JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -17

saaral

Well-known member
அத்தியாயம் -17

சஹானாவின் கார் நகர்ந்த பின் பிரவீன் தனது வாகனத்தை எடுத்துச்சென்று சதீஷின் முன் நிறுத்தினான் .

தனக்கு முன் வந்து நின்ற வாகனத்தை பார்த்து முதலில் திடுக்கிட்ட சதீஷ் , நிமிடங்களில் தன்னை சுதாரித்து கொண்டு உள்ளே ஏறினான் .

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்த பிரவீன் தனக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து இருக்கும் தம்பியை கூர்ந்து நோக்கி "அடி பலமோ ?" ஆழமான குரலில் கேட்டான் .

அதிர்ந்தான் சிறியவன் ...தன் தமையனை கண்ட முதலே அதிர்ச்சியில் இருந்தவன் , அண்ணன் அனைத்தையும் கண்டிருக்கிறான் என்று அறிந்தவுடன் உறைந்து தான் போனான் .

"என்ன சதீஷ் பதிலையே காணும் ?"

"பிரவீன் அது வந்து ...."

"அதான் வந்தாச்சே , எதுக்கு வந்தன்னு கேக்கறேன் ?"

"....."

"சதீஷ் உன்னை தான் கேக்கறேன் என்ன நினைச்சுட்டு இருக்க ...நீ ,அப்பா எல்லாரும் செஞ்சு வச்ச வேலை எல்லாம் போதும் ..."

"பிரவீன் அம்மு "

"சதீஷ் புரிஞ்சு தான் பேசரியா ...அவ உன்னை உதாசீனம் செய்யறா ...உன்னைத்தான் முதல் எதிரியை போல் நினைக்கிறா ...இதை நான் பார்த்துகிறேன் "

"அவ என் அம்மு பிரவீன் "

சதீஷின் இந்த கூற்றை கேட்டு பிரவீன் தனது பற்களை கடித்தான் ....மனதிற்குள் சஹானாவை வறுத்தெடுத்தான் 'பாவி என்னையும் , என் தம்பியையும் லூசா சுத்த வச்சு வேடிக்கை பாக்குற ...அவன் உன்னை அவன் அம்மு அப்படினு சொல்றான் ...ச்ச ' மனதிற்குள் அவளை சாடினான் .

"ஆனா இப்ப அவ என் அம்மு மாதிரியே தெரியலை பிரவீன் " சதீஷின் பிதற்றல் நீண்டுகொண்டே சென்றது .

பிரவீன் சதீஷை நோக்கினான் "சதீஷ் என்ன சொல்ற ?" ...இவள் ,அவள் இல்லை என்று சொல்லிவிடமாட்டானா என்ற நப்பாசை பிரவீனிடம் .

"நான் மிருதுவோட அண்ணனா அவளுக்கு தெரிய ஆரம்பிச்சு அவளினவனா மாறினேன் பிரவீன் , என்னை கண் மூடித்தனமா நம்புவா ...உண்மையாவே அத்துணை ஆத்மார்த்தமான காதலை அவ்ளோ சின்ன பொண்ணுகிட்ட இருந்து நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை "

"ஹ்ம்ம்" கண்மூடி தன்னுடைய காதல் கதையை சொல்லும் தம்பியை வெறுமையாக பார்த்தான் பிரவீன் .

"ஒரு வார்த்தை அதிர்ந்து பேச தெரியாத சின்ன பெண் ...ப்ச் இப்ப என்னைய கை நீட்டி அறைஞ்சுட்டா ..என்னால நம்பவே முடியலை ...கடைசியா அவ மலைல இருந்து சறுக்கி விழறப்ப சதீஷ் ஐ லவ் யூனு தான் சொன்னா தெரியுமா ..." சதீஷ் பேசிக்கொண்டே சென்றான் .பிரவீன் வெறுமையான மனதுடன் சாலையை வெறித்துக்கொண்டே வாகனத்தை செலுத்தினான் .

