JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-22,23

saaral

Well-known member
அத்தியாயம்-22

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைத்து விருந்தினர்களும் களைந்து சென்றனர் . மணமக்களை உண்பதற்காக அழைக்க வந்த ஸ்ருதியிடம் "எனக்கு பசி இல்லை நான் என் ரூமிற்கு போறேன் " என்று கூறி வேகமாக சென்றுவிட்டாள் மதி

ஸ்ருதிக்கோ மனது குமைந்தது 'என்ன இந்த பெண் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு போறா ' என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அதில் இன்னும் தூபம் போடுவது போல் கௌஷிக்கும் "அம்மா எனக்கும் பசி இல்லை .தொந்திரவு செய்யாதீர்கள் " என்று கூறி சென்றது மேலும் ஸ்ருதிக்கு கடுப்பை கிளப்பியது . எல்லாம் இந்த பெண்ணால் 'என்ன காதலோ ' தான் காதலித்து அதில் இருக்கும் சுக துக்கத்தை எதிர்நோக்கி வந்தவர் என்பதை மாமியாரின் இடத்தில் இருந்து தெளிவாக மறந்தார் .

மீதமுள்ள அனைவரும் ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்துவிட்டு அவரவர் அறையினுள் சென்று முடங்கினர் .

வான்மதி தனிமையை நாடி அந்த மண்டபத்தின் மாடிக்கு சென்றாள் . அவளை எதிர்கொள்ள அகிலம் , சர்கேஷ் என்று அனைவரும் தயங்கினர் . மதி மாடியில் போடப்பட்டிருந்த கல்மேடையில் அமர்ந்து நட்சத்திரங்களை வெறித்தாள் .

சிறு வயதில் தங்களின் மூதாதையர்கள் நட்சத்திரமாக நின்று நமக்கு ஆசீர்வதிப்பார்கள் என்று அவளின் தந்தை லிங்கம் சொன்னது அவளின் மனதில் ஆழமாக பதிந்தது .ஏதேனும் மன சோர்வு ஏற்பட்டால் நட்சத்திரங்களிடம் மனதினுள் முறையிடுவாள் . தனது தந்தை நட்சத்திரமாக தன்னை பார்த்து கொண்டிருப்பதை போன்று உணர்வு கிட்டும் வான்மதிக்கு .

இன்று அவள் மனதில் எண்ணற்ற கேள்விகள் , அதற்கான விடையை தேடும் தயிரியம் நிச்சயம் அவளிடம் இல்லை . யாரிடம் இதற்கான விளக்கத்தை கேப்பாள் , தனது அன்னை அனைத்தும் தெரிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்தாள் .

என்னதான் குழந்தை போன்ற மனமுடையவர் என்றாலும் அவரின் பிடிவாதத்தை அவள் அறிவாள் . தந்தை மதியின் சிறு வயதில் தாயின் சொல்லை கேட்காமல் வெளியூர் சென்ற ஒரே காரணத்திற்காக பல நாள் கணக்கில் சாப்பிடாமல் அதை தெளிவாக அவரிடம் இருந்து மறைத்து தன்னையே வருத்தி கொண்டார் அகிலம் .

இறுதியாக பத்து நாட்கள் களித்து சோர்வுற்ற நிலையில் அவர் மயக்கமடைந்தவுடன் மருத்துவமனையில் சேர்த்தார் லிங்கம் . அப்பொழுதுதான் அகிலம் பத்து நாட்களாக எதையும் உண்ணாமல் இருப்பது தெரிந்தது . அவர் மயக்கமாகி விழும் சமயம் வீட்டில் இருந்த மேஜையின் முனை வயிற்றில் மோதி அவர் இரண்டாம் முறையாக கருவுற்ற அந்த ஐம்பது நாட்களே ஆன சிசு கலைந்ததை அறிந்தனர் .

லிங்கம் அகிலத்திடம் சென்று "ஏன்மா இப்படி பண்ண ?" என்று கண்ணீருடன் கேட்டார் .

