JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-8,9,10

saaral

Well-known member
அலர் நீ ....அகிலமும் நீ ..... அத்தியாயம்-8,9,10
 

saaral

Well-known member
அத்தியாயம்-8

இங்கு இனியா வரும்பொழுதெலாம் சர்கேஷும் உடன் வந்து கௌசல்யாவிடம் நல்ல நண்பனாக பழகினான் . கௌசல்யா முதலில் தயங்கினாலும் நாட்கள் செல்ல குணத்தில் ஈர்க்கப்பட்டு தனது கூட்டினுள் அவனின் வருகைக்கு அனுமதி அளித்தாள் .

அன்று மாலை இனியா , சர்கேஷ் மற்றும் கௌசல்யா மூவரும் தோட்டத்தில் உக்கார்ந்து உரையாடிக்கொண்டு இருந்தனர் . அப்பொழுது அன்று விரைவாக வீடு வந்து சேர்ந்த கௌஷிக்கை மூவரும் ஆச்சர்யமாக பார்த்தனர் . கௌஷிகை உற்று கவனித்த இனியாவும் , சர்கேஷும் அவனின் முகத்தினில் தென்படும் மகிழ்ச்சிக்கான காரணத்தை எளிதாக புரிந்துகொண்டனர் .


"அந்திவானம் அரைக்கும் மஞ்சள்
அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள்
எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே
சினேகிதியே
காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே
சினேகிதியே
என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு"
என்று பாட ஆரம்பித்துவிட்டான் சர்கேஷ் .

அழகாக முகம் சிவந்தான் கௌஷிக் . இவர்கள் மூவரையும் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த கௌசல்யா , கௌஷிகின் முகசிகப்பை கண்டு எதையோ புரிந்து கொண்டாள் . "இப்ப இங்க என்ன நடக்குதுன்னு சொல்றிங்களா " மிரட்டும் தொனியில் அவள் கேக்க

"அது ஒன்னும் இல்லை டாலி உனக்கு சீக்ரம் அண்ணி வரணும்னு எழுதி இருக்கு அதை யார் மாற்றுவது " சர்கேஷ் கௌசல்யாவின் பக்கம் குனிந்து சொன்னான் . அவனின் நெருக்கம் புதிதாக கௌசல்யாவை ஏதோ இம்சை செய்தது இருந்தும் அதை புறம் தள்ளி அவன் கூறிய விஷயத்தை கேட்டு மகிழ்ச்சியுடன் "அண்ணா நிஜமாவா யார் அண்ணா எனக்கு வர போகிற அண்ணி " குதூகலத்துடன் கேட்டாள் .

இனியா சர்கேஷின் பக்கம் குனிந்து "டேய் உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா அண்ணன் முன்னாடியே தங்கையை உஷார் பண்ற வாய்ப்பு யார்க்கு அமையும் " குறும்பாக .

சர்கேஷை முறைத்த கௌஷிக் "சொல்றேன் மா இன்னும் அவங்க சம்மதம் கிடைக்கவில்லை " என்றான்

"என்னது அவங்களா .....மிஸ்டர் கௌஷிக் எப்ப இருந்து இப்படி மரியாதையை பொழிய ஆரம்பிச்சீங்க ....., இன்னும் எவ்ளோ வருஷம் இப்படியே காலம் தள்றதா எண்ணம் .....ஆல்ரெடி முப்பத்திரண்டு வயதாச்சு " என்று அவனை சீண்டினான் சர்கேஷ் .

'டேய் க்ரதகா என்னய்யா மாட்டிவிடற இப்ப பாரு ' என்று மனதில் கருவிக்கொண்டு "அது சரி தான் சர்கேஷ் உனக்கும் அதே வயசு தான் நீ எப்ப கல்யாண சாப்பாடு போட போற " என்று கேட்டு இனியாவை நோக்கி கண் சிமிட்டினான் .

