JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-20,21

saaral

Well-known member
அத்தியாயம் - 20

மறுநாள் அனைவரும் நகை கடைக்கு சென்றனர் ...

வர மறுத்த சஹானாவை , மிருதுளா அலைபேசியின் வாயிலாக கட்டாயப் படுத்தி வரவைத்திருந்தாள் .

"இதோ பார் சஹானா நீ வரலைனா எனக்கு எந்த நகையும் தேவை இல்லை " மிருதுளா இவ்வாறு சொன்ன பின் மறுக்க முடியாமல் வந்திருந்தாள் .

இன்றும் அவன் , ஆனால் அவள் மனதில் ஒரு ஆறுதல் சதீஷ் வரவில்லை . வரவிடாமல் செய்திருந்தாள் சஹானா .

பிரவீனின் பார்வை என்ன கூறியது ...? அவன் வாய் திறவாமல் எவரும் அறிய முடியாது .

சாரதாவும் , சஹானாவின் வருகை பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டிருந்தார் . ஆனால் அதை எவரும் கண்டுகொள்வது போல் இல்லை .

மிருதுளாவின் இதர நகைகள் தேர்வு செய்யப்பட்டது . அனைவரும் இப்பொழுது தாலிக்கொடியை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இருந்தனர் .

இருவீட்டாரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தமையால் அதில் எந்த குழப்பமும் எழவில்லை .

சஹானா ஒரு அழகான தாலிக்கொடியை தேர்தெடுத்து சௌம்யாவிடம் கொடுத்தாள் .

"பெரியம்மா இது நல்லா இருக்குல்ல ....மயில் டிசைன் எல்லாம் வச்சு அழகா இருக்கு "என்றாள் .

சௌம்யாவும் "ஆமாம் டா சஹா ...ரொம்ப அழகா இருக்கு , இரு நான் போய் மிருது கிட்ட காட்டிட்டு பிடிச்சிருக்கானு கேக்கறேன் " என்று கூறி நகர்ந்தார் .

அப்பொழுது சஹானாவின் அலைபேசியும் அவளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டது .

நடந்துகொண்டே பேசியவள் கடையின் வாயில் பகுதிக்கே வந்துவிட்டாள் . வரவேற்பில் சில இருக்கைகள் இருந்தன . அதில் அமர்ந்து தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள் .

"என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது எனக்கு மார்க்கெட்ல பிஎஸ்எம் இன்போடெக்ன்னு ஒரு பெயர் இருக்கவே கூடாது ..." தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள் ...அவ்ளோதான் தனது வாய்க்கு பூட்டை மாட்டிக்கொண்டு அலைபேசியை அனைத்தாள் .

பிரவீன் சஹானா தனிமையில் செல்வதை கண்டு , அவளின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை எண்ணி பின்னோடு வந்தான் .வந்தவன் இறுதியாக கேட்ட வார்த்தைகளில் கொந்தளித்தான் .....

கண்கள் சிவக்க அவள் முன் கையை கட்டி நின்று கொண்டிருந்தவன் "சோ இந்த ப்ராஜெக்ட் போனதுக்கும் நீதான் காரணம் ?" அம்பென கேள்வியை தொடுத்தான் .

தோள்களை குலுக்கி ஒற்றை புருவத்தை எள்ளலாக தூக்கி "இருக்கலாம் " திமிராக பதில் சொன்னாள் .

"உன்னை அப்படியே அடிச்சு நொறுக்கணும் போல இருக்கு ....சஹானா எதுவாக இருந்தாலும் நேரா நின்னு மோதிப் பார்க்கணும் , இப்படி முதுகுல குத்தினது நல்லா இல்லை ....என் தொழில் விஷயத்தில் சீண்டி பார்க்காத " கர்ஜித்தான் அவன் .

"இப்பயும் சொல்றேன் அந்த கன்செர்ன் உங்க தம்பியோடது ...அவனின் கனவு ...அதை சின்னா பின்னமாக்குவதில் எந்த வருத்தமும் எனக்கில்லை ....உங்க பிசினெஸ்ல நான் நடுவில வரலை இதுல நீங்களும் வரக்கூடாது " படபடவென பொரிந்தவள் மேலும் தொடர்ந்தாள் ...

