JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-31,32

saaral

Well-known member
அத்தியாயம்-31

ஸ்ருதியும் , சரவணனும் வந்து வான்மதியை கொடைக்கானலில் சந்தித்தனர் . பின்னாடியே கௌஷிக் வந்தான் . ஒருவார்த்தை பேசாமல் அவளை கண்டான் , அவளை மட்டுமே கண்டான் .

சரவணன் மதியை பார்த்துக்கொள்ளவே கொடைக்கானலில் ஒரு தேயிலை தோட்டத்தை வாங்கி அவரின் மகன் வழி பேரன் பேத்திக்கு அவருக்கு பின்னால் சேரும் என்றும் எழுதிவைத்துவிட்டார் . மதி ஸ்ருதியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை .

சரவணன் மற்றும் கௌசல்யா பேசும் பொழுது முகம் குடுத்து பதில் சொல்லும் வான்மதி அவரை முற்றிலுமாக தவிர்த்தாள் .

வான்மதியின் மணிவயிற்றில் இரட்டையர்கள் வந்து வீற்றிருக்கிறார்கள் என்று மருத்துவர் கூறியவுடன் மொத்த குடும்பமும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது . கௌஷிக் சென்னைக்கும் , கொடைக்கானலுக்கும் மாற்றி மாற்றி அலைந்தான் . இந்த செய்தி அறிந்தவுடன் ஸ்ருதி தனது மௌனத்தை களைத்து மகனிற்கு அழைத்துவிட்டார் .

கௌஷிக் சென்னையில் ஒரு முக்கிய கூட்டத்தில் இருந்தவன் தாயின் அழைப்பை அதுவும் இத்துணை நாட்களுக்கு களித்து என்று பார்த்தவுடன் முதலில் மகிழ்ச்சியடைந்தவன் பின்பு எவருக்கேனும் எதுவோ என்ற பதட்டத்துடன் அழைப்பை ஏற்றான் "கௌஷிக் !!" அவரின் மகிழ்ச்சியான அழைப்பை கேட்டு "அம்மா " என்றான் நெகிழ்வாக .

"கௌஷிக் உனக்கு ரெண்டு குழந்தைங்க வரப்போகுதுடா " தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அன்னை கூறிய செய்தியை கேட்டு "என்னமா ...என்ன சொல்றிங்க " குழப்பத்துடன் கேட்டான் .

"டேய் உனக்கு ரெட்டை பிறவி பிறக்க போகுதடா " என்றார் சந்தோசத்துடன் .

அதற்கு பிறகு கௌஷிக் ரெக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான் .

..................................................

மதி எவரின் வரவையும் தடுக்கவில்லை , எவரின் அக்கறையையும் நிராகரிக்கவில்லை ஆனால் அமைதிகாத்தாள் . வேலைக்கு சென்று வந்தாள் ஆனாலும் எதிலும் அமைதி . தன்னையும் தனது பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொண்டாள் . அடுத்தவாரம் மதிக்கு மகப்பேறு நாளிற்கான தேதி என்று இருந்த நிலைமையில் இன்று அவளுக்கு லேசாக வலி வந்தது .

அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டவள் மீண்டும் சற்று இடைவேளை விட்டு வலி வரவும் "அம்மா " என்று சற்று சத்தமாக அழைத்துவிட்டாள் . அடுப்படியில் இருந்து அகிலம் வேகமாக ஓடிவந்தார் .

"மதி என்னமா ?"

"அம்மா வலிக்குது " பல்லைக்கடித்துக்கொண்டு கூறினாள் .

"ஆண்டவா இரு நான் அம்புலன்ஸ்க்கு கூபிட்றேன் " என்று அலைபேசியை எடுத்தவரை "வேண்டாம் " என்ற ஒற்றை சொல்லில் தடுத்தாள் .

"மதி?" கேள்வியாக பார்த்த அன்னைக்கு "உங்க மாப்பிளையை கூப்பிடுங்க " என்று பதில் தந்தாள் .

"ஹே என்ன விளையாடறயா " என்று கடிந்துகொண்டார் . அவரின் கோபத்திற்கும் நியாயமான காரணம் உண்டு கௌசல்யாவின் குழந்தை பிறந்து இரு மாத காலம் ஆன நிலையில் நேற்று தான் அவளையும் , குழந்தையும் அழைத்து சென்று புகுந்தவீட்டில் விட்டனர் ,ஆகையால் அனைவரும் சென்னையில் இருப்பார்கள் என்று எண்ணினார் .

"நான் சொல்றத செய்ங்க " ....என்று கூறியவள் "அம்மா ....." என்று மீண்டும் வலியில் கத்தினாள் .

