JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை அத்யாயம் 1, மற்றும் 1.2

Subageetha

Well-known member
வணக்கம் தோழமைகளே,
மீண்டும் ஒரு கதைக் களத்துடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இது சிறு கதையா,இல்லை நீளும் தொடர்கதையா என்பது பற்றி இன்னும் நான் யோசிக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் கண்டிப்பாக உங்களை சந்திக்க கதைமாந்தார்கள் வருவார்கள். உங்களின் ஆதரவை நாடுகிறேன். கதையின் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மட்டுமே எனது நடையை மெருகூட்டும். எனை பொறுத்தவரை நான் உள்ளூர வெகுவாக ரசிக்கும் காட்சிகளை இங்கு வார்த்தை வடிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் தோழி
சுகீ.
1.2
அன்றில் -1

அன்றி(ல்)..1

சிறு வயது முதலே உடனிருந்து, ஒன்றாய் விளையாடி, பள்ளி சென்று , மற்றையோருக்கு தெரியாமலே தாவணி போட்ட காலம் முதலாய் அவனை மனதில் வேறு விதமாக பார்க்கவாரம்பித்து… அரும்பு மீசை முளைத்தவனின் கள்ளப்பார்வைகளை காதல் பார்வை என…இன்னும் எத்தனை? அவனுடனே இருக்கவேண்டும் என்று அத்தனை பேரின் பேச்சுக்களை தூர நிறுத்தி,

நாளைக்கு வேலைக்கு போகும்போது, ஆண் -பெண் எல்லோரும் ஒன்றாகத் தானே வேலை செய்ய வேணும் என வாயடைக்க செய்து, இரு பாலரும் பயிலும் கல்லூரியில் Puc, மேலே மூன்றாண்டுகள் கணிதம், எல்லாம் பயின்றது அவனுடன்தான் !அவனிருக்கும் தைரியம்தான் குடும்பம் அவளை அனுமதித்த காரணம்… அவன் அவளது பக்கத்து வீடு. பிறந்த நாள் முதல் தோழன்… சமீப காலமாய்?

திருமண மேடையில் ஹோம புகையின் வீச்சில் தன் கண்ணீரை உள்ளிழுக்க தேவை இல்லை என்பது புரிந்தவளாக தன் எண்ண அலைகளை தாவ அனுமதி கொடுத்து ,அவை தம்போக்கில் விளையாட...அவற்றுடன் ஒன்றினாள் பாலா...அவளுக்கு தன்னருகே இணையாக அமர்ந்திருந்த ராஜாராமன் பற்றிய எந்த அக்கறையும் நிச்சயம் இல்லைதான்.....

குடும்பத்திற்காக காதலை பணயம் வைப்பது இன்று தான் நடக்கிறதா? வழக்கம்போலவே,தனக்கு கீழுள்ள,தங்கை,குடும்ப மானம் இத்யாதி,விஷயங்கள் அவள் ரகுமீது வைத்திருந்த காதலை கிள்ளி எறிய போதுமானவையா....இல்லை...தனக்கே அவன் மீதான நம்பிக்கை இல்லைஇல்லை..எங்கள் காதல் மீதான நம்பிக்கை குறைவு காரணமா ? எதுவோ ஒன்று.. அருகே அமர்ந்திருப்பவன் இன்னும் சில நொடிகளில் மங்கள நாண் பூட்டி என்மீதான அவன் உரிமையை அறிவிக்க போகிறான்..இனி என் வாழ்வில் ரகு தொலைந்த கனவே ! சுய அலசல்களில் தன்னை தொலைத்தவள் என்று மீள்வாளோ?

தனது கழுத்தில் அவன் கரங்கள் பட அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த பாலாவுக்குள் ஏமாற்ற உணர்ச்சி. தன்னை விட வெகு சாதாரண தோற்றம்...கல்வியிலும்,வேலையிலும் ...பொருளாதார நிலையிலும்கூட ஒரு படி கீழே உள்ள ராஜாராமனை வீட்டினர் எப்படி தனக்காக நிச்சயம் செய்தனர்? ரகுவிர்க்கு என்ன குறை? அவள் மனம் மௌனமாய் விம்மியது. மற்றவர்கள் கண்களில் இவர்களின் காதல் படவில்லை. நிச்சயம் இவர்களுக்குள் தோழமை உண்டென்று எல்லோருக்கும் தெரியும். மற்றபடி சொல்வதற்கில்லை.

