JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-20,21

saaral

Well-known member
அத்தியாயம்-20
அதன் பிறகு கௌஷிக் கவனமாக வான்மதியை எந்த வழியிலும் நேராக பார்க்க கூடாது என்பதை கடைபிடித்தான் . ஒளிந்து மறைந்து தன்னவளை தினமும் பார்க்காவிடில் அவனிற்கு அந்த நாள் ஏதோ நிறைவு பெறாததை போன்று தோன்றும் .

இன்னொரு பக்கம் சர்கேஷ் மற்றும் கௌசல்யாவின் காதல் அழகாக மலர்ந்தது . இனியா தன்னிடம் வைத்தியத்திற்கு வந்த ரிஷி குணமானவுடன் தனது வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள் . சர்கேஷ் மற்றும் கௌஷிக்கின் திருமண ஏற்பாட்டில் அப்ப அப்ப தலை காட்டுவாள் .

இதோ நாளும் கிழமையும் ஓடிற்று அகிலம் கல்யாண பரபரப்பில் இருந்தார் . வான்மதியோ யாருக்கு வந்த விருந்தோ என்று தன்னுடைய அன்றாட பணிகளை கவணிகளாகினாள் . அவளின் நடவடிக்கை கண்ட சர்கேஷ் நேராக அவளிடம் கேட்டு விட்டான் "வான்மதி என்ன எல்லாத்துலயும் ஒதுங்கியே இருக்க இது உன் கல்யாணம் மா ".

"அண்ணா புரியுது ஆனாலும் எனக்கு என்னமோ இந்த கல்யாணம் குடும்பம் இதுல பற்றே இல்லை ...." மிகவும் எளிதாக சொல்லிய மதியை கண்டு திடுக்கிட்டான் சர்கேஷ் .

"என்னமா சொல்ற அப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்லையா ....வேறு என்ன யோசிக்கிற " பதட்டத்துடன் கேட்ட சர்கேஷை பார்த்து புன்னகை புரிந்து "நீங்க பயப்படற அளவுக்கு ஏதும் யோசிக்கல நிச்சயம் கல்யாணத்தை நிறுத்த மாட்டேன் என் அம்மாவின் முகத்தில் இப்பதான் நிறைந்த மகிழ்ச்சியை கண்டேன் அவங்களுக்காகவாது இந்த பந்தத்தில் நிலைத்து நிற்பேன் " என்ன வரவிருக்கிறது என்று தெரியாமல் வான்மதி அவள் போக்கில் சொல்லிவிட்டாள் . ஏன் இதை சொன்னோம் என்று அவள் வருந்தபோகும் நாள் வெகு தொலைவில் இல்லை .

நாளை திருமணம் இன்று மாலை வரவேற்பு என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலும் மதியின் பற்றற்ற தன்மை கண்டு கலங்கியது அந்த தாய் உள்ளம் . நேராக மகளின் முன் சென்று நின்றவர் "மதி " என்று கலக்கத்துடன் அழைத்தார் .

அவரின் முகத்தினில் தென்பட்ட கழகத்தை கண்டு "அம்மா என்ன ஆச்சு " தனது பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டிருந்தவள் அதை நிறுத்தி தாயின் அருகினில் சென்றாள் .

"மதிமா அம்மா மேல கோவமா ?"

"என்னமா எதுக்கு உங்க மேல கோவம் வரணும் "

"உன் விருப்பம் இல்லாமல் திருமண ஏற்பாடு ...." என்று இழுத்தார் .

"அம்மா உங்களுக்கே என்னை பத்தி தெரியும் ஒரு விஷயத்தில் முரண்பாடான கருத்து இருந்தால் நான் எப்படி அதற்கு சரினு சொல்வேன் .....உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அதை என்னைக்கும் கலையாமல் பார்த்துக்கவாது நான் இந்த திருமணத்தை ஏற்று வாழ பழகிக்கொள்வேன் "

இப்பொழுதுதான் அவரின் மனதில் ஆசுவாசம் பிறந்தது . இருந்தும் சின்ன நெருடல் "ஆனால் நீ மாப்பிளையை பற்றி எதுவுமே கேக்கலையே "

அவரின் கலக்கம் புரிந்து "அம்மா நீங்க யோசிக்காம செயல்படமாட்டீங்க ....குழந்தை போன்ற உங்கள் மனதில் இவ்ளோ பிடிவாதம் வருதுன்னா அதில் ஏதோ பலமான காரணம் இருக்கும் இதில் சர்கேஷ் அண்ணாவும் இருக்கப்போ என்ன பயம் அதான் கேட்கலை " .

