JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை அத்யாயம் 5

Subageetha

Well-known member
அன்றில் அத்யாயம் 5

நடப்பவை எல்லாமே நல்லதற்கே என்றால், மனித மனம்,அலைப்புறுதல் எதனால்? இவ்வாறே யோசித்துக்கொண்டு,மருத்துவ மனை வளாகத்துக்குள் நுழைந்த ரம்யா, தனது தோழி,பிரியாவிடம்,காலைவணக்கங்களைத் தெரிவித்து விட்டு, தனது அறைக்குள் நுழைந்தாள்.அளவுக்கதிகமாக,இன்று அவள் மனம் தத்துவங்களை யோசிக்கிறது. சுய அலசல் நல்லதுதான்.ஆனால் சுய பரிதாபம் நம்பிக்கையை குறைத்துவிடுமே!

அவளது எண்ணங்களையும்,உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள, தோழிக்கு சமமான வயதில் அண்ணி இருந்தும், மனதை தேற்ற அம்மா இருந்தும், அவள் அனாதைபோல்,தன்னை வீட்டில் இருப்போரிடம் காண்பித்துக்கொள்ள முடியாமல்?



காலையில் எழுந்ததிலிருந்தே அம்மா ஆரம்பித்துவிட்டாள். அண்ணியின் வார்த்தைகளை,அண்ணன் மட்டுமல்ல,அம்மாவும் அச்சு பிசகாமல் பேசுவதை இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட ஏழு வருஷங்களாய் கேட்கிறாள். முதலில், ரம்யா கல்யாணம் நல்லபடியாக முடியவேண்டுமென்று,பிறகு,அம்மாவிர்க்கு அதுவே பழக்கமாகிவிட்டது. முன்பு அப்பா பேச்சை மட்டும் கேட்டவர், இப்பொழுது மருமகள் பேச்சையும் கேட்கிறாள். ரம்யாவின் குரல் மட்டும் வீட்டில் யாருக்குமே கேட்கப் போவதில்லை. இன்றைய தலைப்பு வழக்கம்போல்,அண்ணன் வாங்கிய கடனில்தான் ஆரம்பித்தது.

இத்துணைக்கும்,தனது சம்பளத்தில்,சொந்த செலவுகள், ராகவிக்கான தொகை., அவர்கள் இருவருக்கான சிறு சேமிப்பு போக மீதம் முப்பதாயிரத்திர்க்கும் மேலே, குடும்ப செலவுக்கும் ,கடனை கட்டவும் என கொடுக்கிறாள்,.ஆனாலும், நச்சரிப்பு ஓயவில்லை. போன மாதம் அண்ணியின் கழுத்தில்,அண்ணன் புதுசாக ஐந்து சவரத்தில் சங்கிலி வாங்கி போட்டு அழகு பார்த்தாயிற்று. புரிந்தும் ஒன்றும் கூற முடியாத நிலை.

வேகமாக,வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு,ராகவியுடன் கிளம்புவதர்க்குள்,அப்பாப்பா... இந்த அப்பா ஏன் ஒன்றுமே சொல்வதில்லை?



மருத்துவமனை....

சென்னையிலேயே,புகழ்பெற்ற மருத்துவமனைகளில் ஒன்று அவள் வேலை செய்யும் மருத்துவமனையும் ஒன்று. பிரம்மாண்ட கட்டிடம் அவளை வழக்கம் போலவே,இன்றும் வியப்பில் ஆழ்த்தியது. ஆறு வருஷங்களுக்கு முன்னர் அவள் வேலையில் சேரும் வேளையில் சாதாரணமாகத்தான் இருந்தது. திருமணம் முடிந்து இரண்டரை வருஷங்கள் அவள் பணியில் இல்லை. குமார் நல்ல பெரிய பணக்கார குடும்பம். அப்பா அம்மா இல்லை. நல்ல வேலையும்கூட. மனைவி பணிபுரிவதில் விருப்பம் இல்லை என சொல்லிவிடவே,வழி இல்லாமல் அவளும், வேலையை விட்டுவிட்டாள்.

ராகவி பிறந்த பிறகு,மீண்டும் வேலையில் சேரும்பொழுது மிகமிக பிரம்மாண்டமாய் வளர்ந்துவிட்டது.

