JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-28

saaral

Well-known member
அத்தியாயம்-28

ஸ்ருதிக்கு கௌசல்யாவின் முடிவிற்கான காரணமாக மன உளைச்சல் அந்த பருவ வயதில் வரும் சில மன அழுத்தம் . படிப்பில் கவனம் சிதறி தவறான முடிவு எடுத்துவிட்டாள் என்றே கூறப்பட்டது .

சரவணனும் , கௌஷிக்கும் அவர் இதை தாங்க மாட்டார் என்று எண்ணி அவ்வாறு கூறினர் . இதில் சரவணன் சொன்னவற்றை கேட்டு கௌசல்யா கண்கள் இரண்டும் நிலைக்குத்த அப்படியே நீள் விரிகையில் தொப்பென்று அமர்ந்தாள் .

அப்பொழுதுதான் மகள் முன் பேசிவிட்ட தவறை உணர்ந்து சரவணன் வேகமாக அவளின் அருகில் சென்றார் . "கண்ணம்மா அப்பா இப்படி பேசுறேன்னு நிலைகுலைஞ்சு போயிடாத மா ... மதி உன்னை போன்று பாதிக்க பட்ட பெண் ...ஆண் மகனை பெற்ற ஒரே காரணத்தால் உன் அம்மா பேசுவதை கேட்டு அந்த பெண் எவ்வாறு பாதித்து இருப்பாள் ...." மகளின் கை பிடித்து வேண்டினார் .

'பாதிக்க பட்ட பெண் 'என்ற வார்த்தையில் கௌஷிக் நிமிர்ந்து தனது தந்தையை அதிர்ச்சியுடன் நோக்கினான் . "எனக்கு எல்லாம் தெரியும் சதாசிவத்தை உன் கல்யாணத்திற்கு முன் சந்தித்து அனைத்தையும் அறிந்துகொண்டேன் " அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்து சரவணன் கூறினார் .

தந்தைக்கு தெரியுமென்பதில் மேலும் அதிர்ச்சிகொண்டான் . கௌசல்யா தனது மன நிலையில் இருந்து தெளிந்து "ஒன்னும் இல்ல அப்பா ...திரும்பவும் அதை பேசவும் சற்றே அதிர்ச்சி , விடுங்க .....என்னை புரிந்து நடந்துகொள்ள சர்கேஷ் இருக்கிறார் " என்று தயிரியமாக கூறி தனது அன்னையின் அருகில் சென்றாள் .

இவர்கள் அனைவரும் பேசுவதை குழப்பத்துடன் கண்ட ஸ்ருதி மகள் தன் அருகினில் வரவும் "கௌசி என்னடி என்னலாமோ பேசுறீங்க ஒண்ணுமே புரியல ....ப்ளீஸ் என்னனு சொல்லேன் " கெஞ்சினார் .

"அம்மா எப்படி நீங்க பசங்களுக்கு பாடம் எடுத்தீங்க " எதுவும் கூறாமல் கேள்வி கேட்ட மகளை வினோதமாக பார்த்தார் .

"என்ன பார்க்கிறிங்க ...பருவ வயதில் பசங்களுக்குல் நடக்கும் மாற்றம் நல்ல வழியிலும் தீயவழியிலும் இட்டுச்செல்லும் . அந்த வயதில் உடன் இருக்கும் ஆசிரியர்கள் , பெற்றவர்கள் தான் அவர்களின் சிறந்த வழிகாட்டிகள் மேலும் பக்குவமடைந்தவர்கள் ...... ஒரு பெண்ணை என்ன நடந்தது அப்படினு தெரியாம யாரோ சொன்னதை கேட்டு இப்படி பேசிய நீங்க எப்படி பக்குவமடைந்தவராக இருக்க முடியும் " மகள் பேசுவதை தன்னை சாடுவதை புரியாமல் பார்த்த அவர் சற்றே சுத்தரித்தார் .

"என்ன எல்லாரும் என்னயே குறை சொல்றிங்க அவ ஒரு நாள் கூட உன் அண்ணன் கூட பேசி ஏன் ஒரு பார்வை பார்த்து நான் கண்டதில்லே ....இதுல அவளுக்கு ஒழுக்க கேடான செயல் செய்த முன் கதை வேறு எப்படித்தான் இவன் இப்படி ஒரு பெண்ணை காதலிச்சானோ ...சரியான ஒழு....." என்ன சொல்லி இருப்பாரோ "அம்மா " என்ற கௌஷிக்கின் ஆங்காரமான சத்தமும் "ஸ்ருதி " என்ற கர்ஜனையான சரவணனின் குரலும் அவரின் வாயை பூட்ட செய்தது.

