JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பே உ(எ)ன்னை உனக்காக ....அத்தியாயம் -1

saaral

Well-known member
வணக்கம் தோழிகளே .....

நான் உங்கள் சாரல் .... வேறொரு தளத்தில் இதற்கு முன் ஒரு கதை எழுதி உள்ளேன் .
எழுத்து உலகில் எனக்கு முதலில் ஆறிமுகம் ஆகி எனது சந்தேங்களுக்கு எப்பொழுதுமே பொறுமையாக பதில் கூறும் நமது ஜேபி அக்கா தளம் ஆரம்பித்தவுடன் அங்கு எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது . கேட்ட உடனே எனக்கு இங்கு திரி அமைத்து கொடுத்திருக்கிறார் .

என்னை பற்றி சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் . 90களில் பிறந்த பல குழந்தைகளை போல் நானும் வளந்து முதலில் படித்தது ரமணிச்சந்திரன் அம்மாவின் கதைகள் தான் . அப்பொழுது இருந்தே தமிழ் கதைகளின் மீது ஆர்வம் கொண்டு படிக்க ஆரம்பித்தேன் . இப்பொழுது எழுதும் ஆர்வமும் சேர்ந்து கொண்டதால் இப்பொழுது எழுத்து உலகிற்குள் நுழைந்துள்ளேன் .

எனக்கு உங்களின் ஆதரவினை கொடுப்பீர்கள் என்று நம்பி இங்கு கதை போட தொடங்குகிறேன் .
 

saaral

Well-known member
அன்பே உ(எ)ன்னை உனக்காக ....
தோழிகளே இந்த கதையை எனது முதல் கதையான உயிருக்குள் இன்னொரு உயிரை சுமக்கின்ற காதல் சுகமானது கதையின் தொடக்கமாகவும் படிக்கலாம் , புது கதை என்ற வகையிலும் படிக்கலாம் . அந்த கதையில் இருக்கும் பல கதாபாத்திரங்கள் இதிலும் தொடர்வார்கள் .

அத்தியாயம் :-1

நிஸ்வந்த் , யஸ்வந்த் இருவரும் உருவ ஒற்றுமை மட்டும் இல்லை குணத்திலும் எண்ணங்களிலும் ஒற்றுமை பெற்றவர்கள் . அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தவிர்த்து மூன்றாம் நபரால் நிச்சயம் அடையாளம் காண இயலாது . நிஸ்வந்த்தின் எண்ணங்கள் ஒரு சில இடத்தில் மட்டுமே கடந்த சில நாட்களாக தனித்து தெரியும் . யஸ்வந்த்திற்கு அதற்கான காரணம் தெரியும் ஆகையால் அவனை எதற்கும் வற்புறுத்த மாட்டான் .

இவர்களை பற்றி என்ன சொல்ல ...ஒரே உருவம் நல்ல உயரம் . நீச்சல் ஜிம் என்று உடம்பை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் . பெண்களுக்கு மட்டும் தான் வில் போன்ற புருவம் என்று யார் சொன்னது ? இவர்களின் புருவமும் வில் போன்று வளைந்து அடர்த்தியாக இருக்கும் . அதன் கீழ் வில்லில் இருந்து வரும் அம்பை போன்ற கூர்மையான கண்கள் அதில் கொஞ்சமே கொஞ்சம் குறும்பு . அடர்த்தியான கேசம் அலையென முன் நெற்றியில் வழியும் அதை இவர்கள் ஒன்று போல் ஒதுக்குவதே தனி அழகு . (போதும் பா எனக்கே ஓவர இருக்கு )

தாய் ராகினி தோழியை போன்றவள் . தந்தை பிரவீன் தாயின் மீது அதீத காதல் கொண்டவர் . அண்ணன் ரஞ்சித் தங்களின் பெரியம்மாவின் பையன் கண்ணன் அண்ணனை போன்று கோட்பாடுகளுடன் வளர்ந்தவன் . இருவரும் போலீஸ் . கண்ணன் தமிழக காவல் துறையில் டி எஸ் பியாக இருக்கிறான் அவர்களின் குடும்பத்தின் இளவட்டங்களின் சிம்மசொப்பனம் அவன் . ரஞ்சித் ஏ சி பி யாக இருக்கிறான் . இருவரும் திருமணமானவர்கள் . ஒவ்வொருவருக்கும் இருகுழந்தைகள் இருக்கின்றனர் .