அவளை,அவள் துறை மேலதிகாரி அழைப்பதாக பிரியா வந்து சொல்ல, அவசரமாக, தனது எண்ண ஓட்டங்களை,நிறுத்திவிட்டு,அவரது அறை நோக்கி விரைந்தாள்.

வாங்க ரம்யா, உக்காருங்க,

சொல்லுங்க சார்,

உங்கள இதய நோயாளிகள் பிரிவுக்கு ரிபோர்ட் செய்ய சொல்லி ஹச்.ஆர் லேந்து மெயில் வந்திருக்கு. ஸோ...நீங்க இன்னிக்கி பெண்டிங்க் ஏதாவது இருந்தா பிரியாகிட்ட ஒப்படைச்சிடுங்க. இன்னிக்கே அங்க நீங்க போயகணும். வேலை சம்மந்தமா,அவங்க உங்களுக்கு சொல்வாங்க.

ரம்யாவுக்கு, மனதினில் சிறிது கடுப்புதான். இந்த மாதிரி இத்தோட,மூணு முறை மாத்திட்டாங்க., மனதில் முணுமுணுவென கோவம். வெளியே காண்பிக்க முடியாது.

கிட்டத்தட்ட ,மூன்றரை வருஷங்கள் கழித்து,நீண்டமுயற்சிக்குப் பிறகு, தனது வேலை அனுபவங்களுடன்,அந்தக் கல்லூரியில் முதல் அடியை எடுத்துவைத்தான் சிவா.

இங்கு படிப்பது அவன் கனவு. இரண்டு மூன்று முறைகள் யு .கே வந்து படியேண்டா,செலவ நா பாத்துக்கறேன் என ஆனந்தும், பணம் பத்தி யோசிக்காத, வெளிநாடு போயி படிக்கிறியா என பெற்றோரும்., வெளிநாடு போயி படிச்சா உனக்கு உலகம் இன்னும் விசாலமா புரியும் என அனு சித்தியும், போய்த்தான் பாரெண்டா என சித்தப்பாவுமாக., அத்தனை பேரையும் சமாளித்து,இன்று இங்கு வந்துவிட்டான். ஏனோ., சிறுவயதிலிருந்தே அவனுக்கு வெளிநாடு செல்ல இஷ்டமில்லை. இந்த நிர்வாக கல்லூரி, அவன் பிரம்ம பிரயர்த்தனம்.

மாநிறத்தில், ஆறடிக்கு சற்றே உயரமாய் , ஐ.டி. வேலையின் உபயமாய்,மீசையை சுத்தமாய் மழித்து., அகல பரந்த முதுகுடன், கண்களில் சிரிப்புடன் , ஃபுல் போர்மல் ஆடையில் வகுப்புக்குள் நுழைந்தவனை, அங்கிருந்த இளம்பெண்கள் கண்மூடாமல் பார்க்க,இவனுடன் நட்பு எளிது என மாணவர்கள் அவனுடன் கைகோர்த்தனர்.

எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என பாலா எனும் பாலா சரஸ்வதி அவனை வெறித்து பார்க்கத் தொடங்கினாள். தன்னை குறுகுறுவென பார்க்கும்,அந்த சிறு பெண்ணை பார்க்கும்பொழுதே புரிந்தது., அவள் கல்லூரி முடித்தவுடன் மேலே படிக்க இங்கு வந்துவிட்டாள் என்று., ஆம்., ஒரு வருஷம் நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு பிறகு பாலா இங்கு வந்திருந்தாள்.

அவளருகே சென்றவன்., ஹாய் , ஐ யாம் சிவா ,என தன்னை அறிமுகம் செய்துகொண்டவன்., இஃப் யு டோன்ட் மைண்ட்,கான் ஐ சிட் ஹியர்., என்றுவிட்டு,அவளது வார்த்தைகளுக்காக காத்திராமல், அவளருகே உட்கார்ந்துகொண்டான்.,

அவளருகேயா., அவள் மனதிலேயா என்பது போன்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்லமுடியும்,நான் அல்ல.

