JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பே உ(எ)ன்னை உனக்காக ..... அத்தியாயம் -10

saaral

Well-known member
அன்பே உ(எ)ன்னை உனக்காக .....
அத்தியாயம் -10

யஸ்வந்த் கட்டிட வேலைகள் நடைபெறுவதில் ஜெயதியே முக்கிய தடையாக இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டான் . நிஸ்வந்த் பொறுக்கமாட்டாமல் ஜெயதியை காண அவளின் அலுவலகம் நோக்கி நேரே சென்றான் .

ஜெயதியோ நிஸ்வந்த்தின் வருகை அறிந்து அவனை உள்ளே அனுப்புமாறு கூறினாள் . அவளின் அறையில் அவளை சந்திக்க சென்ற நிஸ்வந்த் அவளின் ஆளுமை நிறைந்த தோற்றத்தில் வாயடைத்து போனான் .

"எஸ் மிஸ்டர் நிஸ்வந்த் ப்ளீஸ் சிட்டௌன் " என்றாள் ஜெயதி .

அதில் ஒரு பெருமூச்சுடன் எதிரினில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் . இருவருமே சற்று நேரம் அமைதி காத்தனர் .

நிஸ்வந்த் தான் முதலில் தொடங்கினான் . "ஏன் இப்படி ஜெயதி " என்றான் .

'உங்களுக்கு தெரியாது ' என்ற பார்வையை பார்த்தாள் ஜெயதி . முகத்தில் ஏளனமாக ஒரு முறுவல் .

"எனக்கு புரியுது எல்லாம் அபிக்காக அவள் என் உயிர் , அவளுக்காக என்று கூறி இருந்தால் நான் என் பங்கு சொத்து எல்லாத்தையும் எழுதி கொடுத்திருப்பேன் அதை விட்டு இப்படி எனது நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எனது முதுகில் குத்தி இப்பொழுது எங்கள் மொத்த நிறுவனத்தையும் வீழச்செய்ததில் என்ன கண்டாய் " என்றான் நிஸ்வந்த் .

முதலில் அவன் பேசட்டும் என்று அழுத்தமான பார்வையுடன் அவனையே பார்த்து இருந்தாள் .அவனே தொடர்ந்தான் " இப்பொழுது என் சொத்து மட்டும் இல்லாமல் என் கூட பிறந்த பாவத்திற்காக என் யாஷு உழைப்பையும் கேள்விக்குறி ஆகிருக்கு ? போதும் நான் அபியிடம் பேசுறேன் அவள் என்னை புரிந்துகொள்ளுவாள் . என்னை தண்டிச்சுக்கோ என் யாஷை விட்டுவிடு " என்றான் . அதில் அவனின் சகோதர பாசம் மேம்பட்டு இருந்ததை உணர்ந்து கொண்டாள் ஜெயதி .

"வெள் மிஸ்டர் நிஸ்வந்த் இத்தனை வருஷம் உங்களை ..உங்கள் தவறையும் மீறி உங்களை உங்களுக்காக நேசித்த ஒரு சிறிய பெண்ணை ஏமாற்றிய குற்ற உணர்வே இல்லாமல் இருந்த பொழுது எங்கே போனது இந்த உணர்வெல்லாம் ...உங்களை நம்பிய ஒரு காரணத்திற்காக உயிருடன் ஒருத்தியை கொன்றுவிட்டு இப்பொழுது உங்கள் தம்பிக்காக வருந்துகிறீர்களா ? " என்றாள் ஏளனத்துடன் .

ஆவேசமாக எழுந்து "உங்கள் ரத்த சொந்தம் என்றால் துடிக்குது இல்ல இதே துடிப்பு ஒரு அப்பாவி பெண்ணை வாழ்வை நாசம் செய்யும் பொழுது எங்கே போனது " கோபத்துடன் அவள் கேட்ட கேள்விகளுக்கு அவனிடம் பதில் இல்லை .

"என்ன சார் தெரியும் உங்களுக்கு அவள் எப்படி எங்க கைக்கு கிடைச்சான்னு தெரியுமா ... அவளை நீங்க தேடினேன் மட்டும் சொல்லாதீங்க அக்கறையுடன் தேடி இருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருக்கலாம் . " என்றாள் அவள் .

"ஆனால் நான் தேடினேன் மா அவள் என் உயிர் அவளை விட்டு என்னால் இருக்க முடியவில்லை அவளுக்கு விபத்து என்று துடித்தேன் ...அவள் இல்லாத வாழ்கை வெறுமையாக உணர்ந்தேன் " என்றான் நிஸ்வந்த் வருத்தத்துடன் .

