JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-29,30

saaral

Well-known member
அத்தியாயம்-29

கௌசல்யா சொன்ன செய்தி கௌஷிக்கிற்கு புதிது . இந்த பிரச்னையில் அவளின் தந்தை மாரடைப்பினால் உயிர் துறந்தார் என்று அவன் அறிவான் . ஆனால் ஸ்வேதா ....இப்படி ஒரு பெண் இதில் அநியாயமாக தேவை இல்லாமல் உயிர் துறந்தாள் என்னும் செய்தி அவனை கூறு போட்டது . அன்றே சதாசிவம் இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று கூறினார் என்று அவன் யோசிக்கலானான் .

கௌசல்யா கல்லூரி காலத்தில் இது நடந்தமையால் அனைவருமாக அந்த பெண் ஸ்வேதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதையும் அதே நேரம் தங்களுக்கு தெரிந்தவற்றை தோழிகள் பகிர்ந்துகொண்டதையும் வைத்து தெரிந்துவைத்திருந்தாள் .

..............................................................

இங்கு சர்கேஷ் மதியின் பின் சென்றான் , மதியோ முதலில் அவனை கண்டுகொள்ளாமல் சென்றவள் பின் சற்று யோசித்து அவன் காரில் ஏறினாள் . முகத்தில் பூத்த சிறு நிம்மதியுடன் சர்கேஷ் திரும்பி மதியை நோக்கினான் "மதிமா நான் " என்ன சொல்லவந்தனோ அதை தடுத்து "காலேஜ்க்கு போங்க " என்று கூறி ஜன்னல் வழியாக வெளியே ரோட்டை வெறித்தாள் .

ஒரு பெருமூச்சுடன் அவனும் வாகனத்தை கல்லூரி இருக்கும் சாலைக்கு திருப்பினான் . கல்லூரி வந்தவுடன் வேகமாக இறங்கி முன்னே சென்றவள் திரும்ப வந்து "ரொம்ப தேங்க்ஸ் இனி நான் பார்த்துகிறேன் " ஏதோ வேற்றுமனிதரிடம் பேசுவதை போல் கூறிவிட்டு சென்றாள் .

சர்கேஷ் வேதனை பட்டாலும் அமைதியாக அவள் செல்லும் திசையை பார்த்துக்கொண்டு இருந்தான் . 'இன்று எதற்கு மதி கல்லூரி வரணும் ' என்று அவன் குழப்பத்துடன் என்ன துடங்கினான் . அன்று ஞாயிற்று கிழமை குழப்பத்துடன் காரை விட்டு இறங்கி ஓசை படாமல் அவள் பின்னே சென்றான் .

அங்கு அவன் கண்டது ஒரு சிறு பெண்ணை மதி சமாதானம் செய்வதையும் அந்த பெண் மதியை கட்டிக்கொண்டு கதறுவதையுமே . சற்று நேரத்தில் அவ்விரு பெண்களும் கிளம்பி சாலைக்கு வந்து ஆட்டோவிற்காக காத்துகொண்டு இருந்தனர் . மதி கிளம்பும் பொழுது அவள் கையினில் இருந்த அலைபேசியை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தாள் . அந்த அலைபேசியின் பாதுகாப்பிற்காக மாட்டப்பட்டிருக்கும் கவரில் ஒரு சிறு பண மூட்டை போன்று அழகாக தொங்கும் அதில் எப்பொழுதும் அவள் சற்று பணம் மற்றும் மிகவும் தேவையான சில அட்டைகள் வைத்திருப்பாள் .

ஆட்டோவில் ஏறி அவ்விரு பெண்களும் ஊரை தாண்டி ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு தோட்டத்தினுள் சென்றனர் . அங்கு ஒரு சிறிய வீடு அந்த வீட்டின் முன் ஒரு ஜிப்ஸி மட்டுமே நின்று இருந்தது . ஆட்டோவை சற்று முன்னே நிறுத்தி அந்த பெண் மட்டுமே முதலில் அந்த வீட்டினுள் சென்றாள் . மதி வெளியே நின்று சுற்றியும் இருக்கும் ஆள் நடமாட்டத்தை பார்த்திருந்தாள் . இவர்களை பின் தொடர்ந்து வந்த சர்கேஷ் இவர்களின் செயலை கண்டு பீதி அடைந்தான் . உடனே கௌஷிக்கிற்கும் தகவலை பரிமாறினான் .

