JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அ(ஆ)ழகா(மா)ய் ஓர் காதல் 💘 3.

Priyadharshini.S

Active member
"மனிஷா"

ராஜீவ் கூறிய பெயரைக் கேட்டதும்,

"காதல் ஒருவனுக்கு மூன்று வருடங்களுக்கு மேலும் வலியை கொடுக்குமா?" என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்ட ஆருயிக்கு, தானும் காதல் வலியை அனுபவிக்க போகிறோம் என்பது அந்நொடி தெரியவில்லை.

மனிஷாவிற்கு ராஜீவ் மீது காதல் வந்ததோ அவள் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது, அப்போது ராஜீவ் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவன்.

மனிஷாவின் முதல் வருட துவக்கத்திலேயே ராஜீவின் மீது அவளுக்கு கிரஷ் என்று சொல்லப்படும் ஒருவித ஈர்ப்பு தோன்றியிருந்தாலும், அவனிடம் காதலை சொல்வதற்கு ஏதோ தடை. அது அவனின் அப்போதைய நடுத்தர வாழ்வாகக் கூட இருக்கலாம்.

ஒருநாள் ராஜீவ் தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருப்பதை மனிஷா தற்செயலாக கேட்க நேர்ந்தது.

"ஏன்டா, எப்போ பாரு புத்தகமும் கையுமாவே சுத்திட்டு இருக்க.. நீயெல்லாம் படிக்காமல் போனாலே நூறு மார்க் எடுப்பாய்".

தனது நண்பன் கேட்டதற்கு,

"என்ன தான் சொந்தமாக ஜவுளிக்கடை, ஓரளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும்.. வெளிநாடு சென்று வேலை பார்த்து அங்கேயே செட்டில் ஆவது தான் என்னுடைய விருப்பம்" எனக் கூறியிருந்தான்.

ராஜீவ் வெளிநாடு என்று சொன்னதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அவனுடன் கை பிடித்து படு ஸ்டைலாக மாடர்ன் உடையில் பெருநகரங்களில் சுற்றித்திரிவதை போல் கற்பனையில் மிதந்தவள் அடுத்த நாளே தன்னுடைய காதலை அவனிடம் சொல்லியிருந்தாள்.

படிப்பு ஒன்றே தன்னுடைய தரத்தை உயர்த்தும் அதுவே தனது குடும்பம் மேம்பட வழி செய்யும் என்ற எண்ணத்தோடு இருந்ததால் நாகரீகமாக மனிஷாவின் காதலை தவிர்த்தான்.

தானே காதலை சொல்லியும் தன்னை வேண்டாமென்று சொல்லிய ராஜீவின் மீது வன்மம் கொண்டாள் மனிஷா.

மனிஷா நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் நிலையில் இருக்கும் பெண். தந்தையின்றி தாயின் அன்றாட வேலைகளில் வரும் பணத்தை கொண்டு வாழும் குடும்பம். இவளுக்கு கீழ் ஒரு தங்கை மற்றும் தம்பி. மூவரையும் படிக்க வைக்கவே இரவுகளிலும் உறங்காது உழைப்பவர். தங்களது குடும்ப நிலை பிள்ளைகளின் தோற்றத்தில் தெரிந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருப்பவர். அவர்கள் ஆசைப்படுவதை முயன்றளவில் நிறைவேற்றி வைப்பார்.

பிறந்தது முதல் தான் அனுபவிக்கும் இந்த ஏழ் நிலையின் மீது வெறுப்பாய் இருப்பவள், காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தாள். அதுவும் அவளது குறி பணக்கார வீட்டு பையன்கள் மட்டுமே, மனிஷாவிற்கு முக்கியம் ஒருவனின் குணம் அல்ல.. அவன் மூலம் கிடைக்கப்பெறும் பணம், வசதி, ஆடம்பரமான வாழ்க்கை. அதற்காகவே தன்னுடைய தோற்றத்தில் அதிகம் கவனம் கொள்பவள்.

அவளின் அழகிய முக வடிவமும், பால் நிறமும், நீண்ட கூந்தலும், சிக்கென்று இடையும், ஒல்லியான உயர்ந்த தோற்றமும் பார்ப்பவரை பலமுறை திரும்பி பார்க்க செய்யும்.