அதற்கு அகிலமோ "என் அண்ணன் உங்களை மதிக்கலைனு தான் நானே அவனிடம் பேசவில்லை , நான் எவ்ளோ சொல்லியும் சொந்தம் விட்டுப்போகக்கூடாதுனு போய் அசிங்கப்பட்டு வந்திங்க மனசு கேட்கலை கோபம் அதான் .....ஆனால்
ஆனால் ...நம்ம குழந்தை ...இப்படி சத்தியமாக எனக்கு தெரியாதுங்க " தேம்பி தேம்பி அழுதுகொண்டே சொன்னார் பின்னாளில் அதே அண்ணன் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டியவுடன் மன்னித்தவர் கணவனின் மரியாதையை காப்பாற்ற என்றுமே தவறியது இல்லை .

"எனக்கு நீ திரும்ப கிடைச்சதே போதும்மா ...மதியை பற்றி யோசிச்சியா ...இனி உன் சொல்லை மீறி ஏதும் செய்யமாட்டேன் ...எங்களுக்கு நீ ரொம்ப முக்கியம் அகிலம் " காதலின் தவிப்புடன் கூறினார் லிங்கம் . அதன் பிறகு அதை கடைபிடிக்கவும் செய்தார் . அவர் சொல்லாமல் மறைத்த விஷயம் மதியின் வாழ்வில் நடந்த அலங்கோலங்கள் . அதை சொல்லமுடியாமல் தவித்ததாலேயே தன்னுடைய உயிரை நீத்தார் அந்த அன்பான கணவன் .

கண்களில் கோடாக கண்ணீர் இறங்குவதை கூட உணராமல் வானத்தையே வெறித்துக்கொண்டிருந்தாள் மதி . அவள் வானத்தை பார்த்துக்கொண்டிருந்தால் அவளவனோ அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் .

அவள் எதிரில் சென்று நின்று பேசும் துணிவு அவனிற்கு சுத்தமாக இல்லை . அவள் வருத்தப்படுவதை காண முடியாமல் கௌஷிக் சென்று சிஸ்ட்டரை அழைத்து வந்தான் .

தன்னிடம் வந்து பேச முயன்ற கௌஷிக்கை பார்த்து சிஸ்டர் அவர்கள் "கௌஷிக் , வான்மதி எங்க பா ....நான் இன்றே கிளம்ப வேண்டும் ...அவளை தான் தேடிட்டு இருக்கேன் "

"என்ன நீங்க கிளம்பறீங்களா ! நீங்க இருந்தா மதி தெம்பாக இருப்பாள் என்று எண்ணினேன் சிஸ்டர் " அவனின் குரலில் ஒரு ஆற்றாமை கலந்த அதிர்ச்சி .

புன்னகைத்துக்கொண்டே "வான்மதி தயிரியமான பெண் ....யாரும் அவளை பத்தி கவலை படவேண்டாம் ...இப்பொழுது அவளிற்கு இருப்பது ஆரம்பகட்ட அதிர்ச்சி ...நாட்கள் போக போக அவள் இதை ஏற்றுக்கொள்வாள் .....ஆனால் அவளை மனம் மாறி சந்தோஷமாக வாழவைப்பது உன் திறமை கௌஷிக் " என்றார் .

"அவளின் சந்தோசத்தை எவ்வாறேனும் மீட்டெடுக்கவே அவளின் கரம் பற்ற எண்ணி உங்கள் முன் வந்தேன் சிஸ்டர் .....அது இன்றளவும் மாறவில்லை ....இப்பொழுது மதி மாடியில் தனியாக அழுதுகொண்டிருக்கிறாள் " வருத்தமாக கூறினான் .

"நான் பார்த்துக்கொள்கிறேன் ...." என்று மதியை காண சென்றுவிட்டார் சிஸ்டர் நிர்மலா .

"மதி ஏன் இங்கு தனியாக உக்காந்திருக்கிறாய்" கேள்வியுடன் அவளருகில் அமர்ந்தார் சிஸ்டர் .