தற்சமயம் அவர்களின் குடும்ப தொழிலான ஆடை தொழிலை ராஜ்குமாருக்கு (அவர்களின் பெரியப்பா ) துணையாக இருந்து பார்த்து கொள்வது இவர்கள் இருவர் தான் . மற்ற அனைவரும் தொழில் செய்வதில் பெரிதும் நாட்டம் இல்லாமல் இருந்தமையால் அத்தை ,பெரியப்பா , அப்பா மூவரின் தொழிலையும் இணைத்து குடும்ப உறுப்பினர்களின் அனைவரின் பெயரிலும் ஷேர்சாக பிரித்துவிட்டு திறம்பட தொழில் செய்யும் இருபத்தி ஒன்பதுவயது வாலிபர்கள் .

தங்களின் என்ன ஈடுபாடுகளுக்கு ஏற்ப கட்டிட தொழிலையும் , மென்பொருள் நிறுவனத்தையும் தாத்தா பாட்டி தந்த சொத்தின் பங்கில் அமைத்து நிர்வகிக்கின்றனர் .

மும்பை மாநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பாந்த்ரா மேற்கில் சொகுசான அடுக்குமாடி குடி இருப்பு ஒன்றை இருவரும் சேர்ந்து வாங்கினர் . யஸ்வந்த் சென்னையில் இருந்து கட்டிட தொழிலையும் ஆடை நிறுவனத்தையும் பார்த்துக்கொள்கிறான் .

நிஸ்வந்த் மும்பையில் வசித்து மென்பொருள் நிறுவனத்தையும் வட இந்திய ஆடை தொழிலையும் எடுத்து நடத்துகிறான் . இருவரும் தினமும் வீடியோ கால் பேசிக்கொள்வார்கள் . வாரவிடுமுறைக்கு யஸ்வந்த் மும்பை வந்துவிடுவான் . மும்பையில் இவர்கள் போடாத ஆட்டம் இல்லை . இரவின் இருட்டில் எவரும் அறியாமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தனர் . அணைத்து கெட்ட பழக்கங்களும் இருந்தும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர் . எத்தனுக்கு எத்தனாக ஒருத்தன் இருப்பான் அப்படி இருப்பவன் தான் கண்ணன் அவன் அனைத்தும் அறிவான் இருந்தும் சரியான நேரத்திற்காக பொறுமை காத்தான் .

கடந்த சில நாட்களாக நிஸ்வந்த் பெண் தோழமைகலை முற்றிலுமாக தவிர்த்தான் . அதன் காரணம் அறிந்த யஸ்வந்த்தும் பெண் தோழமைகலை தவிர்த்தான் . மற்றபடி இருவரும் வார விடுமுறை நாட்களில் பப் மது புகைப்பழக்கம் என்று சந்தோஷமாகவே இருந்தனர் .

அன்று காலை நிஸ்வந்த் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான் . அப்பொழுது அவனின் கவனத்தை அலைபேசி கலைத்தது . எடுத்து பார்த்தால் கண்ணன் . உடனே அதனை உயிர்ப்பித்து காதில் வைத்தான் "ஹலோ அண்ணா என்ன சப்ரைஸ் நீங்க எனக்கு கூப்பிட்டிருக்கீங்க அதும் காலைலயே " என்றான் குரலில் வழிந்த ஆச்சர்யத்தோடு .

"எப்படி இருக்க நிஷு நீயும் சென்னை பக்கம் வரலாமே எப்பப்பாரு யஸ்வந்த் தான் அங்க வரான் " என்றான் கண்ணன் .

'எங்கே வந்தா எங்க தகிடுதத்தம் எல்லாம் வெளிய வந்திருமே ' என்று நினைத்த நிஸ்வந்த் "வரேன் அண்ணா இந்த வாரம் வரேன் ....நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க லக்ஷிதா எப்படி இருக்கா " உண்மையான அக்கறையுடன் கேட்டான் .