"என்ன வருத்தம் ? என்ன துயரம் ? ஒன்னும் செத்து போய்டலயே ? " என்று ஆக்ரோஷமாக கேட்டாள் ஜெயதி .

அப்பொழுது பட்டென்று கதவு திறந்து உள்ளே வந்த யஸ்வந்த் ஜெயதியை நெருங்கி அவள் கழுத்தினை பிடிக்க சென்ற நிமிடம் நிஸ்வந்த் சுதாரித்து யஸ்வந்த்தை தடுத்தான் . நிஷு ஏ ஜே குழுமத்தின் அலுவலகம் சென்று இருக்கிறான் என்று அறிந்தவுடன் நிச்சயம் ஜெயதியிடம் சமாதான புறா தூது விட போயிருப்பான் என்று சரியாக கணித்த யஸ்வந்த் நேராக இங்கு வந்தவன் ஜெயதியின் வார்த்தைகள் கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்றான் ' எவ்வாறு அவள் எனது உடன் பிறப்பை இப்படி பேசலாம் ' என்று எண்ணினான் .

"ஹே என்னடி ஓவர் ஹா பேசுற அவன் தப்பு பண்ணினதாவே இருக்கட்டும் அதில் உன் தங்கைக்கும் சரி பங்கு இருக்கு அதற்கு என்ன வேணும்னாலும் பேசுவிய நீ " என்று நிஸ்வந்த்தின் கைகளில் இருந்துகொண்டே சீறினான் யஸ்வந்த் .

"நிஷு என்னை விடு " என்று திமிறினான் . அதற்குள் எவ்ளோ தடுத்தும் உள்ளே சென்ற யஸ்வந்த்தை நினைத்து கலங்கிய ஷில்பா பாதுகாவலர்களுடன் உள்ளே நுழைந்தாள் .

அனைவருமாக சேர்ந்து யஸ்வந்த்தை வெளியேற்றினர் . நிஸ்வந்த் ஜெயதியின் முன் வந்து "சாரி ஜெயதி ...யாஷ் வருவான்னு நான் எதிர்பார்களை " என்றான் தலையை தொங்கப்போட்டு .

ஜெயதி ஏதும் கூறாமல் வெளியே போகுமாறு கை காட்டி "ப்ளீஸ் " என்றாள் .

நிஸ்வந்த்தும் தலையை தொங்கப்போட்டு வெளியேறினான் .

ஷில்பா உள்ளே நுழைந்தாள் "ப்ளீஸ் லீவ் மீ அலோன் ஷில்பா " என்று கூறி ஜன்னலின் அருகினில் சென்று தொலைதூரத்தை வெறித்தாள்.
.............................................................................................

அன்று ஜெயதியின் அறையினுள் நடந்தவைகள் அனைத்தும் அபி அரிவாள் .ஏதும் பேசாமல் ஜெயதியை கவனிக்கலானாள் . அவளின் நடவடிக்கையில் ஒரு தடுமாற்றம் இருப்பது போலவே தோன்றியது அபிதாவிற்கு .

என்னவென்று கேட்டாலும் அவள் கூறப்போவது இல்லை பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலையில் அபி இருந்தால் . ஜெயதிக்கு அதன் பிறகு வந்த நாட்களில் அந்த கட்டுமான வேலையில் எந்த இடையூறு பண்ணும் எண்ணமும் இல்லை . வேலைகளை எளிதாக நடக்க விட்டாள் .

மீண்டும் ஆர் ஆர் குழுமம் ஏறுமுகத்தை கண்டது . யஸ்வந்த் அதில் மகிழ்ச்சி கொண்டான். நிஸ்வந்தோ யோசனையை தாங்கினான் .

"நிஷு பாத்தியா நம்ம பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் இருக்கிறது இப்பொழுது அந்த திமிர் பிடிச்சவ மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சுக்குவா " என்று கேட்டான் யஸ்வந்த் .

'தப்பா கணிக்கிற யாஷ் ஜெயதி மனம் வைத்ததால் தான் ஏறுமுகம் ...அவள் இந்நேரம் நம் வழியில் வந்திருந்தாள் இருந்த இடம் தெரியாம போயிருப்போம் ' என்று மனதில் எண்ணினான் நிஷு .

இதோ இதோ என்று புனாவில் ஏ ஜே குழுமத்தின் கட்டிட வேலையும் நிறைவு பெற்றது . ஜெயதி அதிகம் அங்கு வருவது இல்லை .

அபி முக்கியம் அவசியம் என்றால் வருவாள் . ஷில்பா மட்டுமே அடிக்கடி வந்து வேலைகள் நிலவரம் என்று கண்ணுற்று செல்வாள் . யஸ்வந்த்தோ "எங்க அந்த திமிர் பிடிச்சவ ஏதும் பண்ண முடிலைனு இங்க வரதையே நிறுத்திட்டாளா " என்று எள்ளலாக கேப்பான் .