தனது மகள் தன் மீது இருக்கும் நம்பிக்கையை இப்படியே வைத்திருக்க வேண்டும் என்றும் மாறக்கூடாது என்று தவித்தது அந்த தாயுள்ளம் ."மதிமா நான் எது செஞ்சாலும் உன் நலத்துக்காக தான் ...இதை எப்பவும் நீ நம்பனும் எனக்கு இந்த கல்யாண உறவை என்றும் நீ முறித்துக்கொள்ளும் முடிவிற்கு வரமாட்டாய் என்று சத்தியம் செய்து கொடு "

அம்மா ஏதோ பயத்தில் கேக்கிறார் என்று எண்ணிய மகள் யோசியாமல் சத்தியம் செய்தாள் . பிறகு அனைத்தும் விரைவாக நடந்தது மாலை திருமண வரவேற்பிற்காக அனைவரும் மண்டபம் வந்தடைந்தனர் . அகிலம் கல்யாணத்திற்கு பிறகு தன்னுடன் இருக்க வேண்டும் என்று மதியும் விரும்பினாள் , அவர் இருந்தால் மதி தெம்பாக இருப்பாள் என்று கௌஷிக்கும் நம்பினான் .

ஆனால் அகிலமோ இருவரிடமும் "இல்லை அது சரி வராது .. மதி என்னதான் பக்கத்திலிருந்தாலும் தாய் வீடு என்று வந்து அமர , கவலைகளை இறக்கி வைக்க , இளைப்பாற ஒரு இடம் தேவை ஆகையால் நான் இங்கு இருந்துகொள்கிறேன் மாதம் வங்கியில் இருக்கும் பணத்தின் மூலம் வரும் வருமானமே போதுமானது " என்று முடிவாக கூறிவிட்டார் .

************************************************************
அத்தியாயம்-21

மாலை வரவேற்பிக்காக அனைவரும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர் . கௌஷிக் மற்றும் சர்கேஷ் முதலில் மேடை ஏறி நின்றனர் . கண்களில் கனவுடன் கௌசல்யாவும் , வெறுமையான பார்வையை எங்கோ பதித்து மதியும் மேடை ஏறினர் .

கௌஷிகின் பார்வை மதியை தவிர்த்து வேறு எங்கும் செல்லவில்லை . அவள் மனதில் இருக்கும் வெறுமையை அவள் முகம் காட்டுவதை உணர்ந்தான் . தாயின் மகிழ்ச்சிக்காக மட்டுமே கலயாணத்திற்கு சம்மதம் சொல்லி இவ்ளோ தூரம் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான் , அவள் மனதை மாற்றி இந்த வாழ்வில் பிடிப்புடன் இருக்க வைப்பது தனக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதை நன்கு உணர்ந்தான் அவன் .

வேறு எங்கோ பார்த்துக்கொண்டு வந்த மதியை இனியா அழைத்து வந்து கௌஷிக்கின் அருகினில் நிறுத்தி வைத்தாள் . சற்று நேரம் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவள் தன்னை அருகினில் இருக்கும் நபர் உற்று பார்ப்பதை போன்ற உணர்வு தோன்றவும் சற்றே தலையை திருப்பி நிமிர்ந்து பார்த்தாள் .

பார்த்தவுடன் ஒரு நொடி சாதாரணமாக முகத்தை வைத்தவள் சட்டென்று மின்னல் வெட்டியதை போன்ற ஒரு முகம் மனதில் மின்னி மறையவும் கண்களை அகலவிரித்து அவனை உற்று நோக்கினாள் .

அவளின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கிக்கொண்டே வந்தவன் தன்னை அவள் கண்டுகொண்டாள் என்பதை உணர்ந்தவுடன் கண்களில் மன்னிப்பை யாசித்து நின்றான் .

அகல விரித்த அவள் பார்வை கோபமாக மாறியது . ரத்தமென சிவந்து கோபத்தில் கண்கள் திஜுவாலையை போன்று கௌஷிக்கை எரித்தன .

கீழிருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த அகிலத்தின் கண்களிலும் ,மனதிலும் பயம் வந்து அமர்ந்து கலக்கத்தை ஏற்படுத்தியது .

மதியின் கைகள் கோபத்தில் நடுங்கி மாலையை கழற்ற முனைந்தது . என்ன தோன்றியதோ தனது பார்வையை திருப்பி அகிலத்தை கண்டாள் . அவர் மனதில் இருந்த பயம் முழுதும் அவரின் முகத்தினில் தென்பட்டது .

அப்பொழுதுதான் ஒன்றை கவனித்தாள் அவள் , சிஸ்டர் நிர்மலா அவர்கள் அவளின் அன்னையின் அருகினில் அமர்ந்து அவரின் கைகளை ஆறுதலாக பற்றி தன்னை தீர்க்கமாக பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள் . அவரின் பார்வை அவளுக்கு உணர்த்திய மறைமுக செய்தியை கண்டு சற்றே தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தவள் பார்வையை சர்கேஷின் பக்கம் திருப்பினாள் .