சற்று நேரத்தில் உள்ளே சென்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது . மதி எதையும் யோசிக்காமல் வேகமாக உள்ளே சென்றாள் . சர்கேஷ் இவர்களின் பாதுகாப்பை கருதி பின்னே சென்றான் . அங்கு ஒரு முரடன் அந்த சிறு பெண்ணை கையில் பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்தான் . உள்ளே சென்ற மதி அந்த முரடனின் கையில் இருந்து அந்த பெண்ணை விடுவிக்க போராடினாள் . முதலில் கோபத்துடன் மதியை நோக்கியவன் , சற்றே அவளை உற்று நோக்கி அந்த பெண்ணை விட்டு இவளை பிடித்தான் .

சர்கேஷ் வேகமாக உள்ளே வந்து அந்த சிறு பெண்ணை சென்று தூரத்தில் நிறுத்தி இருக்கும் அவன் காரில் அமருமாறு கூறினான் . அதற்குள் அந்த முரடன் மதியின் முடியை கொத்தாக பிடித்து "வாடி உன்னைத்தான் இத்துணை நாள் தேடினேன் நீயா வந்து என்கைல மாட்டுவேன்னு எதிர்பாக்கல " என்று கூறி வெடி சிரிப்பு சிரித்தான் .

மதி குழப்பத்துடன் அவனை நோக்கினாள் . "என்ன என்னைய தெரியலையா ? திவாகர் நியாபகம் இருக்கா " என்று அவன் கேக்கும் போது மதிக்கு சற்றே தெளிவு வந்ததை போல் அவனை முறைத்தாள் .

சர்கேஷ் அந்த பெண் சென்றதை உறுதி செய்து விட்டு வந்து அந்த முரடனை தாக்கினான் . அந்த முரடனும் பதிலுக்கு சர்கேஷை தாக்கினான் . இருவரும் ரசாபாசத்தில் இருந்த சமயம் அந்த சிறு பெண்ணின் கைப்பை அங்கு இருப்பதை கண்ட மதி முன்னேற்பாடாக கொண்டு வந்திருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து அந்த முரடனின் முகத்தினில் அடித்தாள் . அவன் தாக்கப்பட்ட அந்த நொடியை பயன் படுத்தி சர்கேஷ் மதி இருவருமாக அவனை நாற்காலியில் அமர்த்தி கட்டி போட்டனர் .

சரியாக அப்பொழுது அங்கே வந்த கௌஷிக் வந்து மதியை இறுக அணைத்துக்கொண்டு அவளை முழுதாக நோக்கி தன்னை ஆசுவாசம் செய்துகொண்டான் . அவனின் அணைப்பில் இருந்து மதி விலகவும் முயலவில்லை , அந்த அணைப்பில் மயங்கவும் இல்லை . இறுகி போய் நின்று இருந்தாள் .

சர்கேஷின் அலைபேசி ஓசை கேட்டு கௌஷிக் அவளை விடுவித்தான் . அப்பொழுதுதான் அங்கு நாற்காலியில் கட்டப்பட்டிருக்கும் நபரை கண்டான் . "பிரபாகரன் " என்றான் . மதிக்கு அவனின் வாய்மொழியாக கேட்ட பெயர் அவளின் சந்தேகத்தை ஊர்தி செய்தது .

"பிரபாகர் நீ இங்க என்ன பண்ற " என்றான் கௌஷிக் .

கௌஷிக்கின் குரல் கேட்டு கண்களை கசக்கி முழிக்க பார்த்தான் பிரபாகர் . மங்கலாக அவனுக்கு அது கௌஷிக் என்று தெரிந்தது . "கௌஷிக் சார் நீங்களா ?" என்றான் .

