JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-3

saaral

Well-known member
அத்தியாயம்-3

சஹானா படிப்பிலும் அவளின் செயல்களிலும் மிகவும் கவனமாக இருந்தாள் . நல்ல மதிப்பெண்களிலே தேர்ச்சி பெற்றாள் . செயல்முறை படிப்பையும் விரும்பி கற்றுக்கொண்டாள் .அது போக கணினி சார்ந்த பல வகுப்புகள் சென்று வந்தாள் .

இரண்டாண்டுகள் படிப்பு முடிந்தது . மூன்றாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தனர் மிருதுளாவும் , சஹானாவும் .

சஹானா கீர்த்தனாவை கவனமாக பார்த்துக்கொண்டாள் .

சஹானாவிற்கு சாதகமாக சில விஷயங்கள் நடந்தன , இடையில் சதீஷ் வந்தான் அவன் மிருதுளாவை காணக் கல்லூரிக்கே பல முறை வந்திருந்தாலும் சஹானாவை பார்க்க முடியவில்லை . சஹானா அப்பொழுது ஊருக்கு செல்லவேண்டும் என்று கூறி விடுப்பு எடுத்திருந்தாள் .

மிருதுளா எப்பொழுதும் சஹானா , சஹானா என்றே அவள் புராணம் பாடினாள் .

சதீஷ் கூட வாயை திறந்து கேட்டுவிட்டான் "யாருமா சஹானா , எங்க காட்டு பார்க்கலாம் ...காது தேயுற அளவுக்கு அவள் புராணமே பாடறியே ?" கேலியாகத்தான் கேட்டான் .

"போ அண்ணா ஷி இஸ் பிரில்லியண்ட் ....அவ பாவம் அப்பா இல்லாம அம்மாவோட இருக்கா ...மிடில் கிளாஸ் அஃப்டர் காலேஜ் உன் கம்பெனில அவளுக்கு நல்ல வேலை போட்டு கொடு அண்ணா "..தமயனிடம் தோழிக்காக கெஞ்சினாள் .

அவளே அறியாத விஷயம் தங்கள் நிறுவனத்தில் சஹானா நுழைய தானே வழிவகுத்து அவளுக்கு உதவி புரிய போகிறோம் என்பதை ....என்றேனும் மிருதுளா அறிய நேரிடுமா ...!.

"பார்டா ரெகமெண்டஷனை ...ஹ்ம்ம் இப்ப நான் ஓவர்சீஸ் ப்ராஜெக்ட் பண்றேன் மிருது , பிரவீன் தான் எல்லாம் இங்க பார்த்துகிறான் ...அவன் இன்டெர்வியூ எடுத்து ஓகே சொன்னா எனக்கொண்ணும் இஸ்ஸு இல்லை ..." தொழில் மீது அவன் கொண்டிருந்த காதல் பெரியது .

பிரவீன் விவசாயத்தில் ஆர்வம் கொண்டாலும் படித்தது மென்பொருள் ஆகையால் சதீஷ் வெளிநாட்டில் இருக்கும் வரை இங்கு பீஎஸ்எம் இன்போடெக் அவனின் பொறுப்பு .

கடந்த சில நாட்களாக சதீஷின் நடவடிக்கையில் பிரவீன் மாற்றத்தை கண்டான் ஆகையால் பெரிதாக இருவருக்கும் முட்டிக்கொள்வது இல்லை . அதே நேரம் இருவரும் நெருக்கமாகவில்லை ....தொழில் சார்ந்த உரையாடல்களே பெரும்பாலும் இடம் பெரும் .

மிருதுலாவால் சஹானாவின் வீட்டிற்கு செல்ல முடியவில்லை , சாரதா அதற்கு தடையாக இருந்தார் . "மிருது பழக்கம் எல்லாம் காலேஜோட முடிச்சுக்கோ , நம்ம ஸ்டேட்ஸ்க்கு ஈகுவல் இல்லாதவங்க வீட்டுக்கு போறது அசிங்கம் "என்றுவிட்டார் .

...............................

பிரவீன் எந்த வகையிலும் சஹானாவை நெருங்க முயற்சிக்கவில்லை ..தூரத்தில் இருந்தே ரசிப்பான் . அவனின் ரசனையையும் எண்ணவோட்டத்தையும் சஹானா அறிவாள் .

இத்தனை நாட்களின் பழக்கத்தில் பிரவீனிடம் சஹானாவிற்கு எதுவும் தவறாக தோன்றவில்லை சற்றே குழம்பினாள் .

