JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -6

saaral

Well-known member
அத்தியாயம் -6 அலர் நீ ....அகிலமும் நீ ......
 

saaral

Well-known member
அத்தியாயம் -6

வீட்டிற்கு வந்த கௌஷிக் இனியா மற்றும் சதாசிவம் சொல்லியதை மனதினுள் திரும்ப திரும்ப ஓட்டிப்பார்த்தான் .

"கௌஷிக் இப்பதான் கௌசல்யா கொஞ்சம் கொஞ்சமா அவள் அடைபட்டிருந்த கூட்டில் இருந்து வெளிய வரா ....என்ன இருந்தாலும் இந்த காயம் அவள் மனதில் இருந்துகொண்டே நெருஞ்சி முள்ளாக குத்தும் . எவரேனும் இதை பற்றி ஒரு வார்த்தை பேசினாலும் அவள் மீண்டும் கூட்டிற்குள் அடைந்துவிடுவாள் ....அஸ் திஸ் இஸ் லாஸ்ட் செமஸ்டர் அவள் எக்ஸாம்க்கு மட்டும் போகிற மாதிரி பார்த்துக்கோங்க ....உங்க எல்லோரோடய ஊக்கம் மற்றும் துணை அவளுக்கு நிச்சயம் வேண்டும் ....இதை மறக்க முடியாது கௌஷிக் ஆனால் அதை மறையவைக்கிற சக்தி அவளை சுற்றி உள்ளவர்களை பொறுத்தே இருக்கிறது . உடல் என்பதும் வெறும் ரத்தமும் சதையினாலும் ஆன ஒன்று என்பதை அவள் மனதார உணரவேண்டும் " என்று இனியா கூறியதை கௌஷிக் மற்றும் சர்கேஷ் கேட்டுக்கொண்டனர் .

அவர்கள் சென்றபின் சதாசிவம் அருகினில் வந்து "தம்பி அன்னைக்கு அந்த பொண்ணு நடந்துகிட்ட விதம் தப்பா இருக்கலாம்னு நீங்க யோசிப்பிங்க ....ஒரு பெண்ணை பெற்றவனா ஒரு தகப்பனா சொல்றேன் அந்த கோபமும் ஆத்திரமும் நியாயம் தானே நீங்க ரக்ஷனுக்கு பன்னினதை போல் தானே அடுத்தவர்களுக்கு தோன்றும் என்ன பெண் பிள்ளை ஒற்றை பிள்ளை இப்படி கோபத்தை காட்டிடுச்சு " பெரியவராக அவர் கூறியதை ஆமோதித்தான் கௌஷிக் .

"தம்பி அந்த பொண்ணு அவங்க அப்பா சீரியசா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இதை பண்ணியது நீங்கள் என்று தெரிந்து கோபத்தில் இங்க வந்துச்சுங்க , அதுக்கு அப்பறம் அவங்க அப்பா தவறிய இரண்டாம் நாள் அம்மாவை கூட்டிகிட்டு யார்கிட்டயும் ஒருவார்த்தை சொல்லாமல் எங்கயோ போய்ட்டாங்களாம் . அவங்க அம்மாவிற்கு அண்ணன் மேல் இருந்த பாசத்தில் ஒரு ஆண்டுகாலமாக தான் போன் பண்ராங்கலாம் . இப்ப கொடைக்கானல்ல ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருகாங்க ....எவ்ளோவோ அவங்க அம்மா அந்த பெண்ணிற்கு மாப்பிளை பார்த்தாலும் இந்த பெண் நிச்சயம் என் வாழ்க்கையில் ஒரு ஆணிற்கு இடம் இல்லைனு சொல்லிடுச்சாமா " தனக்கு தெரிந்த விவரங்களை கூறினார் சதாசிவம் .

'அரசன் அன்றே கொள்வான் , தெய்வம் நின்று கொள்ளும் என்று கூறுவார்கள் ஆனால் இந்த காலத்தில் தெய்வம் அன்றைக்கு அன்றே பலனை கொடுத்துவிடுகிறார் ' என்று அந்த மனிதரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை .

.......................................................................

ஆறுமாதங்கள் கடந்துவிட்டிருந்தது .....

வான்மதி மற்றும் அகிலத்தின் வாழ்வில் இதுவரை எந்த விதமான மாற்றமோ ஏற்ற இரக்கமோ இல்லாமல் ஒரு நிலையில் சென்றுகொண்டிருந்தது .

கல்லூரியில் ஒரு நாள் சிஸ்டர் நிர்மலா வான்மதியை தனது அறைக்கு அழைத்தார் . "மே ஐ கம் இன் சிஸ்டர் " என்று கதவின் அருகே நின்று இருந்த மதியை பார்த்து புன்னகையுடன் "மதி உள்ள வாமா " என்றார் சிஸ்டர் .