அதை புரிந்துகொண்ட இனியா "கௌஷிக் உனக்கு மட்டும் தான் அவகாசம் வேணுமா என்ன ....அவனுக்கும் அவன் காதலிக்கும் பெண்ணிடம் இருந்து சம்மதம் வரனும்ல பச்சை நிறம் விழாமல் அவன் எப்படி கல்யாண சாப்பாடு போடுவான் " என்று வஞ்சப்புகழ்ச்சியுடன் வாரினாள் .

'ஐயோ வாயை வாடகைக்கு விட்டு வம்படியா சிக்கிக்கிட்டேனே ,, இவ வேற பார்க்கிறாளே .' மனதில் புலம்பினான் சர்கேஷ் . "நீங்க லவ் பண்றிங்களா " ஒரு மாதிரியான குரலில் கேட்டாள் கௌசல்யா . இனியா அவளை உன்னிப்பாக கவனித்தாள் கௌசல்யாவின் முகமோ அப்பட்டமான அதிர்ச்சியையும் வலியையும் காட்டியது . மனதினுள் சபாஷ் போட்டுகொண்டாள் இனியா .

"அது அது கௌசல்யா " என்று இழுத்தான் சர்கேஷ் . அவனின் டாலி கௌசல்யாவாக மாறியதை கவனித்த அவள் அழுதுவிடும் தோற்றத்தில் இருப்பதை கண்டுகொண்ட இனியா நிலைமையை தன் கையில் எடுத்தாள் "கௌசி அவன் ரொம்ப காலமா ஒருத்தங்களை ஒருதலை காதலாக காதலிக்கிறான் ....எங்கே அந்த பெண் இவனை நிராகரிச்சுடுவாளோ என்ற பயத்தில் சொல்லாமல் அமைதி காக்கிறான் ...அவளுக்கு ஒரு சிறிய பிரச்சனை அதனால் ஒதுங்கியே இருக்கிறான் "

கௌஷிக் மற்றும் சர்கேஷ் இனியாவை அதிர்ச்சியுடன் நோக்கினர் . இனியா பார்வையாலே இருவரையும் சமாதானம் செய்து கௌசியை பார்க்க சொன்னாள் . "உங்கள யாராச்சும் வேண்டாம் சொல்வாங்களா ....சர்கேஷ் நிச்சயம் உங்கள் காதல் வெற்றி பெரும் சீக்கிரம் அவர்களிடம் சொல்லி கல்யாண சாப்பாடு போடும் வழியை பாருங்கள் " குரல் கமர கூறிய அவளை இருவரும் ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்தனர் .

கௌசல்யாவோ யாரையும் பார்க்க தோன்றாமல் "எஸ்க்கியுஸ் மீ " என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .

"இனியா இங்க என்ன நடக்குது " கௌஷிக் சந்தோஷ மிகுதியில் கேட்டான் .

இனியவோ "டேய் நாங்க மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் சோ எங்களை நல்லா கவனிச்சுக்கணும் சொல்லிட்டேன் " என்று சுற்றி வளைத்தாள் .

சர்கேஷ் பொறுமை இழந்து "ஹே குரங்கு இப்ப சொல்றியா இல்லையா .?" என்று கேட்டான் .

"டேய் மடசம்ப்ராணிகளா அவளை கவனிச்சீங்களா இவன் லவ் பண்ணா அவ ஏண்டா பீல் பண்ணனும் லூசுகளா ....ஷி இஸ் இன் லவ் ...ஆனால் அவளே இன்னும் அதை உணரலை " என்றாள் .

மூவரும் சேர்ந்து அவள் காதலை உணரும் தருணத்திற்கான திட்டம் தீட்ட தொடங்கினர் .

....................................................

"கௌசி , சர்கேஷோட ஷோவ்ரூமுக்கு ஒரு மேனேஜர் வேணும்னு கேட்டுகிட்டு இருந்தான் ....நீ போய் சேரலாமே " என்று உணவு மேஜையில் வைத்து கூறினான் கௌஷிக் .