மதி கைகளை கட்டிக்கொண்டு கௌஷிக்கை முறைத்தாள் . கௌஷிக் அவளின் முறைப்பில் தடுமாறி "இங்க என்ன பண்ற பிரபாகர் "

"சார் ஒரு பொண்ணு பெறும்கை சொத்துபத்தோட அவங்க அப்பன் கல்யாணம் பண்ணா வந்து சேரும்னு எழுதி வச்சிருக்கான் லாயர் நம்ம ஆளு , நம்ம கைல சொல்டான் அந்த பொண்ண மிரட்டி கட்டிக்க இருந்த சமயத்துல உங்க விசயத்துல ஒரு பொண்ணு இடைஞ்ஜலா இருந்தாளே அந்த வான்மதி அவ வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா ..... என் அண்ணனையும் என்னையும் உள்ள தள்ளி ஒண்ணுமே இல்லாம ஆகிட்டா சார் " என்று இருக்கையில் கட்டிய நிலையில் இருந்து சிலுப்பிக்கொண்டே கூறினான் .

"அன்னைக்கு நீங்க சொல்லி அந்த பொண்ண மிரட்டினோம் சார் , ஆனால் அவ அடங்களை என்னை அவிழ்த்து விடு சார் இப்ப அவ என்கைல ...." என்று கூறுவதற்குள் கௌஷிக் இடியென தனது கையை அவன் முகத்தில் இறக்கினான் .

"சார் " என்று அதிர்ந்த பிரபாகரிடம் "வான்மதி மிஸ்ஸஸ் வான்மதி கௌஷிக் இனி ஒரு வார்த்தை பேசின உரு தெரியாம அழிச்சிருவேன் ராஸ்கல் ...." என்றான் கர்ஜனையாக .

பிரபாகருக்கு அதிர்ச்சி , கௌஷிக் ருத்ர மூர்த்தியாக நின்று இருந்தான் . மதி கௌஷிக்கையும் பிரபாகரையும் அட அற்ப பிறவியே என்னும் பார்வை பார்த்து சர்கேஷிடம் சென்று "என்னை ட்ரோப் பண்றிங்களா அண்ணா " என்றாள் . நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னை அண்ணா என்று அழைக்கும் அவளுக்காக இதை கூடவா செய்யமாட்டான் .

கௌஷிக்கை கண்டுகொள்ளாமல் சென்றவள் சர்கேஷிடம் முழு பிரச்னையும் கூறி அந்த ஸ்வேதாவிற்கு தயிரியமான வார்த்தைகள் கூறி கல்லூரியின் விடுதியில் இறக்கிவிட்டாள் . இனி இந்த பிரச்சனையை தான் கையாள்வதாக சர்கேஷ் வாக்களித்தான் .

********************************************************************

அத்தியாயம்-30

எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிடம் பேசாமல் இருந்த மகள் வீட்டிற்கு வந்திருப்பது அகிலத்திற்கு ஆச்சர்யமாகவும் , அதிர்ச்சியாகவும் இருந்தது . கூடவே சர்கேஷ் ஒருவித எச்சரிக்கை பார்வையுடன் கூறிய செய்தியை கண்டுகொண்டவர் ஏதும் கூறாமல் மகளை வரவேற்றார் . "வா மதிமா "

மதி எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று தனது அறையின் கதைவடைதாள் . அதன் பின் வந்த நாட்களில் மதி ராஜினாமா கடிதத்திற்கு பிறகான ஒரு மாத கால நோட்டீஸ் பீரியட் வேலைக்காக தனது அன்னை வீட்டில் இருந்து சென்று வந்தாள் .

கௌஷிக் அவளை பல முறை இந்த கால கட்டத்தில் சந்திக்க முயற்சித்தும் அதை அழகாக தவிர்த்தாள் மதி . ஸ்ருதி மற்றும் கௌசல்யா கௌஷிக்கை தவிர்த்தனர் . சரவணன் ஏதும் சொல்லாமல் ஒதுங்கிக்கொண்டார் . ஒரு மாத காலம் முடிந்தவுடன் அகிலத்திடம் வந்த மதி "நான் கொடைக்கானல் போலாம்னு இருக்கேன் நிர்மலா சிஸ்டர் கிட்ட பேசிட்டேன் "என்றாள் .