சதீஸ் தன்னை மீறி பழைய நினைவுகளை தமயனிடம் பகிர்ந்து கொண்டான் . பிரவீன் முதலில் வெறுமையாக கேக்க தொடங்கியவன் சதீஷின் பேச்சில் மூழ்கினான் .

'ஒருவேளை அப்படி இருக்குமோ ?' பிரவீனின் மனம் வேகமாக சில கணக்குகளை போட்டு பார்த்தது . இருளடைந்த அவன் காதல் கோட்டையில் சிறு வெளிச்சமாக சதீஷின் கூற்று ....

..................................................

அதே நேரம் சஹானா ,அவளுடைய அந்த நட்சத்திர விடுதியுனுள் பலத்த பாதுகாப்புடன் நுழைந்தாள் .

அந்த அறை அன்றைய மாலை பொழுது முழுதுமாக மிருது மற்றும் சஹானாவின் சந்திப்பிற்காக ஒதுக்கி வைக்கப்பெற்றிருந்தது .

மிருதுளா முன்பே வந்து சஹானாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள் .

சஹானா தனது பாதுகாவலர்களை வெளியில் நிற்க சொல்லிவிட்டு அவள் மட்டும் உள்ளே நுழைந்தாள் .

மிருதுவை நோக்கி மென்மையான புன்னகையை சிந்திக்கொண்டே முன்னேறியவள் "பளார் " என்று தனக்கு கிடைத்த அறையில் உறைந்து நின்றாள் .

அப்பொழுது உள்ளே நுழைந்துகொண்டு இருந்த ஸ்ரீதர் ..மிருதுளா , சஹானாவை அறைந்ததைக்கண்டு வேகமாக சென்று "மிருது என்னமா ? எதுக்கு சஹாவை அடிச்ச "

"அண்ணா ப்ளீஸ் " மிருதுவின் கண் பார்த்துக்கொண்டே சொன்னாள் சஹானா .

"எனக்கு வர கோவத்துக்கு இன்னும் நல்ல அறையனும் இவளை " மிருதுளா பெண்சிங்கமென சீறினாள் .

"என்னாச்சு மிருது " ஸ்ரீதர் அப்பொழுதும் பொறுமையாகவே கேட்டான் .

"இவ யாரை வேணாலும் பழி வாங்கட்டும் , அதுக்காக என்னை யாரோன்னு ஒரு ரேஞ்சுல நடத்துவாளா ...நான் இவ பிரின்ட் இல்லையா ?" கண்களில் நீர்கோர்க்க மனம் உடைந்தாள் மிருது .

"மிருது " மென்மையாக அவளை கூப்பிட்டுக்கொண்டே நெருங்கினர் இருவரும் .

"நீ வராத " என்று சஹானாவை பார்த்து சொன்னாள் .

சஹானாவும் மென்மையான புன்னகையுடன் மிருதுவாய் நெருங்கி "நீ என் பிரின்ட் தான் மிருது , சொல்ல போனால் எனக்கு ஒரு தடிதாண்டவராயன் நண்பனா இருக்கான் அவனை மட்டுமே பார்த்து போர் அடிச்சு போய் இருந்தேன் ...அப்ப தான் இந்த அழகான தேவதை எனக்கு பிரின்ட் ஹா கிடைச்சா ...உன்னை பார்த்தாலோ பேசினாலோ என்னயும் மீறி ஏதாச்சும் சொல்லிடுவேனோ பயம் அதான் ஒதுங்கி இருந்தேன் " என்றாள் .

"என் அண்ணன் அப்பறம் அப்பா ஏமாத்தினத்துக்கு நான் என்ன பண்ணுவேன் ... என்கிட்ட உண்மையை சொல்லிருந்தா நானே உனக்கு முடிஞ்சதை செஞ்சிருப்பேன்ல ....எனக்கு நடந்த எதுவும் தெரியாது அம்மு " சிறுபிள்ளையென தேம்பிக்கொண்டே கூறினாள் மிருது .