ராஜாராமன் சாதாரண பாலிடெக்னிக் படிப்புதான்! சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவனுக்கு அம்மாவும் இரண்டு அண்ணன்களும் உண்டு..பெரிய அண்ணனை அப்பா என்று எண்ணும் அளவிற்க்கு வயது வித்யாசம் ....அவர் தன்னை தியாகம் செய்துதான் மற்ற இருவரையும் படிக்க வைத்தாராம். அதனாலேயே,அவருக்கும் அவர் மனைவிக்கும் மரியாதை அதிகம்...இரண்டாவது அண்ணன் ஒரு வங்கியில் வேலை..குடும்பத்துடன் பெங்களூருவில் வாசம். ராஜாராமன் பதினைந்து வருட உழைப்பில் இப்பொழுதான் ஸூபேர்வைசர் ஆகியுள்ளார்..குடும்ப நிலை,.வரவு பரவாயில்லாமல் இருக்கவே திருமணத்திர்க்கு பார்க்க ,பாலாவை பார்த்து உடனேயே சரி சொல்லிவிட்டார்.. அவருக்கு மற்ற விஷயங்கள் பெரிதாக தோன்றவில்லை போலும்....ஜாதகம் அமர்க்களமாக பொருந்த ராஜாராமனின் குணநலன்கள் பாலா வீட்டினரை திருப்தி செய்ய பாலா திருமதி ராஜாராமன் ஆகிவிட்டாள்.

பாலாவிற்கு தமிழக அரசு வேலை....சந்தோஷம் கொள்ளும் சம்பளம். ஆனால்.ராஜராமனை பொறுத்தவரை குடும்பம் நடத்தும் பாங்குள்ள பெண் அவசியம்...பெண் பெண்ணாகவும் ஆண் ஆணாகவும் இருந்தால் குடும்பம் சறுக்காமல் ஓடும்.ராமனுக்கு அவருடன் இணைந்து பயணம் செய்யும் இணைதான் தேவை. குடும்ப பாரத்தை சுமப்பது அவருக்கு புதிதல்ல.இணையும் இணை சுகமானதாக இருத்தல் வேண்டும். இந்த எண்ணத்தினாலேயே அவருக்கு பாலாவின் படிப்பு சம்பளம் போன்ற லௌகீக விஷயங்கள் பெரியதாக தெரியவில்லை. புற அழகு சிலவருஷங்களில் விட்டுச் செல்லும். பெண்களின் நிமிர்வு குடும்பத்தையே உயர்த்துமென அவர் தனது அம்மா மூலம் படித்த வாழ்க்கை பாடம். வழக்கம் போல முதலிரவில் பாலா ரகுவை பற்றி சொல்ல, என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?



அத்யாயம் 1.2

ராஜாராமன் சிறிதும் அசரவில்லை ...அதனால் ,தனக்கு ஒன்றும் வருத்தமில்லை என்பதாகவே இருந்தது அவரது நடத்தை....அதிகம் பதில் சொல்லாதவர் இனி நீ என்னோட மனைவி ,நான் உன்னோட கணவன்....நடுவுல வேற யாருமில்ல ...நம்மோட பசங்களுக்குக்கூட நமக்கு நடுவுல வர அனுமதி இல்ல ..புரிஞ்சுக்கோ என்றவரது அணைப்பு அவரது கூற்றின் தீவிரத்தை பறை சாற்றியது!

அவளை வேறேதும் சிந்திக்க அவர் அனுமதிக்கவில்லை! ஒற்றை இரவில் ரகுவின் நினைப்பை பின்னே தள்ளிவிட்டார் ராமன்.

அவருக்கு தெரிந்திருந்தது இளமை வேகம் வேறு ....இயல்பு வாழ்க்கை வேறென்று! தன் தாயார் தனது முப்பத்து எட்டாம் வயதில் கணவரை இழந்து உணர்வுகளுக்கு இடம் கொடாமல்,தன் அண்ணனும் அம்மாவுமாக குடும்பத்தையே தூக்கி நிறுத்தியதை கண்டவர் அவர்… இவர்கள் காதலில் அவருக்கு வேறொன்றும் புரிந்திருந்தது. அது… பிறகு சந்தர்ப்பம் அமையும் பொழுது சொல்கிறேனே?

ஆனாலும்,முகூர்த்த வேளையில்,பாலாவின் முகம் மகிழ்ச்சியை,குறைந்தபட்சம் ஆர்வத்தைக்கூட காட்டாமல்,கண்கள் கலங்கி இருந்த தோற்றம் அவரை திடுக்கிடச் செய்தது. இந்தத் திருமானத்தில் இப்பெண்ணிர்க்கு உடன்பாடில்லையா..எனில் ஏற்பாடுகள் ஆரம்பிக்கும் முன்னரே ஏன் சொல்லவில்லை? எப்படி இருந்தாலும் இந்தத் திருமணத்தை நான் காப்பாற்றுவேன். அது தொடர்பான எல்லாவற்றையும் இவள் சகித்துதான் ஆகவேண்டும் என்பதாய் இருந்தது. ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது என்பது அவருக்கு புரிந்தது...நெஞ்சுக்குள் வலியும் திடுக்கிடலுமாய் உணர்ந்தார்.

