JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-26,27

saaral

Well-known member
அத்தியாயம் -26

கௌஷிக் என்ன முயன்றும் எவ்வளோவோ மன்னிப்பு வேண்டியும் தன்னவள் தன்னை மன்னிக்க தயாராக இல்லை என்பதை உணர்ந்து மனதினுள் பெரும் அழுத்தம் வரும் வரை அதையே போட்டு நினைத்துக்கொண்டு இருந்தான் . இதன் விளைவு அவன் புதிதாக மதுவின் போதைக்கு அடிமையாகினான் .

மது அருந்தி விட்டு என்றும் வெளியில் தங்குபவன் வேலை என்று சொல்லி வெளியில் தங்கும் அவன் வான்மதியின் முற்றிலுமான புறக்கணிப்பில் அளவுகடந்த போதையுடன் அன்று வீடு வந்து சேர்ந்தான் .

அங்கு அறையிலோ வான்மதி தனக்குள் உழன்று கொண்டு இருந்தாள் . இன்று கௌசிக்கை கல்லூரியில் கண்டவுடன் கோபமாக வெளியே வந்தவள் ஆசிரியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று ராஜினாமா கடிதத்தை எழுத தொடங்கி அதை லட்சுமி அம்மாளிடம் கொடுத்து விட்டாள் .

மனதில் எழுந்த விரக்தியுடன் மாலை தாமதமாக கிளம்பியவள் அங்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கண்களில் தேங்கிய நீருடன் வானை வெறித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்து அவளிடம் சென்றாள் வான்மதி .

அருகினில் வான்மதி வந்து நின்றதை கூட உணராமல் வானையே வெறித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை குழப்புதுடன் பார்த்து அவள் தோளின் மீது கை வைத்தாள் .

சட்டென்று தன்மேல் யாரோ கைவைத்ததை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தவள் எதிரினில் வான்மதி நிற்பதை கண்டு அவசரமாக எழுந்து "மேம் " என்றாள் .

"ஹாய் நான் வான்மதி " என்று தன்னை அறிமுகம் செய்ய முயன்றாள் . ஒரு தோழமையோட அந்த சிறு பெண்ணை நெருங்கி அவள் கண்களில் தெரியும் வலிக்கு ஏதேனும் செய்யமுடியுமா என்று என்ன ஆரம்பித்தாள் வான்மதி .

"தெரியும் மேம் ...இங்க பலபேருக்கு நீங்க தான் பெவோரட் " சோபையாக புன்னகைத்து கூறினாள் அந்த பாவை .

மென்மையாக சிரித்த மதி அவள் அமர்ந்திருந்த கல்மேடையில் அமர்ந்து அருகினில் அந்த பெண்ணையும் அமரச்சொன்னாள் .

"சொல்லு உன் பெயர் என்ன " என்ற மதியின் கேள்விக்கு "ஸ்...ஸ்வேதா " என்றாள் . சட்டென்று எழுந்த சிறு வலியுடன் கண்களை அழுந்த மூடி திறந்த மதி தன்னை தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினாள் .

"உனக்கு என்ன பிரச்சனை ஸ்வேதா "

மதியின் மென்மையில் சொல்லிவிடுவோமா என்று யோசித்தாலும் "ஒன்னும் ...ஒன்னும் இல்லை மேம் " என்று தயங்கினாள் .

"சரி அதை விடு உன் அப்பா , அம்மா எங்க இருக்காங்க "

"அவங்க ...அவங்க இல்லை மேம் நான் மாமாவின் பொறுப்பில் ஹாஸ்டெலில் தங்கி படிக்குறேன் " வலியுடன் சொன்ன பெண்ணை பார்த்து இவளுக்கும் வலித்தது .

"ஒஹ் சாரி ....என்ன உன் பிரிண்டா இல்லை சகோதரியை நினச்சு உன் கவலையை சொல்லு என்னால் முடியும் என்று தோன்றினால் நிச்சயம் உதவுகிறேன் , இல்லை உன் கவலையை இறக்கி வைக்க உற்ற தோழியாக இருக்க முயற்சிக்கிறேன் "மதியின் மென்மை கண்டு அந்த பதின் வயது பெண் பெருங்கொரலெடுத்து கதறினாள் .

