JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-18,19

saaral

Well-known member
ஆலர் நீ....அகிலமும் நீ ..... அத்தியாயம்-18,19
 

saaral

Well-known member
அத்தியாயம் -18

கௌஷிக் சர்கேஷ் சொன்னதைபோல் அடித்துபிடித்து கிளம்பிய வேகத்தை கண்ட அந்த வரவேற்பு இடத்தில் நிற்கும் பெண் வாயை பிளந்துகொண்டு பார்த்திருந்தாள் .

சர்கேஷ் வேண்டும் என்றே தனது தொல்லைபேசியை அனைத்து வைத்து தனது காரில் வான்மதியின் வீட்டை நோக்கி சென்றான் . அங்கு அந்த அடுக்குமாடி குடி இருப்பில் தனது காரை நிறுத்திவிட்டு திரும்பிய சர்கேஷ் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான் .

அவன் சிரிப்பின் காரணம் கௌஷிக் சர்கேஷிற்கு முன் சென்னை வாகன நெரிசலிலும் சிட்டாக பறந்து வந்து இவனிற்கு தரிசனம் கொடுத்து நின்று இருந்தான் . சிரித்துக்கொண்டே கௌஷிக்கை நெருங்கிய சர்கேஷ் "எப்படி இவ்ளோ வேகமா வந்த "

அசடு வழிந்த கௌஷிக் தனக்கு பின் நிற்கும் இரு சக்கர வாகனத்தை கண்டான் . அதை பார்த்தவுடன் பலமாக சிரித்த சர்கேஷ் "சென்னைல இருக்கிற எல்லா சந்து பொந்துக்குள்ளயும் பார்த்துட்டு வந்துட்ட போல " என்று கேலி பேசினான் .

அவனை போலியாக முறைத்த கௌஷிக்கை அலட்சியம் செய்து "இந்த பைக் யாரோடது " கட்டுப்படுத்திய நகைப்புடன் கேட்ட சர்கேஷை வெட்டவா குத்தவா என்ற பார்வை பார்த்துவிட்டு ,'ச்ச ச்ச என்ன இருந்தாலும் நம் வீட்டு மாப்பிள்ளை ' என்று எண்ணி பார்வையை மாற்றிய கௌஷிக் "என் ஆபீஸ் அக்கௌன்டன்ட் ஓட பைக் " என்றான் .

கௌஷிக்கின் முகபாவங்களை கண்ணுற்ற சர்கேஷ் "டேய் க்ராதகா பாவம் மாப்பிள்ளை பொழச்சுபோறாணு விடறியா ....நீயே வேண்டாம் சொன்னாலும் என் டாலி என்கூட வந்திருவா ...உன் பாடு தான் கஷ்டம் நினைப்பில் இருக்கட்டும் " என்று மிரட்டி கௌஷிக்கை கையோடு அழைத்து மின் தூக்கியில் ஏறினான் .

மின் தூக்கியில் மீண்டும் சிரித்த சர்கேஷை புரியாமல் பார்த்த கௌஷிக்கை நோக்கி திரும்பிய சர்கேஷ் "நீ உன் ஆபீஸ்ல இருந்து விழுந்தடிச்சு ஓடி வந்தியா ?" என்றான் .

'ஆம்' என்று காரணம் புரியாமல் தலையாட்டிய கௌஷிக்கை நோக்கி மீண்டும் சிரித்தான் . பின்பு வரவேற்பில் நிற்கும் பெண்ணிடத்தில் நடந்த உரையாடலை கூறிய சர்கேஷை உண்மையான கொலைவெறியுடன் நோக்கினான் கௌஷிக் .

"இந்த பொண்ணு எதுக்கு ஏதோ வேற்று கிரக வாசியை பார்பதைபோல் பார்த்துவைக்கிறானு அப்பவே யோசிச்சேன் ....நீ தான் காரணமா உன்னை " என்று சர்கேஷை கழுத்தை நோக்கி இரு கைகளையும் கொண்டு சென்றான் கௌஷிக் . சரியாக அப்பொழுது சொர்க்கவாசல் திறப்பதை போல் மின் தூக்கியின் கதவு திறந்தது .

சர்கேஷை பார்த்து புன்னகைத்து கௌஷிக்கை கடுமையான பார்வையுடன் பார்த்து கொண்டு ஒரு சிறிய வாண்டு நின்றுகொண்டு இருந்தான் . அவனை பார்த்தா சர்கேஷ் "ஹே சாம்ப் எங்க விளையாட போறியா " என்றான் .

