JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 💘 - அத்தியாயம் 1.

Priyadharshini.S

Active member
அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 1


"#Baby"
"You are not just a °CHAPTER° in my 'LIFE'
You are my °WHOLE NOVEL°".

ஓம் சிவாய நம
மஹேஸ்வராய நம
சம்பவே நம
பிநாகிநே நம
சசிசேகராய நம
வாமதேவாய நம
விருபாக்ஷய நம
கபர்தினே நம
நீலலோகிதாய நம
சங்கராய நம

வீட்டின் தலைவியாய் அனைவரின் நலம் வேண்டி பூஜையறையில் சிவ பெருமானை நினைத்து, சிவாஷ்டோத்தரதச நாமவளியிலிருந்து முதல் பத்து நாமங்களை பூர்ணிமா சொல்லி முடிப்பதற்குள், திடீரென வீடே ஆட்டம் காணும் வகையில் மியூசிக் பிளேயர் அவ்வீட்டின் இளவரசியின் உபயத்தால் ஒலித்தது.

Oppan Gangnam style
Gangnam style
Op, op, op, op
Oppan Gangnam style
Gangnam style
Op, op, op, op
Oppan Gangnam style

Eeeeeh, sexy lady
Op, op, op, op
Oppan Gangnam style
Eeeeeh, sexy lady
Op, op, op, op
Eh-eh, eh-eh-eh-eh

Ttwineun nom geu wiae naneun nom
Baby, baby, naneun mwol jom aneun nom
Ttwineun nom geu wiae naneun nom
Baby, baby, naneun mwol jom aneun nom
You know what I'm saying

Oppan Gangnam style
Eh-eh, eh-eh-eh-eh
Eeeeeh, sexy lady
Op, op, op, op
Oppan Gangnam style

Eeeeeh, sexy lady
Op, op, op, op
Eh-eh, eh-eh-eh-eh
Oppan Gangnam style

குளித்து முடித்து பள்ளி கிளம்புவதற்காக கண்ணாடி முன்பு நின்று தனது நீண்ட கூந்தலை இரு பக்கமும் சமமாக பிரித்து, பள்ளி சீருடைக்கு ஏற்றவாறு ரிப்பன் வைத்து பின்னலிட்டு கட்டியவளின் கால்கள் மட்டும் ஓரிடத்தில் நில்லாமல் அந்த ஆங்கில பாடலுக்கு ஏற்ப அசைந்தாடிக் கொண்டிருந்தது.

பூஜையை முடித்துக்கொண்டு ஆரத்தி தட்டுடன் கூடத்திற்குள் நுழைந்த பூர்ணிமா, அலுவலகம் செல்லத் தயாராகி உணவு மேசையில் அமர்ந்திருக்கும் தனது அண்ணன் மகன் ராஜீவிற்க்கு விபூதியை பூசியவாறு மேல் தளத்தை அண்ணாந்து பார்த்தார்.

அத்தையின் பார்வை செல்லும் போக்கறிந்து, "சின்ன பிள்ளை தானே அத்தை, வளர்ந்தால் சரியாகிவிடுவாளென்று" நம் நாயகிக்கு சப்போர்ட் செய்தான்.

"நீ கொடுக்கும் செல்லத்தால் தான் அவள் என்னை மதிப்பதே கிடையாது" என்று ஆதங்கமாகக் கூறியவாறு, அப்போதுதான் அங்கு வந்தமர்ந்த தன்னுடைய அண்ணன் சங்கரபாணிக்கும், ராஜீவிற்க்கு உணவினை பரிமாறினார்.

"நம்ம வீட்டு கலகலப்பிற்கே அவள் தான் காரணம்"

தங்கையின் குற்றசாட்டிற்கு சங்கரன் பதிலளிக்க,

"அதென்ன பொம்பள பிள்ளைக்கு வீடே அதிர பாட்டு கேட்டுக்கொண்டு ஆடும் பழக்கம், வயசுபிள்ளை ராஜீவ் கூட அப்படியில்லை.. இன்னும் பள்ளி படிப்பே முடித்திடாத இந்த அரக்காப்படிக்கு என்ன அவ்வளவு ஆட்டம்".

