JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-22,23

saaral

Well-known member
அத்தியாயம் - 22

சஹானா கடத்தப்பட்டாள் என்ற செய்தி வந்தவுடன் மிருதுளாவும் , சுபத்ராவும் பதறினர் . ஆனால் மற்றவர்களுக்கு அந்த பதற்றம் எல்லாம் இல்லை தெரியவேண்டிய அவனுக்கு தகவல் வந்த நொடி துரிதமாக செயல்பட்டு இருப்பான் என்று நம்பினர் .


ஆம் பிரவீன் ,குரு அழைத்து சொன்ன நொடி எல்லா ஏற்பாட்டையும் வேகமாக செயல் படுத்தி விட்டான் . அவனின் திட்டத்தின் பயன் சஹானா கடத்தப்பட்டாள் அதே நிமிடம் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டாள் .

கடத்த முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அரசியல் பிரமுகர் சத்யா கைது செய்யப்பட்டார் .

அந்த காரில் பலத்த அமைதி .

சஹானா மௌனமாக கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து இருந்தாள் .

அருகில் அமர்ந்து வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த பிரவீன் அவளை திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான் .

அதற்குமேல் மௌனம் தாங்காமல் "யார் சொல்ற பேச்சையும் கேக்குற ஐடியா எப்போதும் இல்லை தானே " கோபமாக கேட்டான் பிரவீன் .

மீண்டும் அவளிடம் மௌனம் "...."

"சஹானா உன்கிட்ட தான் பேசுறேன் " அழுத்தமாக கூப்பிட்டான் .

அவனின் பேச்சில் கவனம் கொள்ளாமல் வேகமாக கண்களை திறந்த சஹானா எதையோ தேடினாள் .

புருவத்தின் இடையில் முடிச்சுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரவீன் "என்ன தேடுற சஹானா ?" என்று வினவினான் .

"என்னோட போன் " அலைப்புறுதல் உடன் பதில் தந்தாள் .

"அது அந்த சத்யா குடோன்லயே உடைஞ்சிருச்சு "

"அச்சோ அவன் அவங்களையும் கடத்த ஆளுங்களை நிறுத்தியிருந்தான் , அவன் பேசுவதை கேட்டேன் ...குரு கிட்ட சொல்லுங்க " பதட்டத்துடன் கூறினாள் .

"அவங்க அப்படினா யார் சஹானா " அழுத்தமாகவே ஒலித்தது அவனின் குரல் .

உறைந்தவள் ,நொடிப்பொழுதில் தன்னை மீட்டுக் கொண்டாள் "கீர்த்தனா அம்மா " அவளிடமும் அவனிற்கு நிகரான அழுத்தம் .

"ஓஹ் " அசட்டையாக பதில் தந்தான் .

"உங்க போன் தரீங்களா குரு கிட்ட பேசணும் "

"குரு நம்பர் என்கிட்டே இல்லை சஹானா " கண்களில் குறும்பு மின்ன கூறினான் அவன் .

"ரொம்ப நடிக்க வேண்டாம் அவன் எனக்கு நல்ல நண்பன் சோ அவனை பற்றி எனக்கு தெரியும் நான் காலைல தனியா கிளம்பினப்பவே உங்க கிட்ட சொல்லி எல்லாம் செஞ்சது அவன் தான் தெரியும் " மிகவும் சாதாரணமாக கூறினாள்.

அவனோ புன்முறுவலுடன் "எல்லாம் தெரிஞ்ச உனக்கு அவங்க ரெண்டு பேரும் சேப் பண்ண ஆள் அனுப்பிருப்பேனு கூடவா தெரியாது " புருவங்கள் உயர கேள்வி தொடுத்தான் .

'ஷபா இவரை பற்றி தெரிஞ்சும் வாயை கொடுத்து வாங்கி கட்ட வேண்டாம் சஹானா ' மனதினுள் சொல்லிக்கொண்டு மீண்டும் கண்களை மூடினாள் .

வாகனத்தை செலுத்திக்கொண்டே "இப்ப கூட என்கிட்ட சொல்ல மாட்டியா சஹானா ?" மென்மையாக கேட்டான் அவன் .

"அதான் எல்லாம் தெரிஞ்சிருக்கே அப்பறம் நான் சொல்ல என்ன இருக்கு " கண்கள் இன்னும் மூடி தான் இருந்தது .