அந்த சிரியவனோ கௌஷிக்கை மேலும் முறைத்துக்கொண்டே "ஆமா அங்கிள் ....என்னோட பிரிண்ட்ஸ் கீழ பார்க்ல விளையாடறாங்க " இன்னும் அந்த சிரியவனின் பார்வை கௌஷிக்கை விட்டு அகலுவதாக இல்லை . அவனின் பார்வை புரிந்த சர்கேஷ் புன்னகையுடன் திரும்பி "சாம்ப் இது என்னோட பெஸ்ட் பிரின்ட் நேம் சீகிரெட் அப்பறம் சொல்றேன் ....இனி இந்த அங்கிள் இங்க அதிகமா வருவாங்க "

"எதுக்கு இந்த அங்கிள் இங்க வரணும் நீங்க மதி அக்கா பிரின்ட் சோ வரீங்க இவர் என்ன மதி அக்கா பிரிண்ட் ஹா ?" கௌஷிக்கை அந்த சிறுவன் முறைப்பதை நிப்பாட்டிய பாடில்லை . கௌஷிக் இங்கு நடப்பவைகளை ஸ்வாரஸிய்யத்துடன் பார்த்துக்கொண்டு நின்று இருந்தான் .

"கரெக்ட் கண்ணா இந்த அங்கிள் மதி அக்காக்கு என்னைவிட கிளோஸ் ஹா இருக்க போறாங்க அதான் " குழைந்தைக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறினான் சர்கேஷ் .

"அச்சச்சோ " என்று அலறினான் அந்த குட்டி கண்ணன் . இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர் . சர்கேஷ் முன் வந்து "ஹே என்னாச்சு கண்ணா " என்றான் பதட்டத்துடன் .

"அங்கிள் பெஸ்ட் பிரின்ட் சொல்லிட்டு உங்களையே இந்த அங்கிள் மூவி மாதிரி கில் பண்ண வராங்க , உங்கள விட மதி அக்காக்கு கிளோஸ் பிரின்ட் சொல்லிட்டு மதி அக்காவையும் ஹர்ட் பன்னிருவாங்களா " கண்களை உருட்டி கேட்ட அந்த குழந்தையை அள்ளி கொஞ்ச தோன்றியது கௌஷிக்கிற்கு .

சர்கேஷிற்கு அந்த குட்டி கண்ணன் ஏன் கௌஷிக்கை முறைத்தான் என்று புரிந்தது . அவனை விளையாட அனுப்பிவிட்டு கௌஷிக்கிடம் "மாப்பிள்ளை இந்த சின்ன கண்ணன் உங்கள் மனம் கவர்ந்த கன்னியின் இளவரசன் ...பார்த்து நடந்துகொள்ளுங்கள் இல்லையேல் தங்களின் சேதாரத்திற்கு நான் பொறுப்பாக முடியாது " என்று விளையாட்டு போல் கூறினான் .


இருவரும் புன்னகையுடன் மதியின் வீட்டினுள் நுழைந்தனர் . அங்கு அகிலம் இவர்களின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தார் . வந்தவர்களுக்கு உபசாரங்களை முடித்து விட்டு அவருக்கும் மதிக்கும் நடந்த உரையாடலை பற்றி கூறி பின் சர்கேஷின் பக்கம் திரும்பி "சர்கேஷ் மதி எக்காரணத்தை கொண்டும் மாப்பிள்ளையை பார்க்க கூடாது பெயர் கூட தெரிஞ்சுக்க விரும்ப மாட்டா என்பது என் கணிப்பு .....கௌசல்யாவின் அண்ணன் அந்த நிலையில் தான் அவள் தெரிந்து கொள்ள வேண்டும் ...முன்பே தெரிந்தால் கல்யாணத்தை நிறுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டாள் பிடிவாதக்காரி " என்றார் .

கௌஷிக் மனதளவில் வருந்தினான் வான்மதியை பார்த்த நாள் முதல் எவ்வாறெல்லாம் விரும்பி தனது விருப்பத்தை தெரிவித்து மணக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பான் .

கௌஷிக்கை நோக்கி திரும்பிய அகிலம் "மாப்பிள்ளை என் பெண்ணை நீங்கள் மணக்க சம்மதித்ததால் உங்கள் செய்கைகளை மன்னித்துவிட்டேன் என்றில்லை ஆனால் உண்மையாக மனம் வருந்தி மன்னிப்பு கோருபவரை மன்னிக்காவிடினும் மறந்து ஏற்று கொள்வதே சிறந்தது என்பதை நம்புபவள் நான் . உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் அடுத்த அடி எடுத்து வைக்கிறேன் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு " கண்கள் பளபளக்க தன் முன் கை ஏந்தி நிற்கும் அந்த தாயை காண்கயில் கௌஷிக்கின் மனசாட்சி அவனை கொள்ளாமல் கொன்றது .