பூர்ணிமா பொறிந்து தள்ளினார்.

ஆண்கள் இருவரும் ஒருசேர "சின்ன பிள்ளை தானே" என ராகமிழுக்க,

தான் என்ன புலம்பினாலும் இவர்களிடம் எதிர்வினை இருக்கப்போவதில்லை என்பதை அறிந்த பூர்ணிமா, நாயகியின் அறை நோக்கி நகர்ந்தார்.

அவர் மேலேறி சென்றால் நிச்சயம் தன் குட்டிமாவிற்கு மண்டகபடி கிடைக்குமென நினைத்த ராஜீவ் "அத்தை சாப்பாடு வையுங்கள்" என குரல் கொடுத்தான்.

நின்று அவனை திரும்பி பார்த்த பூர்ணிமா, "முதலில் தட்டிலிருப்பதை கொட்டிகோடா" என்றவாறு படியேறினார்.

அவரின் வார்த்தைகளில் ராஜீவ் திருத்திருக்க, சங்கரன் தட்டில் குனிந்தவாறு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

மேலேறிச்சென்ற பூர்ணிமா, அன்றிலலர்ந்த புத்தம் புது மலராய் நின்றிருந்த 'ஆருயிஷா'வை கண்டதும் தானெதற்கு வந்தோம் என்பதை மறந்தவராக மகளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

அலறிக்கொண்டிருந்த மியூசிக் பிளேயரை ஆஃப் செய்தவர், "வந்து சாப்பிடும்மா" என்று வாஞ்சையாகக் கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.

அவரின் வருகையை உணர்ந்து உணவு உட்கொண்டிருந்த இருவரும் தங்களுக்குள் சிரித்துக்கொள்ள, அதனை கவனித்தவராய் படியிறங்கிக்கொண்டே ஆருயிஷாவை திட்டத் தொடங்கினார். இல்லை இல்லை திட்டுவதைப்போல் நடித்தார்.

"இன்னைக்கு ஏதோ போட்டியிருக்கு அதிருக்குன்னு.. பாடிக்காட்டுறேன், பேசிகாட்டுறேன்னு நைட்டெல்லாம் எங்க உயிரை வாங்கிட்டு இப்போ ஆடி அசைஞ்சு கிளம்பிட்டுயிருந்தால் என்னடி அர்த்தம்."

அதற்குமேலும் சிரிப்பினை அடக்க முடியாத சங்கரன், "போதும் பூரணி நீ நடித்தது.. மேலே என்ன நடந்திருக்குமென்று எங்களுக்குத் தெரியும்" என்றவராய் கை கழுவச் செல்ல..

"அது வந்து அண்ணா" என பூரணி தடுமாறினார்.

பள்ளி கிளம்பித் தயாராகி கீழறிங்கி வந்த ஆருயிஷா, தடுமாறி நின்ற அன்னையை கரம் பிடித்து உணவு மேசை அருகே அழைத்து வந்து சாப்பாடு ஊட்டுங்கள் என்றாள்.

தனது அண்ணன் முன்னால் காமெடி பீஸாக நடந்துகொண்டோமே என்ற கடுப்பில் "போடி நீயே போட்டு சாப்பிடு" என்று பூர்ணிமா நகர்ந்துகொள்ள..

'ராஜீவ் தன் தட்டிலிருப்பதை அவளுக்கு ஊட்டத் தொடங்கினான்.

தந்தையிழந்த ஆருயிக்கு ராஜீவ் எப்போதும் ஒரு காவலன் தான்.

எட்டாவது படிக்கும்போது தாயின் இழப்பிலிருந்து மீள முடியாது தவித்த ராஜீவிற்க்கு, தனது சோகங்களை மறக்க கிடைத்த பொக்கிஷமாக ஆருயியை பார்த்தான்.