மனிஷா படித்துதான் தங்களது குடும்ப நிலையை உயரத்த வேண்டும். அவளது தம்பி தங்கையை படிக்க வைக்க வேண்டுமென்று அவளின் தாய் கீதா மகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்ய, அவளோ பள்ளியில் நன்றாக படித்தால் தான் பெரிய கல்லூரிகளில் சீட் கிடைக்கும்... அங்குதான் வசதியான வீட்டு பிள்ளைகள் பயில்வர், தனது கனவும் நிறைவேறும் என்ற வெறியுடன் படித்தாள்.

மனிஷா சுயநலமாக தன் வாழ்வு என்று யோசித்து செயல்பட, அத்தாயுள்ளமோ மகள் தங்களது குடும்பத்தை சீர்செய்யவே கடினமாக படிக்கிறாள் என எண்ணி பூரிப்படைந்தார். மேலும், அவள் வேண்டுவதையெல்லாம் கஷ்டப்பட்டு நிறைவேற்றினார்.

அவரின் கஷ்டமெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. 'பெற்றால் செய்வது அவரது கடமை' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாள்.

பள்ளி படிப்பு முடிந்ததும் அவள் நினைத்த கல்லூரியில் சீட் கிடைக்காமல் போக, நான் அங்கு தான் படிப்பேனென்று சாப்பிடாது அடம் பிடிக்க, கீதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நன்றாக படிக்கும் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையேயென அவர் வருத்தம் கொள்ள, மனிஷாவின் தம்பி கீதன் அதற்கான தீர்வை கூறினான்.

"அக்கா படிக்கட்டும்மா, அவள் நன்றாக படிப்பவள், அவள் படித்தால் நாம் விரைவில் நல்ல நிலைக்கு வர முடியும்.. பணம் தானே அக்கா படிப்பதற்கு தடையாக இருக்கிறது? நான் நம்ம பக்கத்து தெரு கணேஷ் அண்ணா கிட்ட சொல்லியிருக்கேன், நாளையிலிருந்து அவருடைய மெக்கானிக் ஷாப்பிற்கு வேலைக்கு போகிறேன்".

"எனக்கு குறைவான சம்பளம் தான், இருந்தாலும்... மெக்கானிக் செட் வேலைப்போக பால் போடுவது பேப்பர் போடுவது என முடிவு செய்து நம்ம மளிகை கடை அண்ணாச்சிகிட்ட கேட்டுவிட்டேன் அவரும் சரியென்றுவிட்டார்."

"இப்போது உன் வருமானமும் என் வருமானமும் சேர்த்து, கொஞ்சம் நம் செலவுகளையும் குறைத்துக்கொண்டால் அக்காவை அவள் விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்க வைத்துவிடலாம்மா" என்று தன் அன்னைக்கு தந்தையாக மாறி அறிவுரை வழங்கினான்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறு பையனுக்கு குடும்பத்தின் மீதிருக்கும் அக்கறை தனக்கில்லையே என்ற குற்றவுணர்வு சிறிதுமின்றி, அவனின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மனிஷா "தன் காரியம் நடந்தால் போதும்" என்று அசட்டையாக எழுந்து சென்றுவிட்டாள்.

"வீட்டுக்கு ஆண் பிள்ளைடா... நீ படிக்காமல் எப்படிடா" யோசனையாக இழுத்த கீதாவை தடுத்தவன்,

"வீட்டிலிருந்தே டுடோரியல் மூலம் படித்து தேர்வு எழுதிக்கொள்கிறேன்"என அதற்கும் ஒரு தீர்வு வழங்கினான்.

அக்காவின் படிப்பிற்கு தன் தம்பி உதவி செய்வதுபோல் தானும் உதவ வேண்டுமென நினைத்த மனிஷாவின் தங்கை, பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து பக்கத்து வீட்டில் தையல் வேலை செய்யும் பெண்ணிற்கு சிறு சிறு உதவிகள் செய்து குறைந்த அளவேனும் பணம் ஈட்டினாள்.

இவ்வாறு மூவர் சம்பாதித்து ஒருத்தியை படிக்க வைத்தனர்.

மனிஷாவும் தனது சுயநலத்திற்கேனும் நன்றாக படித்தாள். தம்பி தங்கை முதலே யாருடனும் ஒட்டுதலின்றி வளர்ந்தவளாதலால் கல்லூரியிலும் யாருடனும் நெருங்கி பழக முடியவில்லை.

தானுண்டு படிப்புண்டு இருந்தவள் தனது தேடலை மட்டும் நிறுத்தவில்லை. நல்ல வசதியான வீட்டு பிள்ளைகள் படிக்கும் கல்லூரிக்கு கஷ்டப்பட்டு தான் வந்ததற்கான நோக்கத்தை மட்டும் அவள் கைவிடவில்லை.