அன்றும் அப்படித்தான் தனது அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கையில் "அப்பா பிரவீன் கேரக்டர் எதுவுமே தப்பா தெரியலை , ரொம்ப கன்னியமா இருக்கார் ...." குழப்பத்துடன் பேசினாள் .

"நானும் அதே தாண்டா யோசிச்சேன் சதீஷை ஷடோவ் பணத்துலயும் எதுவும் உருப்படியா கிடைக்கலை ...என்ன பண்றது ?" யோசனையில் ஆழ்ந்தார் .

"அப்பா விஸ்வம் மகன் இன்வோல்வ்ட் அது உறுதி , ஆனால் அது பிரவீன் ஆர் சதீஷ் சோ கனபியூசிங் ..பார்க்கலாம் " யோசனையுடன் பேசிக்கொண்டிருந்தவள் திடீர் என்று தெளிந்து அமர்ந்தால் .

"அப்பா எனக்கொரு யோசனை " என்று ஆரம்பித்து தனது திட்டத்தை முழுதாக எடுத்துக்கூறினாள் .

அவரோ "சரி மா நான் பார்க்கிறேன் ...."

அதன் பிறகு வந்த நாட்களில் படிப்பு , பரீட்சை என்று நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தன .மிருதுளாவின் வீட்டிற்கு ஒன்றிரண்டு முறை சென்று வந்திருந்தாள் சஹானா . இருவரும் நல்ல தோழிகளாகினர் .

மூன்றாம் ஆண்டின் இறுதி பரீட்சை நடந்துகொண்டிருந்த சமயம் பிரவீன் வெளிநாடு போக வேண்டி வந்தது .

அப்பொழுது அவனிடம் வந்த மிருதுளா "அண்ணா சதீஷ் அண்ணா சொன்னான் உங்கிட்ட கேட்க்க சொல்லி "

"என்ன மிருது ?" பிரவீன் அவளை ஊக்கப்படுத்தினான் .

"பைனல் இயர் ப்ராஜெக்ட் வருது நானும் சஹானாவும் நம்ம கம்பெனில வந்து பண்ணட்டுமா .?.." எங்கே பிரவீன் எதாவது சொல்லிவிடுவானோ என்ற பயம் அவளுள் .

பிரவீன் மனதினுள் குத்தாட்டம் போடுவதை அவள் அறிவாளா ....? 'மிருதுமா கரும்பு தின்ன கூலி கொடுத்தா கசக்குமா ' என்றுதான் பிரவீன் எண்ணினான் .

பிரவீன் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து "அண்ணா ஏதாச்சும் பிரச்னையை , எனக்கு தெரியும் உனக்கு இந்த பேவர் பண்றது பிடிக்காதுன்னு ...பட் சஹானா அவளுக்கு யாரையும் தெரியாதுன்னு யோசிக்கறா ....பாவம் அண்ணா உனக்கே தெரியும்ல அவளுக்கு ஹெல்ப்புக்குன்னு யாரும் இல்லை " மெதுவாக கூறினாள் மிருதுளா .

"அண்ணா இப்ப கூட சஹானா அவளா இதை கேட்கலை ...நானா தான் ...ப்ளீஸ் எனக்காக " பாவமாக எங்கே அண்ணன் மறுத்துவிடுவானோ என்று பதட்டத்துடன் கூறினாள் .

"ஹே நான் ஒன்னும் சொல்லல , நீயும் உன் பிரிண்டும் தாராளமா நம்ம கம்பனிக்கு வாங்க ...பட் ஏன் இப்பவே கேட்கற ...உங்களுக்கு இன்னும் ஒரு செமஸ்டர் இருக்கே ?" யோசனையுடன் கேட்டான் பிரவீன் .

"அண்ணா நீ நெஸ்ட் வீக் ஓவர் சீஸ் போற எப்ப வருவன்னு சொல்லமுடியாது வந்தாலும் எத்தனை நாள் வீட்ல இருப்ப ...பெண்டிங் ஒர்க் இருக்குனு ஓட ஆரம்பிச்சுடுவா அதான் " என்று கூறினாள் மிருதுளா .

"ஓகே மா நோ ப்ரோப்லேம் அண்ட் சதீஷ் சொன்னான் சஹானா ஜாப் பத்தியும் கேட்டைனு ...பார்க்கலாம் ...ஒழுங்கா ரெண்டு பேரும் படிப்பை முடிங்க ..." அவ்விடம் விட்டு நகர்ந்த பிரவீனின் மனதில் சந்தோசம் பெருகியது .