சங்கரபாணியும், பூர்ணிமாவும் அண்ணன் தங்கை என்ற உறவால் இணைந்த அனாதைகள். ஆசிரமத்தில் இருவரும் ஒன்றாக வளர, காட்டன் மில் ஒன்றில் தான் வேலையிலமர்ந்ததும் தங்கை உறவில் தனக்கு ஆறுதலாக இருந்த பூரணியை தன்னுடனே அழைத்துக்கொண்டார்.

வேலையில் தான் சம்பாதித்த பணத்தை முதலீடாகக் கொண்டு ஜவுளிக்கடை ஒன்றை திறந்து... அதில் முன்னேற்றம் கண்ட பிறகு, தொழிலில் தனக்கு துணையாக நண்பனாக பாதுகவலனாக இருந்த தங்கவேலுவை பூரணிக்கு திருமணம் செய்து வைத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். தங்கவேலுவும் யாருமின்றி தனிமையில் வளர்ந்தவர். இவர்கள் மூவரும் என்றிருந்த குடும்பத்தில் அடுத்த ஒரு வருடத்தில் புதுவரவாக வந்தவர் சங்கரபாணியின் மனைவி மகா. ஆசிரமத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, ஒரு அனாதைக்கு தான் வாழ்வு கொடுக்க வேண்டுமென்று மகாவை பார்த்து விரும்பி திருமணம் செய்தார்.

மணம் முடிந்த அடுத்த வருடத்திலேயே சங்கரன் மகாவிற்கு ராஜீவ் பிறக்க குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது.

பத்து வருடம் கழிந்தும் பூரணி தாய்மையடையாது இருப்பது அவர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், யாரும் வெளியே காட்டிக்கொள்ளாது வலம் வந்தனர்.

இதற்கிடையில், பூரணி ஏறாத மருத்துவமனை செய்யாத வைத்தியம் கிடையாது. பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். இறுதியில் இறைவனே தஞ்சமென்று கோவில் கோவிலாக சுற்றத் தொடங்கினார்.

'எல்லாவற்றிற்குமான தீர்வு நாயகன் இறைவன் ஒருவனே' என்பதைப்போல் பூரணியும் கருதரித்தார். குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியது. தன் அத்தைக்கு குட்டி பாப்பா வர போகிறதென்றதில் ராஜீவும் துள்ளி குதித்தான். தினமும் இரவு வயிற்றிலிருக்கும் ஆருயிடம் பேசாமல் ராஜீவ் உறங்கவே மாட்டான்.

"அத்தை மகளுக்கு இப்போதே ஐஸ் வைக்கிறாயா" என்று மகா கேட்பதற்கு,

"அவள் என்னுடைய குட்டி பாப்பா, அப்பாவும் மாமாவும் என்னை பார்த்துக் கொள்வதைப்போல் அவளை நான் பார்த்துக்கொள்வேன்" என்று கபடமற்று சொல்லுவான்.

ஓர் நாள் புதுவரவு ஆடைகளின் சரக்கிற்காக சங்கரன் வெளியூர் சென்றிருந்த சமயம் மகாவிற்கு காய்ச்சல் படுத்தி எடுத்தது.

பேரு காலத்தால் பூரணியால் மகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் போக, தங்கவேலு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

செல்லும் வழியில் வண்டி பிரேக் பிடிக்காமல் தடுமாற எதிரே வந்த டேங்கர் லாரியில் மோதி... அதற்கடியிலேயே இருவரின் உயிரும் பிரிந்தது.

குருவிகூட்டில் கல்லடி பட்டதைப்போல் அக்குடும்பமே சிதைந்தது.

உண்ணாது உறங்காது தொழிலில் நாட்டமில்லாது, பள்ளி செல்லாது மற்ற மூவரும் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர்.

இரண்டு நாட்கள் சோகத்தில் ஒன்றும் உணராது உணர்ச்சிகள் மருத்து சுருண்டு கிடந்த ராஜீவ், பக்கத்து வீட்டில் கேட்ட குழந்தையின் அழுகுரலில் நினைவு மீண்டான்.

'அவன் நினைவுகளில் சுழன்றதெல்லாம் இன்னும் ஜனித்திடாத ஆருயிஷா தான்.'