"குட்டிமா நல்லாவே இருக்கா எல்லாரும் இங்க நல்ல இருக்கோம் " கண்ணன் தங்கை பெயர் கேட்டவுடன் சந்தோசத்துடன் பதில் கூறினான் .

"சொல்லுங்க அண்ணா " நிஸ்வந்த் யோசனையாக கேட்டான் .

"அது எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே " நிதானமாக கேட்டான் கண்ணன் .

"அண்ணா என்ன ஹெல்ப் அது இதுனு சொல்லுங்க செஞ்சுட்டு போறேன் " ஆள் மனதில் இருந்து வந்த வார்த்தைகள் என்று உணர்ந்த கண்ணன் சிரித்துக் கொண்டே

"அது எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க பொண்ணு யூ எஸ்ல இருந்து வந்திருக்கா அவங்க அம்மா அங்க பிக் ஷாட் பட் இவளுக்கு அங்க நாட்டம் இல்லை ...சோ இங்க மும்பைல தனியா இருக்கா போர் அடிக்குது வேலை வேணும்னு கேட்டா உன் நியாபகம் வந்துச்சு அதான் கூப்பிட்டேன் ..." எதையும் குரலில் காட்ட மாட்டான் கண்ணன் .

"ஓஹ் குட் எனக்கும் ஆள் தேவை இருக்கு ...நீங்க சொன்னா நம்பிக்கையான ஆளாத்தான் இருப்பாங்க என்ன படிச்ருக்காங்க " நிஜமாவே நிஸ்வந்த்திற்கு ஆள் தேவை இருந்தது .

"எம் எஸ் படிச்சருக்கா அதும் யூ எஸ்ல வெள் நாலெட்ஜ்ட் கேர்ள் ...இன்டெர்வியூ பண்ணு தேறினா அப்பொய்ண்ட் பண்ணிக்கோ " என்றான் கண்ணன் .

"ஓஹ் கம் ஒன் அண்ணா எலிஜிபிள் இல்லைனா நீங்க கேட்ருகவே மாட்டீங்க வர சொல்லுங்க நாளைக்கு காலைல டென் ஓஹ் கிளாக் ஸ்செடுல் பிளாக் பண்ணிக்கிறேன் " என்றான் நிஸ்வந்த் .

"கண்டிப்பா நிஷு தேங்க்ஸ் ஐ வில் கால் யு பாக் " என்று கூறி அணைப்பை துண்டித்தான் .

உடனே தன்னுடன் உடன் பிறந்த உடன் பிறப்புக்கு அழைத்த நிஸ்வந்த் "ஹாய் யாஷு " என்றான் .

"ஹாய் நிஷு குட் மோர்னிங் அண்ணா கால் பண்ணாங்க ரிக்கார்டிங் ஜாப் போர் கேர்ள் ரைட் " புன்னகையுடன் கேட்டான் யஸ்வந்த் .

"ஓஹ் சொல்லிட்டு தான் கூப்பிடங்களா ? " என்றான் நிஸ்வந்த் .

"எப்படியும் நீ எனக்கு சொல்லிருவனு தெரியும் சோ சொல்லிட்டு அப்பறம் கூப்பிட்டாங்க " என்றான் கூறினான் யஸ்வந்த் .

"ஓகே யாஷு ஆம் ஸ்டார்டிங் பை போர் நொவ் " என்று கூறி அன்றைய தினத்திற்கான வேலைக்குள் தன்னை மூழ்கிக்கொண்டான் நிஸ்வந்த் .

யஸ்வந்த்தும் சென்னையில் தனது அலுவலில் மூழ்கி இருந்தான் . அடுத்த நாளும் விடிந்தது . இன்றில் இருந்து அந்த இரட்டையர்களுக்கு புயல் வந்து தாக்க போகிறது அதும் அழகான புயல் என்பதை அறியாமல் காலை எழுந்தவுடன் காலை வணக்கம் சொல்லி தங்களின் நாளை தொடங்கினர் .