"நீங்களும் இதற்கு உடந்தையா சிஸ்டர் " கண்களில் நிரம்பிய வலியுடன் கேட்டாள் அவள் .

"உனக்கு தீங்கு நடக்க நான் நினைப்பேனா , இல்லை அகிலம் தான் நினைப்பாரா ?"

......... அவளிடம் அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது .

"ஒருவர் மனம் திருந்தி மன்னிப்பை யாசித்து நிற்கும் பொழுது அவரை மன்னிப்பவன் உண்மையான மனிதன் ....மை சைல்ட் உன் வாழ்வில் திருமணம் என்பது நடக்கவேண்டும் என்பதில் அகிலம் உறுதியாக இருக்கிறார் ....மிகவும் யோசித்தே உனது அன்னையாக இந்த முடிவை எடுத்திருப்பார் ...குழம்பாமல் நான் பார்த்த இருபத்தியோரு வயது அப்பவே எதார்த்தத்தை புரிந்து கொண்டு என்னிடம் வந்த அதே வான்மதியாக நின்று யோசி ....நான் இன்னைக்கு கிளம்ப வேண்டிய கட்டாயம் ....என்னைக்கும் உனக்கான வேண்டுதல் அந்த ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டே இருப்பேன் ....காட் ப்ளேஸ் யூ மை சைல்ட் " பொறுமையாக எடுத்து கூறி வான்மதியை ஆசிர்வதித்து விட்டுச்சென்றார் அவர் .

சிஸ்டர் வந்து பேசியதில் சற்றே தெளிவடைந்து வான்மதி வருவதை எதிர்கொள்ள முயற்சிப்போம் என்ற முடிவுடன் தனது அறைக்கு சென்றாள் . ஆனால் மனதில் தோன்றிய வலியால் தன்னை நெருங்க முயற்சித்த அகிலத்தையும் , சர்கேஷயும் ஒரு அந்நிய பார்வையில் தள்ளி நிறுத்தினாள் .

*******************************************
அத்தியாயம்-23

திருமணம் இனிதே முடிந்தது . சர்கேஷ் மற்றும் கௌசல்யா கண்களில் காதலுடன் கனவுடனும் தங்கள் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்கினர் . இந்தப்பக்கம் கௌஷிக் தன்னவளின் கடைக்கண் பார்வைக்காக காத்துகொண்டு இருக்கையில் வான்மதியோ அவனின் பக்கம் தனது பார்வையை இம்மி அளவும் திருப்பாமல் கடைமைக்கே என்று அனைத்து சடங்குகளையும் செய்தாள் .

கௌஷிக் தன்னவளை இமைக்காமல் பார்த்தான் . வான்மதியோ பார்வையை எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் . ஒரு பெருமூச்சுடன் ஆழ்ந்த பார்வையை அவள் மீது பதித்து மங்கலநாணை அவள் கழுத்தில் பூட்டினான் . தனது கழுத்தில் ஏறிய மாங்கல்யத்தை சுருக்கு கயிறாக நினைத்து கண்களில் இருந்து வழிந்த கண்ணீருடன் கண்களை இறுக மூடினாள் .

இங்கு நடப்பவை எவர் கண்ணிலும் கருத்திலும் பதியவில்லை என்றாலும் அவர்களை பெற்றவர்கள் கண்ணில் இருந்து எதுவும் தப்பவில்லை . இருவரின் அன்னையின் மனதிலும் இருவேறுபட்ட உணர்வு அலைகள் .

அகிலத்தின் மனதிலோ 'என்றேனும் இந்த அம்மா உனக்கு சரியான பாதையை தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று நிச்சயம் உணர்வாய் மதிமா ' என்று மகளுடன் மானசீகமாக உரையாடினார் .