தனக்கு தெரிந்த வகையில் பழங்களை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கினான்.

அறையின் மூலையில் அரை மயக்கத்தில் விழுந்து கிடந்த பூரணியை தட்டி எழுப்பியவன்.. "அத்தை குட்டிம்மாக்கு பசிக்கும், நீங்க சாப்பிடுங்கள்" என்றவனை அழுகையோடு வாரி அணைத்துக்கொண்டார்.

சில நிமிடங்கள் சென்றும் அவரது விசும்பல் அடங்கவில்லை.

பூரணியின் மடியில் அமர்ந்திருந்த ராஜீவ், தன் பிஞ்சு விரலால் அவரின் கன்னம் துடைத்து.. "மாமா இல்லைன்னு அழாதே அத்தை, குட்டிம்மாவா நான் பார்த்துக்கிறேன்.. அவளுக்கு என்ன செய்யணுமோ எல்லாம் நான் செய்கிறேன்.. அவள் வளருவதற்குள் நான் பெரியாளா ஆகிடுவேன்" என்றவனை தன்னுடைய முத்தத்தால் ஆராத்தித்தவர், அவனுக்காக தன்னையும் தேற்றிக்கொண்டு சங்கரனையும் தொழிலில் முழு மூச்சாக செயல்பட வைத்தார்.

அதன் பின்னர் ஆருயிஷா பிறந்ததும் அவர்களது உலகம் அவளென்றானது. அவளை நன்கு பார்த்துக் கொள்வதற்காகவே பெரிய வேலையில் அமர வேண்டுமென்று ராஜீவ் நன்றாக படித்தான். அவனுக்கு சாப்ட்வெர் பீல்டு தான் விருப்பம், ஆனால் அந்த வேலை செய்ய வேண்டுமானால் குடும்பத்தை பிரிந்து நகரத்தில் தனித்து வாழ வேண்டுமென்று தந்தைக்கு உதவியாக அவர்களது ஜவுளிக்கடையிலேயே வேலை பார்க்கத் துவங்கினான். நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப புது புது மாற்றங்களை புகுத்தி, சங்கரன் இட்டுச்சென்ற வளர்ச்சி பாதையில் மேலும் முன்னேற்றம் அடைந்தான்.

ஏழு மாடி கொண்ட அவர்களது 'தீபம் ஆடையகம்' அங்கு மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிகவும் பிரபலம்.

நாம் நிகழ்காலம் மீளும் சமயம் ராஜீவும் ஆருயிக்கு உணவினை ஊட்டி முடித்திருந்தான்.

உணவு உண்பதற்கிடையே, போட்டியின் போது மேடையில் எவ்வாறு தைரியமாக நிற்க வேண்டும் மற்றும் இன்னும் பல யுத்திகளை சொல்லிக் கொடுத்தவன் வெற்றி பெற வாழ்த்தும் கூறினான்.


அந்நேரம் அலைபேசியை கொண்டு வந்து ஆருயிடம் நீட்டினார் பூர்ணிமா.

எதிர்முனையில் யாரென்று அறிந்த ஆருயி உற்சாகத்துடன் பேசியில் பேசத் தொடங்கினாள்.

"சொல்லுடா ஆதிக், எப்படியிருக்க?"

"நைட் தாண்டா பேசினேன்.. அதுக்குள்ள எப்படியிருக்க கேட்டா, என்ன சொல்றது?"

"கேள்வி கேட்டால் பதில் சொல்லி பழகு டா எருமை மாடே."

"ஓகே, ஓகே.. கிளம்பிட்டியா?"

"ம்ம்ம்.."

"ஆல் தி பெஸ்ட், டிஸ்ட்ரிக்ட் காம்பெடிஷன் வின் பண்ணிட்டு வா"

"தேங்க்ஸ் டா, டைம் ஆச்சு... ஈவ்னிங் வந்து பேசுறேன்.. பை டா."

(ஆதிக் யாரென்பதை கதையின் போக்கில் தெரிந்துகொள்ளலாம்.)

