டி வார்த்தை வராது குருவிடம் .

"இப்ப எதை நீ விஷப்பரீட்சை சொல்ற? " புன்னகையுடனே கேட்டாள் .

"பிரவீன் ஆபீஸ்ல எல்லாரையும் குடைஞ்சிருக்கார் , நீ யாரு இந்த சுபத்ரா குரூப்ஸ்லனு " குரு யோசனையுடன் சொன்னான் .

"இருக்கட்டும் " தோள்களை குலுக்கினாள் அவள் .

"ஹே புரிஞ்சு பேசு , இன்னைக்கு வரைக்கும் உன் ஐடென்டிட்டி என்னனு நான் மறைக்கிறதுக்கு படற பாடு இருக்கே ....ஷபா , இதுல அவர் வேற உன்னை பற்றி எப்படிலாமோ தெரிஞ்சுக்க முயற்சிக்கிறார் ..இப்ப என்னடானா ப்ராஜெக்ட் அப்படினு சொல்லிட்டு உன்னை பார்க்க அப்பொய்ன்ட்மென்ட் வாங்கி ஆபீஸ்ல வெயிட் பன்றார் " அலுப்புடன் கூறினான் குரு .

"தெரியும் " இதையும் சாதாரணமாகவே சொன்னாள் .

"சஹானா புரிஞ்சுக்கோ பிரவீன் சாதாரணமான ஆள் இல்லை , அவர் முடிவு செஞ்சா அதை நடத்தி காட்டாம விடமாட்டார் , நீ வேற அவரை மனசார " என்ன சொல்லி இருப்பானோ அவளின் பார்வையில் வாய் மூடிக்கொண்டான் .

"ஹ்ம்ம் வெள் எனக்கு அந்த பாஸ்டர்ட் சதீஷை ஒன்னும் இல்லாம ஆக்கணும் , வேற எந்த எண்ணமும் இல்லை ...என்னோட பிளான் படி போயிருந்தா இன்நேரம் ஆனந்த் மாதிரி இந்த சதீஷும் போய் சேந்திருப்பான் ...எல்லாம் இந்த அண்ணாவால் வந்துச்சு " சஹானா பேச்சில் கடுமை துவனி மிக்க கூறினாள் .

"எல்லாருக்கும் உன் பாதுகாப்பு முக்கியம் சஹானா ... எங்களுக்கு நீ முக்கியம் " குரு அக்கறையுடன் கூறினான் .

அலுவலகத்தில் இறங்கிய இருவரும் வேகமாக உள்ளே நுழைந்தனர் . சஹானா எவரையும் கண்டுகொள்ளாமல் வேகமான நடையுடன் உள்ளே சென்றாள் .

குரு தனது பார்வையை சுற்றிலும் செலுத்திக்கொண்டே சென்றான் .

அங்கு வரவேற்பறையில் இருக்கும் கண்ணாடி ஜன்னலின் பக்கம், தனது கால் சாராயினுள் இருகைகளையும் விட்டு நிற்கும் பிரவீனை கண்டான் .

பிரவீனின் கண்கள் குளிர் கண்ணாடியின் உதவியினால் மறைக்கப்பட்டிருந்தது , ஆனால் அவனின் உடல் மொழியே கூறியது ,அவனின் கோபத்தை .

சஹானாவின் அறையினுள் நுழைந்த குரு "சஹானா அவர் நிற்கிறார் , பட் பாடி லாங்குவேஜ் சரி இல்லை ...ரொம்ப கோபமா இருக்கிற மாதிரி இருக்கு "

"இருக்கட்டும் " அலட்சியம் அவளிடம் .

"சஹானா புரிஞ்சுக்கோ , அவர் வரப்ப நான் இருக்கேன் " குருவை தனது பார்வையால் அடக்கினாள் .

"நான் பார்த்துகிறேன் குரு நீங்க உங்க டெஸ்க்கிற்கு போங்க " முதலாளியாக கட்டளையிட்டாள் .

அதற்குமேல் பேச முடியாமல் ஸ்ரீதருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைத்துவிட்டு நகர்ந்தான் குரு .

...................................................................................

சற்று நேரத்திற்கு பின் எந்த அனுமதியும் இல்லாமல் வேகமாக உள்ளே நுழைந்து, சஹானாவின் எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தான் நாயகன் அவன் .