மதி ஒரு நொடி ஸ்தம்பித்து சுற்றிலும் பார்வையை சுழற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கண்களில் கண்ணீருடன் இருக்கும் ஸ்வேதாவை அணைத்து ஆறுதல் கூறினாள் .

"என்னாச்சு மா " பரிவாகவே கேட்டாள் மதி .

"மேம் என் தந்தை பெரும் பணக்காரர் அவரின் பல நிலங்கள் என் பெயரில் இருக்கிறது . அதிலும் என் திருமணத்திற்கு பிறகே அதன் முழு உரிமை எனக்கு வந்து சேரும் என்ற உயில் வேறு ...இது இதுதான் இப்போ என் பிரச்சனை " மதியின் தோளில் கதறிக்கொண்டே கூறினாள் ஸ்வேதா .

"இதில் என்ன பிரச்சனை மா "

"ஒரு பொறுக்கி என்னை என்னை தவறாக புகைப்படம் எடுத்து மிரட்டி என்னை மணமுடித்து சொத்துக்களை கைப்பற்ற நினைக்கிறான் . அதற்கு நான் இசையவில்லை என்றால் என்னை என்னை " என்று கதறினாள் அந்த பாவை .

மதிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது . பெண்கள் என்ன அவ்ளோ இழப்பமானவர்களா ? அதிலும் நித்தமும் பார்க்கும் பொள்ளாச்சி சம்பவம் ,காசி என்னும் நபரின் திருவிளையாடல்களின் செய்திகள் ஷப்பா எத்தனை எத்தனை சம்பவங்கள் . அவர்களை போன்று நபர்களால் பாதிக்கப்படும் முதல் பெண்ணே எதிர்த்து நின்றிருந்தாள் இவர்களின் தயிரியம் எங்கயோ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போயிருக்கும் .

அந்த ஸ்வேதாவிற்கு தான் உதவுவதாக கூறி வந்தவள் அதை பற்றி சிந்தித்து அமர்ந்து கொண்டு இருந்தாள் . அவன் அளித்த கெடு நாளையுடன் முடிவடைவதால் என்ன செய்து அந்த சிறுபெண்ணை காப்பாற்ற எவ்வழியில் சென்று சேதாரம் இல்லாமல் காப்பாற்ற என்று யோசித்தாள் .

கீழே குடித்து முழு போதையில் தன் தாயின் முன் நின்று இருந்த கௌஷிக் போதையின் பிடியில் "மா மதி மா ....என் மதி என்ன புரிஞ்சுக்கவே மாட்டாளா " என்று புலம்பிக்கொண்டு இருந்தான் .

ஸ்ருதிக்கு மனசுகிடந்து தவித்தது . 'ராஜா மாறி இருக்கும் என் மகனுக்கு என்ன குறைச்சல் காதல் என்று ஒருத்தியை கட்டிக்கொண்டு இப்படி தவிக்கிறானே ' என்று நினைத்தவர் நாளை இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கருவினார் . அவரின் முகத்தின் பாவங்களில் அவரின் மனதை படித்த சரவணன் "ஸ்ருதி ஒரு தடவை நான் சொல்" அவரின் பேச்சை தன் முறைப்பால் கட்டுப்படுத்திய ஸ்ருதி தனது அறைக்குள் சென்று முடங்கினார் .

சரவணன் தானே தன் மகனை அழைத்து சென்று அவனின் அறையில் விட்டார் . அறையின் கதவை திறந்த மருமகளை பார்த்து சங்கடத்துடன் நெளிந்தார் . அவள் அவரின் சங்கடம் போக்க "நான் பார்த்துகிறேன் அப்பா " என்றாள் .

முழு போதையிலும் மதியின் பேச்சில் சந்தோஷமடைந்த கௌஷிக் தன் கனவில் அவளுடன் வாழும் வாழ்வை உண்மையிலே வாழ்ந்துவிட்டான் . சரவணன் கீழ் சென்றவுடன் கதைவடைத்த மதியை அவன் அணைத்து ......

குடி குடியை கெடுக்கும் என்பது எவ்ளோ சத்தியமான உண்மை ....தன்னவளின் மனது மாறுவதற்காக காத்து இருந்த அவனும் அவளின் சம்மதம் இல்லாமலே அவளை ஆட்கொண்டான் .

