JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-24,25

saaral

Well-known member
அத்தியாயம்-24

வாழ்வை வாழ்ந்துபார்
நதியின் ஓட்டத்தை போன்று
அதில் பல மேடு பள்ளங்கள்
கரடு முரடான பாதைகள்
கடுமையான நெளிவு சுளிவுகள்
இருந்தும் நீ தெளிந்து ஓடு
நதிபோல ........

வான்மதியும் நதியை போன்று நிற்காமல் அதன் ஓட்டத்தில் சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் . அந்த இரவு தூங்கா இரவாகிடும் பல சிந்தனைகளை அவளுள் விதைத்து . இனி என்ன செய்ய வேண்டும் எவ்வாறு வாழவேண்டும் அதற்கு தனது மனநிலை ஒத்துவருமா இப்படி பல நூறு சிந்தனைகள் .

விடியல் யாருக்காகவும் காத்திராமல் தனது பணியை திறம்பட செய்தது . வான்மதி உறக்கம் வராமல் இருந்தவள் சூரியன் எட்டி பார்க்கும் நேரத்திலே தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கூடத்திற்கு சென்றாள் . அவளின் வரவை உணர்ந்து ஸ்ருதியின் மனம் சற்றே சந்தோசம் அடைந்தது .

பின் சரவணனும் எழுந்து வந்தார் . வான்மதி நேராக ஸ்ருதியுடன் அடுக்கலைக்குள் நுழைந்து சற்றே இயல்பாக பேச முயற்சித்து அவருக்கு உதவி கொண்டு இருந்தாள் . அவளின் கோவம் அனைத்தும் அவனின் மேல் தானே .....

சரவணனுக்கு ஸ்ருதி காபி கலந்து கொடுக்கவும் அதை எடுத்து சென்று அவரிடம் நீட்டினாள் . மென்புன்னகையுடன் வாங்கிய அவர் "குட் மோர்னிங் மா " என்றார் .

அவளும் சிறு புன்னகையுடன் "குட் மோர்னிங் ....ம...." என்று தயக்கத்துடன் நிறுத்தினாள் .

அவரும் புன்னகையுடன் "மாமான்னு கூப்பிட பிடிச்சா கூப்பிடு , இல்லை அப்பான்னு கூப்பிடு எனது மகள் மருமகளாக சென்ற அதே சமயம் எனக்குமொரு மறு மகள் கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சி அடைவேன் ....இல்லை அதும் பிடிக்கலையா சரவணன் அப்படினு நண்பனை கூப்பிடுவதுபோல் வேண்டுமானாலும் கூப்பிட்டுக்கோ ஆனால் ஒரு நிபந்தனை போடா வாடா சொல்லிராத அதுக்கான காப்புரிமை எனது மனைவிக்கு மட்டுமே " வான்மதிக்கு பின்னே வந்த மனைவியை பார்த்து குறும்பு சிரிப்புடன் கூறினார் .

அவரின் பார்வையை தொடர்ந்து பார்த்த மதி லேசாக சிரித்து "ஓகே அப்பா " என்றாள் . தனது தந்தையை போன்று இயல்பாக பழகும் குணம் கொண்ட சரவணனை கண்டவுடன் அவளை அறியாமலே பாசத்தை வளர்த்துக்கொண்டாள் .

ஸ்ருதி இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே வந்தவர் "யப்பா இப்பதான் உன் முகத்தில் சிரிப்பையே பார்க்கிறேன் ....ஏன் நேற்றெல்லாம் ஒரு மாதிரி இருந்த " என்றார் .

அவரின் கேள்வியில் முதலில் தயங்கி பின் ஒருபெருமூச்சை வெளியிட்டு "அப்படிலாம் ஒன்னும் இல்லை " என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள் .

அப்பொழுதுதான் ஸ்ருதி ஒன்றை கவனித்தார் அவள் இன்னும் அவரை அத்தை என்றோ இல்லை எந்த முறை கூறியும் விளிக்கவில்லை என்பதை "சேரி இவரை அப்பான்னு கூப்பிட்ட அப்ப என்ன எப்படி கூப்பிடுவ " ஸ்ருதி மென்மையாக கேட்டார் . அவர் ஒன்றும் கெட்டவர் இல்லையே பெண்ணை பெற்றவர்க்கு பெண்ணின் அருமையும் அன்பும் நன்கு தெரியுமே . அவருக்கும் ஒரு ஆவல் அவள் எவ்வாறு விழிப்பாள் என்று .