அவனின் வேகத்தை கண்டும் அசராமல் நேராக அமர்ந்து இருந்தாள் சஹானா .

சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை , அவனின் உணர்வுகள் அவளிற்கு தெளிவாக புரியவில்லை . ஆனால் அவளின் நேர்கொண்ட பார்வை அவனை யோசிக்க வைத்தது .

"வெள் மிஸ்டர் பிரவீன் ...உங்க நீல்கிரிஸ் வில்லா ப்ராஜெக்ட் ப்ரொபோஸ் பண்ணிருக்கீங்க ...பெரிய பட்ஜெட் , அதான் என்கிட்ட வந்திருக்கு ...என்ன மாதிரி அவுட்புட் வேணும்னு யோசிக்கிறீங்க " உணர்வுகளை காட்டாமல் பேசத்துடங்கினாள் .

"என் வருங்கால மனைவிக்கு பிடிக்கிற மாதிரி இருக்கனும் " வன்மத்துடன் பேசத்துடங்கினான் .

"ஓகே அவங்க டேஸ்ட் எப்படினு சொல்லுங்க ?" சஹானாவும் வார்த்தைகளால் விளையாடினாள் .

"அவங்க டேஸ்ட் எப்படின்னா... மாறிக்கிட்டே இருக்கும் , ஒரு காலத்தில் பிடிச்ச ஒருவிஷயம் எதிர்காலத்தில் பிடிக்காம போகும் .... அவங்க பெனிபிட் அப்படினு வந்தா யாரையும் ஏமாத்த தயங்க மாட்டாங்க அதுக்காக என்னவேனும்னாலும் சொல்லுவாங்க, செய்வாங்க " அவளை பார்த்துக்கொண்டே அழுத்தமாக சொன்னான் .

எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசத்துடங்கினாள் "எனக்கு தேவை அவங்க ரசனை , குண இயல்புகள் இல்லை " கடுமையாக கூறினாள் .

"யு ப்*** *** என்ன தயிரியம் இருந்தா என் தம்பியையும் காதலிச்சு , அவன் ஏமாத்திட்டான்னு சொல்லி அவனை பழிவாங்க என்னையும் என் உணர்வுகளோடயும் விளையாண்டிருப்ப " மேஜையை அவேசமாக தட்டி கத்தினான் பிரவீன் .

"...." அசையாமல் அமர்ந்திருந்தாள் பெண்ணவள் .

அவளின் அமைதி அவனின் கோபத்தை தூண்டியது "எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி திமிரா உக்கார்ந்திருப்ப ...அவனை பழி வாங்க எதுக்கு என்னை காதலிக்கிற மாதிரி நடிச்ச "

"நான் காதலை சொல்லலை " நேராக அவனின் கண்கள் பார்த்து கூறினாள் . கோபத்தில் அவன் குளிர் கண்ணாடியை கழட்டி இருந்தான் .

"ஆனால் என் காதலை ஒத்துக்கிட்ட " அவனும் விடாமல் பேசினான் .

அவளின் அழுத்தமான பார்வை அவனை நிதானம் இழக்க செய்தது .

வேகமாக எழுந்து , நொடி நேரத்தில் அவளை நெருங்கியவன் ...ஆவேசத்துடன் அவளின் கை பற்றி எழுப்பி தனக்கு முன் நிறுத்தினான் .

"என்னடி பார்க்கிற , சதீஷ் செஞ்சது தப்பாவே இருந்தாலும் நீ அவன்கிட்ட அதிகமா விளையாண்டுட்ட ...உன்னை சும்மா விடமாட்டேன் " கர்ஜித்தான் நாயகன் அவன் .

உதட்டோரம் வளைய நக்கலாக புன்னகைத்தாள் அவள் .

அவளின் நக்கல் அவனின் கோபத்தை அதிகரித்தது .

"சஹானா " அழுத்தமாக அழைத்தான் .

அவனின் கண்களில் ஊடுருவி பார்த்து "ஓஹ் தம்பி பாசமா ?" கோபத்துடன் கேட்டாள் .

"அவன் தப்பு செஞ்சா நேரா என்கிட்ட சொல்லிருக்கலாம் , நான் தண்டனை வாங்கி கொடுத்திருப்பேன் ...ஆனால் நீ அவனை காதலிச்சுட்டு அவன் தப்பு செஞ்சான்னு , அவனை பழிவாங்க என்னையும் காதலிச்சு ...ச்சை இதுக்கு பெயர் என்ன தெரியுமா ?" அருவருப்புடன் பேசினான் பிரவீன் .