சர்கேஷின் காதலை பற்றி தெரிந்த நாளில் இருந்து அதை பற்றி ஆழ்ந்து யோசித்த கௌசல்யாவிற்கு கிடைத்த பதில் இவள் அவனை காதலிக்கிறாள் . தன்னுடைய கூட்டினுள் தந்தை மற்றும் அண்ணன் என்னும் ஆண்களுக்கு மட்டும் இடம் கொடுத்த அவள் சர்கேஷை அவனின் குணம் கண்டு விரும்பி அவனிற்கும் இடம் கொடுத்திருக்கிறாள் . இவை அனைத்தும் அவள் அறியாமலே நிகழ்ந்தவை .

ஸ்ருதி கௌஷிக்கை பார்த்து "இனியாவோட மாமா பையன் தான சர்கேஷ் இங்க கூட வருவாரே " என்றார் .

"ஆமாம் அம்மா அவர் தான் ...." என்றான் கௌஷிக் .

சரவணன் நிமிர்ந்து " ஏன் பா நம்ம நிறுவனத்துலயே அவளுக்கு வேலை செய்ய ஏற்பாடு செய்யலாமே எதற்காக வேறு எங்கோ அவள் செல்ல வேண்டும் " என்று வினவினார் .

"அப்பா நம்ம கைக்குள்ளயே இருந்தால் அவளுக்கு உலகம் தெரியாமல் போய்விடும் வெளிய வேலை செய்தால் தான் நல்ல அனுபவமாக இருக்கும் " என்றான் . அவன் வாய்மொழியை விட கண் பேசும் மொழி புரிந்து அமைதி காத்தார் அந்த நல்ல தந்தை .

"அண்ணா நான் எங்கயும் வேலைக்கு போகலை யார்கிட்டயும் வேலைக்கு போகவும் வேண்டாம் " சற்று ஆவேசமாக கூறி பாதி உணவில் எழுந்து சென்றுவிட்டாள் கௌசல்யா .

அவள் தலை மறைந்தவுடன் சரவணன் கௌஷிக்கை பார்த்து "கௌஷிக் என்னப்பா நடக்குது இப்பதான் கொஞ்சம் சரி ஆனால் மீண்டும் எதற்கு அவளை கோபம் கொள்ள செய்கிறாய் "

"ஆமாம் கௌஷிக் அவளை விட்டுவிடேன் ....ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டாள் ..." இது ஸ்ருதி .

தாய் தந்தையை நேராக பார்த்த மகன் "அவளை இப்படியே விட்டுவிடு சொல்றிங்களே அவளுக்குனு ஒரு வாழ்கை வேண்டாமா "

"அம்மா அவளுக்கு கல்யாணம் செய்து பார்க்கணும்னு ஆசை இல்லையா உங்களுக்கு " கோபத்துடன் தான் கேட்டான் .

"என்னப்பா இப்படி சொல்லிட்ட ...அவள் பிள்ளைகளை என் கையில் தூக்கி வளர்க்கும் நாளுக்காக எவ்ளோ ஏங்குறேன் தெரியுமா ....எங்கே நீயும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டீங்கிறாய் அதே நேரம் அவளும் இந்த நிலையில் இதை பற்றி பேசினால் கோபம் கொள்கிறாள் " ஸ்ருதியின் வருத்தம் அவர் மட்டுமே அறிவர் .

"அம்மா என் கல்யாணம் நிச்சயம் நடக்கும் " மகனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டு பெற்றவர்கள் சந்தோஷத்தில் மூழ்கினர் .

"அதற்கு முன் கௌசியை பாருங்க எம் என் ஷோரூம் ஓனர் தான் சர்கேஷ் நல்ல பையன் கௌசியை மனதார நேசிக்கிறான் ....திருமணம் செய்துகொள்ள எண்ணுகிறான் . நான் நடந்தவைகளை கூறும் முன்பே அதை எல்லாம் ஒன்னும் இல்லை என்று ஆக்கியவன் ....இவளும் அவனை நேசிக்கிறாள் ஆனால் இவள் அதை உணரவில்லை ...அதை சர்கேஷ் பார்த்துக்கொள்வான் எனக்கு இப்பொழுது தேவை உங்கள் சம்மதம் வேறு ஒன்றும் இல்லை " பட்டாசாக பொரிந்தான் கௌஷிக் .