சர்கேஷ் வாய்வழியாக நடந்தவற்றை அறிந்த அகிலம் தனது மகள் திருமணத்திற்கு முன் கூறியதை நிறைவேற்றிவிட்டாள் இதில் தான் சொல்வதற்கு ஒண்ணுமில்லை , மகள் வாழ்க்கை சிறக்க நாம் எடுத்த முடிவு தவறோ என்று அவர் என்ன ஆரம்பித்தார் .

அடுத்தநாள் மதிக்கு முன் அகிலம் பெட்டியை கட்டிக்கொண்டு கொடைக்கானல் செல்ல முதல் ஆளாக நின்றார் . வான்மதி ஒருவார்த்தை பேசாமல் அவருடன் கொடைக்கானல் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தாள் . சர்கேஷிற்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தவள் "அண்ணா நீங்க எனக்கு நல்லது செய்றதா நினச்சு தான் செஞ்சீங்கன்னு புரியுது , ஸ்டில் இட் டிடின்ட் ஒர்க் அவுட் ....விடுங்க இத நினச்சு எந்த கில்ட் பீலும் இல்லாமல் இருங்க " என்று கூறிவிட்டே சென்றாள் .

இது தான் மதி சிறிய வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் சென்று வாழ பழகுவாள் . அவளால் தாண்ட முடியாத ஒரு தடை என்பது கௌஷிக் சம்பந்தப்பட்ட அந்த நிகழ்வு மட்டுமே . அகிலம் ஒருமுறை பேச வரும்பொழுது கூட "அம்மா எனக்கு பெரிதாக உங்கள் மீது கோபம் இல்லை என் நல்லதிற்காக நினைத்தீர்கள் என்று தெரியும் ஆனால் ஆறாத காயம் நீங்க பொய் சொல்டிங்களேன்னு ......ஆனால் அம்மா இந்த கல்யாணம் கற்பழித்தவனே வாழ்கை பிச்சை கொடுப்பதற்கு சமமான விஷயம் ....நடந்தவைகளை மாற்ற முடியாது , ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாது அப்படினு யோசிச்சுட்டீங்க ....என் போன்ற பெண்ணிற்கு தனிமை மட்டுமே இனிமை " என்று கூறி நகர்ந்துவிட்டாள் .
..........................................................................

கௌஷிக் தான் அனைவராலும் தனித்து விடப்பட்டதை உணர்ந்து தவித்தான் . இளைத்து கருத்து பார்ப்பதற்கு என்னவோ போல் இருந்தான் . அவன் அறையில் அவளின் வாசமும் அவளின் பொருட்களும் அவனை கொள்ளாமல் கொன்றது . முதல் முறை தனது அலுவலகத்துக்கு வந்து நேராக திட்டிவிட்டு சென்றவள் தான் அதன் பிறகு இந்த சில நாள் வாழ்க்கையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை .

ஸ்ருதி ஒரு தவறும் செய்யாத மதியை வார்த்தைகளால் வதைத்ததிற்காக நித்தமும் தன்னயே மனதளவில் வருத்திக்கொண்டார் .

சரவணன் தனது மகன் மீது தான் தவறு இனி மன்னித்து அவனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் மதியின் மனதை பொறுத்துதான் என்று அமைதி காத்தார் .

கௌசி தனது அண்ணனை முற்றிலுமாக தவிர்த்தாள் . சர்கேஷ் மற்றும் இனியா மட்டுமே கௌஷிக்கிற்கு ஆறுதலாக நின்றனர் . இனியா தனது நோயாளியாக பரிட்சயமாகிய ரிஷியை பதிவு திருமணம் செய்துகொண்டாள் .

இங்கு கொடைக்கானலில் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர் அகிலமும்,வான்மதியும் .
நிர்மலா சிஸ்டரிடம் எந்த கேள்வியும் கேக்காமல் அவரின் மனதை உணர்ந்து இன்முகமாகவே நடந்து கொண்டாள் . அவரோ "நான் சொன்னது உண்மை மதி உன் திறமை கண்டு தான் சகுந்தலா அவர்கள் சென்னை கூப்பிட்டார்கள் அந்த கல்லூரியின் பங்கை கௌஷிக் வாங்கியது அதன் பிறகு நடந்த சம்பவம் " என்று மட்டுமே கூறினார் அதையும் அவள் இன்முகமாகவே கடந்தாள் .