அவரின் அவாவை புரிந்து கொண்டு "நீங்க காபி சாபிடறிங்களா அம்மா " அழகாக மென்முறுவலை பூத்து தலை சரித்து அவள் கேட்ட விதம் ஸ்ருதிக்கு மனதை குளிர்வித்தது .

அவரும் புன்னகையுடன் "நான் காலை காபி , டீ ஏதும் சாப்பிட மாட்டேன் நீ என்ன குடிப்ப எடுத்துட்டு வரவா " என்றார் இதமாக .

"இல்லைமா நான் அடிக்கடி ஏதும் குடிக்க மாட்டேன் வேணும்னா நானே எடுத்துகிறேன் " என்றாள் .

"வான்மதி எங்கம்மா கௌஷிக் இன்னும் காணும் " கௌஷிக் இவள் எழுந்துகொள்ளும் பொழுது அந்த நீல் விரிக்கயில் துயில்கொண்டு இருந்தான் . இவளின் அரவம் கண்டு முழித்தவன் அவளுக்கு சங்கடத்தை கொடுக்க மனம் இல்லாமல் அசையாமல் படுத்து கிடந்தான் . இவள் அறையை விட்டு வெளியேறியவுடன் எழுந்த கௌஷிக் வெளியே வந்து வீட்டின் மேல் தலத்தில் இருந்து கீழே நடப்பவற்றை பார்த்துக்கொண்டு தான் இருந்தான் . அவளின் குணம் அறிந்து அவள் தன்னை கூட இதற்கு பிறகு காயப்படுத்த நினைக்க மாட்டாள் ஒதுங்கியே செல்வாள் என்று நினைத்தவனின் எண்ணம் பொய்யாகாமல் அவனின் அன்னையுடனும் தந்தையுடனும் இலகுவாக பழகுவதை கண்டவனின் மனம் நிம்மதி அடைந்தது .

கௌஷிகின் பெயர் கேட்டவுடன் அவள் முகம் இறுகி நிற்பதை கண்டவன் அவளை எந்த சங்கடமும் படுத்த விடாமல் காப்பதற்காக வேகமாக "அம்மா " என்று சத்தமாக அழைத்துக்கொண்டு இறங்கினான் . அவனின் சத்தமான அழைப்பில் அவனிடம் கவனத்தை திருப்பிய அவர்களுக்கு மதியின் முகமாறுதல் தெரியாமலே போனது .

கௌஷிக் தான் அணைத்து சொந்தங்களையும் கிளப்பி இருந்தான் . மீதி உள்ளவர்களையும் ஹோட்டல் அறை எடுத்து தங்கவைத்து பார்த்துக்கொண்டான் . மதி எந்த வகையிலும் சங்கடப்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் .

"வா கௌஷிக் , வான்மதி போய் கௌஷிக்கு இஞ்சி தட்டி போட்டு டீ கொண்டுவாமா " இயல்பாக கூறினார் ஸ்ருதி . அவருக்கு மதியின் சிரித்த முகத்தை கண்டு ஏதோ கல்யாண டென்ஷனா இருக்கும் அதான் நேற்றெல்லாம் உம்முனு இருந்திருக்கிறாள் என்று அவராக நினைத்துக்கொண்டார் .

வான்மதி கடுகடுத்த முகத்துடன் நிற்பதை கண்ட கௌஷிக் "மதி மேல உன் போன் அடிச்சுது போய் என்னனு பாரு , அம்மா நீங்க எனக்கு டீ கொடுங்களேன் " என்றான் .

வான்மதி விட்டால் போதும் என்று சென்றுவிட்டாள் . ஸ்ருதிக்கு இங்கு நடப்பவை இயல்பாக இருப்பதாக தோன்றியதால் தேநீர் கலக்க சென்று விட்டார் . நடப்பவைகளை சற்றே ஊன்றி கவனித்த சரவணன் "என்ன பிரச்சனைன்னு கேக்க மாட்டேன் கௌஷிக் ஆனால் தவறு உன் மீது இருப்பது உன் பார்வையிலே தெரியுது ...சீக்கிரம் எல்லாத்தையும் சரி செய்ய பார் " தனது மகன் முகம் பார்க்காமல் ஒருத்தந்தையாக சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் . கௌஷிக் செல்லும் அவரையே பார்த்தான் .

