JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -4

saaral

Well-known member
அத்தியாயம் -4

சென்னை ...

அந்த திருமண மண்டபம் கல்யாணத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் நிரம்பி வழிந்தன .

மணமக்கள் அய்யர் சொல்வதை செய்துகொண்டு அங்கே மேடையில் அமர்ந்து இருந்தனர் . வான்மதி தனது அன்னையுடன் சரியாக முகூர்த்த நேரத்தில் உள்ளே நுழைந்தாள் . முன்பே வந்து தேவை இல்லாத வம்புகளை வலற்றுக்கொள்ள அவள் விரும்பவில்லை .

மண்டபத்தில் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தனர் . மதி தனது அலைபேசியுனுள் தலையை கொடுத்துக்கொண்டு உக்காந்து இருந்தாள் . அகிலமோ அருகினில் இருக்கும் சொந்தங்களிடம் பேசிக்கொண்டு இருந்தார் . சட்டென்று சிறிது சலசலப்பு எழுந்த வேகத்தில் அடங்கியது அங்கு எதையும் அவள் கண்டுகொள்ளவில்லை .

சிலர் வான்மதியை உற்று உற்று பார்த்தனர் அதையும் அவள் தூசியை தட்டுவதை போன்று தட்டிவிட்டாள் . திருமணம் முடிந்து அனைவரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மேடை ஏறினர் . எவரையும் கண்டுகொள்ளாமல் அகிலத்துடன் சென்றாள் வான்மதி . சற்று நேரத்தில் இவர்களின் முறை வந்தபொழுது அகிலத்துடன் மேடை ஏறிய வான்மதியை வம்பிழுக்க ஒரு பெண்மணி முன் வந்தார் , அவர் சிவாவின் தோழனின் தாயார் .

"ஏன்மா நீ வான்மதி தானே " என்றார் .

வான்மதி இறுக்கத்துடன் அமைதிகாத்தாள் . அவரோ விடாமல் அவளிடம் மேடையில் நின்றே வம்புவளர்க்க தொடங்கினார் "எப்பா சிவா இந்த மாதிரி பெண்ணை எல்லாம் எப்படி சொந்தம்னு சொல்லிக்கிட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்ருக்க ...ச்ச் பெண்ணா இவள் ....இவளின் புகைப்படம் எங்கெல்லாமோ வந்து கேவலமா பேசறாங்கனு என் மகன் சொன்னான் " மதிக்கு புரிந்துவிட்டது இவை சிவா மற்றும் அவனின் நண்பர்களின் கைங்கரியம் என்று .

நிமிர்ந்து நின்ற மதி விரைப்புடன் அவரிடம் திரும்பி கண்களில் கனல் கக்க பேச தொடங்கினாள் "உங்கள் மகன் என் போட்டோவை எங்கு பார்த்ததாக சொன்னான் " அவள் உறுமினாள் .

அந்த பெண்மணியோ தவறு செய்யும் உனக்கே இவ்ளோ கொழுப்பா என்னும் ரீதியில் பார்வையை பார்த்து "அது எதோ சொல்லக்கூடாத இணையத்தளம் என்றான் ....அங்கெல்லாம் உனது போட்டோ அப்படினா நீ எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாய் " நமது நாட்டில்தான் எவர் தவறு செய்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்ணாகவே இருக்கிறாள் . அதும் பெண்களே பெண்ணை பற்றி அவதூறாக பேசும் கொடுமை என்றுதான் மாறுமோ .

"ஒஹ் ...சரி நான் நல்ல பெண்ணாக இல்லாமல் போகிறேன் ....அந்த மாதிரி தளங்களில் உங்கள் மகனிற்கு என்ன வேலை " சரியாக நெற்றியடியாக கேட்டாள் மதி . பல நல் உள்ளங்கள் மனதில் அவளுக்கு சபாஷ் போட்டன .

"அது அது " அவர் தடுமாறுவதை பார்த்து நக்கலாக சிரித்த அவள் " எனது புகைப்படம் என்னை அறியாமல் எடுக்கப்பட்டது என்று என்னால் நிரூபிக்க முடியும் ....அப்படியான தளங்கள் சாதாரண மக்களால் பார்க்கப்படுவதில்லை அதை தேடி பிடித்து பார்த்த உங்கள் மகன் உத்தமனா ...அதை உங்களால் நிரூபிக்க முடியுமா " புருவத்தை உயர்த்தி அதே கோப ஆவேசத்துடன் வினவினாள் மதி .

அந்த பெண்மணி வாயடைத்து போனார் . அப்பொழுதுதான் மதிக்கு தனது அன்னையை நியாபகம் வந்தது அவரோ அதிர்ச்சி விலகாமல் கண்களில் நீர் சொரிய நின்றுகொண்டு இருந்தார் . கண்மூடி திறந்து தன்னை நிலைப்படுத்திக்கொண்ட மதி அகிலத்திடம் சென்று "அம்மா இதுக்காக இதுக்காக தான் சென்னை பக்கம் வரவேண்டாம் என்று கூறினேன் " ஆற்றாமையுடன் கூறிய மகளை தாயின் தவிப்புடன் பார்த்தார் அவர் .

சம்புவேலோ அகிலத்திடம் வந்து "பாத்தியா உன் மகளின் லட்சணத்தை ...இதில் எனது மகனை உன் மகளும் கணவரும் வேண்டாம் என்று கூறினர் ...அதுக்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா " தனது மகன் நிராகரிக்கப்பட்ட வன்மத்தில் கேட்டார் .