"அண்ட் லுக் முதுகுல குத்துறது பற்றி உங்க தம்பிக்காக நீங்க பேசக்கூடாது ...அவனோட துரோகத்தால் எத்தனை உயிர் தவிச்சது அப்படினு தெரிஞ்சா உங்க குடும்பத்துல சிலர் கம்பி எண்ணிட்டு இருப்பாங்க "கோபத்துடன் முடித்தாள் .

"அதுக்குன்னு எங்க கம்பெனில வேலை பார்த்து டேட்டா தெப்ட் மூலமா இப்படி முதுகுல குத்துறது பிசினஸ் எதிக்ஸ் இல்லை "

"நான் உங்க கம்பெனில வேலை பார்க்க வரவில்லை ...அதே நேரம் கிடைச்ச வாய்ப்பை வேற விதமா யூஸ் பண்ணனும்னு நினச்சேன் ...எல்லாம் இந்த ஸ்ரீதர் அண்ணாவால் வந்துச்சு ...அவன் தான் என் மயின்ட் செட்டை மாத்தினான் " எளிமையாக பதில் தந்தாள் .

அவன் தான் அவளின் பதிலில் பல்லைக்கடிதான் .

"சஹானா , சதீஷ் அப்பறம் அப்பா பண்ணது தப்பு ...அதுக்காக இப்படி வேண்டாம் நேரா நின்னு போட்டி போட்டு மோது " கண்களை மூடித்திறந்து பொறுமையாகவே சொன்னான் .

"ஒஹ் தப்புனு சொல்லிட்டா போதுமா ... அவங்க செஞ்ச தப்புக்கு தண்டனை ?" புருவத்தை தூக்கி கேள்வியாக நிறுத்தினாள் .

அவனின் பதில் அவளிற்கு கிடைப்பதற்குள் , அவளின் பெரியம்மாவின் அழைப்பு அவளை வந்து சேர்ந்தது .

சில எட்டுக்கள் எடுத்து வைத்தவள் அவனின் குரலில் தேங்கினாள் "நாளைக்கு காலைல எட்டு மணிக்கு வடபழனி முருகன் கோவிலுக்கு வந்திரு " இருவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்ததோ ? ...

ஆனால் இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை , அதே நேரம் உணர்ந்தார்கள் .

உள்ளே வந்த சஹானா பெரியம்மாவிடம் சென்று "என்ன பெரியம்மா நான் செலக்ட் செஞ்ச செயின் தான் எடுத்தீங்களா ?" ஆசையாக கேட்டாள் .

"இல்லை சஹானா மிருதுவுக்கும் , ஸ்ரீதருக்கும் வேற பிடிச்சிருக்கு ...."

"ஒஹ் சரி பெரியம்மா " அவளின் குரலில் சுருதி குறைந்திருந்தது .

மகளின் மிரட்டலில் அமைதி காத்த சாராதாவால் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை "என் மகளுக்கு பிடிச்சதை தான மாப்பிள்ளை எடுப்பார் " முகத்தை நொடித்துக்கொண்டார் .

"பெரியம்மா குரு வரான் நான் கிளம்பறேன் ...நீங்க பார்த்துக்கோங்க ...அண்ட் எல்லா நகைக்கும் நான் பணம் செட்டில் பண்ணிட்டேன் " சற்றே அழுத்தமாக கூறி நகர்ந்தாள் .

வெளியே வாகனத்தின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தான் பிரவீன் .

"ப்ச் உங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு என் பின்னாடியே வரீங்க " சற்றே நெகிழ்ச்சியுடன் அலுத்துக்கொண்டாள் .

வரவேற்பில் அவளிடம் பேசிவிட்டு அங்கேயே நின்றிருந்தவன் அவளின் இந்த செல்லமான அலுப்பில் லேசாக புன்னகைத்து "எனக்கு வேற வேலை நிறையா இருக்குமா ....நானும் ஆபீஸ் போக தான் வெயிட் பன்னிட்டு இருக்கேன் ."