அழகான ஆண் யாரையாவது பார்த்து அவளின் இளமைக்கான காதல் மனம் சஞ்சலப்படும் போது அவனை பற்றி அனைத்தும் அறிந்து கொள்வாள்.

தனக்கும் தன்னுடைய ஆடம்பர வாழ்விற்கும் ஏற்றவனாக இருப்பானெனில் அவனையே காதல் செய்து தன் வலையில் வீழ்த்துவது தான் மனிஷாவின் எண்ணம்.

ஒன்றிரண்டு மாணவர்களை கண்டாலும் அவர்கள் யாரும் தன்னுடைய அழகிற்கு ஈடில்லையென ஒத்திப்போட்டாள். அவர்களை சாய்சாக (choice) வைத்திருந்தாள்.

இந்நிலையில் தான் ஓர் நாள் மனிஷா ராஜீவை பார்த்தது. பார்த்ததும் அவனின் நெடுநெடுவென்ற உயரமும், இளமைக்கான அழகான தோற்றமும், கம்பீர முக வடிவும் மனிஷாவின் விருப்பமின்றியே அவளின் மனதில் காதலை விதைத்தது.

ராஜீவ் தன்னுடைய ஆடம்பர எதிர்கால வாழ்விற்கு ஒத்து வரமாட்டானென்று தனது மனதிடம் எவ்வளவோ வாதிட்டும் மனம் செல்லும் பாதையை அவளால் தடுக்க இயலவில்லை.

மனதில் என்ன தான் ராஜீவின் மீது காதலிருந்தாலும், அதனை அவளால் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணம் 'ராஜீவின் நடுத்தர வசதி.'

மனிஷாவின் அழகு அமைதியென பல மாணவர்கள் அவள் பின்னால் சுற்றினாலும் அவர்களையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாது தவிர்த்தாள். அதற்கு மேலும் காதலென்று பிதற்றுபவர்களை வார்த்தைகளால் அவமானப்படுத்தினாள்.

இருப்பினும் வசதியில் திளைத்த திலக் என்பவனிடம் தான் விரும்புவதாக மனிஷா சொல்ல, அவளை ஏற இறங்க பார்த்தவன்,

"நீ ரொம்ப அழகாத்தான் இருக்கின்றாய், வேண்டுமானால் உன்னை என் உல்லாச மாளிகையின் அந்தரங்க ராணியாக வைத்துக்கொள்கிறேன்" என்று அவன் கூறியதில் பதிலேதும் கூறாது மௌனமாக சென்றுவிட்டாள்.

கோடீஸ்வர வீட்டு இளசுகளுக்கு இதெல்லாம் சாதாரண ஒன்றென பாவம் அவளுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் தான் ராஜீவ் தன் நண்பனிடம் பேசியதை கேட்டவள், தன்னுடைய மனமும் அவனிடம் தஞ்சமடைந்து நாளாகின்றதென ராஜீவிடம் காதலை சொல்ல, அவனோ மறுக்க.. விடாப்பிடியாக அவன் பின்னால் காதலென்று சுற்றினாள்.

'உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேனென' ராஜீவ் நம்புபடி நடந்துகொண்டாள்.

'எறும்பூர கல்லும் தேயும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப மனிஷாவின் காதல் உண்மையென நம்பிய ராஜீவின் மனம் அவளின் காதலை ஏற்றுக்கொண்டது.

என்னதான் ராஜீவிடத்தில் மனிஷாவிற்கு காதல் இருந்தபோதிலும், தன்னுடைய கனவிற்கு இவன் ஒத்துவருவானா என்கிற சந்தேகமும் நாளுக்கு நாள் வலுப்பெற்றது.

அதற்கு காரணம் ராஜீவ். மனிஷா ஒன்றை விரும்ப அது யாவும் அநாவசிய ஆடம்பர செல்வுகளாகவே ராஜீவின் கண்களுக்கு தெரிய சிறு மறுப்போடு விலகிவிடுவான்.

மனிஷாவின் மீது ராஜீவிற்க்கு மலையளவு காதல் வலுப்பெற, அதனை வெளிப்படுத்தும் விதம் அவனுக்கு தெரியவில்லை.

எதிர்காலத்தை நினைத்து ராஜீவ் கடுமையான உழைப்பு மற்றும் கவனத்தை படிப்பில் செலுத்த, ராஜீவின் மீது மனிஷாவின் காதல் கொண்ட மனத்திற்கே சலிப்பு தட்டியது.