ஸ்ருதியின் மனதிலோ 'என் மகனை கல்யாணம் செய்துகொள்வதில் இந்த பெண்ணிற்கு அவ்ளோ மனக்கசப்பா ?' என்று கோபத்துடன் தன் மகன் மீதிருக்கும் பாசத்தில் சராசரி அன்னையாக எண்ணினார் .

அதன் பிறகு அனைத்து சடங்குகளும் இருவரின் வீட்டிலும் நல்லபடியாக நடந்தது . சடங்குகள் முடிந்து ஓய்வாக இருவரையும் தனி தனி அறையில் இருக்கச்செய்தனர் .

வான்மதியிடம் உறவுகள் வந்து பேச முயற்சித்தனர் அவள் அமைதியையே பதிலாக தந்தாள் . ஸ்ருதியின் கோபம் ஏகத்திற்கும் எகிறியது . சரியாக அப்பொழுது ஸ்ருதியின் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றும் விதமாக வந்து சேர்ந்தார் கௌஷிக்கின் சித்தி . அவர் அவரின் கணவர் போன்ற நரியின் தந்திரத்துடன் வேலைபார்ப்பவர் . இத்துணை அழகான படித்த மருமகளா ? அதுவும் கௌஷிகிற்கா ? என்று மனதில் புழுங்கி தள்ளினார் .

காரணம் அவர்கள் செய்த பாவங்கள் பல இடைத்தரகர் என்னும் போர்வையில் சரவணன் அவர்களின் தம்பி அனைத்து தில்லு முள்ளு வேலைகளையும் பார்த்துவந்ததால் எவரும் அவர்களின் ஒரே மகனிற்கு பெண் கொடுக்க முன்வரவில்லை . இவர்கள் குடும்பத்தை பற்றி தெரியாத தூரத்து உறவில் தாய் தந்தையற்ற படிக்காத பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர் அதன் பாதிப்பில் ஏற்பட்ட பொறாமையில் தனது வேலையில் இறங்கினார் .

ஸ்ருதியிடம் தனியாக சென்று அவர் மனதில் கல் எரிவதை போல் பேசிவிட்டு சென்றுவிட்டார் . ஸ்ருதியோ இதைப்பற்றி எவரிடமும் பேச இயலாமல் மனதில் போட்டு குழம்பினார் . அன்றைய இரவும் வந்தது .

உறவில் இருக்கும் பெண்கள் அனைவரும் சேர்ந்து வான்மதியை தயார் செய்து கௌஷிகின் அறைக்கு அழைத்து சென்றனர் . அங்கு படியில் நின்று இருந்த ஸ்ருதி வான்மதியின் கையில் பால்சொம்பை குடுத்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் . பொதுவாக விலக நினைக்கும் மதிக்கு ஸ்ருதியின் ஒட்டாதன்மை பெரிதாக தெரியவில்லை .

அகிலம் இவளிடம் பேச முயற்சித்தும் மதி அவர் முகம் காணவே தவிர்த்தாள் . அறைக்குள் சென்றவள் அங்கு தன்னை தவிர்த்து இன்னொரு ஜீவன் இருப்பதையே கண்டுகொள்ளாமல் தன்போக்கில் சென்று பால் சொம்பை மேஜை மீது வைத்து கண்களை சுழலவிட்டாள் . அவளின் பை கண்ணில் தென்பட்டவுடன் நேராக அதன் அருகே சென்று எளிமையான சுடிதார் எடுத்துக்கொண்டு பாத்ரூமினுள் நுழைந்து கொண்டாள் .

உடைமாற்றிக்கொண்டு வெளியே வந்தவள் எந்த ஆர்பாட்டமுமின்றி சென்று கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துகொண்டாள் . கௌஷிக் கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்று அவளின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்த்துக்கொண்டே இருந்தான் . அவள் படுத்தவுடன் பெருமூச்செறிந்தவன் 'டேய் கௌஷிக் உன் நிலைமை ரொம்ப கஷ்டம் தான் டா ' .... என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் .

