JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை அத்யாயம் 11

Subageetha

Well-known member
அன்றில் அத்யாயம் 11.

பால சரஸ்வதி அன்று மிகவும் சுறுசுறுபாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தாள். திருச்சியிலிருந்து வந்ததிலிருந்து வாணிக்கும் அவளுக்குமான நெருக்கம் அதிகமானது போல உணர்ந்தாலும், அண்ணன் தங்கை இருவருக்குள்ளும் வேறு யாரையும் அவர்கள் அனுமதித்தது இல்லை,

அருகருகே அமர்ந்த போதும் சிவா, இவளிடம் பொதுவில் பேசுவதை தவிர, கலகலப்பாக பேசுவதை கொஞ்சம் தவிர்த்து வந்தான். காரணம்,அதே துரு பிடித்த காரணம்தான்.

ஆனால்,நேற்று இரவு அலைபேசியில் அழைத்த வாணி,நானும் சிவா அண்ணனும் மல்டிப்ளெக்ஸ் போறோம்,நீயும் வர்றீயா என்றவளை வினோதமாக, இவளும் இவ அண்ணனும் இப்படி கூப்பிட மாட்டாங்களே, என உள்ளூர யோசித்தாலும், வேறு தோழமைகளுடன் எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால் சரி என ஒப்புக் கொண்டாள்.

இது வெளியே அவள் யோசிக்கும் காரணம். அவள் மனமோ, சிவாவுடனான நெருக்கத்தை விரும்பியது. "எது,எப்படி ,ஏன் எனும் கேள்விகளுக்கு அவளிடம் பதில் கிடையாதுதான். அவள் அப்பா ரகுவுடன் அவளுக்கு இருக்கும் நெருக்கத்தை சிவாவிடம் அவள் உணர்கிறாள், அதற்கு மேலும் அவனுடன் அமர்ந்திருக்கும் சமயங்களில்,குளிர்வாய்,கதகதப்பாய்... இதற்கு மேல் என்ன? இது அதுவேதான், அது இதுவேதான் என்று முத்திரை இடும் தைரியமோ,அவன் மீது இவளின் பார்வை மொழியோ எதுவும் அவளுக்கு உதவவில்லை. அவன் இவளை நெருங்க விட்டால் தானே?எப்படியோ, அவர்களுடன் வெளியே செல்லும் நினைப்பே உள்ளூர தித்திப்புதான்.

இத்தனை நாட்களில் வாணிக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும் என்பதை உணர்ந்தவளாக மஞ்சள் நிற புடவையும், அதில் போட்டிருக்கும் பூ பதிவுகளுக்கு ஏற்றபடி சோளியும் அணிந்து,கழுத்தில்,காதுகளில் மெல்லிய முத்து செட் ஆபரணங்களை அணிந்து கொண்டு தயாரானவளுக்கு, அம்மா உடனிருந்தால் திருஷ்டி கழித்திருப்பாள் என தோன்றாமல் இல்லை.
இந்த அலங்காரம் அவன் கண்களை கவருமா, இல்லை உறுத்துமா என்பது பற்றித்தான் நிச்சயம் இல்லை. 'எப்படியும், துருவி பேசும் குணசீலன் அவன் அல்ல.'

ஒவ்வொரு தருணமும் பெற்றோருடனான நாட்களை, நொடிகளை ஞாபகம் செய்ய தவறுவதில்லை. அவர்களை விடுத்து தொலைவில் இருப்பது பெரிய துன்பம்தான். இங்கு வரவில்லை எனில்,கல்யாணத்துக்கு பார்த்திருப்பார்களே’ வேறு வழி ? பெருமூச்சு விட்டவளுக்கு, சிவாவின் குரல் அருகில் கேட்கவும் மூச்சு வேகம் அதிகமாக! இதய துடிப்பு சட்டென்று அதிகம் ஆகிய உணர்வில் இடது பக்கம் அழுந்த பிடித்துகொண்டாள்.