எதை பத்தியும் யோசிக்காமல் கௌஷிக்கிற்கு அழைத்தவர் அவன் அழைப்பை ஏற்கவும் "மாப்பிள்ளை எங்க இருக்கீங்க ?" என்று பதட்டமாக கேட்டார் .

"அத்தை என்னாச்சு மதி , மதி எப்படி இருக்கா " அவனின் குரலிலும் பதட்டம் .

"வலி வந்திருச்சு ஆனா ஹாஸ்பிடல்க்கு கூப்பிட விடாம உங்கள கூப்பிட சொல்றா "

அவனிற்கு குழப்பம் ஆனால் காட்டிக்கொள்ளாமல் "அத்தை நான் பக்கத்துல தான் இருக்கேன் இன்னும் பத்துநிமிஷம் நீங்க போன் ஹா ஸ்பீக்கர்ல போடுங்க .

"சரி மாப்பிள்ளை "

"மதி நான் இங்க தான் வந்துட்டு இருக்கேன் நீ ஹாஸ்பிடல் போ ....ப்ளீஸ் " கெஞ்சினான் .

"......" அவளிடம் மௌனம் மட்டுமே

"மதி மதி ப்ளீஸ் லிசென் நான் பண்ணினது தப்பு ....தெரியும் வலிக்க வலிக்க அதை உணருறேன் ....இதுக்காக உன்னை தண்டிச்சுகாதா ப்ளீஸ் " அவனின் குரலில் இருந்த கலக்கம் அவன் அழுகிறான் என்று அவளுக்கு உணர்த்தியது .

"....." மதி மீண்டும் மௌனமே .

அகிலம் பொங்கி எழுந்தார் "அடியே உனக்கு இவ்ளோ அழுத்தம் ஆகாது சொல்லிட்டேன் " என்று அவர் முடிக்கையில் "அம்மா ......." என்று வீறிட்டாள் .

"மதி இதுக்கு நீ என்னை கொன்றலாம் " அவன் கதறிவிட்டான் .

"நீங்க வராம நான் ஹாஸ்பிடல் போகமாட்டேன் " தனது திருவாயை வலியிலும் திறந்து கூறிவிட்டாள் .

கௌஷிக் எப்படி வந்தான் என்று கேட்டால் அவனிற்கே தெரியாது . வந்தவன் நேராக உள்ளே சென்று தனது மனையாளை கண்டான் . பல்லை கடித்துக்கொண்டு அவள் வலியை கட்டுப்படுத்துவது அவனிற்கு புரிந்தது . அவள் தீர்க்கமான பார்வையை அவனின் பார்வையில் கலக்கவிட்டாள் .

அங்கு கையை பிசைந்து நின்று கொண்டு இருந்த அகிலம் கௌஷிக்கின் வருகை உணர்ந்து "மாப்பிள்ளை அவளை உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும் "என்று பதறினார் .

அதன் பிறகு அவளை அகிலத்தின் உதவியுடன் அழைத்துச்சென்றான் . அவனின் மனதிற்கினியவள் அவன் அவளுக்காக ஆசையாக வாங்கிய காரில் .....ஆனால் நிலைமையோ வேறு . அவள் கல்லூரி காலத்தில் அந்த காரை ஆசையாக பார்த்ததை வருடியதை கண்டு இவனும் மதிக்காகவே இந்த ரதத்தை வாங்கினான் .

அவன் மனதில் தங்கையை சர்கேஷின் வீட்டில் விட்டதிலிருந்து ஒரு நெருடல் ஆகையால் கிளம்பி கொடைக்கானல் வந்தான் வந்ததும் நல்லதிற்கே என்று எண்ணினான் .

அங்கு மருத்துவரோ பரிசோதித்து வந்து கௌஷிக்கிடம் "மிஸ்டர் கௌஷிக் அவங்களுக்கு வலி வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சு அண்ட் குழந்தைங்க இடை சற்று அதிகம் சுகப்ரிஸவம் சிரமம் ஆகையால் ஆபரேஷன் ஐஸ் ஒன்லி வே "

"ஓகே டாக்டர் " சுரத்தே இல்லாமல் கண்கள் கலங்க கூறினான் .

ஆனால் அவரோ அங்கேயே நின்று இருந்தார் "என்னாச்சு டாக்டர் "

"மிஸ்ஸஸ் கௌஷிக் ஒப்பரேஷன்க்கு ஒத்துக்க மாட்டீங்கிறாங்க .....ஆபரேஷன் பண்ணனும் அப்படினா நீங்களும் உள்ளே இருக்கனும் சொல்ராங்க எங்க ஹாஸ்பிடல் ரூல்ஸ் அதுக்கு அலோவ் பண்ணமாட்டாங்க " குழம்பிய படி கூறினார் . மருத்துவராக அவரின் நோயாளிக்கான பாதுகாப்பு அவரின் பேச்சில் அதிகம் தெரிந்தது .