"நல்லது நடக்கையில் நாங்க என்ன வேண்டாம்னா சொல்லுவோம் ....நல்ல பையன் எங்களுக்கு சம்மதம் தான் " என்றார் சரவணன் .

அதன் பிறகு கௌஷிக் கௌசல்யாவின் முடிவை சர்கேஷிடம் கூறினான் .

**********************************************************

அத்தியாயம் - 9

இருநாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் சென்றது . கௌசல்யா தனது அறையினுள் முடங்கிப்போனாள் . மீண்டும் அவளின் நிலை கண்டு ஒரு அன்னையாக ஸ்ருதி கவலை கொண்டு கௌஷிகிடம் கூறினார் .

கௌஷிக் சர்கேஷ்க்கு அழைத்து "சர்கேஷ் நெக்ஸ்ட் என்ன பண்றதாக எண்ணம் அவள் ரூமுக்குள்ளயே அடஞ்சுக்கிடக்கிறாள் " என்றான் .

"கௌஷிக் நானும் அவளை பார்க்க பல வகையில் முயற்சித்தேன் அவள் இனியாவையும் தவிர்த்து ஒதுக்குகிறாள் ....என்ன பண்றதுனே தெர்ல " என்றான் சர்கேஷ் .

"இப்ப நீங்க ரெண்டு பேரும் எந்த மொக்க யோசனையும் பண்ணாமல் இருங்கள் நான் சொல்றதை மட்டும் செய்ங்க சர்கேஷ் " மிக தீவிரமாக கூறினான் கௌஷிக் .

"சந்தடி சாக்கில் என்னை மொக்கை சொல்றிங்களா ..... " மூக்கை உறிஞ்சும் பாவனையில் கேட்டான் சர்கேஷ் .

"சர்கேஷ் " கௌஷிக் பல்லை கடிக்கும் ஒளி கேட்டு "ஓகே ஓகே கூல் சொல்லுங்க செஞ்சுடறேன் " என்றான் அவன் .

"சர்கேஷ் இந்த ஹய்ட் அண்ட் சீக் இஸ் நோட் ஒர்த் ....நீங்க இனி ஆக்ஷன்ல இறங்கணும் நேரா வீட்டுக்கு போய் அவளை நேருக்கு நேராக பார்த்து காதலை சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ற வழியை பாருங்க " கோபத்துடன் சொன்னான் கௌஷிக் . அவன் தங்கை எங்கே மீண்டும் நத்தையாக சுருண்டுவிடுவாளோ என்று பயந்தான் .

"அட அட அட தங்கச்சிய கரெக்ட் பண்ண மாப்பிளைக்கு ஐடியா கொடுக்கிற மச்சான் யாருக்காச்சும் கிடைக்குமா ? " சிலிர்த்த சராகேஷின் குரலை கேட்டு "சர்கேஷ் கைல மாட்டினா கைமா தான் ஒழுங்கா போய் என் தங்கச்சிய பிக் அப் பண்ற வழிய பாரு மேன் " என்று கூறி இணைப்பை துண்டித்தான் கௌஷிக் .

கௌஷிக்காள் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை . அவனின் மதி அவன் கை சேரும் நாளிற்காக காத்துகொண்டு இருக்கிறான் . தங்கை திருமணம் முடிந்த கையோடு வான்மதியை கரம் பற்றவே எண்ணிக்கொண்டு இருக்கிறான் .

கௌஷிக் கூறியதை இனியாவிடம் கூறினான் சர்கேஷ் அதை கேட்டு அவளும் கௌஷிகின் எண்ணத்தை அப்படியே கூறினாள் "டேய் மக்கு மாமா மகனே ....அவன் அவனோட ரூட் கிலீர் ஆகாரத்துக்காக உன்னை வெரட்டுறான் இது கூட புரியாம இப்படி அவன் புகழ் பாடறியே " என்று சளித்தாள் .

"ஓஹ் இதுல இப்படி ஒன்னு இருக்கா .....சரி விடு மாப்பிளைக்கு அவன் இவ்ளோ ஹெல்ப் செய்ற அப்ப ஒரு மச்சானா நானும் சில உதவிகள் செய்ய கடைமை பட்டிருக்கேன் " என்று கூறிச்சென்றான் சர்கேஷ் .