இத்துணை நேரம் மதியை பார்த்துக்கொண்டிருந்தவன் மதி திரும்புவதை உணர்ந்து தனது டாலியுடன் கடலை போடுவதை போல் நடித்தான் . அவன் முகத்தினில் தெரிந்த கள்ளத்தனம் மதிக்கு அனைத்தையும் சொல்லியது .

ஆரஞ்சு வண்ண பட்டுடுத்தி தேவதை போல் தனக்கு அருகினில் நிற்பவளை ரசிப்பதா ? இல்லை அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் குழம்புவதா என்ற புரியாத நிலையில் நின்றான் கௌஷிக் .

வான்மதி நொடியினில் அனைத்தையும் யூகித்தாள் , கௌசல்யா கௌஷிக் கே கே இண்டஸ்ட்ரீஸின் பெயர் காரணம் விளங்கியது . சர்கேஷ், அம்மா ,சிஸ்டர் நிர்மலா அனைவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதை நன்கு உணர்ந்தாள் . மேலும் எங்கே பெயர் தெரிந்தால் ஏதேனும் யூகித்து விடுவேன் என்று தனக்கு எதையும் தெரியாமல் பார்த்துக்கொண்டதை கண பொழிதில் கண்டுகொண்டாள் .

அவளின் மொத்த கோபமும் கௌஷிக்கின் பக்கம் திரும்பியது . "ஆம் சாரி " சரியாக அவனும் அவள் மனதை படித்ததை போன்று குனிந்து கூறினான் . சட்டென்று திரும்பி அவனை எரிக்கும் பார்வை பார்த்தாள் பாவை அவள் .

இதன் இடையில் வரிசையாக விருந்தினர்கள் மேடை ஏற துவங்கினர் . மதியால் சாதாரணமாக இருப்பதை போன்று நடிக்க கூட முடியவில்லை . அவளின் கோபம் , தவிப்பு , ஆத்திரம் எதையும் உணராத மக்கள் நேராக ஸ்ருதியிடம் சென்று "ஏன் ஸ்ருதி நல்ல இடத்தில பெண் எடுத்திருக்க கூடாதா , பாரு சிரிக்க காசு கேட்பா போல ......ஹ்ம்ம் உன்பாடு கஷ்டம் தான் " என்று வத்தி வைத்தனர் .

நேராக சரவணனிடம் சென்ற ஸ்ருதி "ஏங்க எப்படி கௌஷிக் இப்படி ஒரு பெண்ணை விரும்பினான் சிரிக்க கூட மாட்டின்றாள் , எப்ப பாரு கடுகடுன்னு முகத்தை வச்சிக்கிட்டு " என்றார் .

தனது மனைவியை கண்ட சரவணன் லேசாக புன்னகைத்து "என்ன லேசாக மாமியார் குணம் தலை தூக்குது போல "

"ஐயோ இல்லைங்க யாரா இருந்தாலும் சிரிக்கலைனா அதும் இப்படியான ஒரு நாளில் என்ன தோணும் பிடிக்காமல் கட்டி வைக்கிறாங்க அப்படினு நினைச்சுப்பாங்கள "

"ஸ்ருதி உன் மகன் முகத்தில் இருப்பதை பார்த்தியா , ஏதோ தவறு செய்த கௌஷிக் நம்மிடம் மன்னிப்பை வேண்டும் பாவனையில் நிற்பதை போன்று தோன்றவில்லை ....நிச்சயம் உன் மகன் ஏதோ வில்லங்கமா செஞ்சிருக்கான் அதான் அந்த பெண்ணின் கோபத்தின் முன் மன்னிப்பை வேண்டி நிற்கிறான் "

"அதென்ன என் மகன் , அப்ப உங்களுக்கு அவன் யாராம் ?"

"அடியே என் செல்ல பொண்டாட்டி நம் மகன் தான் இவ்ளோ சொன்னேன் சரியா எத மட்டும் நோட் பண்ற பார்த்தியா "

"அய்ய ரெண்டு பசங்களுக்கும் கல்யாணம் நடக்க போகுது இவர் இன்னும் என்னை கொஞ்சுறார் ...போவீங்களா " என்று கூறி நகர்ந்து சென்றார் ஸ்ருதி .

"இவளா வந்தா , ஏதோ சொன்னா அதுக்கு விளக்கம் கொடுத்தேன் இப்ப எண்ணெயே கழுவி ஊத்திட்டு போறா ....ஆண்டவா நல்லதுக்கே காலம் இல்லை " என்று புலம்பிக்கொண்டே பெருமூச்சுடன் அடுத்தவேலையை காண சென்றார் சரவணன் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top