முக்கியமான விஷயம் ஸ்ரீதர் மிருதுவை , மிருதுவாக எப்பவோ தனது அணைப்பினுள் கொண்டுவந்து விட்டான் .

அம்மு என்ற மிருதுவின் அழைப்பில் சுதாரித்துக்கொண்ட அண்ணனும் , தங்கையும் நிமிர்ந்து மிருதுவை நோக்கினர் .

"மிருது உனக்கு எப்படி தெரியும் ?" என்று கேட்டான் ஸ்ரீதர் . (பயபுள்ள இப்பயும் கட்டிப்பிடி வைத்தியத்தை விடலைப்பா )

பிரவீன் மற்றும் சதீஷ் அலுவலக அறையினுள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததை சரியாக மூடப்படாத சாளரத்தின் வழியாக , தோட்டத்தில் நின்று தான் அறிந்து கொண்டதை முழுதாக சொன்னாள் மிருதுளா .

கேட்ட இருவருக்குமே சிறு தெளிவு பிறந்தது .

அப்பொழுதுதான் ஸ்ரீதரின் அணைப்பினுள் இருப்பதை உணர்ந்து , சற்று விலகி அமர்ந்தாள் மிருது .

"ஏன்டா ,எதுக்கு தள்ளி உக்காரனும் " ஸ்ரீதர் காதலுடன் கேட்கையில் , சஹானா தமையனை நக்கலாக பார்த்துவைத்தாள் .

வெக்கத்துடன் நெளிந்த மிருது "ப்ச் சும்மா இருங்க இது ஹோட்டல் , யாராச்சும் பார்த்தா ?" என்றாள் .

"யார் பார்ப்பா ?" கனிவுடன் கேட்டான் அவன் .

"சுத்தி இருக்கவங்க " சிறுபிள்ளையென பதில் தந்தாள் மிருது .

சஹானா இருவரையும் பார்த்தும் பார்க்காமல் தனது அலைபேசியுனுள் மூழ்கினாள் .

"சுத்தி யார் இருக்கா ?" என்ற ஸ்ரீதரின் கேள்வியில் பார்த்தவள் தங்கள் மூவரை தவிர்த்து யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள் .

"என்னங்க யாரையும் காணும் , நான் கூட சஹானாவை அடிச்சதுக்கு லைட்டா பீல் பண்ணேன் " மிருதுளா எதார்த்தமாக பேசினாள் .

"ஷபா என்ன அடி ...இந்நேரம் யாராச்சும் இருந்திருந்தா சுபத்ரா குரூப் ஒப் கம்பனிஸ் சிஇஓ அடிவாங்கிறத பார்த்து நாளைக்கு ஹெட் லைன்ஸ் நியூஸ் போற்ற மாட்டாங்க " ஸ்ரீதர் கேலி செய்தான் .

"யாரு அந்த அப்பாடக்கர் சிஇஓ ...." வெகுளியாக கேட்டாள் மிருதுளா .

மேஜையில் கை வைத்து அலைபேசி பார்த்துக்கொண்டிருந்த சஹானா , மிருதுளாவின் கூற்றில் சரிந்தாள் ...கை தானாக தடுமாறியது . ஸ்ரீதர் வெடி சிரிப்பு சிரித்தான் .

"தொப்பி தொப்பி " என்று ஸ்ரீதர், சஹானாவை பார்த்து சிரித்தான் .

"டேய் அண்ணா " சஹானா செல்லமாக முறைத்தாள் .

"என்ன நடக்குது இங்க ?" மிருது குழப்பத்துடன் கேட்டாள் .

"அந்த அப்பாடக்கர் சி இ ஓ இதோ உன் பிரின்ட் தான் " சொல்லி மேலும் சிரித்தான் ஸ்ரீதர் .

"என்ன ?" அதிர்ச்சி , ஆச்சார்யம் , சந்தோசம் அனைத்தும் நிறைந்து இருந்தது மிருதுவிடம் .