காலை தேநீர் குடித்து , பேப்பர் படித்துவிட்டு மேலே வந்தவன் கட்டிலில் தனது அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்து இருக்கும் மதியை கண்டான் . அவளின் விழிகள் கேள்வியாக அவனையும் கைப்பேசியையும் மாரி மாரி பார்த்தது அவளின் பார்வைக்கான பொருள் புரிந்தவன் "இல்லை அம்மா எனக்கு டீ கலக்க சொல்லி உன்கிட்ட சொன்னாங்க நீ சங்கடப்படவேண்டாமேன்னு ...."இழுத்தவனின் பேச்சு முடியும் முன்பே எழுந்து அறையை விட்டு சென்றுவிட்டாள் . போகும் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான் அவளவன் .

ஆகாய நீல நிறத்திலான புடவை அணிந்து நிமிர்வாக நடக்கும் அவளின் அழகு அவனை கவர்ந்தது . விரும்பியே அவள் மீதான காதல் என்னும் பள்ளத்தில் விழுந்தான் .ஆம் பள்ளம் தான் அவன் செய்த தவறினால் காதல் கோட்டை இடிந்து இவன் மனதில் பள்ளமாக உள்ளது . மீண்டும் அந்த கோட்டை நிமிர்ந்து நிற்குமா காலம் தான் பதில் சொல்லவேண்டும் .

**********************************************

அத்தியாயம்-25

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது அதனுடன் மானுடப்பிறவிகளும் தினம் ஒரு வித உணர்வுடன் நகர்ந்து சென்றனர் . அன்று கல்லூரியில் அமர்ந்து குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தவளை கரெஸ்பாண்டெண்ட் அழைப்பதாக வந்து கூறினார் அந்த கல்லூரியில் பனி புரியும் லட்சுமி அக்கா .

அவருக்கு ஒரு புன்னகையை பதிலாக தந்துவிட்டு எழுந்து சென்ற வான்மதியின் மனதில் ஆயிரம் யோசனைகள் . திருமணம் ஆகி ஒரு மாதம் நிறைவடைய போகிறது இன்று வரை அவள் அகிலத்திடம் பேசவில்லை . திருமணம் முடிந்த இரண்டாம் நாளே கல்லூரி செல்ல வேண்டும் என்று வந்து நின்றவளை ஸ்ருதி ஏதும் பேசும் முன்பே கௌஷிக் தடுத்து அவளின் இஷ்டப்படி நடக்க சொல்லிவிட்டிருந்தான் .

எதயும் காட்டாமல் தனது வேலைக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள் மதி . கௌசல்யாவிற்கு மறுவீட்டு விருந்து இவர்களின் இல்லத்தில் நடைபெற்றது . சர்கேஷின் விழிகள் வான்மதியை தேடுவதை கண்டு கௌஷிக் "அவள் வேலைக்கு சென்றுவிட்டாள் " என்றான் நிதானமாக .

"என்ன , முந்தாநேத்து தானே கல்யாணம் முடிஞ்சது " சர்கேஷ் அதிர்ச்சியாக கேட்டான் .

"எல்லாம் உடனே மாறிடாது சர்கேஷ் ரணப்பட்டவளின் மனது ஆற சற்றே அவகாசம் வேண்டும் , அதுவரை நான் பொறுத்து செல்கிறேன் " வேதனையுடன் கூறிய கௌஷிக்கை கண்டு சர்கேஷ் பேச்சற்றுப்போனான் .

கௌசல்யாவின் வருகை ஸ்ருதியை மகிழ்வித்திருந்தது . இருந்தும் வான்மதி இல்லாதது அவரின் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தி கொண்டே இருந்தது .

அகிலம் ஸ்ருதிக்கு அழைத்து தனது மகள் , மருமகனை மருவீட்டிற்கு அழைத்தார் . வான்மதியின் முகம் போன போக்கை கண்டு "இப்ப நேரம் இல்ல மா " என்று கௌஷிக் பட்டென்று சொல்லிவிட்டான் .

நடப்பவைகளை ஸ்ருதி கண்டு கொண்டு தான் இருக்கிறார் . வான்மதியின் அனைத்து எண்ணத்திற்கும் அவளுக்கு முன் கௌஷிக் பேசி சம்மதம் கொடுப்பது போல் செல்வதையும் , தங்களுடன் நன்றாக பேசும் மதி கௌஷிகின் வருகை உணர்ந்தால் முகம் இறுகி அவ்விடம் விட்டு நகர்வதையும் , அவனின் பெயர் கேட்டாலே அமைதி அடைவதையும் கண்டவரின் மனம் மீண்டும் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது .

