JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றில்லை -8

Subageetha

Well-known member
அன்றில் 8

“கிழக்கில் சூரியன் உதிப்பது போல அன்றாட வேலைகளை செய்வதும் வழக்கமாகி விடுகிறது,”

பல வருஷங்களாய் ஓடிக்கொண்டிருந்தாலும், இதுவே வழக்கமாகி விட்டதாலும். பாலாவுக்கு சிறிது அலுப்புத் தட்டத்தான் செய்கிறது. இன்னுமும்ஐம்பதுவயதில் பெண்களுக்கே உண்டான உடல் பிரச்சனைகள். கையணைப்பில் வளர்த்த பிள்ளைகள் இருவரும் இப்போது அவரவர் வேலைகளில் மூழ்கிவிட்டனர்.

என்ன சொன்னாலும்,கணவனுக்கு மனைவிதான்,மனைவிக்கும் கணவன் மட்டும்தான்.! ராமன் இவளது நிலையை புரிந்தவராக வெகுவாக அனுசரித்துப் போகிறார்தான். அவருக்கும் இன்னமும் சிலவருஷங்கள் வேலை சென்றாகவேண்டும்.

சிவாவின் படிப்பு இன்னும் ஒரு வருஷம் மீதமுண்டு.பெரியவன் சென்னை வந்து ஒரு வருஷம் ஆகிறது. ஏனோ திருமணம்செய்துகொள்வதை பற்றி தவிர்க்கிறான். அதை பேசினாலே தவிக்கிறான். பாலாவுக்கு புரியாத ஏதோ ஒன்று ராமனுக்கு புரிகிறது. அவன் வாயை திறந்து ஏதேனும் சொன்னால்தானே ஒரு முடிவுக்கு வர இயலும்?

திரை மறைவில் இருப்பது பூதமாக இருக்குமா,இல்லை இன்னும் வேறொன்றா? வெறும் ஊகங்களின் அடிப்படையில் புலனாய்வு செய்ய இது என்ன திரைப் படமா என்ன?

இருவருக்குமே பொறுப்புகளை நிறைவேற்ற வழியின்றி தவிப்பதுபோல் ஒரு உணர்வு. ஆனந்தன் வாழ்வோ வழக்கம்போல், வீடு,மருத்துவ மனை. கலந்தாய்வு, அறுவை சிகிச்சை, ஏழைகளுக்கான மருத்துவ முகாம், அவன் வாழ்க்கை சிக்கலில்லாமல் சுழன்றது. இன்னமும் தனது மனதின் ரகசியத்தை பெற்றவர்களிடம் பகிர அவனுக்கு துணிவு வரவில்லை.

சிலசமயங்களில், பிள்ளைகளின் ரகசியங்கள் பெற்றவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கடைசியாகத் தெரியும். காதலைபோல...

பங்களூருவில், அவள் பாலசரஸ்வதி இவனை இரண்டு மாதங்கள் சுத்த விட்டதுபோல் ,சிவாவும் அவளிடம் சரியாக பேசிப் பழகாமல் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் (3*2) அவளை அழ வைத்தான். தனியாய் பேசவும் கூட அனுமதிக்கவில்லை. அவன் வீட்டுக்கு சென்றாள்தான் .ஆனால்,வாணியின் தோழியாய் !

தூது வந்த வாணியிடம், ’பசங்க தணிஞ்சு போனா, அவங்கள எளக்காரமா நடத்துவீங்களா? ரெண்டுமாசம், என்கிட்ட சொல்லாம இருந்திருக்கா. இவ என்ன தாய் மொழி பேசுவானு நிறைய முறை யோசிச்சிருக்கேன். இப்படி எதுனால செஞ்சானு தெரியாது.பட்,எனக்கு பிடிக்கல.

“இட்டார் இட்ட பயன்” . நீயும்,பொண்ணுதானே,உனக்கும் சொல்றேன்,கேட்டுக்கோ, இந்த மாதிரி பசங்கள டீஸ் பண்ணா,பசங்க எப்பவும் சும்மா இருக்க மாட்டாங்க” ,என்றுவிட்டு, பி.‌டி‌.எம் லே அவுட்டில் இருக்கும் அந்த பெரிய பூங்காவிற்கு சென்றுவிட்டான்.