"ஐயோ இந்த லூசு என்ன செய்ய போகுதோ " என்று தலையில் கை வைத்து அமர்ந்தாள் இனியா .

.........................................................

கல்லூரியில் வான்மதி அனைவரின் விருப்பமான விரிவுரையாளராக திகழ்ந்தாள் . அதே நேரம் அவள் கற்றுத்தரும் நடனம் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றிவாகை சூடியது . அதில் அனைவரின் பிடித்த நபராக மாரி இருந்தாள் .

சர்கேஷ் சகுந்தலாவின் அக்கா மகன் அந்த கல்லூரியின் முக்கிய பங்குதாரர் என்னும் முறையில் அடிக்கடி வந்து செல்வான் . அப்படி ஒவ்வொரு முறையும் வரும் சமயம் வான்மதியிடம் பேசாமல் செல்லமாட்டான் .

அவனிடம் தெரிந்த கன்னியம் அவளை அவனுடன் பழக எந்த தயக்கத்தையும் கொடுக்கவில்லை . நல்ல தோழமை உருவாகியது . இவர்கள் இருவரை பற்றி லேசாக சலசலப்பு எழுந்த சமயம் அனைவரின் முன்பும் அவன்கையில் ரக்ஷபந்தன் அன்று ராக்கி கட்டி அண்ணனாக ஏற்றுக்கொண்டாள் .

வீண்பேச்சுகள் எழுந்த வேகத்தில் அடங்கியது . அகிலத்தையும் ஓரிரு முறை வெளியில் சந்தித்தவன் ஒரு மகன் போல நடந்து கொண்டான் .ஒரு நாள் மாலை கல்லூரியில் முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது. வரவிருக்கும் புது ஆண்டில் கல்லூரிக்கு தேவையான சில மாற்றங்களை பற்றி ஆலோசிக்கவே இந்த கூட்டம் .

கூட்டம் நல்லமுறையில் முடிந்தது . சகுந்தலா , சர்கேஷ் மற்றும் வான்மதி மட்டுமே சில கோப்புகளை பார்த்துக்கொண்டு எஞ்சி இருந்தனர் .

"சர்கேஷ் உன் பிரின்ட் சயிலேண்ட் பார்ட்னர் ஒப் திஸ் காலேஜ் எப்ப வந்து பொறுப்புகளை பார்த்துக்கொள்வார் " என்று சகுந்தலா கேட்டார் .

"அவன் எப்ப வருவான் எப்படி வருவான் எங்க வருவான் எல்லாம் தெரியாது வரவேண்டிய நேரத்தில கரெக்டா வருவான் " என்றான் சர்கேஷ்.


"நேத்து ராத்திரி ரஜினி படம் பாத்துட்டு தூங்கினாயா " என்று கேட்டு கலாய்த்துவைத்தார் சகுந்தலா . வான்மதி சிரித்துவிட்டாள் .

"ஹலோ வான்மதி என்னமா நீயும் சிரிக்கிற ஒரு தங்கச்சி இந்த மாதிரி நேரத்துல அண்ணன் நோஸ்கட் ஆனால் நோஸ்கட் பண்ணவங்களை உண்டு இல்லைனு பண்ணனும் " என்றான் .

மேலும் சிரித்த அவள் "அண்ணா நீங்க வேணும்னே போய் நோஸ்கட் வாங்கணும்னு நீங்க முடிவு எடுத்த அப்பறம் நான் எதுக்கு நடுல வந்துகிட்டு " என்றாள் .

"படவா நல்லா இருக்க பொண்ணை கெடுக்க பார்க்கிறாயா இரு மாமாக்கு போன் பண்ணி சொல்லிடறேன் " என்றார் சகுந்தலா .

"ஐயோ தாய்குலமே ஆழ விடுங்க அப்பறம் மிஸ்டர் மனோகரன் எனக்கு அட்வைஸ் பன்றேன்னு உக்காரவச்சிருவார் " என்றான் .