சர்கேஷ் மற்றும் கௌசியின் ஜோடி இருப்பையும் இவர்கள் இருக்கும் இருப்பையும் பார்த்து அவருக்கு புரியாமலா இருக்கும் . அவர் கண்ணில் இருந்து மதியும் கௌஷிக்கும் பேசிக்கொள்வது இல்லை என்பதும் தப்பவில்லை .

ஒரு மகனை பெற்றவராக அவரின் அனைத்து கோபமும் மதியிடம் திரும்பியது . ஆனால் தங்களிடம் மரியாதையுடனும் பண்புடனும் நடக்கும் பெண்ணை நேராக கோபித்துக்கொள்ள மனம் வரவில்லை .

இப்பொழுது எதற்காக சர்கேஷ் கூப்பிட்டான் என்று யோசித்துக்கொண்டே நடந்துவந்தவள் அந்த அறையின் முன் நின்று மெதுவாக கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் .

நுழைந்தவள் ஒரு நொடி கண்களை பெரிதாக விரித்துபின்பு சுருக்கினாள் . யோசனையுடன் அங்கு நிருபர் இருக்கையில் அமர்ந்து இருப்பவனை பார்த்தாள் . நிருபர் இருக்கைக்கு எதிரில் அமர்ந்து இருந்த சகுந்தலா தனக்கு பின்னால் இருந்து அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தார் . அங்கு நின்று கொண்டு இருக்கும் வான்மதியை நோக்கினார் .

"ஹே வான்மதி வா வா , பார்த்தியா இவங்க ரெண்டு பேரையும் ....கௌஷிக் தான் அந்த சைலன்ட் பார்ட்னராம் . இப்பதானே புரியுது உனக்காக கௌஷிக் இந்த கல்லூரியில் இருக்கும் மித்த பங்குதாரர்கள் பங்கை வாங்கிட்டான் . சர்கேஷ் பெரும் பங்கு வச்சிருந்தான் இப்போ அவனிற்கு சமமாக சொல்ல போனால் ஐம்பத்தியொரு சதவீத பங்கை உனக்காக கௌஷிக் வாங்கிருக்கான் . சர்கேஷ் உங்க சித்தப்பாகிட்டயும் உங்களை போல் எப்படி பொண்டாட்டிக்காக உருகி கரையணும்னு சொல்லி கொடுப்பா ....எனக்கே பொறாமையா இருக்கு " பொறாமை என்று சொன்னாலும் மனதிலும் , முகத்திலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார் அவர் .

சகுந்தலா அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினால் சர்கேஷ் தனது சித்தி மொத்தத்தையும் ஒளறியதை நினைத்து மனதினுள் பயந்துகொண்டு இருந்தான் . 'ஐயோ சித்தி இப்படி வான்டெடா அப்ரூவல் ஆகுறீங்களே ....வான்மதி வேற என்கிட்ட பேசி ஒருமாசம் ஆச்சு ' அவன் பாவமாக மதியை பார்த்தானென்றால் கௌஷிக்கோ தனது வலது கையை இருக்கையின் கைப்பிடியில் ஊன்றி அதில் உள்ள கட்ட விரலால் தாடையை தாங்கி , ஆள் காட்டி விரலை உதட்டின் மீது வைத்து ஆழ்ந்த பார்வையுடன் மதியை பார்த்துக்கொண்டே இருந்தான் .

மதியின் மனதில் நொடிப்பொழுதில் பல குழப்பங்களின் தெளிவு கிட்டியது ஆகையால் இது இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த வேலை . தன்னை சென்னை வரவைக்க இவர்கள் அனைவரும் சகுந்தலாவை உபயோகித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கோபமுற்றாள் . ஒரு வார்த்தை கூட பேசாமல் அவ்விடம் விட்டு அகன்றாள் .

கோபமாக வெளியேறிய மதியை கண்டு கௌஷிக் வலியுடன் கண்ணை மூடினான் . சர்கேஷ் தொய்வுற்றான் . சகுந்தலா அவர்களோ என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியாமல் குழம்பி நின்றார் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top