வாரம் முழுக்க படிப்பென்று சுற்றும் ராஜீவ், வெள்ளியன்று மாலை மட்டுமே மனிஷாவை கோவில், கடற்கரையென அழைத்துச் செல்வான். அதுவும் தன்னிடமிருக்கும் பாக்கெட் மணிக்குள் அவளுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வான்.

கல்யாணத்திற்கு பிறகும் இப்படி எண்ணி எண்ணி செலவு செய்தால் தன் ஆசை அவ்வளவு தானென்று நினைத்தவள் ராஜீவிடமிருந்து விலக முடிவு செய்தாள்.

'மனிஷா விலக நினைக்க, ராஜீவ் அவள் மீதான காதலில் மொத்தமாக வேர் பதித்தான்.'

இப்படியே சென்றால் தன் இளமை முழுவதும் வீணாகிவிடும். அப்புறம் ஒருவனும் தன்னை சீண்ட மாட்டானென்று கருதியவள் திலக்கிடம் சென்று பேச முடிவெடுத்தாள்.

"உனது முடிவு சரியா??" அவளின் மனம் நன்கு குழப்பிவிட... இறுதியில் 'மானமா? செல்வமா?' என்ற கேள்வியை செல்வம், ஆடம்பரம், வசதி, பணம், உல்லாசம் இவையே மனிஷாவை வென்றன.

"ராஜீவின் பின்னால் காதலென்று சுற்றியது தான்தான், இப்போது எப்படி அவனை தவிர்ப்பது" அவளிடம் யோசனை நீண்டது.

இந்நிலையில் ராஜீவின் தந்தைக்கு நெஞ்சுவலியென மருத்துவமனையில் சேர்க்க... டாக்டர் கூறிய "ஹார்ட் அட்டாக்" என்ற வார்த்தையில் குடும்பமே அட்டாக் வந்தது போல் தவித்தனர்.

சங்கரன் உடல்நிலை சுமூகமாக மருத்துவமனையில் அவர் எடுத்துக்கொண்ட நான்கு நாட்களுக்கும் ராஜீவே உடனிருக்கும்படி ஆனது.

'மனிஷாவிடம் மொபைல் இல்லாததால் அவளிடம் தகவல் சொல்ல முடியவில்லை.'

வீடு திரும்பிய சங்கரன், "நம் தொழிலை உன்னால் பார்த்துக்கொள்ள முடியுமா?" என்று வேண்டுகோளாய் வினவ,

குடும்பம் ஒன்றே வாழ்வின் ஆதாரம் என்பதை சிறுவயதிலேயே அறிந்திருந்ததால்.. தன்னுடைய தந்தைக்கு மறுப்பு தெரிவிக்காது சரியென்றான்.

கல்லூரியின் இறுதியில் இருந்ததால், ராஜீவிற்க்கு தொழிலை கையில் எடுப்பதில் எவ்வித சிக்கலுமில்லை.

அவ்வவ்வபோது சங்கரனுடன் கடைக்கு வந்து போனதால், தொழிலில் சிரமம் தெரியவில்லை.

காலை கடை, அதன் பிறகு கல்லூரி மாலை மீண்டும் கடையென ராஜீவின் நேரம் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

மனிஷா வேறுத்துறை மாணவி என்பதால் ராஜீவால் அவளை காண முடியவில்லை.

"இன்று எப்படியாவது மனிஷாவை பார்த்து தனது நிலையை விளக்க வேண்டும், உண்மை தெரியாமல் தன்மீது கோபமாக இருப்பாள்" என்று நினைத்து மனிஷாவிற்காக கல்லூரியின் வாயிலிற்கு அருகே காத்திருந்தான்.

சற்று நேரத்தில் அவன் கண்ட காட்சி அவனின் இதயத்தை நெருப்பு கம்பி கொண்டு சொருகிய வலியை அனுபவித்தது.


"# I LOVE YOU BUT I HATE YOU MORE THAN THAT."

♥♥♥♥♥♥♥♥♥
 

Chitra Balaji

Active member
Super Super maa.... Nice episode.... பணத்துக்காக avana love 😍 panni இருக்கா.... avan first avoid தான் panni இருக்கான் but ava தான் avana சுத்தி சுத்தி வந்து avana காதலிக்க vechi இருக்கா but அவன் avala உண்மை ah love 😍 panna ஆரம்பிச்ச பிறகு iva avan avaluku alavaa thaan எல்லாம் panraanu avana avoid pannitu vera aala pidichita... Ivala enna ஆளு lo... Rajiv romba odinji poitaan போல இந்த sambavathunaala... Super maa...
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top