"அத்தை நான் எதயும் நியாயப்படுத்த விரும்பவில்லை ஆனால் சொல்வதை விட மதியை நான் பார்த்துக்கொள்வதை பாருங்கள் நிச்சயம் உங்கள் மனம் குளிரும்படியாக தான் நடந்துகொள்வேன் " என்று வாக்களித்தான் .

அதன் பிறகு மூவருமாக சேர்ந்து அடுத்து நடக்க வேண்டிய வேலைகளை கவனமாக திட்டமிட்டனர் . அந்த திட்டத்தின் முடிவாக வான்மதி கௌஷிக்கை மணமேடையில் சந்திப்பது அதற்கு முன் யார் மாப்பிள்ளை என்று தெரியாமல் பார்த்துக்கொள்வது என்று திட்டம் தீட்டினர் .

*********************************************************
அத்தியாயம்-19

மதி மாலை வீடு வந்தபொழுது வாசலில் செருப்புகள் நிறைந்து இருப்பதை கண்டு குழப்பமுற்றாள் . புருவத்தின் நடுவில் முடிச்சுடன் வீட்டுக்குள் நுழைந்தவள் அங்கு கூடத்தில் அனைவரும் கூட்டமாக அமர்ந்து அகிலத்திடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு மேலும் குழப்பமானாள் .

அகிலத்தின் முகத்தில் நிறைந்த மகிழ்ச்சி . லிங்கத்தின் மறைவிற்கு பிறகு உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் இன்று தான் தனது அன்னையை இவ்வாறு காண்கிறாள் மதி .

"ஐ அண்ணி வந்தாச்சு " என்று கூச்சலுடன் கௌசல்யா சந்தோசமாக வந்து மதியின் கையை பற்றிக்கொண்டாள் . மதிக்கு மனதில் ஏதோ தட தட என்று ஓடும் ஓசை .

அகிலம் சந்தோஷத்துடன் மதியின் அருகினில் வந்து "ஒரு நிமிஷம் " என்று அனைவரிடமும் பொதுவாக கூறி மதியை கை பற்றி அறைக்குள் அழைத்து சென்று கதவை அடைத்தார் .

"அம்மா என்ன நடக்குது இங்க " மதி தனது அன்னையிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தாள் .

"மதி இந்த சேலை கட்டிக்கோ இந்த நகை எல்லாம் போட்டுக்கோ " மதி சொல்வதை கவனிக்காமல் அகிலம் அவர்போக்கில் மெத்தையின் மீது எடுத்து வைத்திருந்த ஆடையையும் அணிகலன்களையும் அவள் முன் நீட்டினார் .

"அம்மா தயவுசெஞ்சு என்ன நடக்குதுன்னு சொல்றிங்களா " வான்மதி வெடித்துவிட்டாள் .

நிதானமாக நிமிர்ந்து பார்த்த அவர் "உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு மதிமா ...நீ சொன்ன நிபந்தனை அனைத்திற்கும் அந்த மாப்பிள்ளை சரி சொல்லிட்டார் " அகிலம் அவர் அவர்போக்கில் பேசிக்கொண்டே சென்றார் . வான்மதி அவர் சொன்ன விஷயத்தில் மின்சாரத்தை தொட்டதை போல் ஸ்தம்பித்து நின்றாள் .

தனது மகளிடம் எந்த பதிலும் இல்லை என்பதால் அவளை உலுக்கி சுயநினைவிற்கு கொண்டு வந்து அகிலம் மதியின் முகத்தை பார்த்து "என்னமா குழப்பம் உனக்கு ?" தலையை கோதிவிட்டு ஒரு அன்னையாக கேட்டார் .

"அம்மா நாம நேத்து தான பேசினோம் அதுக்குள்ள மாப்பிள்ளை எப்படி " கலக்கத்துடன் கேட்ட மகளை பார்த்து புன்னகைத்தவர் "எதுக்கு கண்ணம்மா இவ்ளோ கலக்கம் ...அம்மா யோசிக்காம முடிவு எடுப்பேனா ..., மாப்பிள்ளை சர்கேஷ் கட்டிக்கப்போற கௌசல்யாவின் சொந்த அண்ணன் . உன்னை கல்லூரி காலத்தில் கௌசல்யாவுடன் வரும் சமயம் பார்த்து ஒருதலையாக காதலிச்சிருக்கார் ...மீண்டும் உன்னை அன்று புடவை கடையில் பார்த்து சர்கேஷ் கிட்ட சொல்லி என்னிடம் முன்பே பேசி உன் அனைத்து நிர்பந்தனைகளுக்கும் முழுமனதுடன் சம்மதித்து கல்யாண ஏற்பாட்டை தொடங்கி இருக்கிறார் " நீண்ட நெடிய விளக்கத்தை பாதி உண்மையும் மீதியை மறைத்தும் புனைந்து ஒரு அழகான ஒரு தலை காதல் கதையை கூறினார் அகிலம் .