"மிருது நான் சில விஷயம் சொல்றேன் கவனமா கேளு ...." என்றுதொடங்கி தான் சொல்ல வந்ததை முழுதாக சொல்லி முடித்தாள் சஹானா .

மிருதுளா கண்கள் கலங்கி , ஸ்ரீதரின் தோல் சாய்ந்து கதறினாள் .

"நான் ..நான் " அழுகையின் இடையே வார்த்தைகள் அற்று தவித்தாள் மிருதுளா .

மிருதுவின் கைபிடித்து "மிருது நீ என்ன கேக்க போறேன்னு தெரியும் ...பட் இப்ப அதுக்கான வாய்ப்பு இல்லை ...சொல்லப்போனால் முடியாது ...காலம் கனிஞ்சு வரணும் மிருது ...." சஹானா பொறுமையாக எடுத்துக்கூறினாள் .

மிருதுளா கண்களை துடைத்துக்கொண்டு "என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு சஹா நான் செய்றேன் ..." என்றாள் . அம்மு ,சஹாவாக மாறியதை கவனித்தனர் இருவரும் .

"உனக்கு தெரியும்னு காட்டிக்காத அதுவே போதும் சரியா " என்றாள் சஹானா .

"அண்ணா ரெண்டு பேரும் பேசிட்டு வாங்க நான் போய் இங்க ஆபீஸ் ஒர்க் முடிச்சுட்டு வரேன் " என்று தனிமை கொடுத்து நகரப்பார்த்தாள் சஹானா .

"இங்க என்ன ஆபீஸ் சஹானா ?" மிருதுதான் கேட்டாள் .

"இந்த ஹோட்டல் நேம் என்ன ?" என்றான் ஸ்ரீதர் .

"சுபத்ரா ஸ்டார் ஹோட்டல் " என்று உச்சரிக்கும் பொழுதே மிருதுவிற்கு புரிந்தது . அவளுக்கு புரிந்ததை கண்டு புன்னகையுடன் நகர்ந்தாள் சஹானா .

ஸ்ரீதர் இந்த ஹோட்டலை என்று , எவ்வாறு சஹானா வாங்கினாள் என்று விலக்கிக் கொண்டிருந்தான் .கதவை திறந்துகொண்டிருந்த சஹானா இவர்களின் சம்பாஷணை கேட்டு "ஷபா " என்ற பெருமூச்சுடன் தலையில் அடித்துக்கொண்டு கிளம்பினாள் .

....................................................

நீல்கிரிஸ் செல்லும் சாலை . மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் மலைத்தொடர் .

ரம்மியமான காட்சிகள் , சொகுசு கார் . கொண்டை ஊசி வளைவுகள் . சஹானா பின் இருக்கையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தாள் .

முன் இருக்கையில் இருந்த குரு , சஹானாவை திரும்பி பார்த்து "சஹானா இது கண்டிப்பா வேணுமா ?" என்றான் .

குருவின் கேள்வியில் நிமிர்ந்த சஹானா "எது குரு ?" திரும்பக் கேள்வி கேட்டாள் .

"பிரவீன் சார் ப்ராஜெக்ட் அதை நீ தான் ஹண்டில் பண்ணனுமா ?" விளக்கமாக கேட்டான் . ஆம் அவர்கள் இப்பொழுது பிரவீனின் ஆடம்பர பங்களா கட்டுமான வேலையின் தொடக்கத்திற்காக செல்கின்றனர் .

சஹானா நேராக செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் அவள் செல்கிறாள் ...ஏன் ...அதே கேள்வி தான் அந்த உற்ற தோழனுக்கும் .

"குரு இந்த பேச்சு வேண்டாமே " சலிப்பாக கூறினாள் .

"பிரவீன் கிட்ட நேரா பேசிறலாமே சஹானா "

"...." சஹானா மீண்டும் புரியாமல் முழித்தாள் .