"வேண்டாம் வீணாக என்னை பேச வைக்காதே ....அண்ணன் என்று பார்க்கிறேன் . எனது மகள் யாரையும் நம்பாதீர்கள் என்று கூறினாள் நான் தான் கேட்கவில்லை அவள் என் மகள் எனது வளர்ப்பு ...சொக்க தங்கம் எவர் என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை ....வா மதி போகலாம் ...." என்று கூறி வேகமாக வந்தவழியே இறங்கி சென்றார் அகிலம் .

கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற மதி தனது அம்மா புரிந்துகொண்டார் என்ற நிம்மதியுடன் அவரின் பின்னே சென்றாள் . மேடையை விட்டு இறங்கும் படிகளில் இறங்கிக்கொண்டு இருந்த மதி இறுதி படியில் கால் வைப்பதற்கு முன் திரும்பி பார்த்தாள் .

அந்த படிகளின் முதல் படியில் இவளையே பார்த்துக்கொண்டு நின்று இருந்த அவனை ஒரு பார்வை பார்த்தாள் . அந்த பார்வையில் என்ன இருந்தது ஆற்றாமையா , குற்றம் சாட்டுவது , கோபம் , வெறுப்பு , இயலாமை ...இன்னதென்று அவனால் பிரிக்க முடியவில்லை . அந்த அவனும் அவளை சலனம் இல்லாமல் எந்த விதமான உணர்வையும் காட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் .

அப்பொழுது அவனின் அருகினில் வந்த சாரதி அவர்கள் "ஹாய் கௌஷிக் வெல்கம் சாரி போர் தி ட்ரோப்பில் " என்று மதியை பார்த்துக்கொண்டே கூறினார் .

மதியின் உதடுகளோ கசப்பாக புன்னகைத்தன அதையும் கௌஷிக் கவனிக்க தவறவில்லை . பொது இடத்தில் வம்பு வேண்டாம் என்று இருவரும் தத்தமது வழியில் சென்றனர் .

..................................................................

மண்டபத்தில் இருந்து வெளியே வந்த வான்மதியும் அகிலமும் அருகினில் அவர்கள் எடுத்து இருந்த விடுதி அறைக்கு சென்றனர் . உள்ளே நுழைந்தவுடன் அகிலம் கட்டிலில் அமர்ந்து ஓவென்று அழத்தொடங்கினர் . மதிக்கு ஆயாசமாக இருந்தது . போராடி அவள் ஓய்ந்து போய் இருந்தாள் .

"அம்மா ப்ளீஸ் அழாதீங்க ....முடியல ....ஓய்ந்து போய்ட்டேன் நீங்களும் அழுது என்னை படுத்தாதீங்க ..." ஆயாசமாக சொன்னாள் .

"அப்பாவும் மகளும் என்னை ஒன்னும் தெரியாதவனு நின்னாச்சுடீங்களா " அழுகை சற்று மட்டுப்பட்டவுடன் கேட்டார் அகிலம் .

"அம்மா " என்று செல்லமாக சிணுங்கிக்கொண்டே அவரை தழுவ முயற்சித்தாள் .

"என்னை தொடாத போ மதி " அவரும் குழந்தையாக மாரி கோபம் கொண்டார் .

"அச்சோடா என் அம்மாவிற்கு கோபம் கூட வருமா இதை பார்க்க மிஸ்டர் லிங்கம் இல்லாமல் போய்விட்டாரே " சிரிப்புடன் வானத்தை பார்த்து காய் நீட்டி கூறினாள் .

"அடிக்கழுதை அப்பாவை பெயர் சொல்லி கூப்பிட்ற " அழுகையை கை விட்டு அவளை செல்லமாக அடிக்க எழுந்தார் .

அவர் மாறிவிட்டதை உணர்ந்து அவர் கைகளில் சிக்காமல் அந்த அறையை வட்டமிட்ட மதி "பார்டா புருஷனை பெயர் சொல்லி கூப்பிட்டா அவ்ளோ கோபம் வருது ஹான் " என்று சிரிப்புனுடன் கேட்டுவைத்தாள் .

சட்டென்று கட்டிலில் அமர்ந்த அகிலம் தலை கவிழ்ந்தார் . இதற்குமேலும் மறைக்க முடியாது என்று எண்ணிய மதி அவரின் அருகில் சென்று மடியில் படுத்தாள் .

"என்ன கேக்கணுமோ கேளுங்க அம்மா நான் சொல்றேன் " திடமாக வந்தது அவளின் சொற்கள் .

"மதிமா என்ன நடந்ததுன்னு சொல்லுமா ...இன்னும் நான் ஒன்னும் தெரியாத பெண் இல்லை ...உங்கள் மகிழ்ச்சிற்காக என்னை நானே குறுக்கிக்கொண்டேன் அதற்காக என்னை முட்டாள் என்று எண்ணிவிட்டீர்களா " ஆற்றாமையுடன் கேட்ட அவரை பார்த்தாள் மதி 'இல்லத்தரசிகள் பலர் தங்களை முட்டாளாக காட்டிக்கொண்டு சுற்றி உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்கின்றனர் ....இது நிச்சயம் மாறவேண்டிய ஒன்று ' என்று மனதினில் எண்ணினாள் .

ஒரு பெருமூச்சுடன் எழுந்த மதி முதலில் இருவருக்கும் உணவுடன் காபி வரவைத்தாள் . கேள்வியாக பார்த்த அன்னையை நோக்கி "அம்மா நிச்சயம் எல்லாம் சொல்லிவிடுகிறேன் என்னாலும் தனியாக பாரத்தை சுமக்க முடியவில்லை முதலில் சாப்பிடுங்கள் .....நேற்று இரவு சாப்பிட்டது ....நீங்கள் மாத்திரை போடவேண்டும் " என்றாள் .

அவரும் எந்த மறுப்பும் கூறாமல் உண்டார் .
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top