"ஓஹ் " என்று ராகம் இழுத்தாள் .

"சஹானா , பிஎஸ்எம் வந்திடு ...சுபத்ரா குரூப்ஸ் உனக்கு குடுக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமா தரேன் ...அதெல்லாம் எதுக்கு என் அனைத்தும் " அவனின் கூற்றை கோபப் பார்வையில் தடுத்தவள் தொடர்த்தாள் ..

"லுக் மிஸ்டர் பிரவீன் என்கிட்ட பிசினஸ் பேசாதீங்க ...நான் என்ன செய்றேனு எனக்கு தெரியும் ...பை " அழுத்தமான நடையுடன் வாகனத்தில் ஏறிப் பறந்தாள் .

............................................................

அடுத்தநாள் காலை எட்டு மணி ....

அந்த முருகனிடம் கண்களை மூடி என்ன வேண்டிக்கொண்டிருப்பாள் சஹானா ...?(அழுத்தக்காரி எதையும் காட்டிக்கொள்ளமாட்டாள் )

அவளின் மனம் அவனின் வருகைக்காக அலைபாய்ந்துகொண்டிருந்தது .

முருகனை தரிசித்தவள் கண்களை திறந்து எதிரில் நிற்பவனை பார்த்து அதிர்ந்தாள் .

அவள் எதிர்பார்த்தது அவளவனை , ஆனால் எதிரில் நின்றவன் சதீஷ் .

சதீஷ் அவளை நெருங்கி "அம்மு நான் செஞ்சது தப்பு தான் " என்று மன்னிப்பு வேண்ட தொடங்கினான் .

அவளோ பதில் ஏதும் சொல்லாமல் எரிக்கும் பார்வையினால் அவனை பஸ்பம் ஆக்க முடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்தாள் .

"அம்மு என்னை மன்னிச்சுடு , என் கம்பெனியை மொத்தமா காலி செஞ்சுட்ட நான் எந்த எதிர்வினையும் காட்டலை ..இன்னும் கோபம் இருந்தாலும் என்னை தண்டிச்சிரு , ஆனால் என்னை தெரியாத மாதிரியே போகாத வலிக்குது " தனது நெஞ்சின் மீது கை வைத்து வலியை அவளிற்கு கடத்த முயற்சி செய்துகொண்டிருந்தான் .

"லுக் மிஸ்டர் சதீஷ் இப்ப நீங்க வழிய விடலைனா நான் போலீசை கூப்பிட வேண்டி வரும் ....முன் போல் நீங்க தப்பிக்க முடியாது " என்று நேராக நின்று மிரட்டினாள் சஹானா .

"அம்மு இதுக்கு மேல நான் அமைதியா இருந்தேனா உன்னைய தொலைச்சுடுவேன் " அழுத்தமாக அவளின் கண்களை பார்த்து கூறிக்கொண்டே தனது சட்டை பையில் இருந்து மாங்கல்யத்தை எடுத்து முன் நீட்டினான் .

சஹானாவின் கண்கள் அகல விரிந்தன ........!! அவள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து நின்றிருந்தாள் .

"அம்மு " என்று அவன் நெருங்கும் சமயம் அவள் அசைவற்று வெறித்த பார்வையுடன் உறைந்து போய் நின்றிருந்தாள் .

.......................................................................................

அத்தியாயம் - 21

இதோ இதோ என்று ஸ்ரீதர் மற்றும் மிருதுளாவின் திருமண நாளும் நெருங்கியது .

நாளை காலை திருமணம் என்ற நிலையில், மேடையில் வரவேற்பு நிகழ்ச்சியின் கதாநாயகனும் , கதாநாயகியும் அங்கு சர்வ அலங்காரத்துடன் , கண்களில் கனவுடன் நின்றிருந்தனர் .

அங்கு இருவீட்டாரும் பம்பரமாக சுழன்று திருமண வேலைகளை செய்துகொண்டிருந்தனர் . இருவரை தவிர்த்து .