இப்பொழுது இருவரும் சிரித்தனர் . "ஜோக்ஸ் அபார்ட் அவன் தங்கையை தான் நான் கல்யாணம் செய்துகொள்ள போகிறேன் இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம் நேத்து தான் பெரியவங்க பேசினாங்க , உங்களுக்கு அப்பா இன்னைக்கு கூப்பிட்டு சொல்றதா சொன்னாங்க சித்தி ....என் கல்யாணத்தை ஒட்டி அவன் சார்ஜ் எடுத்துப்பான் நான் என் டாலி கூட ஹாப்பி ஹா என்ஜோய் பண்ணப்போறேன் " கண்களில் கனவு மிதக்க பேசினான் .

சகுந்தலாவோ "டேய் உன் டாலி ஓகே சொல்லிட்டாளா " என்றார் .

"எங்க சித்தி மேடம் கண்ல படாம எஸ் ஆகுறாங்க ....இன்னைக்கு நேரா அங்க தான் போறேன் எப்படியும் எனக்கு ஓகே சொல்லவைக்காம விடமாட்டேன் ." என்றான் .

"ஏன் அண்ணா உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை " என்று கேட்டது வான்மதி ...

"அவ ஒரு பிரச்னையில் இருந்தா மா அதில் இருந்து வெளி வரவரைக்கும் காதலை சொல்லி கஷ்டப்படுத்தவேண்டாமே அப்படினு அமைதியா இருந்தேன் அதுக்குள்ள நான் யாரையோ ஒன் சைடா லவ் பன்றேன்னு அவ அண்ணன் என் பிரிண்டும் என் அத்தை பெத்த ரத்தினமும் சேர்ந்து சொல்லி குழப்பி விட்ருச்சுங்க இதை கேட்ட நம்ம ஆளு அதுக்கு அப்பறம் தான் என்னை அவங்க லவ் பண்றது அவங்களுக்கே தெரிஞ்சு மண்டைல பல்பு எரிஞ்சிருக்கு ....பொசெசிவ்னெஸ்ல மேடம் பேசாம அவொய்ட் பண்ராங்கலாமா ...."

"ஹே இனியாவா ...அவளுக்கு உன்னை வம்பிளிக்கவில்லை என்றால் தூக்கம் வராதே ...பாவம் நல்ல பெண் அவள் வாழ்கை இப்படியா போகணும் " என்றார் சகுந்தலா.

"என்ன ஆச்சு மேம் " இது மதி .

"இனியா ஒரு மனநல மருத்துவர் நல்ல பெண் திருமணம் ஆகி இரண்டாம் ஆண்டு கணவனை அச்சிடேன்டில் பறிகொடுத்தாள் ...இப்பொழுது மனித சேவையை பெரிதாக எண்ணி காலத்தை கழிக்கிறாள் . அவளுக்கு இன்னொரு திருமணம் என்பது சர்கேஷின் அப்பாவின் கனவு ....சர்கேஷ் மற்றும் இனியா நாங்கள் அண்ணன் தங்கை போன்று எங்கள் இடையே வேறு பந்தத்திற்கு இடம் இல்லைனு தெளிவா சொல்லிட்டாங்க " என்றார் .

"ஹ்ம்ம் ஆமாம் சித்தி அவளுக்கான டைம் ஓவர் இனி மேடம்மையும் கல்யாண பந்தத்தில் சிக்க வைக்க நாங்க பிளான் போட்டுட்டோம் . இனியா தான் என் டாலிக்கு மனநல மருத்துவர் தோழி எல்லாம் ஆகையால் அப்படித்தான் எனக்கும் என் டாலியை தெரியும் ." என்றான் .


********************************************************************

அத்தியாயம் -10

கௌஷிகின் வீட்டில் அவனின் அம்மா ஸ்ருதி மற்றும் சரவணன் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் . சர்கேஷ் உள்ளே வருவதை கண்டு இருவரும் புன்னகையுடன் எழுந்தனர் .

"வணக்கம் அத்தை ,மாமா " என்றான் இரு கை கூப்பி .