தன்னவள் இனி தன் அருகினில் என்றே எண்ணினான் . தங்கையிடம் பார்க்கலாம் என்று கூறியவன் அறிவான் சஹானா நிச்சயம் எலிஜிபில் கேண்டிடேட் என்று . சஹானாவை நெருங்க முயற்சிக்கவிலையே தவிர அவளை பற்றிய செய்திகளை அறிந்துகொண்டிருந்தான் .

படிப்பில் அவளின் சூட்டிகை தனமும் , எளிதாக மிருதளவிற்கு புரியும் வகையில் சொல்லிக்கொடுப்பதும் அவன் அறிந்த விஷயமே .

பிரவீன் அறிவான் சஹானாவின் அம்மாவிற்கு ஏதோ உடல் நிலை சரி இல்லை என்று . வீட்டில் ஒரு பெண்ணை அம்மாவை பார்த்துக்கொள்ள வைத்துவிட்டு கல்லூரி வந்து செல்பவள் மீண்டும் மாலை அம்மாவை தனது பொறுப்பில் பார்த்துக்கொள்கிறாள் என்றறிவான் .

மாலை சஹானா , கீர்த்தனா அவர்களோடு காற்றாட கதை பேசிக்கொண்டே அவர்களின் வீட்டின் அருகினில் இருக்கும் பார்க்கிற்கு சென்று வருவதை தூரத்தில் இருந்தே ரசித்திருக்கிறான் .
.......................

காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை , மிருதுளா சொன்னது போல் வேலை விஷயமாக வெளிநாடு சென்ற பிரவீன் தாமதமாகவே வந்தான் . அதற்குள் சஹானாவும் , மிருதுளாவும் ப்ரொஜெக்ட்க்காக பீஎஸ்எம் இன்போடெக்கிற்கு வந்து சென்றனர் .

அதுவரை நடந்த பரீட்சைகளில் சஹானா நல்ல சதவீதம் எடுத்திருந்தாள் , இறுதி பரிட்சைக்காகவும் தயாராகிக்கொண்டிருந்தாள் . மேற்கொண்டு படிக்கச் வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தாலும் அவளின் கடமைகள் அதை தடுத்தது .

இந்த செமஸ்டர் கல்லூரிக்கு ப்ராஜெக்ட் விஷயமாக சென்று வந்து கொண்டிருந்தனர் . மிருதுளா அவளின் வேலைகளையும் சஹானாவிடம் தள்ளிவிட்டு அவளின் அம்மாவுடன் வெளியே சென்றுவிடுவாள் .

அன்று பிரவீன் நிறுவனத்திற்கு வந்தவன் சஹானாவை அங்கு பார்த்து மகிழ்ச்சியுற்றான் ...."ஹாய் சஹானா " என்றான் அவளை நெருங்கி .

"ஹலோ சார் எப்ப இந்தியா ரிட்டர்ன் ஆனீங்க " புன்னகையுடன் பேசினாள் .

"நேத்து தான் ...என்ன பண்ணிட்டு இருக்க , மிருது எங்க ?" யோசனையாக பார்வையை சுழல விட்டான் .

"சார் அது " என்று சஹானா இழுக்கையில் ,அவளின் பின் இருந்த கணினியை கூர்ந்து கவனித்தான் .

அந்த டெஸ்க் மாலத்தினுடையது , அவளின் கணினியில் இவள் என்ன செய்கிறாள் ? யோசனையில் ஆழ்ந்தான் .

அதற்குள் தனது மேடிட்ட வயிற்றை தள்ளிக்கொண்டு வந்து அங்கு நின்ற மாலதி "ஹாய் பிரவீன் சார் " என்ற முகமனுடன் கணினியின் முன் அமர்ந்தவள் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தாள் .

"சஹானா இங்க என்ன பண்ற நீ ?" கடுமையாக வந்தது பிரவீனின் கேள்வி .