எப்போதும்,அண்ணனும் தங்கையுமாக சென்றுவிட்டு,அங்கு ஃபவுன்டன் டான்ஸ் பார்த்துவிட்டு,சில சமயங்களில் டென்னிஸ் விளையாடி,டீ கடையில் இஞ்சி டீ குடித்துவிட்டு வருவதுதான் வழக்கம்.

இன்று அவள்,பாலாவுக்காக பேசப்போய்,தன்னை விட்டுவிட்டு சென்ற அண்ணன் மீதும்,காரணமாய் இருக்கும் பாலா மீதும், பெட்ரோல் விலை போல் கோவம் ஏறிக்கொண்டே செல்ல, வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டாள்.

கொஞ்சம் சாமான்கள் வாங்கவென ஹெல்த் அண்ட் கிளோ சென்றுவிட்டு,பழங்களுடன் திரும்ப வந்தவளை அண்ணனின் கோவ முகமே வரவேற்றது.

அறிவிருக்காடி உனக்கு, நா போனே எடுத்துக்கிட்டு போகல. வீட்டுக்கு வந்த அம்மணி வீட்டை பூட்டிக்கிட்டு நகர்வலம் போயாச்சு. ஒருமணி நேரமா காத்துக்கிட்டு இருக்கேன்.

தான் தவறு செய்தது புரிய,மெல்லிய குரலில்,எங்களுக்கும் கோவம்தான் என முணுமுணுத்தவளை லேசாக அணைத்துக்கொண்டான் சிவா. யார்மீதோ எதற்கோ,கோவம். சிறிய விஷயமாக கூட இருக்கலாம்.அதை தங்கையிடம் காட்டியது தவறுதானே?

சிவாவிற்கு,அணு சித்தியின் இடுப்பில் பால் பாட்டிலுடன் அமர்ந்திருக்கும் குட்டி பெண் வாணியைத்தான் நினைவு. அவள் மீதான அவன் அன்பு அலாதி. இன்றுவரை அவளை சித்திப் பெண்ணாக பார்த்ததில்லை.

ஆனந்தை விட ,அபிஷேக்கை விட,வாணிக்கு சிவா என்றுமே தனிதான்.அதனால்தான்,சென்னையை விட்டு அவள் இங்கு அண்ணனுக்கு துணையாக வந்திருக்கிறாள். இது முழு குடும்பமும் அறிந்ததே.ஆனாலும்,யாரும் எதுவும் கேட்கவில்லை.

வந்தது என்னவோ சிவாவிர்க்காகதான். ஆனால் அவளுக்கு அந்த நகரம் வெகுவாக பிடித்துவிட்டது. சிவாவுடன்,ஜீவா கார்டன்,இஸ்கோன்,கமர்ஷியல் ரோட், ஜெய் நகர் என அவளது விடுமுறை நாட்கள் நிச்சயம் பறந்துகொண்டுதான் இருந்தது.

ஏனோ,நண்பர்களுடன் செல்ல அவளுக்கோ, சிவாவிற்கோ பிடித்தம் இல்லை. ஒரே ஒருமுறை, சிவா வகுப்பு நண்பர் கூட்டத்துடன் தனது தங்கையை கூட்டிக்கொண்டு பெரிய மால் ஒன்றில் படம் பார்க்க செல்ல, ஒரு நண்பன் படத்தை விடுத்து ,வாணியையே பார்க்க,வாணி வெகு சங்கடமாக உணர்ந்தாள். அலுவலகத்திலும் எல்லோருடனும் வரையறுத்துக்கொண்டு பழகுபவள் அவள். ஒருவகையில் அவள் அம்மா அனு ,அவள் அப்பா சம்பத்திடம் பட்ட அனுபவங்களால் எச்சரிக்கை உணர்வு வந்திருக்கலாம். அவள் எண்ணப் போக்கு வளர்ப்புத்தந்தை பிரசாத் நோக்கி சென்றது. ஏக்கப் பெருமூச்சு விட்டவளுக்கு, ஜொள்ளுப் பார்வை சகிக்க முடியவில்லை.