அவன் குரலில் லயித்திருந்தவள் வெகுநேரம் கழித்தே புரிந்துகொண்டாள் அது மன பிரமை என்று.

“எதுவாகிலும்,அவன் அருகாமை இவ்வளவு தன்னை இம்ஸிக்குமா? நான், அவனை திருமணம் செய்துக்கொள்ள ஆசை கொள்கிறேனா? “

திருமணம் என்ற பேச்சிலிருந்து தப்பிக்கத்தானே,இவ்வளவு தூரம் வந்தது.. என் மனது எப்படி அவனிடம் சென்றது?

நான் அவன் சொந்தமாக, அவன் என் சொந்தமாக மொத்தமாய் என்னை அவனிடம் ஒப்படைக்க என் மனம் விழைவதேன்?

உடன் படிக்கும் நிறைய மாணவர்கள் ஆணழகன் போட்டியில் வெற்றிபெற தகுதி உள்ளவர்களே! இவளுக்கு அவர்களின் சில நண்பர்களிடமிருந்து விருப்பம் குறித்து குறுந்தகவல் கூட வந்திருக்கிறதுதான். இவள் புன்னகை மாறாமல் மறுத்துவிடுவாள். அவர்களும் வற்புறுத்தியதில்லை. சில சமயங்களில் அப்பாவிடம்கூட, காண்பித்து அவரை பயம் கொள்ள செய்து இருக்கிறாள். ஒகே சொல்லிடவாப்பா...?

அவர்முகம் சட்டென வாடி,பின் பிரகாசம் கொள்ளும். அவர் என்ன நினைக்கிறார் என்றுமட்டும் வார்த்தை வராது.

தெளிவில்லாமல் ஏதேதோ யோசனைகளுடன், எண்ண குவியலாக கிளம்பி அவர்கள் வீட்டுக்கு சென்றாள்.அங்கே வாணியும் மஞ்சள் நிற சுரிதாரில் கிளம்பியிருந்தாள். உடல் தெரியும் படிக்கு வாணி என்றும் உடுத்தும் ரகமல்ல.

ரெண்டு அழகியர் என் கூட வந்தா பாக்குறவனெல்லாம் வயிறு எரிவான் என்று கலகலத்தவாறே தனது அறையிலிருந்து வெளியே வந்தவனது தோற்றம்,இவன் என்னுடையவனாகும் நாள் எப்போது’ என்று அவளை ஏக்கம் அதிகரிக்க செய்ய,தன்னை மறைக்க அவள் மௌனத்தை ஆயுதமாக்கினாள்.

பெரியதாக சிவாவிடம் அவள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எல்லை மீறிவிடுவோமோ ,வார்த்தைகளை வெளியே விட்டு சூழ்நிலையை பாதகமாக்கிக் கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.சிவா அவளுடன் ஓரளவு பேச, வாணிதான் பதில் சொல்ல வேண்டிய நிலை. ஆனால், பாலாவின் விழிகள் வாய் மொழியை விட கூடுதலாக தன்னை உணர்த்திக்கொண்டிருந்தை பாலா சற்றேனும் உணரவில்லை.
எனினும், அண்ணன் -தங்கை இருவருமே அவள் பார்வை பாஷையை புரிந்து கொண்டனர்.

அப்பட்டமாக பாலா சிவாவை மட்டுமே பார்த்திருந்தாள்.அவளால் சுற்றுப்புறம் உணர முடியவில்லை.
அவள் பார்வை சொன்னவற்றை தன் தங்கை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்ற பதட்டம் அவனை படுத்தியது.
வாணி ஒன்றும் தெரியாத பாவனையில் உள்ளூர சிரித்து கொண்டாள்.

சில மாதங்களாக வாணி கவனிக்க தான் செய்கிறாள். சிவா பாலாவை கண்டுகொள்ளாமல் விடுப்பதும், பாலா வாணியை பார்க்க வந்துவிட்டு, சிவாவை தேடுவதுமாக ஒரு கண்ணாமூச்சி ஆட்டம்.

