JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் - 18

saaral

Well-known member
அத்தியாயம் - 18

அந்த கார் எஸ்டேட் பங்களாவினுள் நுழைந்தது . வரும் வழி முழுதும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை .

கண்மூடி அமர்ந்திருந்தவள் மெல்லிய இசையின் தாக்கத்தில் கண்ணயர்ந்தாள் . பிரவீனும் வாகனத்தை எத்துணை மெதுவாக செலுத்த இயலுமோ அவ்ளோ மெதுவாக செலுத்தினான் .

பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மனதிற்கு நெருக்கமானவர்கள் அருகில் இருப்பதே , மனிதன் மனதிற்கு போதுமானது ......நிம்மதியான தூக்கம் , நிறைவான மனநிலை என்று அனைத்தும் இருக்கும் .

கார் நின்றவுடன் துயில் களைந்து கண்திறந்தவள் அருகில் அமர்ந்திருந்தவனை நோக்கி , தன்னையும் மீறி மென்முறுவல் பூத்தாள் .

அவனின் கண்களை அவனாலேயே நம்ப இயலவில்லை . நடப்பது நிஜம்தானா ? , அவளை கிள்ளி பார்த்துவிடலாமா என்று ஒரு நொடி யோசித்தவன் 'பிரவீன் சொந்த செலவில் சூனியம் வச்சுக்காத ...சும்மா சிரிச்சு மட்டும் வைப்போம் ' என்று மனம் கொடுத்த எச்சரிக்கையில் சுதாரித்தான் .

அவன் புன்னகைத்தவுடன் கனவில் இருந்து விழிப்பவள் போல் திடுக் என்று நிமிர்ந்து அமர்ந்தாள் .

'தெளிஞ்சுட்டா , இனி எதுவும் கேக்கிறதுக்கு முன்னாடி நாமளே முந்திப்போம் ' மனதிற்குள் எண்ணியவன் "என்ன இறங்குற ஐடியா இல்லையா ?" வரவழைத்த கடுமையுடன் வினவினான் .

"ப்ச் " என்ற சலிப்பான பாவனையுடன் காரை விட்டு இறங்கியவள் தனக்கு முன் நிமிர்ந்து நிற்கும் அந்த ஆடம்பர வீட்டை கண்டு வாயை பிளந்தாள் .

"உள்ள போகலாமா ?"

"இவ்ளோ பெரிய வீடு இருக்கிறப்ப எதுக்கு இங்க இன்னொரு வீடு கட்டப்போறீங்க ?" பகைமை இல்லாமல் முதல் முறையாக மனம் திறந்து ,தோன்றியதை வினவினாள் .

"அது என் இஷ்டம் " இவ்ளோ நேரம் அவளின் அருகாமையை ரசித்து நின்று இருந்தவன் ,அவளின் அந்த கேள்வியில் , பட்டென்று பதில் தந்துவிட்டு நகர்ந்தான் .

செல்லும் அவனை குழப்பத்துடன் பார்த்திருந்தவள் , தோள்களை குலுக்கி அவன் பின்னே சென்றாள் .

அவனின் பின்னோடு சென்றாலும் அந்த உயர்ந்த ஆண்மகனின் வேக எட்டுக்களுக்கு அவளால் ஈடு கொடுக்க இயலவில்லை .

"வளர்ந்து கெட்டவன் , கூட்டிட்டு வந்தா ஆச்சா ? உள்ள வரேன்னானு பாக்காம போறான் ...இதுல இந்த பெரியம்மா இந்த தொம்பிக்கு சப்போர்ட்டு " வாய்விட்டு அர்ச்சித்துக்கொண்டே முன்னேறினாள் .

அவள் உள்ளே நுழைந்தவுடன் ,பவ்யமாக ஒரு பெண் வந்து முன் நின்று "அம்மா உங்க ரூம் இதுதானுங்க " என்று கூறி கீழ் இருக்கும் ஒரு அறையை கைகாட்டினாள்.

அந்த பெண் கை காட்டிய திசையில் பார்த்தவள் , தனது பார்வையை சுற்றிலும் அலையை விட்டாள் (யாரை தேடுகிறாள் என்று சொல்லவும் வேண்டுமா ).

அவளவனோ , அவள் அறியாமல் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் .

தனக்கு என்று கொடுக்க பட்டிருந்த அறையில் உள்ளே நுழைந்தவள் , தனது உடைமைகளை பார்த்தாள் .அதனுள் எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள் .

(எதை தேடுகிறாள் ?)

அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள் பணிப்பெண் "அம்மா , உங்களை அய்யா கூப்பிடறாங்க " என்று கூறிச்சென்றாள் .

ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு தன்னை சமன் செய்து ,வெளியே வந்தாள் சஹானா .

அங்கு கூடத்தில் நீல் விரிக்கையில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து இருந்தான் அவன் .

அலைபேசியினுள் மூழ்கி இருந்தவன் தன்னை எவரோ கவனிப்பது போல் தோன்றவும் சட்டென்று நிமிர்ந்தான் ....சஹானா வீட்டை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவன் எத்தனாக இருந்தாள் , அவளோ எத்தனுக்கு எத்தனாக அல்லவா இருக்கிறாள் ...(பிரவீன் புன்னகைத்தானோ ?).

'ஹ்க்கும் இவனாச்சு , சிரிக்கிறதாச்சு ' அட மயின்ட் வாய்ஸ் ...சஹானாவினது .

"எல்லாம் ஓகே ஹா ?...குரு இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்க வந்திடுவார் " அவளின் கண் பார்த்து பேச முயற்சித்தான் .

ஆம் முயற்சித்தான் ...எங்கே அவள் அவனை பார்த்தால் தானே .

"என்னோட போன் எங்க ?" என்று வினவினாள் . பார்வை எங்கோ ...

'குரு கொடுத்தானே எங்க வச்சேன் ' என்று யோசித்துக்கொண்டே அவளின் எண்ணிற்கு அழைத்து பார்த்தான் பிரவீன் . கட்டுமான வேலை விஷயமாக நேராக பேச வேண்டும் என்று , அழுத்தமாக நின்று அவளின் எண்ணை வாங்கி இருந்தான் .

அழைப்பு ஒலி அருகினில் தான் கேட்டது . பிரவீன் தான் அமர்ந்து இருந்த இருக்கையை சுற்றிலும் பார்வையை செலுத்தினான் .

சஹானா கண்டுபிடித்துவிட்டாள் "ஹ்க்கும் " என்று தொண்டையை செருமி அவனின் கவனத்தை தன் பக்கம் திருப்பினாள் .

நிமிர்ந்து பார்த்தவன் அவளின் ஆட்காட்டி விறல் சென்ற திக்கை கண்டு தனது சட்டைப் பையை தடவிப்பார்த்தான் .

'அட ஆமாம் இங்க வச்சுட்டு சுத்தியும் தேடறேன் ' தனக்குள்ளாக பேசிக்கொண்டே அவளின் அலைபேசியை எடுத்து பார்த்தான் .

அவன் அதை உற்று கவனிப்பதற்குள் வேகமாக அவனை நெருங்கி தனது கைபேசியை பதட்டத்துடன் கைப்பற்றினாள் சஹானா .

'ஒருவேளை பார்த்திருப்பானோ ?' சஹானாவின் மனம் .

'அடிப்பாவி, இப்படியா என்னோட நம்பரை சேவ் பன்னிருக்க ' அவனின் மனம் , செல்லமான கோபம் .

அப்படி என்ன பெயராக இருக்கும் ....(அது அவர்களின் ரகசியம் ...ஷ்ஷ்)
.................................................................

பிரவீன் தனது தந்தையின் முன் கோபமாக அமர்ந்து இருந்தான் ....

"பிரவீன் அது இல்லைப்பா ...எனக்கும் சத்யாவிற்கும் பல வருஷ பழக்கம் எப்படி விட முடியும் " தலை கவிழ்ந்து கூறினார் விஸ்வம் .

"அப்பா , இது தான் லாஸ்ட் ...என் பேச்சை கேக்காம நீங்க சதீஷை கோர்த்துவிட்டு இத்தனை தூரம் வந்து நிக்குது ....இதுவே போதும் ...கூடா சகவாசம் கொலை நாசம் அப்படினு சொல் இருக்கு ...அதுக்கு தகுதியான ஆள் அந்த சத்யா , இப்ப அவர் பண்ற எதுவும் சரி இல்லை " பிரவீன் காட்டமாகவே பேசிக்கொண்டிருந்தான் .

"என்னாச்சு பிரவீன் ?" திகிலுடன் வினவினார் விஸ்வம் .

"மாப்பிளை ஸ்ரீதரோட தங்கச்சியை கொலை செய்ய முயற்சிக்குறார் ...நம்ம எஸ்டேட்க்கிட்ட போற வழில நான் பார்த்து உள்ள வந்ததால, எந்த பிரச்னையும் இல்லை ....எதாவது ஆச்சு ? நம்ம மிருதுவோட வாழ்க்கையை பற்றி யோசிச்சு பாருங்க " பிரவீனின் கோபம் மாப்பிள்ளையின் தங்கை என்பதாலா , இல்லை அவனவள் என்பதாலா ?....