திரும்ப வரும் வழியில் புலம்பி தீர்த்துவிட்டாள். டேய் அண்ணா,இனிமே,நீ வேணும்னா உன்னோட குரங்கு பட்டாளத்தோட ஊர் சுத்து.என்னய கூப்பிடாத,என எரிந்து விழுந்தவளை பரிதாபமாக பார்த்தான் அவள் அண்ணன். அவனுக்கும் நண்பனின் பார்வை சங்கடம் தான்.

சாரி டி, இனி இல்லை என தோப்புக்கரணம் போட்ட பின்னர் தான் புலம்பலை நிறுத்தினாள் வாணி.

அன்றிலிருந்து, அண்ணனும் தங்கையும்தான் ஊர் சுற்றுவது. வேறொருவரையும் சேர்ப்பதில்லை. பாலாவுக்கு அவர்களுடன் செல்ல விருப்பம்தான். பார்ப்போம்.

அனு ,பிரசாத் இருவரும் வாணி வேலைக்கு சென்றே இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டது. இனி ,விரைவாக அவளது திருமணம் முடிந்தாகவேண்டும் எனும் தீவிர ஆலோசனையில் இருந்தனர். பாலா-ராமன் இருவரும்,அனு வீட்டில். இன்று வரை அக்கா மாமாவிடம் ஆலோசிக்காமல் அனு எதுவும் செய்ததில்லை. அவர்கள்,நலம் விரும்பிகள் எனும் பட்சத்தில் பிரசாதும் அவர்களின் உறவை இருக்கைகள் நீட்டி வரவேற்றார் என்றுதான் சொல்லவேண்டும்.

எத்தனை சிக்கல்கள் வந்த பொழுதும் அனுவையோ பிரசாதையோ அவர்கள் பண விஷயமாக அணுகியதில்லை. அனுவை கல்லூரி படிப்பை,அதன்பின்னர் மேல்படிப்பை முடிக்க வைத்து அவளை தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்ததில், எதிர்பார்பில்லா ராமனின் நடத்தையில் பிரசாத் ஈர்க்கப் பட்டதுவும்,தனது சொந்த அண்ணனாகவே ஏற்றதுவும் ஆச்சர்ய பட ஒன்றுமில்லைதான்!

மொத்தத்தில் விக்ரமன் படம் போன்ற ஒரு குடும்பம்.ஆனந்தன் மட்டும் ஆனந்தத்தை தொலைத்துவிட்டு,ஆனந்தம் இல்லையடி ஆனந்தி என தன்னையே வதைத்துக்கொண்டு?


இரண்டரை வயது ராகவிக்கு உடல் நிலை படுத்தி எடுத்தது. இரவு முழுதும்,வாந்தியும்,ஜுரமுமாக துவண்டு காணப்பட்டாள் குழந்தை. மறுநாள்,தான் வேலை பார்க்கும் மருத்துவ மனையில் உள்ள குழந்தைகள் மருத்துவரிடம் கூட்டிசென்று இரண்டு நாட்களுக்கு விடுப்பும் சொல்லிவிட்டு ,வந்து கொண்டிருந்தவளுக்கு, ஆனந்தன் பற்றிய நினைவு சுத்தமாக இல்லை.

முதன்முறையாக, குழந்தையுடன் மருத்துவமனையின் வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தவளை கண்டான் ஆனந்த்.

அவளுக்கோ,அவனின் முகம் மனதில் பதியவில்லை.எண்ணம் முழுதும் ராகவியே.

ரம்யாவுக்கு குழந்தை இருப்பதை கண்டு மிக நுண்ணிய அதிர்ச்சி. ஓ,அவள் திருமணம் ஆனவளா? சிறுநீரகப் பிரிவில்மருத்துவனாக இருக்கும் விக்டோரை காண சென்றான் ஆனந்த். மதிய உணவு வேளை.

விக்டர்-ஆனந்த் இருவருக்கும் நல்ல நட்பு உண்டாகி இருந்தது. இன்று,விக்டரிடம் இவளைப் பற்றி தெரிந்துகொள்ளவேணும் என மனதினுள் நினைத்திருந்தான் ஆனந்த்.

விக்டோரிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

என்னவென்று என அடுத்தபதிவில் சொல்கிறேன்.

உங்கள் தோழி


சுகீ.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top