அந்த இருவர் சதிஷ் மற்றும் சஹானா . இருவருமே தலையில் இடிவிழுந்தது போல் எதிலும் கலந்துகொள்ளாமல் ஆளிற்கு ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தனர் .

மேடையில் நின்றிருந்த மிருதுளா தனது தோழியின் இடிந்த நிலை கண்டு தமையனை அழைத்தாள் . மிருதுளாவின் அழைப்பிற்கு மேடை ஏறி அருகில் வந்தான் பிரவீன் .

"சொல்லு மிருது எதுக்கு கூப்பிட்டு விட்ட , ஏதாச்சும் வேணுமா " போர்மல் உடையில் நேர்த்தியாக இருந்தான் பிரவீன் . கீழே அமர்ந்து இருந்த சஹானா பிரவீனை பார்வையிலே எரித்துவிடும் அளவு கோபத்துடன் முறைத்துக்கொண்டிருந்தாள் .

"என்ன பிரவீன் , இன்னும் பஸ்பமாகாம ஸ்டெடியா இருக்கீங்க " நக்களுடன் கேட்டான் ஸ்ரீதர் .

ஸ்ரீதருக்கு ஒரு முறுவலை தந்துவிட்டு தனது தங்கையின் பக்கம் திரும்பினான் பிரவீன் "சொல்லு மா"

"அண்ணா ஏன் சஹானா அமைதியா இருக்கா ...அதுவும் ஓரமா உக்கார்ந்திருக்கா ...நீங்க யாரும் கண்டுக்க மாட்டேன்றீங்க " கவலையுடன் கேட்டாள் மிருதுளா .

"அது ஒன்னும் இல்லை மிருது விடு எல்லாம் பிரவீன் பார்த்துப்பார் அவ சரி ஆகிடுவா " என்று பதில் தந்தது ஸ்ரீதர் .

"என்னங்க நடக்குது இங்க , உங்களுக்கும் என்னனு தெரியுமா அப்பறம் ஏன் சும்மா இருக்கீங்க ...அத்தை கூட கண்டுக்கலையே "

"ஸ்ரீதர் தான் சொல்றார் இல்லையா மிருதுளா , நீ இங்க கவனத்தை வை அவளை நான் பார்த்துகிறேன் ...எல்லாத்துக்கும் நாளைக்கு முடிவு தெரிஞ்சிரும் " விஷம புன்னகையுடன் சொன்னான் பிரவீன் .

அண்ணனின் கண்களில் கண்ட காதலும் , நம்பிக்கையும் மிருதுளாவின் கேள்விக்கணைகளுக்கு அணை போட்டது .

..............................................

அடுத்தநாள் பொழுது அனைவர்க்கும் நன்றாக விடிந்தது .

தயாளன் மற்றும் சுபத்ரா தம்பதியினர் முன் நின்று அனைத்து வேலைகளையும் மணமகன் வீட்டின் சார்பாக பார்த்துக்கொண்டனர் . சௌம்யா அவர்களோ எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கவனித்துக்கொண்டிருந்தார் .

பெண் வீட்டின் சார்பில் சாரதாவும் , பிரவீன் மட்டுமே முனைப்பாக ..சந்தோசமாக சுற்றி வந்தனர் . விஸ்வம் அவர்களின் முகத்தில் ஒரு வித பயம் தென்பட்டது .

சதீஷ் இன்னும் அதே நிலையில் தான் இருந்தான் .

விஸ்வத்தின் மனதில் வன்மம் கூடிப்போய் இருந்தது , சஹானா திட்டம் தீட்டி பிஎஸ்எம் மென்பொருள் நிறுவனத்தை மொத்தமாக அழித்துவிட்டாள் என்று கோபம் கொண்டிருந்தார் . ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாமல் சதீஷ் தவித்தான் . முதலில் முன் வந்து தன் வியாபாரத்தில் இருந்து பணத்தை போட்டு நிறுவனத்தை மீட்டுக்கொண்டு வர முயற்சி செய்த ப்ரவீனும் கைவிரித்துவிட்டான் .