சரியாக கொடைக்கானல் வந்து ஒரு மாத காலம் கடந்திருந்த நிலையில் மதி அடிக்கடி வாந்தி எடுத்தாள் ஒரு நாள் கல்லூரியில் மயக்கம் போட்டு விழுந்தாள் . அவளை மருத்துவமனை அழைத்து சென்றனர் . அகிலத்திற்கு தகவல் பரிமாறப்பட்டது .

மதியை பரிசோதித்த மருத்துவர் அகிலத்திடம் அவள் கர்ப்பமாக இருப்பதாக கூறினார் . அகிலம் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்று சற்றே திணறினார் இருந்தும் தனது மனதில் எழுந்த பேரப்பிள்ளை என்ற கனவு அவரின் மகிழ்ச்சியை வெளிக்கொணர்ந்தது .

அகிலத்தின் நிலைமை அவ்வாறு என்றால் வான்மதியோ ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள் . அவளின் யோசனையை கண்டு மனதில் கிளி பிறந்தது அகிலத்திற்கு "மதிமா என்ன யோசிக்கிற "

"ஹான் என்ன மா " என்று அவள் கேட்ட கேள்வி அவருக்கு பயத்தை விளைவித்தது .

"என்ன யோசிக்கிற "

"குழந்தையை பத்தி தான் மா யோசிக்கிறேன் " அவளின் பதில் அவரை அச்சம்கொள்ள செய்தது .

"மதி குழந்தைக்கு என்ன ?" அவரின் கலவரம் படிந்த கேள்வியில் அவரின் நோக்கம் புரிந்த வான்மதி "அம்மா இது என் குழந்தை , நான் அம்மா என் மனசு அவ்ளோ கல்லு இல்ல " அன்னை கூட தன்னை புரிந்துகொள்ளவில்லை என்று எரிச்சல் வந்தது .

"இல்ல நீ யோசிச்ச என்னனு கேட்கலாம்னு ....." என்று அவர் இழுக்கையிலே தனது பார்வையால் அவரை தடுத்து "உங்க மாப்பிள்ளை வீட்டுக்கு விஷயத்தை சொல்லிடுங்க " என்று கூறி அதன் பிறகு முற்றிலும் அமைதியை கடைபிடித்தாள் மதி .

................................................................

இங்கு சென்னையில் விஷயம் கேள்வி பட்ட அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர் . சரவணன் மட்டும் தனது மகனை குற்றம் சாடும் பார்வை பார்த்தார் . கௌஷிக் சரவணனை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தான் .

விஷயம் கேள்வி பட்டு வந்த சர்கேஷ் கௌஷிக்கை அழைத்து சென்று "எனக்கு மதி பத்தி தெரியும் எப்படி ?" என்று கேள்வியை முடிக்காமல் விட்டான் . மதி ஒருவரை வெறுத்தால் முற்றிலுமாக ஒதுக்கிவிடுவாள் , கௌஷிக் தந்தை ஆன செய்தியில் மகிழ்ச்சியை விட குற்றம் செய்த முக தோற்றத்தையே அதிகம் சுமந்து இருந்தான் , அதுவே சர்கேஷின் சந்தேகத்தை தூண்டியது .

சர்கேஷின் முடிக்கப்படாத கேள்வி உணர்ந்தால் போல் ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்ட கௌஷிக் "மதி கிளம்பறதுக்கு முந்தின நாள் லிக்கர் எடுத்துட்டு வந்து .....என் சுயநினைவு இல்லாமல் ......"

"பளார் ...."

"........" கௌஷிக் சர்கேஷின் இடியென இறங்கிய அடியை வாங்கிக்கொண்டு கண்கள் மூடி தனது முகத்தில் மனதின் வலியை காட்டினான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top