மதி மேலும் கேள்வி கேட்பதற்குள் அங்கு வந்த கௌசல்யா "அண்ணி நீங்க இதுக்காக ரெடி எல்லாம் ஆக வேண்டாம் வாங்க ஒரு காசுயல் விசிட் தான் ....மத்தபடிக்கு எங்க அண்ணாக்கு ஓகே அப்படினா எங்க எல்லாருக்கும் பிடித்தம் என்று தான் அர்த்தம் " புன்னகையுடன் தனது தமயன் மீது இருக்கும் அன்பை அழகாக வெளிப்படுத்தினாள் .

"இருக்கட்டும் கௌசி சும்மா சேலை மட்டும் மாத்திட்டு இப்ப வந்திருவா " என்று கூறி மகளுக்கு கண்ணை காட்டி விட்டு அறையை விட்டு கௌசல்யாவுடன் வெளியே சென்றார் அகிலம் .

தனது அன்னை இனி மனது மரமாட்டார் என்பதை புரிந்து கொண்டு அவரேனும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மனதை ஒருநிலை படுத்தி கல்யாணத்திற்கு தயாரானாள் மதி . இது தான் மதி வாழ்க்கையின் ஓட்டத்தை அதன் போக்கில் சென்று எதிர் வரும் சவால்களை எதிர்நோக்குபவள் .

மதி புடவை மாற்றிக்கொண்டு முகத்தை கழுவி சிறிய சங்கிலியை மட்டும் அணிந்து வெளியே வந்தாள் . எளிமையான நிமிர்ந்து நிற்கும் அவள் அழகில் ஸ்ருதியும் , சரவணனும் திருப்தியுற்றனர் ."மன்னிச்சிருங்க சம்பந்தி என் மகனால் இன்று வர முடியவில்லை முக்கியமான வேலையில் மாட்டிக்கொண்டான் " என்று ஸ்ருதி மனம் வருந்தினார் .

ஸ்ருதி மற்றும் சரவணன் அமர்ந்திருந்த நீள்விரிக்கையின் அடுத்ததாக இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்து இருந்த சர்கேஷ் தனது அலைபேசியில் தெரிந்த கௌஷிக்கின் முகத்தை பார்த்து 'அடப்பாவி இப்படி சைட் அடிக்கிறதெல்லாம் எப்ப முக்கியமான வேலையில் சேர்த்தாங்க ?' என்று இங்கு நடப்பவைகளை காணொளி காட்சியாக சர்கேஷின் அலைபேசியில் கண்டுகொண்டிருந்தவனை பார்த்து மனதில் கேட்டுவைத்தான் .

"அதனால் ஒன்னும் இல்லை சம்பந்தி ,குடும்பத்தை தெரியாதா ...இல்லை மாப்பிளையத்தான் தெரியாதா " அகிலம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூறினார் .

மதிக்கு இங்கு நடப்பவைகளில் சிறிதும் கவனம் இல்லை அவளின் முழுக்கவனமும் அவளின் அன்னையின் முகத்தினில் தெரிந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியில் நிலைத்தது . 'நாம் எடுத்த முடிவு சரி ' என்று மனதினில் மீண்டும் நினைத்துக்கொண்டாள் .

அதன் பின் சர்கேஷ் கௌசியின் திருமண நாள் அன்றே வான்மதி மற்றும் கௌஷிக்கின் திருமணம் நடைபெறும் என்று முடிவெடுத்தனர் . ஒருவர் கூட கௌஷிக்கின் பெயரை கூறவில்லை . பெயரை எவரும் கூறிவிடாமல் கவனமாக பார்த்துக்கொண்டனர் சர்கேஷும் ,அகிலமும் .

சர்கேஷ் மனதில் 'பாவி இப்படி அழகு தேவைதையா என் டாலி பக்கத்தில இருந்தும் கடலை போட விடாம இப்படி காவல் காக்க வச்சுட்டானே , இவன் மட்டும் நல்லா விடியோல சைட் அடிக்கிறான் ' என்று கௌஷிக்கை மனதில் வறுத்தெடுத்தான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top