இப்பொழுதும் அவன் உதவி செய்ய தயார் தான் ஆனால் அவன் கேட்கும் கேள்விகளுக்கு சதீஷாலும் , விசுவதாலும் பதில் சொல்ல முடியவில்லை .

என்று வேண்டுமானாலும் பிஎஸ்எம் மென்பொருள் நிறுவனம் வங்கியால் சீல் வைக்கப்படும் நிலைமை . என்னதான் விவசாயத்தின் வாயிலாக பிரவீன் கோடி கோடியாக சம்பாதித்து தந்தாலும் தலைநகரில் மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் என்று சொல்லிக்கொள்வதில் விஸ்வம் மற்றும் சாரதாவிற்கு அப்படி ஒரு பெருமை .

சத்யா அங்கு மனதில் வேட்டையாடும் வஞ்சத்துடன் மிருதுளாவின் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தார் .

............................

சஹானா இறுக்கமான முகத்துடன் பிரவீன் வாங்கி தந்திருந்த புடவையில், பச்சை நிற புடவையை எடுத்துக்கட்டிக்கொண்டு மிதமான ஒப்பனையுடன் , அளவான நகைகள் அணிந்து தயாராகினாள் .

மெத்தையின் மேல் அவள் கட்டியிருந்தது போல் அதே பச்சை நிற புடவை இருந்தது .

அந்த புடவையை பார்த்து பெருமூச்செறிந்த சஹானா "லீலா " என்றழைத்தாள் .

வேகமாக உள்ளே வந்தார் லீலா .....

"லீலா, கீர்த்தனா அம்மாவையும் ,அவளையும் தயார்செஞ்சு மண்டபத்துக்கு கூட்டிட்டு வாங்க ...என்னோட கார் இங்க தான் இருக்கும் குரு இருப்பான் " என்றாள் .

'சரி' என்று தலையாட்டி லீலா நகர்ந்த சமயம் அவரை நிறுத்தி "லீலா இதை அவளுக்கு கட்டிவிடுங்க ....அம்மாக்கு புடவை நான் கொடுத்துட்டேன் ...அப்பறம் ரெண்டு பேருக்கும் நகை எல்லாம் அவங்க ட்ரெஸிங் டேபிள் மேல வச்சிருக்கேன் ...பார்த்து கூட்டிட்டு வாங்க " என்று முடித்தாள் .

"சரிமா ...நீ கிளம்பு எனக்கு தெரியாதா ....நான் பத்திரமா கூட்டிட்டு வந்துருவேன் ....அம்மாவும் , பாப்பாவும் இப்ப எவ்வளவோ பரவா இல்லை நான் பார்த்துகிறேன் " என்று கூறி நகர்ந்தார் லீலா .

..........................................

தனது அறையில் தயாராகி வெளியே வந்த சஹானாவை எதிர்கொண்டான் குரு ....

"சஹானா நானும் வரேன் ...சேர்ந்தே போகலாம் " என்றான் .

"இல்லை குரு இப்ப என்னை விட உன் துணை அவங்களுக்கு தான் தேவை அவங்களோடவே வா ...." குருவை தவிர்த்தாள் சஹானா .

"சஹானா சொன்னா கேளு அந்த சத்யா எதோ பிளான் போட்ருக்கான் நான் கேள்விப்பட்டவரை நீ தனியா போறது அவ்ளோ சேப் இல்லை " குரு பதறினான் .

"குரு நான் சொல்லறதை நீ கேளு நான் அந்த கார்லா கிளம்பறேன் ....அவங்களை என் கார்லா பத்திரமா கூட்டிட்டு வா " ஆணை பிறப்பித்து கிளம்பினாள் சஹானா .

குரு ஒன்றும் செய்ய இயலாமல் தனது அலைபேசியை எடுத்து தகவல் சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிட்டான் .

எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது அந்த ஒரு தகவல் வரும் வரை .....

அந்த தகவல் "சஹானாவை கடத்திவிட்டார்கள் " என்பதே !!







no_photo.png
ReplyForward




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top