உண்மையில் வாணி ஒரு திரைப்பட காதல் காட்சியை ரசிப்பது போல் ரசிக்கிறாள் தான் !


உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, தனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதை பற்றி வாணி ஒருவழியாக சொல்லிவிட்டாள்.

‘அடிப்பாவி,இதுக்குத்தான்,அண்ணனும் தங்கச்சியும் இவ்வளவு பில்ட் அப் குடுதீங்களா? என்றுவிட்டு,கையில் இருந்த ஜாமுனை வாணியின் வாயிலும், கூடவே உட்காருற,சத்தமே இல்லை என ஐஸ் கிரீமை சிவாவின் முகத்திலும் பூசி விட்டாள் பாலா.

ஒருவழியாக ,சிவா-பாலா இருவருக்குமான பனிப்போர் முடிவுக்கு வந்தது.

ஹேய்,இன்னும் தீர்மானமாகல,ஸோ...வெளியாளுங்க யாருக்கும் தெரியாது. உன்கிட்ட சொல்லாம இருக்க மனசில்ல...தயங்கியவாறே சொன்ன வாணியை, ‘கவலை படாதே,நானும் இதை பற்றி இனி பேச மாட்டேன்..என்று இடையிட்டாள் பாலா.”

இரவு ஒன்பது மணியளவில் அவளை இருப்பிடத்தில் விட்டுவிட்டு வாணி-சிவா தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

இரவு பல் துலக்கி,உடம்பு கழுவி படுத்த பாலாவுக்கு , நினைவு முழுதும், டெனிம் நீல நிற ஜீன்ஸ்,மற்றும் சந்தன வண்ண டீ ஷர்ட் அணிந்து மாநிறத்தில் ,அடர்ந்த புருவங்களும், அதை ஒத்த மீசையும் கொண்டு,அனாயாச உயரமும், மெல்லிய புன்னகையும் முகத்தில் அணிந்து வலம் வந்த சிவாவின் நினைவுகளே’.
இதை நான் சொல்லவும் வேண்டுமோ?

சென்னை :

பிரியாவை கண்ட ரம்யாவுக்கு,வேலை நேரத்தில் இவள் என்னை நோக்கி எதற்கு வருகிறாள் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.பொதுவாக பணி நேரத்தில் இருவரும் அதிகம் தோழமை வெளிக்காட்டுவதில்லை.

‘ரம்யா,உன்கிட்ட கொஞ்சம் பேசணும், குழந்தைய கூப்பிட போறீயா? கொஞ்சம் வர முடியுமா? அடுக்கடுக்காக கேள்விக் கணைகள்.
வியப்பு மீற ப்ரியாவை பார்த்தவள், பிரியா, ஏதாவது முக்கிய விஷயமா?
மார்னிங் குழந்தையை அட்மிட் பண்ணது... அவளை பாக்கணும்... அம்மாவாக ரம்யாவின் தவிப்பு அவள் கண்களில் தெரிய, ஒரு டென் மினிட்ஸ் தான் ரம்யா...என்ற தோழியை தவிர்க்க வழியின்றி அவ ளறைக்குள் சென்றாள்.

எப்படி இவளுக்கு சொல்வது, என பிரியா கைகளை பிசைந்து கொண்டு மௌனம் காக்க, பொறுமை மெல்ல கரைய தொடங்கியது ரம்யாவுக்கு.

ஏடி, ப்ரி ஏதும் விஷயம் இல்லனா நா கிளம்பவா... ரம்யாவின் குரல் சிறு தயக்கத்துடன் அந்த அறையில் தனியாக ஒலித்தது.