"வாங்க மாப்பிள்ளை கௌஷிக் எல்லாம் சொன்னான் நீங்க மேல போங்க கௌசல்யாவின் அறை மூன்றாவதாக இருக்கும் " என்று கூறிய சரவணன் மனைவியை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றார் .

சிரித்துக்கொண்டே மாடி ஏறிய சர்கேஷ் மூன்றாம் அறையின் முன் நின்று மூச்சை நன்கு வெளியிட்டு தன்னை சமன் செய்துகொண்டான் . கதவை லேசாக தட்டினாலும் பதில் இல்லை சற்று பலமாக தட்டினான் . "அம்மா உள்ள வாங்க கதவு திறந்து தான் இருக்கு " இது கௌசல்யாவின் பதில் .

உள்ளே மெதுவாக வந்த சர்கேஷ் சாளரத்தின் வழியே வானை வெறிக்கும் செதுக்கிய சிற்பத்தை போன்ற தோற்றத்துடன் நிற்கும் தன்னவளை மனதினில் அணுஅணுவாக ரசித்தான் .

உள்ளே வந்த அம்மா இவ்ளோ நேரம் என்ன பன்றாங்க என்று திரும்பிய கௌசல்யாவின் கண்கள் அவனை பார்த்து விரிந்தது . "நீங்க நீங்க என் ரூம்குள்ள எப்படி " நிச்சயம் நான் உன்னை எதிர்பார்க்கவில்லை என்னும் துவனி அதில் இருப்பதை கண்டுகொண்ட அவன் சிரித்தான் .

"ஏன் நான் எல்லாம் இங்க வரக்கூடாதா டாலி " மெதுவாக அருகினில் நகர்ந்து கொண்டே கேட்டான் .

அவன் குரலிலும் நெருக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்து செவுற்றில் மோதி நின்ற அவளை மேலும் ரசனையுடன் பார்த்தான் அந்த கள்வன் .

"என்ன வே...வேணும் சர்கேஷ் ...அப்பா கீழ இருப்பாங்க ...." வார்த்தைகள் தந்தி அடித்தது .

"மாமாவையும் அத்தையையும் பார்த்துட்டு தான் வந்தேன் " என்றான் அசால்ட்டாக .

"மாமா அத்தை ஹாங் " என்று வாய்பிளந்தவளின் அருகினில் வந்த சர்கேஷ் தனது இரு விரல் கொண்டு அவளின் அதரங்களை மூடச்செய்தான் .

"ஏன் என் ஷோரூமுக்கு வேலைக்கு வரலை சொன்ன டாலி "

"......" அவளிடம் பதில் இல்லை

"சரி என் கிட்ட வேலைக்கு தான் வரமாட்டேன் சொல்லிட்டாளே , அடலீஸ்ட் லைப் பார்ட்னராகவாது வறட்டுமேனு யோசிச்சு அடுத்த மாசம் கல்யாணத்தை வச்சுக்க சொல்லி இப்பதான் கீழ சொல்லிட்டு வந்தேன் " மிகவும் இயல்பாக கூறினான் .

"வாட் கல்யாணமா யாருக்கு " என்று திணறினாள் தவிப்புடன் .

அவளின் தவிப்பை உணர்ந்து "ஹே டாலி உனக்கும் எனக்கும் " அவள் காதின் அருகில் குனிந்து மீசை ரோமங்கள் உரச கூறினான் .

கௌசல்யாவிற்கு மூச்சடைத்தது .....அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் . இருவரின் பார்வையம் பின்னிக்கொண்டன . காதலை வாய்மொழியாக சொல்லாமல் பார்வையின் வழியாக அவளுக்கு கடத்தினான் அந்த கள்வன் . கௌசல்யாவும் அதில் கட்டுண்டு விரும்பியே சிக்கித்தவித்தாள் .

இவர்களின் மௌன நிலையை உடைத்தது சர்கேஷின் தொல்லைபேசி "ப்ச் "என்ற சலிப்புடன் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தான் .

அப்பொழுதுதான் அவனின் அருகாமை உணர்ந்தாள் .
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top