அவனின் சொற்களை கேட்டு சீறி எழுந்த பெண்ணவள் "சீ ..ஒரு பொண்ணை அதுவும் தங்கச்சி வயசில் இருக்கிற பொண்ணை கூட்டிட்டு போய் அளிக்க நினச்சவனுக்கு சப்போர்டா பேசுற , நீங்க என்னை பத்தி பேச கூடாது " தோளை குலுக்கி அவனிடம் இருந்து விலகினாள் .

"லுக் உன் தம்பி சதீஷோட முடிவு என்கைல தான் , நடுவுல நீ வந்த உன்னையும் அழிச்சிடுவேன் " சீறினாள் பெண்ணவள் .

"ஹே சஹானா என்னை மீறி அவனை என்ன செஞ்சுடுவனு பார்க்கிறேன் " அவனும் சிங்கமென உறுமினான் .

"ஏமாத்துக்காரி உனக்கே இவ்ளோ இருந்தா, எனக்கு எவ்ளோ இருக்கும் " பிரவீனின் சொற்களிற்கு அவள் என்ன பதில் சொல்லி இருப்பாளோ அதற்குள் கதவு தட்டும் ஓசை கேட்டது .

"எஸ் கம் இன் " என்று அவனை பார்த்துக்கொண்டே கூறினாள் சஹானா .

"சஹானா " என்று அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஸ்ரீதர் .

"பிரவீன் நீங்க எங்க இங்க ?" ஆச்சர்யமாக கேட்பது போல் கேட்டவனின் பார்வை அவர்களின் நெருக்கத்தை கண்டுகொண்டது .

இயல்பாக நகர்வதுபோல் , உணர்வுகளை கட்டுப்படுத்தி ஸ்ரீதரிடம் சென்றவன் " நத்திங் நீல்கிரிஸ் டீ எஸ்டேட் பக்கத்துல ஒரு இடம் இருக்கு , வில்லா கட்டலாம்னு யோசிச்சு விசாரிச்சேன் ...இருக்கிறதுலயே சுபத்ரா கன்ஸ்ட்ரக்ஷன் பெஸ்ட்னு சொன்னாங்க அதான் வந்தேன் , இங்க பார்த்தா உங்க சிஸ்டர் " இயல்பாக பேசினான் .

இருவரின் பேச்சை கேட்டு சஹானாவிற்கு சிரிப்பாக வந்தது , அனைவரின் உணர்வுகளும் கட்டுக்குள் இருப்பது மிருதுளாவின் நேசத்திற்காக மட்டுமே என்பதை உணர்ந்தே இருந்தாள் .

"ஒஹ குட் , சஹானா இப்ப இங்க தான் இருக்கா ...அவ டெசிஷன் எப்பயும் சரியா இருக்கும்னு சித்தப்பாவிற்கு நம்பிக்கை " ஸ்ரீதரும் பூடகமாக பேசினான் .

"சித்தப்பா ?" கேள்வியாக நிறுத்தினான் பிரவீன் .

"தயாளன் சித்தப்பா , ஜெர்மன்ல இருக்காங்களே " ஸ்ரீதரும் ஒன்றுமே அறியாததை போல் பேசினான் .

"அவருக்கு ஒரு மகள் இருக்கானு கேள்விப்பட்டேன் " பிரவீன் போட்டுவாங்கினான் .

சஹானா புன்னகைத்தாள் , ஸ்ரீதர் பதிலற்று மௌனம் காத்தான் .

ஸ்ரீதரின் மௌனம் ,பிரவீனின் முகத்தில் யோசனையை கொண்டுவந்தது ...அதை உணர்ந்த சஹானா "அவ இன்னும் படிப்பை முடிக்கலை " அவசரமாக சொன்னாள் .

அவனை யோசிக்கவிடுவது தனக்கு ஆபத்து என்று அவள் அறிவாள் .

"ஓகே ஸ்ரீதர் அவசரமா போகணும் , இன்னொரு நாள் பார்க்கலாம் " அவளின் முகம் பார்க்காமல் பேசினான் .

"ஓகே பிரவீன் " ஸ்ரீதரும் அவனிற்கு விடைகொடுத்தான் .