"'இல்லை பிரவீன் , சத்யா இப்ப எல்லாத்தையும் விட்டுட்டான் ...அவனுக்குனு என்ன இருக்கு இதுல அவனுக்கு என்ன லாபம் " தன்னை அறியாமலே நண்பனுக்காக வாதாடி , மகனின் சந்தேக பார்வையினுள் நுழைந்தார் விஸ்வம் .

"இதுல உங்களுக்கும் சம்பந்தம் இருக்கா ?" நெற்றியடியாக வந்தது கேள்வி .

"இல்லை , இல்லை பிரவீன் ...நான் சொல்லி வைக்கிறேன் ..., நமக்கு மிருதுவோட வாழ்கை முக்கியம் " பதட்டமாக சொல்லி நகர்ந்தார் .

பிரவீனின் எண்ணங்கள் கூர்மையடைந்தன ......

'இல்லை இதுல இன்னும் எதுவோ இருக்கு ...இன்னும் நான் எதையோ தெரிஞ்சுக்காம இருக்கிறேன் ...அன்னைக்கு கார்ல சஹானாவும் எதுவோ சொன்னாளே !' சரியாக யோசிக்க துடங்கினான் பிரவீன் .

அன்றைய நிகழ்வை எண்ணிப்பார்க்கையிலே அவனின் அகமும் , முகமும் மலர்ந்தது .

அன்று சற்று நேரத்தில் குரு வந்தவுடன் கிளம்பத்தயாராகி நின்றாள் . அன்றைய பொழுதேனும் அங்கு கழித்துவிட்டு மறுநாள் செல்லலாம் என்று எவ்ளோ எடுத்துக்கூறியும் அவள் கேட்கவில்லை .

ஸ்ரீதர் , சௌம்யா என்று அனைவரும் சொல்லிப்பார்த்தனர் ..."இல்லை இன்று விடுதியில் தங்கி , நானே எனக்காக வீடு வாங்கிக்கிறேன் " என்று கூறி திடமாக மறுத்துவிட்டாள் .

"விடுங்க பிரவீன் நான் ஒரு ப்ரொபேர்ட்டி வாங்க ஏற்பாடு செஞ்சுட்டேன் , நாளைக்கு அவ கைல வந்திடும் அங்கேயே தங்கட்டும் " என்று ஸ்ரீதர் இறுதியாக கூறிவிட்டான் .

"பட் அவ லைப் த்ரெட் இருக்கு ஸ்ரீதர் , இப்படியே அதுவும் இருட்டப்போகும் இந்த நேரத்தில் எப்படி விடறது " பிரவீனின் மனம் உண்மையாகவே அவளிற்காக துடித்தது .

"ஏதாச்சும் ஏற்பாடு பண்றேன் பிரவீன் , இல்லைனா போலீஸ் ப்ரொடெக்ஷன் கேட்டு பாக்கிறேன் "

"ப்ச் வேலைக்கே ஆகாது ஸ்ரீதர் , வெள் என்னோட ஆளுங்க உங்க தங்கச்சி பாதுகாப்புக்காக இருப்பாங்க " பிரவீன் தனது இறுதி முடிவை கூறினான் .

"அண்ணா அதெல்லாம் வேண்டாம் , நான் பார்த்துகிறேன் " சிலிர்த்துக்கொண்டாள் சஹானா .

"ஸ்ரீதர் உங்க தங்கச்சி என்னோட கண்டிஷன்க்கு ஒத்துக்கிட்டா , என் வீட்டில் இருந்து கிளம்ப முடியும் இல்லைனா ஒரு அடி இந்த வீட்டை விட்டு அவள் நகர முடியாது " பிரவீன் பற்களை கடித்துக்கொண்டே பேசினான் .

இவை அனைத்தும் அலைபேசி உரையாடலே , ஒலிபெருக்கியில் போட்டிருந்தமையால் இருபக்கமும் அனைவராலும் அந்த பேச்சுவார்த்தையை கேட்க இயன்றது .

"சஹானா , உன் பாதுகாப்பு முக்கியம்னு தான் சொல்ராங்க ...நல்லது சொன்னா கேட்டு பழகு " அவளின் பெரியம்மா சௌமியாவின் குரல் .

இப்பொழுது பற்களை கடிப்பது சஹானாவின் முறையாக மாறியது .