பேசி முடித்து வந்தவளிடம்... "பார்த்து போயிட்டு வா குட்டிம்மா" என்ற ராஜீவ் தங்களது கடைக்கு சென்றான்.

அவன் சென்ற பின்பு, ஆருயியின் தலையில் கொட்டிய பூரணி.. "ஏண்டி, சாப்பிடும்போது அவனிடம் அதைப்பற்றி பேசு என்று தானே சொன்னேன்."

"அச்சோ, சாரிம்மா.. மறந்துட்டேன், நைட் வந்து கண்டிப்பா பேசுகிறேன்" என பதிலளித்த ஆருயி மீண்டும் பூரணி திட்டுவதற்குள் சென்றிட வேண்டுமென்று சிட்டாக பள்ளி நோக்கி பறந்துவிட்டாள்.

ஆருயி பள்ளிக்கு சென்ற போது, அவளது பள்ளி சார்பாக... மாவட்ட அளவிலான அனைத்து பள்ளிகளுக்கான கலைபோட்டிகளில் பங்குபெறும் மாணவர்கள், போட்டி நடைபெறும் திடலுக்கு செல்லத் தயாராக இருந்தனர்.

லேட்டாக வந்ததால்.. பள்ளி முதல்வரிடம் மன்னிப்பு வேண்டியவள் அவரின் முறைப்பையே பரிசாகப் பெற்றாள்.

நேரமாவதை உணர்ந்து அவர் திட்டாமல் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொள்ள, அவர்களது பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு திடலை நோக்கி வந்து சேர்ந்தது.

அவர்கள் அனைவரும் வாகனத்திலிருந்து இறங்க,

மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள்.. நகரத்தின் நடுவே அமைந்திருக்கும் அவ்விளையாட்டுத் திடலில் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காணும் இடமெல்லாம் பல்வேறு வகையான சீருடையில் மாணவ மாணவிகள் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரிந்தனர். அந்த இடம் சிரிப்பிற்கும், விளையாட்டிற்கும், அரட்டை கச்சேரிக்கும் குறைவில்லாது காணப்பட்டது.

சில மாணவர்கள் மற்றும் தங்களின் பள்ளி சார்பாக வந்திருக்கும் ஆசிரியர்கள் பலர் பரபரப்பாக இயங்க, வேடிக்கை மட்டுமே பார்ப்பதற்காக வந்த மாணவக்கூட்டம், குழு குழுவாக வட்ட மாநாடு நடத்தியபடி தங்களின் தனி உலகில் சஞ்சரித்தபடி இருந்தனர்.

"டேய் மாப்ள... என்னடா வந்ததுல ஒண்ணு கூட கண்ணுக்கு குளிர்ச்சியாவே இல்லை, நம்ம ஸ்கூல்ல மட்டும் தான் எல்லாம் வத்தலும் தொத்தலுமா இருக்குன்னு பார்த்தால், நம்ம டிஸ்ட்ரிக்ட் ஸ்கூல் எல்லாத்துலயும் அப்படி தான் போல"

சைட் அடிப்பதற்காக மட்டுமே அங்கு வந்திருக்கும் ரிஷி தனது ஆருயிர் நண்பன் அர்ஜூனிடம் அலுத்துக்கொண்டான்.

ஏற்கனவே கடுப்பிலிருந்த அர்ஜூன் ரிஷியின் பேச்சில் எரிச்சலுற்று, அங்கிருந்து எழுந்து செல்ல, புயலென ஓடிவந்த தென்றல் காற்று ஒன்று அவன்மீது மோதி நின்றது.

அர்ஜூனின் உயரத்திற்கு நெஞ்சுவரை மட்டுமே இருந்த அந்த தென்றல் காற்று, அவன்மீது மோதிய வேகத்தில் இரண்டடி நகர்ந்து கீழே விழ, அவளின் கைகளில் வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் காற்றில் அவ்விடமெங்கும் பறந்தன.

தன்மீதே தவறென்று உணர்ந்தவள், "சாரி ப்ரோ.. தெரியாமல் இடித்துவிட்டேன்" எனக் கூறியபடி அர்ஜூனை பார்க்காமல் கீழே பறந்துகொண்டிருக்கும் காகிதங்களை சேகரித்துக் கொண்டிருந்தாள்.