"உன் மனசுல இருக்குற நேச....ப்ச் மனசுல இருக்க எல்லாத்தையும் நேராக பேசிடலாமே சஹானா ....எதுக்கு இப்படி தவிக்கிற ...என்ன காரணம் ?" நண்பனாக அவன் மனம் கேட்கவில்லை .

அவன் சொல்லாமல் விட்ட வார்த்தை அவளுக்கும் புரிந்தது "உரிமை இல்லாததை , கேட்டு வாங்கக்கூடாது குரு " சஹானா வெறுமையாக கூறினாள் .

"வாட் ? புரியலை "

"யாருக்கும் புரியவேண்டாம் குரு ...விற்று ...அவங்களை பொறுத்தவரை நான் பழி வாங்க வந்த அம்மு ...அப்படியே இருக்கட்டும் அதுதான் நல்லது " விட்டேரியாக கூறினாள் பெண்ணவள் .

சட்டென்று கார் 'க்ரீச்' என்ற சத்தத்துடன் நின்றது .

குருவும் , சஹானாவும் திடுக்கிட்டு நிமிர்ந்தனர் ....இவர்களின் வாகனத்தின் எதிரில் இன்னொரு சொகுசு கார் .

குருவிற்கு எதுவோ தப்பாக பட்டது ....கீழே இறங்கினான் . இறங்கும் சமயம் கூட "சஹானா உள்ளயே இரு " என்று எச்சரிக்கை கொடுத்தான் .

இவளோ கேட்கக்கூடியவளா .....அவளும் இறங்கினாள் .

குரு , சஹானாவை கடிந்துகொள்ள முற்படுகையில் அந்த வாகனத்தில் இருந்து இறங்கினான் பிரவீன் .

எவரோ என்னவோ என்று பதட்டமான குரு , பிரவீனை கண்டு ஆசுவாசம் அடைந்தான் . தயிரியமாக இருந்த சஹானா பதட்டமானாள் .

"உங்க பாடி கார்ட்ஸ் எங்க ?" கடுமையாக கேட்டான் பிரவீன் . கேள்வி குருவிடம் , பார்வை அவளிடம் .

அப்பொழுதுதான் அதை உணர்ந்தான் குரு , பின் வந்த வாகனம் காணவில்லை ....அலைபேசியை எடுத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே இவனின் எண் ...

"குரு என்ன ஆச்சு ?" அவனின் பார்வையை தவிர்த்து , தோழனிடம் கேள்விகேட்டாள் .

"தெரிலை சஹானா ...நெட்ஒர்க் இல்லை ...உன் போன் குடு " பொதுவாக மேடம் என்ற அழைப்பை மட்டுமே எல்லைக்கோடாக வகுத்திருந்த குரு , வாகனத்தில் நிகழ்ந்த நண்பர்களுக்கான உரையாடலின் தாக்கத்தாலும் ...பாதுகாப்பு நபர்களை காணாத பதட்டத்திலும் ...தோழியை தோழியாக கண்டான் .

அவனின் அந்த அழைப்பு பிரவீனின் புருவங்களை உயரச்செய்தது .

சஹானாவின் அலைபேசியிலும் தொடர்பு இல்லை .

பிரவீன் வேகமாக தனது அலைபேசியை எடுத்து சில இலக்கங்களை அழுத்தினான் .

அந்த பக்கம் அழைப்பை ஏற்ற ஸ்ரீதர் "சொல்லுங்க பிரவீன் " என்றான் .

"இங்க நீல்கிரீஸ்ல , வழில உங்க தங்கச்சி சஹானா ,வந்த காரை சேஸ் பண்ணி ஒருவண்டி வந்துச்சு ....லோக்கல் ஆளுங்களை வச்சு அவங்களை டைவேர்ட் பண்ணினேன் ...உங்க பாடி கார்ட்ஸ் யாரையும் காணும் " என்றான் .

விஷயம் அறிந்த குருவும் , சஹானாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் .

