JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பே உ(எ)ன்னை உனக்காக .....அத்தியாயம் -11

saaral

Well-known member
அன்பே உ(எ)ன்னை உனக்காக .....
அத்தியாயம் -11

அதன் பிறகு பூனாவில் இருக்கும் அலுவலகம் தொடங்கி அங்கு வேலையும் தொடங்கியாகிற்று . எதாவது பொது நிகழ்ச்சிகளில் அபியை நிஸ்வந்த் சந்திக்க நேர்ந்தால் ஆவலுடன் பேச பெரும் முயற்சி எடுப்பான் . அவளோ அவனை கண்டுகொள்ளவே மாட்டாள் .

அன்று மாலை ஷில்பா மற்றும் ஜெயதி சற்று நேரம் தோழிகளாக பேசிக்கொண்டு இருந்தனர் . “எஸ் சொல்லு ஷில்பா உனக்கு அமெரிக்கா போகும் எண்ணம் இல்லையா ?” புன்னகையுடன் தோழியை கேட்டாள் .

“இப்பதான் அபி சரி ஆகிருக்கா ...உன்முகத்தில் சிரிப்பு என்பதை இப்பதான் பார்க்க முடியுது....எல்லா பிரச்னையும் சரி ஆகட்டும் போலாம் ” என்றாள் ஷில்பா .

தோழியின் அன்பில் நெகிழ்ந்த ஜெயதி “கொஞ்ச நாள் நீ போய் உன் அம்மாவுடன் இருந்துவிட்டு வா நான் இங்க பார்த்துகிறேன் “ .

“ எங்க பார்த்துப்ப நீ உன் வேலை ஆபீஸ் ரஞ்சினி என்று சுத்திட்டு இருப்ப ...இப்பவே ரொமான்ஸ் கிங் நிஸ்வந்த் எங்க பார்த்தாலும் அபி பின்னாடியே சுத்தறார் நான் போய்ட்டா அவருக்கு கொண்டாட்டம் தான் ” என்றாள் ஷில்பா .

“ எனக்கு தெரியும் அவர் அபியை துரத்துவதும் இவள் ஓடி ஒளிவதும் .... இருவரும் உயிராய் நேசிக்கிறார்கள் என்ன காரணம் என்று தெரியவில்லை நிஸ்வந்தின் நடவடிக்கையில் இவள் மனதால் பாதிக்க பட்டு குடும்பத்தை இழந்து வேரறுந்த மரம் போல் துவண்டு போனாள் ...இருவரும் அமர்ந்து பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து இருவரும் சேர்ந்து வாழலாம் .” என்றாள் ஜெயதி .

“ ஹே என்ன சொல்ற நீ இருவரும் சேர்ந்து வாழ்வதா ...இதற்கா இத்துணை கஷ்டப்பட்டு நஷ்டம் வரச்செய்து பலி தீர்த்த ” அதிர்ந்தாள் ஷில்பா .

“ நஷ்டம் ஏற்படுத்தியது பாடம் புகட்டவே ...ஆனால் என்னுடைய குறிக்கோள் அவர்கள் சேர்ந்து வாழ்வது” என்றாள் ஜெயதி .

“அபி அவரை பார்த்தாலே ஓடுறாளே ...” தனது சந்தேகத்தை கேட்டாள் ஷில்பா .

“ அது எங்கே நிஷ்வ்ந்த்தை பார்த்தால் அவர் பின் சென்றுவிடுவோமோ என்ற பயத்தில்.... அவள் அவரை மனதார விரும்புகிறாள் இல்லையென்றால் எப்படி அவ்ளோ துயரத்திலும் தனக்கு மகள் பிறந்தால் ரஞ்சனி என்றும் மகன் பிறந்தால் ராஜ்குமார் என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லுவாள் ...காரணம் கேட்டால் அது என் நிஷுவின் ஆசை என்றாள் ” தங்கையின் காதலை கண்டு மெய்சிலிர்த்து பேசினாள் ஜெயதி .

“ஒஹ் ஒருவேளை இருவரின் குழந்தை என்று ஆசைப்பட்டு சொல்லிருக்கலாம் ...” என்று இழுத்தாள் ஷில்பா.

“நோ அன்னைக்கு நிஸ்வந்த் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார் என்பதற்காகவே இந்த விளையாட்டு போதும் என்று கூறி என் கையை கட்டி போட்டவளும் அவளே ” என்றாள் .

அதிர்ந்த ஷில்பா “ என்ன சொல்ற ?” என்று வினவினாள் .

“ ஆம் அந்த கட்டிட வேலைகளை தடுத்து பெரும் நஷ்டம் ஏற்படுத்த விரும்பினேன் ஆனால் முட்டால் காதலால் காதலனை காப்பாற்ற அன்று இரவு வேண்டாம் விட்டுவிடு என்று என்னிடம் அழுதாள் .” முகத்தை சுருக்கி வலியுடன் கூறினாள் ஜெயதி .

இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த அலுவலக அறையில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர் . வெளியே எதிர்ச்சியாக இதை கேக்க நேர்ந்த அபிக்கு கண்களில் கண்ணீர் குளம் கட்டியது . பழைய நினைவுகள் மேல் எழும்பியது . தன்னை கட்டுப்படுத்த இயலாமல் தனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டு கதறினாள்.

அன்றைய இரவு அபிக்கு தூங்கா இரவாக மாறியது . இங்கு நிஷ்வந்தும் அன்றைய இரவை தூங்க இரவாக பழைய நினைவுகளுடன் கழித்தான் .

மூன்று ஆண்டுகளுக்கு முன் .......
இரபத்தியாறு வயது கட்டிளங்காளைகளாக மும்பை மாநகரை சுற்றி திரிந்தனர் யஸ்வந்த் மற்றும் நிஸ்வந்த் . இருவரும் ஒரே நேர்கோட்டில் செல்பவர்கள் . அதில் அவர்களுக்கு என்று தனி சாம்ராஜ்ஜியம் ,தனி கோட்பாடுகள் .

வளர்ந்த பிள்ளைகள் சுயத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவர்களின் வீட்டின் பெரியவர்கள் அவர்களை அவர்கள் போக்கில் விட்டனர் . வெளிநாட்டில் முழுதாக படித்து வந்த இருவரும் கோட்பாட்டுக்குள் வாழ விரும்பவில்லை . வீட்டின் பெரியவர்களுக்கு தெரியாமல் இருவரும் மது மாது புகை பப் என்று சந்தோசமாக களித்தனர் . அதே நேரம் தொழிலும் செம கெட்டி எதிரிகள் என்று எவரும் இருக்க கூடாது என்பதில் இருவரும் கருத்தாக இருந்தனர் .

அப்பொழுதுதான் தொழில் முறை கூட்டத்தில் தொழிலதிபரான ரோஹனுடன் அவளை பார்த்தான் நிஸ்வந்த் .

“ ஹே யாஷ் யாரு அந்த பொண்ணு செம கியூட் ...அழகா பொம்மை மாரி இருக்கா ” என்றான் நிஸ்வந்த் .

ரோஹன் வளந்துவரும் தொழில் அதிபர் அவனின் வளர்ச்சி தங்களை பாதிக்குமா என்று எண்ணி அவனை பற்றி விசாரித்து அறிந்து வைத்திருந்தான் யாஷ் . ரோஹனின் தந்தை சிறு முதலீட்டில் தொழில் ஆரம்பித்து தவறினர் அதை எடுத்த ரோஹன் இப்பொழுது தான் கொஞ்சம் முன்னேற்றம் காண்கிறான் . ரோஹனின் தாய் பேராசை கொண்டவர் . மகளை பெரிய இடத்தில திருமணம் முடித்தால் மகனுக்கு சொத்துடன் பெண் வரும் என்ற எண்ணம் .

அதற்காகத்தான் இன்று பிடிக்காத இடத்திற்கு தனது மகள் அபியை சீவி சிங்காரிச்சு அனுப்பிவைத்திருக்கார். அபியின் கண்களில் தெரிந்த மருட்சி யஸ்வந்த்தை யோசிக்க வைத்தது .

“நிஷு அவங்க பேரு அபி...அபிதா ரோஹனின் தங்கை ஒழுக்கத்துடன் வாழவேண்டும் என்ற கோட்பாடுகளுடன் வளந்தவங்க ...அந்த குடும்பத்தில் தப்பி பிறந்த பெண் தன் மகளின் அழகை காட்டி பணக்காரரை வளைத்து போடுவது இவர்களின் அம்மா லக்ஷ்மியின் திட்டம்....இப் ஆம் நோட் ராங் இன்னைக்கு கூட அவங்க சொல்லித்தான் இவங்க இந்த பார்ட்டிக்கு வந்திருக்கனும் ” என்றான் .

“ரியலி ஐ லைக் ஹேர் “ என்றான் நிஸ்வந்த் .

பதறிய யாஷ் “வேண்டாம் நிஷு அவங்க உனக்கு செட் ஆக மாட்டாங்க ...நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று என்னும் ஆட்கள் ...அவங்க இப்படித்தான் வாழனும் இல்லை சாகனும் என்று யோசிக்கும் நபர் .” என்று எச்சரித்தான் யாஷ் .

“ஹ்ம்ம் ” என்றுகூறி நகர்ந்த நீஸ்வந்த்தின் மனதில் அவளின் மருண்ட விழிகள் வந்து ஆட்சி செய்தது .

யஸ்வந்த் தொழில் விஷயமாக சென்னை சென்றிருந்த சமயம் நிஸ்வத்திற்கு அபியை சாலையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது .

சாலையில் தங்கள் வீடு கார் பழுதாகி நின்றுவிட அபி கையை பிசைந்து கொண்டு சுற்றியும் பார்வையை சுழற்றினாள் . தூரத்தில் தனது ஆடி காரில் வந்துகொண்டு இருந்த நிஷு “ஹே பூனைக்குட்டி ”

“எதுக்கு இப்படி முழிச்சுகிட்டு நிக்கிறா ....அது சரி நாம பாக்கிரப்ப எல்லாம் முழிச்சுகிட்டுதான் நிக்கிறா ....” என்று தனக்குள் கூறிக்கொண்டே அபியின் அருகில் சென்று தனது காரை நிறுத்தினான் . தனது அருகில் ஒட்டினாற்போல் நின்ற காரை பார்த்து பயந்தாள் அவள் .

“ஹே பூனைக்குட்டி நீ இவ்ளோ பயந்த சுபாவமா ? “ என்று எண்ணிக்கொண்டே தனது காரை விட்டு கீழே இறங்கினான் நிஷு .

ஒரு நொடி அவனை உற்று பார்த்த அவள் அவள் அவனின் பின் பார்வையை செலுத்தினாள்

‘ஒஹ் அம்மணிக்கு நம்மள பத்தி தெரியும்போலவே ’ என்று எண்ணிய நிஷு “ஹ்க்கும் யாஷ் சென்னை போயிருக்கான் ஆம் நிஸ்வந்த் “என்று கூறினான் .

“ஹாய் ” என்று கூறி முறுவல் அளித்தால்.

“என்ன இங்க நிக்கிற ” எடுத்தவுடன் ஒருமையில் பேசும் அவனை விழி அகற்றாமல் பார்த்தாள் . அவனும் என்ன செய்வான் நித்தமும் அவளின் நினைவில் உருகி கரையும் அவனுக்கு அவள் அந்நியமாகவே தெரியவில்லை .

“நீ எப்டியும் என்னை விட சின்ன பொண்ணுதானா அதான் . நீ ரோஹனுடைய தங்கை தானே ?” என்றான் . அவள் ‘ ஆம் ‘ என்னும் விதமாக தலை ஆட்டினாள் .

“ என்னை முன்பே தெரியுமா ? “ என்றான் .

இவள் அதற்கும் தலை ஆட்டி வைத்தாள் . என்னடா இது பூம் பூம் மாடு மாரி தலையை தலையை ஆட்டுறா என்று எண்ணினான் .

“ என்னாச்சு “ என்று மீண்டும் வினவினான் .

“ அது அது கார் ரிப்பேர் நான் காலேஜ் போகணும் எக்ஸாம் ...அதான் பிரிண்ட்ஸ் வந்தா லிப்ட் கேட்டு போலாம்னு ” என்று இழுத்தாள் .

“ வா நான் ட்ரோப் பண்றேன் “ சற்றும் யோசிக்காமல் கூறினான் அவன் .

அவள் திகைத்தாள் அதற்குள் டிரைவர் அவளை பார்த்து “ நீங்க அவரோட போங்க சின்னம்மா பயம்வேண்டாம் உங்க அண்ணா கிட்ட சொல்லிடறேன் “ என்றார் .

அவளையே பார்த்துக்கொண்டு இருந்த நிஸ்வந்தை பார்த்து ” போலாம் ” என்றாள் தயங்கிக்கொண்டே .

போகும் வழியில் அவளின் படிப்பு வீடு என்று அனைத்தை பற்றியும் கேட்டறிந்தான் . அவள் தயங்கிக்கொண்டே பதில் கூறினாள் . கல்லூரி வரவும் இறங்கி உள்ளே ஓடினாள் .

நன்றி கூட சொல்லாமல் போகும் அவளை பார்த்த அவனுக்கு சிரிப்பு தான் வந்தது . வயது தான் பதினொன்பது குணம் குழந்தை போல என்று எண்ணிக்கொண்டான் .

இரவு அடுத்த பரிட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்த அவளின் அருகில் இருந்த அவளின் தொல்லை பேசி தொந்தரவு குடுத்தது .

எடுத்து பார்த்தவள் இரவு எதோ தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு என்றவுடன் எடுக்காமல் தவிர்த்தாள் . மீண்டும் தொல்லை பேசி தொல்லை குடுத்தது .

எரிச்சலுடன் காதில் வைத்து “ ஹலோ “ என்றாள் .

“ எக்ஸாம் எப்படி பண்ணீன” என்று ஆழ்ந்த ஆண் குரல் வினவியது . பயத்தில் அவளின் உள்ளங்கை வேர்த்து கைபேசி நழுவ பார்த்தது அவளுக்கு .

“ ஹெலோ...ஹெலோ ஊவ் இஸ் திஸ் ?” என்றாள் திக்கிகொண்டே .

“ ட்ரோப் பணினவங்களுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டிங்களா ?” என்றது அந்த குரல் .

கண்டுகொண்டாள் அவள் அவனை கண்டுகொண்டாள் உதடு துடிக்க மெதுமைவாக “நிஷு ” என்றாள் .

அவன் சத்தமாக சிரித்து ”நோட் பேட் ” என்றான் .
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top