மதி முதலில் போராடி பார்த்தவள் பின்பு தனது எதிர்ப்பை நிறுத்தி கல்லாக சமைந்தாள் . காலை அவன் முகத்தில் விழிக்க பிடிக்காத மதி வேகமாக தன்னை சுத்தப்படுத்தி இறங்கி கீழ் சென்றாள் .

அவள் சென்ற சற்று நேரத்தில் கண்விழித்த கௌஷிக்கிற்கு கண்கள் எல்லாம் எரிந்தன தலை பாரமாக வலித்தது . எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தவன் ஏதோ உறுத்த தன்னை முழுமையாக பார்த்து அதிர்ந்தவனின் நியாபக அடுக்குகளில் நேற்று நடந்தவை அனைத்தும் வரிசை கட்டி வந்தன .

"ஒஹ் கோட் " என்று தலையில் அடித்துகொண்டு எழுந்து சென்று , விரைவாக தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கீழே சென்றவனுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது .

அறையில் கௌஷிக்குடன் இருப்பது மூச்சு முட்டுவது போல் தோன்றியதால் மதி கீழே விடியும் முன்பே வந்து கூடத்தில் உள்ள நீல் விரிக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தாள் . மதியின் மனதில் நேற்று நடந்தவை எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றோ இவை நிச்சயம் நடக்கும் என்று எண்ணியே இருந்தாள் .

ஆனால் அவளுள் அவள் மேலும் இருகியதை அவளே உணரவில்லை ....உணரும் பொழுது அனைத்துமே கையை மீறி சென்றிருக்கும் என்பதை அவளை சுற்றியுள்ளவர்கள் தெரிந்திருக்கவில்லை .

சூரியன் எவரின் நேரத்தையும் காக்க வைக்காமல் அழகாக தனது முகத்தினை மேகக்கூட்டத்தின் நடுவில் இருந்து வெளியே கொணர்ந்து அந்த நாளை விடியச்செய்தார் .

அந்த அந்தி வானம் மஞ்சளும் சிவப்பும் கலந்து புலர்ந்த காலைப் பொழுதில் சந்தோசமாக தனது வீட்டிற்குள் நுழைந்த கௌசல்யா (காலை வேலை செய்வதற்காக அங்கேயே தங்கி இருக்கும் அன்னம்மாள் கதவை திறந்து வைத்தார் ) "அண்ணி " என்ற கூவலுடன் மதியின் அருகில் சென்று அமர்ந்தாள் .

கௌசல்யாவின் அழைப்பில் தன்னை மீட்ட மதி தனது நாத்தனாரின் முகத்தினில் கண்ட சந்தோசத்தின் தாக்கத்தில் சற்றே மென்னகை புரிந்தாள் . சரியாக அப்பொழுது தனது அறையில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி தனது மகளை கண்டு "என்ன கௌசி இவ்ளோ காலையில் " என்றார் .

சந்தோசத்துடன் தாவி சென்று தனது அன்னையை கட்டிக்கொண்ட கௌசி "ம்மா...." என்றால்முகம் முழுதும் அப்பிய வெக்கத்துடனும் சந்தோஷத்துடனும் .

"என்ன கௌசி " மகளின் சந்தோஷத்திலும் அதீத வெக்கத்தில் குழம்பிய தாய் எதையோ யூகித்தவராக வாஞ்சையுடன் கேட்டார் .

"ம்மா நீங்க நீங்க பாட்டி ஆகிட்டீங்க " என்றவள் தாயின் தோளில் முகத்தை மூடிக்கொண்டாள் . அதற்குமேல் சொல்லவும் வேண்டுமா . பெற்றவர்கள் தாங்கள் பெத்த பிள்ளைகள் பெற்றோர் ஆகும் சமயம் அடையும் சந்தோசத்திற்கும் உவகைக்கும் அளவே இல்லை .

***********************************************************************

அத்தியாயம்-27

சரவணனும் கூடத்திற்கு வந்தார் , சர்கேஷும் காரை நிறுத்திவிட்டு அங்கே வந்தான் . வந்தவன் தனது சகோதரியின் பார்வைக்காக ஏங்கி நின்றான் . சிறிது காலமேயானாலும் தன்னை ஒரு சகோதரனாக ஏற்றுக்கொண்ட அந்த பாவைக்கு உடன் பிறந்த சகோதரனை போன்று நின்று தோல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆல் மனதில் பதிந்து விட்டது . 'தான் கௌஷிக்கிற்கு உதவுவதற்கு முன் சகோதரனாக உண்மையாக இருந்திருக்க வேண்டுமோ ' என்ற எண்ணம் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்றாவது முறையாக அவனுக்கு தோன்றாமல் இல்லை .