"ஸ்ரீதர் என்னோட ஆளுங்க , அந்த போல்லோவ் பண்ண ஆளுங்களை பிடிச்சுட்டாங்க ...யார் காரணம்னு சீக்கிரம் தெரிஞ்சிடும் " பிரவீன் திடமாக கூறினான் .

ஸ்ரீதரோ கோபத்துடன் "தெரிஞ்ச விஷயத்துக்கு எதுக்கு விசாரணை " வார்த்தைகளை விட்டான் .

புருவத்தின் நடுவில் முடிச்சுடன் "வாட் ? கம் அகைன் " என்றான் பிரவீன் .

"ஒண்ணுமில்லை தம்பி , சஹானா நீ கிளம்பு ...ஆனால் தம்பி சொல்ற மாதிரி நடந்துக்கோ " என்று கூறி அழைப்பை துண்டித்தார் சௌம்யா .

பிரவீன் யோசனையில் ஆழ்ந்தான் , சஹானா அவனை பார்த்து எள்ளலாக புன்னகைத்தாள் .

சில சமயம் அவளின் முகத்தில் தென்படும் அந்த எள்ளல் தன்மை எதனால்?? ...அதையும் யோசிக்க தொடங்கினான் பிரவீன் .....

அன்றைய இரவில் , காரிருள் படர்ந்த அந்த வேளையில் ...சஹானாவின் உயிருக்கு குறி வைத்திருக்கும் நபர் சத்யா என்ற தகவல் அவனை வந்தடைந்தது .

யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு ,இரவாக கிளம்பி சென்னை வந்து சேர்ந்து , தனது தந்தையின் முன் கேள்விகளை அடுக்கினான் .

ஆனால் அவளின் எள்ளல் பாவம் எதனால் என்று தெரிய வந்தால் விஸ்வம் இப்படி சுதந்திரமாக நடமாட இயலுமா ?

........................................

சில தினங்கள் கடந்திருந்தது .....

சாரதாவிற்கு நேரம் போதவில்லை ...மகளின் திருமண வேலைகளில் முழுதாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் .

விஸ்வம் அனைத்திலும் ஒருவித ஒதுக்கத்திலே இருந்தார் .

சதீஷ் , அவனின் நிலை அந்த வீட்டில் மிகவும் மோசம் ...விஸ்வம் அவரின் பயத்தில் இருந்ததால் ,இவனை கவனிக்கவில்லை ...சாரதா அவர்கள் வேலை பளுவில் இருந்தார் . மிருதுளா, சதீஷ் அறியாமல் அவனை முற்றிலுமாக தவிர்த்தாள் .

இங்கு பிரவீன் மட்டுமே சதீஷின் மனநிலையை உணர்ந்திருந்தான் .....

என்னதான் அவன் செய்தது தவறாகவே இருந்தாலும் , இக்கட்டான சூழ்நிலையில் புத்தி இல்லாமல் செய்த செயலால் தனது காதலை , நேசத்தை இழந்து நிற்கிறான் .

அன்று ஸ்ரீதர் , மிருதுளாவின் திருமணத்திற்காக அனைவரும் சேர்ந்து புடவை எடுக்க சென்றிருந்ததனர் ......

சுபத்ராவும் , சௌம்யாவும் சேர்ந்து சஹானாவை புடவை கட்ட வைத்திருந்தனர் .

மாம்பழ நிற அந்த மெல்லிய ஜரிகை வைத்த புடை அவளிற்கு எடுப்பாக இருந்தது . எப்பயும் அணிவது போல் சிறிய சங்கிலி , மெல்லிய கைச்சங்கிலி , சிறு பூ தொங்குவது போல் இருக்கும் தோடு ......

இடது கையில் எப்பொழுதும் பெரிதாக கைக்கடிகாரம் அணிபவள் இன்று சேலைக்கு பொருந்துவது போல் டைடன் ராகா கலெக்ஷன் கைக்கடிகாரம் ஒன்றை அணிந்திருந்தாள் .

எப்பொழுதும் வேலை செய்வதற்கு எதுவாக முழு நீள கவுன் போன்ற குர்தியிலோ , இல்லை பலாஸோ உடையிலோ இருப்பவள் வெகு நாள் கழித்து சிறு அலங்காரத்துடன் தென்படுகிறாள் .ஏனோ ஜீன்ஸ் போன்ற உடைகளில் அவளிற்கு நாட்டம் செல்லவில்லை .

இவளின் தோற்றத்தை கண்டு இருவர் மெய்மறந்து நின்றிருந்தனர் என்று சொல்லியும் தெரிய வேண்டுமா ?

ஒருவன் காதலாக பார்த்தால் , இன்னொருவன் கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் பார்த்துக்கொண்டிருந்தான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top