பிரவீன் அவள் மேல் இருந்த பார்வையை விளக்காமல் இருந்தான் .

"குரு இல்லையா பிரவீன் " ஸ்ரீதர் பதறினான் .

பிரவீன் ,ஸ்ரீதரிடம் பொறுமையாக பேசத்துடங்கினான் "குரு இருக்கார் ஸ்ரீதர் ....பட் அவர் போன் நெட்ஒர்க் இல்லை நீங்களே பேசுங்க " என்று அலைபேசியை குருவிடம் நீட்டினான் .

அலைபேசியை வாங்கிய குரு "சார் , நானும் மேமும் பேசிட்டே வந்ததுல எதையும் கவனிக்கலை ...எங்க ரெண்டு பேரோடதும் ஒரு கம்பெனி சிம் அதான் நெட்ஒர்க் இல்லை " என்று விளக்கினான் .

பிரவீன் தனது பார்வையை திருப்பினான் இல்லை ...சஹானா தான் வேறு பக்கம் திரும்பினாள் .

"திடீர்னு பிரவீன் சார் கார் முன்னாடி நின்னுச்சு , அவர் சொல்லித்தான் விஷயத்தையே கவனிக்கிறோம் " தாழ்ந்த குரலில் கூறினான் குரு . தோழியின் வாழ்க்கையை பற்றிய உரையாடலில் அவளின் உயிருக்கு வந்த ஆபத்தை கவனிக்க தவறிய குற்ற உணர்ச்சி அவனிடம் .

"ப்ச் குரு என்ன இவ்ளோ கேர் லெஸ்ஸா இருக்கலாமா ?" கவலையுடன் கூறிய ஸ்ரீதர் , குருவை அழைப்பில் காக்க வைத்து அந்த பக்கம் வேறொரு உரையாடலை மேற்கொண்டான் .

திரும்பவும் குருவிடம் பேசினான் ஸ்ரீதர் "குரு , பிரவீன் இஸ் ரைட் ...நம்ம ஆளுங்களை பிளாக் பன்னிருக்காங்க ...உங்க நெட்ஒர்க் ப்ரோப்லேம் அவங்களுக்கு சாதகமா போய்டுச்சு " என்றான் .

"சார் என்ன பண்ணட்டும் " என்றான் குரு .

"நம்ம ஆளுங்க வர எப்படியும் டைம் எடுக்கும் , பிரவீன் கிட்ட போனை கொடுங்க " என்றான் ஸ்ரீதர் .

பிரவீனிடம் அலைபேசி வந்தவுடன் "பிரவீன் இப்ப சஹானா இஸ் இன் டேஞ்சர் ....எங்க ஆளுங்க வரதுக்கும் லேட்டா ஆகும் " என்று தனது கவலையை கூறினான் ஸ்ரீதர் .

"என்ன பண்ணலாம் ஸ்ரீதர் ..." பிரவீன் அவளையே பார்த்துக்கொண்டே கேட்டான் . குருவும் கவனித்தான் , அவளும் பார்க்காமல் பார்த்தாள் .

"ஆல்ரெடி நீங்க தான் அன்னைக்கு கொலை முயற்சியில் இருந்தும் காப்பாத்தினீங்க ....இன்னைக்கும் ச்ச ...எவ்வளோவோ சொன்னேன் , போகாத இந்த ப்ராஜெக்ட் வேற யாராச்சும் ஹாண்டில் பண்ணட்டும்னு ...கேக்கவே மாட்டேங்கிறா பிரவீன் " ஸ்ரீதரின் கூற்று அவனின் பார்வையை இன்னமும் ஆழமாக்கியது .

"நான் என்ன பண்ணனும் ஸ்ரீதர் " நேரடியாக கேட்டான் .

"எங்க ஆளுங்க வர வரைக்கும் உங்க பாதுகாப்புல வச்சுக்க முடியுமான்னு அம்மா கேக்கறாங்க பிரவீன் " சௌம்யா அவர்கள் கூறியதை கூறினான் ஸ்ரீதர் .