"இல்ல சஹானா நீ இன்னும் நிறைய விஷயம் சொல்லல எனக்கும் தெரியலை , முக்கியமாக தெரிய விடலை "

"என்ன தெரியணும் உங்களுக்கு " ஆயாசமாக இருந்தது அவளுக்கு .

"உன் தங்கை அவளுக்காக தான் இத்தனையும் , சதீஷ் இதில் முக்கிய குற்றவாளி .....ஆனால் உனக்கும் சுபத்ரா குரூப்ஸ் உரிமையாளர்க்கும் என்ன சம்பந்தம் ?.....உன் தங்கை சின்ன வயதில் தொலைந்து போய் கிடைச்சிருக்கா அப்படினா உன் அப்பா அம்மா யாரு எங்க இருகாங்க ?" கேள்விகளால் அவளை குடைந்தான் பிரவீன் .

அவள் மௌனமாக இருந்தாள் , அவளாக எண்ணினாள் ஒழிய நமக்கு எந்த விவரமும் கிடைக்காது என்று அறிந்த பிரவீன் மௌனம் காத்தான் .

அதற்குள் மண்டபம் வந்தது .

..................................................................................................

சஹானா உள்ளே காலடி எடுத்து வைக்கும் நொடி அவளும் மண்டபத்தினுள் நுழைந்தாள்.

சஹானா அவளையும் கீர்த்தனாவையும் பார்த்து மென்மையாக முறுவல் அளித்தாள் .

"சஹானா நீ ஏன் ட தனியா வந்த ?" சௌம்யா ஆற்றாமையுடன் கேள்விகளை கேட்டார் . என்ன சொன்னாலும் இந்த பெண் கேட்பதில்லை என்பது அவரின் வருத்தம் .

அதற்குள் அருகே கண்ணீருடன் வந்த சுபத்ராவை பார்த்து "அம்மா எனக்கு ஒன்னும் இல்ல எதுக்கு அழுகை ...நோ மோர் டீர்ஸ் " என்று கூறி அவரின் கண்ணீரைத் துடைத்தாள் பெண்ணவள் .

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த பிரவீன் அவளின் அம்மா என்ற விழிப்பில் திரும்பி பார்த்தான் . சத்தியமாக சுபத்ராவை அவளின் அம்மாவாக , இல்லை இல்லை தயாளன் சுபத்ராவை அவளின் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று அவன் எண்ணியும் பார்க்கவில்லை .

தங்களின் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண செய்த சுபத்ரா குரூப்ஸ் உரிமையாளரின் பெண் அதுவும் நிர்வாகத்தில் இருந்து கட்டளை பிறப்பித்தது சஹானாவா மலைத்து நின்றான் அவன் .

பிரவீன் அதிர்ந்த அதே நொடி இருவர் அங்கு அதிர்ந்து நின்றனர் ஒன்று விஸ்வம் . அவர் அடுத்து மகன் எடுக்கப்போகும் முடிவை எண்ணி நடுங்கினார் .

அதே நேரம் சதீஷ் சஹானா மற்றும் கீர்த்தனா அம்மாவின் இடையில் முகத்தில் பல தழும்புகளுடன் மெல்லிய இடையுடன் மிரட்சியான பார்வை கொண்டு நிற்கும் அவளை கண்டு ஸ்தம்பித்தான் .

அவள் அஹானா ....!!

*********************************************************************
அத்தியாயம் - 23

அஹானா தனது பார்வையால் சுற்றி உள்ள அனைவரையும் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது அவளின் பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது .

அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் .

"சதீஷ் " என்ற கூவலுடன் ஓடிச்சென்று அவனின் கையில் தன்னை பொருத்திக் கொண்டாள் .

சதீஷும் இந்த திடீர் சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை அவனின் கண்களில் இருந்து நீர் இறங்கிக்கொண்டிருந்தது .

மணமேடையில் எப்படியும் அண்ணன் சஹானாவை அழைத்து வந்துவிடுவான் என்று நம்பி அமர்ந்து இருந்த மிருதுளாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் . துரு துரு விழிகளுடன் , மயில் போன்ற தோகை விரித்தாடும் அழகான பெண்ணவள் அவளின் சிறு வயது தோழி அஹானா ......இப்போது நிலை குலைந்து போய் இருக்கும் அவளின் தோற்றம் வழியை கொடுத்தது .