எல்லோரும் சந்தோஷத்தில் இருக்க ஸ்ருதிக்கு தனது வீட்டின் வாரிசு என்ற எண்ணம் மனதில் உதித்தது , அப்பொழுதுதான் தனது மகனை பற்றி யோசித்தவரின் முகம் சிடுசிடுப்புடன் மதியின் பக்கம் திரும்பியது .

தாயும் மகளும் பொலிந்து தள்ளிய பாசத்தில் தன்னை மறந்து அதே மென் புன்னகையுடன் நின்றவள் ஸ்ருதியின் முகத்தின் கடுப்பில் குழம்பி நின்றாள் .

ஸ்ருதி நேராக மருமகளை நோக்கி காரமாக "எப்போ எங்கள் வீட்டின் வாரிசை பார்ப்பது ?" என்றார் கறாராக .

மதி ஸ்ருதியின் அதீத கடுமையில் முதலில் துடித்தாள் . பின்பு சுதாரித்து அவரை நேருக்கு நேராக நின்று பார்த்தாள் . அவளுக்கு புரிந்தது ஏதோ நடக்க போகிறது என்று .

சரவணன் ஸ்ருதியை தடுக்க முயல சர்கேஷ் குழம்பி நின்றான் . ஸ்ருதி எவரையும் கண்டுகொள்ளாமல் "நீ என்ன நினைச்சுட்டு இருக்க இது வரைக்கும் என் பையன் கிட்ட ஒருவார்த்தை பேசிருப்பாயா ? இல்லை முகத்தை சாதாரணமாகவேனும் வச்சிருப்பாயா ......என் மகனை போல் ஒருவன் கிடைக்க கொடுத்து வச்ருக்கணும் ....உன்மேல் உள்ள அளவுகடந்த காதலில் உன்னை கட்டிக்கிட்டு என்ன கண்டான் ....கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத என் மகன் நேத்து மொடாக்குடிக்காரனை போல் குடித்துவிட்டு ம்மா என் மதினு பொலம்பறான் " என்று பொரிந்து தள்ளிவிட்டார் . என்ன செய்ய பாழா போன மனதிற்கு தன் மகன் மட்டுமே கண்களிற்கு தெரிகிறானே ஒழிய அதிக வலியை தாங்கி கொண்டு இருக்கும் சகமனுஷியை கவனிக்க தெரியவில்லை .

".........." மதி நேர்கொண்ட பார்வையுடன் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் என்னும் விதமாக தனது கையை கட்டி கொண்டு ஸ்ருதியை பார்த்தாள் . அவளின் அலட்சிய பாவத்தில் மேலும் காண்டானார் ஸ்ருதி .

சரவணனிடம் சென்றவர் "பார்த்தீங்களா இவளுக்கு கொழுப்பை ...அன்னைக்கே சொன்னேன் நீங்க தான் என்னை ஏதேதோ சொல்லி குளப்பிட்டீங்க ....பாருங்க இவ போற போக்கை பார்த்தா நமக்கு வாரிசினு ஒன்னு என்னைக்குமே கிடையாது ."

காடுகத்தலாக கத்தி தீர்த்தவர் தனது வீட்டின் வாரிசை கண்ணில் காண முடியாதோ என்ற ஆதங்கத்தில் மகளின் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தையும் மறந்தார் .

நீல் விரிக்கையில் அமர்ந்து தலையில் கைவைத்திருந்தார் ஸ்ருதி . மதி எந்த பாவமும் காட்டாமல் இறுகிப்போய் நின்றிருந்தாள் . சர்கேஷ் ஆடிப்போய்விட்டான் அவன் சத்தியமாக இப்படி ஒருத்திருப்பதை எதிர்பார்க்கவில்லை 'டேய் நீ குடிச்சுட்டு வந்ததுக்கு எதுக்குடா மதி திட்டு வாங்கணும் ' மனதில் கௌஷிக்கை வறுத்தெடுத்தான் .

கௌசி முகமலர்ச்சியுடன் தன்னை வரவேற்த அண்ணியை அம்மா ஏன் சாடுகிறார் என்று குழம்பி போய் நின்று இருந்தாள் .