கௌசல்யா தீர்க்கமாக தனது அன்னையை பார்த்து "அம்மா நீங்களும் ஒரு பெண் , நீங்கள் பெத்த நானும் ஒரு பெண் இப்படி பேச உங்களுக்கு கேவலமா இல்லை .....இனம் இனத்தோட சேரும்னு சொல்லுவாங்க ஆனால் இந்த பெண் இனம் மட்டுமே பெண்ணை எந்த முகமனும் இல்லாமல் வசை பாடும் . அனைத்து பெண்களையும் நான் சொல்லமாட்டேன் உன் போன்ற பல மாமியார்கள் மகனை பெற்ற அகந்தையில் ஆடாதீங்க " கோபமாக பேசியவள் சற்றே நிதானித்து

"இவ்ளோ பேசறயே ஏன் நான் தற்கொலை வரைக்கும் போனேனு தெரியுமா , சர்கேஷை முழுசா காதலிச்சு கல்யாணத்துக்கு ஏன் தயங்கினேன் தெரியுமா ? " என்று கேட்டு அவளுக்கு நடந்தவைகள் அனைத்தையும் கூறினாள் . ஸ்ருதி இடிந்துபோனார் . "என்னடி சொல்ற இந்த வீட்ல தான நானும் இருக்கேன் "

"எனக்கு அண்ணனா உன் மகன் எவ்ளவோ செஞ்சிருக்கான் , இந்த செய்தி கடுகளவு கூட கசிய விடாமல் தடுத்திருக்கான் , ஆனால் ஒரு கணவனா அவன் ஆண்மை தவறிவிட்டான் " தமையனை எரிக்கும் பார்வை பார்த்து கூறினாள் அவள் .

சரவணன் ஒரு பெரு மூச்சுடன் தனது மகனை நோக்கி "இன்னும் எத்தனை நாளுக்கு உன்னை நீ நல்லவனா காட்டிக்க போற " ஆழ்ந்த குரலில் கேட்டார் .

ஏற்கனவே நிலைகுலைந்து போய் இருந்த கௌஷிக் "அப்பா " என்றான் .

"சொல்லுடா இன்னும் எதனை நாளைக்கு நல்லவன் வேடம் ....எங்கே தவறினோம் நாங்கள் ....ஒரு பெண்ணை முன் நிறுத்தி அப்படி என்ன பணம் , பிசினெஸ் , லாபம் , வெறி "

இப்பொழுது கௌசல்யா , ஸ்ருதி இருவரும் குழப்பமான பார்வை பார்த்தனர் . சரவணன் அனைத்தையும் கூறினார் . கௌஷிகின் மனதில் இப்பயே மறித்து போனாலும் நன்றாக இருக்குமே என்றே தோன்றியது .

தாய் , தங்கையின் குற்ற பார்வை அவனை பஸ்பமாக்கியது . கௌசல்யா வெகுண்டு எழுந்து அவனிடம் வந்து "ஒரு பெண் சாக நீ காரணமா ....ஒரு அன்பான தந்தை செத்துப்போக நீதான் காரணமா ...ச்சை " என்று காறி உமிழாத குறையாக பேசி திரும்பினாள் .

இதில் மேலும் அனைவரும் ஸ்தம்பித்தனர் கௌஷிக் ஒன்றும் புரியாமல் பார்த்தான் சரவணன் என்னவென்று மகளை நோக்கி பார்த்தார் "அப்பா அப்பா அண்ணி என் காலேஜ் தான் அவங்க அப்பா இதுனால தான் உடம்பு சுகவீனம் இல்லாமல் மரித்துப்போனார் .....அண்ணியை பார்க்க வரப்ப எல்லாம் எவ்ளோ குதூகலமா பேசுவார் தெரியுமா நல்ல மனிதர் , அந்த ஸ்வேதா அண்ணியோட பிரின்ட் , ரூம் மேட் இந்த செய்தி கல்லூரிகுள் பரவியதால் பாதியில் கிளம்பி போய்ட்டாங்க ....போனவங்க அடுத்தநாளே உயிரை அவங்களோட உயிரை ரயில் தண்டவாளத்தின் முன் மாய்த்துக்கொண்டார்கள் " என்று சொல்லி கதறினாள் . இரு உயிர் பலியாக தனது தமயன் காரணம் என்பதை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top