ஸ்ரீதர், மிருதுளாவின் கரங்களை அழுத்தம் கொடுத்து அவளை சாந்தப்படுத்தினன் .

நிலைமையை கையில் எடுத்த பிரவீன் அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி மேடைக்கு மாற்றினான் "சரி நல்ல நேரம் முடியறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சர்லாம் " என்றான் அறிவிப்பாக .

அனைவரும் சரி என்று தங்கள் கவனத்தை இன்றைய நாயகன் ,நாயகி பக்கம் திரும்பினர் .

அதன் பின் வேலைகள் மளமளவென நடந்தேறியது . மிருதுளா விஸ்வம், மிருதுளா ஸ்ரீதராக மாறினாள் .

சஹானாவின் பார்வை சதீஷை தீயாக சுட்டது . அவனின் கரங்களில் வளைவில் தஞ்சம் அடைந்திருக்கும் தனது தங்கையை கண்டு மனம் வெதும்பியது . விபத்து நடந்த அன்றில் இருந்து நினைவிழந்து படுத்த படுக்கையாக இருந்தவள் , நினைவு திரும்பியவுடன் எவரையும் அருகில் விடவில்லை . எல்லாரையும் எட்டவே நிறுத்தினாள்.

அவளின் வளர்ப்பு அம்மாவான கீர்த்தனாவை கூட அடையாளம் காண முடியாமல் இருந்தவள் இன்று பார்த்த நொடி தனது மனம் கவர்ந்தவனை அடையாளம் கண்டு அவனையே ஒட்டிக்கொண்டு இருக்கிறாள் .

"என்னடா ?" சௌம்யா ஆதரவாக அவளின் தோளில் கை வைத்தார் .

"எப்படி பெரியம்மா கீர்த்தனா அம்மாவை கூட அடையாளம் தெரியாமல் இருந்தவ இப்ப இந்த ப்ளடி இடியட் இவனை பார்த்த உடனே அடையாளம் கண்டு பிடிச்சா ?" ஆற்றாமையுடன் வினவினாள் .

அங்கு சாரதாவின் எரிக்கும் பார்வையையும் துச்சமென துடைத்து எரிந்து அஹானாவை கைக்குள் வைத்திருக்கும் சதீஷை பார்த்துக் கொண்டே "அவளுக்கு யார் செஞ்ச துரோகம் தெரியாது கண்ணா அவள் சிறு குழந்தை போல் ... சிறு குழந்தை அம்மா திட்டினாலும் அவர்கள் பின்னோடு சுத்தும் அதே மாதிரி இவளும் அவனின் அன்பை மட்டும் பார்த்தவள் ...இந்த உலகத்தில் இருக்கும் சூத்து வைத்து அறியாதவள் ...அவள் போக்கிலே விட்டுடு மா நமக்கு அவள் நல்லா இருந்தா போதும் " சௌம்யா பெருமூச்சுடன் கூறினார் .

"அதுக்குன்னு அவன் கூடவா "சஹானாவின் குரலில் கோபம் .

"விடு டா அந்த பையனும் செஞ்ச தப்பை ஓத்துகின்ற மாதிரி இருக்கு , அம்முவை நினச்சு ரொம்ப வருத்தப்பட்டான் ...உண்மையாக நேசிக்கிறான் ...நம்ம அம்முக்கும் அவன் கூட இருந்தா மகிழ்ச்சி அப்படினா நாம செய்யறதுக்கு ஒன்னும் இல்லை "பெரியவராக அவளிற்கு எடுத்து கூறினார் .

.......................................................................................
பிரவீனின் இல்லம் ...

பிரவீன் ,ஸ்ரீதரின் குடும்பம் மற்றும் அவனின் குடும்பத்தை அழைத்து வந்துவிட்டான் . மண்டபத்தில் வந்திருந்தவர்கள் கிளம்பிய அடுத்த நொடி அணைத்து பொறுப்பையும் மேனேஜர் கிருஷ்ணாவிடம் கொடுத்துவிட்டு எல்லோரோடும் வந்துவிட்டான் .