பத்து மணி இருக்கும் நிஸ்வந்த் தனது மடிக்கணினியில் தலையை விட்டு எதோ தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்த பொழுது அவனின் அறையில் இருந்த அலைபேசி அவனின் கவனத்தை ஈர்த்தது . இவன் எடுத்தவுடன் "சார் இங்க உங்கள பார்க்க மிஸ் ஜெயதி வந்திருக்காங்க "

"ஊஹ் இஸ் ஷி " என்றான் யோசனையாக . அவன் மறந்துவிட்டான் தான் கண்ணனிடம் சொல்லியதை மறுத்துவிட்டான் மேலும் பெயர் தெரியாததால் வந்த குழப்பம் .

"சார் கண்ணன் சார் அனுப்பிச்சாங்கன்னு சொன்னாங்க " என்றாள் அந்த வரவேற்பில் நிற்கும் பெண் பணிவாக .

"ஓஹ் யா அஸ்க் ஹேர் டு கம் இன் " என்று கூறி அவளின் வரவிற்காக காத்து இருந்தான் .

இரண்டு நிமிடத்தில் அவனின் அறை கதவு மென்மையாக தட்டப்பட்டது .

"எஸ் கம் இன் " என்றான் ஆளுமை நிறைந்த குரலில் .

உள்ளே நுழைந்த பெண்ணை ஆராய்ச்சியாக பார்த்தான். சுமார் இருபத்தி மூன்று வயது இருக்கும் பாவை அவள் . ஆண்கள் மட்டும் தான் போர்மல்ஸ் போடவேண்டுமா என்ன அவளும் போட்டிருந்தாள் மிகவும் அழகாக பொருந்தி இருந்தது அவளுக்கு . தூக்கி போனிடைல் போட்டு மிதமான ஒப்பனை , அவள் முகம் திருத்தமாக வட்டவடிவமாக நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நின்றிருந்த அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ச்சியான பார்வை செலுத்தியவன் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமருமாறு சைகை காமித்தான் .

அவளும் அவனின் எதிரே அமர்ந்தாள் . இவள் அவனை ஆராய்ச்சியாக பார்த்தால் அவன் ஜெயதியின் கோப்பையை வாங்கி முழுதாக பார்த்தான் . "வெள் யு ஆர் அப்பொய்ன்டெட் அஸ் ஜி எம் ஒப் ஆர் ஆர் சொலுஷன்ஸ் " என்று கூறிக் கொண்டு எழுந்து நின்று அவளின் முன் கை நீட்டினான் .

அவள் ஒரு ஆழ்ந்த பார்வையை அவனின் புறம் செலுத்தி "ஹொவ் டூ யு ஜட்ஜ் மீ வித் அவுட் எனி குஸ்ட்டீன்ஸ் " (எவ்வாறு நான் இந்த வேலைக்கு தகுதியானவள் என்று கேள்வி கேக்காமல் அனுமானித்தாய் ) என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் வினவினாள் .

நிஸ்வந்தும் ஆங்கிலத்தில் பதில் கூறினான் இங்கே தமிழில் காண்போம் "கண்ணன் அண்ணா தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்வார் மேலும் உங்கள் படிப்பு நீங்கள் படித்த பல்கலைக்கழகம் கூறியது உங்களின் திறமையை பற்றி " என்றான் நேராக .

று புன்னகையுடன் அவனின் கை பற்றி குலுக்கி "தாங்க யு , வில் டேக் எ லீவ் " என்று கூறி விடைபெற்றாள் .

ஒரு அழகான புத்திசாலியான புயல் இவர்களின் வாழ்வில் நுழைந்தது . அந்த புயலில் சிக்க போவது யார் அதன் பின்னணி என்ன ....தாங்கள் மட்டுமே சிறந்தவர்கள் பலம்கொண்டவர்கள் என்று நினைப்பவர்களையும் ஒரு சிறு புத்திகூர்மையான செயலால் வீழ்த்த முடியும் என்று அந்த இரட்டையர்களுக்கு பாடம் புகட்டவே கடல் கடந்து தேசம் தாண்டி வந்திருக்கிறாள் பெண் அவள் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top