கட்டிலின் அருகே சென்றவன் அவளின் முதுகுபுரத்தை சிறிது நேரம் வெறித்து பார்த்தவன் மனதில் ஒரு குழப்பம் 'இப்போ நாம எங்க படுகிறது ....எதுமே சொல்லாம தூங்கிட்டாளே இப்ப நாம எங்க படுகிறது நிச்சயம் மெத்தையில் படுத்தா மொறச்சே பஸ்பம் ஆகிடுவாளே ....எதுக்கும் நாம இந்த சோபாலயே தூங்கிடுவோம் ' என்று எண்ணி சமத்தாக சென்று அவளை பார்த்துக்கொண்டே பின் இரவில் கண்ணயர்ந்துவிட்டான் .

வான்மதிக்கு அன்றைய இரவு தூங்கா இரவாக சென்றது . அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் தான் நம்பியவர்கள் அனைவரும் தன்னை சுற்றி தனக்கு தெரியாமலே ஏதோ செய்வது போல் தோன்றியது . ஆனாலும் அவர்கள் யாரும் தீங்கு செய்வது போல் தோன்றவில்லை தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நன்மை என்று கருதி எதையோ செய்திருக்கிறார்கள் என்று என்னத் துவங்கினாள் . என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று எண்ணி விடியும் பொழுது கண்ணயர்ந்தாள் .

அங்கு ஸ்ருதியோ சரவணனிடம் புலம்பித்தள்ளிவிட்டார் . "மகனிற்கு பிடிச்சுதேனு கட்டி வச்சது தப்பா போச்சு . மருந்துக்கும் சிரிக்க மாட்டீங்கிறாள் , சுற்றார் உறவினர்கள் வந்து பேசினால் பிடித்து வைத்த பிள்ளையார் கணக்கா இருக்கா ....இதுக்கு மேல உங்க தம்பி பொண்டாட்டி சொன்னது எதுமே சரியாய் படலை ..."

தம்பி குடும்பத்தார் என்று கூறியவுடன் சற்றே சுதாரித்த சரவணன் "என்ன சொன்னாங்க " என்றார் யோசனையுடன் .

அவர் கூறியதை முழுதாக கேட்டறிந்தவர் யோசனையில் ஆழ்ந்தார் . ஸ்ருதி அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தவர் கணவனிடம் எந்த பதிலும் இல்லாமல் போகவும் "என்னங்க நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க எதுமே சொல்லாம இருக்கீங்க "

"ஸ்ருதி இது எடுத்தோம் கவிழ்த்தோம்னு கோபம் கொள்ளும் விஷயம் இல்லை ...இதில் ஏதோ இருக்கு ..."

"என்னங்க பெருசா இருக்கு காதலுக்கு கண்ணு இல்லைம்பாங்க உங்க மகனுக்கு மூலையும் இல்லாம போச்சு "

"ஸ்ருதி கௌஷிக் தெரிஞ்சே இந்த திருமணத்தை நடத்தி காட்டிற்க்கான் ...அவனின் யாசிப்பின் பார்வையும் வான்மதியின் கோப முகமும் வேறு ஏதோ கதை சொல்லுது "

"பெரிய புடலங்காய் கதை " என்று நொடித்துக்கொண்ட மனைவியை பார்த்து லேசாக சிரித்த சரவணன்

"நீயும் சாதாரண அம்மா என்பதை நிரூபிக்கிறாயே ....படித்து பல மாணவர்களுடன் பழகி பார்த்த உனக்கு இன்னுமா புரியவில்லை .....உன் அனுபவம் என்ன ? அதை அம்மா என்னும் ஸ்தானம் மறைக்கிறது ....உன் மகனிடம் ஏதோ தப்பிருக்கு ஸ்ருதிமா யோசி ....யோசியாமல் மகன் மீது இருக்கும் பாசத்தில் வார்த்தைகளை விட்டு உறவுகள் பிரிய காரணமாக மட்டும் இருந்துவிடாதே " சரவணன் கூறி சென்றவுடன் ஸ்ருதி சற்றே யோசிக்கலானார் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top