அதை இடையிட்ட மாலதியின் குரல் சந்தோஷத்தில் இருந்தது "ஹே சஹானா எப்படி இந்த கோடிங் செஞ்ச ...ரொம்ப நேரமா எரர் காட்டுச்சு ..." என்று கூறிக்கொண்டே சென்றாள் ,அப்பொழுதுதான் பிரவீன் அங்கு நிற்பதை கண்டு

"சாரி சார் இந்த கோடிங் எரர் காட்டுச்சு நானும் ட்ரை பண்ணேன் முடியலை , அதான் சஹானாகிட்ட கொஞ்ஜம் பார்த்துக்க சொல்லிட்டு பாண்ட்ரி போனேன் , சஹானா என்ன எரர் ?" பிரவீனிடம் ஆரம்பித்து சஹானாவிடம் முடித்தாள் மாலதி .

சஹானா பிரவீனை ஒரு பார்வை பார்த்து திரும்பியவள் மாலதிக்கு விளக்கி கூறினாள் . சஹானா ஒவ்வொன்றையும் எடுத்துக்கூறும் பாங்கு , அதில் தெரிந்த நுணுக்கம் பிரவீனின் புருவங்களை உச்சிக்கு உயர்த்தின ஆச்சர்யத்தில் .

"சஹானா கம் டு மை ரூம் ."கடுமையை வரவழைத்து சொன்னவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான் .

சற்று நேரத்தில் உள்ளே வந்த தன்னவளை கண்ணெடுக்காமால் பார்த்துக்கொண்டிருந்தவன் வாயை திறக்கவில்லை .

"சாரி சார் நான் அவங்களுக்கு ஹெல்பா இருக்குமேன்னு தான் சரி பார்த்தேன் ...எனக்கு அந்த கோடிங் நல்லா தெரியும் , தப்பா இருந்தா சாரி அகைன் " நேராக அவனின் கண் பார்த்து பேசினாள் .

அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனை ஈர்த்தது இருந்தும் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு "லுக் சஹானா நீ மிருதுவோட பிரின்ட் அதான் உனக்கு இங்க இவ்ளோ லிபெர்ட்டி ... ப்ராஜெக்ட் பண்றதோட உன் வேலை முடிஞ்சது எதுக்காக அடுத்தவங்க வேலைல தலையிடற "

"சார் ஹுமானிட்டி இஸ் நீடெட் ....அவங்க ப்ரெக்னன்ட் ...ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டாங்க , இன்னைக்கு ஈவினிங்குள்ள ரிபோர்ட் பண்ணனும் போல எனக்கு அந்த கோடிங் நல்லாவே தெரியும் அதான் ஜஸ்ட் எ ஸ்மால் ஹெல்ப் "

"இங்க அவங்க அவங்க வேலையை அவங்களே தான் பார்க்கணும் சஹானா , மயின்ட் தட் பஸ்ட் ....உங்க ப்ராஜெக்ட் எந்த லெவெலில் இருக்கு ?" பிரவீன் சில விஷயங்களில் கடுமையானவன் . வேலையில் நேர்மையானவனும் கூட ஆகையால் சஹானாவின் அதிக பிரசங்கித்தனம் அவனிற்கு கோபத்தை வரவைத்தது .

"மிருதுளாவிற்கு மெயில் பண்டேன் சார் அவ உங்க கிட்ட எஸ்பிளயின் பண்ணுவா பை " சொன்ன நொடி அவனின் அறை விட்டு விடுவிடுவென்று வெளியேறினாள் .

'ஒரு ஹெல்ப் தான பண்ணேன் தப்பா ஏதாச்சும் பண்ணினேனா என்னமா பேசறார் ' மனதிற்குள் அவனை தாளித்தாள் .

ப்ரொஜெக்ட்டிற்காக வருவதற்கு முன்பே மிருதுளா கூறி இருந்தாள் "சஹானா பிரவீன் அண்ணா , சதீஷ் அண்ணா போல இல்லை நேர்மையானவர் , வளைஞ்சு கொடுக்க மாட்டார் . அதே நேரம் ஒருவர் சிறப்பாக செயலாற்றினால் பாராட்டவும் தவற மாட்டார் . அவருக்கு இந்த பேவர் பண்றது , ரெகமெண்டேஷன் எதுவும் பிடிக்காது ....ஒருவர் அந்த வேலைக்கு தகுதியானவர் என்றால் நிச்சயம் அவரை அண்ணா விடமாட்டார் " என்று கூறித்தான் கூட்டிவந்தாள் .

அங்கு பிரவீன் மனதிலோ 'அம்மாடி என்ன கோவம் ....அடுத்தவங்க வேலையை ஏன் செஞ்சன்னு கேட்டது ஒரு குத்தமாயா ?' என்று செல்லமாக அலுத்துக்கொண்டான் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top