இனிப்பை கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வான் அவன் ..."ஓகே ஸ்ரீதர் மிஸ் சஹானாவை நானே கூட்டிட்டு போறேன் ..." அவனின் கூற்றில் யார் அதிகமாக அதிர்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன ...

"குரு , ஸ்ரீதர் சஹானாவை என் பொறுப்பில் கூட்டிட்டு போக சொல்லறார் ...உங்க ஆளுங்கள் வந்தவுடன் நீங்க பார்த்துக்கோங்க " இப்பவும் பார்வை அவளிடமே ....(ஷபா பாவம் பா அந்த பொண்ணு )

"குரு வேண்டாம் , நாமளே பார்த்துக்கலாம் ...அவர் உதவிக்கு நன்றின்னு சொல்லிடு ,வா போகலாம் " சிறு பிள்ளையாக மாறி அடம் பிடித்தாள் அவள் .

"ப்ச் குரு விதண்டாவாதம் வேண்டாம் வர சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு "

"குரு அதே தான் நானும் சொல்றேன் அவரை போய் அவர் வேலையை பார்க்க சொல்லு "

இவர்களின் நடுவில் மாட்டிய குரு தலைசுற்றித்தான் போனான் .

"சார் உங்க போன்ல ஸ்ரீதர் சார்க்கு கூபிடுங்களேன் " இருவரையும் கண்டுகொள்ளாமல் பிரவீனின் அலைபேசியின் மேலே கண்ணை வைத்துக்கொண்டு கேட்டான் குரு .

பாவமான குருவின் முகம் பிரவீனிற்கு புன்னகையை வரவைக்க பார்த்தது .

"நல்லா சிரிச்சா குறைஞ்சா போயிடுவான் " மெதுவாக முணுமுணுத்தாள் அவள் .

அவனிற்கு கேக்காமல் இருந்தாலும் , அருகில் இருந்த குருவிற்கு கேட்டது . "சத்தமா சொல்லேன் சஹானா அவருக்கே கேக்குமே " நேரம் காலம் தெரியாமல் கேலி செய்து தோழியின் தீப்பார்வைக்கு ஆளானான் குரு .

அதற்குள் அங்கு பிரவீனின் அலைபேசி மீண்டும் அதன் இருப்பை உணர்த்தியது , ஸ்ரீதர் தான் "பிரவீன் உங்க கிட்ட அம்மா பேசணும் சொல்ராங்க " அழைப்பை ஏற்றவுடன் வேகமாக கூறினான் ஸ்ரீதர் .

"ஹலோ தம்பி " சௌம்யாவின் குரல் .

"சொல்லுங்க ஆண்ட்டி " பிரவீனின் ஆண்ட்டி என்ற விழிப்பில் இருவரும் பிரவீனை கவனிக்க துடங்கினர் .

"அவ சொல் பேச்சு கேக்க மாட்டா , போனை அவ கிட்ட கொடுங்க நான் பேசுறேன் " என்றார் சௌம்யா .

"உங்க பெரியம்மா பேசுறாங்க " நேராக அவளிடம் கூறினான் பிரவீன் .'இவ கேக்க மாட்டான்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு , ராட்சசி யாருக்கும் அடங்குறது இல்லை ' மனதில் நினைத்துக்கொண்டான் பிரவீன் .

வேகமாக வந்து அவனின் அலைபேசியை கோபமாக பறித்தாள் அவள் "சொல்லுங்க பெரியம்மா "

"சஹானா நான் சொல்றதை கேக்கணும் , நீ பிரவீன் தம்பியோட போ ...உன் பிடிவாதத்தை இப்போ காட்டின நான் வேற மாதிரி முடிவெடுப்பேன் " திடமாக கூறி அழைப்பை துண்டித்தார் .

"ப்ச் குரு நான் இவரோட போறேன் " என்று வேகமாக பிரவீன் காரின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் .