"அப்பா இப்ப போலீஸ் வரும் நீங்களா சரண்டர் ஆகிடுங்கள் " எந்த முகாந்திரமும் இல்லாமல் கூறிவிட்டான் பிரவீன் .

விஸ்வம் இதை எதிர் பார்த்தே இருந்தார் "என்னடா சொல்ற அப்பாவை எதுக்கு போலீஸ் கிட்ட போக சொல்ற " சாரதா தான் கொதித்துக் கொண்டிருந்தார்.

"அவர் செஞ்ச தப்புக்கு தான் போலீஸ் கிட்ட சரண்டர் அகா சொல்றேன் "அழுத்தமாக சொன்னான் பிரவீன் .

விஸ்வத்தின் தலை கவிழ்ந்தது .

"என்ன தப்பு செஞ்சிருந்தா லும் , இவர் உன் அப்பா " சாரதா விடாமல் பேசினார் .

சஹானா அவரை வெறுப்புடன் நோக்கினாள் .

பிரவீன் தனவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் . மண்டபத்தில் அவளின் குற்றம் சாட்டும் பார்வையை கண்டுகொண்டவன் அந்த சிறு பெண்ணிற்காக துரிதமாக செயல்பட முடிவு செய்து விட்டான் .

"எல்லாம் செஞ்சது அவர் தான் அவர் மட்டும் தான் " ஆற்றாமையுடன் வீரிட்டன் சதீஷ் .

இப்போது அனைவரின் கவனமும் அவனின் பக்கம் .

"நான் ஆனந்த் கூட வேண்டாம் சொன்னேன் கேக்கல , சத்யா அங்கிள் அரசியல் பிரமுகர் நமக்கு உதவிய இருக்கும்னு என்னை அவங்க தொழிலில் நுழைத்தார் ...சரினு போனா அங்க எல்லாம் தப்பா இருக்கு சின்ன சின்ன பொண்ணுங்க ...." சொல்ல முடியாமல் தவித்தான் அவன் .

அவனே தொடரட்டும் என்று அனைவரும் அமைதி காத்தனர் .

"நம்ம மிருது அப்ப தான் ம்மா ஸ்கூல் படிச்சுட்டு இருந்தா அவ வயசு பொண்ணுங்களை ...ச்சீ ...நான் இப்பவே இதுல இருந்து வெளிய வரேன் எனக்கு இது சரி வராதுன்னு சொன்னேன் அப்பா கேட்கலை ....இதெல்லாம் பெரிய தப்பா அப்படினு பேசினார் "

அனைவரும் அதிர்ச்சியுடன் விஸ்வத்தை நோக்கினர் .

"நான் வெளிய வந்துடலாம்னு யோசிச்சப்ப இதோ உருகுலஞ்சு போய் நிக்கிறாளே இவளின் அப்பா பத்திரிகையாளர் திரு உள்ள வந்துட்டாரு ...எல்லா ஆதாரத்தையும் வச்சுக்கிட்டு என்னையும் ஆனந்தையும் உள்ள தள்ளனும் யோசிச்சார் ....அப்ப தான் அம்மு அவரோட பொண்ணுன்னு தெரிஞ்சுது ....இவர் என்னை சரிக்கட்டி இந்த சின்ன பொண்ணை நேசிக்கிற மாதிரி நடிக்க சொன்னார் "

மிருதுளா சுத்தமாக இதை எதிர்பார்க்கவில்லை , தான் போட்ட ஒரு புகைப்படம் இந்த பெண்ணின் வாழ்விலும் அவளின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சிதைக்க வல்லதா ? என்று எண்ணினாள் .

"நம்ம மிருது போட்டோல தான் இவை திரு சார் பொன்னுனு தெரிஞ்சது ....அவர் குடும்ப ஆட்களை ரகசியமாக வைத்திருந்தார் ...நான் மாட்டேன் சொன்னப்ப அப்பா தான் என்னலாமோ சொல்லி பயமுறுத்தி என்னை ஒதுக்க வச்சார் ..நானும் முதல நடிக தான் போனேன் ஆனால் இந்த சிறு பெண்ணோடு களங்கமில்லா அன்புள என்னையே தொலைச்சுட்டேன் ..."

தன்னை மிரட்சியுடன் பார்க்கும் அம்முவை ஆதுரத்துடன் தலை கோதினான் .