*********************************************************

அத்தியாயம் -32

அதன் பிறகு கௌஷிக் பணத்தை அந்த மருத்துவமனைக்கு நன்கொடையாக வாரி இறத்தான் . பலன் அவனும் அறுவை சிகிச்சை அறையில் .

நடு முதுகு தண்டில் அனெஸ்தீஸியா செலுத்தியதில் இருந்து , வயிற்றை அறுவைசிகிச்சை மூலம் கிழித்து ஆண் ஒன்று , மகள் ஒன்று என்று அவர்களின் பிள்ளைகள் இந்த பூவுலகை தொட்டதில் இருந்து மேலும் அவளுக்கு மீண்டும் வயிற்றில் தையல் போடும் வரை கௌஷிக் அங்கேயே இருந்தான் .

கௌஷிக்கின் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் . ஆனந்தம் ஒரு பக்கம் என்றால் 'ராட்சசி அவள் படும் வேதனையை பார்வையாலே எனக்கும் உணர்த்திவிட்டாளே ' என்று வருத்தம் ஒரு பக்கம் .

இந்த காலத்தில் மயக்கமருந்து கொடுத்து அறுவைசிகிச்சை பிள்ளைப்பேற்றிற்கு செய்வதில்லை அனெஸ்தீஸியா கொடுத்து இடுப்பிற்கு கீழ் பகுதியில் உணர்வு இல்லாமல் செய்து குழந்தையை எடுக்கின்றனர் .

சுகப்ரிஸவம் அந்த நேர வலி என்றாலும் சுகமான வலி . ஆனால் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பது ஆயுள் முழுதும் வலி .

குழந்தைகள் பிறந்தாகிற்று உறவினர்கள் என்று அனைவரும் வர துடங்கினர் . கௌஷிக் அவளுடன் தான் இருந்தான் ஆனால் மதி கௌஷிக்கிடம் ஒருவார்த்தை முகம் குடுத்து பேசவில்லை . மதி ஸ்ருதியுடனும் ஒருவார்த்தை பேசவில்லை அவர் எவ்ளோ மன்னிப்பு கேட்டும் அவள் மனம் இறங்கவில்லை . அவளின் அமைதி அகிலத்தினுள் பேரலையை உருவாக்கியது .

குழந்தைகள் பிறந்து இரண்டு மாதம் ஆன நிலையில் சரவணனும் , ஸ்ருதியும் தங்களின் பேரக்குழந்தைகளை காண வந்தனர் . "அப்பா" என்ற மதியின் அழைப்பில் நிமிர்ந்து அவளை பார்த்தார் .

"என்னமா ?"

"அம்முக்கும் , ராஜாக்கும் பெயர் வைக்கணும் "

"நலவிஷயம் மதிமா என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிற " அவர் இனி மதியின் முடிவுகளில் தலையிடக்கூடாது தனது மகளுக்கு எவ்வாறு துணை நிற்போமோ அவ்வாறே துணையாக இருக்கவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார் .

"அது " என்று அவள் தயங்கினாள் . அகிலம் அவளின் தாயகத்தில் மனதில் ஓடிய ரயில் வண்டியின் ஓசையுடன் அவளையே பார்த்திருந்தார் .

"எதுவா இருந்தாலும் உன் முடிவு தான் மதி , நீ தயங்காம சொல்லு அப்பா நான் இருக்கேன் "

"அது அப்பா கவின்,கவிதா ஆனால் அங்கு முறைப்படி பெயர் சூட்டும் விழாவிற்கு என்ன செய்யணுமோ அதை , அதன் படி செய்ங்க " ஒருவாறு திக்கி திணறி கூறிவிட்டாள் .

அனைவரும் அவளின் முகத்தை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் நோக்கினர் . "அது நான் குழந்தைகளுடன் அங்கேயே வரேன் இனி வேலைக்கு போகவேண்டாம்னு யோசிக்கிறேன் " அனைவரும் மகிழ்ச்சியுடன் அடுத்தது என்ன நடக்கவேண்டும் என்று திட்டம் தீட்டி அடுத்த நான்கு நாட்களில் நல்ல நாளாக பார்த்து சென்னை கிளம்ப ஆயுதமாகினர் . மதியின் முடிவை கௌஷிக் நேராக கேட்கவில்லை ஸ்ருதியின் வாயிலாக அறிந்தான் . மகிழ்ச்சிதான் ஆனாலும் அவளின் முடிவில் இருக்கும் உல் நோக்கம் என்னவென்று அவன் மனது கடந்து அடித்துக்கொண்டது .

சென்னை வந்து இன்று காலை இறங்கினாள் மதி . அகிலத்துடன் அவளின் புகுந்த வீட்டில் அவளின் அறையில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள் . கீழே ஸ்ருதியும் , கௌசல்யாவும் பம்பரமாக சுழன்று விழாவிற்கான ஏற்பாட்டில் இருந்தனர் .