அதனாலேயே ,அவரால் பாலா சொன்ன காதல் உணர்வை எளிதாகக்கையாண்டார். மனைவியின் தேவைகளை,தேடல்களை,இளமை வேகத்தை இரவில் தணித்தவர்,பகலில் தனது செய்கைகளால் அவளின் மனதை கொள்ளை இட்டார். ஆனாலும்,அவள் முகத்தில் அருவருப்பின் சாயல்,கஷ்டப்பட்டு ஜீரணிக்கும் போக்கு இருக்கிறதா என்பதை கவனிக்கவும் தவறவில்லை. ஒருவேளை அப்படி ஒரு உணர்வை அவள் காட்டி இருந்தால் அவரும் வேறு முடிவை யோசித்திருப்பரோ ?

உடலால் அவளை திருப்தி செய்ய தெரிந்திருந்தாலும்,காதல் எனும் மாய வலை வேறொருவருடன் அவளை இணைத்து வைப்பது ராமனுக்கு பிடிக்கவில்லைதான். அவள் உடலுடனும் உணர்வுகளுடனும் கலந்திருக்க படைக்கப் பட்டவன் நான் மட்டுமே என்பது அவர் அடி ஆழம் வரை கலந்திருந்தது.

காலை எட்டு மணிக்கு இருவருமே கிளம்பியாக வேண்டும்...திருமணம் முடிந்த உடனேயே இருவருக்கும் போக்குவரத்து பொதுவாக ஓரிடத்தில் குடிபுக ராஜாராமனின் அம்மா ஏற்பாடு செய்துவிட்டார்...பாலாவின் பொருட்கள் வந்து இறங்கியதும் அங்குதான்! முதலில் உறுத்தினாலும்,மாமியாரின் எண்ணம் புரிந்தவளுக்கு மாமியார் மீது பிரியம் வந்தது...வாரத்தில் ஒருநாள்,கணவனும் மனைவியும் ராமனின் வீட்டிற்கும் மாதம் ஒருநாள் பாலா வீட்டிர்க்கும் போய்வருவது வழக்கம். ஒரு விதமாய் ஒட்டியும் ஒட்டாமலும் ஓடிக்கொண்டிருந்தாள் பாலா. இல்லை.. அவளை அமர்ந்து சிந்திக்க ராமன் இடம் கொடுக்காமல்.. அடுத்தடுத்து அவளை ஏதோ செய்ய வைத்தார்… இருவருக்கும் அலுவலகம் வேறு.

ராமன் ,சிலசமயம் தானே எழுந்து வீட்டின் வேலைகளை ஆரம்பித்துவிடுவார். விடியவிடிய தன்னை நீங்காமல் உறைந்த மனைவியை மேலும் கஷ்டப்பட வைக்க அவருக்கு விருப்பமில்லை.

முதலில், எழவே சிரம பட்டவள், பிறகு விடிகாலையில்,எழவும் ராமானுடன் சேர்ந்து வேலைகளை ,முடிக்கவும் பழகிக்கொண்டாள்!

ராமனுக்கு தொழிற்கூடத்தில் மணிக்கணக்கில் உட்கார முடியாது...ஆனாலும்,தன்னை கஷ்டபடாமல் காக்கும் மனிதரின் மேல் பாலா தன்னையும் அறியாமல் ஈடுபாடு கொண்டாள். அவளால் அதை உணரத்தான் முடியவில்லை.

பாலா,தங்கள் திருமண பந்தத்தின் தீவிரத்தை உணரும் வரை குழந்தை பிறப்பை தள்ளிப்போட தீர்மானித்திருந்தார் ராமன். ஒருவேளை,அவர் அவளின் ஈடுபாட்டை உணரும் தருணம் அவர் வாழ்விலும்,ஏதேனும் மாற்றங்களை கொண்டுவரலாம்.

பாலா அம்மா வீட்டிற்கு வரும் சமயம் ரகுவும் விடுமுறையில் வந்திருந்தான்.பாலா முகத்தில் வீசும் சந்தோஷ சாரலை புரிந்த ரகு அவளை மறக்க,மாற்றல் வாங்கி சென்றதும் சரிதான் எனும் முடிவிர்க்கு வந்தான். அவனது தோழி சந்தோஷமாய் இருந்தால் வருத்தப் படும் காதலன் அவன் அல்ல. அவனால் ஒன்றும் செய்ய முடியாதபொழுது வருந்தி மட்டும் என்ன பயன்?

விஷயம் என்னவென்றால் பாலாவோ,ராமனோ அவனிடம் முகம் திருப்பவில்லை. சாதாரணமாகவே இருந்தது பாலாவின் பேச்சு,போக்கு இரண்டுமே.வேறென்ன வேண்டும் ரகுவுக்கு...குற்ற உணர்ச்சி மட்டுப் படுவதாய் உணர்ந்தான் அவன்.

இப்பொழுதெல்லாம் அவன் நினைவுகூட அவளிடம் இல்லை...அவன் சில பல வருடங்கள் கழித்து மீண்டும் வந்தால்?

நம் தலைவி என்ன செய்வாள்?

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திக்கிறேன்.

சுகீ.
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top