"இவளை ஒரு நாள் தனியா கூட்டிட்டு வா அதுக்குள்ள இங்க திருகிட்ட எல்லாம் சரி பண்றேன் சொல்லி இருந்தார் , சரினு கூட்டிட்டு போனேன் அப்ப எனக்கு போன் வந்துச்சு அந்த இடைவெளில அந்த ராஸ்கல் ஆனந்த் இவளை " அதற்கு மேலும் அவனால் சொல்ல முடியவில்லை .

அஹானாவும் அவனை இருக்க கட்டிக்கொண்டாள் .

சஹானா இயலாமையுடன் தனது தங்கையை பார்த்துக்கொண்டிருந்தாள் .

"அப்ப போலீஸ் எங்களை பிடிச்சுட்டாங்க ...இங்க திரு சாருக்கு என்ன நடந்ததுன்னு தெரியாது, அண்ணன்கிட்ட ஆக்சிடென்ட் பொய் சொல்லி என்ன வெளிய எடுக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பிட்டார் அப்பா ...திரும்ப நான் நம்ம வீட்ல சஹானாவையும் , கீர்த்தனா அம்மாவையும் பார்த்தப்ப சஹானா தான் அம்மு பெயர் மாத்திக்கிட்டு முகத்தை மாத்திக்கிட்டு என்னை ஏமாத்துறாங்க நினைச்சுட்டேன் "

சாரதா உறைந்தார் தனது கணவரா என்ற அதிர்ச்சி அவரை விட்டு இன்னும் மீளவில்லை .

"நான் அம்முவோட இரட்டை , நாங்க சின்ன வயசுல இங்க கோவில் விசேஷத்துக்கு வந்தப்ப அவ தொலைஞ்சு போயிட்டா ...அஹானா அம்முவா கீர்த்தனா அம்மா , திரு அப்பாகிட்ட வளர்ந்திருக்கா , நானும் மிருதுளா போட போட்டோ என் பிரின்ட் மூலம் பார்த்து தான் அஹானாவை பல வருஷம் கழிச்சு கண்டுபிடிச்சேன் , ஜெர்மன் ல இருந்து அப்பா , அம்மாவோட இங்க நாங்க வரதுக்குள்ள என்னலாமோ நடந்துருச்சு " ஆயாசமாக கூறினாள் சஹானா .

"நீ ...ஹ்ம்ம் நீங்க எப்படி அஹானாவை கண்டுபிடிச்சீங்க அவளுக்கு அடிபட்டு இருந்திருக்குமே " பிரவீன் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை கேட்டான் .

"நாங்க ஜெர்மன்ல இருந்ததால இங்க அவ்ளோ யாரையும் தெரியாது , தெரிஞ்ச சில பொலிடிகல் பீப்பிள் வச்சு அம்முக்கு பதிலை வேற டெட் பாடிய மாத்தினோம் ...திரு அப்பா ஜாப் அவளுக்கு சேப் இல்லைனு எங்களுக்கு தோணுச்சு அவர்கிட்ட போனில் பேசினோம் அவர் தான் கோத்தகிரி அட்ரஸ் கொடுத்தார் ...நாங்க போனப்ப அம்முவை உருகுலஞ்சு தான் மீட்டோம் ...திரு அப்பா இப்ப போயிட்டு இருக்க சத்யா இஸ்சு அஹானாக்கு பாதுகாப்பில்லை நினைச்சார் ....கொஞ்சம் விஸ்வம் ,சத்யா , ஆனந்த் அப்படி சில விஷயங்கள் சொன்னார் .....அப்புறம் அம்மு , கீர்த்தனா அம்மா ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஜேர்மன் போய்ட்டோம் " அவ்ளோதான் என்னிடம் நீ விளக்கம் வாங்க முடியும் என்று கூறி அழுத்தமாக அமர்ந்து கொண்டாள் பெண்ணவள் .

அதன் பிறகு காவல்துறை தனது கடமையை செய்தது . அஹானாவை கொல்ல முயற்சித்தது ,திருவை கொன்றது , சஹானாவை கடத்த முயன்றது என்று பல வழக்குகளை விஸ்வத்தின் மேல் போட்டு இழுத்து சென்றது .





no_photo.png
ReplyForward




 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top