சர்கேஷிடமும் , நிர்மலா சிஸ்டரிடமும் தனது முடிவை அழகாக கூறி அவர்களின் மனதை குளிரச்செய்துவிட்டாள் . சர்கேஷ் அகிலத்தை பழையபடி சென்னை அடுக்குமாடி குடி இருப்பில் இருக்க சொல்லிவிட்டான் . கௌஷிக்கும் , சர்கேஷும் எவ்ளோ கூப்பிட்டும் அவர்களுடன் இருக்க மறுத்த அகிலத்தை மிரட்டி இந்த முடிவிற்கு ஒத்துக்கொள்ள செய்தான் சர்கேஷ் .

விழா இனிதே முடிந்தது . கௌஷிக்கின் மனது அவளின் அருகினில் தம்பதியாக , பெற்றோர்களாக நிற்பதை எண்ணி வார்த்தையால் வடிக்க முடியாத அளவு மகிழ்ச்சி அடைந்தது .

விழா இனிதே நிறைவடைந்தது , மதியின் ஆசைப்படி கவின் , கவிதா என்று அந்த இரு சிறு மொட்டுகளுக்கும் பெயரிடப்பட்டது . விழா முடிந்து அனைவரும் சென்ற நிலையில் கூடத்தில் குடும்பத்தார் மட்டுமே அமர்ந்து இருந்தனர் .

குழந்தைகள் தூங்கிவிட்டனர் . கௌஷிக் மதியின் முகத்தை கண்டு அவளின் யோசனையை கண்டு தானும் யோசனையில் ஆழ்ந்தான் . சரியாக மதி தனது வார்த்தையேனும் முத்துக்களை உதிர்த்தாள் .

"நான் கொஞ்சம் பேசணும் எல்லார்கிட்டயும் " என்றாள் .

அனைவரும் ஒவ்வொரு மன நிலையில் அவளை பார்த்தனர் . "நான் இங்கு இருந்து சென்றது பெண்ணாக என் சுய மரியாதைக்காக அதே நேரம் திரும்ப வந்தது ஒரு தாயாக எனது பிள்ளைகளுக்கு குடும்பத்தை குடுப்பதற்காக , அதற்காக இங்கு நடந்தது , எனக்கு நடந்தது எதையும் மறந்தேன் என்று நினைக்கவேண்டாம் "

"மதிமா " ஸ்ருதி கண்ணீருடன் அவளின் அருகினில் வந்தார் .

"உங்க வயசுக்கு மட்டுமே மரியாதையை என்னிடம் இருந்து எதிர்பாருங்கள் " கண்கள் சிவக்க அவரை பார்வையால் தடுத்தாள் .

அகிலம் "மதி " என்று கத்தினார் .

"அம்மா ப்ளீஸ் ....நான் கடுமையாக இருக்கேன் அப்படினு நினச்சா ஆமாம் நான் அப்படித்தான் ....தவறே செய்யாவிடினும் ஒரு பெண் அதில் சம்மந்தப்பட்டிருந்தால் அவள் தான் குற்றம் செய்தால் என்று எவ்ளோ எளிதா சொல்லமுடியுது ....உங்கள் மகன் குற்றமற்றவர் என்று எவ்வாறு நினைக்கமுடிஞ்சுது , இதை பத்தி இதற்குமேல் பேச எனக்கு விருப்பம் இல்லை நான் இங்கு இந்த பொழுது இருப்பது என் பிள்ளைகளுக்காக , நான் வளர்ந்த குடும்ப சூழ்நிலை என்னால் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக்கூடாதுனு ஒரே காரணத்துக்காக " சொல்லிவிட்டு சரவணனிடம் சென்று

"அப்பா என்னை மன்னிச்சிருங்க எனக்கு முழுதுனையாக இருந்தது நீங்கள் தான் , ஆனாலும் வருத்தம் உண்டு உங்கள் மகன் செய்த தவறை நீங்க தெரிந்த உடனே ஏன் வெளியே சொல்லவில்லை நான் குற்றம் சாட்ட பட்டபின் சொன்னதை ஏன் முன்பே செய்யவில்லை " கண்ணீருடன் கேட்டாள் .

வாஞ்சையாக அவளின் தலையை வருடி "தப்புதான் மதிமா ஒரு அப்பாவாக யோசித்தேன் , கௌஷிகின் அப்பாவாக யோசித்தேன் கௌசல்யாவின் தந்தையாக ஒரு நிமிடம் யோசிக்க தவறியது என் தவறு ...அதற்கு தண்டனையாக இனி எப்பொழுதும் நான் இருப்பேன் வான்மதியின் தந்தையாக லிங்கத்தின் இடத்தில " என்று வாக்கு கொடுத்தார் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top