ஷில்பா அதற்கு கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்வாள் . அதற்கும் நிஷுவிடம் பொருமி தள்ளுவன் யாஷ் "அந்த திமிர் பிடிச்சவ தோழிதானே அதான் இவளுக்கும் அந்த திமிர் "

இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் ஜெயதியை குறியீடாக குறித்து பேசுவதை யஸ்வந்த் வளமை ஆக்கிக் கொண்டான் . நிஸ்வந்தும் மௌனமாக நடப்பதை கவனிப்பான் .

தொழில் துறை அமைச்சரை அழைத்து புனாவின் கிளையை திறக்க ஏற்பாடு செய்து இருந்தாள் ஜெயதி ஆனால் அவள் வரவில்லை . லீலாவதி , ஷில்பா , அபி மற்றும் ரஞ்சினி குட்டி நால்வரும் வந்திருந்தனர் .

யஸ்வந்த்தின் கண்களோ ஜெயதியின் வருகையை எதிர்நோக்கி வாசலை பார்த்தவண்ணம் இருந்தது . நிஷ்வந்த் அவனின் நடவடிக்கை பார்த்து "யாஷ் ஏன் இப்படி இருக்க " என்று வினவினான்

"அந்த திமிர் பிடிச்சவ வரலையா நிஷு " என்று கேட்டான் யாஷ் . நிஷு மனதில் பலமாக யோசிக்க ஆரம்பித்தான் . தனது உடன் பிறப்பிடம் இருந்து பதில் வராததை கண்டு "என்ன நிஷு ?" என்று கேட்டான் யாஷ் .

"இல்லை நீ ஒரு பொண்ண பத்தி அதிகம் பேச மாட்ட ....ஆனால் யாரென்று தெரியாத நாட்களில் இருந்து ஜெயதியை பற்றி மட்டுமே என்னிடம் அதிகம் பேசற ...அது நல்லதோ கெட்டதோ அவளின் பேச்சுக்கள் உன்னிடம் அதிகம், இப்பொழுது கூட அவளின் வரவை எதிர் நோக்கி இருக்க " என்று மனதில் பட்டதை பட்டென்று கேட்டான் நிஸ்வந்த் .

ஒரு நொடி முழித்த யஸ்வந்த் " ஹே அதெல்லாம் இல்ல பார் நீ என்ன செய்தும் என்னுடைய வேலைகளையே வளர்ச்சியையோ உன்னால் ஒன்றும் பண்ண இயலாது என்று காட்டவே அவளை தேடினேன் " அவன் கூறிய சமாதானம் யாருக்கென்று அவனே அறியான் .

"யாஷ் ஒன்னு தெரிஞ்சுக்கோ நம்மால் ஜெயதியின் விளையாட்டை சமாளிக்க இயலாமல் தோய்ந்து போனோம் ...இப்பொழுது நம் நிறுவனம் வளர்ச்சி கொண்டிருக்கு என்றால் அது ஜெயதி போதும் இந்த விளையாட்டு என்று எண்ணியதால் இருக்கலாம் ..." தெளிவாக சொன்னான் நிஷு .

"என்ன நிஷு ஏதோ அவ பிச்சை போட்டு நம்ம பொழைச்ச மாதிரி பேசுற " பொரிந்து தள்ளினான் யாஷ் .

"உண்மை சில நேரங்களில் கசக்கும் யாஷ் ...ஒத்துக்கொள்ள வேண்டும் நம்மை விட ஜெயதி சிறந்த தொழில் அதிபர் . அவள் எண்ணியதால் மட்டுமே இன்று நம்மால் இந்த கட்டிடத்தை முடிக்க முடிந்தது " நிதர்சனத்தை எடுத்துக்கூறினான் நிஷு அதில் கோபம் கொண்ட யாஷ் அவ்விடம் விட்டு நகர்ந்தான் .

நிஷு தன்னவளை காணும் பொழுதெல்லாம் கண்ணாடியை பார்ப்பதை போன்று தள்ளி நின்றே ரசித்தான் . எங்கே அருகினில் சென்றால் அந்த கண்ணாடியை உடைத்து விடுவோமோ என்று எண்ணி அஞ்சினான் . இது மெல்ல மெல்ல சரி செய்ய வேண்டிய விஷயம் என்பதை உணர்ந்து கொண்டான் . அவன் அபியை பார்த்துக்கொண்டு இருக்கையில் யாஷை நோக்கி ரஞ்சினி தத்தி தத்தி நடந்து சென்றாள் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top