"என்ன ப்ரோ , எவ்ளோ ஸ்பீட்ல வந்த ?" பிரவீன் சென்றவுடன் கேட்டாள் சஹானா .

"சஹானா விளையாடாத , என்ன பிரச்சனை ...பிரவீன் என்ன சொன்னார் ?" பதட்டத்துடன் கேட்டான் ஸ்ரீதர் .

"விடு பார்த்துக்கலாம் " எளிதாக கூறினாள் .

"சஹானா ப்ளீஸ் "

"விடு அண்ணா , ஆமாம் ரெண்டு பேரும் எதுவுமே தெரியாத மாதிரி பேசிக்கிடீங்க வாவ் , உங்க நடிப்பை ஆஸ்கார் அவார்ட்க்கு ரெகமெண்ட் பண்ணலாம் " புன்னகையுடன் கூறினாள் .

"எல்லாம் உன்னால தான் , நீ ஆரம்பிச்ச விளையாட்டு இடியாப்ப சிக்கல் மாதிரி பின்னிட்டு இருக்கு " ஸ்ரீதர் சலிப்பாக சொன்னான் .

மாலை ஆறு மணி அளவில் தனது அலுவகத்தில் இருந்து கிளம்பிய சஹானா ,குருவிடம் "நான் மிருதுவை பார்க்க போறேன் குரு ...ட்ரோப் பண்ணிட்டு நீ கிளம்பு ..அண்ணா வருவான் " என்று கூறி இருந்தாள் .

அலுவலக வாயிலில் அவள் வந்து காரின் வருகைக்காக நின்ற சமயம் யாரோ வேகமாக அவளின் கை பற்றி இழுத்தனர் ...

ஒரு நொடி அதிர்ந்து , எதிரில் இருப்பவனை பார்த்தவளின் கண்கள் கோபத்தை கக்கியது . குருவும் இதை எதிர்பார்க்கவில்லை , முன்னே வர முனைந்தவனை சஹானாவின் சமிஞை நிறுத்தியது .

"கையை விடு "பெண் சிங்கமென சீறினாள் சஹானா .

"அம்மு நான் உன் சதீஷ் ...அதே சதீஷ் தான் ,அன்னைக்கு அப்படி நடக்கும்னு நானே எதிர்பார்களை " சதீஷ் காதல் மொழி பேசினான் .

"ஹொவ் டார் யு " என்று சீறி தனது கையை ஆவேசத்துடன் உருவிக்கொண்டு , சதீஷை ஓங்கி அறைந்தாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில்.. சஹானா பலத்த பாதுகாப்புடன் அவ்விடம் விட்டு அழைத்து செல்லப்பட்டாள் .

சதீஷ் தன்னை அடித்தது தனது அம்முவா என்ற அதிர்ச்சியில் இருந்தான் .அவன் அறிந்த அம்மு தன் மீது கண்மூடி தனமான காதலுடன் இருப்பவள் ஆனால் இவள் ?

தூரத்தில் வாகனத்தில் அமர்ந்து இங்கு நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்த பிரவீன் அனைத்தையும் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொண்டான் . பிரவீனிற்கு எதையோ அவன் தவறவிடுவதாக பட்டது . ஆகையால் அவளை தொடர முயற்சிக்கிறான் .

சஹானாவின் உத்தரவின் பெயரில் பிரவீன் எங்குமே தடுக்கப்படவில்லை .

இங்கு காரில் குருவிடம் சீறிக்கொண்டிருந்தாள் அவள் "எப்படி அவன் உள்ள வந்தான் ?"

"தெரியலை மேம் ...யாரோ நம்ம ஆபீஸ் ஸ்டாப் பிரின்ட், அப்படினு சொல்லி உள்ளே வந்திருக்கான் " குருவிற்கும் சதீஷை அடித்து துவும்சம் பண்ணும் வெறி .

"இனி அவன் என் ஆபீஸ் கிட்ட கூட வரக்கூடாது ...காட் இட் " கட்டளையிட்டாள் சஹானா .

"எஸ் மேம் "

மனதிற்குள் சதீஷை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் சஹானா .

இனி ....
 
saaral

Well-known member
Hi friends....is this story is going on flow ...yes there are many twists and turns . Can you all able to go with flow ? ...

please leave your valuable comments what you feel about the story ...
 
Mariammal ganesan

New member

Very interesting, continue your style.god bless you
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top