வீட்டிலிருந்து அம்மா அழைக்க, தமிழில் பேசத்தொடங்கியவனை,ஆர்வத்துடன் பார்த்தவள் தானும் தமிழ்நாட்டை சேர்ந்தவள்தான் என்பதை சொல்லவே இல்லை. அவனுடன், ஆங்கிலத்திலும், வகுப்பின் மற்றவர்களிடம் ஆங்கிலம்., ஹிந்தி எனப் பேசியவளை இவனும் கணிக்கத் தவற., அவளுக்கும்., ஏதோ ஒருவிதத்தில்., மனதினுள் சந்தோஷம் பிரவாகமெடுத்தது. வகுப்புகள் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது., பாலா சிவா இருவருக்குள்ளும் நல்ல நட்பு ,புரிதல் வந்துவிட்டது. ஆனாலும்,அவள் தன்னை பற்றி இன்னும் எதும் சொல்லவில்லை.

இரவின் தனிமை, நிகிலாவின் உடல் கதகதப்பை ஞாபகப்படுத்த விட்டத்தை வெறித்தவாறே படுத்திருந்தான் ஆனந்த். இரண்டு நாட்களில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை இருக்கிறது. அது சம்மந்தமாக யோசிக்கும் போதும்., புத்தகங்களை படிக்கும்பொழுதும்,வரும் நிம்மதி., அவற்றிலிருந்து வெளியே வந்தால் இவனை தனித்து விட்டு சென்றுவிடுகிறது.

வீட்டில் இத்தனை பேரும் ,காதல் என வந்தவுடன் வேற்றாளாய் தெரியமுடியுமா.? இங்கு ,என்னுடன் என் குடும்பம் இருக்கிறது. காதலி இல்லை., ஆனால், அவள் மட்டுமே வாழ்க்கை என முடிவெடுத்து, அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தும், காதல் கைசேரவில்லையே!

தவறு என் மீதா ,இல்லை இந்தக் காதலே தவறானதா? தவறவிட்டது காதலியையா இல்லை காதலையா? கைசேரா காதல்,உடன் சேரா காதலி.... அவன் உதடுகள் வசீகரமாய் வளைந்தது. அப்பாவிடம் இவை பற்றி பேசலாம் என முதலில் நினைத்தவன் நான்கு வருஷங்கள் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தினேன் என்று எப்படி சொல்வேன் என திகைத்தான்.

அவன் குடும்பத்தை பொறுத்தவரை,இது ஒப்புக்கொள்ளமுடியாத பெரும் தவறு. வீட்டில்,பெற்றோருடன் மீண்டும் இருக்கத்தொடங்கிய பிறகு அவனுக்குமே,நிறம் மாறித்தான் தெரிகிறது. லிவ் இன் ,இது என்ன வகை கலாச்சாரமோ? எப்படியும்., உடற்கூறுவியல் படித்திருந்தாலும்,அவள் தேகம் என்னை மோகத்தீயில் வைப்பது மறுக்கமுடியாத உண்மை., என் ஏக்கம் மறைக்க முடியாத வெறுமை!



அவனது தவறு என்ன? காதலை பொறுத்தவரை காதலுக்கும்., காதலிக்கும் நேர்மையாகத்தான் இருந்தான்.

காது மடல்களில் அவள் உரசும் சுகத்தை மனம் மீண்டும் மீண்டும் கேட்கிறதே... தங்க நிறத்தில் மின்னும் அவளது முகத்தின் பூனை முடிகள்., பாலும் தோற்கும் வெண்மை நிறம்., கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி., பச்சை நிற கண்கள்... அவளுடன் கல்லூரி அறையில் உடன் அமர்வது ஒருவித சுகம்., அவள் உபயோகப் படுத்தும் ஃபிரெஞ்சு பெர் பியூம்,அதையும் மீறி அவளுடைய உடல் மணம்...

உறங்க முடியாதவனாய்...படுக்கையில் தலை பாரம் தாங்காமல் இரண்டு கையில் ஏந்தியவாறே எழுந்தமர்ந்தான்.

வேறு ஒரு பெண்ணை என் இதயம் என்றுமே ஏற்காது., அவள் என்னை விட நான் என்னத் தவறு செய்தேன் என்றெல்லாம் அவன் மனம் சுய பச்சாதாபத்தில் தவித்தது. சிவாவிடம் சொல்லலாமா? என யோசித்தான். எப்படியும் அவனைவிட நல்ல தம்பியோ.தோழனோ இல்லை., அவனிடமாவது ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாமோ? இப்பொழுது சொன்னால் எப்படி எடுப்பான்?

மீண்டும் அடுத்த பதிவுடன் சந்திபோம்.

உங்கள் தோழி
சுகீ
 
Last edited:

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top