'ஓகே, ரம்யா நீ கிளம்பு. இந்த பைல், ம்ம்ம், இதை நீயே டாக்டர். ஆனந்த் கிட்ட குடுத்துடுறியா? என்றவாறே ராகவியின் கோப்பை ரம்யாவின் பார்வையில் படும்படியாக வைத்தவள், மெல்ல மெல்ல ரம்யா முகம் தீவிரம் அடைவதை கவனித்தாள்.

'ஏதாவது முக்கிய விஷயமா பிரியா? காற்றாகிவிட்ட குரலில், நிச்சய படுத்திக்கொள்ள உணர்வுகளை உள்ளடக்கி, நடுக்கம் உடல் முழுவதும் பரவிட, தன்னை பார்த்த தோழியை, தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து வேகமாக அணைத்து கொண்ட பிரியா, ச்சச்ச... அதெல்லாம் இல்லை, 'பீடியாட்ரிசியன் ராகவி பைலை டாக்டர். ஆனந் கிட்ட ஒப்பீனியன் கேக்க அனுப்ப சொன்னார்... நத்திங் டு பி சீரியஸ்.

தேற்றுவதை முன்னிறுத்தி சொல்ல பட்ட வார்த்தைகள்.

ராகவி சமீப காலமாகவே உடம்பு படுத்தல்களில் அல்லல் படுவது தெரிந்ததுதான். —இரெண்டு வயதில் இருந்து ஏனோ அவளை அடிக்கடி மருத்துவ மனைக்கு அழைத்து வருகிறேன். ஒரு வேளை அவளை வயிற்றில் சுமந்த பொழுது பட்ட ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்கள் குழந்தை ஆரோக்கியம் குறைய காரணமோ?

கர்ப்பம் உறுதி பட்டபின் இன்னும் நான் என்னை கவனித்து கொண்டிருக்க வேணும் !

பல நோயாளிகளையும், அவர்கள் குடும்பத்தாரையும் மனதளவில் தயார் செய்யும் பொறுப்பில் உள்ளவள்தான்.

ஒரு அம்மாவாக, குழந்தைக்காக உருவாகும் உணர்வுகளை அவளால் கையாள இயலவில்லை. தனியாக நின்று அனைத்தையும் சமாளித்து இன்று வரை வாழ்க்கை பாதையில் ஓடினாலும் அவளால் இந்த சூழ்நிலையை ஏற்க முடியவில்லை.

"என்னவா இருக்கும்னு பீடியாட்ரீசியன் சந்தேக படுறாரு ப்ரியா? "

கேட்டவளை ஒரு இரக்கத்துடன் பார்த்தவள், சின்னதா அடைப்பு இருக்குமான்னு, பட் சென்ட் பெர்ஸன்ட் அப்படித்தான் ன்னு இல்ல. ஜஸ்ட் ஒரு ஒப்பீனியன்.

கண்கள் கலங்க, ராகவிய இன்னிக்கு இங்க கூட்டி வர எண்ணமே இல்ல பிரியா. வீட்ல பாக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இவளுக்கும் சாப்பாடு உள்ளே இறங்கல.

கண்கள் நீரை பொழிய, தன்னை சுதாரித்து கொள்ள விழைந்தாள் ரம்யா.
'ப்ரி, ராகவி இங்க உன்கூட கொஞ்சம், கொஞ்ச நேரம் இருக்கட்டும். நா போயி டாக்டரை பாத்துட்டு வரேன் ' கண்களை அழுந்த துடைத்து விட்டு ராகவியின் கோப்பை எடுத்துக்கொண்டு ஆனந்தை பார்க்க விரைந்தாள் ரம்யா.
ரம்யாவின் தவிப்பை புரிந்தவளாக, மனதில் இறைவனை வேண்டினாள் பிரியா.

அவனோ, இவள் நிலை புரியாமல் பணி நேரம் முடிந்து கிளம்பிவிட்டான். அவன் லிப்ட்டில் நுழைய, எதிர்புற லிப்ட் உள்ளிருந்து ரம்யா வெளிப்பட்டாள்.

மீண்டும்
உங்கள் தோழி

சுகீ.
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top