தன்மீது மோதி விழுந்தவளின் அழகிய நயனங்களிலேயே லயித்திருந்தவன், அவள் குனிந்து காகிதங்களை எடுக்கும்போதும்.. தாழ்ந்திருக்கும் அவளின் நீண்ட இமைகளிலேயே பார்வையை பதித்திருந்தான்.

அவள் சாரி ப்ரோ என்றதில் உணர்வு பெற்றவன்... பட்டென "நான் உனக்கு ப்ரோ இல்லை" என்று மொழிந்தான்.

அர்ஜுனின் முகத்தில் கோபம் கனன்றது.

அழகான பெண் சகோதரனாய் விளித்தால் எந்தவொரு ஆணுக்குத்தான் பிடிக்கும். அர்ஜூனும் அதற்கு விதிவிலக்கல்ல.

நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜூனின் நண்பர்கள் பட்டாளம், அவனின் வார்த்தைகளில் வேற்றுக்கிரக வாசியை பார்ப்பதைப்போல் அவனை பார்த்தனர்.

பள்ளியில் ஹீரோவாக வலம் வரும் அர்ஜூன் தன்னிடம் காதலென்று பிதற்றும் பெண் பிள்ளைகளை தங்கையென்று அழைத்தோ அல்லது அவர்கள் வாய் வழியாகவே தன்னை ப்ரோ என்றோ அழைக்க வைத்து அவர்களின் தொல்லையிலிருந்து தப்பித்துக்கொள்வான். அப்படிப்பட்டவன் தன்னை ப்ரோ என்று விளித்த பெண்ணை முதல்முறையாக தடுக்கிறானென்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

அர்ஜூனின் கோபம் புரியாத பேதையவள் அங்கிருந்து திரும்பி நடக்க, அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவனின் பார்வை அவளின் நெஞ்சுப்பகுதிக்கு நெருக்கமாக பதிந்தது.

அவனின் பார்வை சென்ற இடத்தை நோக்கியவள்.. "இடியட்" எனத் திட்டியவாறு நகர, அவளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை பிடித்திழுத்தான்.

அவனிழுத்த வேகத்திற்கு வெடுக்கென பறித்தவள், அர்ஜூனை கொலைவெறியுடன் முறைக்க, அவனோ படு கூலாக "உன் பெயர் என்ன?" என்றான்.

"பொரிக்கிங்க கிட்டலாம் பேர் சொல்லக்கூடாதன்னு வீட்டுல சொல்லி வச்சிருக்காங்க"

தனது உஷ்ண பார்வையை சற்றும் மாற்றாது அவள் கூற,

"இந்தபுள்ள அடிவாங்காமா போகாதுபோல" என்று நினைத்த ரிஷி அர்ஜூனின் புன்னகை தவழும் முகத்தைக் கண்டு மயக்கமானான்.

தன் நண்பன் மயங்கியதைக்கூட கருத்தில் கொள்ளாத அர்ஜூன், நங்கையவளின் கரத்தால் மறைக்கப்பட்டிருக்கும் அடையாள அட்டையினை பறிக்க முயற்சிக்க..

சற்று தூரத்தில் ஒலித்த அவளது தோழியின்,

"ஆருயி, மேம் காலிங் யூ," என்ற அழைப்பில் அர்ஜூனிடம் அசட்டு புன்னகை சிந்தியவளாக ஓடிவிட்டாள்.

'அவனின் மெல்லிய ஐ லவ் யூ ஆருயி.. காற்றோடு கலந்தது.'

அவளது பெயரை பலமுறை உச்சரித்து பார்த்தவன், ஆருயின் அடையாள அட்டையை பார்த்திருந்தால்.. பின்னாளில் தனக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சியிலிருந்து தப்பியிருப்பானோ??!!.


#YOU ARE MY EVERYTHING BABY

♥♥♥♥♥♥






வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


#STAY HOME.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top