சரியாக அப்பொழுது கௌஷிக் கீழே இறங்கி வந்தான் . அங்கு நிலவிய அசாதாரண மௌனம் அவனின் மனதில் கிளியை பரப்பியது . சர்கேஷ் அவனை முறைத்துக்கொண்டிருக்க ,சரவணன் எதாவது செய்யேன் என்று பார்த்தார் . கௌசி குழம்பி நின்றாள் . தாய் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தார் .

அவனின் பார்வை இறுதியாக தன்னவளை தீண்டியது அவளோ கல்லென இறுகி போய் நின்று இருந்தாள் . தான் செய்த செயலுக்கு தன் மனையாள் கோபமாக இருக்கிறாள் என்று அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் அவனின் காதில் விழுந்த அந்த சொற்கள் அவனை நிலைகொலையச்செய்தன .

ஸ்ருதி தனது மகன் வந்ததை உணராமல் தலையில் கை வைத்துக்கொண்டே தன் போக்கில் புலம்பிக்கொண்டிருந்தார் "அன்னைக்கே அவ சொன்னா என் கொழுந்தனின் மனைவிக்கு இருக்கும் அறிவு எனக்கு இல்லை , இந்த பெண் சரியானவளாக தெரியவில்லை ஏன் இப்படி ஒரு பெண்ணை கட்டி கூட்டி வந்தாய்னு கேட்டா .....இவ போட்டோ எங்கெல்லாமோ வந்திருந்திருச்சாமே .....ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று சொன்னாள் ...நான் கேட்டேனா ....இந்த மனுஷன் தான் இல்லை அவங்களை நம்பாதே நம் மகனிற்கு அனைத்தும் தெரியும் நீ தலையிடாதே என்றார் " புலம்பிக்கொண்டு நிமிர்ந்தவர் அங்கு தன் மகனை பார்த்து "கௌஷிக் " என்று கூறிக்கொண்டே அவன் அருகில் செல்ல எத்தனித்தார் .

அவனின் பார்வை சொன்ன செய்தி அவரை எட்ட நிப்பாட்டியது . 'நீங்களா அம்மா இப்படி ' என்ற பார்வை பார்த்தான் . ஒரு நிமிடம் தான் அதற்குள் மதியை காண திரும்பியவன் அவள் தன்னை உக்கிரமாக முறைப்பதை கண்டு தலைதாழ்த்தினான் .

மதி அடுத்த நொடி வேக எட்டுக்களுடன் வெளியே சென்றாள் அவளை பின் தொடர முயன்ற கௌஷிக்கை தனது பார்வையால் தடுத்து சர்கேஷ் மதியின் பின் ஓடினான் .

கௌஷிக் கண்கள் கலங்க வாசலில் மண்டியிட்டான் . அவள் சென்ற திசையை வெறித்தான் .

தோளின் மீது கரம் ஒன்று பதிந்ததை வைத்து திரும்பி பார்த்தவன் அங்கு சரவணனை கண்டு "அப்பா அவ அவ .....போய்ட்டா பா ...." என்று திக்கினான் .

"அவள் போனா போகிறாள் ....திமிர் உடம்பெல்லாம் திமிர் உனக்கென்னடா தலையெழுத்து இப்படி ஒரு பெண்ணை கட்டவேண்டும் என்று " ஆங்காரமாக ஒலித்தது ஸ்ருதியின் குரல் .

"அம்மா " என்று சத்தமிட்டான் .

உன்னால் என்ன செய்யமுடியும் நான் உனக்கு அம்மா என்று நிரூபித்தார் அவர் "என்னடா அம்மா என்ன பேசவிடாம எப்பப்பாரு அவளுக்கே தாங்குவியே ....பாரு அவ லட்சணத்தை ....இதென்னடா கருமம் பிடிச்ச காதல் ....காதல் புத்தியையும் மட்டுப்படுத்திவிடுமோ " தனது காதலையும் எண்ணாமல் என்னலாமோ கத்தி தீர்த்தார் அவர் .

அனைத்தையும் பொறுமையாக கேட்ட சரவணன் "கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம் மகள் உயிரை விட துணிந்தாள் அது ஏன்னு தெரியுமா உனக்கு " ஆம் கௌசியின் முடிவிற்கான காரணம் ஸ்ருதிக்கு தெரிவிக்க படவில்லை .தெரிந்தால் !!!!!!
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top