"உக்காரு மதி "

"இருக்கட்டும் சிஸ்டர் ...வரச்சொன்னீங்கன்னு சொன்னாங்க "

"ஆமாம் மதி ...உனக்கு சென்னையில் ஒரு பெரிய கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு வந்திருக்கு அந்த கல்லூரியின் முதல்வர் இங்கு வந்திருக்கார் ....உன்னுடைய திறனை பார்த்து அவராக கேட்டார் " சிஸ்டர் நிர்மலா சாதாரணமாக கூறிக்கொண்டு இருந்தார் . ஆனால் மதியின் முகமோ பேயறைந்ததை போன்று வெளுறியது .

"நானும் நீ அங்க சேருவனு சொல்லிட்டேன் " மிகவும் இயல்பாக கூறினார் அவர் . கேட்டவளுக்கோ எதிலோ சென்று சிக்கிக்கொள்ளும் உணர்வு வந்து தாக்கியது .

"சிஸ்டர் நான் ...அங்க ...எப்படி " பேச கற்றுக்கொள்ளும் குழந்தையை போல் கண்களை விரித்து வார்த்தைகளை சிதற விட்ட அந்த பெண்ணை பார்க்கையில் மனம் வருந்தினாலும் ....வாழ்வின் எதார்த்தத்தை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் இருந்தார் .

"மதிமா இங்க பார் அந்த வயதிலே தெளிவாக இருந்த உனக்குள் இப்பொழுது என்ன குழப்பம் ஏன் இப்படி தடுமாறுகிறாய் ....இது தான் வாழ்கை எத்தனை காலம் இப்படி ஒளிந்து மறைந்து இருப்பாய் " தாயின் பரிவுடன் கூறுபவரிடம் எவ்வாறு எடுத்து சொல்வது என்று யோசிக்கலானாள் .

"சிஸ்டர் அங்க போனா யாராச்சும் நிச்சயம் ஏதேனும் சொல்லுவாங்க என்னால் அதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்க முடியும்னு தோணலை ....மனித மிருகங்கங்கள் வார்த்தையால் கொள்வதை அம்மா எப்படி தாங்கிப்பாங்க ...நான் போகலை சிஸ்டர் " என்று சிறுபிள்ளையின் பிடிவாதத்துடன் கூறி எழுந்து சென்றுவிட்டாள் வான்மதி .

வான்மதியின் உருவம் மறைந்தவுடன் முதல்வரின் அறையினுள் கோப்புகள் வைக்கும் சிறிய அறையில் இருந்து அந்த மறைந்திருந்த உருவம் வெளிவந்தது .

"வா பா வந்து உட்கார் " என்று முகத்தினில் சாந்தம் தவழ கூறினார் சிஸ்டர் .

எதிரில் வந்து உக்கார்ந்தான் அவன் . "கௌஷிக் பார்த்தாய் அல்லவா ....இது தான் மதி ...வெளியே எவ்ளோ தான் தயிரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் நுண்ணிய உணர்வுகள் அந்த காயங்களை மறக்கவிடாமல் வலி ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இதை விட பெரிய எடுத்துக்காட்டு வேணுமா " அவனை ஆழ்ந்த தீர்க்கம்னா பார்வை பார்த்து கூறினார் .

"சிஸ்டர் இதுவும் அவ நல்லதுக்கு தான் நான் யோசிக்கிறேன் .....நிச்சயம் அவளின் வலியை என்னால் போக்க முடியும் என்று எண்ணுகிறேன் ....." கௌஷிக்கும் நேர்கொண்ட பார்வையுடன் கூறினான் .

"மதியும் அவள் அம்மாவும் இங்க வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகாலம் ஆக போகிறது ....இத்துணை ஆண்டுகாலம் தோணாத எண்ணம் ஏன் திடீர் என்று தோன்றியது " பலரை பார்த்து தன்னை பண்படுத்தி இறைவனின் சேவைக்கும் மனித சேவைக்கும் தன்னை ஒப்புவித்த அந்த முதியவரின் கேள்வி அவனை ஒருநொடி திணறச்செய்தது .

தன்னை நிலைப்படுத்திக்கொண்டு நடந்தவைகளையும் அவன் இங்க வந்ததின் மூல காரணத்தையும் முதல் எண்ணத்தையும் முடிவையும் கூறினான் . அவன் சொல்லும் அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட அவர் "நீ நினைப்பதை நடத்த நீ அதீத பொறுமைகொள்ள வேண்டும் . மேலும் அவை உன்னை காயம் கொள்ளச்செய்யும் அதே நேரம் எளிதானதும் அல்ல " என்று கூறினார் சிஸ்டர் நிர்மலா .

"தெரிந்தே தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் குதித்தேன் சிஸ்டர் . அவள் சென்னை வந்தால் போதும் மிற்றவைகள் எனது பொறுப்பு " உறுதியுடன் கூறினான் .

மென்மையான புன்னகையை சிந்தி "வான்மதி சென்னை வருவது என் பொறுப்பு " என்றார் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top