'அட என்ன ஆச்சர்யம் ' என்று யோசித்துக்கொண்டே குருவை நோக்கினான் பிரவீன் .

"அவங்க பெரியம்மா சொல்றதுக்கு சஹானா மறுபேச்சு பேசமாட்டாள் ...உங்களுக்கு இந்த இன்போர்மேஷன் பியூச்சர்ல யூஸ் ஆகும் " என்று கூறி சினேகமாக சிரித்தான் குரு .

பபிரவீனிற்கும் , குருவின் ஸ்நேகமான பாவம் பிடித்திருந்தது . அவனும் புன்னகைத்தான் "அவளை பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்க ...நல்ல வேலை கார் கண்ணாடி லாக் ஆகி இருக்கு ...எனக்கு நீ கொடுத்த டிப்ஸ் அவளுக்கு தெரிஞ்சுது நீ காலி "

பிரவீனின் பாவத்தில் விரிந்த புன்னகை ஒன்றை செலுத்திய குரு "இது மேமோட பேக் அண்ட் இது டாக்குமெண்ட்ஸ் ...இது லேப்டாப் ...நான் கார்ல வச்சிடவா " என்று கேட்டான் .

"என்கிட்ட குடு குரு " நட்பாக பேசத்துடங்கினான் பிரவீன் .

இதே நீல்கிரிஸ் மலையில் பல ஏக்கர் நிலப்பரப்பின் சொந்தக்காரனான பிரவீன் , சிறு பெண்ணின் உடமைகளை தன் கையில் வாங்க முன் வருகிறானா ? ...அவன் கண் அசைவிற்கு அத்தனை பேரும் வந்து நிற்பர் ஆனால் இவனோ ? ...குருவிற்கு மனதில் ஆச்சர்யமும் , நிறைவும் இருந்தது .

"நான் ....... அந்த எஸ்டேட் பங்களால தான் இருக்கேன் உன் பிரின்ட் சஹானா அங்க தான் இருப்பா வந்து சேந்துரு ...என்னால தனியா அடி வாங்க முடியாது " கேலியாக கூறி தன்னவளின் உடைமைகளை தனது வாகனத்தின் பின் இருக்கையில் வைத்து , ஓட்டுநர் இருக்கைக்கு சென்றான் .

நட்பு என்பது நொடி நேரத்தில் நடக்கும் மாயாஜாலம் ....அப்படி ஒரு நட்பு பிரவீனிற்கும் , குருவிற்கும் தொடங்கியது . அவர்களை இணைக்கும் மைய புள்ளி சஹானா ...அவளின் நலன் .

குரு தங்களின் அட்களுக்காக அருகில் இருந்த ஊரில் சென்று காத்திருக்க துடங்கினான் ...நண்பனாக தோழிக்கு தனிமையை வேண்டுமென்றே பிரவீனுடன் ஏற்படுத்திக்கொடுத்தான் .

இங்கு சஹானா அருகில் அவனின் வருகையை உணர்ந்தாள் ....

இருக்கையில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருக்கும் ஓவியப் பாவையை ஒரு நிமிடம் ரசித்து வாகனத்தை இயக்க தொடங்கினான் .

"ஹ்ம்ம் ஆடு பகை , குட்டி உறவா ?" பெருமூச்சுடன் கேள்விகேட்டாள் .

"வாட் ?" இயல்பாக கேட்டான் பிரவீன் .

"என்ன கொல்ல முயற்சிக்கிறது உன் அப்பா , நீ என்ன காப்பாத்துற ...ஹா " எள்ளலாகத்தான் கூறினாள் .

அவனிற்கோ தர்க்கம் பண்ணும் எண்ணம் இல்லை , தன்னவள் தன் அருகினில் அதையே அமைதியாக அனுபவிக்க எண்ணினான் .
 
Mariammal ganesan

New member

இனணயிடம் பிரியம் வந்து விட்டால் அவர்களின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க தக்கதாக மாறிவிடும்
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top